பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறிய காயங்களுக்கு கட்டுப்போடுதல்

சிறிய காயங்களுக்கு கட்டுப்போடுதல் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

வரையறை

காயம் என்பது தோலில் ஏற்படும் பிளவு அல்லது விரிசலாகும். பஞ்சு உருண்டைகள் அல்லது சல்லாத்துணிகளைக் கொண்டு காயங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

கட்டுகளின் வகைகள்

கட்டுத்துணிகள் மற்றும் கட்டுப்போடுவதைப் பொறுத்து கட்டுகள் பல வகைப்படும். அவைகள் போடுவதற்கு சுலபமாகவும், நோயாளிக்கு வசதியை கொடுப்பதாகவும் மற்றும் காயங்கள் விரைவில் குணமடைவதற்காகவும் போடப்படுகிறது.

சல்லாத்துணி கட்டு (Gauze dressing)

இது பொதுவாக பயன்படுத்தப்படக்கூடியது. இது பல வகையான தன்மையிலும் வடிவங்களிலும் கிடைக்கும். (எ.டு) சதுரம், செவ்வகம்.

மருந்தூட்டப்படாத கட்டுகள் (Non Antiseptic dressing)

இவைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்ட, மருந்தூட்டப்படாத கட்டுகள். புதியதாக காயம் ஏற்பட்ட இடத்தில் தொற்றை தடுப்பதற்காக இது பயன்படுத்தப்படும்.

மருந்தூட்டப்பட்ட கட்டுகள் (Antiseptic dressing)

இவை ஏற்கனவே தொற்று உள்ள காயங்களுக்கு தொற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.

ஈரக்கட்டுகள் (Wet dressing)

இவை தொற்று உள்ள காயங்களில் இருந்து வரும் கசிவை மென்மையாக்க, கழிவுகளை வெளியேற்ற மற்றும் காயங்களில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும். இதனால் திசுக்களுக்கு வெப்பத்தை அளிக்க பயன்படும். உலர் வெப்பத்தைவிட ஈரவெப்பம் விரைவில் ஊடுருவும். எனவே தொற்று உள்ள இடங்களில் ஈரவெப்பம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.

காயத்தின் கழிவு மற்றும் அழுகும் பொருட்களை சல்லாத்துணியில் உறிஞ்சுவதற்காக காயத்தின் மேல் போடப்படும் சல்லாத்துணி ஈரமாக்கப்பட வேண்டும். மேலும் உலர்நிலையில் வைக்க இரண்டாவது படலமாக உறிஞ்சக்கூடிய கட்டுத்துணியை போடவேண்டும். இந்த முறையில் கட்டு போடப்படுவதால் தொற்று மற்றும் அழுகிய காயங்களை விரைவில் சுத்தமாக்கலாம்.

அழுத்த கட்டுகள் (Pressure dressings) :

காயத்திலிருந்து இரத்தக்கசிவு இருப்பதாக தெரிந்தால் அல்லது காயத்திலிருந்து கசிவு ஏற்படுவதாக இருந்தால் அழுத்தக்கட்டு போடப்படலாம். சல்லாத்துணியால் ஆக்கப்பட்ட பஞ்சுதிண்டுகள் அல்லது செல்லுலோஸ் கட்டுத்துணியில் பரப்பப்படுதலாகும். எல்ட்டோபிளாஸ்ட் அல்லது பைண்டர் போன்றவை அழுத்தக்கட்டுகளாகும்.

ஒட்டாத்தன்மையுள்ள சல்லாத்துணி கட்டு (Non-aherent gauze dressing)

TELFA போன்றவை சுத்தமாக காயங்களை மூட பயன்படும். இவை மினுமினுப்பாகவும், தோலின் மேற்பரப்பில் அல்லது திறந்த காயத்தில் ஒட்டாது. ஆனால் கசிவுகளை மேல் உள்ள சல்லாத்துணியின் மூலம் வெளியேற்றும்.

தன்னிச்சையாக ஒட்டிக்கொள்ளக்கூடிய மெல்லிய கட்டுகள்

இது தற்காலிகமாக இரண்டாவது தோலாக செயல்படும். இது தோலின் மேற்பரப்பில் உள்ள சிறிய காயங்களிலும், இறந்த செல்களை நீக்குதல், தேவைப்படாத காயங்களுக்கும் இது தகுந்தது.

நோக்கங்கள்

* காயங்கள், நோய்க்கிருமிகள் மூலம் தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாக்க.

* இரத்தம் ஒழுகுதலை நிறுத்த உதவுகிறது.

* கசிவுகளை உறிஞ்சி காயங்களை விரைவில் குணமாக்க.

* காயத்தின் பகுதிக்கும் சிம்புகள் (Splint) க்கும் ஆதாரம் அளிக்கிறது

* நோயாளி காயத்தை பார்ப்பதை தடுக்கிறது

* காயம்பட்ட பகுதிக்கு வெப்பத்தை அளிக்கிறது.

