பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சமுதாய நல செவிலியர் துறையின் அடிப்படை செயல் நடைமுறைகள்

சமுதாய நல செவிலியர் துறையின் அடிப்படை செயல் நடைமுறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உலக வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டில் திருப்பு முனை ஏற்பட்டு பல முன்னேற்ற ஏற்பாடுகளில் குறிப்பாக பிரான்க் (45/84) எட்வின் சாட்விக் (1800/1890) இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மக்களின் சுகாதார முன்னேற்றத்தை அரசிற்கு பரிந்துரை செய்தார். சுகாதார எழுச்சி என்னும் இயக்கம் இங்கிலாந்தில் 20 ஆம் நூற்றாண்டு தொடங்கப்பட்டது. உடல் நலத்தின் அடிப்படை தேவைகளான சுத்தமான குடிநீர் சுத்தமான சுற்றுச் சூழல் அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. சுகாதார எழுச்சி 20ம் நூற்றாண்டில் வெகு விரைவாக வளர்ச்சியடைந்தது. அதில் செவிலியர் பணி மிகவும் விரிவடைந்து தொற்று நோய்களை கட்டுபடுத்தியது. மருத்துவமும் செவிலியர் துறையும் ஒன்றோடொன்று இணைந்து சமூக அறிவியலாக சுகாதார பிரச்சனைகளை புரிந்து கொள்ள வழியாக அமைந்துள்ளது.

உலகளவில் உலக சுகாதார நிறுவனம் 1946 ஆம் ஆண்டு மருத்துவத்தையும் செவிலிய துறையையும் மிகவும் உறுதியடைய செய்தது. நோயாளியின் கவனிப்பும் மேலாக நோய்த் தடுப்பு முறைகளும் குறிப்பாக தனி மனிதன் மற்றும் சமூகம் உடல் நலம் ஒவ்வொரு மனிதன் அடிப்படை உரிமையை அங்கீகரிக்கப்பட்டது. சமூக நலம் நோய்த் தடுப்பு முறை சமூக மருத்துவம் மூன்றும் சேர்ந்து பொது சுகாதார நலம் என்று மாற்றியமைக்கப்பட்டு பொது நல சுகாதாரதுறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலக நல ஒருங்கிணைப்பு குழு அனைவருக்கும் உடல் நலம் என்ற கொள்கையை 2000ஆம் ஆண்டு அமுல்படுத்தியது. மேலும் சில குறிக்கோள்களையும் ஆரம்ப சுகாதார நல நிலையம் மூலமாக மக்களுக்கு அமுல்படுத்தியது. பொது நலம், தடுப்பு மருத்துவம், சமூக மருத்துவம் என்ற சொற்தொடர்கள் போதுமானவையாக இல்லாமையால் சமூக நலம் நோய் தடுப்பு மருத்துவத்தின் விரிவான நோக்கத்தை கருத்தில் கொண்டு சமுதாய நலம் என்ற சொற்றொடர் புகுத்தப்பட்டது. உலக பொது சுகாதார நிறுவனம் அனைவருக்கும் நலம் மற்றும் நலபராமரிப்பினை 2000க்குள் அடைய வழிமுறைகள் வகுத்தது.

சமூக நலத்தின் நோக்கமே செவிலியர் துறையின் பிறப்பிடமாக கருதி சமூக நல செவிலியர் துறையில் புகுத்தப்பட்டது. 1958ஆம் ஆண்டு அகில இந்திய செவிலிய குழுமம் சமூக மருத்துவத்தை செவிலிய படிப்பில் இணைத்தது. தற்பொழுதைய ஆரம்ப சுகாதார நல் நிறுவனம் அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை நிர்ணயம் செய்து செவிலிய துறை மூலமாக அனைத்து நாடுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. கிராம நல சுகாதார துறையின் மறு அமைப்பாக ஏற்று கொள்ளப்பட்டது. ஒவ்வொரு செவிலியரும் பொறுப்புணர்ந்து சமூக நல செவிலியர் துறையில் தனது பணி இடத்தில் பணியாற்ற வேண்டும்

இந்தியாவின் சுகாதார நலப் பிரச்சனை

ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தும் மக்கள் தொகை மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தும் சுகாதார பிரச்சனைகள் அமையும். இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. அதே போல் சுகாதார பிரச்சினையும் அதிக அளவில் உள்ளது.

இந்தியாவின் சுகாதார நல பிரச்சினைகள் கீழ் வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

 1. தொற்று நோய் பிரச்சினைகள்
 2. சத்துணவு குறைபாடுகள்
 3. சுற்று சூழல் சுகாதார கேடுகள்
 4. மருத்துவ சிகிச்சை முறை குறைபாடுகள்
 5. மக்கள் தொகை பெருக்கம்

தேசிய சுகாதார கொள்கை

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 1983 ல் தேசிய சுகாதாரக் கொள்கையை உருவாக்கியது. இதன்படி வருடம் 2000க்குள் தேசிய பொறுப்பான எல்லார்க்கும் நல வாழ்வு என்ற இலக்கை அடைவது இதன் குறிக்கோளாகும். இதற்கான சுகாதார உத்திகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது. அவையாவன சுகாதார கட்டமைப்பு சுகாதார மனித வள மேம்பாடு ஆராய்ச்சி மற்றும் சுகாதார முன்னேற்றம்.

சுகாதார கொள்கையின் பரவலான சிபாரிசுகளாவன

 1. ஒவ்வொரு 5000 பேர் கொண்ட கிராமத்திலும் ஒரு சுகாதார துணை மையம் நிறுவுதல் (பழங்குடியினர் மற்றும் மலைப்பகுதியில் 3000 பேருக்கு ஒன்று வீதம்) மேற்படி மையத்தில் ஓர் ஆண் மற்றும் பெண் சுகாதார பணியாளர் இருப்பர்.
 2. ஒவ்வொரு 30000 பேர் கொண்ட கிராம ஜனத் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் நிறுவுதல் (பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதியில் 20000 பேருக்கு ஒன்று என்ற விகிதம்).
 3. ஒரு இலட்சம் பேருக்கு ஒன்று வீதம் சமுதாய சுகாதார மையம் அமைத்தல்.
 4. 1000 பேர் கொண்ட ஒவ்வொரு கிராம் ஜனத் தொகைக்கும் சமுதாயத்தால் தெரிந்தெடுக்கப்பட்ட சுகாதார வழிகாட்டிகளுக்குப் பயிற்சியளித்தல் மற்றும் மரபு வழி வந்த செவிலியரை ஒவ்வொரு கிராமத்திலும் மகப்பேறு மருத்துவத்திற்கு உதவும் பணியாளர் பயிற்சியினை அளித்தல்.
 5. இது தவிர பல்வேறு வகையான பணியாளர்களை பயிற்றுவித்தல்

மேற்கண்ட திட்டங்கள் மூலமாக போதுமான கட்டமைப்புக்கு மருத்துவ, துணை மருத்துவ, மனித வள ஆற்றலுக்கும் வாய்ப்பு பெருகுவதுடன் அதன் வாயிலாக தேசிய சுகாதார கொள்கை செயல் திட்டத்தின் கூறப்பட்ட நாடு தழுவிய அடிப்படை சுகாதார வசதி என்னும் இலக்கை விரைவில் எட்ட வழிகோலுகிறது. 1985, 1990, 1995 மற்றும் 2000 ஆண்டுக்குள் அடையப்பட்ட வேண்டிய குறிப்பிட்ட இலக்குகள் தேசிய சுகாதார கொள்கை செயல்திட்டத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. இக்கொள்கை செயல் திட்டத்தின் முதன்மை நலபராமரிப்பினை இந்திய சுகாதார முறைமையில் மையமாகவும் முக்கிய பணியாகவும் ஆக்கியுள்ளது. 2000வது ஆண்டுக்குள் அனைவருக்கும் சுகாதாரம் என்னும் இலக்கை அடைவதே இந்திய தேசிய சுகாதாரத் திட்டத்தின் இலக்காகும். இதிலிருந்தே சுகாதாரத் துறையை நிர்வகிக்கும் காரணிகளில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டு அதன் வாயிலாக கொள்கை உருமாற்றம் பெற வழி வகுத்தால் புதியதாக தேசிய சுகாதாரக் கொள்கை செயல்திட்டம் 2002ல் உருவாக்கப்பட்டது.

சுகாதாரப்பணி நிறுவனங்கள்

சுகாதாரப்பணி நிறுவனங்கள் தேசிய அளவிலிலிருந்து தொலைதூர் கிராமபுறம் வரை பரவியுள்ளது. விரிவாக நான்கு நிலையிலான நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

 1. தேசிய
 2. மாநில
 3. மாவட்ட
 4. இருப்பிட அளவிலான மேற்குறிப்பிட்டவற்றின் பங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மத்தியில் இதன் நிர்வாகம் குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தினை உள்ளடக்கியது. இவை குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அமைச்சரின் தலைமையில் இயங்குகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இரண்டு முக்கியத்துறைகளாவன. சுகாதாரத்துறை குடும்பநலத்துறை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் செயலரே அனைத்திற்கும் பொறுப்பாவர். அவருக்கு உதவியாக குடும்ப நலத்றையின் சிறப்பு செயலர் செயல்படுவர். சுகாதார பணிகளின் டைரக்டர் ஜெனரல் என்பவர் மருத்துவ பராமரிப்பு மற்றும் பொது சுகாதாரம் சார்ந்த அனைத்திற்கும் அரசின் முதன்மை தொழில் நுட்ப ஆலோசகராக பணியாற்றுகிறார்.

