பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இரைச்சல் மற்றும் ஒளி

இரைச்சல் (Noise) மற்றும் ஒளி குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இரைச்சல்

இரைச்சல் என்பது எப்போதும் தேவையற்ற சத்தம் என்று பொருள்படும். ஒரு மனிதனின் ஒலி மற்றொருவருக்கு இரைச்சலாகத் தோன்றலாம். இரைச்சலை இவ்வாறு வரையறுக்கலாம்.

''தவறான சத்தம், தவறான இடத்தில், தவறான நேரத்தில் எழுப்பப்படுவதாகும், மனிதர்கள் அதிகமான இரைச்சலுள்ள சூழலில் வாழ்கிறார்கள், எனவே இருபதாம் நூற்றாண்டு இரைச்சலின் நூற்றாண்டு" எனப்பட்டது. நவீன வாழ்க்கை முறையில் பெரிய அளவில் உரத்த ஒலிகளின் கலவை (Vast Caco Phony) உருவாக்கப்பட்டு சுகாதாரத்துக்கு இடையூறாக அமைகிறது.

இரைச்சலின் ஆதாரங்கள் (Sources of noise)

இரைச்சலின் ஆதாரங்கள் பலவகைளில் வேறுபடும். மோட்டார் வண்டிகள், தொழிற்சாலைகள், ஆகாய விமானங்கள் போன்றவைகள் இரயில் நிலையங்கள், போக்குவரத்து சத்தம், பேருந்து நிலையங்கள் மற்றும் விமானநிலையங்கள் அருகில் இரைச்சல் அதிகமாக இருக்கும். வண்டிகளில் உள்ள ஊதுகுழலை அழுத்தத்தில் ஒலிக்கச் செய்தல், விழாக் காலங்களில் சிறப்பாக இரவு நேரத்தில் ஒலிப்பெருக்கிகளை முழு அளவில் இயங்கச் செய்வது ஒலிமாசுறுதலுக்கான ஆதாரங்கள், அன்றாட வாழ்வில் இரைச்சலின் ஒரு பகுதி வீடுகளில் உள்ள வானொலி, டிரான்சிஸ்டர், தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து எழுப்பப்படுவதாகும்.

ஒலிபண்புகள்

உரத்த சத்தம் (or) கடுமையான சத்தம் (Loudness or high intensity)

உரத்த சத்தம் என்பது ஒலிபெருக்கி அலைகளைப் பொருத்தது. ஒலியின் உரத்த சத்தத்தை டெசிபெல் (decibels db-) என்ற அலகினால் கூறலாம். சாதாரண உரையாடல் 60-65db சத்தத்தை உண்டாக்கும். அமைதியாக பேசுவதில் (Whispering) 20-30db சத்தம் உண்டாகும் தெருக்களின் போக்குவரத்து நெரிசலில் 60-80db சத்தம் உண்டாகும். தொழிற்சாலைகளில் 120db சத்தம் உண்டாகும். நம்முடைய தினசரி வாழ்க்கையில் 85db வரையிலும் இரைச்சல் காதுகளின் கேட்கும் திறனை பாதிக்காது.

மனிதனின் கேட்கும் திறன் வெவ்வேறு நிலைகளில் சத்தத்தின் அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியது. அதாவது இரைச்சலை அல்லது அதன் கடுமையை (intensity) உணரும்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய இரைச்சலின் அளவீடுகள் (Acceptable noise levels) கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுக் கொள்ளக்கூடிய இரைச்சலின் அளவீடுகள் (OIBA)

வசிக்கும் பகுதி

படுக்கை அறை

25

 

வசிக்கும் அறை

40

வணிக நிறுவனம்

அலுவலகம்

85-45

 

மாநாடு

40-45

 

உணவகங்கள் (Restaurants)

40-60

தொழிற்சாலை

பட்டறை

40-60

 

ஆய்வுக்கூடம்

40-50

கல்வி நிலையம்

வகுப்பறை

30-40

 

நூலகம்

35-40

மருத்துவமனைகள்

வார்டுகள்

20-25

எண் (Frequency)

