பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

செவிலியரின் பொறுப்புகள்

செவிலியரின் பொறுப்புகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

 • மருத்துவமனையிலிருந்து நோயாளி வெளியேறுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களிருக்கும் போதே நோயாளிக்கும் அவருடைய உறவினர்களுக்கும் தெரிவித்து விட வேண்டும்.
 • நோயாளியை நன்றாக பரிசோதித்து முக்கியமாக வெப்பநிலை, நாடித்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றின் அறிகுறிகளை தெரிந்த பின்னரே வெளியேற்றும் அனுமதி சீட்டை கொடுக்க வேண்டும்.
 • நோயாளியின் உடல் நலமான நிலையிருக்கிறதா, தூய்மையான ஆடை அணிந்துள்ளாரா, உணவு வழக்கமானபடி எடுத்துக் கொள்கிறாரா என செவிலி கவனிக்க வேண்டும்.
 • நோயாளியின் உடைமைகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் நோயாளியிடமோ, உறவினரிடமோ ஒப்படைத்து கையெழுத்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
 • அனுமதி சீட்டு, வெளியேற்றும் சீட்டு ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். நோயாளியை மருத்துவமனையின் அனுமதியுடன் வெளியேற்ற வேண்டும்.
 • சீட்டு மற்றும் மற்ற குறிப்புகளை மருத்துவ துறையிடம் ரசீது பெற்று கொண்டு ஒப்படைக்க வேண்டும்.
 • வெளியேற்றும் சீட்டை நோயாளி அல்லது அவர்களுடைய உறவினர்களிடம் கொடுக்கும் போது அவரிடம் சிகிச்சை மற்றும் உணவை வீட்டில் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்பதையும் ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு வரும்போது வெளியேற்றும் சீட்டை கொண்டு வர வேண்டும் என்பதையும், நோயாளியின் நோயின் தன்மைக்கு ஏற்ப ஆலோசனை கூறியும் அனுப்ப வேண்டும்.
 • வெளியேற்றும் சீட்டில் குறிப்பிட்டவாறு அனைத்து மருந்துகளையும் நோயாளி பெறுகிறாரா என்று கவனிக்க வேண்டும்.
 • நோயாளி அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு மருத்துவமனையில் உள்ள பொருட்களை சரிபார்க்க வேண்டும்.
 • நோயாளியின் நோய்க்கு ஏற்றாற்போல் அவர் மருத்துமனையை விட்டு வெளியேறும் வரை தள்ளு வண்டியையோ, அல்லது டோலியையோ பயன்படுத்தவேண்டும்.
 • நோயாளி மருத்துமனையிலிருந்து வெளியேறிய பின்பு உடனே நோயாளியின் பிரிவை சரி செய்ய வேண்டும்.

படுக்கையும் படுக்கை விரித்தலும்

படுக்கை விரித்தல் ஒரு கலையாகும். திறமையான பத்திரமான படுக்கை போடுவதால் நோயாளிக்கு வசதியை தேடி தருகிறோம். சுத்தமான வசதியான படுக்கை நோயாளிக்கும், மருத்துவமனைக்கும் அழகான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

நோக்கம்

 1. நோயாளிக்கு வசதியான சுத்தமான படுக்கை அளித்தல்.
 2. நோயாளியின் பிரச்சனையை கண்காணிப்பதற்கும், தவிர்ப்பதற்கும். நேரத்தையும் திறமையையும் பொருட்களையும் சேமித்தல்.
 3. அந்த அறைக்கும் வார்டுக்கும் தூய்மையான தோற்றத்தை அளித்தல்.
 4. நோயாளியின் தேவைகளை அறிந்து கொள்ளுதல்.

படுக்கையின் வகைகள்

மூடிய, பயன்படுத்தாத படுக்கை

இவை காலியான, முழுவதும் மூடிய அதாவது, அடி விரிப்பை விரித்து படுக்கை விரிப்பால் மூடப்பட்டிருக்கும் தூசியோ, அழுக்கோ படியாமல் பாதுகாக்கப்பட்டு, புதிதாக வரும் நோயின் சேர்க்கை வரையிலும், நோயாளியின் வருகை வரையிலும் படுக்கை மூடப்பட்டேயிருக்கும்.