கொள்கை செயல் திட்டத்தினை வகுத்தல், திட்டமிடுதல், வழிகாட்டுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் இவையாவும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் பொறுப்புகளாகும். அரசியலமைப்பு சட்டத்தின் 246 வது பிரிவு கூற்றின் 7 ஆவது அட்டவணையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை இரண்டு முக்கிய தலைப்பின் கீழ் உள்ளன.

மையப்பட்டியல்

மையப்பட்டியலில் குறிப்பிடப்பட்டள்ள 5 செயல்பாடுகள் கீழ்வருவன.

சர்வதேச நலத்திட்டம் மத்திய நலத்திட்டம் ஆராய்ச்சி மற்றும் போதை தடுப்பு திட்டம் ஜனத் தொகை கணக்கெடுத்தல் தொழிலாளர் நலத்திட்டம் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கினைப்பு) இணைப்புப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள பணிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பை சார்ந்தவையாகும் பரவக்கூடிய நோய்களை தடுத்தல் உணவு கலப்படத்தை தடுத்தல் மருந்து மற்றும் விஷ மருந்து கட்டுப்பாடு இன்றியமையாத புள்ளி விவரங்கள் தொழிலாளர் நலம் மற்றும் பொருளியல் சமூக திட்டமிடல்

மத்திய சுகாதார ஆலோசனை சபை

சுகாதாரம் பற்றிய மத்திய ஆலோசனை சபை 1952ல் பிறப்பிக்கப்பட்ட குடியரசு தலைவர் ஆனைபடி மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைந்து சுகாதார செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது.

இதே மாதிரியான ஆலோசனை சபை குடும்ப நலத்தை முன்னிட்டு நிறுவப் பட்டது. சமீப காலங்களில் இவ்விரு ஆலோசனை சபைகளும் கூட்டாக சேர்ந்து ஒருங்கிணைத்த முடிவுகளை எடுக்கின்றன. சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் சார்ந்த மத்திய ஆலோசனை சபை மத்திய அரசுக்கு மானிய உதவிகள் பற்றிய சிபாரிசுகளை செய்வதுடன் இவ்வுதவிகளை பெற்றமைக்கு நடைபெற்றுள்ள வேலையையும் கண்காணிக்கிறது

மாநில சுகாதார நிர்வாகம்

தற்பொழுது 28 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் தலைநகரான தில்லியும் இருந்து வருகின்றன. தத்தமது எல்லைக்குட்பட்ட வரையில் மாநிலங்களும் மக்களுக்கு வழங்கும் சுகாதார சேவைகளில் சுதந்திரமாக விளங்குகின்றன. இதன் பயனாக ஒவ்வொரு மாநிலமும் தனக்கே உரிய சுகாதார நிர்வாகத்தை உருவாக்கியுள்ளளன. ஒவ்வொரு மாநிலத்திலும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரும் மருத்துவ சேவைக்கென இயக்குநரகமும் உள்ளது.

மாநில சுகாதார அமைச்சகத்துக்கு ஒரு அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் உள்ளனர். சில மாநிலங்களில் சுகாதார அமைச்சர் வேறு சில பணிகளிலும் பொறுப்பேற்கிறார். இவை அனைத்தும் சுகாதார அமைச்சரின் கீழ் உள்ளது. இந்தியாவின் தலைமைச் செயலாளராக பதவி வகிக்கிறார்

நிர்வாகப்பணி

சுகாதார இயக்ககம் இயக்குநர் - சுகாதாரப்பணி, அவர்களின் தலைமையில் இணை இயக்குநர், துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள் இணைந்த குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இணை மற்றும் உதவி இயக்குநர்கள் இரண்டு வகையாக செயல்படுகிறார்கள்.

 1. பிரதேசம் சார்ந்து
 2. செயல்பாடுகள் சார்ந்து

பிரதேசம் சார்ந்த இயக்குநர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட அனைத்து நலத்துறைகளையும் ஆய்வு நடத்துவர்.

செயல்சார்ந்த இயக்குநர்கள் செவிலியம் குடும்பக் கட்டுப்பாடு காச நோய், தொழுநோய் மலேரியா எம்.சி.ஹெச். இவற்றில் ஆய்வு நடத்துவர். சமீபத்தில் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ கல்விக்கு என்று ஒரு இயக்குநரை நியமித்து செயல்படுகின்ற அளவு வளர்ச்சியடைந்துள்ளது.

மாவட்ட அமைப்பு

இந்திய மாவட்டங்கள் எல்லாம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது சில மாநிலங்களில் (உ.ம் மேற்கு வங்காளம்) ஒரே தலைமையின் கீழ் செயல்படுகிறது .

சில மாநிலங்களில் (உம் ஆந்திரா மத்திய பிரதேசம் ) இரண்டு மருத்துவ அதிகாரிகள், மாவட்ட மருத்துவ அதிகாரி மற்றும் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி ஆகிய மருத்துவர்களின் தலைமையின் கீழ் மக்கள் நலம் மற்றும் குடும்ப நலம் பாதுகாக்கப்படுகிறது

நகராண்மை கழகங்கள்

நகர்புறங்களில் கீழ்கண்ட வகையான சுயநிர்வாக ஸ்தாபனங்கள் இருக்கின்றன.

 1. நகர்புற குழு (5000 லிருந்து 10000 வரையான ஜனத்தொகைகுட்பட்ட பகுதிகளில்) நகராண்மை வாரியங்கள் (ஜனத்தொகை 10000 முதல் 2 லட்சம் வரை) மாநகராட்சிகள்
 2. (2 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனத்தொகை உள்ள இடங்களில்) மாநகராட்சியில் உள்ள சுகாதார ஸ்தாபனம் ஒரு சுகாதார அதிகாரி இணை மற்றும் துணை சுகாதார அதிகாரிகள் சுகாதார ஆய்வாளர் மற்றும் சம்பந்தபட்ட அலுவலர்கள் பலர் உதவியில் செயல்படுகிறது. இவர்கள் வழங்கும் சேவையில் பொது சுகாதாரம் தூய்மை தாய்சேய்நலம் உணவு மற்றும் அது சார்ந்த தூய்மை மற்றும் அத்தியாவசிய புள்ளி விவரங்கள் சேகரிப்பு நடைபெறுகிறது
 3. நகராண்மை வாரியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களால் நடத்தப் பெறுகின்றன. குறைவு பட்ட நிதி நிலைமை காரணமாக அவர்கள் அளிக்கும் சேவை சுற்றுபுறத் தூய்மை மற்றும் பொது சுகாதாரத்துடன் நின்று விடுகிறது.

பகிர்ந்தளிக்கப்பட்ட மாநில நிர்வாகம்

மாநிலத்தில் தற்பொழுது நிலவும் நிர்வாக கட்டமைப்பு 3 அடுக்கு சுய ஆட்சியைக் கொண்ட பஞ்சாயத்து ராஜ்யமாகும் இம்மூன்று அடுக்குகளாவன. கிராம நிலை கிராம சபை கிராம பஞ்சாயத்து நியாய பஞ்சாயத்து வட்டார நிலை பஞ்சாயத்து சமிதி மாவட்ட நிலை ஜில்லா பரிஷித் ஆகும்.

கிராம நிலை கிராம சபை

பஞ்சாயத்து ராஜ்யத்தில் கிராம சபை என்பதே அடிப்படை அலகு கிராமத்தில் உள்ள வயது வந்தவர்களின் கூட்டமே கிராம சபையாகும் சபையின் கூட்டம் வருடத்திற்கு இரு முறை நடைபெறுகிறது. கிராம பஞ்சாயத்து கிராம சபையின் நிர்வாக உறுப்பே கிராம பஞ்சாயத்து ஆகும். முக்கியா அல்லது சர்பக்தி எனப்படும் தலைவரைக் கொண்டு செயல்படும் இப்பஞ்சாயத்தில் 10 முதல் 30 உறுப்பினர்கள் இருப்பர். பஞ்சாயத்து உறுப்பினர்கள் கிராம சபையின் வயது வந்த அங்கத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகாலம் பதவி வகிப்பர்.

உள்நாட்டு தன்னிலை அரசு கிராமபுறங்களில் காணப்படுகிறது பஞ்சாயத்து அமைப்பு உள்நாட்டு நிர்வாகங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் சுகாதாரம் தெரு விளக்கு நோய் தடுப்பு முதியோர் கல்வி மகளிர் சபா இளைஞர் கிளப் இவை அனைத்தும் பஞ்சாயத்து செயலாளரின் கீழ் செயல்படும் நியாய பஞ்சாயத்து கிராம் சபாவின் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் இது 5 கிராம் பஞ்சாயத்தை கொண்டது.

