பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பேரிடர் செவிலியம்

பேரிடர் செவிலியம் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

முன்னுரை

நாசங்கள் (Disasters) என்பது உலகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உடையதல்ல. அவைகள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். வரலாற்றில் முக்கிய அவசரங்களும் மற்றும் நாசங்களும் இடம் பெற்றுள்ளன. உலகில் மக்கள் தொகை அதிகரிப்பதாலும், ஆதாரங்கள் குறைவாக இருப்பதாலும், சமுதாயங்களில் மோசமான கேடு விளைவிக்கக்கூடியவை பெருகுவதாலும் நாசங்கள் ஏற்படுகிறது. பலவகையான நாசங்கள் உள்ளன. அவை: நிலநடுக்கம், புயல், வெள்ளம், நிலச்சரிவு, எரிமலை குழம்பு, சூறாவளி, தீ புயல் பனிப்புயல், மோசமாக காற்று மாசுபடுதல், வெப்ப அலைகள், பஞ்சம், தொற்றுநோய், கட்டிடம் நொறுங்குதல். இந்த பேரிடரை (Disaster) நிர்வகிப்பதற்கு மூன்று நோக்கங்கள்: பேரிடர் எதிர்ச்செயல் மற்றும் மீட்பு, பேரிடர் தயார்நிலை, பேரிடர் தணிப்பு.

பேரிடர் (Disaster)

இடரின் விளைவாக உண்டாகும் செயலே பேரிடர் (Disaster) என அழைக்கப்படுகிறது. தமது வாழ்வையும் உடமைகளையும் அச்சுறுத்துகிற இடரானது, நம்மால் உணரக்கூடிய இயற்கை நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஏதாவது ஒரு வாழ்விடப் பரப்பு ஒரு இடரால் தாக்கப்படும் பொழுது அப்பரப்பிலுள்ள அன்றாட வாழ்க்கை முறைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அந்த இடரே பேரிடராக கருதப்படுகிறது.

இயற்கை இடர்

இயற்கை அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்ட சுற்றுசுழல் மிகுந்த அளவில் மனித வாழ்வுக்கும், உடைமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கை நிகழ்வுக்கு இடர் என்று பெயர்.

பேரிடர் (Hazard)

நமது வாழ்வையும் உடமையையும் அச்சுறுத்துகிற நம்மால் உணரக்கூடிய ஒரு இயற்கை நிகழ்வுக்கு இடர் என்று பெயர். இடரின் விளைவாக உண்டாகும் செயல்களே பேரிடர் எனப்படும்.

உணரக்கூடிய கம்பம் (Phenomenon)

மக்களையோ, அமைப்பையோ (அ) பொருளாதாரத்தையோ அச்சுறுத்தக்கூடிய இந்த சம்பவம் ஏற்படக்கூடிய பேரிடர் மனித செயல்பாடு மூலமாகவோ அல்லது இயற்கையினால் சுற்றுசுழல் பாதிக்கப்படுவதாலோ ஏற்படும்.

இயற்கை பேரிடரை கீழ்கண்டவாறு பிரிக்கலாம். 1. வானிலையியல் பேரிடர்: அ) புயல் (புயல், சூறாவளி, புயல் காற்று சூறாவளிப்புயல், பனிப்புயல் ஆ பனிக்கட்டி வீச்சு, இது வெப்ப அலைகள், 2. வறட்சிகள். அ. புவியியல் பேரிடர்: நிலச்சரிவு, வெள்ளம். 3. புற அமைப்பு பேரிடர் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு.

மனித செயல்பாடு :

அ.) குடியியல் பிரச்சனை கிளர்ச்சி, கலகம் செய்தல்.

ஆ) போர்நடவடிக்கை மரபுசார்ந்தது (அ) மரபு சார்பற்றது.

இ). அகதிகள்,

ஈ). விபத்துகள்.

மற்ற வகையான பேரிடர்கள்

அ. சீர்கெடுதலை அடிப்படையாகக் கொண்டது

(1) சுகாதாரத்தை அழித்தல்,

2 சுற்றுசூழலை பாதித்தல்,

3 சமூகசேவைகள்.

