பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாதிரிகளை சேகரித்தல்

மாதிரிகளை சேகரித்தல் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

வரையறை

மாதிரி என்பது ஒரு பொருளின் சிறிய பகுதி, பொருளின் முழுத்தன்மையையும், குணநலத்தையும் காண்பிப்பதாகும்.

மாதிரிகளை சேகரித்தலில் செவிலியரின் பொறுப்புகள்

* நோயாளியை தயார் செய்தல்

* முன் அறிவிப்பு ஒப்பந்தப்படிவம் நிரப்பப்பட வேண்டும் (Informed consent)

* உபகரணங்களை தயார் செய்தல்

* பதிவு செய்தல்

* உபகரணங்களை சேகரித்தல்

மாதிரி சேகரிக்கும் முறைகள்

• ஒருமுறை சிறுநீர் மாதிரி சேகரிக்கும் முறைகள்

இடைபட்ட சிறுநீர் சேகரிக்கும் முறை

24 மணிநேர சிறுநீர் மாதிரி சேகரித்தல்

ஒருமுறை சிறுநீர் மாதிரி சேகரிக்கும் முறைகள்

வரையறை :

ஒருமுறை சிறுநீர் மாதிரி என்பது ஒரு நேரத்தில் கழிக்கப்படும். சிறுநீரின் அளவாகும். பொதுவாக காலை சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட வேண்டும். 100-200 மி.லி. சிறுநீர் தேவைப்படும்.

நோக்கம் :

பரிசோதனைக்காக மட்டும்

செய்முறை

ஜெனிடல் பகுதியை சுத்தம் செய்யவும்.

சுத்தமான கழிவுத்தட்டு, யூரினல் அல்லது நேரிடையாக சேகரிக்க மாதிரி பாட்டில் பயன்படுத்தவும்

பாட்டிலின் வெளிப்புறத்தில் சிறுநீர் படாதவாறு கவனிக்க வேண்டும்.

இடைபட்ட சிறுநீர் சேகரிக்கும் முறை

வரையறை :

இடைபட்ட சிறுநீர் சேகரித்தல் என்பது சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது இடையில் சிறுநீர் சேகரிக்கப்பட வேண்டும்.

நோக்கங்கள்

• நுண்ணுயிரிகளின் வளர்ச்சி பரிசோதனைக்கு

• சிறுநீர் பாதை தொற்றை கண்டறிய

* சிறுநீரின் தன்மையும், அளவையும் கண்டறிய

செய்முறை

* பிறப்பு உறுப்பு பகுதியை சோப்பு நீரைக் கொண்டு கழுவி நீரினால் சுத்தம் செய்ய வேண்டும்.

* பெண் நோயாளிகளுக்கு வெளிப்புற மற்றும் உட்புற உதடுகளை சுத்தம் செய்து பின் சிறுநீர் சேகரிக்க வேண்டும்

• ஆண் நோயாளிகளுக்கு முன் தோலை பின்னுக்கு இழுத்து Penis உறுப்பை சுத்தம் செய்து பின் சிறுநீர் சேகரிக்க வேண்டும்.

* நோயாளி கழிவறையில் அல்லது படுக்கை கலனில் சிறுநீர் கழிக்க தொடங்குவார்.

• பிறகு நோயாளி சிறுநீர் கழிப்பதை நிறுத்த வேண்டும்.

* தொற்று நீக்கம் செய்யப்பட்ட கலனை சரியான நிலையில் வைக்க வேண்டும். பின் தொடர்ந்து சிறுநீர் பாட்டிலில் கழிக்கச் சொல்ல வேண்டும்.

• தேவையான அளவு சிறுநீர் சேகரிக்கப்பட்டவுடன், நோயாளி சிறுநீர் கழிப்பதை நிறுத்தச் சொல்ல வேண்டும்.

24 மணிநேர சிறுநீர் மாதிரி சேகரித்தல்

வரையறை :

24 மணிநேர சிறுநீர் மாதிரி சேகரித்தல் என்பது 24 மணி நேரத்தில் நோயாளி கழித்த சிறுநீரை சேகரித்தலாகும்.

செய்முறை :

மாதிரியை சேகரிப்பது காலை 6 மணியிலிருந்து தொடங்கப்பட்டு அடுத்தநாள் காலை 6 மணி வரை கழித்த மொத்த சிறுநீரையும் சேகரிக்க வேண்டும். அடுத்தநாள் காலை 6 மணிக்கு சேகரிப்பதை நிறுத்திவிட வேண்டும்.

பத்திரப்படுத்துதல் :

இவை சிறுநீர் கலத்தில் உள்ள பாக்டீரியாக்களை சிதைக்கக்கூடியது. எ.டு. HCL, பார்மலின், குளோரோ பார்ம்.