நியாய பஞ்சாயத்து உள்நாட்டு சட்டம்

ஒழுங்கை கவனிக்கும் ரூ100 வரை தண்டனை வசூலிக்கும். கிராம் நிலை, கிராமத்தில் குடும்ப நலம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது

 1. நல உதவியாளர்கள்
 2. கிராம் மருத்துவரின் நல வாழ்வு வழிகாட்டிகள் நல வழிகாட்டிகள்

இந்தியாவில் 72.2% ஜனத்தொகை பின் தங்கிய இடங்களில் வசிக்கின்றன. நல உதவி அவர்களுக்கு கிடைப்பதில்லை நலத்திட்டங்களை நன்கு அறிந்தவர்களே கிராம மக்களுக்கு நோய் நொடிகள் வராமல் உதவி செய்ய முடியும். முற்காலத்தில் சமூக நல் பணியாளர் அல்லது வழிகாட்டி என்று அழைக்கப்பட்ட கிராம் நல வழிகாட்டிகளே இந்த வேலையை செய்வர் அக்டோபர் 2 1977-ல் கிராம் நலத்திட்டங்கள் துவங்கப்பட்டன. இதில் பணி செய்பவர்களுக்கு 3 மாதம் பயிற்சி கொடுக்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்களுக்கு நலத்திட்டங்களின் கொள்கைகளும் மருந்து நிறைந்த மருத்துவ பெட்டி (ரூ600) ஒரு வருடத்திற்கு கொடுக்கப்படும்

நல ஆய்வாளர்கள் (பெரும் பாலும் மகளிர்) மக்களிடம் நேரடியாக பேசுவர். ஒவ்வொரு ஆயிரம் மக்களுக்கும் ஒரு வழிகாட்டி இருப்பர் 1981 ல் குடும்ப நல பாதுகாப்பின் கீழ் 100% வேலை செய்தது. இப்பொழுது ஏப்ரல் 2002 முதல் நாடு முழுவதும் பரவியுள்ளது இப்பொழுது கிராம பஞ்சாயத்து முன்னேற்ற பாதையில் தன் பணியை தொடர்கிறது. இந்த சமிதி மாநில அரசின் ஏஜென்ட் ஆக வேலை செய்கிறது. மாநில அரசு செலவிற்கு பணம் கொடுக்கிறது. சுகாதார வழி நடத்துனர் தற்பொழுது சுமார் 3.23 லட்சம் கிராம் சுகாதார வழி நடத்துனர் பணியில் இருக்கின்றன ஒவ்வொரு சுகாதார வழி நடத்துனருக்கும் மாதம் ருபாய் 50 ஊதியமாக தரப்படுகிறது.

செயல்பாடுகள்

 • கிராம் சுகாதார வழி நடத்துனர் அம்மை குத்துதல் போன்ற செயல்களைச் செயல்வர். அவர்கள் எளிய சுகாதார கல்வி முறைகளை அறிவுறுத்துவர் கழிப்பிடம் கட்டுதல் குப்பை ஒழிப்பு குடி தண்ணீர் தொற்று நீக்கல் போன்றவற்றில் ஆலோசனை வழங்குவர் எங்கே எப்பொழுது தேவைப்படுமோ அப்பொழுது வழக்குகளை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு அனுப்பி வைப்பர்
 • அடிப்படை மருத்துவ பராமரிப்பு சேவைகளை அவர்கள் குழந்தை உயிர் மீட்புக்கும் தாய்சேய் நலதிட்டத்துக்கும் உயர் முக்கியத்துவம் கொடுத்து வழங்குவர் அவர்களுடைய பணியை சமுதாய சுகாதார செவிலியரும் சுகாதார துணை அலுவலரும் கண்காணிப்பர்
 • மதிப்பீடுகள் மூலம் சுகாதார வழிகாட்டிளின் திட்டம் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டும் வரவேற்கப்பட்டதின் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கு 2 சமூக கல்வி அமைப்பாளர்கள் பொது சுகாதாரம் குறித்த சார்புடைய மேற்பார்வையாளர்கள் 10 கிராம் நிலை பணியாளர் மற்றும் துணை அலுவலர் இதில் அடங்குவர்.

ஒருங்கிணைந்த கிராமப்புற முன்னேற்றம்

சமுதாய வளர்ச்சியை வலுப்படுத்தற்காக இந்திய அரசு 1977-78ல் ஒருங்கிணைந்த கிராமப்புற வளச்சியை கைக்கொண்டது ஒவ்வொரு தொகுப்புக்கும் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் நலிந்த பிரிவினரை இலக்காகக் கொண்டு நிறுவப்பட்ட இத்திட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் அடுத்த பத்தாண்டுகளில் இவர்கட்கு பூரண வேலைவாய்ப்பு அளிப்பதே திட்ட இலக்காகும் தொகுப்பு அளவு ஒவ்வொரு தொகுப்பிலும் 100 கிராமங்களும் 80000 கொண்ட ஜனத்தொகையும் ஒரு பஞ்சாயத்து சமிதியும் உள்ளது இந்த சமிதியில் அத் தொகுப்பில் உள்ள எல்லா கிராம பஞ்சாயத்துக்களின் தலைவர்களும் அடங்குவர்.

தொகுதியல் உள்ள மாநில சட்ட சபை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரதிநிதிகளும் அடங்குவர். தொகுப்பு மேம்பாட்டு அதிகாரி பஞ்சாயத்து சமிதியின் காரியதரிசியாக அலுவல் முறையில் செயல்படுவார். பஞ்சாயத்து சமிதி தொழில் நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதலையும் மேற்பார்வையும் கிராம பஞ்சாயத்துகளுக்கு செய்து காட்டுகிறது. மேம்பாட்டு திட்டங்களுக்காகும் செலவை கொடுக்கும் மாநில அரசின் பிரதிநிதியாகவும் சமிதி செயல்படுகிறது மாவட்ட அளவு மாவட்ட அளவில் ஜில்லா பரிஷத் முக்கியமானது ஜில்லா பரிஷத்தில் பணியாற்றுபவர்கள் பஞ்சாயத்து சமித், நாடாளுமன்ற மற்றும் நலத்திட்டம் என்பது பொது நலத் தேவைகளையும் பொது நலக் கட்டாயங்களையும் பொருத்தது.

நலவாழ்வு திட்டத்தின் குறிக்கோள் என்பது நலவாழ்வின் உச்ச கட்டத்தை அடைவதே நலவாழ்வு திட்டங்களின் பல்வேறு முனைகளிலும் பணிபுரியும் பொறுப்பில் இருப்பதால் செவிலியர்கள் நலவாழ்வு உச்ச கட்டத்தை அடைவதே நலவாழ்வு திட்டங்களின் நோக்கம் ஆகும். பல்வேறு முனைகளிலும் பணிபுரியும் பொறுப்பில் இருப்பதால் செவிலியர்கள் நலவாழ்வு திட்டத்தினை செயல்படுத்தும் பொறுப்பில் பெரும் பணியாற்றுகிறார்கள்.

திட்ட கமிஷன்

மார்ச் 1950 ல் இந்திய அரசு திட்ட குழுவை நியமித்து மக்களின் வாழ்க்கை தரத்தை வேகமாக முன்னேற்றும் பொருட்டு நாட்டின் எல்லா வளங்களையும் எல்லாருக்கும் தகுந்த படி பயன்படுத்தி அதனால் உற்பத்தியை பெருக்கி சமுதாயத்தின் சேவைக்கு எல்லாருக்கும் வாய்பளிக்கும் வகையில் வழி வகுத்தது. தேசிய வளர்ச்சிக்கு நலவாழ்வு என்பது ஒரு முக்கியமாக பங்காற்றும் காரணியாகும். எனவே திட்ட குழு அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுத்து அதற்கென தனிப்பிரிவை திட்ட குழுவில் அமைத்து நாட்டின் ஐந்தாண்டு திட்டங்களில் நலத்திட்டங்களில் செயல்படுவதற்கு வித்திட்டது. 1965ல் மத்திய சுகாதார நலவாழ்வுத் துறை அமைச்சகம் ஒரு திட்டமிடல் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஒரு மேம்பட்ட நல்லுறவை ஏற்படுத்த முயன்றது.

திட்டமிடலை முன்னிட்டு நல்வாழ்வு துறை கீழ்கண்ட துணை பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.

 • பரவகூடிய நோய்களை கட்டுபடுத்துதல்
 • மருத்துவ கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
 • மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவமனைகள்
 • மருத்துவ சிகிச்சை நிலையங்கள் மற்றும் ஆதார மருத்துவ மையங்கள்
 • பொது நலவாழ்வு சேவைகள்
 • குடும்ப நலம் மற்றும் உள்நாட்டு மருத்துவ முறை

நாட்டின் ஐந்தாண்டு திட்டங்களில் மேற்கண்ட துணைபிரிவுகள் அனைத்துக்குமே உரிய கவனிப்பு தரப்பட்டிருக்கிறது. இருப்பினும் முக்கியத்துவம் திட்டத்துக்கு திட்டம் மக்களின் தேவைகளுக்கேற்பவும் தொழில் நுட்ப காரணங்களுக்காவும் மாறியே வந்துள்ளது. நலவாழ்வு திட்டம் தேசிய மாநில மாவட்ட வட்டார மற்றும் கிராம நிலை என்றும் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடி மலைவாழ் மக்கள் இவர்களின் பிரதிநிதிகள் அடங்குவர். மாவட்ட ஆட்சியர் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதி ஆவார். ஜில்லா, பரிஷத் மேற்பார்வையிடும் மற்றும் ஒருங்கிணைக்கும் அங்கமாகும். இதன் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் மாநிலங்களில் வேறுபட்டு இருக்கிறது. குஜராத்தில் ஜில்லா பரிஷத்தின் கீழ் முதன்மை அதிகார மையங்கள் மாவட்ட சுகாதார அதிகாரிகயின் கீழ் இயங்குகிறது.

கிராமப்புற சுகாதாரப்பணிகள்

இந்திய அரசு 1977 ம் கிராமபுற சுகாதாரப்பணிகளை துவக்கியது. மக்கள் கையில் தான் மக்கள் நலம் இருக்கிறது என்ற கொள்கையை, வஸ்து கமிட்டி 1975 ல் துவங்கப்பட்டு வலியுறுத்தியது. இதன் முக்கிய பிரிந்துரை இருப்பிட அளவிலும் தேசிய அளவிலும் இணைக்கும் செயல்பாடுகளை பணியாற்றும் தன்னார்வு தொண்டர்களை ஏற்படுத்தி 1983 கமிட்டிபடி அனைவருக்கும் நலத்திட்டம் 2000 ஆண்டுக்குள் ஆகும். 10 வது ஐந்தாண்டு திட்டம் 2002 - 2007 வரை பல திட்டங்கள் அறிவித்துள்ளது. இந்த முன்னேற்ற திட்டத்தின் கீழ் குழந்தை பேறு நலம் பேறுகால நலம் குழந்தை நலம் ஐந்து வயதிற்கு கீழ் தேவையான சத்துணவு உடல் நலம் உடல் நல போதனை குடும்ப கட்டுபாடு ஆகியவை ஆகும்.