ஆ தொழிற்சாலைகள், சீர்குலைவதால்

(1) தொழில்நுட்பம் பாதிக்கப்படல்,

(2) எண்ணெய் கசிதல், தொழிற்சாலைகள் வெடித்தல்,

(3) தீவிபத்து,

(4) வாயுக்கசிவு,

(5) போக்குவரத்து பாதிப்பு.

காரணிகள்

முன்கூட்டியே அறிவித்தல் மற்றும்

பாதிப்புகளின் நிலை பொறுத்து பேரிடர்களை வகைப்படுத்தலாம்.

காரணிகள் அல்லது நடைபெறுதல்

அ.) இயற்கை காரணிகள்: (எ.டு) நிலநடுக்கம், சூறாவளிப்புயல், எரிமலை வெடிப்புகள்

ஆ.) மனித செயலினால் கெடுதல் (எ.டு) போர், வேலைநிறுத்த பிரச்சனை அல்லது மற்ற முரண்பாடுகள்.

முன்கூட்டியே அறிவித்தல் மூலம்

அ.) முன் அறிவிப்பின்றி திடீரென்று ஏற்படுதல்

ஆ). முன் அறிவிப்பு அல்லது எச்சரிக்கையுடன் மெதுவாக செயல்படுதல் (எ.டு) சூறாவளிப்புயல், எரிமலை வெடிப்புகள்.

பாதிப்புகளின் நிலை

அ.) அதிக அளவில் பாதிப்புகள் குறிப்பிட்ட இடத்தில் கட்டுகளுக்குட்பட்டது.

ஆ). சிறிய அளவில் பாதிப்புகள் குறிப்பிட்ட இடத்திற்குள் அளவிடக்கூடியது.

பேரிடரின் நிலைகள் (Phases of Disaster)

எச்சரிக்கை நிலை (Warningphase)

துணைக்கோள்கள் (Satellite) வானிலை ஆராய்ச்சி மையங்கள் மற்றும் புவியியல் நிறுவனங்களின் உதவியால் இப்போது பேரிடர்கள் முன்பே அறிவிக்கப்பட்டு, தேவையான அளவு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலைக்கு எச்சரிக்கை நிலை என்று பெயர்.

பாதிப்புகள் (அ) விளைவுகளின் காலம் (Period of impacts)

மனித செயலினால், வேலை நிறுத்தம் போன்றவைகளினால் விளைகிறபேரிடரின் அபாய நேர்வுகளை குறைப்பதற்காக நற்பயனைத் தரக்கூடிய திட்டவரைவுகள் மற்றும் செயலாக்கம் ஆகிய பிரதி செயல் முறைகளும் அடங்கும்.

மீட்புநிலை (Rescue phase)

மீட்புபணி பேரிடருக்கு பின் உடனே ஆரம்பிக்கப்பட்டு அந்த சமுதாயம் அல்லது பரப்பு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் வரை தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரத் துறைகள் செயல்படும்.

நிவாரண நிலை (Relief phase)

தொண்டு நிறுவனங்களின் நிவாரணம் பணியாளர்கள் பாதிப்புகளை கணக்கிட்டு, அவசரத் தேவைகளை திட்டமிட்டு அவைகளை நிறைவு செய்ய செயலாற்றுதலாகும். வசிக்க இடம் மற்றும் தானியங்கள் கிடைக்காத நிலை அடிப்படை வசதி சமூக பொருளாதார பாதிப்பு, மன அளவில் பாதிப்பு, பொருளாதார பாதிப்புகள்.

பேரிடர் மேலாண்மை (Management)

மேலாண்மையின் நோக்கம் : சமூக பொருளாதார வேலைகளை உடனடியாக சீரமைக்க தேவையானவற்றை மேற்கொண்டு உடனே சரிசெய்தலாகும்.

எதிர்கொள்ளத் தயார் நிலை (Alert Period)

பேரிடர் ஏற்படக்கூடிய நேரத்தில் சமுதாயம் பாதிக்கப்படவில்லை யென்றாலும், பாதிப்பு மற்றும் அச்சங்களை கண்டுபிடித்து முன்னெச்சரிக்கைகள் கொடுத்து மதிப்பிடுதலாகும். மதிப்பீடுகள் மூன்று நிலைகளில் நடைபெறும்.

