பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நோயாளிகளுக்கு உணவு தயாரித்தல்

நோயாளிகளுக்கு உணவு தயாரித்தல் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உணவு என்பது மருந்தைப்போல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய முக்கியமான ஒன்றாகும், உணவு முறைகள் (அ) ஊட்டச்சத்து அடங்கிய உணவுகளை அளிப்பது, சில நோய்களை குணமாக்கும். (உ.தா). நோயாளி வயிற்றுப் புண்ணினால் பாதிக்கபட்டிருந்தால், எளிதில் ஜீரணமாகக்கூடிய மிதமான உணவுகளை அளிக்க வேண்டும். நோயாளிக்கு உப்பற்ற உணவை அளிக்கும் போது, இரத்த அழுத்தத்தையும் அதனுடன் இரத்தக் கொதிப்பையும் குறைக்க முடியும், ஒவ்வொருவருக்கும் சாப்பிடுவதே வேலையாகும். ஒரு நபருக்கு உடல் நலம் பிரச்சனைகள் இருக்கும் போது, உணவு உட்கொள்வதுக் கூட பிரச்சனையாக அமையும்.

திரவ உணவு

திட உணவு சகித்துக்கொள்ள முடியாத நிலையிலோ (அ) எடுத்துக் கொள்ள முடியாத நிலையிலோ நோயாளிக்கு, திரவ உணவு உபயோகிக்கலாம். முழு திரவ உணவு மற்றும் தெளிவான திரவமோ, திரவ உணவாகும்.

தெளிவான திரவம் :

நார்சத்து மற்றும் சகித்து கொள்ள முடியாத திட உணவுகளை கொடுக்க முடியாதவர்க்கு, திரவத்தை பயன்படுத்தலாம். இதில் உட்படுத்துவது தெளிவான தேநீர், கருப்பு காபி, தெளிவான சூப்ஸ், இளநீர், பழச்சாறுகள், சோடா நீர் மற்றும் இதர காற்று ஏற்றப்பட்ட பானங்கள்,

தெளிவான தேநீர் :

கொதிக்க வைப்பதற்கு நீரை தயாராக வைக்க வேண்டும். ஏற்கனவே கொதிக்க வைத்த நீரை உபயோகித்தால் வாசனை சிதைந்து விடும், நீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், டீ பார்ட்டில், சிறிதளவு ஊற்றி மிதமாக வைக்க வேண்டும், தேயிலைகளைத் தேநீர் பாத்திரத்தில் போட்டு அதன்மீது கொதிக்கும் நீரை ஊற்றி 3-5 நிமிடங்கள் இருக்க விட்டு, வடிகட்டி மற்றும் ஊற்று கொதித்த நீரை நீர்த்த நிலையில் கலந்து, சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் சர்க்கரை கலந்து ருசிக்காக கொடுக்கலாம்.

கருப்பு காபி

தூய்மையான காபி பவுடர் - ஒரு மேசை கரண்டி

தூய்மையான கொதித்த நீர் - 300 மி.லி.

காபி பாத்திரத்தை சூடுபடுத்தி காபி பவுடரை போட்டு, கொதிக்கும் நீரை ஊற்றி 10 நிமிடங்கள் நெருப்பில் வைக்க வேண்டும். கருப்பு காபியை வடிக்கட்டி தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்.

தெளிவான சூப் :

தெளிவான சூப்பிற்கு அடிப்படை மாமிச மேல் உறையாகும். மாமிச மேல் உறையில் இரண்டு பைன்ட் நீரை ஊற்றி எலும்புகள் (அ) மாமிசத்தில் வைக்க வேண்டும், சில எலும்புகளை துண்டாக்கியும் மற்றும் மாமிச துண்டுகளையும் குளிர்ந்த நீரில் போட்டு சிறிதளவு உஷ்ண நிலையில் வைக்க வேண்டும். சிறிதளவு உப்பை சேர்த்து, மணத்தை அதிகப்படுத்தி, மாமிச மேல் உறையை குறைந்தது 2-3 மணி நேரங்கள் வேகும் வரை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். பிறகு குளிர வைத்து மாமிசத் துண்டுகளை மெல்லிய மஸ்லின் துணிகள் மூலம் வடிக்கட்ட வேண்டும். அதையே சூப்பாகவோ (அ) அதனுடன் காய்கறிகளும், வாசனை திரவியங்களும் சேர்த்து வடிகட்டி பரிமாறலாம்.