ஆரம்ப சுகாதார மையம்

சுகாதாரமான மகப்பேறு சிகிச்சை முறையில் இந்த ஆரம்ப சுகாதார மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் தடுப்பு நல்ல முன்னேற்றம் மற்றும் தீர்வான சிகிச்சைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குவதில் முழுமையான மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அதிகாரி ஆரம்ப சுகாதார மையத்தின் செயல்பாடுகளை ஆள்கிறார்.

இந்தியாவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள்

1952ல் ஆரம்பிக்கப்பட்ட ஒருங்கிணைத்த சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 60000 முதல் 80000 வரையில் உள்ள நலத்தொகை கொண்ட சமுதாய முன்னேற்றம் தொகுப்புக்கு 4 முதல் 6 படுக்கை வசதி கொண்ட ஆரம்ப சுகாதார மையங்களும் துணை மையங்களும் சமுதாய சுகாதார முன்னேற்றத்தின் கீழ் 1952 ஆம் ஆண்டு துவக்கப்பட்டன. அது முதல் சுமார் 5499 ஆரம்ப சுகாதார மையங்களும். 49300 துணை மையங்களும் 1980 ஆம் ஆண்டு வரை நிறுவப்பட்டுள்ளன.

ஆரம்ப சுகாதார மையம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. துணை மையங்கள் 10.000 மக்களின் நலத்தை காக்கிறது. ஆறாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆரம்ப சுகாதார மையங்கள் 32 முதல் 40 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. கிராம் புற பகுதிகளில் மகப்பேறு சுகாதார சேவைக்கு ஒரு சிறந்த கட்டமைப்பாக ஆரம்ப சுகாதார மையமும் துணை மையமும் விளங்குகின்றன.

ஆரம்ப சுகாதார மையத்தின் செயல்படுகள்

 • மருத்துவ பராமரிப்பு
 • தாய்சேய் நலம் மற்றும் குடும்ப நலம்
 • குழந்தை நலம்
 • சுற்றுப் புற துப்புரவு
 • பள்ளி சுகாதார சேவை
 • பரவும் நோய்களின் கட்டுப்படுத்தல்
 • புள்ளி விவரச் சேர்கை
 • சுகாதாரக் கல்வி செவிலியர் பணி இம்மையங்களில் கீழ்வருமாறு
 • தாய்க்குரிய சுகாதார சேவைகள்
 • பேறுக்கு முந்தைய பராமரிப்பு மகப்பேறு சிகிச்சை பேறுக்கு பிந்தைய பராமரிப்பு

குழந்தை சுகாதார சேவைகள்

 • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மையங்கள்
 • போதுமான சத்துணவு நோய்த்தடுப்பு (பாதுகாப்பு)
 • நலவாழ்வு கல்வி
 • குடும்ப நலம்

தேசிய திட்டம்

திட்டமிடுதல் என்பது சமீப காலத்திய கருத்து ஆகும். நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்திற்கு ஒரு சமூக மற்றும் பொருளாதார முழுமையையும் கொடுக்கும் பொருட்டு ஏற்பட்டதே தேசிய திட்டமிடுதல் ஆகும். நலவாழ்வு திட்டம் என்னும் நலம் பற்றிய புதிய சொற்றொடர் தேசிய திட்டமிடுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐந்தாண்டு திட்டங்கள்

வெவ்வேறு திட்ட காலங்களில் குடும்ப நல திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டது தொகை வரிசை கீழ்கண்ட அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது 2002 லிருந்து 2007 வரையிலான பத்தாவது 5 ஆண்டு திட்டம் வளர்ச்சி திட்டத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற பாதையை எடுத்து காட்டுகிறது. வளர்ச்சி திட்டத்தின் 8 மாதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாறுதல் தெரிகிறது அதாவது மருத்துவ சேவைகளை மட்டுமே விரிவுபடுத்தாமல் தனி மனித உடல் நலத்தை முன்னேற்றுவதில் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

10வது ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்கோள்கள் மக்கள் தொகை பெருக்கத்தை 2001 லிருந்து 2012 ஆம் ஆண்டுக்கள் 16.2 விகிதம் குறைத்தல். இறப்பு விகிதத்தை வருடம் 2007க்குள் 1000 உயிர் பிறப்புகளுக்கு 45 ஆகவும் வருடம் 2012க்குள் அதையே 28 ஆகவும் குறைதல் கருவுற்ற தாய் இறப்பு விகிதத்தை 1000 உயிர் பிறப்புகளுக்கு 2 என்பதாக வருடம் 2007க்குள்ளும் 2012க்குள் அதையே 1 ஆக குறைக்க வழி செய்தல்

சமூக நல சேவைகள்

சமூக நல சேவைகள் ஜனத்தொகையின் நலிந்த பிரிவினரை முன்நிறுத்தி செய்யப்பட்டது இதில் மகளிர் குழந்தைகள் ஊனமுற்றோர் முதியோர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் அடங்குவர்

நலத்துறை அமைச்சகம்

இந்திய அரசாங்கத்தின் நலத்துறை அமைச்சகம் இயலாதோர் நலம் சாதியினர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையோர் நலம் ஆகிய இன்ன பிற விஷயங்களை உள்ளடக்கியது. மகளிர் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்றம் அதற்கென ஏற்படுத்தப்பட்ட தனித்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இது மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

 1. இயலாதோர் நலம்: நாட்டில் உள்ள இயலாதோர் எண்ணிக்கை 120 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நல வாழ்வு துறை அமைச்சகம் பார்வையற்றோர் காது கேளாதோர் முடக்கு வாதத்துக்குட்பட்டோர் மனநலம் குன்றியோர் மற்றும் தொழு நோய் கண்டு குணமடைந்த நோயாளிகள் ஆகியோரின் நோய் நிலைப் பற்றி ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தல் அதற்குரிய சிகிச்சை கல்வி புணர் வாழ்வு சம்பந்தமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 2. சமூக பாதுகாப்பு: சமூக கட்டமைப்பு மற்றும் குடும்ப கட்டமைப்பு சிதைவதால் இளங்குற்றவாளிகள் போதை பழக்கம் மற்றும் இன்ன பிற தீய குற்றங்கள் பரவுகின்றது. இதைத் தடுக்கும் முகமாக சமூக பாதுகாப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு குறிப்பிட்ட சட்ட வரம்புக்குள் நடைமுறைபடுத்தப்படுகின்றது.
 3. மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு : மனித வள ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தில் உள்ள மேற்கண்ட துறையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. (i) சத்துணவு மற்றும் குழந்தைகள் மேம்பாடு (ii) மகளிர் நலம் மற்றும் மேம்பாடு மத்திய சமூக நலத் துறை வாரியமும் பொதுக் கூட்டுறவுக்கான தேசிய கழகமும் அணைந்து பணிகளை கவனிக்கின்றன.
 4. மத்திய சமூக நலத்துறை வாரியம்: 1953ல் இவ்வாரியம் அமைக்கப்பட்டது சமூக நல ஸ்தாபனங்களின் தேவைகளையும் அத்தியாவசியங்களையும் இவ்வாரியம் கணக்கெடுக்கிறது.

வாரியத்தில் முன்மொழியப்படும் எல்லா நலத்திட்டங்களும் மகிளா மண்டல் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது மேற்கண்ட நிறுவனங்கள். அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளில் 75% அளவிற்கு மானியம் பெறுகின்றன அவர்களின் செயல்பாடுகளில் சில:

சத்துணவு திட்டங்கள்

இது 0-6 வரையிலான வயதில் உள்ள குழந்தைகளுக்கு உணவு புகட்டுதல். குழந்தை பராமரிப்பு மற்றும் கருவுற்ற மகளிர் நலம்.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம்

ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் குழந்தைகள் நலத் திட்டங்களே உயர் முன்னுரிமை பெற்றது இத்துறையில் முக்கியமானது. 0-6 வரையிலான குழந்தைகளுக்கு உணவூட்டம் பராமரிப்பு மற்றும் கருவுற்ற மகளிர் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒருகிணைந்த குழந்தைகள் மேம்பாடு திட்டம். இதன்படி ஒட்டு மொத்த சேவையாக கீழ்கண்டவைகள் வழங்கப்பட்டன.

அதாவது. துணை சத்துணவு திட்டம். தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு முறை, நல சிகிச்சை சிறப்பு கவனிப்பு சேவைகள் சத்துணவு, நலக் கல்வி மற்றும் முறை சாரா முன் பள்ளி கல்வி ஆகியவை.

தற்பொழுது நாட்டில் 4131 ஐ.சி.டி.எஸ். திட்டங்கள் தெரிவு செய்யப்பட்ட மையங்களில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஐ.சி.டி.எஸ். திட்டத்திற்கும் ஒரு குழந்தைக்குரிய அடிப்படை தேவைகள் வழங்கப்படு வதற் கு ரிய இடம் சி அங்கன்வாடியே.

மற்ற நடவடிக்கைகள்

உழைக்கும் மகளிர்க்கான தங்கும் விடுதிகள் பராமரிப்பு இல்லங்கள் உடல் ஊன முற்றோருக்கான சேவைகள் முதியோருக்கான நல சேவைகள் மற்றும் சமூகப் பொருளாதார திட்டங்கள் போன்ற எண்ணற்ற மற்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.

