பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆவிபிடித்தலில் செவிலியரின் பொறுப்புகள்

ஆவிபிடித்தல் (Steam inhalation) முறையில் செவிலியரின் பொறுப்புகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வரையறை

ஆவியாதல் மூலம் பெறப்படும் வெதுவெதுப்பான மற்றும் ஈரமான காற்றை சுவாசிப்பதற்கு ஆவி பிடித்தல் என்று பெயர்.

நோக்கங்கள்

• சளிச்சவ்வு சுழற்சி அல்லது அடைப்பிலிருந்து நிவாரணம் பெற.

• மூக்கு எலும்புக்குழிகள் அழற்சி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற.

• சளியை இளகவைத்து சுவாச பாதையிலிருந்து வெளியேற்ற

* நுரையீரலின் சவ்வுப்படலங்கள் உலர்ந்து போவதை தடுக்க.

* வெப்பம் மற்றும் ஈரத்தன்மையை அளிக்க.

* ஆக்சிஜன் உறிஞ்சுவதற்கு பயனாக.

ஆவிபிடித்தலுக்கான மருந்துகள்

• டிங்கர் பென்சாயின் 5 மி.லி. / 500 மி.லி. கொதிநீர்.

* யூகலிப்டஸ் 2 மி.லி./500 மி.லி. கொதிநீர்.

* சில கற்பூர படிகங்கள் 500 மி.லி. கொதிநீர்.

ஆவிபிடித்தலின் முறைகள்

குவளை முறை (Jug method) :

இந்த முறையில் நெல்சன் உட்சுவாசக்கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் கொதிக்கும் நீரை ஒரு குவளையில் நிரப்பி, நோயாளியை அந்த நீராவியை சுவாசிக்க செய்ய வேண்டும்.

ஆவிக்கூடாரம் (Steam Tend) :

அதிக அடர்த்தியான நீராவி தேவைப்படும்போது ஆவிக்கூடாரம் பயன்படுத்தப் படலாம். சுலபமான, எளிதான முறைக்கு நோயாளி படுக்கையின் நான்கு பக்கங்களிலும் திரையிட்டு, அவைகளை சுற்றி கம்பளியை இழுத்துகட்டி ஒரு கூடாரம் போல அமைக்க வேண்டும்.

கெட்டிலில் நீரை கொதிக்க வைப்பதன் மூலம் நேரிடையாக கூடாரத்துக்குள் நீராவியை செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் 20 - 30 நிமிடங்கள் நீராவி செலுத்தப்படலாம். மேலும் நான்கு மணி நேரத்துக்கொருமுறை இதை திரும்பச் செய்யலாம்.

வெப்பநீராவிக்கலன் (Electric steaminhaler) :

சிறிய வெப்ப நீராவிக்கலனை பயன்படுத்தலாம். இந்த அமைப்பில் ஒரு ஜாடி மற்றும் அதனுள் வெப்பம் அடையக்கூடிய கம்பி ஒன்று இருக்கும். ஜாடியை நீரால் நிரப்பப்பட வேண்டும். ஜாடியின் மேற்பகுதியில் பிரித்தெடுக்கப்படக்கூடிய துளைகள் நிறைந்த கப், ஓர் உலோக குவளையின் மூக்கு மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆவிபிடித்தலில் நெல்சன் உட்சுவாசக் கருவியை பயன்படுத்தும்போது செவிலியரின் பொறுப்புகள்

பொருட்கள்

நோக்கங்கள்

நெல்சன் உட்சுவாசக்கருவியில் கழுத்துப் பகுதியில் வாய் துண்டு இறுக்கமாக) இணைக்கப்படுதல்.

நீராவி வெளியேறுவதை தடுப்பதற்கு மற்றும் கொதிநீர் வெளியேறாமல் இருப்பதற்கு.

உட்சுவாசக்கருவியை வைப்பதற்கு ஒரு பெரிய தட்டு அல்லது பேசின்

உட்சுவாசக்கருவியை பாதுகாப்பாக  வைப்பதற்கு

பிளானல் துண்டு அல்லது துவாலை

உட்சுவாசக்கருவியை சுற்றுவதற்கு.

முகதுவாலை

நோயாளியின் முகத்தை துடைப்பதற்கு.

குளியல் துண்டு

நீராவி வெளியே செல்வதை தடுப்பதற்கு தலையை சுற்றி வைப்பதற்கு

புங்சர் பென்சாயின் அல்லது வேறு மருந்துகள்

சுவாச தொற்று நீக்கியாக பயன்படுகிறது.