அறுவை சிகிச்சைக்குப்பின் பயன்படுத்தப்படும் படுக்கை

இந்த படுக்கை அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நோயாளிக்கு தயார்படுத்துவது.

 1. படுக்கையை, துணியை, வாந்தி, இரத்த போக்கு, வேண்டாத அழுக்குகள், கழிவுகள் இவற்றிலிருந்து பாதுகாத்தல்.
 2. படுக்கையை வசதியாகவும் வெது, வெதுப்பாகவும் வைப்பதின் மூலம் அதிர்ச்சியை தவிர்க்கலாம்.

எலும்பு முறிவுக்காக பயன்படுத்தும் படுக்கை

முதுகெலும்பு, இடுப்பெலும்பு, தொடை ஆகியவற்றில் ஏற்படும் எலும்பு முறிவின் போது படுத்துக்கொள்ள இந்த கடினமான அசைக்க முடியாத மாடலான படுக்கை அமைக்கப்படுகிறது.

 1. அசைக்க முடியாத முறிவுகளுக்கு
 2. தேவையற்ற வலியை குறைக்க
 3. நோயாளிக்கு வெதுவெதுப்பையும், வசதியையும் தருவதற்கு
 4. மெத்தையின் அளவிற்கு அதிகமான அழுத்தத்தை குறைத்தல்

மாவு கட்டு படுக்கை

இந்த கடினமான படுக்கை மாவுகட்டு சாதனத்தால் அமைக்கப்படுகிறது.

 1. மாவு காயும் வரை அடிப்பட்ட இடத்தை அசையாமல் வைத்திருத்தல்.
 2. மாவு கட்டுவதால் சரியான உருவமும், நிலையும் அமையும்.
 3. வெதுவெதுப்பாகவும், வசதியாகவும் நோயாளியை வைத்திருத்தல்

கால் நீக்கப்பட்டதற்கான படுக்கை (Stum Bed)

இந்த வகையான படுக்கைகள் உயரமாக பிரிக்கப்பட்டோ அல்லது பிளந்தோ காணப்படும் இந்த வகையான படுக்கை காலை (அறுவை சிகிச்சை மூலம்) எடுத்த (பாதிகால்) நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. எடுக்கப்பட்ட அல்லது கீறப்பட்ட காலின் மேல் துணிகளின் அழுத்தத்தை குறைக்க செய்கிறது. காயப்பட்ட காலை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது

இதய சம்பந்தமான படுக்கை

இதய நோயாளிகளுக்காக செய்யப்படும் படுக்கை

வாத நோய் படுக்கை

இந்த படுக்கை நோயாளியை அதிகமான வெது வெதுப்பாக வைப்பதால் நோயாளியின் தளர்ச்சியையும், அதிர்ச்சியையும் தவிர்க்க செய்கிறது. கால் திடீரென அசைக்க முடியாத (வாதம்) நோயாளிகளுக்கு வசதி அளிக்கிறது. சிறுநீரகத்தில் தொற்று இருக்கும் நோயாளி வெளியேற்றும் கழிவு பொருட்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.

தீயினால் காயப்பட்டவர்களுக்கு போடும் படுக்கை

வெந்த புண்களையுடைய நோயாளிகளுக்கு அமைக்கப்படும் படுக்கை.

 1. வெந்த புண்ணில் தொற்றுவராமல் தடுப்பதற்கு
 2. சிவந்த புண்ணின் பகுதியை குணமாக்குவதற்கு.
 3. வெந்த புண்ணின்மீது துணி அழுத்துவதினால் கசிவுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு.

இந்த படுக்கை எல்லா வசதிகளும், வித்தயாசமாகவும் கீழ்க்கண்ட முறைகளின் படி அமைக்கப்படவேண்டும்

பக்கங்களில் சட்டங்கள்

இந்த வகையான பக்க சட்டங்களை நோயாளி படுக்கையிலிருந்து விழாமலிருக்கவும், (அமைதியற்ற நிலையிலிருக்கும்) அசையும் போது பிடித்து கொள்ளுவதற்கு ஒரு ஆதரவாகவும் உள்ளது.

கால் பகுதியை உயர்த்த உதவும் கைபிடி

இவை கட்டிலின் அடிப்பகுதியில் கால்பக்கம் காணப்படும் படுக்கையின் உயரத்தை உயர்த்தவோ குறைக்கவோ பயன்படும், பாதம் அல்லது முழங்கால் சரியான நிலையில் சரி செய்து வசதிபடுத்த பயன்படுகிறது.

