பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பேறுகால கவனிப்பு

பேறுகாலத்துக்கு முந்திய நிலை மற்றும் பின் கவனிப்பு குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேறுகாலத்துக்கு முந்திய நிலை கவனிப்பு (Antenatal Care)

உலக சுகாதார நிறுவனத்தின் ஒருவிதமான குறிக்கோள் கர்பிணிக்கு அளிக்கக்கூடிய பாதுகாப்பான சிறப்பு மிக்க கவனிப்பு ஆகும். பேறுகாலத்து முற்பட்ட காலத்திலிருந்து அதாவது சிசுகரு உருவாகும் காலம் வரையாகும். பிரசவம் நிகழும் வரை உள்ள காலம் தான் பேறுகாலத்துக்கு முந்திய நிலை என்று பெயர்.

நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

• கர்ப்பிணி தாய்க்கு உடல்நிலையை பாதுகாக்க வேண்டும். தாயின் ஆரோக்கியம் மிக அவசியம். கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்கு தயார் செய்தல்.

• தாய்ப் பாலூட்ட தொடங்குவதில் தாயிக்கு உதவுதல், மற்றும் பேறுகால பிந்தைய கவனிப்புக்கு தயாராக்குதல்.

• அதிக சிக்கல்களுடைய கர்ப்பத்தை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுத்தல்.

• சிக்கல்களை நீக்க வேண்டும் முக்கியமாக இரத்தசோகை, டாக்சிமியா, இரத்த ஒழுக்கு.

• முழுமையான, உடல் நலமுள்ள ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குதல்.

பேறுகாலத்து முந்திய நிலையில் பார்வையிடுதல்

உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கோள்படி;

* 20 வாரங்களில் I பார்வை .

* 32 வாரங்களில் II பார்வை

* 36 வாரங்களில் III பார்வை (அ) மாத பார்வையிடுதல்.

* முதல் 7 மாதங்களுக்கு மாதத்திற்கு ஒரு முறையும் 8வது மாதம் முதல் மாதத்திற்கு இருமுறையும், 9வது மாதம் முதல் வாரத்திற்கு ஒருமுறை பரிசோதிக்க வரவேண்டும்.

முதல் சந்திப்பு

உடல்நல விவரங்கள் அறிதல்

நோயாளியின் தகவல்கள்:

பெயர், வயது, முகவரி, கணவர் பெயர். வேலை (தலைவன், மனைவி) மற்றும் இதர குடும்ப விவரங்கள்.

சமூக விவரங்கள்:

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவரா, நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவரா என்பதை அறிதல், வீட்டின் முக்கியமான நபரான சம்பாதிப்பு பற்றி அறிதல் மற்றும் சுற்றுப்புறசுழல், காற்றோட்டம், வெளிச்சம், மின்சார வசதி, கழிவுநீர் வசதிகளை பற்றி அறிதல்.

குடும்ப விவரங்கள் :

ஏதாவது பரம்பரை நோய் இருக்கிறதா என்று அறிதல் முக்கியமாக நீரழிவு, அதிக இரத்த அழுத்தம், காசநோய், மனநலக் கோளாறு, வலிப்பு மற்றும் குடும்பத்தில் யாருக்காவது ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பம் உள்ளதா என்பதை அறிதல்.

மருத்துவ விவரங்கள்:

நபருக்கு முந்திய மருத்துவ வரலாற்றைகண்டறிய வேண்டும் முக்கியமாக, நீரழிவு, காசநோய், பாலின நோய்கள், இதயக்கோளாறு, தைராய்டு நோய்கள் மற்றும் வேறு ஏதாவது நோய்கள் உள்ளதா என்பதை அறிதல்.

மாதவிடாய் சுழற்சி பற்றிய விவரங்கள்

முதன் முதலில் மாதவிடாய் வந்த வயது மாதவிடாய் சுழற்சி, சரியான நாள் இடைவெளியில் வருதல். வலியுடன் கூடிய மாதவிடாய் சுழற்சி. இரத்த போக்கு பற்றிய விவரங்கள். கடைசி மாதவிடாய் சுழற்சி வந்த தேதி.

மகப்பேறு விவரங்கள்:

முதன்முதலில் கருவுற்ற நிலை, மேலும் முந்தின கால கர்ப்ப அனுபவங்களையும் தெரிந்துக் கொள்ளுதல். முந்தின கர்ப்பகால சிக்கல்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிதல் முக்கியமான கருத்சிதைவு, கர்ப்பகால ரத்த அழுத்தம், முந்தைய குழந்தை பிறந்த முறை, குழந்தை எடை, பாலினம், மற்றும் நிறை அல்லது குறைமாதக் குழந்தை பற்றிய விவரங்களை அறிதல்.

