பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பச்சிளம் குழந்தையை கவனித்தல்

பச்சிளம் குழந்தையை கவனித்தல் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

செவிலியானவள் இளம் குழந்தையின் தேவைகளை மற்றும் அதன் உடல் நிலை மாறுதல்களை அறிய வேண்டும்.

சிசு என்பது 38 - 47 வாரங்களுக்கு பிறகு பிறக்கின்ற நிலை. அதன் எடை 2.5. கிராமில் மற்றும் நல்ல அழக்கூடிய திறன் இருக்கும். பிறவிக் கோளாறு அல்லது குறைப்பாடுகள் எதுவும் இல்லாத நிலை, தலை சுற்றளவு 33 - 35 செ.மீ. மற்றும் உயரம் 48 - 50 செ.மீ. இதுவே சாதாரண இளம் குழந்தை நிலை என்று பெயர்.

தோலை பரிசோதிக்கும் நிலை

குழந்தைக்கு தோலை பரிசோதிக்க வேண்டும்.

1. வெளிறிய நிறம் / வெளிர்தன்மை காணப்படுதல்.

2. பிளித்தோரா (பீட்ருட் கலர்)

3. நீலம் பரித்தல் உடனடி கவனிப்பு அளிக்க வேண்டும்.

4. மஞ்சள் காமாலை

5. தோலில் கொப்புளம் மிலியா, மிலியேரியா, பெட்டிக்கியே, மாங்கோலியன் புளு ஸ்பார்ட், புருஸ்சியிங், எரித்திமா டாக்சிகம்.

6. தொற்றுள்ள கொப்பளங்கள் எ.கா. தீரஸ் சிம்பிளக்ஸ் வைரஸ், தொப்புள் கொடி செப்பிஸ், இட்பெடிங்கோ.

சுவாச மண்டலம்

சுவாசம், கீழ் மார்பக பகுதியையும் மற்றும் வயிற்றுப்பகுதியையும் கண்காணிக்க வேண்டும். மார்பக பகுதியின் அசைவுகள் ஏற்றம் மற்றும் இறக்கத்தையும் ஒரு நிமிடம் கண்காணிக்க வேண்டும். அசாதாரண நிலைகள் கீழ்க்கண்டவைகளில் காணலாம்.

அ) யூனிலேட்ரல் மார்பக விரிவான நிலை மற்றும் குறைந்த சுவாசம்.

ஆ சுவாசம் அதிகரித்த நிலை.

இ) உட்சுவாச நிலையில், மார்பக உயர்வு மார்பக எலும்பு மற்றும் விலா எலும்பு மேலே மற்றும் கீழே இருத்தல்.

ஈ) முக்கு விரிவடைதல்.

உ அசாதாரண வெளிப்புற சப்தம்.

ஊ) சிறிது நேர சுவாசத்தடை

உடலின் வெப்பநிலை

இளம் குழந்தைக்கு சாதாரண வெப்பநிலையானது 36°5 - 370°C இருக்கும்.

1. ஹைப்போதெர்மியா - ஆசனவாய் வழியாக எடுக்கப்படும் வெப்பநிலை குறைந்த அளவு (36°C) இருக்கும்.

2. ஹைப்பர்தெர்மியா - அக்குள் வழியே எடுக்கப்படும் வெப்பநிலை அதிக அளவு (37.5°C) இருக்கும். இதற்கு ஹைப்பர்தெர்மியா என்று பெயர். ஹைப்பர்தெர்மியா ஆனது சுற்றுச்சூழல் அதிக வெப்பத்தினாலும், தொற்று, மூளை பாதிப்பு மற்றும் மருந்துகளாலும் ஏற்படலாம்.

இதய வாஸ்குலர் மண்டலம்

1. சாதாரண இதயத் துடிப்பின் வேகம் நிமிடத்திற்கு 120 - 160 துடிப்புகள்/நிமிடம்

2. உணவூட்டும் போது குறைந்த இதயத்துடிப்பு மற்றும் லெத்தார்ஜிக் நிலை இருக்கும் போது இதய பாதிப்பு இருக்கக்கூடும்.