மருத்துவ சிகிச்சைக்கான சூழ்நிலை

 • நோயாளிக்கு பராமரிப்பில் நம்பிக்கையும், உண்மையும் உண்டாக்க வேண்டும்.
 • உணர்வுகளை புரிந்து மரியாதையும் மதிப்பும் அளிக்க வேண்டும்.
 • நோயாளியை கவனிப்பதில் ஆதரவாளர்களை பயன்படுத்துதல்.
 • நோயாளியின் உணர்வுகளை மதித்து அதற்குரிய மரியாதையும் செலுத்துதல்.
 • நோயாளியின் உறவினர்களை புரிந்து எந்த விதத்தில் ஆதரவு அளிக்கிறார்கள் என கண்டுபிடித்து பாதுகாப்பான சூழ்நிலையை அமைத்தல்.
 • நோயாளி தானாக செய்ய கற்றுகொடுத்து உறவினர்களின் உதவுவதை தடுக்க வேண்டும்.நோயாளிக்கும் செவிலிக்கும் உள்ள தொடர்புகளை மதித்து முன்னேற செய்ய வேண்டும்.

நோயாளியின் மனநலம்

மனநலத்தை பாதுகாக்க நோயாளியிடம் உள்ள பயம், கவலை, பரபரப்பு ஆகியவற்றை, நீக்க வேண்டும். நோயாளி செவிலியரிடமிருந்தும் மருத்துவரிடம் இருந்தும் இரக்கத்தை பெறவேண்டும். மருத்துவமனையில் இருக்கும் போது அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சியற்ற செய்திகளை நோயாளிகளிடம் கூறாமல் தவிர்க்க வேண்டும். ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்வது அவர்களுக்கு மேலும் நிம்மதியையும், வசதியையும் தருகிறது.

உடல் இயக்கமும் அதன் நிலைகளும்

உடல் உறுப்புகள் சரியான நிலையில் இயங்கவும் மற்றும் உடலை சமநிலையில் நிறுத்தவும் உடல் உறுப்புகள், தசை மற்றும் நரம்புகள் அவை ஒன்றுடன் ஒன்று இணைந்த இயக்கம் காரணமாகும்.

நோயாளிகளைப் பேணும் பணியில் பெரிதும் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தங்கள் உடலை சரியான நிலையில் இயக்குவது மூலம் தங்களுக்கு வர இருக்கும் உடல் சோர்வு தசை, நரம்பு, சிதைவு அதனால் ஏற்படும் பின் விளைவுகளை தடுத்தலுடன் நோயாளிகளை, சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக வெவ்வேறு நிலையில் படுக்க வைக்கும் பொழுதும் அவர்களை படுக்கையில் திரும்பி அல்லது மாற்றி படுக்கவைக்கும் பொழுதும் அவர்களுக்கு உடல் நிலையில் சோர்வு, சிதைவு மற்றும் பின் விளைவுகள் வராமல் தடுக்க முடியும்.

நோக்கம்

 1. முடிந்தவரை வசதியாகவும், ஓய்வாகவும் இருக்கச் செய்தல்.
 2. உடலின் வேலைகளை இயல்பாக்குதல்.
 3. உடலின் தசை நரம்புகளின் சுருக்கங்களை தவிர்த்தலும், அவை உருகுலையாமல் பாதுகாத்து பின் விளைவுகளைத் தவிர்த்தல்.
 4. உடல் சக்தியினை முடிந்தவரைத் தக்கவைத்து தேவையற்ற சிரமத்தினை அகற்றுதல்.

