பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பேரிடர் மேலாண்மையை எதிர்கொள்ளுதல்

பேரிடர் மேலாண்மையை எதிர்கொள்ளுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வெள்ளப் பெருக்குகள் (Floods)

ஒரு ஆறு அல்லது சிற்றோடை போன்றவற்றின் வடிநிலத்திற்குட்பட்டப் பரப்பில் பல நாட்களுக்குப் பொழிகிற மழையினால் அந்த ஆறு சிற்றோடையில் நீர் கரைபுரண்டு வழிந்தோடுகிறது. அவ்வாறு வழிந்தோடுகிற நீர் அதைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை மூழ்கடித்து விடுகிறது.

முன்னெச்சரிக்கையாக செய்யப்படவேண்டியது:

நகர அமைப்பில் அரசாங்கத்தின் பொறுப்பு, ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் இடங்களில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து அறிந்திருக்கவேண்டும். (எ.டு அணைக்கட்டுக்கு அருகில் வாழும் மக்களுக்கு அணை உடைவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி சிறப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும். வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் அலைப்பற்றி முன் அறிவிப்பு மிகவும் கடினம், குறிப்பிட்ட விழிப்புணர்வு (அ) முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்போதே அதே வருடத்தில் சூறாவளி மற்றும் புயல் காற்று பாதிக்கலாம். அவைகள் எப்போதும் வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னால் அறிவிக்கப்படலாம்.

வெள்ளப்பெருக்கின்போது மின்சாதன இணைப்புகள் அனைத்தையும் துண்டித்துவிடவேண்டும். மக்களையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும். முடிந்த அளவுக்கு சொந்த உடைமைகளை மேல்தளத்திற்கோ அல்லது உயரத்தில் இருக்கும் அறைகளிலோ வைக்கவேண்டும். தண்ணீர் மாசுபடுதலைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதன் மணமோ, நிறமோ மற்றும் சுவையோ மாற்றப்பட்டிருப்பதை அறிய வேண்டும். மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளை உள்ளூர் நிறுவனங்களின் துணையுடன் அப்புறப்படுத்த வேண்டும்.

வெள்ளப்பெருக்கிற்கு பின்

* உள்ளுர் அதிகாரிகள் கட்டிடங்கள் தண்ணீரால் பாதிக்கப்படவில்லை என்பதை நிர்ணயம் செய்த பிறகுதான் மக்கள் வெள்ளப் பெருக்கிற்கு பிறகு தங்கள் வீடுகளுக்கு செல்லவேண்டும். இதன் முக்கியத்துவம்,

* குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானது என்பதை நிச்சயப்படுத்தும் வரைமுறை.

* வெள்ளத்தில் மூழ்கிய அறைகளை சுத்தம் செய்து தொற்று நீக்கம் செய்யவேண்டும்.

* சமையல் அறையில் பயன்படுத்தக்கூடாது. அனைத்து பாத்திரங்களையும் சுத்தம் செய்து தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.

* தண்ணீரில் (அ) தண்ணீருக்கு அருகில் உள்ள பொருட்களையோ (அ) குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுப்பொருட்களையோ தவிர்க்க வேண்டும்.

* வீணாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தாதே. (பானங்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள்.

புயல் மற்றும் சூறாவளிக்காற்று

புயல் (Strom) :

அதிகமான மழை, அழுத்தத்துடன் கூடிய காற்று, எப்போதும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய தட்பவெட்பநிலை புயல் எனப்படும்.

சூறாவளிக்காற்று (Tornadoes) :

அதிவேக வலுவான உயர்ந்த அழுத்தத்துடன் கூடிய காற்று, மேலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

முன்னதாக செய்யப்படவேண்டியவை

* அவசரக்காலத்திற்கு முன்னதாகவே, அடித்தளம் அல்லது ஒதுக்குபுறம் சரியான நிலையில் வசிப்பதற்கு ஏற்றதாக முன்னமே தெரிந்து கொள்ளவேண்டும்.

* புயல் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல் சாய்ந்து பட்டுப்போன மரங்களை வெட்டுதல், மரக்கிளைகளை வெட்டுதல், மேல் கூரையின் நிலை மற்றும் தரைப்பரப்பின் நிலையை அடிக்கடி கண்காணித்தல்.

* குடும்பத்திற்கு முதலுதவிப் பெட்டி ஒன்றை தயார் செய்ய வேண்டும்.

அவசரக் காலங்களில் (During Emergence)

* அதிகாரிகளிடமிருந்து வரும் செய்திகள் மற்றும் அறிவுரைகளைக் கேட்க வேண்டும்.

* புயல் எச்சரிக்கை அறிவித்த பின்னர் கார் அல்லது படகுகளில் பயணம் செய்ய கூடாது.

* அதிகாரிகள் கேட்டுக்கொண்டால் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வீடுகளை காலி செய்ய வேண்டும்.

* ஜன்னல் மற்றும் கதவுகள் மற்றும் மின்சாதனப் பொருட்களின் மூலம் கடத்தப்படுவதால் மின் இணைப்பை துண்டித்து விட வேண்டும்.

* எந்த மின்சாதனப் பொருட்களையும், தொலை பேசியையும் பயன்படுத்த கூடாது.

