பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெரினியல் கவனிப்பு (அ) விடப கவனிப்பு

பெரினியல் பகுதியை தூய்மை செய்யும் முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

விளக்கம்

பிரசவத்தின் போதும் மற்றும் பிரசவத்திற்கு பின் பெரினியத்தில் (அ) விடபப் பகுதியில் குறைந்த பட்சம் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முன் பெரினியத்தை தூய்மை செய்யும் முறை பெரினியல் கவனிப்பு ஆகும்.

நோக்கங்கள்

1. நோய்த்தொற்றை குறைக்க

2. கீழ்ப்புற தையலை ஆராய பயன்படுகிறது

குறிப்புகளை நினைவு கூர்தல்

1. எப்போதும் சுத்தமான பகுதியிலிருந்து குறைந்த சுத்தமான பகுதியை நோக்கி போக வேண்டும்.

2. திறந்த நிலையில் தேவையில்லாமல் தாயை வைக்கக்கூடாது.

3. மிகவும் கவனமாக ஆன்டிசெப்டிக் லோஷனை சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

தேவையான பொருட்கள்

நுண்ணுயிரறச் செய்யப்படாத தட்டில்

1. செவ்லான் 2 கரைசல் (2 மி.லி 100 மி.லி நீருள்ள ஜாரில்)

2. ஸ்பிரிட்

3. பிட்பிடின்

4. கழிவுத்தட்டு

5. படுக்கைத்துணி

6. சுகாதாரமான கைக்குட்டை போன்ற சிறுதுணி

7. படுக்கை கழிகலன்

நுண்ணுயிரற செய்யப்பட்ட தட்டில்

1. தமனி இடுக்கி

2. விரல் இடுக்கி

3. பெரிய பஞ்சுருண்டைகள் 10

4. கிண்ணத்தில் 120 செவ்லான்

5. சல்லாத்துணி துண்டுகள்

தாயை தயார்ப்படுத்துதல்

1. விளக்கிக் கூறுதல்

2. சிறுநீரை கழிக்க செய்யவேண்டும்.

பகுதியை தயாரித்தல்

தையல் போடுகின்ற பகுதியில் நல்ல வெளிச்சம், போதுமான நிலையில் இருக்க வேண்டும்.

முறை

விளக்கம்

முழங்கால்களை மடித்து மல்லாக்கப்படுத்த நிலை ஏற்றது.

பெரினியல் பகுதியை சாத்தியமாக தோற்றுவிக்க உதவுகிறது

பாதுகாப்பு தேவைக்காக திரையை அமைக்க வேண்டும்.

தேவையில்லாமல் அப்பகுதியை திறந்து வைப்பது தாய்க்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்

முடிச்சுகளை நீக்கி, சிறு துணிகளையும் கொண்டு பின்புறமும், முன்புறமும் பஞ்சு அடுக்கை வைக்க வேண்டும்.

கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். சல்லாத்துணி துண்டுகளை தட்டிலிருந்து எடுத்து பஞ்சு அடுக்கை நீக்க ஒரு முனை பிடித்து அகற்றவும்.

குறுக்குத்தொற்று ஏற்படாமல் தடுக்க, கைகள் அழுக்கடையாமல் நீக்க, பஞ்சு அடுக்கி நீக்கி, சல்லாத்துணி துண்டுகளை பயன்படுத்த வேண்டும்.

செவ்லான் கரைசலை விடபப்பகுதியில் ஊற்றவேண்டும்

காயத்தில் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும்

தமனி இடுக்கியின் உதவியுடன். பஞ்சுருண்டைகளை எடுத்து, ஆன்டிசெப்டிக் கரைசலில் உள்ளே விடவேண்டும்.

ஆன்டிசெப்டிக் கரைசல் கூடுதலான நோய்த் தொற்றை தடுக்க உதவுகிறது

விடபப் பகுதியை சுத்தம் செய்தல்

கீழ்க்கண்ட முறையை விடபப் பகுதியை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும்

அ. மான்பியூபிஸ், ஆ. வெஸ்டிபுள், இ. சிறு உதடு, ஈ. வெளி உதடுகள், உ. காயத்தின் மேல் தொடாமல் பெரினியல் பகுதி, ஊ. பக்கவாட்டு தொடைப்பகுதி, எ. ஆசனவாய் (அ) குதம்

  • பஞ்சுருண்டைகளை வைத்து துடைக்க வேண்டும். தமனி இடுக்கியில் உள்ள பஞ்சுருண்டைகளை கழிவுத்தட்டில் போடவேண்டும்.
  • காயப்பகுதியை மிகவும் கவனமாக  பரிசோதிக்க வேண்டும். கை இடுக்கி உதவியுடன் சல்லாத்துணிகளை எடுக்க வேண்டும்.
  • ஸ்பிரிட்டில் நனைத்த பஞ்சுகளின் மூலம் காயத்தையும் அதைச் சுற்றியுள்ள தோல் பகுதியையும் சுத்தம் செய்தல் கை இடுக்கியை விலக்க வேண்டும்.
  • முன்பக்கம் புதிய பஞ்சு அடுக்கை போட வேண்டும்.
  • படுக்கைக் கழிகலனை நீக்க வேண்டும்.
  • அவனை ஒரு பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும்.
  • பின்பக்கம் பஞ்சு அடுக்கை இறுக்கமாக அமைக்க வேண்டும்.
  • ஆன்டிசெப்டிக் கரைசலைக் கொண்டு பின்பக்கம் தூய்மை செய்து உலர்த்த வேண்டும். இது நோய்த் தொற்றை தடுக்க உதவுகிறது.
  • வசதியான நிலையில் படுக்க வைக்க வேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

3.02272727273
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top