நிற்கும் நிலை

 1. சரியாக ஒருவர் நிற்கும் போது தலை நேராகவும் முதுகுப்புறம் முடிந்தவரை நிமிர்த்தியும், மார்பு முன்நோக்கியும் தோள்பட்டைகள் பின் நோக்கியும் முழங்கைள் சிறிது மடித்தும் மணிகட்டுகள் நீட்டப்பட்டும், விரல்கள் லேசாக மடக்கியும் அடிவயிறு உள்ளுக்கு இழுக்கப்பட்டு தட்டையாகவும், முழங்கால்கள் லேசாக மடிக்கப்பட்டு, பாதங்கள் முன்னோக்கி ஒன்றிற்கு ஒன்று இணையாகவும் மூன்று இன்ச் இடைவெளியுடனும் இருக்க வேண்டும்.
 2. நிற்கும் நிலை பற்றிய சரியான தெளிவான அறிவு மிகவும் முக்கியம். ஏனெனில் ஏனெய நிலைகள் அனைத்தும் இந்நிலையிலிருந்தே பெறப்பட்டதாகும்.
 3. ஒரு செவிலியானவர் நோயாளியை கட்டிலில் உட்காரவோ அல்லது படுக்கவோ உதவும் பொழுது நிற்கும் நிலைக்கு சொல்லப்பட்ட விதிமுறைகளை கையாண்டே அவரின் உடம்பினை சரியானபடி கட்டிலில் கிடத்த வேண்டும்.

உட்காரும் நிலை

உட்கார்ந்த நிலையில் உடம்பின் மொத்த எடையையும் புட்டமும் தொடைகளும் தாங்குகின்றன. உட்காரும் நிலையில் முழங்கைள் மடக்கப்பட்டிருக்கும் இடுப்பு மடக்கப்பட்டிருக்கும் தொடைகள் நெஞ்சிற்கு 90° கோணத்திலும், முழங்கால்கள் மடிக்கப்பட்டு தொடைக்கு 90° கோணத்திலும் பாதங்கள் தரையில் பதிந்து இருக்கும் முதுகு நேராகவும் புட்டத்தின் பின்புறம் சாய்ந்தவாறு அமைக்கப்பட்ட நிலையிலிருக்கும்.

நோயாளிக்கு பயன்படுத்தும் நிலைகள்

மல்லார்ந்த நிலை

நோயாளி கட்டிலில் மல்லார்ந்து படுத்திருக்கும் நிலை. இந்நிலை உடல் வளைவுகளுக்கு எந்த வித ஆதாராமும் கொடுக்கப்படாததால் இது சௌகரியமற்ற நிலை.

பின்பக்கமாக படுக்கும் நிலை

இந்நிலை நிற்கும் நிலையிலிருந்து லேசாக மாற்றி வடிவமைக்கப்பட்டதாகும். இதில் உள்ள ஒரே வித்தியாசம் யாதெனில் நோயாளி தரையில் நிற்பதற்கு பதிலாக படுக்க வைக்கப்பட்டிருப்பார். நோயாளி மல்லாந்து படுத்தவாறு தலைக்கு அடியில் ஒரு தலையணையையும் முதுகு வளைவின் இடைளிெயில் உறுத்தாமல் இருக்க ஒரு சிறிய துணியையும் மெதுவான தலையணை முழங்கால்களுக்கும் அமைக்கப்பட வேண்டும். பாத சாய்மானம் பாதங்களுக்கு வைக்க வேண்டும். இது பாதங்கள் சாய்ந்து விடாமல் இருக்க உதவும். கைகள் உடலின் பக்கவாட்டிலிருக்க வேண்டும். பெரும்பாலான நோயாளிகள் இந்நிலையில் கவனிக்கப்படுகிறார்கள்.

ஒருக்களித்த நிலை

நோயாளியை படுக்கையின் மத்தியிலிருந்து சற்று தள்ளி படுக்கவைக்க வேண்டும். நோயாளியை இடதுபுறமாக திருப்பும்போது செவிலியர்கள் இடது புறமாக நின்று கொள்ள வேண்டும். நோயாளியின் வலது கையை மடக்கி மார்பின் குறுக்கே வைக்க வேண்டும். வலது காலை, இடது காலின் குறுக்கே வைக்க வேண்டும். வலது முழங்காலை இலேசாக மடக்கி, கையை வலது தோள்பட்டையில் வைக்க வேண்டும். இன்னொரு கையானது வலது இடுப்பின் கீழ் வைத்து நோயாளியை மெதுவாக இடம் புறம் திரும்பி படுக்குமாறு செய்ய வேண்டும்.

