பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர் சுத்திகரிப்பு

சுற்றுப்புறத் தூய்மை, நீரின் பயன்பாடுகள் மற்றும் அதன் சுத்திகரிப்பு பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

முன்னுரை

மனிதர்கள் வாழும் சுற்றுப்புறசூழலைப் பொறுத்து அவர்கள் உடல்நலம் அமைகிறது. ஒரு நலமான மக்கள் தொகை ஒரு நல்ல சுற்றுப்புறசூழலை பொறுத்தது. மோசமான சுற்றுப்புறசூழல் 25% நோய்களுக்கு காரணமாகிறது. மோசமான சுற்றுசூழல் பிரச்சனைகள் வளர்ந்த மற்றும் வளருகின்ற நாடுகளில் சுவாசக் கோளாறு மற்றும் மற்ற நோய்களால் நூறு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரியல் அல்லது வேதியல் காரணிகள் உள்ளேயும், வெளியேயும் காரணங்களாக அமைகின்றன. 100 மில்லியன் மக்கள் தேவையற்ற சூழலில் வேதியல் மற்றும் இயற்பியல் தீமைகளால் வீட்டிலும், வேலை இடங்களிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

சுற்றுப்புற சுகாதாரம் என்பது

உலக சுகாதார நிறுவனத்தின்படி, சுற்றுப்புற சுகாதரம் என்பது, ஒரு மனிதனின் உடல் வளர்ச்சி, உடல் நலம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றைப் பாதிக்கக்கூடிய சுற்றுப்புற காரணிகளை கட்டுப்படுத்துவதாகும்.

சுற்றுப்புறசூழலின் இயல்பு பகுதிகள்

சுற்றுப்புற சூழிலின் முக்கியத்துவம்

1. நலவாழ்வை அதிகரிக்கும் சூழ்நிலையையும் நோயைத் தடுக்கும் சூழ்நிலையையும் உண்டாக்குவதாகும்.

2. தூய்மையான காற்று

3. உணவு பாதுகாப்பு

4. கதிரியக்க பாதுகாப்பு

5. உலர் குப்பைகளை அகற்றுதல்

6. குப்பைகளை அகற்றுவதால் ஏற்படும் இடர்பாடுகள் (Hazardous waste Management)

7. தூய்மையான நீர்

8. இரைச்சல் கட்டுப்பாடு (Noise Control)

9. தரமான வீடுகள்

10. பூச்சிகள் கட்டுப்பாடு (Vector Control)

முக்கியப் பகுதிகள்

1) நீர்

2) காற்று

3) கழிவுப் பொருட்கள் அகற்றப்படல்

4) சரியான வீட்டு வசதிகள்

5 சத்தம் (Noise)

6) வெளிச்சம்

7) பூச்சிகள் (Arthropods)

இவற்றில் நீரின் பயன்பாடுகள் மற்றும் அதன் சுத்திகரிப்பு பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

நீர்

தண்ணீர் அடிப்படையான மனிதத்தேவை. தண்ணீர் இன்றி ஒருவரும். உயிர்வாழ முடியாது. ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான நீர் குடிப்பதற்கும் மற்ற சுகாதார வசதிக்கும் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் அதிகப்படியான உடல் நலக் குறைவுக்கு காரணம் போதுமான குடிநீர் இல்லாமையாகும். இந்தியாவில் 50% அளவு நோய்களைப் பாதுகாக்கப்பட்ட நீர் போதிய அளவு வழங்குவதன் மூலம் தடுக்கமுடியும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நீர்வள ஆதாரங்கள்

 • மழை
 • நிலப்பரப்பு நீர்
 • செயற்கை ஏரிகள், நீர்தேக்க தொட்டிகள்
 • ஆறுகள், ஓடைகள்
 • குளங்கள்
 • நிலத்தடி நீர்

1. மழை : நீரின் முக்கிய ஆதாரம் மழை. இயற்கையில் இது தூய்மையானது. இயற்பியல் முறையில் இது சுத்தமானது. வேதியலில் இது மென்மையான நீர் மற்றும் சில கண்ணுக்குத் தெரியாத துகள்கள் கரைந்துள்ளன. இதில் நோயை உண்டாக்கும் பாக்டீரியா (Pathogenic) காணப்படாது.

ஆனால் மழைநீர் வளிமண்டலத்தைக் கடந்து மண்ணில் விழும்போது அசுத்தமாக்கப்படுகிறது. இது தூசி, வாயுக்கள் (Soot) மற்றும் பாக்டீரியா போன்ற அசுத்தங்களை கொண்டுள்ளது. மழைநீரை குடிநீராக பயன்படுத்த வேண்டுமென்றால் கவனமாக சேகரித்து சேமித்து வைக்கவேண்டும்.

