பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கருவுற்ற தாய்க்கு வயிற்று பரிசோதனை

கருவுற்ற தாய்க்கு வயிற்று பரிசோதனை மேற்கொள்ளும் முறை பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

பொருள் விளக்கம்:

சிசுவின் நிலையை கண்டறிவதற்காக கர்ப்பிணியை பரிசோதித்தல்,

நோக்கம்

1. கருக்கொண்ட நிலையின் வயதை மதிப்பிடுதல். படுத்திருக்கும் வாட்டம், சிசுவின் நிலையை ஒப்பந்தத்தின் மூலம் அறிதல்.

2. சிசுவின் நிலையை மதிப்பிடுதல்.

3. ஆரம்ப நிலையிலேயே குறைப்பாடு, தவறான அறிமுகம், தவறான நிலை ஆகியவற்றை கண்டறிதல்.

பொருட்கள்

உடல் நல பரிசோதனை கட்டு:

தட்டில் வைக்கப்பட்டுள்ளவை:

1. அளவு நாடா

2. சிசு சோதினி

3. மார்பு சோதினி

ஆயத்த முன்செய்முறை: (செய்முறைக்கு முன்)

1. தாய்க்கு செய்முறையை விளக்கிக் கூறுதல்

2. கர்ப்பிணி தாய்கள் செய்முறை மேற்கொள்ளும் போது சாதாரணமாக (அ) தளர்ந்து இருத்தல்.

3. தனியறையில் பரிசோதித்தல் (திரை பயன்படுத்தல்)

4. சிறுநீர்ப்பையை காலி செய்தல்

5. தாய்க்கு வலது பக்கத்தில் நின்று கொள்ளல்.

6. தொடுவதற்கு முன்பு கைகளை மிதமான சூடாக்குதல்

7. தாய்க்கு வயிற்று சுருக்கம் ஏற்படும் போது FHR முறையை நீக்க வேண்டும்.

8. தாய்க்கு வயிற்று சுருக்கம் ஏற்படும் போது கைகளால் தொடுவதை தவிர்க்கவும்

9. தாயைப்பற்றிய குறிப்புகளை சேகரித்து பதிவு செய்ய வேண்டும்.

செய்முறை

படிகள் இனம் (அ) பிரிவு

இனம் (அ) பிரிவு:

1. செய்முறை மற்றும் நோக்கங்களை தாய்க்கு விளக்க வேண்டும்

2. தாயை சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும்.

3. வசதியான நிலைகளையும் மற்றும் வயிற்றின் தனியறையும் அவசியம், உயர்த்திய மல்லார்ந்த நிலையும், முட்டிகள் மடங்கிய நிலையும் அமைக்க வேண்டும்.

4. கைகளை நன்கு கழுவி சூடாக்கி கொள்ள வேண்டும்.

ஒழுங்கான விளக்கங்களை அளிப்பதன் மூலம் மனக் குழப்பங்களை குறைக்கலாம்,

நிரம்பிய சிறுநீர்ப்பை இருந்தால் வலி மற்றும் பொய் நிலையும் உருவாக காரணமாக இருக்கும்

முட்டி மடங்கிய நிலையில் தசைகள் தளர்ந்து இருக்கும்.

குளிர்ந்த கைகள் கருப்பையின் சுருக்கத்தை தூண்டும்.

பார்வையிடுதல்:

1. கருப்பையின் அளவு:

கருக்கொண்ட நிலையை கண்டறிதல்.

2..கருப்பையின் வடிவம் (அ) உருவம்:

முட்டையின் உருவமானது உருண்டையாகவோ, (அ) குறுக்கு வாட்டிலோ (அ) நீண்ட நிலையிலோ இருக்கிறதா என்று கண்டறிதல்

முதல் தடவையாக கர்ப்பம் தரித்திருந்து வயிறு தொங்கியிருந்தால் அதற்கு காரணம் குறுகிய கூபகப் பகுதி என எதிர்பார்க்கப்படுகிறது,

இலகுவதால் நிலை 38 வாரத்தின் பின் தோன்ற ஆரம்பிக்கும் 38 வாரங்களில் விலாப் பகுதி முழுமையாகவும், இலகுவதால் இடைப்பகுதி நிரம்பி காணப்படும்.