முக்கிய ஸ்தாபனங்களாவன

 • இந்திய செஞ்சிலுவை சங்கம்
 • பாரத் சேவிக சமாஜம்
 • கஸ்தூரி பாய் நினைவு நிதி
 • லயன்ஸ் கிளப்
 • வாமகிருஷ்ணா மிஷின்
 • இந்து குஷ்ட நல சங்கம்
 • இந்திய காசநோய் கழகம்
 • குழந்தை நலத்திற்கான இந்திய கவுன்சில்
 • இந்திய குடும்ப நலத்திற்கான இந்திய கவுன்சில்
 • அகில இந்திய மகளிர் சங்கம்
 • அகில இந்திய பார்வையற்றோர் நிவாரண சங்கம்

சிறப்பு சமுதாய நல சேவைகள்

தொழிலாளர் சிகிட்சை

ஆரோக்கியமான மக்களின் பராமரிப்பு, தொழில் முறை நல சேவையின் முக்கிய பணியாகும். இது ஒரு ஆஸ்பத்திரி சூழலில் நோயுற்றவரைப் பராமரிப்பதைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது.

நோய் பின்னணியில் அல்லது குணப்படுத்தக் கூடிய சிகிச்சை செய்து பழக்கப்பட்ட மருந்து வரும் செவிலியரும் தொழில் முறை பின்னனியில் செயல்படுவது ஆரோக்கியமான குழுக்களில் பணிபுரிவதற்கு பழக்கப்பட்டாலொழிய சற்று கடினமாகும்

தொழில் சார்ந்த நல சேவையின் முக்கிய நோக்கமே பணியில் இருக்கும் மக்களை ஆரோக்கியமாக இருக்கவும் அவர்கள் நோய் வாய்படுவதினின்றும் தடுத்தலேயாகும் நோயுறுதலை தடுத்தலும் ஆரோக்கிய முன்னேற்றமுமே முழுமையான அடிப்படை தொழில் சார்ந்த நல சேவையின் அடிப்படை பணிகள் தொழில் சார்ந்த நலசேவையின் அடிப்படை பணிகளைப் பற்றி இக்கட்டத்தில் கருதுதல் பயனுடையதாக அமையும்.

தொழில் சார்ந்த இடர்பாடுகள் அடையாளம் காணுதல்

 • மேற்கண்ட இடர்பாடுகளை கட்டுபடுத்துவது பற்றி ஆலோசனை வழங்குதல்
 • தொழில் சார்ந்த நல சேவையில் வழக்கமான மருத்துவ சிகிச்சையை உள்ளார்ந்து செயல்படுத்துதல் தேவையற்றது. (திடீரென்று ஏற்படும் நோய் பாதிப்பு மற்றும் காயங்களுக்கு செய்யும் ஆரம்ப சிகிச்சையை தவிர்த்து)
 • தொழில் சார்ந்த நோய்களை ஆரம்ப காலத்திலேயே நன்குணர்தல் மற்றும் தேவையானால் பாதிக்கப்பட கூடிய குழுக்களை கூர்ந்து சோதனையிடல்
 • மக்களை தகுந்த பணியிடத்துக்கு தேர்வு செய்வது குறித்து ஆலோசனை வழங்குதல்
 • உடல் நலத்தை பாதிக்கக்கூடிய பொதுவான மற்றும் உணவு சுகாதாரம் பற்றிய பொதுவான ஆலோசனையும் பணியிடத்தில் இறக்க கூடிய நிலை பற்றியும் மேற்பாங்கான அறிவுரை வழங்குதல்
 • நல்வாழ்வு பற்றி கல்வி மேற்கொள்ளல்

மேற்கண்ட பட்டியலிருந்து பெருவாரியான பணிகள் தடுப்பு முகமாகவே இருக்க காணலாம்

தொழில் சார்ந்த நல சேவைகளில் செவிலியரின் பணி (Community Health Services)

 • செவிலியர் மேற் கூறப்பட்ட வரையறைகளுக்குப் பட்டு. தடுப்பு முகமாக பணிகளில் வேண்டும். அவர்களுடைய பணி கீழ்க்கண்ட வகையில் இருக்கும்.
 • அலுவலர்களை சோதிக்கும் போது மருத்துவருக்குத் துணையாக இருப்பர்.
 • தொழிலாளர்களின் உடல் மற்றும் மன நலத்தைக் காப்பதில் உண்மையான ஆர்வத்துடன் ஈடுபடுவர்.
 • தினந்தோறும் செய்யப்படவேண்டிய சிகிச்சைகளை கவனிப்பதுடன் தேவைப்படும் பொழுது மருத்துவருக்கும் உதவுவார்.
 • முதல் உதவி பற்றி நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
 • தொழிலாளர்கட்கிடையே நேரடிக் கூடிய உடல்நல பாதிப்பை பற்றி அடையாளம் காணவும் அதன் தீவிரத்தை மதிப்பிடவும் அது குறித்து நிர்வாகத்துக்கத் தெரியப்படுத்தவும் அறிந்திருக்க வேண்டும். நோய்தடுப்பு சிகிச்சை மையமோ. பேறுக்கு முந்தைய சிகிச்சை மையமோ அல்லது பள்ளிநலமையமோ நடத்தும் திறமை இருக்க வேண்டும்.
 • எல்லா விதமான சூழ்நிலையிலும் நலவாழ்வு பற்றிய கல்வி நடத்த வேண்டியிருக்கும். வீடுதோறும் சென்று உடல் நலம் மற்றும் குடும்பநல வாழ்வு பற்றிய கருத்துக்கள் பரப்பலாம். அவர்களுடைய பணி நோக்கம் தீவிர நோய்த்தடுப்பு முகமாகவே இருத்தல் வேண்டும்.
 • தாதியர்க்கு 500 முதல் 2000 நோயாளிகள் வரை கவனிக்கப்பட வேண்டியிருக்கும்.
 • அவ்வப்பொழுது புத்தாக்கப்பயிற்சியும் பணியிடையிலேயே அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

தொற்று நோய்களாலான பிரச்சினைகள்

பரவக்கூடிய நோய்கள் இந்தியாவைப் பொறுத்த மட்டில் தொடர்ந்து பெரும்பான்மையாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இவை பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டுவிட்டது. இந்தியாவில் நேரும் இறப்புகளில் 54% பரவும் நோய்களால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மலேரியா நோய்

 • 1950 வரையிலும் மலேரியா தான் இந்தியாவின் சுகாதாரக் கோட்டுக்கான பெரும் பிரச்சினையாக கருதப்பட்டது. 1953ல் செய்யப்ட்ட மதிப்பீட்டின் படி வருடத்துக்கு 71/2 கோடி பேர் மலேரியாவினால் பாதிக்கப்படுவதாகவும் சுமார் 8 லட்சம் இறந்து விடுவதாகவும் காணப்பட்டது.
 • 1953வும் முடுக்கிவிடப்பட்ட தேசீய மலேரியா கட்டுப்பாட்டு மற்றும் ஒழிப்புத் திட்டத்தின் வாயிலாக மலேரியா கட்டுப்பாட்டு மற்றும் ஒழிப்புத் திட்டத்தின் மலேரியா மலேரியாவிற்கு சாவுமணி அடிக்கப்பட்டது.
 • 1971க்குள் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்தை அடங்கியதுடன் இறப்பு எண்ணிக்கையும் எதுவும் இல்லை. ஒழிக்கப்பட்டுவிட்டதென கருதப்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கியது 1976ல் லட்சம் பேர் மலோரியாவால் பாதிக்கப்பட்டு 59 பேர் உயிரும் துறந்தனர் (7.42.247 பால்கல்) 1977 முதல் இந்திய அரசு மேம்பட்ட திட்டம் ஒன்றை புகுத்தி நிலைமையைத் தக்கவாறு சமாளித்தது நோய் கட்டுக்குள் அடங்குமாறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1984க்குள் மலோயா பாதிப்பின் எண்ணிக்கை 21 லட்சத்துக்குள் கொணரப்பட்டது. அதன்பிறகு கொள்ளை நோய் பரவுதல் போன்ற நிலையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை.
 • ஒரு சமச்சீர் நிலையடைந்து விட்ட தோற்றத்தை உருவாக்கியதுடன் கவலைக்குரிய வகையில் 2001ம் வருட இறுதிக்குள் 2.05 (10 லட்சம் பாலகயபாரம்) பாதிப்புக்களும் 1015 இறப்புக்களும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசநோய்

 • இந்தியாவின் பரவும் நோய்களில் காசநோய் முதன்மை வகிக்கிறது. ஆயிரத்தில் 4 பேருக்கு நுண்ணுயிர் மூலம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சம் 1.4 கோடி பேர் நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35 லட்சம் பேர் தொண்டை நோயால் பாதிக்கப்பட்டவர்
 • காசநோயால் ஏற்படும் இறப்பு வருடத்திற்கு 5லட்சம் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 20 லிருந்து 25 லட்சம் நுரையீரல் காசநோய் பாதிப்புகளும் இதனுடன் சேர்க்கிறது.

பேதியால் ஏற்படும் வியாதிகள்

 • பேதியால் ஏற்படும் வியாதிகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தாக்குவதே நோய்த்தாக்கத்திற்கும் இறப்பிற்கும் பெரும் காரணமாகும். இவைகளால் மட்டுமே வருடத்திற்கு 627 லட்சம் பேர் இறக்கின்றனர்.
 • வறுமையான சுற்றுச்சுழலால் பேதி வியாதிகள் (காலரர் உட்பட) தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. தற்போது பரவியிருக்கும் காலரா. முந்தைய காலங்களில் இருந்ததைக் காலங்களில் இருந்ததைக் காட்டிலும் கடுமை குறைவானது.