எதிர்பார்க்கப்படும் பேறுகால தேதி:

மொத்தம் 40 வாரங்கள் 280 நாட்கள் நெக்லீஸ் (Naeglea's Rule) விதி : 9 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் கடைசி மாதவிடாய் நாள் வந்த தேதியிலிருந்து கணக்கிட வேண்டும். (எ.கா) க. மாதவிடாய் நாள் 4.1.2010, இதை 11. 10. 2010 என்று கொள்ளலாம்.

உடல் நல பரிசோதனைகள்

* உயரம்

* எடை

* உடல் பருமன் அளவு

கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகள்

* வெப்பநிலை

* நாடித்துடிப்பு

* சுவாசம்

* இரத்த அழுத்தம்

பொதுவான உடல்நிலை

கர்ப்பிணிப் பெண்ணின் சுயநினைவு, நிலை மற்றும் தன்னை சுற்றி நிகழும் நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் நிலை. முகத்தை வைத்தே உடல் நலம், மனநலம் பற்றி அறிதல்.

தலை:

ரோமத்தின் அடர்த்தி, பொடுகு மற்றும் தொற்றுகள் அறிதல்.

முகம்:

ஏதாவது வீக்கம் இருக்கிறதா என்று அறிதல்.

வாய்:

உதட்டில் புண் மற்றும் பிளவு இருக்கிறதா, மற்றும் நாக்கின் நிறத்தை கணக்கிடுதல்.

மார்பகங்கள்:

கர்ப்பத்தினால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மார்பக காம்புகளின் நிலை, மார்பு காம்பின் வெடிப்பு உள்ளதா (அ) உட்புறமாக திரும்பியுள்ளதா ஆகியவற்றை கவனிக்கவேண்டும். மார்பகத்தைத் தொட்டுப்பார்த்து மார்பகம் மென்மையாக உள்ளதா (அ) கடினமாக உள்ளதா, ஏதாவது ஒழுக்குகள் மார்பகத்தில் இருக்கிறதா என்று அறிதல்.

வயிற்று பரிசோதனை:

பார்வையிடுதல்:

கருவுற்று இருக்கும் காலத்தின் தொடக்கத்தில் மாற்றம் எதுவும் தெரியாது. பிறகு வரும் காலங்களில் பார்வையாலேயே குழந்தையின் வளர்ச்சியை கணக்கிடுதல்.

வடிவம்:

நீண்டும், அகலம் குறுகியும் இருந்தால் குழந்தையின் பிட்டம் மேல் இருக்கலாம் என்று சந்தேகப்படலாம். நீளத்தை விட அகலம் அதிகமாக இருந்தால் அது குறுக்கு அமைப்பு எனச் சந்தேகப்படலாம்.

தொப்புள் :

தொப்புள் பகுதி தட்டையாகவும், பெரிதாகவும் இருக்கலாம். இது குழந்தையின் வளர்ச்சியை குறிக்கிறது.

தொட்டு அறிதல்:

மேல் உயரத்தை கண்டறிதல். அதன் அளவீடுகளை கண்டறிதல், மேல் வயிற்றுப் பகுதி சாபக்குழி வரை காலிப்பர் வைத்து அளவிட வேண்டும். முழுமையான வளர்ச்சி அடைந்த குழந்தை வயிற்றின் உயரம் 28 செ.மீ. - 32 செ.மீ.

குழந்தை சரியானபடி கீழ் இறங்காததற்கு முக்கியமான காரணங்கள்:

* குறுகிய இடுப்பு எலும்பு

* நஞ்சுக்கொடி முன் இருத்தல்.

* அசாதாரணமான நிலைகள்

* குழியில் கட்டி

காதினால் கேட்டறியும் ஒலி :

இது குழவியின் இதயத்துடிப்பைக் கேட்பது ஆகும். 20 ஆம் வாரத்திலிருந்து கரு இதயத்துடிப்பு கருமானி கொண்டு கேட்கலாம். கருவின் இதய ஒலிதான் அவள் கருவுற்று இருப்பதற்குச் சரியான அறிகுறியும். கரு உயிருடன் உள்ளதற்கு நிரூபணமும் ஆகும். இயல்பான துடிப்பு விகிதம் நிமிடத்திற்கு 120 - 140 வரை இருக்கும்.

