பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்க அளவு எடுத்தல்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்க அளவு எடுத்தல் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

பொருள் விளக்கம்

எதிர்பார்க்கப்படும் உடம்பின் அளவையும், உடலின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் கிலோகிராமிலோ அல்லது பவுண்டிலோ எடைப்பார்க்கும் கருவியின் மூலம் அளந்து கூறுவதே எடைப்பார்த்தல் ஆகும்.

நோக்கங்கள்

1. குழந்தையின் துல்லியமான வயதிற்கு ஏற்ற எடையை தணிக்கை செய்தல்

2. உணவு தேவைகளை கணக்கிடுதல்

3. சிரை வழி திரவம் மற்றும் குழந்தையின் எடை அதிகரிப்பதையும் (அ) குறைவதையும் கணக்கிடலாம்.

பொருட்கள்

1. குழந்தையின் எடை அளவி இன்பேன்டோமீட்டர்

2. ட்ரா ஷீட்

3. துடைக்கும் துணி.

4. காகிதம் மற்றும் பென்சில் (கணக்கிடுவதற்கு)

செய்முறை

1. எடை பார்க்கும் போது பதிவுகளிலிருந்து குழந்தையின் முந்திய எடையை குறித்துக் கொள்ள வேண்டும்.

2. ஈரமான துணியைக் கொண்டு எடைப்பார்க்கும் கருவியை சுத்தப்படுத்த வேண்டும்.

3. ட்ரா ஷீட்டை அளவியின் மேல் விரிக்க வேண்டும்.

4. ட்ராஷீட்டுடன் குறிமுள் “O” வில் இருக்க வேண்டும்.

5. குழந்தை கீழே விழாமல் இருக்க, சுவரை ஒட்டியாற் போல் வைக்க வேண்டும்.

6. அளவியின் பின்புறம் தாயை நிற்க சொல்ல வேண்டும்.

7. குழந்தையின் ஆடைகளை நீக்கி அளவிடும் வரை குழந்தையை அந்நிலையிலேயே இருக்க செய்ய வேண்டும்.

8. அதே ட்ரா ஷீட்டால் குழந்தையை மூடி எடைப்பார்க்கும் ஸ்கேலின் மேல் அமர்த்த வேண்டும்.

9. குழந்தையின் மேல் தொடாமல் இடது கையை வைக்க வேண்டும்.

10. எடையை குறித்தல்.

11. எடைப் பார்த்தவுடன் எடைக்கருவியிலிருந்து எடுத்து குழந்தையை தாயிடம் ஒப்படைத்து, துணிகளை அணிய வைக்க வேண்டும்.

12. தற்போது உள்ள எடையையும், முன் உள்ள எடையையும் சரிபார்க்க வேண்டும்.

13. 100 கிராம் மேல் வித்தியாசம் தென்பட்டால், உடனடியாக குழந்தையின் எடையை தேவைக்கு ஏற்ப திரும்பவும் சரிபார்க்க வேண்டும்.

14. அதே வித்தியாசத்தில் எடை காணப்பட்டால், செவிலியிரிடமோ (அ) மருத்துவரிடமோ சொல்ல வேண்டும்.

15. எடையானது அழுத்தத்திலோ மற்றும் அவுன்ஸ்ஸிலோ இருந்தால் அதனை கன்வெர்ஷன் வாய்ப்பாட்டின் மூலம் கிலோகிராமில் மாற்ற வேண்டும்.

16. எடையை பத்திரமாக குறித்து வைத்தல்.

ஆன்திரோபோமெட்ரிக் அளவைகள்

ஆன்திரோபோமெட்ரிக் அளவைகள் என்பது உயரம், எடை, தலை சுற்றளவு, மார்பு சுற்றளவு மற்றும் கையின் சுற்றளவு அடங்கியவை. வளர்ச்சியின் நிலைகளை பதிவு செய்யப்பட்ட செவிலிகளாலோ, உத்தரவு கொடுக்கப்பட்ட செய்முறைசெவிலி (அ) உத்தரவு கொடுக்கப்படாத வளர்ச்சியின் மதிப்பீடுகளை தகுந்த கல்வியின் மூலம் அளக்கும் உதவியலாளராலோ அளப்பதாகும்.

தேவையான பொருட்கள்

1. சிறிய ஷீட், (ஆ) காகிதத் துண்டு (ஸ்கேலை சுற்றுவதற்கு)

2. குழந்தையின் எடை பார்க்கும் கருவி

3. நடைப்பயிலும் பருவக்குழந்தையின் எடைக்கருவி

4. அளவு நாடா (அளப்பதற்கு) (காகிதம் அளப்பதற்கு)

5. தட்டையான பகுதி, தட்டையான போர்டு.