3. வெளிமுனை (outline)

1. வயிறு தொங்கிய நிலையைபார்த்தல்

2. இலகுவாதல் நிலையை பார்த்தல்

3. இடைப்பகுதி நிரம்பியிருப்பதை பார்த்தல்

4. கருப்பையின் உயரத்தை சென்டிமீட்டரிலும் மற்றும் வாரத்திலும் பரிசோதித்தல்

5. தொப்புள் பகுதியை பரிசோதித்தல் உள்வாங்கிய நிலை (அ) மேல் எழும்பிய நிலையில்

6. சிசுவின் அசைவினை பரிசோதித்தல்

7. தோலில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்று பார்த்தல் முக்கியமாக ஸ்ரியா கிராவிடரம், லினியா நைக்ரா, கொலஸ்மா, முந்திய அறுவை சிகிச்சை தழும்புகள் இருக்கிறதா என்று பார்த்தல்

கருக்கொண்ட நிலையின் காலங்களை தெரிந்துக் கொள்ளுதல்

சில சமயங்களில் LSCS தழும்புகள், கர்ப்பப்பையின் சுருக்கத்தால் கருப்பை வெடிக்கும் நிலை ஏற்படும்

தொட்டு அறிதல்:

1. வயிற்றுப் பகுதியை மட்டும் திறந்து வைத்தல்

i) சிசுவின் உயர் நிலையை வாரத்தினால் தெரிந்து கொள்ளலாம்.

ii) உன்னுடைய இடது கையை வயிற்றின் மேல்புறபகுதியில் வைத்து சிசுவின் நிலையை அறிதல்

iii) தொப்புள் பகுதியையும் மற்றும் வ யிற் றின் மேல் ப கு தி யை யு ம் இரண்டாக பிரித்து, 2 சமபாகமாக அமைக்கப்பட்டு, தொப்புள் பகுதி மற்றும் வயிற்றின் மேல் பகுதியில் இரண்டு விரல்களை வைத்து பரிசோதித்தல்

சிசுவின் வளர்ச்சியை கண்டறிதல்

2. சிசுவின் உயரத்தை சென்டிமீட்டர் முறைப்படி அளத்தல்

* சிசுவின் மேல் விளிம்பு முனையை இடது கையை வைத்து அளவு செய்தல்

* அளவு நாடாவின் முறைப்படி சென்டிமீட்டர் அளவுகளை அதாவது மேல் விளிம்பான சிம்பசிஸ் பியூபிஸ்ஸின் நிலையை அளத்தல்

* வயிற்றின் சுற்றளவை அளத்தல் (20 வாரங்களுக்கு பிறகு)

* தழும்புகளை தொடுவதின் மூலம் வலிகளை கண்டறிதல்.

சிசுவின் வளர்ச்சி நிலை கர்ப்ப கால அளவுக்கு ஒத்து வருகிறதா என பரிசோதித்தல்

தழும்புகளில் ஏற்படும் மிகுந்த வலி கருப்பையின் வெடிப்பிற்கு முன் அறிகுறியாக இருக்கலாம், (முந்தைய குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்தால்)

 

3. கருப்பையின் மேல் விளிம்பை தொட்டு அறிதல்

|i) தொட்டு அறிவதற்கு விரலின் உட்புற மேற்பகுதியை பயன்படுத்துதல்

ii) கைகளின் உட்பகுதியில் மிதமாக அழுத்தத்தை கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

|ii) எப்போதும் தாயின் வலது புறம் தாயின் முகத்தை நோக்கி நிற்க வேண்டும்

(iv) இரண்டு கை விரல்களும் முனைகளில் தொட்டுக் கொள்ளும்படி கருப்பையின் மேல் விளிம்பில் அரைவட்ட வடிவில் வைக்க வேண்டும்.

முடிவுகள்

மென்மையான, பந்து போல் இல்லாத வயிற்றின் மேல்பகுதியில், சிசுவின் புட்டப்பகுதியை சுட்டிக் காட்டும். அதனால் நிலையானது - தலை முன் வருதல், கிடத்தல் நிலை - நீண்ட நிலை.

