பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மகப்பேறு கால கவனிப்பு

பாலூட்டும் பெண்களுக்கு மார்பக நோய்த்தொற்று வராமல் தடுப்பதில் செவிலியர்களின் பங்கு பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மார்பக கவனிப்பு

பொருள்

மார்பக கவனிப்பு என்பது, மார்பக நோய்த்தொற்றை வராமல் தடுக்கவும், ஆரோக்கியமான நிலையில் பாலூட்டவும் கொடுக்கும் கவனிப்பு ஆகும்.

நோக்கம்

• பாலூட்டுதலை விருத்தி செய்ய

• நோய்த்தொற்றை தடுக்க

• பால் கட்டியிருத்தல் மற்றும் அழுங்கிய முலைக்காம்புகள் அதோடு இங்குமங்கும் வெடிப்புகள் இருக்கும் முலைக்காம்பு இவைகளை பரிசோதிக்க

• மார்பக ஆரோக்கியம் பற்றி தாய்க்கு கற்பிக்க வேண்டும்.

தேவையானப் பொருட்கள்

1. திரை

2. தட்டில் அடங்கியுள்ளவை: பெரிய கிண்ணம், ஜக் அதோடு மிதமான நீர், ஸ்பான்ஞ் துணிகள், சிறிய துண்டு, சிறிய கிண்ணத்தில் சல்லாத்துணி துண்டுகள், கழிவுத் தட்டு

செய்முறை

படிகள்

நோக்கம் (காரணம்)

1. தாய்க்கு செய்முறையை விளக்கிக் கூறவேண்டும்.

ஒத்துழைப்பை உயர்த்தி கவலை மற்றும் பயத்தை குறைக்க வேண்டும்.

2. தாயின் வலப்பக்கத்தில் பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும்.

சக்தி மற்றும் நேரம் வீணாவதை தடுக்கலாம்.

3. படுக்கையைச் சுற்றி திரையிட வேண்டும்.

பாதுகாப்பு அளித்தல்

4. கைகளை கழுவ வேண்டும்.

நோய்த்தொற்றை தடுக்க

5. தாயின் மார்பகத்தை திறந்து வைத்து மார்கத்தின் கீழ் துண்டை போட வேண்டும்.

6. உள்ளழுங்கிய முலைக் காம்பு, இங்குமங்கும் வெடிப்புகள் இருக்கும் முலைக் காம்பு, பால் கட்டுதல் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.

7. வெளிப்புறபகுதியிலிருந்து முலைக்காம்பு வரை அதோடு நீரை வைத்து வட்டச்சுழற்சியாக மார்பகத்தை தூய்மை செய்ய வேண்டும். (Hoffman's method)

தூசிகளை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த வேண்டும்.

8. மார்பகத்தை உலர்த்து (அ) ஈரமில்லாமல் வைக்க வேண்டும்.

ஈரமான பகுதியில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும்.

9. சுத்தமான துண்டை கொண்டு மார்பகத்தை மூடவேண்டும்.

தாய்க்கு பாதுகாப்பு அளித்தல்.

10. மேலே குறிப்பிட்ட படி இன்னொரு மார்பகத்தை திறந்து வைத்து சுத்தம் செய்ய வேண்டும்

11. பொருட்களை சுத்தம் செய்து அதனதன் இடத்தில் வைக்க வேண்டும்.

12. செய்முறையை பதிவு செய்தல் வேண்டும்

பதிவேடுகள் அனைத்தும் சட்டபூர்வமான பத்திரங்கள்

தாய்ப்பால் கொடுக்கும் போது உதவி செய்யும் முறை

பொருள்

ஒழுங்கான, நுணுக்கமான வழிமுறைகளை பயன்படுத்தி, தாய், மார்பகப்பாலை கொடுக்க உதவி செய்தல்

நோக்கங்கள்

1. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்க்கு உதவுதல்

2. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை கல்வியின் மூலமோ மற்றும் ஒழுங்கான நுணுக்கமான முறையில் கற்பித்தல்

3. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நேரான எண்ணங்களை அதன் மேல் உருவாக்குதல்

4. தாய்ப்பாலை குழந்தைக்கு அளிப்பதன் மூலம் எல்லா நன்மைகளும் குழந்தைக்கு கிட்டும்படி செய்தல்.

