பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய குடும்ப நலப் பணிகள்

தேசிய குடும்ப நலப் பணிகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

குடும்ப நல பணிகள்

 • சிறிய குடும்பங்கள் அமைத்தல்
 • தேவையில்லா கர்ப்பத்தை தடுத்தல்.
 • கர்ப்பிணிக்கு பாதுகாப்பு அளித்தல்
 • தாய்மைக்கால பராமரிப்பு (பிரசவிக்கும் முன் மற்றும் பின்)
 • தடுப்பூசி மற்றும் குழந்தை பராமரிப்பு
 • பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க பாதை தொற்றுநோய் பராமரிப்பு

குடும்ப நல திட்டங்கள்

செவிலியர் சேவை எல்லாத் துறைகளிலம் முக்கியத்துவமானது. குறிப்பாக எல்லா வட்டம், மாவட்டம், கிராம புற மக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டங்கள் கீழ்கண்டவை:

 • தேசிய குடும்ப நல திட்டங்கள் - இத்திட்டம் ஆரம்பித்த வருடம் 1951. இதனுடைய முக்கிய நோக்கம் பிறப்பு விகிதத்தை குறைத்தல், ஜனத்தொகையை குறைத்தல், அதற்கு தேவையான தேசிய பொருளாதார நிலைகளை மேம்படுத்துதல் ஆகும்.
 • தேசிய மக்கள் தொகை முறை - இம் முறையானது 2000த்தில் அரசாங்கத்தால் முழு ஒத்துழைப்பு அளிக்கக்கூடிய, குடும்பங்களுக்கு குடும்பநலப் பணிகளை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
 • தேசிய கிராம உடல் நலத் திட்டங்கள் - இத்திட்டம் 2005 - 12 வரை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நம் நாட்டின் எல்லா கிராமப்புற மக்கள் சிறப்பு நலன் கருதி, நாடு முழுவதும் பதினெட்டு மாநிலங்களில் அமல்படுத்தப் பட்டு, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
 • நகர குடும்பநலத் திட்டங்கள் - இத்திட்டம் நகரத்தில் வாழும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உடல் நல சிகிச்சை மையம் அமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
 • குடும்பக் கட்டுப்பாட்டு படுக்கை திட்டங்கள் - இத்திட்டமானது மருத்துவமனைகள், அரசாங்கத்தால் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் 1964 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது, குடும்ப கட்டுபாடு செய்த மகளிருக்கு தகுந்த வசதிகளை உடனடியாக செய்வதற்காக தொடங்கப்பட்டது.
 • குழந்தை பாதுகாப்பு மற்றும் தாய்சேய் நலப்பராமரிப்பு - இத்திட்டம் 1992 ஆம் ஆண்டு நோய் தடுப்பு தடுப்பூசித் துறையில் முன்னேற்றம் கொண்டுவர ஆரம்பிக்கப்பட்டது.
 • இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலத்திட்டங்கள் - இத்திட்டமானது அக்டோபர் 1997 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது இதனுடைய முக்கியமான நோக்கமானது, குழந்தை மற்றும் பாதுகாப்பான தாய் சேய் திட்டம்.
 • மிஷனரி செயல்படுத்துதல் - அரசு மாநில அளவிலான முறையில் முழுவதுமாக செயல்படுத்தப்பட்டது. கிராமப்புற பகுதியில் துணை நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய சுகாதாரக் கூடம்.
 • சமுதாயத்தில் கருத்தடை சாதனங்களை சந்தையிடுதல் - குஜனத் தொகை பெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் கருத்தடைச் சாதனங்கள், காண்டம் மற்றும் கருத்தடை மாத்திரைகள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 • மருத்துவ முறைகருகலைப்பு - சட்டத்திற்கு புறம்பான கருசிதைவு செய்யும் போது தாயின் இறப்பு விகிதம் 12% ஆகும். பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தடுக்க வேண்டும். இது அமலுக்கு கொண்டு வந்த வருடம் 1971. 20 வாரத்திற்கு உட்பட்ட கர்ப்பம் தரித்த தாய்க்கு கருகலைப்பு செய்யப்படுகிறது. பிரசவித்தால் தாய்க்கு பாதிப்பு ஏற்படுமானால், பலாத்காரம் மற்றும் கருத்தடை சாதனங்களால் தோல்வி போன்ற சந்தர்பங்களில் கருகலைப்பு செய்யப்படுகிறது.
 • மகப்பேறுக்கு முன் பாலினத்தை தீர்மானித்தல் - சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஒன்று பிறக்கும் குழந்தை என்ன பாலினம் என்று பரிசோதிப்பது. மகப்பேற்றுக்கு முன் பரிசோதனை செய்யும் முறையை கையாண்டு; சட்ட விரோதமான செயலில் ஈடுபடுகின்றவர்களக்கு தண்டனை அளிக்க வேண்டும்.