முதுகு தண்டு நேராகயிருக்கும்படி நோயாளி ஒரு பக்கமாக திருப்பி படுக்க வைக்க வேண்டும் முழங்கால்கள் லேசாக வளைத்து வைக்கப்படவேண்டும். மேல்புறமிருக்கும் கால் மூட்டு, கீழ்மூட்டு மடிக்கப்பட்டிருப்பதை காட்டிலும் கொஞ்சம் அதிகமாக வளைக்கப்பட்டு இருக்க வேண்டும். தலைக்கும் கால்களுக்கு இடையேயும் தலையணைகள் வைக்கப்பட்டிருக்கலாம். வயிற்குக்கும் முதுகிற்கும் ஏதாவது ஒரு ஆதாரம் கொடுக்கப்பட வேண்டும்.

கீழ்புறம் இருக்கும் கை தலைக்கு மேலாகவும் மேல்புறம் இருக்கும் கை தலையணை மேலும் வைக்கப்பட வேண்டும். உடம்பின் மொத்த எடையும் கைகளோ அல்லது கால்களோ தாங்காதவாறு உடம்பு கிடத்தப்பட வேண்டும். இந்நிலை பொதுவாக நோயாளியின் சௌகரியத்திற்கும், ஓய்விற்கும், உடல் லேசாக இருப்பதற்கும் உதவுகிறது. முதுகுப்புறம் செய்யப்படும் சிகிச்சையின்போது நோயாளி ஒருகளித்த நிலையில் படுக்க வைக்கப்படவேண்டும். இடதுபுறம் ஒருக்களித்தநிலை யோணி, பெண் உறுப்புகளின் வெளிப்பாகம் மற்றும் ஆசன வாய், குதம் பரிசோதனையின் போது பயன்படும். அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிகளின் மேல் சுவாச உறுப்புகள் தடங்கள் இன்றி இயங்க இந்நிலை பயன்படுகிறது.

நோயாளிகளை டோலியிலிருந்து படுக்கைக்கு மாற்றுவதற்கு டோலியின் தலைப்பகுதியையும், கால் பகுதியையும் ஒரே நேர்கோட்டில் வைக்கவும். மூன்று செவிலிகள் இந்நிலைக்கு தேவைப்படுவர். மூன்று பேரும் டோலியின் ஒரே பக்கமாக நிற்க வேண்டும். தலைக்கு அடியில் தன் கைகளை வைத்து நோயாளியின் தலையையும், தோள்பட்டையையும் தாங்கி பிடித்து கொள்ள வேண்டும். இன்னொருவர் தனது கைகளை நோயாளியின் இடுப்பின் கீழே வைத்த தாங்கிபிடித்து கொள்ள வேண்டும்.

மூன்றாமவர் தனது கைகளை தொடையின் கீழும் கால்களின் கீழுமாக வைக்கவேண்டும் அனைவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நோயாளியை தூக்கி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும் நோயாளியை தூக்கும் போது செவிலியர்கள் தங்களது உடல் இயக்கத்தின் தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்களது முதுகினை நேராகவும் முழங்கால்களை மடக்கியும் ஒரு காலை முன் வைத்தும் நோயாளியை இடமாற்றம் செய்ய வேண்டும்.

ஜேக்னைப் நிலை (Jack knik Portion)

நோயாளி பின்புறம் கட்டிலில் படும்படி மல்லாந்து இருக்க வேண்டும். தோள்பட்டைகள் லேசாக உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். இடுப்பும், முழங்கால்களும் மடக்கப்பட்டு அவைகள் அடிவயிற்றையும் மார்பையும் தொட்டு கொண்டு இருக்கும்படி அமைக்கப்படவேண்டும். இந்நிலை லம்பார் பங்சர் செய்யும் பொழுது பயன்படுகிறது.

முழங்கால் மார்பு நிலை

நோயாளி படுக்கையின் மேல் முழங்காலை நிறுத்தி தலையை கீழ் புறமாக படுக்கையை நோக்கி தொங்கலிட்டு தோள்களையும் மார்பையும் படுக்கையில் படுமாறு படுக்க வேண்டும். தலையை ஒரு பக்கம் திருப்பி தலையணையில் வைத்துக் கொள்ள வேண்டும். தொடைகள் இரண்டும் நீள வாக்கில் இருக்க வேண்டும். கைகள் இரண்டும் தலைக்கு மேல் பெருக்கல் குறியிட்ட மாதிரி வைத்து கொள்ளவேண்டும்.