வெளியில் இருப்பவர்கள்:

கட்டிடங்களில் இருக்கலாம் ஒரு போதும் மரத்துக்குக் கீழ் நிற்ககூடாது

படகிற்கு வெளியில் இருந்தால் கடற்கரைக்கு வந்துவிடவேண்டும்.

வேலி அல்லது மின்கடத்திகளுக்கு தொலைவில் இருக்க வேண்டும்.

நீண்டநேரம் நிற்பதற்குப் பதிலாக முழங்காற் படியிட்டு அமரலாம்.

அவசரக் காலத்துக்குப்பின்

புயல் ஓய்ந்த பின்

* உள்ளூர் அதிகாரிகள் கூறுவதை பின்பற்ற வேண்டும்.

* வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

* எச்சரிக்கையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கொடு.

* காயப்பட்டவர்களுக்கு முதலுதவி கொடு.

* குடிதண்ணீர் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள் மற்றும் குளிர்சாதனப் பெட்டியிலும் உறைநிலையிலும் இருக்கும் பொருட்களை பரிசோதித்துப்பார்.

* வசிக்கும் இடங்களில் மேற்கூரை ஏதேனும் விழும் அபாயம் இருந்தால் உதவியாட்கள் இருக்கிறார்களா என்பதை பார்த்துக் கொள்.

நிலநடுக்கம் (Earthquakes)

பூமியின் மேற்பரப்பின் ஏற்படும் அசைவுகளில் நிலப்பரப்பு நடுங்குவதை நிலநடுக்கம் என்கிறோம்.

முன்னெச்சரிக்கையாக கையாளப்பட வேண்டியவை

* நகரகட்டமைப்பு திட்டத்தின்படி பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை ஆராய்ந்த பின் கட்டவேண்டும்.

* வீட்டிலுள்ள மின் மற்றும் வாயு இணைப்புக் குழாய்கள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்.

* உயரமான பகுதிகளில் கனமான பொருட்களையோ, சாதனங்களையோ சேர்த்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.

* குடும்பம் முழுவதையும் வெளியேற்றுவதற்கும், மற்றும் முழு குடும்பத்தினருக்கும் நிலநடுக்கத்தின் போது என்ன செய்யவேண்டும் என்பது தெரிந்திருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.

* குடும்ப முதலுதவிப் பெட்டியை தயார் செய்து கொள்ள வேண்டும்.

நிலநடுக்கத்தின் போது கவனிக்க வேண்டியவை

* மக்களை அமைதியாக பதற்றமற்ற நிலையில் பாதுகாக்க வேண்டும்.

* வீட்டிற்குள்ளேயே இருப்பவர்கள் கட்டிடத்தின் நடுப்பகுதியில் தங்கி இருக்க வேண்டும்.

* படிகட்டுகளை விட்டு தொலைவில் இருக்க வேண்டும். ஏனென்றால் அவைகள் திடீரென்று உடைந்து விழலாம்.

* வீட்டிற்கு வெளியே இருப்பவர்கள் கட்டிடங்களின் சுவர் இடிந்து விழாதபடிக்கு கட்டிடங்களுக்கு தொலைவில் இருக்க வேண்டும் மற்றும் மின் கம்பங்களுக்கும் தொலைவில் இருக்க வேண்டும்.

* வாகனத்திற்குள்ளேயே இருப்பவர்கள் வாகனத்தை பாலம் மற்றும் கட்டிடங்களுக்கு தொலைவில் நிறுத்த வேண்டும்.

நிலநடுக்கத்திற்குப் பின்

* அதிகாரிகளின் ஆணைகளைப் பின்பற்று

* பாதிக்கப்பட்ட கட்டிங்களுக்குப்பின் செல்லாதே. திடீரென அசைவுகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

* காயமடைந்தவர்களுக்கு முதலுதவி கொடு. நீர், மற்றும் குழாய்கள் வெடித்தல் போன்றவற்றிற்கு அவசர சேவைகளை முன்னெச்சரிக்கையாக வைத்துக்கொள்ள.

* பாதிக்கப்பட்ட பகுதியை தேவையில்லாமல் பார்வையிடாதே. இது மீட்புப்பணியை தாமதப்படுத்தலாம்.

* கையில் வானொலி மற்றும் அவசரத் தேவை பொருட்களை வைத்துக்கொள்.

* குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானதா மற்றும் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உணவு உண்பதற்கு ஏற்றதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்.

விஷவாயுக்களின் மேகங்கள் (Couds of taxicfutures)

முன்னெச்சரிக்கையாக கையாளப்படவேண்டியவை

* மோசனமான பகுதிகளில் வசிக்கும் மக்கள்.

* காலிசெய்வதற்குரிய திட்டங்களையும், வசதிகளையும் கண்டுபிடித்தல்.

* அவசரகால அடையாள அறிவிப்புகளை பழகிக்கொள்ளவேண்டும்.

* வீட்டின் கதவு, ஜன்னல்களை இறுக்கமாக விரைவாக பூட்ட வேண்டும்.

* குடும்பத்தின் அவசரத்திற்கு தேவையானவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

அவசரகாலங்களில்

* தொலைபேசியை பயன்படுத்தாதே. தொலைபேசி இணைப்புகளை மீட்பு தேவைக்காக விட்டுவிட வேண்டும்.

* வானொலி மற்றும் மற்ற தொடர்புகளிலிருந்து வரும் அறிவிப்புகளைக் கேட்க வேண்டும்.