6. சுவர் கருவி (ஸ்டேடியோ மீட்டர் உயரத்தை அளக்க அதனுடன் இணைக்க வேண்டும் (அ) எலக்டரானிக் முறைப்படி நீளத்தை அளக்கும் கருவி.

நீளத்தை அளத்தல் (குழந்தைக்கு / நடைப்பயிலும் பருவம்)

1. தலை, மார்பு, குழந்தையின் நீளம் இவைகளை காகிதத்தினால் சுற்றப்பட்ட பகுதியில் அளத்தல். முடிவு புள்ளியை தலையிலிருந்து, கால்வரையும் மற்றும் இரண்டு புள்ளிகளுக்கு நடுவே அளப்பது குழந்தையின் நீளமாகும்.

தலைச் சுற்றளவை அளத்தல்

1. தட்டையான பகுதியின் மேல் மெல்லிய துணி ட்ரப் (அ) காகிதம் வைக்க வேண்டும்.

2. காகிதம் (அ) துணியின் மேல் உட்காரவோ (அ) மல்லாந்த நிலையிலோ குழந்தையையும் / நடைப்பயிலும் பருவக்குழந்தையும் வைக்க வேண்டும்.

3. தலையின் பின் புள்ளியின் மேல் நாடாவை வைத்து தலையைச் சுற்றி, புருவங்களின் மேல் மற்றும் காது மடல்களின் சுற்றி அளப்பதே தலைச் சுற்றளவு ஆகும்.

மார்பு சுற்றளவை அளத்தல்

மார்புச் சுற்றளவை குழந்தையின் பின்புற பகுதியிலிருந்தும் மற்றும் முன்புற பகுதியான முலைக்காம்பு வரை நாடாவின் உதவியோடு அளவிட வேண்டும்.

கையின் மேற்பகுதியின் நடு சுற்றளவை அளத்தல்

1. நாடாவை செங்குத்தான முறையில் பின்புறமேல் கைப்பகுதியிலிருந்து கழுத்து பகுதி வரை மற்றும் ஒலிக்கிரைனான் மற்றும் அக்ரோமியன் துருத்தத்தில் அளத்தல்

2. நடுப்புள்ளியை அளக்க வேண்டும்.

3. அளவு நாடாவை நடுப்புள்ளியில் வைத்து மற்றும் கையை சுற்றி அளக்க வேண்டும், இதுவே முன்கை சுற்றளவு ஆகும்.

உயரத்தையும் மற்றும் எடையையும் அளத்தல் (பள்ளிக்கு முந்திய பருவம்)

1. குழந்தை சரியானபடி நிற்குமா என்று தீர்மானம் செய்ய வேண்டும்.

2. குறிப்புகளிலிருந்து முந்திய எடையை குறித்துக் கொள்ளவும்.

3. காகிதத்தையோ (அ) துணியையோ கருவியின் மேல் வைக்க வேண்டும்.

4. குறிமுள் “O” நிலையில் இருக்கும்படி வைக்க வேண்டும்.

5. குழந்தை அதிகமான எடையுள்ள துணிவகைகள் அணிந்திருந்தால் நீக்கும்படி கூறவேண்டும். (24 மாதங்கள் மேல் உள்ள குழந்தையை இலேசான ஆடையுடன் அளக்கலாம்).

6. குழந்தை நிற்பதற்கு உதவி செய்தல்.

7. கைகளை உடம்பின் பக்கவாட்டிலோ (அ) வயிற்றிலோ உடலோடு தொடர்புபடுத்தி வைக்க வேண்டும்.

8. கி.கிராமில் குழந்தையின் எடையை பதிவு செய்து வைக்க வேண்டும்.

9. அளக்கும் கருவியிலிருந்து குழந்தையை இறக்குவதற்கு உதவி செய்து உயரத்தை அளந்து சரிபார்க்க வேண்டும்.

10. குழந்தையின் வளர்ச்சியும் எடையையும் முந்திய பதிவேட்டுடன் தொடர்பு செய்து பதிவு செய்ய வேண்டும்.

உயரம்

1. குழந்தை நிலையாக நிற்குமாறு பரிசோதித்தல், இல்லாவிட்டால் சுவருடன் பதிந்துள்ள அளவை ஒட்டி நிற்க செய்ய வேண்டும்.

