பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிக்கு முந்தைய பருவம்

பள்ளிக்கு முந்தைய பருவம் (Pre Schooler) பற்றிய குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

3 - 6 வயது வரையிலுள்ள குழந்தைகள் முன் பள்ளி பருவக்குழந்தைகள் ஆவர். இந்த பருவத்திலுள்ள குழந்தைகளின் வளர்ச்சி மெதுவாக இருக்கும். அவர்கள் உயரமாகவும், மெலிந்தும் காணப்படுவார்கள்.

வ.எண்.


வயது (மாதம்)

முன்னேற்றம்

உடல் வளர்ச்சி

தூண்டல்

துலக்கம்

மொழிகள்

முதாய சூழல் / நடத்தைகள்

1

3 வருடம்

 

எடை 12.5 - 16.5 kg

உயரம் 90.5 -101.5 cm

நாடித்துடிப்பு 105 + 15 b/m

இரத்த அழுத்தம் 100+ 24/67+25 imrm/Hg

நடுமேற்கை சுற்றளவு 13 - 16 செ.மீ.

 

நேர் கோட்டில் நடத்தல்

பின்னால் நடத்தல்

நுனி விரலால் நடத்தல்

பந்தினை உதைத்தல்

 

9 - 10 பிளாக் கொண்டு டவர் கட்டுதல்

வட்டம் வரைதல்

நூலில் மணிகளைக் கோர்த்தல்

 

எதிர்மறை வார்த்தைக்கு கீழ்படுதல்

நான்கு வார்த்தை கொண்ட வாக்கியத்தை உபயோகித்தல்

தனது பெயரை (மற்றும்) பாலினத்தை முழுமையாக கூறுதல்

படம் பார்த்து பெயர் கூறுதல்

தன்னுடையது என்ற எண்ணம் தோன்றுதல்

கற்பனையாக உறவை ஏற்படுத்தி கொள்ளுதல்

>தானாகவே தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுதல்

இருட்டில் பயப்படுதல்

2

4 வருடம்

எடை 13.5 - 19.5 kg உயரம் 95 - 109 cm

நாடித்துடிப்பு 100+10 b/m மூச்சுவிடல் 24+4 b/m

இரத்த அழுத்தம் 100 / 66+20

நுனி விரலினால் ஓடுதல்

உயரத்தில் இருந்து கீழே குதித்தல்

மரத்தில் ஏறுதல்

கால்களில் நிலைப்படுத்துதல்

கட்டடங்களை பார்த்து வரைதல்

முகங்களை வரைதல்

கத்தரியால் படங்களை வெட்டுதல்

முன்னால், பின்னால், மேலே கீழே போன்றவற்றை அறிந்து கொள்ளல்

நிறங்களின் பெயர்களை அறிதல்

1 - 5 வரை சொல்லுதல் 1500 புதிய வார்த்தை அறிதல்

சுய நலம் தனக்கென்ற எண்ணம்

சகோதர பொறாமை குணங்கள்

இருட்டு மற்றும் கனவு கண்டு பயப்படுதல்

பள்ளிப்பருவ குழந்தை

6-12 வயது வரையிலான குழந்தைகள் பள்ளி வயது குழந்தைகள் ஆவர். இவர்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும் உடல் சம்பந்தமாகவும், மனரீதியாகவும் இருக்கும்.

வ.எண்.

வயது

(மாதம்)

முன்னேற்றம்

உடல் வளர்ச்சி

தூண்டல்

துலக்கம்

மொழிகள்

மனம் மற்றும் சமூகம் சார்ந்த முன்னேற்றம்

1

6-8 வயது

எடை 25.5 kg

உயரம் 110-124 cm

நாடித்துடிப்பு 90+ 15 b/m தாவுதல்,

சுவாசம் 21+3 b/m

இரத்த அழுத்தம் 100/60 + 6/10 mm Hg

 

பயிற்சியின்றி சைக்கிளை ஓட்டுதல்

ஓடுதல், குதித்தல், தாவுதல், ஏறுதல்

எப்போதும் அசைந்து கொண்டிருத்தல்

ஒத்துழைப்பு அதிகரித்தல்

 

 

வலது, இடது கைகளை அறிதல்

மனிதனின் 12-16 பாகங்களை வரைதல்

எழுத்துக்களை எழுதுதல்

கூட்டெழுத்துக்களை பயின்றல்

 