அதிர்வுகள் ஹெர்ட்ஸ் (Hertz) என்று குறிப்பிடப்படுகிறது. அதிர்வடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது ஒரு ஹெர்ட்ஸ் எனப்படும். மனிதனின் செவி 20-20,000 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணை கேட்கக்கூடியது. ஆனால் இதன் மாற்றங்கள் வயதையும் செய்தியையும் பொறுத்தது. 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைந்த அதிர்வுகளை குற்றொலி (Infra audible) என்றும் (Ultra Sonic) 20,000 ஹெர்ட்ஸ் மேல் அதிர்வுகளை அல்ட்ரா சோனிக் என்றும் அழைக்கிறோம்.

சமுதாயத்தில் இரைச்சலின் அளவுகள்

சில இரைச்சலின் ஒலி அளவுகள்

இரைச்சலின் ஆதாரம்

ஒலி அளவுகள் (db)

மெதுவாக பேசுதல் (Whisper)

10

2 - 3 நபருடன் பேசுதல்

73

வானொலி பேச்சு

80

வானொலி இசை

85

குழந்தைகள் சத்தமிடல்

79

குழந்தைகள் அழுதல்

80

வெற்றிடதுடைப்பான்

76

இசைப்பெட்டி (Pians)

86

ஜெட் விமானம் கிளம்புதல் (Jet takeoff)

150

இரைச்சலைப்பற்றி கற்க பயன்படுத்தும் கருவிகள்

இரைச்சலைப்பற்றி படிக்க பயன்படும் அடிப்படைக் கருவிகள்

1) ஒலிமானி (Soundlevel meter)

இது ஒலியின் உரத்த சத்தத்தைக் கணக்கிட பயன்படுகிறது. (dB or dB (A)

2) எட்டு இணைப்பு அதிர்வெண் கணக்கிடும் கருவி (Octave BandKreavuencyAnalyser)

இது இரைச்சலை எட்டு திசைகளிலிருந்தும் கணக்கிடுகிறது. இதன் முடிவுநிலை ஒலிநிறமாலையைக் (Sound Spectrum) காண்பிக்கும். இது இரைச்சலின் பண்பாகிய உயர்ந்த செறிவு, குறைந்த செறிவு (Low-pitch) அல்லது வேறுபட்ட செறிவு என்பதைக் குறிக்கும்.

3. செவிமானி (Audiometer) : இது கேட்கும் திறனை அளவிடுகிறது. ஆடியோகிராமின் மேல் பகுதியில் பூச்சியக்கோடு இருந்தால் கேட்கும் திறன் சரியாக இருக்கிறது. இரைச்சலால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டால் அதிர்வெண் 4000 H2-ல் வளைவில் ஒரு தாழ்வு காணப்படும்.

இரைச்சலால் ஏற்படும் விளைவுகள்

இரைச்சலால் ஏற்படும் விளைவுகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

a. கேட்கும் திறன் பாதிப்பு (Auditory effects) : இது 90dB ஒலி அதிர்வெண்ணிலும் மற்றும் 4000 H2-க்கு மேலும் உள்ள பகுதிகளில் காணப்படும். இது காதில் ஊதுதல் மற்றும் கத்துதல் போன்றவைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளாகும்.

b. காது கேளாமை செவிடு : இது மிகவும் மோசமான நோயின் நிலை பொதுவான பாதிக்கப்பட்டவருக்கு முதலில் இதை உணரமுடியாது. செவிட்டுத்தன்மை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிக விளைவாகவோ இருக்கலாம்.

மற்ற விளைவுகள்

a. பேசுவதில் சிரமம் : இரைச்சல் செய்திகளை பேசுவதில் பாதிப்பு ஏற்படுத்தும். நம்முடைய அன்றாட வாழ்வில் 300-500H2 ஒலி அதிர்வெண்கள் செய்திகளை பேசும்போது பாதிக்கிறது. இது பொதுவாக சாலை இரைச்சலினால் ஏற்படுகிறது. ஒரு நல்ல பேச்சுக்கு ஒலியின் அளவு 12dB டெசிபல் ஆக இருக்க வேண்டும்.