2. முன்னுள்ள உயரத்தை சரிபார்த்துக் குறிக்க வேண்டும்.

3. காலணிகளை நீக்கி உடலின் உயரத்தை சரியாகவும், துல்லியமாகவும் அளக்கவேண்டும்.

4. குழந்தை நிற்கும் போது. சுவரை ஒட்டினாற் போல (அ) ஸ்டேடியோ மீட்டரை ஒட்டினாற்போல் குழந்தையின் முதுகுப்பகுதி இருக்க வேண்டும். குழந்தையின் குதிக்கால் பகுதி, புட்டப்பகுதி, தோள்பட்டை பகுதி, மற்றும் தலை பின் பகுதி சுவரோடு தொடர்புபடுத்தி அமைக்க வேண்டும். குழந்தையின் தலையை நேராக பொருத்தப்பட்டு எடுக்க வேண்டும்.

5. குழந்தையின் உயரத்திற்கு ஏற்றாற் போல் அளவையுள்ள தக்கையை (Rod) சரிசெய்து, குழந்தையின் தலைக்கு மேல் கொண்டு செல்ல வேண்டும்.

6. குழந்தையின் உயரத்திற்கு ஏற்றாற்போல் தலையை ஒட்டி தக்கையை கீழே இறக்க வேண்டும்.

7. பரிசோதிப்பவர் குழந்தையின் கண் நேருக்க நேர் தொடர்பு கொள்ளும்படி சரிசெய்து உயரத்தை செ.மீட்டர் முறையில் பதிவு செய்ய வேண்டும்.

8. குழந்தையை அளவையிலிருந்து இறக்க உதவி செய்ய வேண்டும்.

9. குழந்தையின் வளர்ச்சி குறிப்பேட்டில் உயரத்தை பதிவு செய்து முந்திய குறிப்பேட்டுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

சரியான அளவீடுகள்

வயது

உயரம்

எடை

இளம்குழந்தை ( 1-12 மாதங்கள்)

45-50 செ.மீ

2.5 - 3 கி.கி

நடைப்பயிலும் பருவம் (13 வயது)

அதிகப்படியான 7.5 செமீ / வருடம்

அதிகரிப்பு 2 - 3 கி.கி / வருடம்

பள்ளிக்கு முந்திய நிலை (3 - 5 வயது)

4 வயது வரும் போது பிறந்த உயரத்தை விட இரண்டு மடங்கு கூடுதல்

மார்பு சுற்றளவு

வயது

தலை சுற்றளவு

மார்பு சுற்றளவு

பிறந்த குழந்தை

33 - 35 செ.மீ

தலை சுற்றளவை விட அதிகம்

இளம்பிள்ளை 1 வயது- நடை பயிலும் பருவம்

3 ஆண்டுகள்

தலை மற்றும் மார்பு சுற்றளவு இரண்டுமே சமமாக இருக்கும்

மார்பு சுற்றளவு குறைவு

கையின் மேற்பகுதியின் நடு சுற்றளவு

முதல் வருட வாழ்க்கையில் மேல் கையின் சுற்றளவு ஆரோக்கியமான இளம் குழந்தைக்கு 16 செ.மீ 5 வயது வரும் வரை நிலையாக இருக்கும்.

13.6 செ.மீ - 16 செ.மீ - சாதாரணமாக

12.5 செ.மீ - 13.5 செ.மீ - மிதமான ஊட்டச்சத்து குறைவு

12.5 செ.மீ மற்றும் அதற்கு கீழ் - தீவிரமான ஊட்டச்சத்து குறைவு.

தொகுப்பு

1. ஆஸ்திரோபோமெட்ரிக் அளவைகள் என்பது குழந்தையின் உயரம், எடை, தலைச்சுற்றளவு, மார்பு சுற்றளவு மற்றும் கையின் சுற்றளவு அடங்கியவை.,

2. குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திகளை அறிவது இதன் நோக்கமாகும்.

3. குழந்தையின் நல்ல நிலையோ (அ) பலவீன நிலையோ சுட்டிக்காட்டுகின்றது.

4. அளவீடுகள் எடைக் கருவி, இன்பென்ட்டோ மீட்டர் மற்றும் ஸ்டேடியோ மீட்டரினால் அளக்கப்படுகிறது.

5. அளக்கும் முறைகளிலும் மற்றும் செய்முறைகளிலும் ஆன்திரோபொமெட்ரிக் முறைப்படி அளத்தல், மற்றும் செவிலியத் துறைகளில் அறியப்படுகிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.88888888889
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top