3 கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல்

10 - 12 எழுத்துள்ள வார்த்தைகளை திரும்பத் பயன்படுத்தல்

புதிய வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுதல்

1-10 எண்களை அறிதல்

எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க விரும்புதல்

சகோதரருடன் பொறாமை கொள்ளுதல்

2

8 - 10 வயது வரை

 

எடை 22-32 kg

உயரம் 121.5 - 136.5 cm

நாடித்துடிப்பு 85+ 10 b/m

சுவாசம் 20+13 b/m

இரத்த அழுத்தம் 102/60+16/10 mm Hg

சைக்கிளில் வித்தை காட்டுதல்

விளைாயட்டுகளில் பங்கெடுத்தல்

சாதுரியமாக பந்தெறிதல்

சுதந்திரமாக கைகளை உபயோகப் படுத்துதல்

18 - 20 மனிதனின் பாகங்களை வரைதல்

சரளமாக எழுதுதல், கூட்டெழுத்து எழுதுதலில் முன்னேற்றம்

கட்டளையை விட கருத்துகளை ஏற்றுக் கொள்ளுதல்

எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்

மற்றவர்களோடு உறவை ஏற்படுத்துதல்

தன்னை கதாநாயகியாக நினைத்தல்

தாய்க்கு உதவிச் செய்தல்

3

10-12 வயது வரை

 

10 வயது

எடை 25.5 - 39 கிகி

உயரம் 131.5 - 147.5செமீ

நாடித்துடிப்பு 90+20 b/ம்

சுவாசம் 19+3 b/m

இரத்த அழுத்தம் 109/58+ 16/10

12 வயது ஆண்கள் எடை 30-48 kg

உயரம் 142 - 158 cm

பெண்கள் எடை 30-58 கிகி

உயரம் 144-160 cm

நாடித்துடிப்பு 90+20 b/m

இரத்த அழுத்தம் 113/59+ 18/10

உடல் சம்மந்தமான வேலைகளில் மகிழ்ச்சியாய் இருத்தல்

ஒருங்கிணைந்து செயல்படுதலில் முன்னேற்றம்

 

பிறருடைய கருத்துக்களையும் ஆலோசனையையும் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்ளுதல்

7200 புதிய வார்த்தைகளைப் பேசுதல்

50,000 வார்த்தைகளை படித்தல்

1 - 100 வரை எண்களை கூறுதல்

சரியாக உடலின் பாகங்களை கூறுதல்

தன்னடக்கம்

பெற்றோரின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்தல்

சிறு சிறு கோபங்கள்

இருட்டை பார்த்து பயப்படுதல்

தன்னை கதாநாயகனாக / கதாநாயகியாக நினைத்தல்

 

விடலை பருவம் (Adolescent)

விடலை பருவம் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து குமரப்பருவத்திற்கு மாறுதலாகும். இப்பருவத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிகளிலும் முதிர்ச்சி ஏற்படும். இப்பருவத்தில் இரண்டாம் நிலை பாலின மாற்றங்கள் காணப்படும் (11/12 வயது). 18 - 20 வயதில் உடல் வளர்ச்சி நின்றுவிடும்.

 

 

வயது (மாதம்)

உடல் வளர்ச்சி

முன்னேற்றம்

ஆண்

பெண்

 

துலக்கம்

மொழிகள்

மனம் மற்றும் சமூகம் சார்ந்த முன்னேற்றம்

12 முதல் 13 வயது வரை

 

 

 

 

எடை 38-60 கிகி

உயரம் 154-172 செ.மீ)

நாடித்துடிப்பு 65+8 b/m

சுவாசம் 19+3 b/m

இரத்த அழுத்தம் 114/68 +10/12 mm Hg

இரண்டாம் நிலை பாலின மாற்றம் ஏற்படும்.

40-60 கிகி 153-167செ.மீ

65+8 b/m

19+3 b/m

112/66+10/12 mm Hg

இரண்டாம் நிலை பாலின மாற்றம் காணப்படும்.

 

உடல் செயல் பாட்டுத்திறன் பெரியவர்களைப் போன்றது

 

கண் மற்றும் கை ஒருங்கிணைந்து செயலாற்றல் இளம் வயதில் காணப்படும்

 

தன்னுடன் பழகும் நண்பரின் பேச்சு வழக்கை பயன்படுத்தல்

வார்த்தைகளுக்கு பல அர்த்தங்களை பயன்படுத்தல்

 

தன்னை சுற்றி உலகம் இருப்பதாக எண்ணம்

நண்பர்களிடம் உண்மையாக இருத்தல்

அலைபாய்கிற வயது.