ஸ்பூன் அல்லது அளவு டம்ளர்

மருந்தை அளவிட

ஒரு டப்பாவில் சல்லாத்துணி

வாய்த்துண்டை சுழற்சி வைக்க.

பஞ்சு உருண்டைகள்

கவலையின் மூக்கு Spout அடைக்க

கழிவுத்தட்டு மற்றும் காகிதப்பை

கழிவுகளை சேகரிக்க

முதுகு தாங்கி

நெஞ்சுப்பகுதியை விரிவாக்க

இதய மேசை

உட்சுவாச கருவியை வைப்பதற்கு

செய்முறை படிகள்

காரணங்கள்

உட்சுவாசக்கருவியின் அளவை குளிர்ந்த நீரினால் அளவிடு

உட்சுவாசக்கருவியின் அளவை கண்டறிய

உட்சுவாசக் கருவியை வெதுவெதுப்பாக வைப்பதற்காக சிறிது சுடுநீரை ஊற்றி அதை காலிசெய்.

வெப்பநிலையை சீராக்க

தேவையான மருந்து உள்ளே ஊற்றிய பின் 2/3 பங்கு ஜாடியை சுடுநீரால் நிரப்பு.

விளிம்புவரை நீரை ஊற்றினால் அது வாய்க்குள் உறிஞ்சப்படும் வாய்ப்புள்ளது.

வாய்த்துண்டை ஜாடியில் இறுக்கமாக பொருத்தவும். இது குவளையின் மூக்கு எதிர்திசையில் இருக்க வேண்டும்.

இது குவளையின் மூக்கு நோயாளியிலிருந்து தூரம் இருக்கச்செய்யும்.

ஜாடியை பிளானல் துண்டினால் மூடு

உதடுகளை தீக்காயத்திலிருந்து தடுப்பதற்காக

உட்சுவாசக்கருவியை பேசினில் வைத்து. அதை படுக்கையருகே கொண்டுபோ.

தீப்புண் ஏற்படுவதை தடுக்க

இந்த அமைப்பை நோயாளியின் முன்  வைத்து (குவளையின் மூக்கு) எதிர்திசையில் இருக்குமாறு வைக்க வேண்டும். குவளையின் மூக்கிலிருந்து பஞ்சு உருண்டையை எடுத்து கிட்னி தட்டில் போட்டுவிடவும்.

பஞ்சு உருண்டையை நீக்குவதால் உள்ளே காற்று செல்லும்.

நோயாளியின் வாயைக் கருவியின் வாய் மூடியுடன் வைத்து நன்கு மூச்சை உள் இழுத்து நீராவியை பெற்றுக் கொள்ளச் சொல். பிறகு மூக்கு வழியாக மூச்சை வெளிவிடச்சொல்.

மூக்குத்துளை வழியாக வெளிவிடுவதால் சவ்வுப்படலத்தின் அழற்சி நீக்கப்படும்.

நோயாளியின் தலையையும் உட்சுவாசக் கருவியையும் கம்பளியால் மூட வேண்டும்.

நோயாளியின் முகத்தை சுற்றி நீராவியை சேகரிப்பதற்காக.

நோயாளி மற்றும் பொருட்களின் பின் கவனிப்பு

• சிகிச்சையை 15 - 20 நிமிடங்கள் தொடர்ந்து செய்.

* நோயாளியின் முகத்திலிருக்கும் வியர்வையை துடைத்து விடலாம்.

* முதுகுதாங்கி மற்றும் இதயமேசையை எடுத்துவிடு.

• நோயாளியின் நிலையை சரிசெய்து, நோயாளியை வசதியாக படுக்கலை

* குளிர்தாக்காதபடி நோயாளியை 1-2 மணி நேரம் படுக்கையிலே இருக்கச்செய்.

* செய்முறையை தேதி மற்றும் நேரத்துடன் செவிலியர் பதிவேட்டில் பதிவுசெய்.

தொகுப்பு

1. ஆவிப்பிடித்தல், சளிச்சவ்வு அழற்சி அல்லது அடைப்பினால் ஏற்படும் மூக்கு எலும்புக்குழிவுகள் அழற்சி ஆகியவைகளிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

2. மூன்று வகையான ஆவிப்பிடித்தல் முறை, ஜாடி முறை, ஆவிக்கூடாரம் மற்றும் மின் நீராவிக்கலன்.

3. ஆவிப்பிடித்தலுக்கான மருந்துகள்:

டிங்சர் பென்சாயின் 5 மி.லி. / 500 மி.லி. கொதிநீர்

யூக்லிப்டஸ் 2 மி.லி. / 500 மி.லி. கொதிநீர்

சில கற்பூர படிகங்கள் / 500 மி.லி. கொதிநீர்

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top