பழச்சாறு:

பழச்சாறை புதிதான பழங்களிலிருந்தோ (அ) ஏற்கனவே தாயரிக்கப்பட்ட பழச்சாற்றை நீர்த்தோ (Squash), சிட்ரஸ் பழங்களிலிருந்து சாறுகளை நீக்கி, பிழிந்து, வடிகட்டி, நீர்த்து அதனுடன் நீரை கலந்து மற்றும் சர்க்கரை கலந்து (அ) குளுக்கோஸ் கலந்து சுவைமிக்கதாக குடிக்கலாம்.

பழகங்களை (உதாரணம்: ஆப்பிள், தக்காளி) சிறிதளவு நீரை ஊற்றி வேகவைத்து கூழாக்கி வடிகட்டி, சுவைக்காக சிறிதளவு நீர் மற்றும் சர்க்கரை (அ) குளுக்கோஸ் சேர்க்க வேண்டும்.

பச்சையான தக்காளி ஜூஸ்:

கனிந்த, சாறுள்ள தக்காளிகளை தேர்ந்தெடுத்து, கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் வைக்கும் போது தோல் தளர்ந்து விடும், தோலை நீக்கி, தக்காளிகளை நசுக்கி மற்றும் அழுத்தி வடிகட்டி மென்மையான ஐஸ் பகுதியை சாத்தியமான முறையில் பயன்படுத்தலாம். சுவைக்காக உப்பு மற்றும் மிளகுப்பொடியை சேர்க்கலாம். சில சமயங்களில் சர்க்கரையும் பயன்படுத்தலாம்.

பார்லி நீர்:

குளிர்ந்த நீரைக் கொண்டு பார்லி பொடியை குழகுழப்பாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக சூடான நீரை சேர்த்து எல்லா நேரமும் கலக்கி கொண்டே இருக்க வேண்டும். 30 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து, உப்பு மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து பயன்படுத்துவதற்குமுன் மற்றும் வடிகட்ட வேண்டும்.

முழு திரவ உணவு

தேநீர் மற்றும் காபி: தேநீர் மற்றும் காபி, தெளிந்த திரவத்தில் தயாரிக்கப்பட்டு மற்றும் வெப்பமாக பரிமாறி அதனுடன் பால் (அ) க்ரீம் மற்றும் சர்க்கரை (அ) குளுக்கோஸ் இவையெல்லாம் சுவைக்காக சேர்க்கப்படுகிறது.

பருப்பு சூப்

1. 1/2 கப் பருப்பு

2. 2 கப் நீர்

3. 1 பெரிய வெங்காயம்

4. உப்பு

பருப்பை அரைக்க வேண்டும். வெங்காயத்தை வதக்கி எல்லாப் பொருட்களையும் சேர்த்து 20 - 30 நிமிடத்திற்கு கொதிக்க வைக்க வேண்டும்.

காய்கறிகள் சூப்:

1/4 கப் நறுக்கிய காய்கறிகள்

2. கப் மாமிச உறை

சிறிய அளவு வெண்ணெய் (1 தேக்கரண்டி)

உப்பு மற்றும் மிளகு தூள்

நறுக்கிய காய்கறிகளை தயார் செய்தல். கொதிக்க வைத்த நீரில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு பொடியை சுவைக்காக சேர்த்து, நுட்பமான முறையில் காய்கறிகளை மென்மையான நீரில் கொதிக்க வைக்க வேண்டும். 15 கி மாவை குளிர்ந்த நீரில் கலக்கி, ஏற்கனவே வேகவைத்ததை சேர்த்து, கடினத்தன்மை அடையும் வரை சூடாக்க வேண்டும். தேவைப்பட்டால் காய்கறிகளை வடிக்கட்டியினால் அழுத்தியும் சூப் தயாரிக்கலாம்.

இலேசான சில தானிய தயாரிப்புகள்

1) இரண்டு தடவை கொதித்த அரிசி

2) 2 மேசைக் கரண்டி அரிசி

3) சிட்டிகை உப்பு

4) 240 மி லி பால் / நீர் (அ) பாலும் மற்றும் நீரும் கலந்தது.

அரிசியை கழுவி, பாலில் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் 1/2 மணி நேரம் வைத்து மென்மையான வெந்த நிலை வரும்வரை வைக்க வேண்டும். பரிமாறுவதற்கு முன் விருப்பம் போல் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

கேழ்வரகு கஞ்சி:

அரைத்த கேழ்வரகு மாவை 2 (அ) 3 தடவைகள் மஸ்ஸின் துணியினால் சலித்து 1 மேசைக்கரண்டி, கேழ்வரகு மாவை குளிர்ந்த நீரில் சேர்த்து கலக்க வேண்டும். பின் படிப்படியாக 300 மி. லி. கொதித்த நீரை அதனுடன் சிட்டிகை உப்பை சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். தயாரான பிறகு சிறிதளவு நீரோ மற்றும் சிறிதளவு பாலோ சேர்த்து உபயோகிக்க வேண்டும்.