சுயநினைவற்ற நோயாளி மற்றும் குழந்தைகளுக்கு சிறுநீர் மாதிரி சேகரிக்கும் முறைகள்

செய்முறை

ஆண் :

சோதனைக்குழாயுடன் ஊசிக்குழல் அல்லது இரப்பர் குழாயுடன் இணைக்கப்பட்ட நிரோத்தை ஆண்குறியுடன் இணைக்கவேண்டும். இரப்பர் குழாயை பாட்டிலுடன் இணைக்க வேண்டும்.

பெண் :

அகலமான வாய்ப்பகுதி கொண்ட கலன் அல்லது இரப்பர் குழாயுடன் உள்ள புனலை யோனி (vulva) உடன் இணைத்து T-கட்டுத்துணியால் கட்ட வேண்டும். இரப்பர் குழாய் பாட்டிலுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மலம் மாதிரி சேகரித்தல்

வரையறை :

மலத்தில் புழுக்கள் அல்லது புழுக்களின் பகுதிகள் காணப்படலாம். எ.டு. உருண்டைப்புழு, நூல் புழு, கொக்கிபுழு மற்றும் நாடாப்புழு.

மைக்ரோஸ்கோபிக் பரிசோதனையில் மலத்தில் பல வகையான அமீபாக்கள் காணப்படும்.

செய்முறை

1. தண்ணீர் உறிஞ்சு கலன் அல்லது அகன்றவாய் உடை கலனை தேவையான குறிப்புகளுடன் கொடுக்க வேண்டும்.

2. சுத்தமான படுக்கை கலத்தில் மலம் கழிக்கச் சொல்லவும்.

3. ஒரு சிறு குச்சியைப் பயன்படுத்தி, மலத்தின் ஒரு சிறிய பகுதியை மாதிரிபாட்டில் அல்லது கலனில் போட்டு மூடி வைக்கவும்.

4. குச்சியை குப்பைத் தொட்டியில் போடவும்.

கோழை சேகரித்தல் (சளி)

வரையறை :

ஸ்டெப்டோகாக்கை, நிமோகாக்கை, டிப்தீரியா பேசிலை போன்ற பாக்டீரியாக்களை கண்டறியவும் மற்றும் நோய் பரிசோதனைக்காகவும் கோழை சேகரிக்கப்படுகிறது.

செய்முறை

பெரியவர்களுக்கு

அ. நுண்ணுயிரறச் செய்யப்பட்ட நீர் உறிஞ்சாத சளிக்கோப்பை அல்லது அகன்ற வாயுடைய கலனில் கோழையை சேகரிக்க வேண்டும்.

ஆ. நோயாளியை நன்றாக இருமச் சொல்ல வேண்டும்.

இ. காலையில் பல் துலக்குவதற்கு முன்னால் கோழை சேகரிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு

அ. பஞ்சு சுற்றிய குச்சியுடன் கூடிய சோதனைக்குழாயை பயன்படுத்தவும்.

ஆ. இருமி கோழை வெளியே வரும்பொழுது பஞ்சு சுற்றிய குச்சியைக் கொண்டு கோழையை துடைத்து எடுக்க வேண்டும்.

இ. சோதனைக்குழாயில் கோழையை போட்டு பஞ்சு உருண்டையால் குழாயை மூடவும்.

இரத்த மாதிரி சேகரித்தல்

* சிரையிலிருந்து நன்றாக செய்யப்பட்ட முறைகளில் இரத்தம் சேகரிக்கப்பட வேண்டும்.

• குழாயின் அளவு (18, 19, 20)

* சோதனைக்குழாயில் இரத்தம் சேகரிக்கப்பட வேண்டும்.

* பெனிசிலின் குழாய்

• இரத்தம் மெதுவாக உறிஞ்சி எடுக்கப்பட வேண்டும்.

* விரலில் குத்தி எடுப்பதன் மூலம் இரத்தம் சேகரிக்கப்படலாம்.

மாதிரியை அனுப்புதல்

• இரத்தம் மற்றும் முதுகு தண்டுவட திரவம் போன்றவற்றை பொதுவாக நுண்ணுயிரறச் செய்யப்பட்ட முறையில் சேகரிக்க வேண்டும்.

• மாதிரியுடன் தொற்று நீக்க அல்லது நுண்ணுயிரி களை அழிக்கக்கூடிய பொருட்களுக்கு தொடர்பு இருக்கக் கூடாது. எல்லா மாதிரிகளும் நுண்ணுயிரறச் செய்யப்பட்டதாக இருக்கும்.

• மாதிரிகள் ஆய்வகத்துக்கு உடனே அனுப்பப்பட வேண்டும். தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் அனுப்பக் கூடிய mediaவை பயன்படுத்த வேண்டும்.

• மாதிரியை பரிசோதித்த பின்னர் சரியான முறையில் அகற்ற வேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.95454545455
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top