* வானொலி மற்றும் ஒலிபெருக்கிகளில் சொல்லும் அறிவுரைகளை பின்பற்று. கதவு மற்றும் சன்னல்களை மூடு. காற்று அறைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்து.

* கதவு மற்றம் சன்னல்களில் காணப்படும் பிளவுகளை ஒட்டும் பிளாஸ்திரி கொண்டு மூடவேண்டும்.

* தண்ணீர் தேக்கி வைத்து கொள்ள வேண்டும்.

* காற்றோட்ட மற்றும் காற்று கடத்திகளை நிறுத்த வேண்டும்.

அவசர காலத்திற்கு பின்

பாதிப்பு நீடிக்கும் வரை அதிகாரிகளின் அறிவுரையின்படி வெளியில் எங்கும் செல்லக்கூடாது. மாசுபடுத்தாத முறைகளை பின்பற்றுவது முக்கியம்.

மனித ஆக்க பேரிடர்கள்

மனித தவறுகள் அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் செயல்கள் பேரழிவை ஏற்படுத்தும். மனித ஆக்க பேரிடர்களை 3 வகைகளாக பிரிக்கலாம்:

திடீரென்று ஏற்படும் பேரிடர்

டிசம்பர் 3, 1984 அன்று போபால் தொழிற்சாலையில் ஏற்பட்ட மீத்தேல் ஐசோசைனேட் (MIC) வாயு கசிவு நிகழ்வு மிக மோசமான பேரிடராக கருதப்படுகிறது. நிலத்தினடியில் தொட்டிகளில் சேமித்து வைத்திருந்த மீத்தேல் ஐசோசைனேட் வாயு நீருடன் கலந்து மாசடைந்து, அதனால் எழுந்த வேதியல் எதிர்வினை செயலை ஒட்டி, வாயு அழுத்தம் அதிகரித்தது. தொடர்ந்து அதிலிருந்து நச்சுவாயு கசிய தொடங்கியது. அந்த நேரத்தில் பொது மக்களுக்காக எந்த ஒரு முன்னெச்சரிக்கையோ வழிநடத்துதலோ உடனே அறிவிக்கப்படவில்லை. சுமார் 2 மில்லியன் மக்கள் இந்த வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர். அதில் 3000 பேர் இறப்புக்குள்ளாயினர்.

இரண்டாவது எடுத்துக்காட்டு

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் நாள் ரஷ்யாவில் செர்னோபைல் என்னும் இடத்தில் அணு உலை வெடித்து மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. கதிரியக்க எரிபொருள் போல் வெடித்துச் சிதறியது.

இரகசியமான பேரிடர் (Insidious disasters)

வேதி மற்றும் அணு தொழிலகம் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் போன்றவற்றிலிருந்தும் பேரிடர் அச்சுறுத்தல்கள் பெரிய அளவில் காற்று, மண் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றில் உள்ளன. வேதித்தாவரங்களிலிருந்து வெளியாகும் நச்சு கழிவுகள் ஆறுகள் மற்றும் வேறு நீர் ஆதாரங்களில் கலக்கின்றன.

இன்னொரு வடிவத்தில் நீண்ட நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் மனித ஆக்கத்தினால் ஏற்படும் பேரிடர் உலகம் வெப்பமயமாதல், சுற்றுசுழலில் எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் குளோரோஃபுளோரோ ஹைட்ரோ கார்பன் (CFC) போன்ற வாயுக்கள் ஓசோனுடன் வினைபுரிந்து அதன் அடர்த்தி குறைகிறது.

போர் மற்றும் குடியியல் முரண்பாடுகள்

எடுத்துக்காட்டாக நியூயார்க் நகரில் உள்ள உலக வணிக மையத்தில் உள்ள டுவின் கோபுரம் தாக்கப்பட்டதால் 6000 மக்கள் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்திய குடிமக்களாகிய நாம், மனித ஆக்கு பேரிடரை தடுக்க முதன்மையாக இந்த மாதிரி நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க வேண்டும். ஆனால் தீ, வெடித்தல், சாம்பல் மற்றும் திடீரென்று வெளியாகும் வேதிப்பொருட்கள் மற்றும் கதிரியக்கங்களினாலும் பேரிடர் ஏற்படலாம்.

தயாராகுவதில் செவிலியரின் பங்கு

பேரிடர் மற்றும் மறு சீரமைப்பை கண்டறிதல், தட்ப வெப்பநிலையில் மாற்றம், நாட்டில் உணவு பாதுகாப்பு பற்றிய அச்சம்.

இயற்கை சூழல் மற்றும் சுகாதாரத்தை நிலைநிறுத்துதல்.

சுற்று சுழலின் மோசமான தன்மையை கண்டறிந்து அதை சரிசெய்தல்.

பாதிப்புகளை ஆராய்தல், அதிகாரிகளை கண்காணித்தல்.

பயிற்சி மற்றும் கட்டிடங்களின் தரம்

புதிய வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்பிடுதல், கணக்கிடுதல், தீர்மானித்தல், முன்னெச்சரிக்கை மற்றும் தொடர்பு சாதனங்களின் மூலம் செய்தியனுப்புதல் போன்றவற்றின் மூலம் உயிர்ச்சேதத்தை குறைக்கலாம். சமுதாயம், தடுப்பு மற்றும் தயாரான நிலையில் பெருகுதல்.