தலை முன் வரும் நிலை :

தொப்புளுக்கும் இலியாக் ஸ்பையின் (iliac Spine) இடைப்பட்ட வலது அல்லது இடது நிலையில் கேட்டறியலாம்.

புட்டம் முன் வரும் நிலை:

தொப்புளுக்கு மேல் இடது அல்லது வலது புறமாக கேட்டறியலாம்.

குறுக்கு நிலை:

இரண்டு விரல்கள் அகலம் தொப்புளுக்கு மேல் அல்லது தொப்புளுக்கு கீழ் கண்டறியலாம், கேட்டறியலாம்.

குழவியின் இருதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 120 க்கும் குறைவாக அல்லது 160க்கும் மேல் இருந்தால் குழவிக்கு மூச்சுத்திணறல் என்பதை அறிவுறுத்தும்.

பரிசோதனை

• சிறுநீர் பரிசோதனை

* மலம் பரிசோதனை

• இரத்த அணுக்களின் அளவு மற்றும் ஹீமோகுளோபின் அளவு

• இரத்த பிளாஸ்மா அளவு

• இரத்த பிரிவு மற்றும் வகை

பேறுகால அறிவுரைகள்

• உணவு

* தன்சுத்தம்

* தாய்ப்பால் புகட்டும் முறைகள்

* குடும்பக்கட்டுபாடு முறைகள்

• கர்ப்பக்கால உடற்பயிற்சிகள்

பேறுகால பின் கவனிப்பு

பேறுகால பின் கவனிப்பின் நோக்கம் தாய்நலம், சேய்நலம், மற்றும் பேறுகாலத்திற்கு பின் ஏற்படக்கூடிய சிக்கல்களை கண்டறிதல் மற்றும் சிக்கல்களுக்கு முறையான பராமரிப்பு, மற்றும் போதுமான பரிந்துரையும் ஆகும். பேறுகாலத்துக்கு பின் பிறப்பு உறுப்பில் மாறுதல்கள் ஏற்பட்டு பேறுகாலத்திற்கு முந்தைய நிலை ஏற்படுகிறது. இதற்கு முறையான சிகிச்சை முறையும் பேறுகால முன் கவனிப்பின் நோக்கமாகும். இதில் கருப்பை பரிசோதனை, லோக்கியா, சிறுநீர்ப் பை சோதனை, இரத்த அழுத்தம், இருதய துடிப்பு, உடல் வெப்பநிலை, வயிற்று வலி மற்றும் மனநிலை கண்டறியலாம்.

பேறுகால கவனிப்பின் நோக்கம்

• உடல் மற்றும் மனநல பராமரிப்பு

• தாய் சேய் சிக்கல்களை கண்டறிதல்

• தாய்ப்பால் கொடுப்பதற்கும் குழந்தை கவனிப்பதற்கும் தயார்படுத்துதல்.

* பிரசவத்திற்கு பின் நிகழக்கூடிய சிக்கல்களை தடுத்தல்.

*  குடும்பகட்டுப்பாடு ஆலோசனை வழங்குதல்.

பொருள்:

பிரசவத்தை தொடர்ந்து உடனடியாக உள்ள 6 வார காலமே பியூர் பெரியம் என அழைக்கப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் இனப்பெருக்க உறுப்புகள் கர்ப்பகாலத்திற்கு முன்னிருந்த நிலைக்கு திரும்புகின்றன. தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கின்றன. தாய் பிரசவத்தினால் ஏற்பட்ட உடல் அசதி மற்றும் மனஉளச்சலில் இருந்து மீள்கின்றனர்.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள்

• கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள்:

* பிரசவத்திற்கு பின் கருப்பை ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் அதன் ஆற்றலை பார்க்க வேண்டும்.

* மேல் வயிற்றில் அழுத்தம் அளிப்பதின் மூலமாகவோ, கருப்பையை சுருக்கச் செய்ய முடியும்.

* இரத்தம் கட்டின நிலையை அழுத்தத்தின் மூலம் கருப்பையிலிருந்து வெளியேற்ற துணைப்புரியலாம்.

• தேங்கிய சிறுநீர்ப்பையை பரிசோதனை செய்தல். சிறுநீர்ப்பை தேங்கிய நிலையில் இருந்தால் கருப்பை தொப்புள் வட்டத்திற்கு மேல் எழும்புகிறது.

மார்பகம்

* மார்பகங்கள் மிகவும் மென்மையாகவும், மிதமாகவும், சிறிய அளவிலான கொலஸ்ட்ரம் இருக்கக் கூடியதாகவும் இருக்கும்.