2. நிலப்பரப்பு நீர் : மழை நீர் நிலப்பரப்பை அடையும்போது அது நிலப்பரப்பு நீர் என்று அழைக்கப்படுகிறது. நகரங்களும், மாநகரங்களும் பெரும்பாலும் இந்த நீரையே சார்ந்திருக்கின்றன. அவைகள் ஏரிகள், நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் அணைகள்.

a) செயற்கை நீர்தேக்க குளங்கள் (லூரிகள்) : மழை நீர் நீர்தேக்க குளங்களின் கரைகளை உயர்த்தி கட்டி அதில் பிடித்து வைத்து சேமிக்கலாம். இவைகளை மீண்டும் உபயோகத்திற்கு அடைத்துவைக்கப்பட்டவை (Impounding resources) என்றும் அழைக்கிறோம். சுற்றுவட்டாரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் பகுதிக்கு "நீர்பிடிப்புப்பகுதி" என்று பெயர்.

இந்த நீர்பிடிப்புப்பகுதி மனிதர்களாலும், ஆடு, மாடு போன்ற மேய்ச்சல் விலங்குளால் மாசுபடுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

b) ஆறுகள் (Rivers) : ஆற்றுநீர் மக்கள் தேவைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் அதன் நீர் மாசு உள்ளதால், நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட வேண்டும்.

ஆற்றுநீர் துணி துவைப்பதாலும், கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வேளாண் கழிவுகளாலும் மாசுபடுத்தப்படுகின்றன.

c) குளங்கள் மற்றும் கொள்கலன்கள் (Tanks) : இந்தியாவின் சில கிராமங்களில் கொள்கலன்களே நீர் வள ஆதாரமாக உள்ளன. வீட்டு உபயோகத்திற்கும், குடிப்பதற்கும் இது புது முறையாகும். ஆனால் மழைக் காலங்களில் கொள்கலனைச் சுற்றியுள்ள அழுக்குகள் அடித்து வரப்படுவதாலும், மலங்கழிப்பதினாலும், குளிப்பதினாலும் துணி துவைப்பதினாலும் இது மாசுபடுத்தப்படுகிறது.

3. நிலத்தடிநீர் (Ground Water) : மழைநீரின் ஒருபகுதி நிலத்தில் ஊறி, நிலத்தடிநீராக மாற்றப்படுகிறது.

நிலத்தடி நீரின் பயன்கள் (Advantage)

1) இதில் நோயை உண்டாக்கக் கூடிய நுண்ணுயிரிகள் இல்லை

2) சுத்திகரிப்பு தேவையில்லை

3) இந்த நீர் கோடைக்காலத்தில் கூட நிலையானதாக இருக்கும்.

நிலத்தடிநீரின் தீமைகள் (Disadvantage)

1. இந்த நீர் நிலப்பரப்பு நீரைவிட கடினமானது.

2 நீர் ஏற்ற அழுத்தக் குழாய்கள் தேவைப்படும் (Pumping)

நிலத்தடி நீர்வள ஆதாரங்கள் (Sources of ground Water) :

A. கிணறுகள், B. ஊற்றுகள்

கிணறுகள் இரண்டு வகைப்படும்:

 • ஆழமில்லாத கிணறுகள்,
 • ஆழமான கிணறுகள்
 • சுகாதாரக் கிணறு
 • ஆழ்குழாய் கிணறு

a) ஆழமில்லாத கிணறுகள் (Shallow Wells) : இவை அடிமண் நீரால் (Sub - soil water) ஆனவை சாக்கடைக்கழிவு நீரால் இவை எளிதாக மாசுபடுத்தப்படலாம்.

இந்தக் கிணற்றின் ஆழம் 10 அடிக்கு குறையாமல் இருக்கவேண்டும். இது பொதுவாக 30-50 அடி ஆழம் கொண்டதாக இருக்கும். இந்த ஆழமற்ற கிணற்றில் நீர் ஒருபோதும் குடிப்பதற்கு பாதுகாப்பானதல்ல, இந்த நீர் சுத்திகரிக்கப்பட வேண்டும் அல்லது பாதுகாக்கப்பட்ட கிணறாக மாற்றப்பட வேண்டும். கழிவுநீர் கசிதல், கழிப்பிடங்கள், ஊறித்தோயும் குழிகள் முதலியவற்றிலிருந்து ஏற்படும் நிலத்தடிகசிவினால் கிணற்று நீர் மாசு அடையலாம்.

2. ஆழமான கிணறுகள் (Deepwells) : ஆழமான கிணறுகள் நிலத்தில் கீழே முதலில் உள்ள ஊற முடியாத படிவங்களிலிருந்து நீரை பிடித்து வைத்திருப்பவை. ஆழமான கிணறுகள், ஆழமற்ற கிணறுகளை விட நல்ல தண்ணீரை கொடுக்க முடியும். ஆழமான கிணறுகள் மூடப்படாமல், சரியாக கட்டப்படாமல், மாசுக்களிலிருந்து பாதுகாக்கப்படவில்லை என்றால் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கக் கூடியதாக அமைந்துவிடும்.

சுகாதாரக் கிணறு (Sanitary Well) :


1) சரியான இடத்தில் அமைக்கப்பட்டது

2) சரியாக கட்டப்பட்டது.

