பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிராணவாயு அளித்தல்

பிராணவாயு அளித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வரையறை

சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சையளிப்பதால் அனாக்சிமியா (இரத்தத்தில் ஆக்சிஜன் இல்லாத நிலை) அல்லது ஹைபாக்சீமியா (இரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்து காணப்படுதல்) போன்றவற்றை சரிசெய்யலாம்.

ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படுபவர்கள்

1. நீலம்பாரித்திருப்பவர்கள் (தோல், நகபடுக்கை மற்றும் சவ்வுப்படலம் நீல நிறத்தில் காணப்படுதல்)

2. மூச்சுத்திணறல்

3. சுற்றுப்புறசூழ்நிலையில் போதுமான ஆக்சிஜன் இல்லை என்ற நிலையில் எ.டு. உயரமான இடங்களில்

4. இரத்த சோகை

5. நோய்கள் அல்லது தந்துகி படலங்களில் ஆக்சிஜன் குறைந்து காணப்படுதல்

6. அதிர்ச்சி மற்றும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டவர்கள்

7. இரத்தபோக்கு மற்றும் மூச்சடைப்பு

8. மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகள்

ஆக்சிஜன் செலுத்தும் முறைகள்

1. மூக்குத்துளை வழியாக ஆக்சிஜன் செலுத்துதல்

2. மூச்சுக்குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்துதல்

3. முகமூடி முறையில் ஆக்சிஜன் செலுத்துதல்

4. பிராணவாயுக் கூடாரம்

மூக்குத்துளை (Nasal cannula) :

மூக்குத்துளை மூலம் செலுத்துவது எளிதான வசதியான முறை. நிமிடத்திற்கு 4 லிட்டர் / நிமிட ஆக்சிஜன் செலுத்தலாம்.

1 லிட்டர் = 24% 2 லிட்டர் = 28%

3 லிட்டர் = 32% 4 லிட்டர் = 36%

மூக்குக்குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்துதல் :

ஆக்சிஜன் செலுத்துதலில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் முறை. நிமிடத்திற்கு 1 - 4 லிட்டர் ஆக்சிஜன் செலுத்தப்படலாம். ஆக்ஸிஜன் அடர்த்தி 22-30%

முகமூடி முறையில் ஆக்சிஜன் :

இதில் பல வகைகள் உண்டு

• எளிய முகமூடி (Simple mask) : 5 - 10 லிட்டர் / நிமிடம், ஆக்சிஜன் அடர்த்தி : 40 - 60%

* பாதி திரும்ப சுவாசிக்கும் முகமூடி (Partial Rebreath able mask) : செலுத்தும் தன்மை - 6 - 15 லிட்டர் / நிமிடம், ஆக்சிஜன் அடர்த்தி : 50 - 90%

• திரும்ப சுவாசிக்கும் தன்மையற்ற முகமூடி : செலுத்தும் தன்மை 6-15 லிட்டர் / நிமிடம், ஆக்சிஜன் அடர்த்தி 70-100%

• வெண்ட்சரி முகமூடி (Venture mask) : ஆக்சிஜன் அடர்த்தி : 24 - 50%

பிராணவாயுக் கூடாரம் : செலுத்தும் தன்மை 8 - 12 லிட்டர் / நிமிடம், ஆக்சிஜன் அடர்த்தி 24 - 100%

ஆக்சிஜன் செலுத்துவதால் ஏற்படும் இடர்பாடுகள்

• தொற்று

* தீவிபத்து (combustion)

* மூச்சுப்பாதையில் உள்ள சவ்வுப்படலம் உலர்தல்

* ஆக்சிஜன் நச்சு

* நுரையீரல் சிதைதல் (Atlectasis)

* ரீட்ரோலெண்டல் பைபிரோபிளேசியா (Retiolental Fibroplosias)

* மூச்சடைத்தல் (Asphyxia)

பொருட்கள்

நோக்கங்கள்

அ. ஆக்சிஜன் சிலிண்டர் அதனுடன்

• தாங்கி மற்றும் உபகரணங்கள் (ரெகுலேட்டர், ப்ளோமீட்டர், உஃல்ப் பாட்டில் (Humidifier) இணைக்கும் குழாய்).