* அதிக ஈரப்பதத்தை காயம் மற்றும் கட்டுகளுக்கு இடையில் நிலைநிறுத்துகிறது.

* மனம் மற்றும் உடல்நலம் காக்கிறது.

தேவையான பொருட்கள்

நோக்கங்கள்

நுண்ணுயிரச் செய்யப்பட்ட தட்டில் தமனி இடுக்கி 1

பிரிக்கும் இடுக்கிகள் 2

காயத்தை சுத்தம் செய்ய

கத்தரிக்கோல் 1

சைனஸ் இடுக்கி 1

திசுக்கள் சிதைந்து போயிருந்தால் அவைகளை அகற்றுவதற்கும் கசிவுக் குழாயை சுற்றிலும் சல்லாத்துணியை கத்தரித்து வைப்பதற்காகவும்.

நுழைப்பான் (Probe) 1

சைனஸ் பாதையை திறப்பதற்கு அல்லது சைனஸ் பாதையை அடைப்பதற்கு.

சேப்டி பின் 1

சுத்தம் செய்வதற்கு கரைசலை எடுக்க drain மிகவும் சிறியதாக இருந்தால் அதைப் பொருத்துவதற்கு.

கையுறை, முகமூடி, ஆடை

பெரிய காயங்களுக்கு கட்டுப்போட வேண்டும் என்றால் பயன்படுத்தலாம்.

பஞ்சு உருண்டைகள், சல்லாத்துணி, பஞ்சு திண்டுகள்

சிலிட் (அ) கட்டுகட்டும் டவல்

சுத்தம் செய்து காயத்தை கட்டுவதற்கு காயத்தை சுற்றிலும் தூய்மையான பரப்பை உருவாக்க.

நுண்ணுயிரறச் செய்யப்படாத தட்டில்

.1. தேவைப்பட்டால் சுத்தம் செய்ய கரைசல்

காயத்தையும் அதன் சுற்றுப்பரப்பையும் சுத்தம் செய்ய,

2. மருத்துவ களிம்புபடி அல்லது தூள்.

காயத்தில் போட

3. நுண்ணுயிரறச் செய்யப்பட்ட பாத்திரத்தில் வாசலின் சல்லாத்துணி

கட்டு தோலின் மேல் ஒட்டிக்கொள்வதை தடுக்க.

4. நுண்ணுயிரறச் செய்யப்பட்ட காலத்தில் ரிப்பன் சல்லாத்துணி

சைனஸ் பாதையை அடைக்க அல்லது ஊடுருவிச் செல்லும் காயத்தை அடைக்க.

5. நுண்ணுயிரறச் செய்யப்பட்ட கலத்தில் பஞ்சு சுற்றிய குச்சிகள்

தேவைப்பட்டால் மருந்து போட

6. தொற்று நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலில் சீட்டில் இடுக்கி

நுண்ணுயிரறச் செய்யப்பட்ட பொருட்களை கையாள

7. கட்டுத்துணிகள், பைண்டர்கள், பின், ஒட்டும் பிளாஸ்திரி மற்றும் கத்தரிக் கோல்

கட்டை அதற்குரிய இடத்தில் நிலைநிறுத்த

8. ஒரு பெரிய கிண்ணத்தில் தொற்று நீக்க கரைசல்

பயன்படுத்திய கருவிகளைப் போட

9. கழிவுத்தட்டு மற்றும் பேப்பர் பை.

கழிவுகளை சேகரிக்க

10. இரப்பர் விரிப்பு மற்றும் டவல்

படுக்கை துணியை பாதுகாக்க

செயல்முறையின் படிகள்

காரணம் / விளக்கம்

முகமூடியை கட்டிக்கொள்

காயம் சளித்துகள்களால் தொற்று அடைவதை தடுக்க.

கைகளை நன்றாகக் கழுவு. உடை மற்றும் கையுறையை அணி

குறுக்குத் தொற்று தடுப்பதற்காக. நுண்ணுயிரறச் செய்யப்பட்ட தன்மையை நிச்சயப்படுத்த.

சுத்தமான தட்டை திறந்து நுண்ணுயிரறச் செய்யப்பட்ட காயத்தை சுற்றி வை.

காயத்தை. சுற்றிலும் நுண்ணுயிரறச் செய்யப்பட்ட பரப்பை உருவாக்க.

சாதாரண இடுக்கியை எடுத்து கட்டுத் துணிகளை பிரித்து அதை பேப்பர் பையில் போடவும். இடுக்கியை கரைசல் உள்ள கிண்ணத்தில் போடவும்.

தொற்று அடைந்த கட்டுகளால் கை தொற்று அடைவதை தடுக்க.

வகை மற்றும் எவ்வளவு drainage கசிவுகள் உள்ளன என்பதை குறிப்பிடு. உதவியாளரை சிறிது சுத்தம் செய்யும் கரைசலை கிண்ணத்தில் ஊற்றச்சொல்.