3) மாசு அடைவதிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

பாதுகாப்பான கிணற்றை கட்டுவதற்கான விதிமுறைகள்

இடம்: (Location)

a) மாசுபடுத்தும் ஆதாரங்களிலிருந்து குறைந்தது 50 அடி (15 மீட்டர்) தூரத்தில் இருக்க வேண்டும்.

b) தரையில் உயரமான இடத்திலும், மாசுப்படுத்தும் ஆதாரங்களான கழிப்பறை. குப்பைமேடு அல்லது ஊறித்தோயும் குழிகள் போன்றவைகளுக்கு அருகிலும் அமைக்கக்கூடாது.

வெளிப்புறம் (Lining) : அடிமண் நீரால் ஏற்படும் தொற்றுமாசு தடுக்கப்படத்தக்கதாகக் குறைந்தது 8 மீட்டர் ஆழத்திற்கு கிணற்றின் பக்கவாட்டில் செங்கல் புதைக்கப்பட்டு சிமெண்டால் பூசப்பட்டிருக்க வேண்டும்.

கைப்பிடிசுவர் (Parapet well) : செங்கல், சிமெண்டினால் ஆன கைப்பிடிச்சுவர் தரை மட்டத்திலிருந்து குறைந்தது 70-75 Cm (25 inch) உயரத்தில் அமைய வேண்டும். கிணற்றைக் சுற்றிலும் சாய்வான சிமெண்ட்தளமும், நிலப்பரப்பு கழிவு நீர் உள்ளே செல்லாதபடி கைப்பிடி சுவர் உள்பக்கமும், வெளிப்பக்கமும் சிமெண்டால் பூசப்படவேண்டும்.

நடைபாதை (Platform) : கிணற்றை சுற்றிலும் 1 மீட்டர் தூரத்திற்கு சிமெண்டால் ஆன நடைபாதை அமைக்கவேண்டும்

கால்வாய் : கிணற்றிலிருந்து வீணாகும் நீரை வெளியே கொண்டு சென்று கால்வாய்களுடன் அல்லது ஊறித்தோயும் குழியுடன் இணைத்தல் வேண்டும்.

மூடி (Covering): கிணறு சிமெண்ட் அல்லது மற்ற பொருட்களால் ஆன மூடியால் மூடப்படவேண்டும். இது வெளிப்பொருட்கள் அல்லது மாசுகள் நேரிடையாக கிணற்றினுள் விழுந்து நீர் மாசுபடாதபடிக்கு பாதுகாக்கும். திறந்த கிணறுகள் அனைத்தும் பாதுகாப்பற்ற கிணறுகள் எனப்படும்.

நீர் ஏற்றி (Handpump) : சுகாதாரமான முறையில் நீரை எடுக்க நீர் ஏற்றி கொண்டதாக இருக்கவேண்டும். வாளியும் கயிறும் பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் கிணற்றினுள் தொற்றுமாசு ஏற்பட காரணமாக அமையும்

நீரின் தன்மை (Quality) : நீரை ஆய்வகத்தில் பரிசோதித்து, குடிப்பதற்கு பாதுகாப்பானதா என்பதை தெளிவுபடத்திக் கொள்ளவேண்டும்.

சுகாதாரபோதனை (Health Education) : கிணற்றின் அருகே குளிக்க அல்லது துணிதுவைக்க மக்களை அனுமதிக்கக்கூடாது. இதற்கு சரியான முறையில் கிணற்றை பயன்படுத்துவதற்கான சுகாதாரப் போதனை அளிக்கப்பட வேண்டும்.

C) ஆழ்குழாய்க் கிணறுகள் (Tube-wells) : இவை பொதுவாக மிக ஆழமானவை. நிலத்தின் ஆழத்தில் துளைத்துக் குழாயை செருகி நீரைக் கொண்டு வருவது. நீர் ஏற்றிபம்பு ஒன்று இணைக்கப்பட்டு மேற்புறத்தில் கைப்பிடியுடன் இருக்கும். ஆழ்குழாய் கிணறுகள் இரண்டு வகைப்படும்.

1. ஆழமற்றது (Shallow)

2. ஆழமானது (Deep)

ஆழமற்ற குழாய் கிணறு :

1. இதில் அடிமண் நீர் (Sub-soil water) தேங்கியிருக்கும்

2. மாசு ஆதாரங்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்

ஆழ்குழாய் கிணறு (Deep Tube well) : ஆழ்குழாய் கிணற்று நீர் அடிமண் நீருக்கும் கீழிருந்து எடுக்கப்படுபவை. நீருக்கும் கீழிலிருந்து எடுக்கப்படுபவை.