• முழு அமைப்பும் சரியான நிலையில் வேலை செய்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

ஆழ்ந்த சுவாசம் தொண்டைப் பகுதியை இளைப்படையச் செய்யும். சிறிய இடைவெளி வாந்தி எடுத்தலை தடுக்கும்.

தேவையான பொருட்களை தயார் செய்தல்

பொருட்கள்

நோக்கங்கள்

ஆ. 1. ஒரு தட்டில் சுத்தமான மற்றும் நுண்ணுயிரறச் செய்யப்பட்ட அல்லது திரும்ப பயன்படுத்தாத வகையிலான மூச்சுக்குழாய் தேவையான அளவில்

2. நீரில் கரையக்கூடிய உயவுத்தன்மை யுள்ள ஜெல்லி

3. ஒட்டும் பிளாஸ்திரி

4. ஒரு கிண்ணத்தில் தண்ணீர்

5. விளக்கு மற்றும் நாக்கு அழுத்தி

6. சாதாரண சலைன் கரைசல் மற்றும் பஞ்சு சுற்றிய குச்சிகள்

7. கழிவுத்தட்டு மற்றும் காகிதப்பை

8. இரப்பர் விரிப்பு மற்றும் துவாலை

9. துண்டுத்துணி (அ) சல்லாத்துணி

1. ஆக்சிஜன் செலுத்தும்போது சுவாசப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க.

2. குழாயின் உயவுத்தன்மைக்கு

3. குழாயை சரியான நிலையில் பொருத்த

4. ஆக்ஸிஜன் வெளியேறு வதை பரிசோதிக்க

5. குழாயின் சரியான நிலையைக் கண்டறிய பயன்படும்.

6. மூக்குத்துளையை சுத்தம் செய்வதற்கு

7. கழிவுகளை சேகரிக்க

8. துணிகளை பாதுகாக்க

9. வாய் மற்றும் மூக்கிலுள்ள சளித்திரவங்களை துடைக்க

செய்முறையின் படிகள்

காரணங்கள்

கைகளை கழுவு

குறுக்குத் தொற்றை தடுக்க

குழாயின் நீளத்தை மூக்கின் நுனியிலிருந்து காதுமடல் வரை அளவிட வேண்டும். நீளத்தை மையினால் குறித்து வைக்க வேண்டும்.

மூக்கின் நுனிப்பகுதிக்கும் காது மடலுக்கும் இடைப்பட்ட தூரம் தோராணமாக முன் மூக்கு பகுதிக்கும்  உள்நாக்குக்கும் இடைப்பட்ட தூரத்திற்கு சமமாக இருக்கும்.

சிலிண்டர் சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதித்துப் பார்க்கவும். முக்கிய வால்வை கடிகாரமுள் அசைவுக்கு எதிர்திசையில் திறக்கவும். வால்வைத் திறந்து எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதை கவனிக்கவும். நிமிடத்திற்கு 2-4 லிட்டர் செல்லுமாறு அமைக்கவும்

ஆக்சிஜன் செலுத்துவதற்கு முன்னால் சிலிண்டரை பரிசோதிப்பதால் சிலிண்டரில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்க உதவும் மற்றும் முழு அமைப்பும் சரியான நிலையில் வேலை  செய்கிறதா இல்லையா என்பதை. கண்டறியலாம்.

சக்கர வால்வைத் திறந்தவுடன் ஆக்சிஜன் உல்ஃப்பாட்டிலில் உள்ள தண்ணீரில் குமிழ்களாக செல்லும்.