மருத்துவமனை அளவில் தயார் நிலை (Preparedness at hospital level)

பேரிடரின் காரணமாக ஏற்படும் பிரச்சனையில் மனித சுகாதாரத்தை நிலைநிறுத்தவும். உயிரை காப்பாற்றவும், ஊனங்களை குறைப்பதற்கும் மருத்துவமனை தயார்நிலை மிகவும் முக்கியம்.

1. ஒரு நல்ல வரையறுக்கப்பட்ட மருத்துவம், செவிலியத்துறை மற்றும் பேரிடரில் உதவி புரியும் சமுதாயத்தலைவர்கள் அடங்கிய குழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு மருத்துவமனையிலும் குறைந்தது 50 காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி நிறைந்த அலமாரி மருந்துகள் பாதுகாக்க படவேண்டும். அதாவது தினசரி அவசர தேவைகளை தவிர.

3. எல்லா மருத்துவமனையிலும் பேரிடரை சமாளிக்க கொள்கைகள் வரையறுக்கப் படவேண்டும்.

அ.) கூடுதல் மருத்துவ மற்றும் செவிலியப் பணியாளர்கள் மற்ற பகுதியில் இருந்து அவசரப்பகுதிக்கு அனுப்பப்படவேண்டும்.

ஆ). பாதிக்கப்பட்டவர்களை உடனே அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற மருத்துவமனை வாயிலில் (Trollers) டிராலி நபர்கள் இருக்கவேண்டும்.

இ) பேரிடருக்கான அலமாரிகள் திறந்து வைக்கப்படவேண்டும் மற்றும் உள்ளிருக்கும் தேவையான கருவிகளை பரிசோதித்து வைக்கவேண்டும்.

ஈ) சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் செய்தி அனுப்பப்பட வேண்டும்.

4. பேரிடர் ஆயத்தக்குழு மக்களும், அரசாங்கமும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும். ஏனெனில் பேரிடர்கள் காத்திருப்பதில்லை. உங்கள் இடத்தில் நிகழக்கூடிய பேரிடரை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். அதுவே எவ்விதமான இடர்களையும் எதிர்கொள்ள உதவிகரமானதாக அமையும். அச்சுறுத்தக் கூடிய நிலையில் யார், எதை, எங்கு மற்றும் எப்போது செய்ய வேண்டும் என்பதை தெரிந்திருக்கவேண்டும்.

5. ஒவ்வொரு மருத்துவமனையும் எளிதான முறையில் வரையறுக்கப் பட்ட பேரிடர் திட்டத்தை கையாளவேண்டும்.

மருத்துவனையில் பேரிடர் திட்டம் (Hospital digasterplan) :

பேரிடர் நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மதிப்பீடு திட்டம் அமைக்கப்படவேண்டும்.

மருத்துவமனையில் பேரிடர் திட்டத்தின் நோக்கம் :

எந்த மருத்துவமனையிலும் பேரிடர் திட்டத்தின் உடனடி நோக்கம் எந்த சூழ்நிலையிலும் கிடைக்கக்கூடிய சிறந்த மருத்துவ சிகிச்சையின் மூலம் பல் உயிர்களை காப்பாற்றுதலாகும்.

எதிர்பார்க்கப்படும் பேரிடரின் வகை :

ஒவ்வொரு மருத்துவமனையும் அவர்களுடைய எல்லைக்குள் ஏற்படக்கூடிய பேரிடர் குறித்து அறிந்திருக்க வேண்டும். (எடு) வாகன விபத்துகள், புயல், வெள்ளப்பெருக்கு நிலநடுக்கம், தீவிரவாத செயல்.

கைளாயப்படக்கூடிய பிரச்சனைகள் (Problems to be handled)

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல போக்குவரத்து வசதி. சரியான மருத்துவ, கவனிப்பு அளித்தல். தொற்றுநோய்களை தடுப்பதற்கான போதனை.

பேரிடர் குழுக்கள் (Disaster Committees) : மருத்துவமனையில் பேரிடர் குழு மருத்துவ மேலதிகாரியை குழுத்தலைவராகக் கொண்டு இயங்கவேண்டும்.

கட்டுப்பாட்டு மையம் அறை :

ஒவ்வொரு மருத்துவமனையும் பேரிடர் நிகழ்வின் போது மருத்துவமனை கட்டுபாட்டு அறை பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

திட்டத்தை செயலாற்றுதல் (Activating the plan) :

நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் செய்தி கிடைத்தவுடன் பணியில் இருக்கும் மருத்துவ அலுவலர் அவசர சிகிச்சை திட்டத்தை செயலாற்றவேண்டும். (அ) செயல்படுத்த வேண்டும்.

வரவேற்பு மையம் (Reception Centre) :

பேரிடர் காலங்களில் ஒவ்வொரு மருத்துவமனையும் வரவேற்பு அறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

முதலுதவி மற்றும் கண்டறிதல் :

ஒவ்வொரு மருத்துவமனையும் முதலுதவி மற்றும் பேரிடரில் அவசர சிகிச்சைக்குரியவர்களை கண்டறியும் திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

அவசர சிகிச்சை அட்டவணை (Casualty Flow Chart):

ஒவ்வொரு மருத்துவமனையிலும் அவசர சிகிச்சை அட்டவணை வைத்திருக்க வேண்டும்.