ஊற்று (Springs) : ஊற்று எனப்படுவது நிலத்தடிநீர், ஒரு சில நில அடுக்குகளின் நிலைகளால் நிலத்தின் மேற்பரப்பில் காணப்படுவதாகும். 4 வகையான ஊற்றுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. ஆழமற்ற ஊற்று (Shallow Spring)

2. ஆழமான ஊற்று (Deep Springs)

3. தாது ஊற்று (Mineral Springs)

4. வெப்ப ஊற்று (Hotor Thermal Springs)

நோய்களைத் தடுப்பதிலும் அவைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் நீரின் பயன்பாடு

 • கீழ்கண்ட நோய்களுக்கு நீரை அதிகமாகக் குடிக்க வேண்டும்.
  • வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் நீர் குறைந்து போன நிலையைக் (Detydration) குணமாக்க
  • காய்ச்சலுக்கு
  • மலச்சிக்கலுக்கு
  • இருமல், மார்புச்சளி, ஆஸ்துமா, கக்குவான் இருமல் ஆகியவற்றிற்கு.
 • இருமலின் கடுமையைக் குறைக்க, வெந்நீர் ஆவியை மூச்சு (உள்மூச்சு) இழுத்தல்.
 • மூக்கு அடைபட்டால், மருந்து கலந்து நீரை சுவாசித்தல்.
 • தொண்டைக்கட்டு மற்றும் தொண்டை சதை அழற்சிக்கு (Tonsillitis) சூடான உப்புநீரைக் கொப்பளிக்க வேண்டும்.
 • வயிற்றுப்போக்கு, புழுக்கள் மற்றும் குடல் நாளத் தொற்று நோய்க்குக் கைகளைக் கழுவு வேண்டும். மற்றும் கொதிக்கவைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
 • இரணஜன்னி உள்ளிட்ட தொற்றுநோய்களைத் தடுக்க சோப்பும் நீரும் கொண்டு புண்களைக் கழுவ வேண்டும்.
 • தோல் தொற்றுநோய்களைத் தடுக்க அடிக்கடி குளிக்க வேண்டும். கோடையில் கடும் வெப்பமயக்கத்தைத் தவிர்க்க குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும்.
 • முகப்பரு, புண், கொப்புளத் தொற்று (Impetigo), உருண்டைப்புழு (Ring Worm) ஆகியவற்றுக்கு சோப்பும் நீரும் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.
 • நுண்மம்பாதித்த புண், கட்டிகள், கொப்புளங்கள், மூலக்கட்டி (Piles) அல்லது ஆசனவாய்ப்பிளவு (Anal Fissure) ஆகியவற்றுக்கு இதமான துணியை நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
 • சிறிய தீக்காயங்களின் போது கை அல்லது பாதத்தை குளிர் நீரில் நனைக்கவேண்டும்.
 • மிக அதிகமான காய்ச்சல் அல்லது கடும் வெப்பமயக்கத்துக்கு குளிர்நீரில் உடலை நனைக்க வேண்டும்.
 • குளிர் நீரில் தோய்த்த பஞ்சுக்கட்டுத்துணி அழுத்துதலை காய்ச்சலின் போது நெற்றியிலும், தோலின் நமைச்சலுக்கு அந்த இடத்திலும் கொடுக்க வேண்டும்.
 • அடர் வேதியியல் பொருள் அல்லது வெளிப்பொருள் கண்ணில் விழுந்தால், உடனே கண்ணை குளிர்நீரால் கழுவ வேண்டும்.

நீர் சுத்திகரிப்பு (Purification of water)

நீரை சுத்திகரித்தல் என்பது சமுதாய சுகாதாரத்தில் முக்கியமான ஒன்று. அவை கீழ்வரும் தலைப்புகளில் அடங்கும்.

1. அதிக அளவில் நீரை சுத்திகரித்தல் (Large scale)

2. நடுநிலை அளவில் நீரை சுத்திகரித்தல் (Medium scale)

3. சிறிய அளவில் நீரை சுத்திகரித்தல் (Small scale)

1. அதிக அளவில் நீரை சுத்திகரித்தல் : நீரை சுத்திகரிப்பதன் முக்கிய நோக்கம் நீர் பாதுகாப்பானதாகவும், பயன்படத் தக்கதாகவும் இருக்கவேண்டும். தண்ணீர் சுத்திகரிப்பு இயற்கையில் அந்த நீர் மற்றும் நீரின் தன்மையை பொறுத்தது.

எடுத்துக்காட்டாக : நீர் சுத்திகரிப்பு நிலத்தடி நீருக்கு (Groundwater) தேவைப்படாமல் இருக்கலாம். நீரை சுத்திகரிப்பதன் முக்கிய பகுதிகள்.

1. தேக்கி வைத்தல் (Storage)

ii. வடிகட்டுதல் (Filtration)

iii. தொற்று நீக்குதல் (Disinfection)

1. தேங்க வைத்திருத்தல் (Storage) : தேக்கி வைத்து சேமித்து வைக்கப்படும் நீர் மேலும் மாசு அடையாதபடி பாதுகாக்கப்படும். இது இயற்கை சுத்திகரிப்பு, மேலும் 3 நிலைகளில் இவற்றைப் பற்றி காணலாம்.

a) இயற்பியல் (Physical) : தேக்கி வைப்பதன் மூலம் நீரின் தன்மை மாற்றப்படும். 90% தண்ணீரில் மிதக்கின்ற மாசுகள் புவிஈர்ப்பு தன்மையின் காரணமாக 24 மணிநேரத்தில் கீழே படிந்துவிடும். தண்ணீர் தெளிவானதாக இருக்கும். இது ஒளியை ஊடுருவச் செய்யும் மற்றும் வடிகட்டுதலின் வேலையைக் குறைக்கிறது.