உல்ஃப்பாட்டிலிலுள்ள தண்ணீரின்  மூலமாக வாயுக்கள் ஈரத்தன்மையடைகிறது மற்றும் குழாயின் அடைப்பற்ற தன்மை செல்லும் வேகத்தை மதிப்பிட பயன்படுகிறது.

மூக்கில் செருகும் குழாயின் முனையில் உராய்வு நீக்கும் பொருளை தடவி, குழாயை நீரில் வைத்து ஆக்சிஜன் செல்வதை கவனி.

குழாயில் உயவுப்பொருளைத் தடவுவதால் மூக்கு சவ்வுப்படலம் உராய்வதை தடுக்கலாம்.

முன்னதாக குறித்து வைக்கப்பட்ட குழாயை மெதுவாக ஏதாவது ஒரு மூக்குத்துளையில் செலுத்து. வேகத்தை பயன்படுத்தாதே.

குழாயை வேகமாக செலுத்தினால் சவ்வுப்படலங்களுக்கு காயம் ஏற்படலாம்.

குழாயின் நிலையை வாய்தொண்டைப் பகுதி மற்றும் உள்நாக்குப்பகுதியில் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துப்பார். இதற்கு நோயாளியை வாயை விரிவாக திறக்கச் சொல்லி பரிசோதிக்கலாம்.

குழாய் சரியான நிலையில் உள்ளதா அல்லது மடங்கி காணப்படுகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

நாக்கு அழுத்தியின் உதவியால் நாக்கை அழுத்தி Flash விளக்கினால் நேரிடையாக தொண்டை பகுதியை பார்க்க வேண்டும். குழாயை ஒட்டும் பிளாஸ்திரியால் முன் நெற்றியில் அல்லது கண்ணத்தில் பொருத்த வேண்டும்.

நோயாளி படுக்கையில் அசையும்போது நிலைமாறுவதை தடுப்பதற்காக.

நோயாளி மற்றும் பொருட்களின் பின் கவனிப்பு

* நோயாளி சரியான நிலையை அடையும் வரை அவருடன் இரு.

• நோயாளியை வசதியாக படுக்க வைக்கவும்.

* உயிராதாரப் புள்ளிகளை அடிக்கடி கணக்கிடு.

• செய்முறையை தேதி மற்றும் நேரத்துடன் செவிலியர் பதிவேட்டில் பதிவுசெய்.

* சிலிண்டர் அமைப்பு நன்றாக வேலை செய்யும் நிலையில் உள்ளதா என்பதை பரிசோதித்துப்பார்.

• 8 மணி நேரத்திற்கு ஒரு முறை மூக்குக்குழாயை மாற்று.

• ஆக்சிஜனை நிறுத்திய பிறகு மோசமாகக்கூடிய அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதைக் கவனி.

தொகுப்பு

* சுவாசத்தில் பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது.

* நீலம்பாரித்தல், ஆழ்ந்த சுவாசம், உயர்நிலை இடங்கள், இரத்த சோகை, நுரையீரல்கள் ஒரு சில நோய்கள், அதிர்ச்சி, இரத்த ஒழுக்கு மற்றும் மூச்சடைப்பு போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும்.

* ஆக்சிஜன் மூக்குத்துளை, மூக்குக்குழாய், ஆக்சிஜன் முகமூடி, ஆக்சிஜன் கூடாரம் மற்றும் மூச்சுக்குழல் மூலம் ஆக்சிஜன் போன்ற முறைகளில் ஆக்சிஜன் செலுத்தலாம்.

* ஆக்சிஜன் செலுத்துவதால் ஏற்படும் இடர்பாடுகள்: தொற்று, தீவிபத்து, மூச்சுப்பாதையில் உள்ள சவ்வுப்படலம் உலர்ந்து போதல். ஆக்சிஜன் நச்சு, நுரையீரல் சிதைத்தல் ஆக்சிஜனால் ஏற்படும் சுவாசமற்ற தன்மை (Apnoea) மற்றும் ரீட்ரோலெண்டல் லிப்பிரோபிளேசியா.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.2
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top