கதாநாயகி / நாயகனாக கனவு காணுதல்

ஒரே வகை பாலினத்துடன் நட்பு வைத்தல்

14 முதல் 16 வயது. வரை

 

 

எடை 50-60 kg

உயரம் 164180 cm

நாடித்துடிப்பு 63 +8 b/m

சுவாசம் 17+3 b/m

இரத்த அழுத்தம் 116/70+ 12/14 mm Hg

 

42-64 kg 155-169 cm 66+8 b/m 17+3 b/m 114/70+ 14/12 mm Hg

 

உடல் செயல் பாட்டுத்திறன் பெரியவர்களை போன்றது

 

கண் மற்றும் கை ஒருங்கிணைந்து செயலாற்றல்

 

மொழியை பயன்படுத்தி தன்னுடைய எண்ணத்தையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தல்

இலக்கியங்களை பயன்படுத்தல்

தன்னல குணம் குறைதல் பெற்றோர்களை விட்டு தனித்திருத்தல் எதிர் பாலினத்துடன் நட்பு வைத்தல் பெற்றோரின் நம்பிக்கையை வார்த்தைகளால் தாக்குதல்

17 முதல் 19 வயது வரை.

எடை 56-80 kg

உயரம் 163-182 cm

நாடித்துடிப்பு 70 + 10 b/m சுவாசம் 18 +4 b/m இரத்த அழுத்தம் 126/74+26/16

48-72 kg 56-80 kg 156-170 cm 70+10b/m 17+3 b/m

 

 

126/74+26/16

 

வளர்ந்த மனிதன் அளவிற்கும் தாங்கும் தன்மைகள்

வளர்ந்த மனிதன் அளவிற்கு கண் மற்றும் கையின் ஒற்றுமையான செயல்கள்

- do -

பெற்றோருடன் அன்னியோனியமாக இருத்தல் பெற்றோர் மற்றும் அனைவரையும் சார்ந்து இருத்தல் ஒரு சிலருடன் உண்மையான நட்பு

குழந்தைகளில் காணப்படும் முக்கிய பிரச்சனைகள்

குழந்தைகளில் காணப்படும் பிரச்சனைகளை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

1. குறைவான பிறப்பு எடை

2. ஊட்டச்சத்து குறைபாடு

3. நோய் தொற்றுகளும் நோய்களும்

4. விபத்து மற்றும் நஞ்சுகள்

5. நடத்தையில் பிரச்சனை

குறைவான பிறப்பு எடை

சிசுவின் வளர்ச்சியை கணக்கில் எடுக்காமல் பச்சிளங்குழந்தையின் எடை 2.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால், அது எடை குறைந்த குழந்தை என அழைக்கப்படுகிறது. இது இருவகைப்படும்.

அ) குறைமாத குழந்தைகள்

இக்குழந்தைகள் 37 வாரங்களுக்கு முன்பே பிறக்கும். இக்குழந்தைகளுக்கு பச்சிளங்குழந்தை பராமரிப்பு தர வேண்டும். இதனால் குழந்தைகள் 2-3 வயதில் இயல்பான குழந்தைகள் போல் வளர்ச்சி மற்றும் செயல்திறன் இருக்கும்.

ஆ) வளர்ச்சி குன்றிய குழந்தை (Small for date)

இக்குழந்தைகள் நிறைமாதமாகவோ, குறைமாதமாகவோ பிறக்கலாம். இக்குழந்தைக்கு 10% எடை குறைவாக காணப்படும்.

வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பச்சிளங் குழந்தை காலத்தில் மட்டுமல்லாமல் இளங்குழந்தை பருவத்திலும் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இக்குழந்தைகள் புரதசத்து குறைவு மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

நோய் காரணிகள்

ஊட்டச்சத்துக் குறைவு

நோய் தொற்று

கர்ப்பந்தரிப்பு சரியின்மை

தடுப்பு முறைகள்

அ) நேரடி முறைகள்

1. அதிக உணவூட்டல்

2. நோய்தொற்று கட்டுப்பாடு

3. நோயை முன் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல்

ஆ) மறைமுக முறைகள்

1. குடும்பக் கட்டுப்பாடு

2. புகைபிடித்தலை தவிர்த்தல்

3. சுற்றுப்புற சுகாதாரம் பேணுதல்

சிகிச்சை முறை

1. கண்ணாடி பெட்டியில் வைத்து பராமரித்தல் (Incubatory care)