3. இதய நோய்க் இருக்கும் போது இளம் குழந்தைக்கு சுவாசத்தடை ஏற்படும்.

4. சில இதயத்துடிப்பின் மாறுதல்கள் இருதய துடிப்பின் போது அறியப்படும்.

மத்திய நரம்பு மண்டலம்

நரம்பு சம்பந்தப்பட்ட நிலையில் பலவினம் அல்லது அதிக உணர்வு, இயங்குத்தசைகளின் அசைவு, குறைந்த உணர்வு, அசாதாரண நிலை அல்லது கால்கள் அதிக மடிப்புகளுடன், அதிக நிலை மற்றும் கழுத்து மடிப்புகளுடன், அசாதாரண நிலைகளும் கண்டறிய வேண்டும்.

பிறப்பு உறுப்புகள் மற்றும் ஆசனவாய்

பிறப்பு உறுப்புகளையும், மற்றும் ஆசனவாய் பகுதியையும் பரிசோதனை செய்தல். பரிசோதனை செய்யும் போது, இரட்டை பிறப்பு உறுப்பு, கீழ் இறங்காத டெஸ்டிஸ் மற்றும், வழிபோக்கு உள்ளதா என இரப்பர்க் குழாய்களையே பயன்படுத்தி கண்டறிய வேண்டும்.

கால்கள் மற்றும் கைகள்

கால்களின் அசைவுகளைப் பொறுத்து அதன் நீளம் பரிசோதித்து மற்றும் தனிப்பட்ட நிலையில் கால்களை மடக்கும் போதும் மற்றும் சுற்றும் போதும் மணிக்கட்டு மற்றும் கணுக்கால் பூட்டுகள் அசையக்கூடிய நிலை உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.

தண்டுவடம்

குழந்தை குப்புற நிலையில் வைத்து கூர்ந்து கவனித்து மற்றும் தொட்டு உணரும் போதும், வீக்கம், மயிரிழை, குழி ஆகியவற்றை கண்டறிய வேண்டும். இருப்பின் தண்டுவட பாதிப்பு இருக்க வாய்ப்பு அதிகம்.

அளவீடுகள் :

குழந்தையின் தலை சுற்றளவு, மார்பு சுற்றளவை, நீளம் மற்றும் எடை இவையெல்லாம் பார்த்து பதிவு செய்ய வேண்டும்.

பாலகன் (அ) பச்சிளம் குழந்தை நிலை கவனிப்பு

பாலகன் நிலைக்கு பொதுவான கவனிப்புகள்:

1. குழந்தை பிறந்தவுடன் தலையை துடைத்தல், சளிப் பொருட்களை வெளியேற்றுதல் இவையெல்லாம் செய்ய வேண்டும்.

2. வாய்வழியாக எண்டொட்ரெக்கியம் சுக்களின் உதவியோடு உறிஞ்சும் நிலையை மேற்கொள்ளுதல்.

3. குழந்தை பிறந்தவுடன் வெதுவெதுப்பான துணியினால் சுற்றி வைக்க வேண்டும்.

4. குழந்தையின் இனத்தை (ஆணா, பெண்ணா) பதிவு செய்தல்.

5. தொப்புள் கொடி 8 - 10 செ.மீ. வெட்டி, வயிற்று மற்றும் கொடியின் நிலை பதிவுசெய்தல்.

6. குழந்தையை வெதுவெதுப்பான நிலையில் வைத்தல்.

7. குழந்தையின், சுவாச நிலை வேகம், இருதயதுடிப்பு வேகக் தோல் நிறம், சதை தன்மை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

8. உபயோகித்த அப்புறப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கிளிப் 2 - 3செ.மீ. தொப்புள் கொடியிலிருந்து நிக்கி, புதிதான கிளிப்பை இனைத்தல்.

9. கண் சொட்டு மருந்துகளை இடவேண்டும்.

தலை முதல் கால் வரை பரிசோதித்தல்

அ. பொதுவாக கூர்ந்து கவனித்தல்

* நிலைமயங்கிய நிலை

• தோல் உலர்ந்தும் மற்றும் வெடிப்புகள் உடன் காணப்படுதல்.