விரைவாக தன்னார்வசேவை மாற்றியமைத்தல்

பேரிடர் செவிலியம்

பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிலியத்தின் அறிவு, திறமை மற்றும் நடத்தையின் மூலம் செவிலிய மற்றும் மருத்துவ தேவைகளை கண்டுபிடித்து உதவுவதாகும்.

பேரிடர் செவிலியத்தை திட்டமிடுவதில் அடிப்படைக் கொள்கைகள்

N- செவிலியத்திட்டம் முழுமையானதாகவும், ஒருநிலைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

U - உடலும் மனமும் தயாரான நிலையில் இருத்தல்

R - நிர்வகித்தல், போதித்தல் மற்றும் மேற்பார்வையிடுதலில் பொறுப்பு

S- சமுதாயத்துடன் சேர்ந்து பணியாற்றுவதை ஊக்குவித்தல்

E - பொருத்தமான உடற்பயிற்சி.

பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிலிய பராமரிப்பின் அடிப்படைக் கொள்கைகள்

A - திறமைகளை சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றியமைத்தல்

C - பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்தல்

C- பாதிக்கப்பட்டவரின் நிலையைக் குறித்த தொடர்ந்த எச்சரிக்கை.

T- சேவை செய்பவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் போதித்தல்

S - முக்கிய பராமரிப்பை தேர்ந்தெடுத்தல்.

பெரிய அளவில் பாதிப்பு, மீட்பு, மாற்றுதல் மற்றும் அடையாளக் குறிகாட்டுதலின் மேலாண்மை

நோக்கங்கள் : பெரிய அளவு பாதிப்பு மேலாண்மையில் Triage மற்றும் அடையாளக் குறி கட்டுதல் செயல்முறைகள் பற்றி விவரித்தல்.

பெரிய அளவில் விபத்துக்குள்ளானவர்களுக்கான பராமரிப்பு (Mass Casuality management)

பரப்பு பராமரிப்பு (Field Care)

அதிகமாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ பராமரிப்புக்காக எந்த போக்குவரத்து சாதனங்கள் கிடைக்கிறதோ அவைகளைக் கொண்டு உடனே இயக்கவேண்டும். உணவு மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும். சரியான, மாற்றியமைக்கப்பட்ட கவனிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

முதலிடம் (First priority) : (சிவப்பு அடையாள குறி) :

பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆனால் உயிரை பிழைக்கக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அல்லது உயிர் காப்பாற்றும் முறை செய்ய வேண்டும்.

இரண்டாமிடம் :

இடைநிலை (கூர்ந்து கவனித்தல்) - பாதிக்கப்பட்டவர்கள் மோசமான நிலையில் காயமடைந்து மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் போக்குவரத்து சிறிது தாமதித்து இரண்டு மணி நேரத்துக்குள் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

குறைந்த நிலை (Low Priority) காத்திருத்தல் - கவனிப்பு சிறிது தாமதிக்கப்படலாம். போக்குவரத்து 3 மணி நேரத்துக்கு தாமதிக்கப்படலாம்.

பொது சுகாதார பிரச்சனை

காயங்கள் மற்றும் இறப்பு

தொற்றுநோய் உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் காற்று மூலம் பரவும் நோய்கள்,

மனக்கிளர்ச்சி பிரச்சனைகள்

பயம் மற்றும் படபடப்பு

கவனச்சிதைவு

கோபம்

உணர்ச்சியின்மை,

மனஅழுத்தம்

நிலையற்ற தன்மை

எரிச்சல்

தொற்றுநோய்களை கண்டறிந்து நோய்களை கட்டுப்படுத்துதல்

உடனடியாக அனைத்து சுகாதார சேவைகளையும் செயல்படுத்த வேண்டும். நோய்களை உடனே அழித்து தடுக்கும் நிறுவனங்களை செயல்படுத்த வேண்டும். பிளவுகளை கண்டுபிடித்து, முறையான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

விரைவாக பரவும் நோய்களைப் பற்றிய விவரங்களை ஆராய்தல்.