கடும் மூச்சுத்திணறல் தொற்று

 • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நோய்த் தாக்கத்திற்கும் இறப்புக்கும் காரணமான நோய்கள் பெரும்பங்கு வகிப்பது. இக்கடும் மூச்சுத் திணறல் தொற்று ஆகும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோய்களில் 3.6 ம் குழந்தைகள் பிரிவில் ஏற்படும் மரணவிகத்தில் 13 இந்நோயின் தாக்கத்தால் ஏற்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது.
 • தொழுநோய்
 • இந்நோய் இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 55.9 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக சுமையில் 64 ஆகும் இந்த பகுதியில் பதிவு செய்ய நோய்த் தாக்குதலில் 87 ஆகும் தற்பொழுது 10,000 பேருக்கு 3.73 என்ற விகிதத்தில் இந்நோய் விரவியிருப்பதாகக் கூறப்படுகிறது.
 • இதில் 18.5% 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் குறிக்கிறது. பல் நுண்ணுயிர் சம்மந்தப்பட்ட பாதிப்பு மொத்த பாதிப்பில் 33.9 விழுக்காடு. மொத்த நோய் தாகத்தில் ஊனமுற்றோர் சதவிகிதம் ஏறக்குறைய உள்ளது. தற்பொழுது நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் இலவச MDT சேவை அளிக்கப்படுகிறது.

பைலேரியா - யானைக்கால் நோய்

பைலேரியா இந்தியாவின் மற்றொரு பரவும் நோய் பிரச்னையாகும் நாடு முழுதும் பரவியிருந்தாலும் மத்திய பிரதேசத்தின் கிழக்கு கரையோரப் பகுதியிலும் உத்தரபிரதேசத்திலும் இந்தியாவின் மற்றொரு பரவும் நோய் பிரச்னையாகும். நாடு முழுதும் பரவியிருந்தாலும் மத்திய பிரதேசத்தின் கிழக்கு கரையோரப் பகுதியிலும் உத்தரபிரதேசத்திலும் இந்நோய் கடுமையாக அடர்ந்திருக்கிறது. சுமார் 45 கோடி மக்கள் இழை ஒட்டுண்ணி தாக்கத்தின் கீழ் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாட்டில் இரண்டு விதமான ஒட்டுண்ணி தொற்று இருக்கின்றது.

யானைக்கால் நோய் பரவலாக காணப்படுகிறது. இந்நோய்த்தாக்கம் கேரளா. அஸாம். ஒரிஸ்ஸா மத்தியப் பிரதேசம் சட்டீஸ்கள் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலேயே காணப்படுகிறது.

பாலுறவு நோய்கள்

சிபிலிஸ் நோய் மற்றும் வெட்டை நோய் தான் பெரும் பிரச்சினையாக உள்ளவை. பாதிக்கப்பட்ட தொகையின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.

ஆட்கொல்லி நோய்

ஒவ்வொரு வருடமும் ஆட்கொல்லி நோயின் பிரச்சனை அளவில் பெரிதாக வடிவெடுக்கிறது. ஜீலை 1986ல் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து 1999 வரை பாதிக்கப்பட்ட மொத்த நபர் எண்ணிக்கை 8220 ஆகி உள்ளது. ஏறக்குறைய 873 ஆயிரம் எண்ணிக்கையில் இந்நோய்த்தாக்கம் இருந்து வருகிறது.

மற்றவை

குடல் காய்ச்சல் புழு ஒட்டுண்ணி மொய்ப்பு அதி நுண்ணுயீர் ஈரல் அழற்சி கருங்காய்ச்சல் முலை உறையழற்சி ஜப்பானிய முளையழற்சி முதலானவை வேறு சில முக்கிய பரவும் நோய்களில் சிலவாகும். இதன் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் பெரும்பாலான மேற்கண்ட நோய்களை குறைந்த பட்ச ஆற்றல் திறனை கொண்டே தடுக்கவோ அல்லது கிகிச்சை அளிக்க முடியும் என்பதே.

மலேரியா நோய்

1994ல் மீண்டும் கிளம்பிய மலேரியா நோய் இந்திய அரசை மலேரியா பிரச்சனை பற்றிய தீவிர ஆய்வுக்காக ஒரு நிபுணர் கமிட்டியை நிறுவும் கட்டாயத்துக்குள்ளாக்கியது. மலேரியாவின் பல்தரப்பட்ட கூறுகளை அடையாளம் கண்டு தெளிந்த ஆலோசனை வழங்கவும் இது நிறுவப்பட்டது. இவ்வாறு மலோரியா நடவடிக்கைத் திட்டம் உருவாகி செயல்பட்டு வருகிறது.

இம்மலேரியா நடவடிக்கைத் திட்டத்தின் நோக்கங்களாவன

 • தீவிர மற்றும் கடினமான மலேரியா பாதிப்புகளை கையாளுதல்
 • கடும் தாக்கம் உள்ள பிரிவுகளில் இறப்பு விகிதத்தை தடுத்தல்.
 • நோய்த் தாக்கம் விகிதத்தைக் குறைத்தல்.
 • கொள்ளை நோயினை கட்டுப்படுத்தல்.
 • பால்சிபாரம் வகை மலேரியா நோயினை தடுத்தல்.
 • மலேரியா நிகழ்வு கட்டுப்பாடு மற்றும் எதிர்ப்பை உருவாக்குதல்.
 • மலேரியா நிகழ்வுகளை குறைந்த மட்டத்தில் வைத்திருத்தல்.

சமீபத்தில் நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் கிளம்பிய மலோரியா நோய் திட்டத்தின் நல மேம்பாட்டுப் பகுதியை பலப்படுத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜன் மாதத்தை (பருவழைக்கு முந்தைய) மலேரியா எதிர்ப்பு மாதமாக அனுசரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பைலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம்

இத்திட்டம் 1955ல் ஆரம்பிக்கப்பட்டது. துவக்கத்தில் 22 இழை ஒட்டுண்ணி ஆய்வுக் கூடங்கள் மற்றும் 18 கட்டுப்பாட்டு கூடங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் யானைத்தோல்நோய் பற்றிலும் அதன் வீச்சு பற்றியும் அறிய முகமாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாய்வுகளின் விளைவாக சுமார் 41.2 கோடி மக்கள் யானைத்தோல் நோய் பரவியிருக்கும். இடங்களில் வாழ்வதாக காணப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய செயல்பாடுகளாவன

 • கொசு எதிர்ப்பு மற்றும் முட்டைப்புழு எதிர்ப்பு நடவடிக்கைகளை நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளுதல் பைலேரியா மையங்களை நிறுவி அதை கண்டுபிடிக்கவும் நுண்ணிய ஒட்டுண்ணிய பாதிப்பு சிகிச்சை செய்தல்
 • கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களிலும் ஊர்களிலும் நிலத்தடி கழிவு நீர் வடிகால் அமைத்தல்.

சாதனைகள்

1978 லிருந்து செயல்பாட்டுக்குழு நகர்ப்புற மலேரியா திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஆராய்ச்சி மற்றும் பிற நடவடிக்கைகள் டெல்லியில் உள்ள நிர்வாக மையம் தேசிய பரவும் நோய்க் கட்டுப்பாட்டு கடிகத்துடனே இருந்து வருகிறது. தற்பொழுது நாட்டில் 206 ஃபைலேரியா மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஃபைலேரியா மையங்கள்

மேலும் 12 தலைமைப்புற மையங்களும் 3 பிராந்திய பைலேரியா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் நாட்டில் செயல்பட்டு வருகின்றன. எட்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் ஆரம்ப சுகாதாரமையங்கள் மூலம் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் கிராமப்புற பகுதிகளுக்கு யானை நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டது.தொடர்ந்த ஆராய்ச்சியின் விளைவாக இப்பொழுது கீழ்க்கண்ட உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது ஆண்டுக் கொரு முறை கொடுக்கப்படும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் ஆன மருந்து சிகிச்சை கணிசமான அளவிற்கு நோய் கடத்தலைக் குறைத்து உள்ளது. இதன்படி தேசிய பைலேரியா ஒழிப்புத்திட்டத்தின் தலைமையகம் ஒரு முன்னோடி திட்டத்தை உருவாக்கி இந்த உத்தியைச் செயல்படுத்தியது. இதனால் ஆந்திரா. பீஹார் கேரளா ஒரிஸ்ஸா தமிழ் நாடு உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்கள் 5 வருட காலத்திற்கு கண்காணிக்கப்படுவர்.

தமிழ் நாட்டில் இது துவக்க ஏற்பாடாக தென் ஆற்காடு வள்ளலார் மாவட்டத்தில் 1996ல் ஆரம்பிக்கப்பட்டது. கேரளா ஒரிஸ்ஸா உத்திரபிரதேசம் மற்றும் மே வங்காளத்தில் 1997ல் துவக்கப்பட்டது. இந்த உத்திக்கு சமுதாயத்தில் நல்ல வரவேற்பு இருக்கறது. இதன் செயல் முறை வழிகள் தமிழகத்திலும் கேரளாவிலும் வீடு வீடாகச் சென்ற மருந்து சோப்பிப்பதாகவும் மற்ற மாநிலங்களில் பெட்டிக் கடை அளிக்கப்படும் சிகிச்சை தினத்தை ஃபைலேரிய நாள் என்றழைக்கப்படுகிறது. தேசிய காசநோய் கட்டுபாடு திட்டம் மத்திய அரசால் பராமரிக்கப்படும் திட்டம் ஆகும். இதன் செயல் பாடுகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.