b. வேதியல் (Chemical) : நீரில் கரைந்துள்ள களிமபொருட்கள், கரைந்துள்ள ஆக்ஜிஸனும் ஆக்ஸிஜனை உபயோகப்படுத்தும் பாக்டீரியா மூலம், ஆக்ஜிஸ்னேற்றம் செய்யப் படுகிறது. இதன் விளைவாக நீரில் அமோனியா குறைந்து நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிக்கிறது.

c. உயிரியல் (Blological) : நீரை தேக்கி வைத்தலில் முக்கியமான சாதகச் செயல். நோயை உண்டாக்கும் கிருமிகள் (Pathogenic organism) படிப்படியாக அழிக்கப்படும். ஆற்று நீரை 10-14 நாட்கள் வரைதான் தேக்கி வைக்கவேண்டும். நீர் நீண்டகாலத்துக்கு தேக்கி வைக்கப்பட்டால் நீரில் பாசி படிந்து, நிறம் மாறி துர்நாற்றம் வீசும்.

ii) வடிகட்டுதல் : நீரை சுத்திகரித்தலில் வடிகட்டுதல் இரண்டாவது நிலை, இந்த முக்கியமான நிலையில் மற்றமாசுகள் தவிர, பாக்டீரியாக்கள் 98 - 99% வடிகட்டப் படுகின்றன,

பொதுவாக இரண்டு வகையான வடிகட்டுதலைப் பயன்படுத்தலாம்.

a). மெதுவான மண் படுக்கை அ) உயிரியல் வடிகட்டி

b). விரைவான மண்படுக்கை அ) இயந்திரவடிகட்டி

a). மெதுவான மபடுக்கை அ) உயிரியல் வகை (Slow Sandorbiological alter)

தண்ணீர் 1 (அ) 2 நாட்களுக்கு தொட்டியில் சேமித்து வைக்கப்படும். இந்தக் குறுகிய காலத்தில், இயற்கை சுத்திகரிப்பு நடைபெறும் 90% கரைந்துள்ள மாசுகள் புவிஈர்ப்பு தன்மையின் காரணமாக அடியில் படிந்து விடும். இவற்றுடன் பாக்டீரியாக்களும் நீக்கப்பட்டு தண்ணீரின் தன்மையில் முன்னேற்றம் காணப்படும்.

இப்போது தண்ணீர் சிறிது தெளிவாகக் காணப்படும். அடுத்தபடி வடிகட்டுதல். தொட்டியில் இருந்து தெளிவான நீர், மெதுவான மண்படுக்கைக்கு அனுப்பப்படும். வடிகட்டி படுக்கை மேலிருந்து கீழ் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்

நீர்தேக்கம் 1.4 மீட்டர், மண்வரிசை 1.2 மீட்டர், சரளைக்கல் வரிசை 0.4 மீட்டர்

முக்கியமான வடிகட்டி ஊடகம் மணல். மண் படுக்கையின் தடிமன் (அ) அடர்த்தி 1.2 மீட்டர். மண்படுக்கையின் வரிசையில் நுண்ணிய மண் துகள்கள் மேற்பரப்பிலும், கரடு முரடான (Coarsersand) மண்துகள்கள் கீழேயேயும் பரப்பப்பட்டிருக்கும். படுக்கையின் அடியில் துளையுள்ள குழாய் செருகப்பட்டு வடிகட்டப்பட்ட நீர் சேகரிக்கப்படும்.

மணல் வடிகட்டியில் நீரை சுத்தப்படுத்துவதில் பல இயந்திர நுட்பங்கள் உள்ளன.

அ) இயந்திரவடிகட்டுதல்

ஆ) வீழ்படிவு

இ) உறிஞ்சுதல்

ஈ) மாசுகள் ஆக்ஜிசனேற்றமடைதல்

உ) பாக்டீரியாக்களின் செயல்

நீர் சுத்திகரிப்பின் முக்கிய பகுதி விலங்கியல் அடுக்கு (Zoogleal Layer) (அ) இன்றியமையாத அடுக்கு. இது மண் படுக்கையின் மேற்பகுதியில் காணப்படும். இந்த வழவழப்பான அடுக்கில் எண்ணற்ற தாவர மற்றும் விலங்கு உயிரிகள் காணப்படும். (எ.கா. பாசிகள், கடல் பாசிகள், டைஆட்டம்கள் (Diatoms), புரோட்டோசோவா மற்றும் பாக்டீரியா) ஒரு புதிய மணல் படுக்கையில் இந்த உறை உருவாக்கப்படுவதற்கு 2-3 நாட்களாகும். முழுவதுமாக உருவாக்கப்படுவது 2-3 செமீ, உயரத்திற்கு கூட இருக்கலாம். இந்த இன்றியமையாத உறை (அ) அடுக்கு மெதுவான மணல் வடிகட்டியின் இதயம் (Heart of slow sand filter) என்று அழைக்கப்படுகிறது. இது பாக்டீரியாக்களை நீக்கி 98% நீரை சுத்தப்படுத்துகிறது. வடிகட்டும் அளவு ஒரு நாளைக்கு 2-3 மில்லியன் காலன் ஏக்கர் அல்லது 96 லிட்டர் / சமீ/மணி

இன்றியமையாத உறையின் அடர்த்தி தடிமன் அதிகரிக்கும் போது வடிகட்டும் தன்மை குறையும் ஏனென்றால் அது இந்த உறையின் தடிமன் நீர் செல்வதை தடுத்தலாகும், இந்தத் தன்மை பலநாட்கள் அல்லது வாரங்களில் ஏற்படலாம் "இதற்கு (Loss of the Head)" வடிகட்டுதலின் தலைப்பங்கு நின்றுபோதல் என்று பெயர்.

