பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நோயாளியின் நிலையை மாற்றுதல்

சுயநினைவற்ற நோயாளியின் நிலையை படுக்கையில் மாற்றுதல் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

வரையறை

சுயநினைவற்ற நோயாளியின் நிலையை படுக்கையில் அடிக்கடி மாற்றுவதற்கு திருப்புதல் முறை என்று பெயர். படுக்கையில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை நோயாளியை திருப்பி நிலையை மாற்றவேண்டும்.

நோக்கங்கள்

* படுக்கையில் திருப்பிப் படுக்க வைப்பதால் சிரைவழி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துதல்

* சுவாசமண்டலத்தின் வேலையை முன்னேற்றுதல்

* செரிப்பு மண்டலத்தின் வேலையை சீராக்குதல்

* குடல் அசைவுகளை முன்னேற்ற

* தோலின் மேற்பரப்பில் அழுத்தம் ஏற்படுவதை தடுக்க

* படுக்கை புண்ணை தடுக்க

காரணிகள்

* சுயநினைவற்ற நோயாளிக்கு 2 மண நேரத்துக்கொரு முறை நிலையை மாற்ற வேண்டும்.

* அசைய முடியாத நிலையில் இருக்கும் நோயாளிக்கு

* எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகளை அசைப்பதற்கு

* மோசமான நிலையில் காயம் அடைந்துள்ள நோயாளியை திருப்புவதற்கு

தேவைப்படாதவர்கள்

* மருத்துவரின் ஆணை அனுமதிக்கப்படவில்லை என்றால் நோயாளியை திருப்பக் கூடாது.

* அந்த நிலையில் வலி இருந்தால் நோயாளியை திருப்பக்கூடாது.

* அந்த நிலையில் நோயாளி வசதியின்மையை உணர்ந்தால் நிலையை மாற்றக் கூடாது.

செய்முறையை திருப்புதல் (Review of Procedure)

* மருத்துவரின் ஆணை மற்றும் செவிலிய கவனிப்பு திட்டத்தின் செயல் முறையை திருப்பிப் பார். அசைவுக் கட்டுப்பாடு மற்றும் நோயாளியை திருப்புவதற்கு நோயாளியை பார்த்துக் கொள்பவரிடம் இருந்து ஏதாவது பிரச்சனைகள் தென்பட்டால் அதற்கேற்றபடி நோயாளியை திருப்புவதற்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

* நோயாளியை நிலைப்படுத்துவதற்கு உதவி மற்றும் ஆதாரங்கள் தேவைப்பட்டால் சேகரிக்கவும்.

* நோயாளியை தெரிந்தெடுத்து, செய்யவிருப்பதை நோயாளிக்கு விளக்கி சொல்லவும்.

* கை சுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். தேவைப்பட்டால் கையுறையை அணியலாம்.

* அறையின் கதவு மற்றும் ஜன்னல் துணிகளை மூடவும். படுக்கையை சரியாக, வசதியான, வேலைசெய்யும் உயரத்தில் அமைக்க வேண்டும்.

* நோயாளியின் தலைப்பகுதியை சமநிலைக்கு அல்லது சுலபமாக நிலையை மாற்றுவதற்கு ஏற்றவகையில் ஆதாரத்துடன் முடிந்த அளவு கீழே இறக்கலாம்.

* உனக்கருகில் உள்ள படுக்கையின் பக்க கம்பியை உயரமாக இருந்தால் கீழே இறக்கவும். அது சரியாக இருந்தால் நோயாளிக்கு அடியில் உராய்வுத் தன்மையை குறைக்கக்கூடிய துணிகளை போடவேண்டும்.

* உராய்வுத் தன்மையை குறைக்கக்கூடிய படுக்கைத் துணியைக் கொண்டு நோயாளியை படுக்கையின் ஒரத்திற்கு கொண்டு வரவேண்டும், திருப்பப் படக்கூடிய எதிர் திசையில் படுக்கை பக்க கம்பிகளை உயர்த்தி, நோயாளியை எதிர்பக்கத்துக்கு திரும்பவும்.

* எந்தப்பக்கத்துக்கு நோயாளியை திருப்ப வேண்டுமோ அதற்கு பக்கத்தில் உள்ள பக்க கம்பிகளை கீழே இறக்கு.

* தோள்பட்டைக்கு ஏற்றவகையில் கால்களை அகலமாக ஒன்றன்பின் ஒன்று வைத்து நோயாளிக்கு எதிர்திசையில் நிற்க வேண்டும். புட்டத்தசைகளையும் வயிற்று தசைகளையும் இறுகப்பிடித்து முழங்காலை மடக்க வேண்டும்.

* நீங்கள் நிற்பதற்கு எதிரில் படுக்கையை வசதியிருந்தால் கருவிகளின் உதவியால் செயல்படுத்தவும்.

* நோயாளியின் தோள்பட்டை மற்றும் இடுப்புப் பகுதியின் மேல் கையை வைத்து உன்பக்கமாக நோயாளியை உருட்டவும் அல்லது உராய்வை குறைக்கும் படுக்கை துணியை பயன்படுத்தி மெதுவாக நோயாளியை பக்கத்தில் இழுக்கவும்.

* நோயாளியின் முதுகுப் பகுதிக்கு பின்னால் தலையணை (அ) மற்ற ஆதாரங்களை பயன்படுத்தவும். நோயாளியின் தோள்பட்டைக்கு பின் இருப்பதை எடுத்துவிடவும். நோயாளியின் கால் மற்றும் கைகளுக்கு தேவைப்பட்டால் தலையணை மற்றும் ஆதாரங்களை கொடுத்து சரியான நிலையில் நோயாளியை வசதியாக வைக்கவும். நோயாளியின் தலைக்கு கீழ் தலையணையை சரிப்படுத்து. தேவைக்கேற்ற வசதியான நிலையில் நோயாளியின் தலையை உயர்த்தி வைக்கவும்.

தொகுப்பு (Summary)

* சுயநினைவற்ற நோயாளியை படுக்கையில் நிலையை அடிக்கடி மாற்றுவது திருப்புதல் முறை என்று பெயர்.

• இரண்டு மணி நேரத்துக்கொருமுறை நிலையை திருப்ப வேண்டும்

• திருப்புதலின் நோக்கங்கள் படுக்கை புண்ணை தடுப்பதற்கும், தோலின் மேல் ஏற்படும் அழுத்தத்தை தடுப்பதற்கும்.

* நோயாளி வசதியின்மையுடன் இருந்தால் நிலையை மாற்றக் கூடாது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

3.02272727273
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top