b. கோபம் (அ) தொந்தரவு (Annoyance) : மனநல பாதிப்புடையவர்கள் இரைச்சலுக்கு அதிகமாக பாதிக்கப்படுவார்கள் வேலையாட்கள் கடுமையான இரைச்சலுக்கு உள்ளாகும்போது கோபம், சிடுசிடுப்பு, மற்றும் பொறுமையிழந்து நிறுவனத்தின் உற்பத்தி கூட பாதிக்கப்படலாம். .

c. செயல்திறன் நுட்பம் (efficiency) : குறைந்த அளவு இரைச்சலில் எப்போது மனநிலை ஒருமுகப்படுத்தப்படும். சத்தம் குறைவாக காணப்படும் இடத்தில் வேலைத்திறன் அதிகமாக இருக்கும்.

d. உடலியல் மாற்றங்கள் (Physiological change) : மனிதன் நேரிடையாக இரைச்சலுக்கு உட்படும்போது எண்ணிக்கையற்ற தற்காலிக மாற்றங்கள் உடலில் காணப்படும். அவைகள் இரத்த அழுத்தம் அதிகரித்தல், மூளையில் அழுத்தம் அதிகமாதல். இருதயதுடிப்பும் சுவாசமும் அதிகமாதல் மற்றும் அதிகமாக வியர்த்தல். பொதுவான அறிகுறிகளான மயக்கம், வாந்தி, தலைசுற்றல் காணப்படலாம். உறக்கம் மற்றும் கண்பார்வை பாதிக்கப்படலாம். இது கரும்படலத்தை சுருங்கச் செய்து, இரவு பார்வையை பாதிக்கலாம்.

இரைச்சலைக் கட்டுப்படுத்துதல் (Controlof Noise)

பல வழிகளில் இரைச்சலைக் கட்டுப்படுத்தலாம்.

அவைகள்

1. சரியான நகர அமைப்பு : கீழ்கண்ட முறைகளில் நகரங்களை அமைப்பதால் இரைச்சலைக் குறைக்கலாம்.

a. நகரத்தை தொழிற்சாலை, போக்குவரத்து என மண்டலங்களாக பிரித்தல்.

b. வசிக்கும் பகுதியை பிரதான சாலையிலிருந்து பிரித்தல். வீட்டின் முன்பகுதி சாலையிலிந்து 15 மீட்டர் உள்நோக்கி இருக்க வேண்டும் மற்றும் இடைப்பட்ட பகுதி மரங்களாலும், செடி, புதர்களாலும் காணப்பட வேண்டும். அகலமான தெருக்களின் இரைச்சல் வசிக்கும் பகுதிகளுக்கு குறைந்த அளவே ஊடுருவிச் செல்லும்.

2. வாகனங்கள் கட்டுப்பாடு : கனரக வாகனங்கள் குறுகிய தெருக்களில் செல்லக்கூடாது வாகன போக்குவரத்து குடியிருக்கும் பகுதிகளில் குறைக்கப்பட வேண்டும். வண்டிகளில் ஊதப்படும் ஊதுகுழல் அடிக்கடி ஊதப்படாமல், மற்றும் அழுத்த ஊதுகுழல்கள் பயன் படுத்தப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.

3. கட்டிட அமைப்பு : ஒவ்வொரு கட்டிடமும் அரசாங்க அனுமதிப்பெற்ற தனித்தனி கட்டிடங்களாக அமைய வேண்டும். அமைக்கும்போது (அ) கட்டிடம் கட்டும்போது வீட்டின் உள்ளே தங்குவது தவிர்க்கப்படவேண்டும். தேவையான இடங்களில் கட்டிடம் இரைச்சல் பாதுகாப்பு பெற்றதாக இருக்க வேண்டும்.

4. தொழிற்சாலைகளும் இரயில் நிலையங்களும் : இரைச்சலின் ஆதாரங்களான தொழிற்சாலைகள் வசிக்கும் பகுதிகளுக்கு வெளியே அமைக்கப்படலாம். இல்லையென்றால் வீடுகளுக்கும் இவைகளுக்கும் இடையில் பசுமையான பூங்கா அமைக்கப்படவேண்டும்.