லித்தாடாமி நிலை

இந்நிலையில் நோயாளி மல்லார்ந்து படுக்க வேண்டும். தலை தோள் பட்டையின் கீழ் ஒரு சிறிய மிருதுவான தலையணை வைக்கப்பட வேண்டும். முழங்கால்கள் இரண்டும் மடங்கிய நிலையில் இரண்டு தொடைகளையும் படுக்கையின் விளிம்பிற்கு கொண்டு வர வேண்டும். இந்நிலையை அதிக நேரம் நீட்ட வேண்டுமானால் கணுக்கால்களை படுக்கையுடன் பிணைக்கப்பட்ட கடிவாளம் போன்ற கயிற்றில் கால்களை மாட்டி விட வேண்டும். இந்நிலை ஆசனவாய், குதம் மற்றும் பிறப்பு உறுப்புக்களை பரிசோதிக்கவும், அறுவை சிகிச்சையின்போதும் பயன்படும்.

குப்புற படுக்கும் நிலை

நோயாளி படுக்கையின் மீது வயிறு படும்படி படுக்க வேண்டும். தலையை ஒரு பக்கம் திருப்பி அதன் அடியில் ஒரு தலையணையை வைக்க வேண்டும்.

சுகாதாரம்

ஒரு மனிதனின் சுகாதாரம் என்பது தன் தூய்மை செயல்களான நன்கு குளித்தலும், சுத்தமான உடையணிதலும் ஆகும். மனிதனின் தோல், நகம், வாய், பல், கண், காது, நாசி துவாரங்கள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளும் தூய்மையாக பேணிக் காக்கப்பட வேண்டும்.

சுகாதாரத்தை அதிகப்படுத்தும் காரணிகள்

 1. வளர்ச்சி நிலை - தூய்மைக்குரிய பழக்கவழக்கங்களை குழந்தைகள் அவர்களுடைய வீட்டு சூழ்நிலைகளால் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு தகுந்தவாறு தங்களையும் மாற்றி கொள்கின்றனர். சில பழக்கவழக்கங்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒட்டி கொண்டுள்ளது. வயதாகும் போதும் சுரப்பிகளில் மாற்றம் ஏற்படும் போதும் தோலில் அணுக்கூறு அமைப்புகளில் மாறுபாடு தோன்றும் போதும் தன் சுகாதாரம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
 2. கலாச்சாரப் பிண்ணனி - தூய்மைக் கோட்பாடானது கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. (உம். வட அமெரிக்க பகுதி வாழ் மக்கள் தினசரியாக குளிப்பதினை வழக்கத்தில் கொண்டுள்ளனர். சில கலாச்சாரத்தினை பின்பற்றுபவர்கள் அவ்வழக்கத்தை பின்பற்றுவதில்லை).
 3. சமூக பொருளாதார நிலை - தூய்மையினைப் பேணிக்காக்கப் பயன்படும் பொருட்களை வாங்கும் தகுதி, பொருளாதாரத்தைப் பொறுத்தது.
 4. மதம் - பல மதங்கள் தன் சுத்தத்தை குறித்து சில விதிமுறைகளை கையாளுகின்றனர்.
 5. சுகாதார நிலை - அடிக்கடி நோய் வாய்ப்படும் மனிதன் தன் சுத்தத்தை பேணி காத்துக் கொள்வது இயலாத ஒன்றாக மாறி விடுகின்றது. அவர்களுடைய சக்தி குறைவினால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

தேவையான பாதுகாப்பும் வசதிகளும்

நோயாளியின் சுற்றுச்சூழல் வசதியாகவும் பாதுகாப்பாகவும், நோயாளியின் உடல் நல வளர்ச்சிக்கு ஏதுவாகவும் மீண்டும் நோய் திரும்ப வராமலிக்குமாறு அமைய வேண்டும். நோயாளியை காயப்படாமல் பாதுகாத்தலை பாதுகாப்பு என்கிறோம். மருத்துவமனையில் நோயாளியின் பாதுகாப்பில் பல முக்கிய கூறுகள் இடம் பெறுகின்றன. மருத்துவமனை கட்டிடம் உறுதியாகவும், ஸ்திரமானதாகவும் இருத்தல் வேண்டும் மற்றும் பார்வையற்றோர், வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், ஆபத்துக்காலத்தில் உடன் வெளியேறுவதற்கு வழிவகைகள் செய்திருத்தல் வேண்டும்.