இந்த இன்றியமையாத உறை (Vital Layer) 2-3 செ.மீ மணல் படுக்கையின் மேல் பகுதியிலிருந்து உறித்து எடுக்கப்படும். இதற்கு உரித்து எடுத்தல் அல்லது வடிகட்டியை சுத்தம் செய்தல் என்று பெயர். இது வடிகட்டுதலின் தலைப்பங்கு நின்றுபோல் 4 அடிக்கு மேல் இருக்கும்போது செய்யப்படும். அடிக்கடி இப்படி செய்வதால் மணல் படுக்கையின் அடர்த்தி 30 to 40 செ.மீ அளவுக்கு குறைந்தால் புதிய படுக்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். இது மெதுவான மணல் வடிகட்டியில் உள்ள பிரச்சனை.

b. விரைவான மணல் வடிகட்டி அ) இயந்திரவியல் வடிகட்டி:

விரைவான மணல் வடிகட்டி முதலில் 1885 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிறுவப்பட்டது. இது இரண்டு வகைப்படும்.

1. புவிஈர்ப்பு வகை (எ.டு) பீட்டர்சள் வடிகட்டி

2. அழுத்த வகை (எ.டு) கேண்டீஸ் வடிகட்டி

விரைவான மணல் வடிகட்டியின் மூலம் தண்ணீரை சுத்தம் செய்வதில் கீழ்கண்ட நிலைகள் உள்ளன.

அ) உறையச் செய்தல் (Coagulasion)

ஆ) கலவை (Mixing)

இ திரட்டுதல் (Floculation)

ஈ) வீழ்படிவு (Sedimentation)

உ) கட்டுதல் (Filtration)

அ) உறையச்செய்தல் : தண்ணீரின் வேதியியல் உறையும் பண்பும், நிறமும் முதலில் பரிசோதனை செய்யப்படும். தண்ணீரின் கலங்கல் தன்மைக்கேற்ப 5-40 மி.கி படிகாரம் 1 லிட்டர் நீரில் சேர்க்கப்படும்.

ஆ) கலவை : படிகாரத்தை சேர்த்த பிறகு, தண்ணீரை விரைவாக சில நிமிடங்களுக்கு கலக்க வேண்டும்.

இ) திரட்டுதல் (Foculation) : பின்னர் தண்ணீரை திரட்டும் பகுதிக்கு 30 நிமிடங்களுக்கு மெதுவாக செலுத்த வேண்டும். இதன் முடிவு தேவையற்ற பொருட்கள் அலுமினியம் ஹைடிராக்சைடுடன் சேர்ந்து காணப்படும்.

ஈ) விழ்படிவு : இந்த தண்ணீரை வீழ்படிவு தொட்டிகளில் 2-6 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். தேவையற்ற கழிவுகள் அலுமினியம் ஹைராக்சைடுடன் சேர்ந்து கீழே படிந்து காணப்படும். இந்த தண்ணீர் இப்போது தெளிவான நிறத்தில் காணப்படும்.

உ) வடிகட்டுதல் : இந்த தெளிவான தண்ணீர், மேலும் 99% சுத்தப்படுத்தப்படுவதற்கு விரைவான மணல் வடிகட்டியினுள் செலுத்தப்படுகிறது. இந்த விரைவான மணல் வடிகட்டியிலும், மெதுவான மணல் வடிகட்டியைப்போல, கூழாங்கற்களுக்கு மேல் மணல் படுக்கை அமைக்கப்படுகிறது. வடிகட்டப்பட்ட நீர் துளைகளுள்ள குழாய்கள் மூலம் சேகரிக்கப்படும். வடிகட்டுதல் நடைபெறும்போது மென்மையான உயிரியல்படிவு மணல் படுக்கையின் மேல், மெதுவான மணல் வடிகட்டியில் காணப்பட்டது போல காணப்படும்.


வடிகட்டுதலின் முடிவில் கழிவுப்பொருட்கள் வடிகட்டி படுக்கையை அழுக்காக்கிவிடும். இந்த நிலையில் வடிகட்டிகளை சுத்தம் செய்யும் முறைக்கு பின் கழுவும் முறை (Back washing) என்று பெயர் இதில் தண்ணீரை மறுபுறத்தில் செலுத்துவதால் அடைத்துக்கொண்டு இருக்கும். அழுக்குகளும், கழிவுப்பொருட்களும். அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படும். முழுவதும் சுத்தம் செய்வதற்கு 15 நிமிடங்கள் தேவை. இந்த வடிகட்டியை மீண்டும் பயன்படுத்தலாம்.