5. இரைச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு : 85 டெசிபல் அதிர்வெண்ணுக்கு மேல் 150H, இரைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். வேலை செய்கிறவர்கள் ஒழுங்கான முறையில் இரைச்சல் குறைந்த தொழிற்சாலையின் பகுதிகளுக்கு மாற்றப்படவேண்டும். அடிக்கடி ஆடியோகிராம் பரிசோதனையும் தேவைப்பட்டால் காது அடைப்பான் (Earmuffs) பயன்படுத்தப்படலாம்.

6. சட்டம் இயற்றுதல் (Legislation) : பல நாடுகளில் இரைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

7. பயிற்சி அளித்தல் : கிடைக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி சமுதாயத்திற்கு இரைச்சலினால் ஏற்படும் இடர்பாடுகளை எடுத்துக்காட்டவேண்டும்.

ஒளி

சரியான ஒளி நல்ல பார்வைக்கு முக்கியம். சரியான வெளிச்சம் இல்லாத நேரங்களில் பார்வை உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகி, பொதுவான களைப்பும், நல்ல திறமையும் இல்லாத நிலை உருவாகும்.

நல்ல வெளிச்சத்திற்கு தேவையானவைகள்

1. போதிய தன்மை (Sufficiency) : கண் சோர்வடையாதபடிக்கு கண் பார்வைக்கு பொருள்கள் தெரியும் வண்ணம் போதிய வெளிச்சம் இருக்கவேண்டும். ஒளியின் ஆற்றல் (or) தூரம் 15-20 அடி ஒளியின் தூரம் இடங்களுக்கு ஏற்ப வேறு வகைப்படும்.

2. பகிர்மானம் (Distribution) : வேலை செய்யும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி வெளிச்சம் இருக்கவேண்டும். ஒளியில் மாறுபாடு இருந்தால் பார்வை பாதிக்கக்கூடும். நிழல்கள் இல்லாமல் சரியான வெளிச்சம் நல்ல பார்வைக்கு உதவும்.

3 . கூசும் வெளிச்சம் இல்லாமல் இருத்தல் : ஒளிவீசும் தன்மை கட்டுப்படுத்தப்பட வேண்டும். வாகனங்களில் இருந்து வரும் வெளிச்சம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த ஒளி மேசைத்துளி மற்றஒளிரக்கூடிய பொருட்களின் மீது படும் போது எதிரொளிக்கும். இதனால் கோபம் அல்லது சிடுசிடுப்பு ஏற்படும். இந்த வீசும் ஒளியை கண்ணால் தாங்கிக் கொள்ள முடியாததால் பார்வை குறையலாம்.

4. நிழலுருவம் இல்லாதிருத்தல் (Absense of Sharp Shadows) : சிறிய நிழலுருவத்தை தடுக்க முடியாது. ஆனால் கூரான, எதிரொளிக்கக் கூடிய நிழலுருவம் பிரச்சனைக் குரியது. வீசும் ஒளியைப்போல, நிழலுருவமும் கண்ணை பாதிக்கக்கூடியது. எனவே பார்வை பகுதியில் நிழலுருவம் இருக்கக்கூடாது.

5. நிலையான வெளிச்சம் : வெளிச்சத்தின் ஆதாரம் நிலையானதாக இருக்கவேண்டும். வெளிச்சத்தில் நடுக்கம் (Flickering) இருந்தால் அது பார்வையை பாதித்து விபத்துகள் ஏற்படலாம்.

6. வெளிச்சத்தின் நிறம் : வண்ண வெளிச்சம் முக்கியமானதல்ல. இயற்கை வெளிச்சம் கண் நலமுடன் இருக்க உதவும். செயற்கை வெளிச்சம் முடிந்த அளவுக்கு பகல் வெளிச்சத்தைப்போல இருக்க வேண்டும்.