 • ஆரம்பநிலையே கண்டுபிடித்து வீட்டிலேயே காசநோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளித்தல்.
 • பச்சிளங்குழந்தை மற்றும் சிறார்களுக்கு பி.ஸி.ஐ. தடுப்பூசி செலுத்துதல்.
 • அறுவை சிகிச்சையும் அவசர சிகிச்சையும் தேவைப்படுவோர்க்கு தனிமைப்படுத்தும் வசதிகள்
 • பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம்

புணர்வாழ்வு ஆராய்ச்சி

மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் 1962 ல் சமுதாயத்தில் காசநோய் கட்டுபடுத்தும் புது முயற்சியாக உருவாக்கப்பட்டது. காசநோய் பாதிப்புகள் மாவட்ட சுகாதார மையம் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தல், தொண்டைச்சளி பாதிப்புடையவர்களை வீட்டில் இருந்து சிகிச்சை செய்தல் மற்றும் 20 வயதுக்குட்ப்பட்ட அனைவர்க்கும் பி.ஸி.ஜி தடுப்பூசி போடச் செய்தல் முதலியன மாவட்ட காசநோய் கட்டுப்பாடுத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். அரசின் 20 அம் சத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத்திட்டம் தனி முக்கியத்துவம் பெற்றதுடன் அடிப்படை செயல்பாடுகளும் பலவாக விரிவடைந்து.

292 மாவட்டங்களில் குறுகிய கால வேதியில் மருத்துவ சிகிச்சை துவக்கப்பட்டு மேலும் சில மாவட்டங்களில் படிப்படியாகத் துவக்கப்ட்டு வருகிறது. திருத்திய தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத்திட்டம் 1993 முதல் 23.5 லட்சம் மக்களை கவருவதாக முன்னோடி திட்டமாகத் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் மேலும் 17 விடங்களில் உள்ள 138.5 லட்சம் மக்கள் அரவணைப்பதாக விரிந்தது. தற்பொழுது அதன் முன்றாம் கட்டத்தில் 45 கோடி மக்கள் பயனடைவர். இந்த உத்தியின் நோக்ககமானது மூன்று வகைப்பட்டது.

 • குறைந்த பட்சம் 85 பாதிப்புக்கள் சீர்செய்வது.
 • தரமான தொண்டைச் சளி நுண்நோக்கி பரிசோதனை முலம் 75 பாதிப்புக்களை கண்டுபிடித்தல்.
 • அரசு சாரா நிறுவனங்களை இத்திட்ட தகவல் கல்வியறிவு மற்றும் தொடர்பு சாதானம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் புறமருத்துவமனை சுகாதார அலுவலர்கள் DOTS சிகிச்சையை கொடுக்கின்றனர்.

இதில் தன்னார்வ தொண்டர்களும் (ஆசிரியர் அங்கன் வாடி பணியாளர் முன்னாள் பிணியாளர் சமுக சேவகர் போன்றோர்) சேருகின்றனர். இவர்கள் பிரதிநிதி எனப்படுகின்றனர்.

வாய்வழி நீரேற்றும் சிகிச்சை

குழந்தைகள் இறப்பு விகித உயர்வுக்கு முக்கிய காரணம் பேதியாகும். 1986/87ல் ஆரம்பிக்கப்பட்ட வாய்வழி நீரேற்றும் சிகிச்சை ஆர்.சி.ஹெச்த் திட்டம் மூலம் நிறைவேற்றப் படுகிறது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வாய்வழி நீரேற்றும் சிகிச்சைக்குரிய பைகளை வழங்குவதை நிர்வகிக்கிறது. நாடெங்கிலும் உள்ள துணை மையங்களுக்கு ஆண்டுக்கு இருமுறை 150 பாக்கெட் மருந்து அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பட்டு வதுகிறது. பேதியைக் கட்டுக்குள் வைக்க மருந்துகளை அறிவுபூர்வமாக பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு போதுமான சத்துணவும் சம்பந்தப்பட்ட தாய்மார்களுக்கத் தகுந்த குழந்தைபேறுதலில் அலோசனையும் இத்திட்டத்தின் முக்கிய இரு அம்சங்களாகும்.

கடும் மூச்சுத்திணறல் நோய்க்கட்டுப்பாடு

 • கடும் முச்சுத்திணறலே சிறந்த வகையில் தரமாக நிர்வகிப்பதும் நுரையீரல் அழற்சி வீக்கம் காரணமாக ஏற்படும் இறப்பைத் தவிர்ப்பதும் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். புறமருத்துவமனை நல சேவையாளர்க்கு நுரையீரல் அழற்சினை கண்டு பிடிக்கவும் அதற்கு சிகிச்சை செய்யவும் பயிற்றுவிக்கப்படுகிறது. மருத்துவத் திட்டத்தின் முலம் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
 • வைட்டமின் குறைபாட்டைத் தவிர்த்துக் கட்டுப்படுத்தும் முயற்சி மூலம் பெருவாரியான மாற்றம் தெரியவந்துள்ளது. இதன்படி 3 வயதுக்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ 5 முறை கொடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக 1 லட்சம் குழந்தையின் 9 மாதத்தில் மணல்வாயி அம்மைத் தடுப்பூசியுடன் போடப்படுகிறது.
 • இரண்டாம் கட்டமாக 2 லட்சம் ஊக்குவிக்கப்பட்ட மருந்து வாய்வழி கொடுக்கும் இளம்பிள்ளை வாததடுப்பூசியுடன் போடப்படுகிறது அடுத்த மூன்று கட்ட மருந்துகளும் (தடவைக்கு 2 லட்சம் வீதம் 6 மாத இடைவெளியில் போடப்படுகின்றன.

தேசிய தொழு நோய் ஒழிப்புத் திட்டம்

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தொழுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து பண்முக மருத்துவ சிகிச்சை முலம் வீட்டிலேயே சரிபடுத்தி நோயைக் கட்டுக்குள் (பரவாமல்) வைத்திருந்தால் இரு சம்பந்தமாக இரண்டு விதமான மையங்கள் நாட்டில் செயல்படுகின்றன.

 1. தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு மையம்
 2. ஆய்வு கல்வியறிவு மற்றும் சிகிச்சை மையம்

நிரந்தரமாக நோயால் பீடிக்கப்பட்ட இடங்களில் தொழுநோய் கட்டுப்பாடு மையங்களும் பிறவிடங்களில் ஆய்வு மையங்களும் நிறுவப்படுகின்றன. ஆய்வு மையங்கள் ஆதார சுகாதாரமையத்துடன் இணைக்கப்படுகின்றன. ஒரு தொழுநோய் கட்டுபாட்டு மையம் சுமார் 4 லட்சம் மக்களை கவனிக்கிறது. இதன் தலைமையில் ஒரு மருத்துவ அதிகாரியும் அவர் 20 மருத்துவ உதவியாளர்களும் 20,000 பேருக்கு மருத்துவ உதவியாளர் வீதம் 10 பேருக்கு இருவர் வீதம் மருத்துவத்தை மேற்பார்வையாளும் பணி புரிகின்றனர்.

ஆய்வுமையம் 25.000 பேருக்கு ஒன்று என்ற வீதத்தில் ஒரு மருத்துவ உதவியாளர் தலைமையில் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரியின் வழிகாட்டியில் இம்மையம் செயல்படுகிறது. நடமாடும் தொழுநோய் சிகிச்சை மையம் வாடிக்கையில்லாத வட்டாரங்களில் உள்ள தொழு நோயளிகளுக்கு சேவை புரிகிறது. ஒவ்வொரு நடமாடும் தொழுநோய் சிகிச்சை மையத்திலும் ஒரு மருத்துவ அதிகாரி ஒரு மருத்துவரல்லாத அதிகாரி ஒரு மருத்துவரல்லாத மேற்பார்வையாளர் 2 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோர் உள்ளனர்.

தற்பொழுது உள்ள கட்டமைப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது. தொழுநோய் கட்டுப்பாட்டு மையம் / திருத்தப்பட்ட தொழுநோய் கட்டுப்பாட்டு மையம், நகர்ப்புற தொழுநோய் மையம், ஆய்வு மையம், தற்காலிக மருத்துவப்பிரிவு புனர்நிர்மான சிகிச்சைப்பிரிவு, மாதிரி ஆய்வு மற்றும் மதிப்பீடு மையம், நடமாடும் தொழுநோய் சிகிச்சை மையம். 1997ல் இந்திய அரசு மாற்றியமைக்கப்பட்ட தொழுநோய் ஒழிப்பு பிரசாரத்தை எல்லா மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் புகுத்தியது. மே 1995 வரையில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இப்பிரசாதத்தை மேற்கொண்டுள்ளன.

இந்த பிரசாதத்தில் தொழுநோய் பற்றிய ஒரு சிறு அறிவுறுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மருத்துவ அதிகாரிகள் நலப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உள்ளடங்குவர் மேலும் தொழு நோய் பற்றிய பொது விழிப்புணர்வு வீடு வீடாகச் சென்று (ஆறுநாட்கள்) தொழுநோய் பாதிப்பைக் கண்டறிவர்.

தேசிய ஆட்கொல்லி நோய் கட்டுப்பாட்டுத் திட்டம்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் இந்தியாவில் 1987ல் துவக்கப்பட்டது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தேசீய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தை ஒரு தனிப் பிரிவாக நிறுவி திட்டத்தின் பல்வேறு அம்சங்களையும் கூர்ந்து கண்காணிக்குமாறு செய்துள்ளது. திட்டத்தின் நோக்கமாவது மேன்மேலும் கடத்தலை தடுப்பதும் ஆல் நேரும் நோய்த் தாக்கம் மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைப்பதும் சமூகப் பொருளாதார தாக்கத்தை மட்டுப்படுத்துவதும் ஆகும்.