* மார்பக இருவட்டங்கள் சிவந்தும், தொட்டால் வலியும் இருக்கும்.

* கொப்பளங்களாகவோ, (அ) வெடிப்பு விட்டதாகவோ காணப்படும்.

* மார்பகம் அழுத்துவது போலிருக்கும். 2 - 4 நாட்கள் மார்பகத்தை பரிசோதனை செய்தல் வேண்டும்.

* முக்கியமாக மார்பக காம்புகள் உட்புறமாக திரும்பி உள்ளதா, வெடிப்பு உள்ளதா கொப்பளங்கள் உள்ளதா. திசுக்கள் புடைத்துக் கொண்டுள்ளதா மற்றும் தொட்டால் அதிக வலி இருக்கிறதா என்றும் கண்டறிய வேண்டும்.

லோக்கியா (Lochia) :

கருப்பை, செர்விக்ஸ், மற்றும் சிசுத்தாரையில் இருந்து வெளிப்படும். திரவ ஒழுக்கே லோக்கியா எனப்படும்.

லோக்கியாவை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

* லோக்கியா ரூப்ரா

• லோக்கியா சிரோஸா

* லோக்கியா ஆல்பா

லோக்கியா ரூப்ரா:

சிவப்பு நிறத்தில் இருக்கும். (1 - 4 நாட்கள் வரை)

லோக்கியா சிரோஸா:

தண்ணீர் போன்ற பிங்க் மற்றும் வெளி பிரௌன் நிறத்தில் 5 முதல் 10 நாட்கள் வரை இருக்கும்.

லோக்கியா ஆல்பா :

வெள்ளை நிறமாக 10 முதல் 14 நாட்கள் வரை இருக்கும்.

லோக்கியா அளவுகோலை கண்டறிதல்

மிகக்குறைந்த இரத்த அளவு : இரத்தத்தின் அளவு பெரினியல் பேடில் இரண்டு இஞ்சுக்கும் குறைவாக ஒருமணி நேரத்தில் இருக்கும்.

* சிறிதளவு இரத்தம் : இரத்தப்போக்கு நான்கு இஞ்சு ஒருமணி நேரத்தில் குறைவாக இருத்தல்.

* நடுத்தர இரத்த நிலை ஆறு இஞ்சுக்கும் குறைவாக இருத்தல்.

அதிகமான இரத்த நிலை : பெரினியல் பேர்ட் முழுவதுமாக நனைந்து இருத்தல் ஒருமணி நேரத்தில்.

பெரினியம்

• பெரினியத்தை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

• பெரினியத்தில் தையல் போட்டு இருந்தால் தனிகவனம் அளிக்கவேண்டும்.

* பெரினியத்தில் வீக்கம், இரத்தபோக்கு மற்றும் இரத்தக்கட்டி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பெரினியத்தில் வீக்கம் மற்றும் வலி இருந்தால் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தினால் வீக்கமும், வலியும் குறைக்கும்.

* பெரினிய பகுதியை பார்வையிடுதல் வேண்டும். சிவந்த நிலை, வீக்கம். நீர்வடிதல் இருந்தால் தனி கவனம் அளிக்க வேண்டும்.

சிறுநீர்ப்பை

• பிரசவத்திற்கு பிந்திய காலக் கட்டத்தில் பின் விரைவில் சிறுநீரப்பை தேக்கம் இருக்கும் அப்போது பெரினியம் பகுதியில் வீக்கம் காணப்படுதல்.

* வலி அதிகமாக இருக்கும்போது வலி இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறுநீர்ப் பையில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும்.

* ஆரம்பநிலையில் நடக்க வைக்கும் போது, சிறுநீர் கழிக்க உதவலாம்.

* ஆறுமணி நேரத்தில் 300 ml சிறுநீர் கழிக்க வேண்டும்.

* இல்லையெனில் சிறு நீர்தேக்கம் ஏற்பட்டால் கோத்திட்டர் மூலம் சிறுநீரை வெளியேற்றுதல் வேண்டும்.

குடல்கள் மற்றும் வயிற்றுச்சுவர் பகுதியை கண்டறிதல்

* மயக்க மருந்து சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் உணவு எடுத்துக் கொள்ளலாம். பிரசவத்திற்கு பின் சில சமயங்களில் பசியின்மை இருக்கும்.

* உயர்ந்த புரத உணவு மற்றும் இரும்பு சத்து அடங்கிய உணவுகளை அளிக்க வேண்டும்.

* குடல் அசைவுகள் மூன்று தினங்களில் பழைய நிலையை அடைதல்.