7. சுற்றுசூழல் : இருட்டான பின்னணியில் கறுப்பு நிற பொருள் இருந்தால் அதை கண்டுபிடிப்பது கடினம். ஒளிவீசும் இடத்தில் உயர்ந்த அளவில் ஒளியின் தூரம் தேவை. அறைகளில் சரியான பார்வைக்கு வண்ணங்கள் முக்கியம். மேற்கூரையின் எதிரொளி 80 சுவர் 50 - 60% கட்டுமானப்பொருட்கள் 30 - 40% தரையின் எதிரொளிப்பு 15-20% மேல் இருக்கக் கூடாது. எதிரொளிக்கும் வண்ணங்கள் விபத்துகளை தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. எடு மதகுகள், பாலங்கள் முதலியன.

ஒளியின் அளவீடுகள்

வெளிச்சத்தில் ஒளி அலைகளை வெண்மையாக காணலாம். 4 அளவீடுகளில் வெளிச்சத்தை (or) ஒளியை அளவிடலாம்.

1.ஒளியின் தன்மை

ஒளியின் சக்தி ஒரு புள்ளியிலிருந்து எல்லா திசைகளுக்கும் பரவுதல் என்பதாகும் இதை கேண்டில்லா (Candela) என்று அளவிடலாம்.

2) ஒளியின் தொடர்ச்சியான மாற்றம் : திடக்கோணத்துடன் சேர்ந்து ஒளியை வீசக்கூடியது, லுமன் (Lumen) என்று அளக்கிறோம்.

3. ஒளியின் ஆற்றல் விகிதம் : ஒளி சமதளபரப்பை சென்றடைவது லக்ஸ் (Lux) என்று அலகினால் அளக்கிறோம்.

4. ஒளியின் தன்மை : சமதளபரப்பில் எதிரொளிக்கக்கூடிய ஒளியின் அளவை லம்பார்ட் (Lamberts) என்று குறிப்பிடுகிறோம்.

இயற்கை வெளிச்சம்

இயற்கை வெளிச்சம் என்பது கண்ணுக்கு தெரிவதும், எதிரொளிக்கக் கூடியதுமாகும். ஒரு நாளின் நேரம், காலம், தட்பவெப்பநிலை மற்றும் சுற்று சூழல் மாசுறுதல் போன்றவற்றைப் பொறுத்து இயற்கை வெளிச்சம் அமைகிறது. பகலில் ஒளியின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான

குறிப்புகள் அமைப்பு : சீராக ஒளிவீசுவதற்கு கட்டிடங்கள் வடக்கு அல்லது தெற்கு பார்த்து அமையவேண்டும். இது பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் அல்லா அறைகளிலும் சீரான வெளிச்சம் முக்கியம். கட்டிடங்கள் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் போது பலகணிவழியாக நேரிடையாக சூரியஒளி ஊடுருவதை பாதுகாக்கவேண்டும்.

2. தடுப்புகளை அகற்றுதல் : முழுவதுமாக அல்லது பகுதியாக தடுப்புகளை அகற்றுவதால் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும்.

3. பலகணிகள் சரியான முறையில் அமைக்கப்பட்டால் இயற்கை வெளிச்சம் அறைகளில் நன்றாக இருக்கும். நீளமான பலகணியின் வழியாக வெளிச்சம் நன்றாக ஊடுருவும். அகலமான பலகணியின் வழியாக வெளிச்சம் பரவலாக ஊடுருவும்.

4. அறைகளின் உள் அமைப்பு : இயற்கை ஒளியின் தன்மையை முழுவதுமாக பெற மேற்கூரை வெள்ளை நிறத்திலும், சுவரின் மேற்பகுதி தெளிவாகவும், மற்றும் கீழ்பகுதி அடர்ந்த நிறத்திலும் இருந்தால் கண்களுக்கு எதிரொளிப்பு தெளிவாக இருக்கும்.

செயற்கை வெளிச்சம்

பகலில் வெளிச்சம் எல்லா நேரங்களிலும் போதுமானதாக இருக்காது. பொதுவாக மேக மூட்டமான நாட்களில் இது செயற்கை ஒளியினால் ஈடு செய்யப்படும். செயற்கை வெளிச்சம் பகல் வெளிச்சத்தைப் போன்றது. செயற்கை வெளிச்சம் ஐந்து அமைப்புகளைக் கொண்டது.