செவிலியரின் கைகள் பாட்டிலின் வெளிப்புறத்தை தொடுவதால் மாசு அடைவதை தடுக்க.

காயத்தை நடுவிலிருந்து ஓரத்தை நோக்கி துடை. ஒரு முறைதுடைத்தவுடன் பஞ்சை வெளியே போடவும்.

சுத்தம் செய்யப்படுவது சுத்தம் அதிகம் உள்ள பரப்பிலிருந்து சுத்தம் குறைந்த பரப்பை நோக்கி செய்ய வேண்டும். காயம் தொற்று நீக்கம் அடைந் திருந்தால் காயத்தின் கோடு சுற்றுப்பகுதியை விட சுத்தமானதாக கருத வேண்டும்.

உலர்ந்த பஞ்சுகளைக் கொண்டு நன்றாக சுத்தம் செய்யும் போது முன்னெச்சரிக்கை களை கையாள வேண்டும். இடுக்கியை கிண்ணத்தில் உள்ள கரைசலில் போட வேண்டும்.

முடிந்த அளவுக்கு காயத்தை உலர்ந்த தன்மையில் வைக்க வேண்டும்.

மருத்துவ ஆணையில் இருந்தால் மருந்தை போடவேண்டும்

நேரிடையாக காயத்தின் மேல் களிம்புகளை போடுவது கடினம். எனவே சிறிது களிம்பை அல்லது துணியில் வைத்த பிறகு நேரிடையாக காயத்தின்மேல் போடு.

நுண்ணுயிரறச் செய்யப்பட்ட முறையில் கட்டுகட்ட  வேண்டும் . முதலில் சல்லாத்துணியை வை. பிறகு காட்டன் திண்டுகளைக் கழிவுக்குழாய் இருக்கும் இடத்தில் நன்றாக கட்டுப்போடு.

நேரிடை பஞ்சை காயத்தின்மேல் வைத்தால், காயத்தின் கசிவு உலரும்போது அது காயத்துடன் ஒட்டிக்கொள்ளும்.

கையுறையை கழற்றி கரைசல் உள்ள கிண்ணத்தில் போடு.

திரும்ப நன்றாக கட்டுப்போடுவதால், காயத்தில் இருந்து வரும் கசிவுகள் படுக்கையில் படாதவாறு பாதுகாக்கப்படும்.

கட்டை, கட்டுத்துணி அல்லது பிளாஸ்திரி மூலம் ஒட்டிவை.

கட்டுகட்டும் போது கையுறைகள் அதிக அளவில் தொற்றுக்குள்ளாக்கப்படும்.

நோயாளியின் பின் கவனிப்பு

• நோயாளிக்கு சரியாக ஆடையை உடுத்தி வசதியான முறையில் படுக்கையில் இருக்கச் செய். கசிவுகளால் படுக்கை ஈரமானால் அதை உடனே மாற்று.

• படுக்கை துணிகளை மாற்று.

• இரப்பர் விரிப்பு மற்றும் டவலை நீக்கிவிடு.

* எல்லாப் பொருட்களையும் பயன்படுத்தும் அறைக்கு எடுத்துச் செல். தொற்றுக்கு உட்பட்ட கட்டுகளை மூடிய கலத்தில் போட்டு எரிசூளைக்கு அனுப்பு. கருவிகளையும் மற்ற பொருட்களையும் தொற்று நீக்க கரைசலில் இருந்து எடுத்து நன்றாக சுத்தம் செய். அவைகளை உலர்த்தி, தட்டில் வைத்து கட்டு. நுண்ணுயிரச் செய்யப்படுவதற்காக உயர்அழுத்த நீராவிக் கலவைக்கு அனுப்பு. எல்லாப் பொருட்களையும் அதற்குரிய இடத்தில் திரும்பவை. பழுதடைய படுக்கை துணிகளை சலவைப்பையில் போட்டு கலவைக்கு அனுப்பு.

• கைகளை கழுவிக்கொள்

• செய்முறையை செவிலியர் பதிவேட்டில் தேதி மற்றும் நேரத்துடன் பதிவுசெய். காயத்தின் நிலை, வகை, drainage கசிவுகள் அளவு மற்றும் தையல்களின் நிலை போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய். ஏதாவது அசாதாரணங்கள் கண்டுபிடிக்கப் பட்டால் அறுவை சிகிச்சை நிபுணருக்கு உடனே தெரியப்படுத்து.

• நோயாளியின் படுக்கையருகே திரும்பச் சென்று நோயாளியின் நிலையை மதிப்பீடு. காயப்பராமரிப்பில் ஏதாவது முக்கியமாக அறிவுறுத்தப்பட வேண்டியிருந்தால் அதை நோயாளிக்கு கூறு.

• நோயாளியையும், சுற்றுப்பகுதியையும் சுத்தமாக வைத்திருக்கவும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.97727272727
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top