கூடுதல் படுக்கை வசதி (Additional bed space) :

மருத்துவமனையில் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு கூடுதல் படுக்கை வசதிக்கான இடம் இருக்கவேண்டும்.

துணிகள் சேமிப்பு அறை :

பேரிடர் நேரத்தில் படுக்கை துணிகளை பயன்படுத்த சேமித்து வைக்க தனி அறை வேண்டும்.

அவசர இரத்த வங்கி (Emergency blood bank) :

கிடைக்கக்கூடிய அனைத்து வகையான இரத்தமும் சேகரித்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

பணியாளர்கள் (Staff) :

மருத்துவ பணியாளர்களுடன், மருத்துவம் சார்ந்த மற்ற பணியாளர்களின் உதவியையும் இந்த அவசர சிகிச்சையில் சேர்த்துக் கொள்ளலாம். செவிலியப் பணியாளர்கள் (Nursing Staff) மற்றும் செவிலிய மேலதிகாரி செவிலியத் தொகுதியை உருவாக்க வேண்டும்.

ஆவணமையங்கள் (Document centres) :

பேரிடர் நேரங்களில் ஆவண மையங்களுக்கு சரியான இடம் தெரிந்திருக்க வேண்டும்.

தகவல் சேவைகள் (Information Service) : மருத்துவமேலதிகாரி தகவல் அறிவிப்பாளராக பணி செய்வார். பதிப்பாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் செய்திகள் இவர் மூலமாகத்தான் கொடுக்கப்பட வேண்டும்.

பேரிடர் பயிற்சி :

திட்டங்களுக்கு சீரான பயிற்சிகள் முக்கியம் இல்லையென்றால் அவைகள் பேப்பரில் மட்டும்தான் இருக்கும். எனவே ஒவ்வொரு மருத்துவமனையும் பேரிடருக்காக எளிதான முறையில் வரையறுக்கப்பட்ட திட்டங்களை தயாரிப்பது முக்கியம். செவிலியர் சேவை பேரிடர் குழுவின் அங்கமாக இருக்கவேண்டும். திட்டமிடப்பட்ட பயிற்சிகளில் பேரிடர் திட்டங்கள் வருடத்திற்கு இரண்டு முறையாவது செயல்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும்.

பேரிடர் மேலாண்மையில் மறுசீரமைப்பு நிலை

பேரிடர், என்ற வார்த்தை பல செவிலியர் இருதயத்தில் படபடப்பை (anxiety) உண்டாக்கக்கூடியது இதற்கு ஒரு காரணம். பல செவிலியர் அவசர சிகிச்சையில் சிறப்பு பயிற்சி பெற்று இருந்தாலும் கூட பேரிடர் சமயத்தில் நல்லமுறையில் வேலை செய்ய திறமையற்றவர்களாக இருக்கலாம். இந்த திறமை மற்றும் நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதால் சிலருக்கு பேரிடர் நேரத்தில் சரியாக வேலை செய்வதற்கு பயிற்சி அல்லது கல்வி அறிவு வேண்டியதாயிருக்கிறது.

மறுசீரமைப்பு நிலை (Rehabilitation Phase) :

மறுசீரமைப்பு அல்லது புணர்வாழ்வு என்பது, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பழைய நிலைக்கு திரும்புதல் மற்றும் சரியான வாழ்க்கையை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளும் நேரமாகும். பேரிடரின் வகை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்து இதற்கு பல வாரங்கள் முதல் வருடங்கள் கூட தேவைப்படலாம். மறுசீரமைப்பு அல்லது புணர்வாழ்வு ஒருவர் கிளர்ச்சியற்ற முறையில் உதவியை பெறுவதாகும். இரண்டாவதாக முன்பு இருந்ததைவிட நல்லமுறையில் சமுதாயத்தை மாற்றியமைப்பதாகும்.

மறுசீரமைப்பு நிலையில் அடங்கியுள்ள பருதிகள் (Components of Retiabilitative Stage)

சமுதாயத்தின் முக்கியதுவத்தை மீட்டெடுத்தல். சமுதாய ஆணைகளை மீண்டும் நிலைநிறத்துதல்.

பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார தேவைகளை சந்தித்தல். பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சரிசெய்தல்.

பாதிக்கப்பட்டவைகளை தொடர்ந்து மதிப்பீடு செய்தல். உள்ளூர், மாநில மற்றும் ஒப்பந்த உதவிகளை முயற்சித்து பெறுதல்.

தடுப்பு முறைகளை ஊக்கப்படுத்துதல்.

இந்த நிலையில் உதவியாளர்கள் தேவை, நீண்டகால பொருளாதார தேவை, தொழில்நுட்ப உதவிகளை கீழ்கண்டவைகளின் மூலம் அளித்தல்.

வெளிநாட்டு அரசுகள், உலக வங்கி.

பன்னாட்டு உதவி. உள்ளூர் நிறுவனங்கள்.

மறுசீரமைப்பு நிலையில் மனநிலை தோற்றங்கள்

மனநிலை கவனிப்பு கீழ்கண்டவர்களின் மூலம் நிவர்த்தி செய்யப்படவேண்டும்.

குடும்ப நபர்களின் ஆதரவு, பாமர சுயசேவை புரிபவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மனநிலை சுகாதார பணியாளர்கள், மனநல நிபுணர்கள் (மருத்துவர்கள்) சிறப்பு பயிற்சி பெற்ற மனநல செவிலியர்கள், உளவியல் நிபுணர், சமூகபணியாளர்கள்.