இந்த தேசிய யுகத்தியில் கீழ்க்கண்ட அம்சங்கள் உள்ளன.

 • நாடு தழுவிய மையங்களை நிறுவி கண்காணித்தல்
 • உயர்ந்த பட்ச தாக்கம் அடையக்கூடிய குழக்களை அடையாளம் கண்டுபிடித்தல்.
 • கண்டுபிடிக்கப்பட்ட பாதிப்புகளுக்கு குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை காட்டி அதை நிர்வாகிக்கவும்
 • இரத்த வங்கி இரத்த சம்பந்தமான தயாரிப்பாளர் இரத்த தானம் செய்வோர் மற்றும் மாற்று ஏற்படு செய்வோர்க்கு வழிகாட்டு நெறிமுறைகளை அமைத்தல்.
 • தகவல் கல்வியறிவு மற்றும் தொடர்பு நடவடிக்கைகள் முதலியவற்றில் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் முதலியவற்றில் மக்கள் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயின் தாக்கம் தனிநபர் தனிநபர் அளவிலும் சமுக அளவிலும் குறைதற்கு வற்ற ஆராய்ச்சி செய்தல்.
 • பாலிவினை நோய்கள் பரவுதல் கட்டுப்படுத்துதல் மற்றும் பாலுறுப்பு உறை பயன்பாடு.

இரத்த பாதுகாப்புத் திட்டம்

நாட்டில் தேசிய மற்றும் மாநில யூனியன் பிரதேச அளவிலான இரத்தம் மற்றும் கவுன்சில் நிறுவப்பட்டுள்ளன. முதல் தொழில் ரீதியாக இரத்த தானம் செய்வது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற இரத்த வங்கிகளே செயல்படி அனுபதிக்கப்படுகின்றன. தன்னார்வ இரத்த தானாக ஊக்குவிக்கப்படுகிறது. இரத்தம் மற்றும் அது சம்பந்தமான பொருட்களை சேமிப்பது மற்றும் வழங்குவதில் பாதுகாப்பை உறுதி செய்யு முகமாக கடைபிடிக்கப்படுகிறது. பிராந்திய இரத்தப் பரிசோதனை நிலையங்கள் நிறுவப்பட்டு இவை பொது தனியார் மற்றும் தன்னார்வத்துறையில் செயல்பட்டு வரும் மற்ற இரத்த வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய இரத்த பாதுகாப்புக் கொள்கை படி இரத்தத்தின் ஒவ்வொரு அலகும் பரிசோனைக்குட்படுத்துபடுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஹெப்படைடிஸ் மலேரியா மற்றும் கிரந்தி நோய் தொற்று கண்டுபிடிக்க இந்த சோதனை இந்த சோதனை அவசியம்.

நாடுமுழுவதிலும் 1233 இரத்த வங்கிகள் இரத்தம் வழங்கவதற்கு உரிமம் பெற்றுள்ளன. 815 இரத்த வங்கிகள் நவீனப் படுத்தப்பட்டு போதுமான உபகரண வசதிகளும் தகுந்த மனித வள ஆற்றவும் கூட்டப்பட்டுள்ளன. இரத்தத்தின் கூறுகளைப் பிரித்தாயும் மையங்களும் (40) நிறுவப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான மற்றும் பரிசோதனை கொண்ட சிறு இரத்த வங்கிகளைத் தவிர 154 பிராந்திய இரத்த சோதனைக் கூடங்களும் பார்வைக் கூடங்களும் நாட்டில் இயங்கி வருகின்றன. சோதனை உபகரணப் பை மாவட்ட அளவிலான இரத்த வங்கிகளுக்க வழங்கப்படுகிறது.

பால்வினை நோய் தடுப்பு முறை

 • எச்.ஐ.வி எய்ட்சுடன் இணைந்தது பழக்க வழக்கங்களினால் நோய் பரவும் முறை பால்வினை நோய்க்கும் எச்.ஐ.வி பால்வினை நோய் உள்ளவர்க்கு எளிதில் பரவும். தற்போது ஆரம்ப காலத்தில் பால்வினை நோயைக் கண்டறிந்து மருத்துவம் செய்வது எச்.ஐ.வி நோயைக் கட்டுபடுத்துதலின் முக்கிய நோக்கமாகும்.
 • பால்வினை நோய் தடுப்பு முறை 1946 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது பால்வினை நோய் தடுப்பு முறை அந்தந்த துறையில் சிறப்பு அனுபவம் பெற்ற கிளினிக்கல் பணியில் வியாதியைக் கண்டுபிடித்து மருத்துவம் அளிக்கும் அதை நம்பி மருத்துவம் பெரும் நோயாளியைக் பொருத்து அமைந்தது. பால்வினை நோயாளிக்கு சிறப்பு அறிவுரை தனி மனிதன் கலந்தாய்வு முறை கையாளப்பட்டது.
 • பால்வினை நோயைக் கட்டுபடுத்த வசதிகள் 5 மண்டல பால்வினை நோய் உதவி மையம் அமைக்கப்பட்டது. தோல் வியாதி தொழுநோய் பால்வினை நோயாளர் பகுதி 504 மருத்துவ கல்லூரிகளில் அமைக்கப்பட்டது

ஆணுறை முறை

எச்.ஐ.வி நோய்க்கு வழிமுறைகள் பல ஹெட்டிரோ செக்ஸ்சுவல் முக்கிய வழி 75% நோய் கிருமி வருவது பாதுகாக்கப்படாத பல மல்டி பார்ட்னர் செக்ஸ்சுவல் காண்டாக்ட் இந்த நோய் பரவும் முறையை பாதுகாப்பான ஆணுறையால் தடுக்கலாம். ஆணுறை உபயோகிக்கும் முறையை உலகம் முழுவதும் திட்டமிடப்பட்டது. மக்களுக்கு இது ஒரு குடும்பகட்டுபாடு முறை மற்றும் எச்.ஐ.வி பால்வினை நோயை பாதுகாக்கும் முறை

கமர்ஷியல் செக்ஸ் வொர்க்கர்ஸ் அவர்களையும் அவரை சார்ந்தவர்களுக்கும் முக்கியமாக ஆணுறை தடுப்பு உறை நோயை தடுக்க உபயோகப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. குறைந்த விலையில் நல்ல தரமான ஆணுறைகளை அனைத்து இடங்களிலும் கிடைக்க செய்தல் மூன்று முக்கிய இடங்களாக என்.ஏ.சி.ஓ தரமான ஆணுறை அதை உபயோகிக்க என்.ஜி.ஓஸ் தனியார் துறையினர் என் ஏ சி ஒ தனியார் துறையினரால் அதன் தரத்தின் அளவீட்டை உலக நல அமைப்பு இயக்கப்பட்டது. நிரோத் தயாரிப்பாளர்கள் ஆணுறை முறையே கைப்பற்றினர்.

எச்.ஐ.வி குறியீட்டு அளவு

1985ல் ஐ.சி.எம்.ஆர் நோய் வருவதற்கு ஏதுவான அனைவரின் இரத்தத்தையும் பரிசோதித்தது. அது உலக நுண்ணுயிர் கிருமி மையமான பூனே மருத்துவ கல்லூரி வேலூர் இரண்டு இடங்களும் இந்தியாவில் எச்.ஐ.வி குறியீடு செய்தனர். எச்.ஐ.வி முதல் நோயாளி 1986 ஆண்டு சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டது 62 குறியீடு மையங்கள் 9 தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு நோய் கண்டுபிடிப்பு எச்.ஐ.வி பரவும் முறையை திட்டமிடப்பட்டது.

1993 ஆம் ஆண்டு சென்டினல் குறியீடு ஆரம்பிக்கபட்டு நோய் கண்டுபிடிப்பை முக்கிய குறிக்கோளாக கொண்டது. ஆரம்பத்தில் 26 மாநிலத்தில் 55 சென்டினல் மையம் ஆரம்பிக்கபட்டது. அடுத்தபடியாக 1997 ல் 115 கூடுதல் சென்டினல் இடங்கள் ஆரம்பிக்கப்பட்டு நோய் அளவீடு பிப்ரவரி மார்ச் 1998 செய்யப்பட்டது. இரண்டாவது முறை செப்டம்பர் அக்டோபர் 1998 ல் செய்யப்பட்டது. முக்கிய சென்டினல் அளவீடு முக்கியமாக நோய்கிருமி பரவுவதையும் நோய் வர ஏதுவான மக்களையும் இரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

எச்.ஐ.வி பரிசோதனை முறை பெயர் குறிப்பிடாமல் பரிசோதிக்கப்பட்டது. உதாரணமாக வி.டி.ஆர்.எல் பரிசோதனை இதன் மூலம் நோய் உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது 180 சென்டினல் இடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 • தகவல் முறை
 • கல்வி அறிவுரை முறை
 • தகவல் தொடர்பு முறை
 • சமுதாய அசைவு

அதன் முக்கிய நோக்கம் எச்.ஐ.வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இந்த நடைமுறையில் தவறான தகவல்களும் அறியாமையும் நல்ல தரமான தகவல் தொடர்பு மூலம் மக்களுக்கு அறிவுரை சொல்லப்பட்டது. தகவல் தொடர்பு முறையில் மாஸ் மீடியா சமுதாய அசைவு முறை நோய் வர ஏதுவாக உள்ளோர் நடைமுறைகளைப் பற்றி என்.ஜி.ஓஸ் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆதாரம் : தேசிய சுகாதார நிறுவனம் – சுகாதார செவிலியர் கையேடு

2.96875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top