பொருட்கள்

1. கிண்ணம் அதோடு சற்று வெதுவெதுப்பான நீர்

2. கழிவுத்தட்டு

3. சில கந்தை துண்டுகள்

4. குளியல் துண்டு

செய்முறை

1. தாய் குளித்து இருக்கிறாரா, இல்லையா என்று உறுதிச் செய்து கொள்ள வேண்டும்.

2. பாலை புகட்டுவதற்கு முன் கைகளைக் கழுவும்படி கூறவேண்டும்.

3. ஒவ்வொரு ஊட்டத்திற்கு பிறகும் மார்பகங்களையும் மற்றும் முலைக்காம்பு களையும் சுத்தமாக வைக்கும்படி கூறவேண்டும்.

4. தேவையிருப்பின் மார்பகத்தை சுத்தம் செய்ய உதவி செய்.

5. முலைக்காம்பு பகுதியை முதலில் கந்தை துண்டுகளை வைத்து சுத்தம் செய் மற்றும் சற்று வெதுவெதுப்பான நீரைக்கொண்டு மார்பகத்தை சுத்தம் செய்.

6. ஒரு முறை ஒரு மார்பகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

7. ஊட்டத்திற்கு முன்பு அழுக்கடைந்த, ஈரமான துணி வகைகள் இருந்தால் உடனடியாக குழந்தைக்கு மாற்றவேண்டும்.

8. சௌகரியமாக முதுகுக்கு ஆதரவு வைத்து அமர்ந்து பால் தர பாதுகாப்பான நிலையில் தாய் இருக்க உதவி செய் (உட்கார்ந்த (அ) படுத்தி)

9. குழந்தையை மார்பகத்தை நோக்கி பிடிக்கும் படி தாய்க்கு உதவ வேண்டும்.

10. குழந்தையை முழங்கையின் கோணத்தில் தாங்க வேண்டும் மற்றும் அதே கையின் மூலம் குழந்தையை தாங்கிக் கொள்ள வேண்டும்.

11. மேல்பகுதியை கட்டை விரளை வைத்து மார்பகத்தை அழுத்த தாய்க்கு உதவ வேண்டும்.

12. குழந்தையின் வாய் திறந்த நிலையிலும் தூண்டக்கூடிய நிலையிலும் கீழ் உதடு, முலைக்காம்போடு இலேசாக தொடும்படி தாய்க்கு அறிவுறுத்த வேண்டும்.

13. முலைக்காம்பை சுற்றி குழந்தையின் வாய் இருக்கும்படி உறுதி செய்தல் வேண்டும்.

14. தாயின் மார்பகத்தில் குழந்தையின் மூக்கு அழுத்தாத படி உறுதிச் செய்ய வேண்டும். மார்பகத்தை ஆள்காட்டி விரலாலும், நடு விரலாலும் தாயானவள் பிடித்துக் கொள்ள வேண்டும்.

15. 10 - 20 நிமிடங்களுக்கு ஒவ்வொரு மார்பகத்திலும் பாலை குடிக்க குழந்தைக்கு அனுமதிக்க வேண்டும்.

16. குழந்தையின் காதுமடல் மகுதி மற்றும் உள்ளங்காலினை நீவி குழந்தையை தூக்கத்திலிருந்து விழிக்க செய்தல் வேண்டும். (பால் குடுக்கும்போது குழந்தை தூங்கி விட்டால்)

17. குழந்தையை மார்பகத்திலிருந்து விலக்கு முன் குழந்தையின் வாயில் தாயின் சிறு விரலை ஆதரவாக கொடுத்து மெதுவாக குழந்தையை மார்பகத்திலிருந்து முழுமையாக நீக்க வேண்டும்.

18. ஒவ்வொரு குழந்தையும் பாலருந்தும் போது காற்றினை உட்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. ஆகவே குழந்தையை நேராக நிறுத்தி முதுகு புறத்தில் தட்டிக் கொடுத்து ஏப்பம் விடுமாறு செய்தல் வேண்டும்.

19. இடதுப்புறம் ஒருகளிந்த நிலையில் குழந்தையை தொட்டிலில் கிடத்த வேண்டும். உறிஞ்சும் தன்மை, குழந்தையின் நிலை, பால் புகட்டும் நேரம் இவை அனைத்தையும் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மற்றும் மார்பகத்திலும், முலைக்காம்பிலும் ஏதாவது பிரச்சனை இருந்தால் கவனித்தல் வேண்டும்.

20. பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல் வேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

3.09090909091
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top