அரரூட் கஞ்சி:

2 தேக்கரண்டி அரரூட்

125 மி லி சூடான நீர்

சர்க்கரை (சுவைக்காக)

1 தேக்கரண்டி குளிர்ந்த நீர்

125 மி.லி. சூடான பால்

சிட்டிகை உப்பு

அரரூட் மாவை குழகுழப்பாக்கப்பட்டு, அதனுடன் குளிர்ந்த நீரை சேர்த்து மற்றும் சூடான நீரை படிப்படியாக சேர்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து தொடர்ந்து கலக்க வேண்டும். அதனுடன் பால் மற்றும் உப்பை சேர்த்து 10 நிமிடங்களுக்கு மேல் கொதிக்க வைக்க வேண்டும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்.

பார்லி கஞ்சி

1 மேசைக் கரண்டி தயாரிக்கப்பட்ட பார்லி மாவு

2 மேசைக்கரண்டி குளிர்ந்த நீர்

1/4 தேக்கரண்டி உப்பு

125 மி.லி. மிதமான பால்

125 மி.லி. கொதித்த நீர்

பார்லி மாவு குழகுழப்பாக்கப்பட்டு அதனுடன் குளிர்ந்த நீரை கலக்கி, சிறிது சிறிதாக சூடான நீரை சேர்த்து கலக்க வேண்டும் மற்றும் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து பால் மற்றும் உப்பு சேர்த்து மற்றும் கொதிநிலை வந்தவுடன் இறக்க வேண்டும்.

மென்மையான உணவு

இது ஒரு அடிக்கடி பயன்படுத்தக் கூடிய தினசரி உணவு வகையாகும், நீண்ட நாள் வியாதியிலிருந்து விடுபட்டவர்களுக்கும் மற்றும் தீவிர பலவீனமினமான நோயாளிக்கும் அளிக்கப்படுகிறது. தீவிர நோய்த்தொற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

  • சாதாரண உணவு
  • எளிதில் ஜீரணிக்கக்கூடியவை
  • நார்ச்சத்து இதில் இல்லை
  • சாதாரண உணவு வகையை சார்ந்தவை
  • அதிகப்படியான வாசனைப் பொருட்களோ (அ) தானியங்களோ கலக்காதது.
  • அவை சாதாரணமான, அடிப்படையான, திட்டமிடப்பட்ட, போதுமான ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவாகும்.

இலேசாக ஆவியில் வேக வைத்த உணவு

பழ ஜெல்லி:

500 மி.லி ஜூஸ் (அ) சாறு

100 கி. சர்க்கரை

20 கி பொடியாக்கப்பட்ட ஜெல்லாட்டின்.

எல்லா பொருட்களையும் பாத்திரத்தில் இட்டு, சூடாக்கி கலக்கிக் கொண்டு இருக்க வேண்டும். ஏற்கனவே கழுவிய, அச்சில் ஊற்றி படியும் வரையோ (அ) குளிர்சாதனம் பெட்டியிலோ வைத்தல். பரிமாறும் போது குளிர்ந்த நிலையில் வைத்து பரிமாறுதல்.

மக்காச்சோள மாவு புட்டிங்

500 மி.லி பால்

மெல்லிய எழுமிச்சை சாறு பிழிந்து வைத்துக் கொள் (அ) ஆரஞ்சு தோல் (அ) இதர மாவுகள்

30 கி சர்க்கரை

15 கி கஸ்டர்டு பொடி

30 கி மக்காச்சோள மாவு

சாஸ்பேனில் 3 பங்கு பாலை ஊற்றி, அதனுடன் ஆரஞ்சு தோல் (அ) மற்ற வாசனைப்பொருட்களை சேர்க்க வேண்டும். மெதுவாக கொதிக்கும் போது சர்க்கரை மற்றும் சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும். மக்காச்சோள மாவையும் மற்றும் கஸ்டர்டு பொடியையும் மீதமுள்ள குளிர்ந்த பாலில் கலக்க வேண்டும். நன்றாக கலக்கி மக்காச்சோள மாவு மற்றும் சுவையான பொடியை சூடான பாலில் கலக்கி ஊற்றவேண்டும். நன்றாக கெட்டியாகும் வரை சில மணி நிமிடங்கள் கட்டிப்படும் வரை திரும்பவும் சூடுபடுத்த வேண்டும், தனித்தனி அச்சுகளில் ஊற்றி குளிர்ந்து பதமாகும் வரை வைக்க வேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.97727272727
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top