1. நேர் வெளிச்சம் (Direct lighting) : நேர் வெளிச்சத்தில் வெளிச்சத்தின் 99 - 100% நேரிடையாக அந்த இடத்தில் காணப்படும். நேர் வெளிச்சம் பயனுள்ளது. சிக்கனமானது. ஆனால் கூர்மையான நிழலை விழச் செய்யும். அது கண்ணுக்குள் விழக்கூடாது.

2. பாதி நேர் வெளிச்சம் (Semi-direct lighting) : இதில் 10-40% வெளிச்சம் மேலே செலுத்தப்பட்டு மீண்டும் பொருட்களின் மீது மேற்கூரையினால் எதிரொளிக்கப்படுகிறது.

3. மறைமுக வெளிச்சம் (Indirect lighting) : வெளிச்சம் நேரிடையாக பரப்பில் விழாது வெளிச்சத்தின் 90-100% மேற்கூரையிலும், சுவர்களிலும் விழும் இதனால் ஒளிவீசும் தன்மை பொதுவாக இருக்கும், எந்த பொருட்களின் மீதும் இருக்காது.

4. பாதி மறைமுகம் (Semi-indirect) : இதில் வெளிச்சத்தின் 60-90% மேற்பகுதியிலும் மீதியானது கீழ்பகுதிக்கும் செல்லும்.

5. நேர் மறைமுகம் (Direct-indirect) : இதில் வெளிச்சம் சமமாக பரப்பப்படும். மற்ற எந்த அமைப்பும் இதில் அடங்காது.

செயற்கை ஒளியின் முறைகள்

1. கசையிழை விளக்குகள் (Filament lamps): இவைகள் அதிகமாக பயன்படுத்தக் கூடியது. மின்சாரம் டங்ஸ்டன் கசையிழையை சூடுபடுத்துவதால், அந்த வெப்பத்திற் கேற்ற முறையில் ஒளிவிசும் சூடான கசையிழைகள் நீல நிறத்தில் வெளிச்சத்தைக் கொடுக்கும் குமிழ் விளக்குகளில் ஒளிவீசும் தன்மை 30 - 40 குறைவாக இருக்கும்.

2. ப்ளுரசன்ட் விளக்குகள் (Fluorescent lamps) : மின்சாரம் பயன்படுத்துவதில் இந்த விளக்குகள் சிக்கனமானவை, குளிர்ச்சியானதும், பயனுள்ளதும், இவற்றிலிருந்து வீசும் ஒளி இயற்கை வெளிச்சத்தைப் போலவும் இருக்கும். இந்த விளக்குகள் கண்ணாடி தண்டினால் உண்டாக்கப்பட்டு, பாதரசம் நிரப்பப்பட்டு, மின் கடத்திகள் ஒவ்வொரு முனையிலும் இணைக்கப்பட்டிருக்கும் விளக்கு தண்டின் உட்பகுதி பிளாரசண்ட் வேதிப்பொருட்களால் பூசப்பட்டு, அவைகள் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சக் கூடியவைகளாக இருக்கும்.

ஒளியின் தரங்கள்

பொறியாளர் சமூகத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒளியின் ஆற்றல்.

பார்வைதன்மை

ஒளியின் ஆற்றல்

சாதாரணமாக வாசித்தல்

100

பொதுவான அலுவலகப்பணி

400

கூடுகை

900

மிகவும் சரியான தன்மை

1300–2000

கடிகாரம் தயாரிக்கும்போது

2000-3000

ஒளியின் உயிரியல் விளைவுகள்

உயிரியல் விளைவுகள் ஒளியில் சிறிதளவு காணப்படுகிறது. பகல் வெளிச்சம் உறிஞ்சப் படுவதால் கருப்பையில் இருக்கும் சிசுவின் பிலிரூபின் (Bilirubin) சிதைக்கப்படுவதால் குறைமாதக் குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயுடன் காணப்படலாம்.

உடலின் வெப்பநிலை, உடற்கூற்று செயல், நிறமி உற்பத்தி, விட்டமின் 'D' உற்பத்தி, அட்ரீனோ கார்டிகல் சுரத்தல் மற்றும் உணவு பயன்படுத்துதல் (metabolism) போன்றவற்றில் வெளிச்சம் பங்கு வகிக்கிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.95918367347
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top