மனநல பராமரிப்பு பணியாளர்கள் முக்கியமாக கலந்துரையாடுவதிலும், மேற்பார்வையிடுவதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அந்த நேரத்தில் மறுப்பு, அடக்குதல் போன்ற தன்னைப் பற்றிய மதிப்பீட்டு உத்திகள் கீழ்கண்டவைகளால் மாற்றப்படும் அவை :

சோர்வு, மன அழுத்தம், கோபம், பயம், காயமடைந்தபின் நரம்புதளர்ச்சி, உடல்மன சுகவீனம், அதிகமான உடல்நலம் பாதிக்கப்படல், பேரிடரைப்பற்றிய உயர்வான மற்றும் தாழ்வான கற்பனை.

மறுசீரமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் :

குடும்பத்தில் புதிய சமநிலை மற்றும் சமூக உறவுகள் ஏற்படும். மக்களுடைய உறவுமுறையில் நடத்தை, மதிப்பீடுகள் மற்றும் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.

பலபொருளாதார நிலைகளில் வாழ்க்கை முறையில் மாற்றங்கள். மேலும் முன்பு இருப்பதைவிட குறைவான தரம் ஏற்படலாம்.

மறுசீரமைப்பில் செய்தி அனுப்பும் முறை :

செய்தி அனுப்புவதின் நோக்கங்கள் கீழ்கண்டவைகளாக இருக்கவேண்டும். சுழற்சி முறையில் பேரிடர் பற்றிய கருத்துகள்

சமுதாய வளர்ச்சி பற்றிய அறிக்கை சமுதாய மீட்பின் தேவைகளை தெரிந்தெடுத்தல். பேரிடர் பாதிப்பை பற்றிய முழுமையான செய்தி பாதிப்புகள்.

புணர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பில் திட்டமிடுதல்

நிலநடுக்கம் (Eath quake) :

குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றி பெரிய அளவில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தினரிடம் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதாவது நீண்டகால சுகாதார திட்டம், திரும்ப கட்டுதல், பேரிடருக்கு ஆயத்தப்படல் மற்றும் பேரிடர் நிவாரணம், நிறுவனங்களில் வளர்ச்சி மற்றும் நாட்டின் உதவிநிலைக் குறித்து பேசப்பட்டது.

மறுசீரமைப்பு என்பது தற்காலிக பொது வசதிகளை அளித்தல் மற்றும் வீடு கட்டுவதற்காக நிலுவைத்தொகை வழங்குதல் போன்றதாகும்.

குடிநீர், ஆகாரம் (உணவு) கழிவுகளை அகற்றுதல் மற்றும் நோய் மற்றும் சுகவீன கவனிப்பு கிடைக்கக் கூடிய சூழலில் பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமான வசிக்கும் இடம் கொடுக்க திட்டமிடப்படவேண்டும்.

உடல்நல கவனிப்பு தேவையான வசதிகள் அளிக்கப்படவேண்டும்

பல நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்கு திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்

உடல்நலப் பிரச்சனைகள்

பேரிடரில், நெருங்கியவர்களை இழத்தல் மற்றும் வாழ்க்கை தரத்தின் மாற்றத்தால் ஏற்படும் அதிக மன அழுத்தம் போன்றவைகள் அதிர்ச்சி மற்றும் பாதுகாப்பாற்ற நிலையை உருவாக்குவதால் கவலை, நரம்பு தளர்ச்சி மற்றும் மன அழுத்தம் காணப்படுகிறது. இருதயநோய்கள், சிறுநீரகக் கோளாறு மற்றும் மகப்பேற்று பிரச்சனை போன்றவை இந்த மக்களுக்கு ஏற்படலாம்.

மேலாண்மைத்திறன் ஈடுபடுதல் (Strategies involved)

எந்த பேரிடரிலும் மேலாண்மையின் நோக்கங்கள் மக்களின் பாதிப்பை குறைப்பதும், மற்றும் திட்டமிடப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை செயலாற்றுவதாகும்.

நோய்த்தொற்று மற்றும் ஓட்டிப்பரவும் நோய்களை தடுத்தல்

* முழுமையாக நோய் தடுப்பூசி மருந்து அளித்தல்

* தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீர் வழங்கீடு

* சுகாதார கழிப்பிடங்கள் மற்றும் கழிவுகளை அகற்றுதல்.

* நோய்களைப்பற்றிய கண்காணிப்பு சிகிச்சை வசதிகள்

* பயம் மற்றும் துக்கத்தை குறைக்க தொடர்ந்து பொது அறிவுரைகள்

* பாதுகாக்கப்பட்ட உணவு வழங்கும் திட்டம்

* ஆதாரங்களை சரியாக ஒழுங்குபடுத்துதல்

* செய்திகள் மற்றும் குறிப்புகளை சேகரித்து வைத்தல் தேவையற்ற செய்திகளை அறிவிப்பதை தடுத்தல் -

* போக்குவரத்து வசதிகளை பழைய நிலைக்கு கொண்டு வருதல்

பெரிய பேரிடரில் செவிலியப்பணியின் சட்ட தொடர்புகள்

பேரிடர் நேரத்தில் எல்லா ஆதாரங்களும் மருத்துவ பிரச்சனையை தீர்க்க கூடியதாக இருக்கிறதா, சுகாதார சேவை செய்பவர்களின் செயல்கள் சட்டத்திற்கு மிஞ்சியதாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். எப்படி இருந்தாலும் சட்டத்தின் நுணுக்கங்களில் பேரிடல் நேரத்தில் செய்யப்பட வேண்டியவை பேரிடர் தயார்நிலை மற்றும் திட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவசரம் மற்றும் பேரிடர் போன்ற முக்கியமான சூழ்நிலைகளில் சட்டங்கள் சிலவற்றை அனுமதிக்கும், இருந்த போதிலும் பொதுவானதாக மாற்றுவது மிகவும் கடினம்.