ஆறு படிகாரம் கலவை திரட்டுதல் வீழ்படிவு தொட்டி வடிகட்டி தூய்மையான நீர் பயன்படுத்துதல்

3. தொற்று நீக்குதல்

குளோரின் கருதல் (Chlorination) : நீருடன் தேவையான அளவு சலவைத்தூளை (bleaching powder) சேர்ப்பதால், நீர் தொற்று நீக்கப்பட்டு குடிப்பதற்கு பாதுகாப்பானதாக ஆகிறது. இது குளோரின் (Chlorination) இடுதல் எனப்படும். கிணறுகளுக்கு வாரம் ஒருமுறை குளோரின் இடவேண்டும். மற்ற நீர்வள ஆதாரங்களுக்கு நீரால் கொண்டு வரப்படும் நோய்தொற்று இருக்கும் போதெல்லாம் இடவேண்டும்.


குளோரின் இடுதலின் கொள்கை, தேவையான அளவு சலவைத்தூளை சேர்த்தல். அப்படி சேர்த்து 30 நிமிடம் கழிந்தபின் அந்த நீர், பகுதி நீரில் 0.5 பகுதி குளோரின் கொண்டுள்ளது என உறுதிசெய்யப்படவேண்டும் என்பதாகும். ஆர்த்தோடோலுடைன் ரீஏஜெண்ட் (Orthotuludine reagent) 0.1 மிலி, 1மிலி நீருடன் ஒரு சோதனைக் குழாயில் சேர்க்கப்பட்டு, அப்போது உண்டாகும் மஞ்சள் நிறத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் குளோரின் அடங்கி இருக்கும் அளவைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு கிணற்றுக்குக் குளோரின் இடுவதற்குத் தேவை

1. கயிறு அல்லது சங்கிலியுடன் கூடிய வாளி ஒன்று.

2. காற்றுப்புகாத பாத்திரத்தில் வைத்துள்ள சலவைத்தூள்.

3. அளவு பாத்திரம்

4. கிணற்றின் விட்டம், நீரின் ஆழம், நீர் வைத்திருக்கும் சலவைத்தூரில் உள்ள குளோரினின் சதவிகிதம் ஆகிய விவரங்கள்.

5. பதிவு செய்யப் பதிவேடு .

கணக்கிடும்போது, எடுத்துக்காட்டாக கிணற்றின் விட்டம் 4 அடி என்றும், நீரின் ஆழம் 10 அடி என்றும், தூளில் குளோரின் 20% என்றும் இருப்பிள், கீழ்கண்டவாறு கணக்கிடு.

கேமன் (gelon): 4x4x10x5 நிலையான எண்) = 800 நீர் கிணற்றில் உள்ளது.

14 (நிலையான எண்

800x ----------------------------------------- = 560 கி

20 (குளோரின் சதவிகிதம்)

அல்லது 37 கிராம் சலவைத்தூள் தேவைப்படும்.

அடுத்து, கயிறு அல்லது சங்கிலியை வாளியில் கட்டி வாளியில் முக்கால் பங்கு நீர் எடுத்து அத்துடன், கணக்கிடப்பட்ட அளவு சலவைத்தூளை இட்டு கலக்கவும். பிறகு வாளியைக் கிணற்றில் இறக்கிக் கலக்க வேண்டும். கிணற்றின் அடிப்பகுதியைக் கலக்கக் கூடாது.

நீர் சுத்திகரிப்பு நடுநிலை அளவு (Purification on medium Scale)

இந்த முறை கிணறு, நீருற்று மற்றும் நீர்தேக்க தொட்டிகளில் இருந்து பெறப்படும் நீருக்குத் தேவை. தொற்று நீக்குதல் குளோரின் இடுதல் முறையில் நடைபெறும் இந்த முறை விலை குறைந்ததும், நம்பத்தகுந்ததும், எளிதில் பயன்படுத்தக் கூடியதும் மற்றும் பாதுகாப்பான தொற்று நீக்கியாகும்.

எலுமிச்சை சாறு (அ) கால்சியம் ஆக்சைடு உடன் கலக்கும் போது சலவைத்தூளின் தன்மை அவ்வாறே இருக்கும். பொதுவாக விகிதம் 4:1. இந்தக் கலவைக்கு நிலையான சலவை (Stabilished bleech) என்று பெயர் மற்றும் குளோரினை 33% கீழ் கொண்டுவராது. குளிர்ச்சியான, வெளிச்சமில்லாத, காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்க வேண்டும். கிணறு அல்லது நீர்தேக்க தொட்டியில் உள்ள நீரை சுத்திகரிக்க நீரின் அளவைக் கண்டறிந்து 1000 லிட்டர் நீருக்கு 2.5 கிராம் சலவைத்தூள் என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இது ஒரு லிட்டர் நீருக்கு 0.7mg குளோரினை கொடுக்கும்.