செவிலியர் பாதுகாப்பு விழிப்புணர்வு பெற்றவராகவும், ஆபத்துக் காலத்தில் மருத்துவ மனையில் உடன் அனைத்து முயற்சியை எடுப்பவராகவும் இருத்தல் வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனுக்குடன் தெரிவிப்பவராகவும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை முறையை கையாளுபவராகவும் இருத்தல் வேண்டும்.

வசதிகள்

உடல் நலமும், மன நலமும் ஒருங்கே நல்ல நிலையில் இருப்பதை வசதி என்று கூறுகிறோம். உடல் செளகரியமானது அசுத்தமாக மற்றும் ஈரமான படுக்கை மற்றும் உடலில் ஏற்படும் பாதிப்புகளால் பாதிக்கப்படுகிறது. உடல் வெப்பநிலை ஈரமான படுக்கை, காற்றின்மை, அதிகமான சப்தம், அதிகமான வெளிச்சம் ஆகியவை நோயாளிக்கு இடையூறாக இருக்கும். நோயாளிக்கு வசதியாயிருக்க சில இயந்திரப் பொருட்களைப் பயன்படுத்தலாம். உடலின் பல்வேறு துணையாக தலையணையை உயபோகிக்கலாம். சில நேரங்களில் படுத்த நிலையில் தான் வசதியாக இருப்பதாக உணரும் நோயாளிகளுக்கு முதுகு சாய்வினை கொடுத்து அமரச் செய்யலாம்.

நோயாளிகளின் வயிற்றுப் பகுதி அறுவை சிகிச்சை முடிந்தபின்னர் வலியால் அவதியுறும் போது வயிற்றுப்புற தசைகள் ஓய்வு பெற முழங்காலை மடித்து வைத்தால் முழங்காலுக்கு ஓய்வு கிடைக்கும். இவை இல்லாத நிலையில் தலைணை அல்லது போர்வை அல்லது படுக்கை உறை போன்றவற்றை முழங்கால் ஓய்வுக்கு சாதனாமாக பயன்படுத்தலாம். நீண்ட நேரம் முழங்காலை நீட்டி வைப்பதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். எனவே நிலை அடிக்கொரு முறை மாற்றப்பட வேண்டும். பாதங்களுக்கு உறுதுணையாகவும் மற்றும் பாதத்தின் கீழ் பாதுகாப்பிற்கும் பாத ஓய்வுநிலை பயன்படுகிறது.

மற்ற வசதியளிக்கக் கூடிய கருவிகள்

காற்று வளையங்கள் அல்லது பஞ்சு வளையங்கள், காற்று படுக்கைகள் போன்றவை அழுத்தத்தினால் ஏற்படும் புண்களை தடுக்கிறது. மன செளகரியம், நோயாளியிடம் ஏற்படும் பயம், குழப்பம் மற்றும் கவலை போன்றவற்றை நீக்கி மனநிலையை சரி செய்ய வேண்டும்.

இயந்திர கருவியின் பயன்பாடுகள்

படுக்கை கம்பிகள் (Side rails)

படுக்கை பாதுகாப்பு கம்பிகள் நோயாளிகள் விழாமல் பாதுகாக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பார்வையற்றோர், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற நோயாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பு முறையை கையாள வேண்டும்.

முதுகு சாய்மானம் (Back rest)

இந்த சாதனம் பொதுவாக மரத்தால் அல்லது இரும்பால் ஆனதாக இருக்கும். இது நோயளிகளின் முதுகுப்புற ஓய்வுக்குப் பயன்படுகிறது.

படுக்கையின் மேல் மேசை (Cardiac Table)

இதய மேசை எனப்படுகின்ற இந்த மேசை, நோயாளியின் முன்புறம் மற்றும் அவர்களுடைய உயர்த்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்டு வைக்கப்படுகிறது. மேசையின் இரு புறமும் தலையணைகளை வைப்பதனால் நோயாளிக்கு அது ஒரு தாங்கலாகவும் இருக்கிறது. சாப்பிடுதல், படித்தல், மற்றும் எழுதுதல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

பாத தளம் (Foot rests)

இது மரத்தாலும், L வடிவத்திலும் ஆனது. அதன் ஒரு முடிவு பகுதி படுக்கை அடியிலும், மற்றொரு பகுதி முடிவு மடிந்து அசையாத வண்ணம் வைக்கப்படுகிறது. நோயாளி முகத்தை மேல் நோக்கியும், பாத பகுதியை ஓய்வு நிலையில் தட்ட மயமாக பாத தளத்தின் பரப்பிற்கு எதிராகவும் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பாத பகுதியை நன்றாக பாதுகாக்கலாம்.