பன்னாட்டு தேசிய செஞ்சிலுவை சங்கம் பேரிடரை இவ்வாறு வரையறுக்கிறது:

பேரிடர் என்பது பெருங்கேடான சூழ்நிலை, இந்நிலையில் தினசரி வாழ்க்கைமுறை திடீரென்று பாதிக்கப்பட்டு மக்கள் உதவியற்ற மற்றும் பாதிப்புக்குள் தள்ளப்படுவதால் பாதுகாப்பு, உடை, உறைவிடம் மருத்துவ கவனிப்பு மற்றும் மற்ற வாழ்க்கையின் வசதிகள் தேவைப்படும் நிலை ஏற்படுகிறது.

செவிலியதரம் மற்றும் நடத்தை

செவிலிய நடத்தையை பேரிடர் சமயத்தில் குறிப்பிடுமாறு எந்த சட்டமும் இல்லை. இருந்தாலும் மற்ற ஆதாரங்கள் பேரிடர் நேரத்தில் செவிலியரின் பொறுப்பு (அல்லது) எதிர்பாராத நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தல் போன்றவற்றிற்கு வழிநடத்துவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள கீழ்கண்ட ஆதாரங்களிலிருந்து வழிகாட்டுதல் பின்பற்றப்படலாம்.

செவிலியர் நன்னெறி நடத்தைகள், சேர்ந்து பணிபுரியும் உடன்பாடு, தொழிற்துறையின் தரங்கள், தற்போது நிலவும் மரபுமுறைகள், பொதுவான சட்டம்.

செவிலிய நடத்தை விதி

செவிலியராக பணிபுரிபவர்களுக்கு மாநில செவிலியப்பேரவை பயிற்சி விதியை கொடுக்கிறது. அதில் செவிலியருக்கு நோயை கண்டறியவும், போதிக்கவும், இடமாற்றம் செய்யவும், மற்ற சுகாதார பணியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றவும் தகுதி (அ.) அதிகாரம் உண்டு எனக் கூறுகிறது.

சேர்ந்து பணிபுரியும் உடன்பாடு :

இது சட்ட ஆலோசனைக்காக அல்ல இருந்தாலும் இந்த உடன்பாடுகள் அவர்களுடைய பயிற்சியின் செயல்களை செயல்படுத்த சாட்சியாக இருக்கத் துணைபுரிகிறது.

தொழில்நுட்பத்தரங்கள் :

வழிகாட்டுதலின் முக்கிய ஆதாரம், தொழில்நுட்ப தரத்தை மேம்படுத்துவதாகும். அவசரசிகிச்சை செவிலியின் பயிற்சி நுட்பம் பல நிலைகளிலுள்ள சுகாதார பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாக அமையும், திடீரென்று உடலளவில் மற்றும் மனதளவில் ஏற்படும் மாற்றங்கள் உயிரைப் பற்றிய பயம் நிறைந்ததாக இருக்கலாம். அதற்கு மதிப்பீடு செயல்முறை, தொடர்ந்து திரும்பவும் மதிப்பீடு செய்தல் மற்றும் குறிப்பிட்டவைகளுக்கு ஆதாரக் கவனிப்பு போன்றவை தேவை.

தற்போது நிலவும் மரபுமுறைகள் :

வழிகாட்டுதலின் மற்றொரு ஆதாரம் நடைமுறையில் இருக்கும் மரபுகளைப் போன்று செவிலியர் மத்தியிலும் காணப்படுவது. தொழில் முறைசெவிலியம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருப்பதும் மற்றும் பொறுப்பு, கடமை அதிகாரித்துக்கொண்டேயிருப்பது தற்போது நடைமுறைக்கு இணையான மாற்றங்கள், நிலை மற்றும் பொறுப்புகளை நூல்கள் வெளியிடுகின்றன.

பொதுவான பொறுப்புகளும் சட்டங்களும்

மரபு மூலக்கூறுகள் கவனக்குறைவினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு செவிலியருக்கு எதிராக கோட்பாடுகளை கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளன.

பணி அல்லது கடமைப்பொறுப்பு :

முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர் காரணமில்லாத பாதிப்புகளால் மற்றவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை தரமான நிலையில் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

பணியில் ஏற்படும் மாற்றம் :

தேவையான தரமான நிலையில் முடிவெடுப்பவர் பின்னடையக்கூடாது (Failure)

நேரிடை கவனிப்பு :

கவனிப்பவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இடையில் காரணமான தொடர்பு.