பணியில் முக்கிய குறிப்புகள்

 • தாய் சேய் நலம் பேணிகாத்தல்.
 • கருத்தடைச் சாதனங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம்.
 • பிரசவிக்காத தாய்க்கு பாதுகாப்பான மேலாண்மை அவசியம்.
 • மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து பணிகள் அளிக்க வேண்டும்.
 • சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கை RTI/SIT.
 • தாய்மை கால பிரச்சனைகள் ஏதாவது இருப்பின் சிகிச்சை அளிக்க வேண்டும்.
 • மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய், மற்றும் கருப்பை புற்றுநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் முன்பரிசோதனை (Screening) செய்ய வேண்டும்.

பணி அமைப்பு

தாய்மார்கள்:

 • சுகாதார பணியாளர்களால் எல்லா பிரசவிக்கின்ற தாய்களையும் பதிவு செய்தல்.
 • பிரசவிக்கின்ற எல்லா குழந்தைகளையும் பதிவு செய்தல் அவசியம்.
 • பாதுகாப்பான மகப்பேற்றுக்கு முன் கவனிப்பு அளிக்க வேண்டும். (உதாரணங்கள், ரணஜன்னி தடுப்பூசி, இரும்பு போலிக் அமிலம் அடங்கிய மாத்திரைகள்)
 • மருத்துவமனையில் தான் பிரசவம் நடக்க வேண்டும்.
 • சிக்கல்கள் உள்ள நோயாளிகளை சிக்கல்களை தீர்க்கும் இடங்களுக்கு அனுப்புதல்.
 • பிரசவத்திற்க்கு பின் தாய்மார்களை 3 முறை பரிசோதிக்க வேண்டும்.
 • குறைந்தது மூன்று வருட கால இடைவெளி ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு

 • தாய்மார்கள் பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மட்டுமல்லாமல், குழந்தையின் எடையை சரிபார்த்தல், குழந்தை வெது வெதுப்பான நிலையில் வைத்தல் இவையெல்லாம் முக்கியமாக பிறந்த குழந்தைக்கு செய்ய வேண்டும்.
 • சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு குறைமாதக் குழந்தைக்கோ அல்லது எடை குறைவாக பிறக்கும் குழந்தைகோ அளிக்க வேண்டும்.
 • சுகாதார நிலையங்களில் குழந்தைக்கு ஏதாவது சிக்கல்கள் இருந்தால் கண்காணிக்க வேண்டும்.
 • தாய்ப்பால் முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
 • BCG, DPT, போலியோ, தட்டம்மை தடுப்பூசிகள் அளிப்பதன் மூலம் குழந்தைக்கு இறப்பு விகிதத்தையும் மற்றும் குறைப்பாடுகளையும் தடுக்கலாம்.
 • குழந்தைகளுக்கு தீவிர சுவாச சம்பந்தப்பட்ட நோய்த்தொற்றை குறைக்க வேண்டும்.
 • பெற்றோர்க்கு உப்புச் சர்க்கரை கரைசல் முறையை சொல்லிக் கொடுத்தல்.
 • குழந்தைகளுக்கு 6 தவணைகள் விட்டமின் A அளிக்க வேண்டும்.
 • இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

குடும்பக்கட்டுபாட்டு முறைக்கு தகுதிவாய்ந்த தம்பதிகள்

 • குடும்ப கட்டுபாட்டு முறைக்கு தகுதியாகும் தம்பதிகளுக்கு கருத்தடை சாதனங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், என்னென்ன கருத்தடைச்சாதனங்கள் தேவைப்படுகிறதோ அதை சரியான முறையில் தேர்ந்தெடுத்துக் உபயோகித்துக் கொள்ளும் முக்கியமான முறைகளை சொல்லித்தர வேண்டும். உறை, கருத்தடை மாத்திரைகள், கருத்தடை கருவிகள் ஆண் மற்றும் பெண், கருத்தடை முறைகள் பற்றி கற்றுத்தர வேண்டும்.
 • மருத்துவ முறையின் மூலம் கருத்தரிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்படுவதையும், பாதுகாப்பான பிரசவிக்கக் கூடிய நிலையையும் மேற்கொள்ள முடியும்.

நன்மைகள்

 • ஜனனி சுரக்ஷா யோஜனா : இது தேசிய தாய் சேய் நல கவனிப்புகள் என்று மாற்றி அமைக்கப்பட்டது. கிராம புறங்களில் தாய்களை பார்வையிடுவதற்கு ரூ. 700/ம் நகர்புறங்களில் ரூ. 600/-, ஆஷா மூலம் போக்குவரத்து செலவு, பிரசவிக்கும் தாய்க்கு கொடுக்கப்படுகிறது.
 • Dr. முத்துலஷ்மி தாய்சேய் பராமரிப்பு : எல்லா பிரசவிக்கும் பெண்களுக்கும் மாநில அளவில் ரூ.6000 பணவரவு கிடைக்கும்.
 • டிக்கிரி யோஜனா : இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆண் வாரிசு இல்லாமல் நிரந்தர கருத்தடை செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலமாக ரூ. 600 மற்றும் ரூ. 5000 ரூபாய் கொடுக்கப்படுகிறது.
 • வருமுன் காப்போம் திட்டம் - தற்காலிக பொருட்களைக் கொண்டு நல்ல சிறப்புமிக்க குழு உறுப்பினர்களை வைத்து பராமரித்தல்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

3.01851851852
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top