* திரவ ஆகாரங்களை 6 அல்லது 8 டம்ளர்கள் சாப்பிட வேண்டும். மற்றும் அதிக நார்சத்துள்ள உணவு பரிந்துரை செய்யப்படுகிறது.

* மலச்சிக்கல் இருந்தால் வலி நீக்கிகள், குடல் அசைவுகளை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் பிரசவத் தாய்களை நடக்கச் செய்தல். இவையெல்லாம் மேற்கொள்ளும் போது சரிசெய்யலாம்.

கை கால்கள்

* பரிசோதனை செய்தல் - நரம்பு சுற்றல், ஆழமான செயல்முறைகள், தொட்டால் வலி, வீக்கம்,

* கால்களில் வலி, வீக்கம், தடைப்படுதல், கால்களின் பின் பகுதியில் உள்ள சதையில், உட்பகுதியில் வீக்கம்.

* முக்கியமாக மயக்க மருந்து செலுத்தியவர்களுக்கு கவனிக்க வேண்டும். காலில் உணர்வுற்ற நிலை மற்றும் கால் அளவு நிலை சரியாக உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

* தாய்மார்கள் கை, கால்கள் மற்றும் இருப்பினை படுக்கையில் இருந்து தூக்க முடிகிறதா என்பதை மயக்க மருந்து கொடுத்த 2-4 மணி நேரத்தில் பார்க்கவேண்டும்.

இரத்தம் அழுத்தம்

• இரத்த அழுத்தத்தினை மானிட்டர்களைக் கொண்டு 15 நிமிடத்தில் ஒருமுறை பரிசோதனை செய்தல் வேண்டும்.

* சிசுத்தாரை வழியாக பிரசவம் நடந்தால் முதல் 1 மணி நேரத்தில் அழுத்தம் குறையக் கூடிய வாய்ப்புகள் இருக்கும்.

நாடித்துடிப்பு

* நாடித்துடிப்பின் எண்ணிக்கையை ஒவ்வொரு 15 நிமிடம் பார்க்க வேண்டும்.

• நாடித்துடிப்பானது முதல் ஒரு மணிநேரத்தில் பிரசவத்திற்கு முந்திய நிலையில் உள்ளது போல் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

• அசாதாரணமாகவோ, வேகமாக நாடித்துடிப்பு இருந்தாலோ கவனிக்க வேண்டும்.

வெப்ப நிலை

* ஒரு மணி நேரத்திற்குள் வெப்பநிலையை அறிய வேண்டும்.

* 100°F or 47°C இருந்தாலோ கவனிக்கப்பட்டு மருத்துவரிடம் அறிவிக்க வேண்டும்.

இண்டுக்மெண்டரி சிஸ்டம்

• தோல் நிறம் மாற்றம் பிரசவத்தின் முன் ஏற்பட்டது. பிரசவத்திற்கு பின் ஏற்பட்டது.

* அதிகமான புள்ளிகள் மார்பகத்திலும், தொடைப்பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் கரைகள் இருந்தால் அவை முழுமையாக மறைவதில்லை.

• முதல் இரண்டு மாதத்திற்கு முடிகொட்டுதல் இருக்கும்.

தசை எலும்பு மண்டலம்

* பிரசவத்திற்கு பின் வயிற்றுத் தசைகள் தட்டையான நிலையில் இருக்கும்.

• பண்டஸ் மற்றும் வயிற்றுப் பகுதி மத்தியில் தொட்டு உணரும் போது சில தசைகள் தனித்து இருக்கக் கூடிய நிலைக்கு டயாஸ்டிஸ் ரெக்டஸ் என்று பெயர்.

சைகோலாகல் நிலை

• உடல் நலத்தோடு, சேர்ந்து மனநலமும், பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

* பிரசவத்திற்கு பின் தாய்க்கு அதிக பசிநிலை ஏற்படும்.

அறிவுரை வழங்குதல்

* வீட்டிலோ (அ) வேலை செய்யும் இடங்களிலோ, அவளுடைய முழு வேலையையும் செய்ய அனுமதிக்க வேண்டும்.

* பிரசவத்திற்கு பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை தாயானவள் (4 - 6 வாரம்) வரை செய்ய வேண்டும்.

* பிரசவத்திற்கு பின் தாயானவள் குறைந்தது 6 மாதக் காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

* குடும்பநல ஆலோசனைகளை வழங்க வேண்டும். தற்காலிக முறையோ அல்லது நிரந்தர முறையோ வழங்க வேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.93333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top