 

4. பக்க வாட்டில் தொட்டு உணர்தல்

1. இரண்டு உள்ளங்கைகளிலும், மாற்றி மாற்றி அழுத்தத்தை உபயோக்கிக்க வேண்டும், பரிசோதனை செய்யும் பக்கத்தை நோக்கி மறு கையை கொண்டு மெதுவாக சிசுவை தள்ள வேண்டும். அதே போல் மறுபுறம் பரிசோதனையின் போதும் செய்ய வேண்டும். இதன் மூலம் சிசுவின் முதுகு புறத்தைக் கண்டறியலாம்.,

பக்கவாட்டில் தொட்டு உணர்தல்

முடிவுகள்:

1. இடது முன்புறபின்ப குதி (left occipito anterior) வலது பக்கத்தின் சிறு முடிச்சுபோன்ற பகுதிகள் (like buds)) சிசுவின் கால்களை சுட்டிக்காட்டும்.

2. இடது பக்கம் ஒழுங்கான “C” வடிவத்தில் வளைந்த தொடர்ச்சி சிசுவின் பின்புற பகுதியை சுட்டிக்காட்டும்.

 

கூபகம் தொட்டு உணர்தல்

கிரிப் -1

1. நீங்கள் தாயின் கால்களை நோக்கி திரும்ப வேண்டும்.

2. தொப்புளின் கீழே அடிவயிற்றுப் பகுதியை கையை அகல விரித்து பற்றிக் கொள்ள வேண்டும்.

3. நன்கு விரிக்கப்பட்ட கையின் கட்டை விரல் தொப்புளுக்கு நேராக அமைய வேண்டும்.

4. விரல்களை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் ஆட்ட வேண்டும்.

முடிவுகள்:

கடினமான, ஒழுங்கான கட்டி போன்ற அமைப்பு தலை முன் இருப்பதை உணர்த்தும்.

இரண்டு பகுதிகளை உணரலாம். கை கால்கள் பகுதியில் (Sinciput)- ம் மற்றும் முதுகு பகுதியில் (Occiput)-ம் தென்படும் Sinciput, occiput - ஐ விட உயரத்தில் இருப்பதால் தலை முழுமையாக வளைந்து இருப்பதை உணர்த்தும்.

 

கிரிப் - II

1. தாயின் முகத்தை நோக்கி நிற்கவேண்டும்.

2. கைகைளை எடுக்காமலேயே வலது கை கட்டை விரல் மற்றும் விரல்களை தாயின் வலது புறத்தில் கொண்டு வரவேண்டும்.

3. வலது கையின் கட்டை விரல் மற்றும் விரல்களை குழந்தையின் தலையை நன்கு பற்றி கொள்ளும் படி செய்ய வேண்டும்.

4. இடது கையை கருப்பையின் மேல் விளிம்பிற்கு கொண்டு வரவேண்டும்.

முடிவுகள்:

நகர்ந்தால் தலை கூபகப் பகுதியில் பொருந்தவில்லை நகராமல் இருந்தால் தலை பொருந்திவிட்டது;

 

காதினால் கேட்டறியும் ஒலி:

* கால்கள் தளர்ந்த நிலையில் விரித்து வைக்க வேண்டும்.

* சிசு சோதினியை தொப்புள் பகுதி மற்றும் இலியாக் ! தண்டுவட பகுதிக்கு இடையில் வைத்து பார்த்தல்

* (FAR) சிசுவின் இதயத்துடிப்பின் அளவை பதிவு செய்தல்

* இடது பக்கம் ஒழுங்கான “C” வடிவத்தில் வளைந்த தொடர்ச்சி சிசுவின் பின்புற பகுதியை சுட்டிக்காட்டும்.

கால்கள் தளர்ந்த நிலையில் இருந்தால் சுவர் பகுதியிலும் தளர்ந்த நிலை ஏற்படும்.

பின் பராமரிப்பு

1. தாயை வசதியான நிலையில் படுக்க வைக்க வேண்டும்.

பதிவு:

1. குறிப்பேட்டில் முடிவுகளை பதிவு செய்ய வேண்டும்.

2. அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்க வேண்டும்.

தொகுப்பு:

1. கர்ப்ப காலத்தில் வயிற்றை தொட்டு உணர்வதின் மூலம் சிசுவின் நிலையை கண்டறியலாம்.

2. இதனுடைய நோக்கமானது, சிசுவின் நலத்தை மதிப்பிடுவதும் மற்றும் குறைப்பாடுகளை கண்டறிதலும் ஆகும்.

3. இந்த பரிசோதனை பார்வையிடுதல், தொட்டுணர்தல் மற்றும் காதினால் கேட்டறியும் ஒலி ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.89130434783
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top