தேவையான அளவு சலவைத்தூளை எனாமல் வாளியில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 100 கிராமுக்கு மேல் வாளியில் சலவைத்தூள் எடுக்கக்கூடாது. இந்த தூளில் சிறிது நீரை சேர்த்து களிம்பு (Paste) போல உருவாக்கவேண்டும். பிறகு முக்கால் பாகம் 3/4 வாளியை நீரால் நிரப்ப வேண்டும். நன்றாக கலக்கிய பிறகு 10 நிமிடம் அப்படியே வைத்துவிட வேண்டும். இதில் சுண்ணாம்பு (Calcium) கீழே தங்கிவிடும். இந்த மேற்பரப்பு நீரை மற்றொரு வாளியில் ஊற்றி கிணற்றுக்குள் இறக்க வேண்டும். வாளி நீரை மேலும், கீழும் ஆக குலுக்கி கிணற்று நீருடன் நன்றாக கலக்கவேண்டும்.

சலவைத்தூளை கிணற்றில் சேர்த்த பிறகு குறைந்தது அரைமணி நேரத்திற்கு நீர் எடுக்கக் கூடாது. குளோரின் இடுதலை இரவில் செய்யலாம்.

சிறிய அளவில் நீர் சுத்திகரிப்பு (Domestic Level - வீட்டில் நீரை சுத்திகரித்தல்)

இது கீழ்கண்ட முறைகளில் பின்பற்றப்படலாம்.

1) கொதிக்க வைத்தல் (Boiling) : இந்த எளிதான, ஆற்றல்மிக்க முறையில் நீர் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைப்பதால் எல்லா நுண்ணுயிரிகளும் அழிக்கப்படுகின்றன. இது நீரின் நிரந்தரமற்ற கடினத் தன்மையையும் நீக்குகிறது.

ii) வேதியியல் முறைப்படி நுண்மம் நீக்கும் முறை:

a). சலவைத்தூள் (Bleaching powder) : ஒரு குப்பியில் ஒரு லிட்டர் நீரில் 25 கிராம் தூளை இட்டு அடர்கலவையாகச் செய்யவும். மூடியால் அந்தக்குப்பியை இறுக மூடிவைக்கவும். அந்த அடர்கலவையில் 1 மி.லிட்டரை 5 லிட்டர் தண்ணீருடன் கலக்கி வைக்கவும். அரைமணிநேரம் அப்படியே வைத்துப் பின்பு பயன்படத்தலாம்

b). குளோரின் மாத்திரைகள் (Chlorine tablets) : இந்த விரைவான குளோரின் இடுதல் முகாம்களிலும், சுற்றுலாதலங்களிலும், வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஹாலசோன் (HalaZone) மாத்திரை ஒரு லிட்டர் நீருக்கு தேவை

c). அயோடின் (Iodine) : இது அவரசத்தேவைக்கு பயன்படும் 2% கொண்ட 2 துளி அயோடின், ஆல்கஹால் ஒரு லிட்டர் தெளிவான நீரில் இட்டு கலக்கிப் பயன்படுத்தலாம்.

d). பொட்டாசியம் பர்மாங்கனேட் (Potassium Permangarate) :

போதிய அளவு பொட்டாசியம் பர்மாங்கனேட் எடுத்து நீரில் இட்டு அது நல்ல இளம் சிவப்பு (Pink) நிறம் அடையக் கலக்கி வைத்துக்கொள்ளவும். இது அயோடின் கொண்டு சுத்திகரிப்பது போன்று அவ்வளவு நம்பதகுந்த முறை அல்ல மற்றும் விலையும் அதிகம். ஆனால் காலரா தொற்றிப் பரவும் காலத்தில் பயனுடையது.

e). படிகாரம் (Alum) : படிகாரம் ஒரு கிருமிநாசினி அல்ல. இது நீரின் கலங்கல் தன்மையை நீக்கும்.

விட்ருவடியபடி (Domestic Filter) : வீட்டில் நீர் குடிப்பதற்காக வீட்டு வடிகட்டியின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. அந்த வகையான ஒருவடிகட்டி பெர்க்பெல்டு வடிகட்டி (berkefeld).


இந்த வடிகட்டியில் பில்டர் கேன்டில் (Filter Candle) என்ற நீண்டதண்டு நடுவில் அமைந்துள்ளது. வடிகட்டி தண்டில் கண்ணுக்கு தெரியாத இலட்சக்கணக்கான துளைகள் உள்ளன. இந்த துளைகள் பாக்டீரியா போன்ற மாசுகளை பிடித்து வைக்கிறது. எனவே இந்த வடிகட்டியின் செயல்முறை இயந்திரமயமாக்கப் பட்டது. வடிகட்டி தண்டில் உள்ள துளைகளை மாசுகள் அடைத்துக் கொள்வதால் அவ்வப்போது அல்லது வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்யவேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

3.07272727273
Fathima Mar 29, 2020 10:45 PM

நீர் சுத்திகரிப்பின் பிரதான அவசியங்கள் என்ன

சந்திரசேகரன் Nov 27, 2019 08:38 PM

அருமை. நல்ல பயனுள்ள தகவல்கள்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top