உணவுகளை எப்போதும் மூடி வைக்கும் போது பாக்டீரியா, பூச்சி, மற்றும் பெருச்சாளி ஆகியவற்றினால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம். செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி இவை இரண்டும் நலமாய் வாழ்பவர்களுக்கு அவசியம். நாம் சாப்பிடும் போது, துணி மாற்றும் போது, குளிக்கும்போது, பல்விளக்கும்போது தினமும் செயல்திறனை நமது செயல்பாடுகளில் காட்டலாம்.

அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகள்

நம்முடைய தேவைகளை ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம். ஒரு மனிதன் தன்னுடைய தேவைகளை சந்திக்க பொறுப்பும் கவனமும் தேவை. உலக சுகாதார நிறுவன முடிவின்படி உடல் நல குறை உள்ளவர்களுக்கு அவர்களது அன்றாட தேவைகளை சந்திக்க நம்முடைய உதவி தேவை. உடற்பயிற்சி உடலில் காணப்படும் குறைகளை நீக்கக்கூடியதாகும்.

உடற்பயிற்சியின் பயன்கள்

 1. தசைகளை வலுவாக்குகிறது
 2. மலச்சிக்கலை தடுக்கிறது
 3. பசியை தூண்டுகிறது
 4. தூக்கத்தை ஊக்குவிக்கிறது
 5. இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது
 6. நுரையீரலின் இயக்கம் விரைவாக்கப்படுகிறது
 7. உடலின் பருமனை குறைக்கிறது
 8. மனதளவிலும், உடளளவிலும் சுகத்தை பெறச் செய்கிறது
 9. சிறுநீரகம் நன்கு வேலை செய்யச்செய்கிறது.
 10. உடலின் வெப்பநிலை ஒழுங்காக்கப்படுகிறது.

செய்வினை உடற்பயிற்சி

இந்த உடற்பயிற்சி உடலின் வேலைகளை ஆட்கொள்வதால் நோயாளியை சரிப்படுத்துகிறது. இந்த வகையான உடற்பயிற்ச்சிகள் மனரீதியான வேலைகளையும் உடம்பில் சரிப்படுத்துகின்றன. ஆழ்ந்த சுவாசமும், இரும்பும் உடற்பயிற்ச்சிகளும் நுரையீரலை விரிவடைய செய்கிறது. இது அறுவை சிகிச்சை செய்த நோயாளிக்கு பயன்படுகிறது. கை கால்களுக்கு செய்யும் உடற்பயிற்சியாகிய மடக்குதல், நீட்டுதல், அருகில் கொண்டு வருதல் வெளியே கொண்டு செல்லுதல், கையை சுற்றுதல் நன்றாக அசைவை உண்டாக்குகிறது.

பிராண வாயுவின் தேவைகள்

 1. எப்போதெல்லாம் இரத்தத்தில் பிராண வாயு குறைந்து நீல நிறமாக காட்டுகிறதோ அப்போ தெல்லாம் பிராண வாயு கொடுக்க வேண்டும்.
 2. நுரையிரலில் பிராண வாயு குறையும் போது axoxia, hypoxia ஏற்படுகிறது. பிராண வாயு கொடுப்பதன் மூலம் சரிசெய்யப்படுகிறது பிராண வாயுவின் அளவு இரத்தத்தில் 80 முதல் 100 mmHg இருக்க வேண்டும். அது 60 mmHg இருந்தால் irreversible உடலியல் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
 3. மூளையின் செல்கள் 20 சதவிதம் பிராணவாயுவை உடம்பிலிருந்து எடுத்து கொள்ள பிராணவாயு இல்லாமல் போனால் 3 முதல் 5 நிமிடங்களே உயிரோடுயிருக்க முடியும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.04285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top