பாதிப்பு :

முடிவின் காரணமாக மற்றவர்களுக்கு பாதிப்பு அல்லது இழப்பு

பேரிடர் மேலாண்மையில் நிறுவனத்தின் பங்கு :

நிறுவன பேரிடர் திட்டமிடுதல் முன்யோசனையாக, கவனமாக ஒவ்வொரு தனி நபரும் பங்கேற்கும் வகையில் அமைந்திருக்கும். நம்பத்தகுந்த திட்டம், பேரிடர் நேரத்தில் சரியான பயிற்சியையும், பணியையும் செயல்படுத்தும். ஒருவேளை தனிஒரு செவிலியின் ஈடுபாடு இருக்குமானால் முன்னதாகவே திட்டமிட்டு பேரிடர் சமயத்தில் தன்னார்வ தொண்டாற்ற பயன்படும்.

பேரிடர் நேரத்தில் செவிலியரின் மருத்துவ சட்ட பொறுப்புகள்

பேரிடர் நடந்த இடத்தில் செவிலியரின் முக்கிய பொறுப்பு உயிரைக் காப்பாற்றுவதும், காயமடைந்தடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப மற்ற சுகாதார குழுவுடன் இணைந்து போக்குவரத்து வசதி செய்தலுமாகும். அவசர காலத்தில் சிகிச்சையளிக்கும் போது செவிலிய பயிற்சியின் தரத்தை திறமையுடன் பின்பற்ற வேண்டும். மருத்துவ சட்ட பொறுப்புகள் கீழ்கண்டவாறு :

1. காயமடைந்த அனைவரையும் மருத்துவ சட்ட தேர்ச்சி (Medica legal cases)யில் பதிவு செய்ய வேண்டும்.

2. காயமடைந்தடைந்தவர்களுக்கு மரியாதையுடன் கூடிய நேர்த்தியான கவனிப்பு அளிக்கப்படவேண்டும்.

3. மற்ற சிகிச்சைகளுக்கு நோயாளிடமிருந்து அல்லது உறுவினரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.

4. மருத்துவ பதிவேடுகளை பாதுகாப்பான முறையில் வைக்கவேண்டும்.

5. காவல்துறைக்கு அறிவிக்கவேண்டும்.

6. காயமடைந்து ஏற்கனவே இறந்தவர்கள் பேரிடர் இடத்தில் அல்லது அவசரசிகிச்சை பிரிவுக்கு வந்தவுடன் இறந்தவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயார்நிலையில் வைப்பதற்கு அதிக ஆற்றல் வாய்ந்த குழு

அரசாங்கத்தால் மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் முக்கிய பங்கு வசிக்கப்படுகிறது.

மத்திய அளவில்.

குறுகிய காலம் :

பேரிடர் நேரத்தில் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து செயல்படுதல். ஆதாரங்களை திரட்டுதல் பலர் கூடுதலாக நிதி வழங்கலாம். பேரிடர் நேரத்தில் சிறப்பாக பணிபுரியும் போது தேசிய, மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் சிறப்பு உள்ளீடுகளும் இருக்கும். அவைகள் கிடைக்க மாநில அரசுக்கு பங்கு வகிக்க வேண்டும்.

நீண்டகாலம் :

பன்னாட்டு உதவிகள். தயார்நிலை மற்றும் தடுப்புமுறைகளை மதிப்பீடுதல். வளர்ச்சியை ஊக்குவித்தல்.

மாநில அளவில் :

மாநில அளவில் பேரிடர் மேலாண்மை திட்டங்கள் மிகவும் தீவிர திட்டங்களாக இருக்கும். அவைகள் மத்திய மற்றும் மாவட்டங்களில் பங்கு வகிக்கக்கூடியதாக இருக்கும். இந்த திட்டங்கள் மாநிலத்தின் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றப்படும்.

பேரிடருக்குப்பின் பல மாவட்டங்களில் ஒற்றுமை மனப்பான்மை நிலவும், மாநில அரசு ஒருங்கிணைப்பாளராக மற்ற மையங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வது தேவை. தயார் நிலை குழு பேரிடர் நடக்கவிருக்கும் பகுதிகளை தெரிந்துவைத்திருக்க வேண்டும். மாநில அரசு மற்ற மாவட்ட அதிகாரிகளுக்கு சரியாக செய்யவேண்டிய செயல்கள் குறித்து அறிவுறுத்த வேண்டும்.

ஆதாரங்களை திரட்டுதல் :

பேரிடர் சூழ்நிலைகளை சந்திப்பதற்கு கூடுதல் ஆதாரங்கள் தேவை. மாநில செயல்திட்டம் வரவு செலவிலிருந்து (Budget) முக்கிய நிதி உதவிகளை வழங்கிட வேண்டும்.

மாநில அளவில்

காலிசெய்தல் (அ) இடம் பெயர்தல் முன்னெச்சரிக்கையாக தொடங்கப் படவேண்டும்.

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட தலைமை அலுவலகங்கள் நிவாரணம் மற்றும் மீட்புக்கான செயல்களை அமல்படுத்தும் இடமாகும்.

பேரிடர் நேரத்தில் தாக்குதல்கள்

  • மின் இணைப்பு துண்டிக்கப்படுதல்.
  • மின் தூக்கி வேலை செய்யாது.
  • குடிதண்ணீர் மாசுபடுத்தப்படும்.
  • தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும்.
  • சாதாரண போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு செயல் பாதிக்கப்படும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.84090909091
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top