• இதயத்துடிப்பை காதினால் கேட்டறிவது மற்றும் ஒழுங்கான தாளகதி

* சுவாச சப்தம் மற்றும் நுரையீரல் விரிவடைந்த நிலை

* இரத்த அழுத்தம்

* அக்குள் வழியாக உடல் வெப்ப நிலையை பார்த்தல்.

* தலை, கால், விரல்கள் நீளமாக காணப்படுதல். தலை சுற்றளவு, மார்பு சுற்றளவு நீளமாக காணப்படுதல்.

* முகத்தில் மிலியா நெவிஓவர், தலை மற்றும் கண் இமைகள் இவைகள் ஒழுங்கான முறையில் இருத்தல்.

* நாக்கு மற்றும் மேலண்ணம் கடினமாகவும், சாதாரண நிலையிலும் இருத்தல்.

* தொண்டைத் தமனி மற்றும் புயத்தமனியில் நாடித்துடிப்பு அறிதல்.

* இடுப்பு எலும்பு நழுவிக் காணப்படுதல்.

• நரம்பு மண்டலத்தில் முதிர்ச்சியடைந்த செயல் திறன்களை ஏற்படுத்துதல்

குழந்தையானது நல்ல நிலையில் தாயை சார்ந்து இருக்கும்.

ஆ. பொதுவான கவனிப்பு

1. செவிலியானவர்கள் குழந்தையின் பெயர், பாலினம், தேதி மற்றும் நேரம் இவைகளை கவனிக்கவேண்டும்.

2. கூர்ந்து கவனிக்க வேண்டியவை குழந்தையின் நிறம், சுவாசம் மற்றும் தொப்புள்கொடி.

இ. தினசரி கவனிப்பு

* சுவாச அடைப்புகளை தடுக்க குழந்தைக்கு பால் கொடுத்தவுடன் முதுகை தட்டி கொடுத்து தாயுடன் படுக்க வைக்க வேண்டும்.

* உடல் வெப்பம் குறையாமல் இருக்க போதுமான அளவு குழந்தைக்கு ஆடைகளை அணிவதின் மூலமோ மற்றும் துணியில் சுற்றி வைப்பதின் மூலமோ தடுக்கலாம்.

• தொற்று ஏற்படாமல் தடுக்க குழந்தைக்கு தனிப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். பயனுள்ள சுத்தமான முறைகளை கையாள வேண்டும்.

தோல் கவனிப்பு :

தினசரியோ (அ) ஒரு நாளைக்கு இரண்டு முறையோ குழந்தையை குளிப்பாட்டுதல் வேண்டும். முக்கியமாக முகம், தோல், கன்னங்கள் இவைகளை சுத்தமாக வைக்க வேண்டும்.

ஈ. குழந்தைக்கு தடுப்பூசி சரியான நேரத்தில் அளிக்க வேண்டும்.

உ தினசரி குழந்தையை பரிசோதித்தல் :

* குழந்தையின் நிலையை கலர் மற்றும் சுவாசம் கவனிக்க வேண்டும். மூன்றாம் நாளில் மஞ்சள் காமாலை இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

• தொட்டு உணர்வதன் மூலம் ஆண்டீரியர் ஃபாண்டனேல்லை கவனிக்க வேண்டும்.

* தொற்று ஏதாவது தோலிலோ, வாயிலோ, இருக்கின்றதா என்று பார்வையிடல்.

* தோலில் கொப்பளங்கள். செப்டிக் ஸ்பாட் காணப்படுதல்.

* தொப்புள் கொடியை பரிசோதனை செய்தல்.

• அக்கிள் வழியாக உடலின் வெப்பநிலையை அறிதல்.

* மலச்சிக்கலை கண்காணித்தல் மலத்தில் ஏதாவது மாற்றங்கள் இருப்பின் அறிய வேண்டும்.

* மார்பக வளர்ச்சி மற்றும் உதிரபோக்கு இருக்கிறதா என்று பார்வையிடல்.

• முதல் 3 நாட்களில் தினசரி எடையைப் பார்த்தல்.

* குழந்தையின் பிறப்பை பதிவேட்டில் பதிவு செய்தல்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.02040816327
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top