நோய்த்தடுப்பு மருந்து : சுகாதார நிறுவனங்கள் பொது மக்கள் அரசியலுடன் இணைந்து அனைவருக்கும் நோய்த்தடுப்பு என்ற முறையில் டைபாய்ட், காலரா மற்றும் டெட்டனஸ் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

உணவு (Nutrition)

பேரிடருக்குப்பின் உணவு வழங்குதல் குறித்து மதிப்பிட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களின் உணவுத்தேவையை மதிப்பிட வேண்டும்.

தினசரி உணவுத்தேவை, மக்கள் தொகை கூட்டத்துக்கு தேவையான உணவு முதலியவற்றை கணக்கிட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களின் உணவு நிலையை கவனிக்கவேண்டும்.

மறுவாழ்வு (Rehabilitation) : பேரிடருக்குப்பின் உடனே தொடங்கப்படவேண்டும்.

பாதுகாப்பு அளவீடுகள் (Protectionmeasure) : தண்ணீர் வழங்கிடுதல் அவசரக் காலங்களில் தண்ணீரின் தன்மை மற்றும் தேவைகள் உணரப்பட வேண்டும். தண்ணீரை சுத்திகரிப்பதற்கு குளோரின் இடுதல் ஒரு சிறந்த முறையாகும்.

மக்களுக்கு எளிதில் அடையக் கூடிய நிலையில், கட்டுப்படுத்த அதிகாரிகளை தயார் செய்தல். கழிவுநீரை அகற்றுதல் நீர் ஆதாரங்களிலிருந்து சற்று தொலைவில் இருக்க வேண்டும்.

ஆறுகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும் குளிப்பதும், துவைப்பதும் மற்றும் விலங்குகளை பராமரிப்பது போன்றவற்றை தடுக்கவேண்டும். கிணறும், கிணற்று நீரும் பாதுகாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். கிணற்றின் அளவீடு மற்றும் தண்ணீர் வழங்கிடுதல் பற்றி கணக்கிட வேண்டும்.

நீர் ஏற்றுவதற்கு முன்னால் எல்லா குடிநீர் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு தொற்று நீக்கம் செய்யவேண்டும்.

உணவு பாதுகாப்பு

பேரிடர் நேரங்களில் உணவின் மூலம் பரவும் நோய்களுக்கு முக்கிய காரணம் சுகாதார சீர்கேடு, உணவு வழங்கும் இடங்களில் சமையலறை சுகாதாரம் மிகவும் முக்கியம்.

அடிப்படை துப்புரவு மற்றும் சுகாதாரம் :

பல ஒட்டிப்பரவும் நோய்கள் குடிக்கும் தண்ணீரினாலும், உணவு மலத்தினால் மாசுபடுவதினாலும் பரவுகிறது. எனவே சுகாதாரமுறையில் கழிவுகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். கழிப்பிடங்கள் பழுதடைந்த இடங்களில் கிடைப்பதைக் கொண்டு கழிப்பிட வசதி செய்யப்படவேண்டும். குளிப்பதற்கு துவைப்பதற்கு, சுத்தம் செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.

பூச்சிகளை கட்டுப்படுத்துதல் (Vector Control) :

மறுசீரமைப்பு நிலையில், தொற்றுநோயாக கண்டறியக்கூடிய பூச்சிகள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். முக்கியமாக டெங்கு காய்ச்சல், மலேரியா, லெப்டோபைரோசிஸ், எலிக்காய்ச்சல், பேன்காய்ச்சல் மற்றும் பிளேக் போன்ற நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். வெள்ள நீரில் கொசுக்களின் இனப்பெருக்கம் நடைபெற வாய்ப்புள்ளது.

பேரிடரில் தயார்நிலையில் பங்கு :

தேவையானவைகளை வரிசைப்படுத்துதல். எதிர்கொள்ள தயாராக இருத்தல். குறிப்பிட்ட இடங்களில் பேரிடர் நிகழ்வுகளைப் பற்றி போதித்தல். பேரிடருக்கு உதவ பயிற்சியளித்தல். செவிலியர் நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சுற்றுப்புற இடர்களை மதிப்பிட வேண்டும். சமுதாய ஆதாரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். உடலளவில் தயாராக இருத்தல். வேலை செய்ய தயார்நிலை. சமுதாய தயார்நிலையில் இருத்தல் போன்றவை.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.06976744186
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top