2. உணவு ஊட்டல் (feeding)

3. நோய் தொற்று தடுத்தல்

சத்துணவு குறைபாடு

சத்துணவு குறைபாடு என்பது ஏற்ற உணவு குறைபாடு, மோசமான குடும்ப பொருளாதார நிலை, பாரம்பரிய நம்பிக்கைகள், மூடபழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

அ) புரத குறைப்பாட்டு நோய்கள் :

குறைவான வளர்ச்சி மற்றும் அதிக இறப்பு விகிதம் 12 முதல் 24 மாதம் வரையிலான குழந்தைகளிடம் காணப்படும்.

ஆ) நுண் ஊட்டச்சத்து குறைபாடு :

இது வைட்டமின் ஏ (Vit A) மற்றும் தாது உப்புகளான கால்சியம், அயோடின், இரும்பு மற்றும் துத்தநாகம் குறைபாட்டால் ஏற்படுகிறது.

நோய் தொற்று மற்றும் நோய்கள்

இளங்குழந்தைகள் நோய்தொற்றுக்கு மிகவும் எளிதாக உள்ளாகுகிறார்கள். அவையாவன, வயிற்றுப்போக்கு, சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்கள், தட்டம்மை, கக்குவான் இருமல், இளம்பிள்ளை வாதம், பச்சிளங்குழந்தை ரணஜன்னி, காசநோய் மற்றும் தொண்டை அடைப்பான். இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மற்றும் நல்ல குடிநீர் கிடைக்காததே காரணமாகும்.

விபத்து மற்றும் நஞ்சுகள்

தீப்புண், காயம், விழுதல், தண்ணீரில் மூழ்குதல், சாலை விபத்துகள் மற்றும் நஞ்சுகள் குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்தை அளிக்கிறது.

நடத்தையில் பிரச்சனை

பெற்றோர்களை விட்டு தனித்த அல்லது பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் இப்பிரச்சனைக்கு உள்ளாகுகிறார்கள்.

வரையறை

நன்னடத்தை குறைபாடு என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் செயல் அல்லது பழக்கவழக்கங்களிலிருந்து விலகி செல்லுதல் ஆகும்.

காரணிகள்

பெற்றோர்களின் தவறான எண்ணம், குடும்ப சுற்றுசூழல் போதுமான அளவின்மை, உடல் மற்றும் மன அளவில் ஊனமுற்ற குழந்தைகள், தீய சமூக தொடர்பு, தொலை தொடர்பு சாதனம்

பொதுவாக காணப்படும் நடத்தை பிரச்சனை

1) உணவு உட்கொள்ளுதலில் பிரச்சனை

உணவினைத் தவிர்த்தல், அதிக உணவூட்டல், மண் உண்ணுதல், பசியின்மை நோய்

2) பழக்கவழக்க பிரச்சனை

விரல் சப்புதல், நகங்கடித்தல், தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், தகாத இடத்தில் மலம் கழித்தல்

3) தூக்கத்தில் பிரச்சனை

தூக்கத்தில் நடத்தல் வியாதி

தூக்கத்தில் ஏற்படும் பயம்

தூக்கத்தில் பயமுறுத்தும் கனவுகள்

தூக்கமின்மை

4) இணக்கத்தில் பிரச்சனை

கீழ்ப்படியாமை

தவறான முறையில் நடத்தல்

அடம்பிடித்தல்

5) சமூகத்திற்கு விரோதமான செயல்கள்

கடமை தவறுகள் / குற்றம்

திருடவேண்டுமென்று ஒரு உள்ளுணர்ச்சி

போதை மருந்துக்கு அடிமையாதல்

பாலியல் சம்பந்தமான உபாதைகள்

சிகிச்சை

* புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் அக்கறை காட்டும் குடும்ப சூழ்நிலை

* குடும்பத்தினருக்கு இடையில் நேரடி தொடர்பு இருக்கவேண்டும்

* மனரீதியான பாதிப்பு இருந்தால் முன்னதாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

* நன்னடத்தை சிகிச்சை முன்னேற்றத்திற்கான விடாமுயற்சியை ஊக்குவிக்க வேண்டும்

* ஓய்வு

- குழந்தை ஆலோசனை மையத்திற்கு பரிந்துரைத்தல்

* மருந்து மூலம் சரிசெய்தல்

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.92592592593
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top