பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மூக்கு இரைப்பை குழாய் வழியாக உறிஞ்சி எடுத்தல்

மூக்கு இரைப்பை குழாய் வழியாக உறிஞ்சி எடுத்தல் பற்றி தெரிந்துக் கொள்ள படிக்கவும்.

வரையறை

ரைல்ஸ் குழாயை இரைப்பைக்குள் செலுத்தி இரைப்பைக்குள் இருக்கும் பொருட்களை உறிஞ்சி எடுத்தலாகும். சிறப்பு உணவை கொடுத்த பிறகு செரிப்பின் பல நிலைகளில் இரைப்பையிலுள்ள பொருட்கள் உறிஞ்சி எடுக்கப்படுவதற்கு பகுதிமுறை சோதனை உணவூட்டல் (Fractional Test Meal) என்று பெயர்.

நோக்கங்கள்

1. இரைப்பை நிலையில் நோயைக் கண்டறிய. (எ.டு) புற்றுநோய் செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிய.

2. வயிற்றை காலிசெய்து பரிசோதிப்பதற்காக.

3. இரைப்பை சுரப்பியான ஹைடிரோ குளோரிக் அமிலத்தை பரிசோதனை செய்ய. முடிவுகள் பொதுவாக இவ்வாறு கொடுக்கப்படும்.

Hyperchlorhydria அதிக ஹைடிரோகுளோரிக் அமிலம்

Hypochlorhydria குறைந்த ஹைடிரோகுளோரிக் அமிலம்

Actilorhydria ஹைடிரோகுளோரிக் அமிலம் இல்லாத நிலை.

தேவைப்படுபவர்கள்

• இரைப்பை பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு

• அதிக அளவு இரைப்பை பொருட்கள் இருக்கும் நோயாளிகளுக்கு

* செரிப்பு கோளாறு உள்ள நோயாளிகளுக்கு

தவிர்க்கப்பட வேண்டியவர்கள்

* மூக்குத்துளையில் புண் உள்ளவர்கள்

• செரிப்புப்பாதையில் அறுவை சிகிச்சை நோயாளிகள்

• குமட்டல் மற்றும் வாந்தி உள்ள நோயாளிகளுக்கு

தேவையான பொருட்கள்

ஒரு தட்டில்

* கொதிக்க வைத்து குளிரவைக்கப்பட்ட தண்ணீர் உள்ள கிண்ணத்தில் ஒரு ரைல்ஸ் குழாய்

* பாரபின்

* துணி துண்டுகள் அல்லது பஞ்சு உருண்டைகள்

* 20Cc ஊசிக்குழாய் (Syringe)

* பைண்ட் அளவையில் உணவு

* வாய்சுத்தம் செய்ய உணவு கோப்பை

* உணவு கொடுப்பதற்கு ஒரு டம்ளர்

* தொற்று நீக்கம் செய்யப்பட்ட சோதனைக்குழாய் அல்லது 300 மி.லி. அளவு நுண்ணுயிரறச் செய்யப்பட்ட பாட்டில்கள் - 2. ஒன்று இருப்பில் உள்ள சாறு எடுப்பதற்கு, மற்றது மீதமுள்ள சாறு சேகரிப்பதற்கு

* கழிவுத்தட்டு / சளிக்கிண்ணம்

*  இரப்பர் விரிப்பு கோழை கோப்பை

* ஒட்டும் பிளாஸ்திரி மற்றும் கத்தரிக்கோல்

* பஞ்சு சுற்றிய குச்சிகள்

* போரிக்கரைசல் 2%

* திருகு

* காகிதம் மற்றும் எழுதுகோல்

செய்முறையின் படிகள்

• செய்யவிருப்பதை நோயாளிக்கு விளக்கிக்கூறி ஒத்துழைப்பை பெற்றுக்கொள். நோயாளியை வசதியான உட்கார வைத்த நிலையில் வைத்து நோயாளியை சுற்றி திரையிடு. தேவையான எல்லாப் பொருட்களையும் படுக்கையருகே கொண்டுவா.

* நோயாளியின் கழுத்து மற்றும் தோள்பட்டையைச் சுற்றிலும் இரப்பர் விரிப்பு மற்றும் டவலைப்போட்டு பின் பக்கத்தில் கொக்கியால் பொருத்து. மூக்குத்துளையை பஞ்சு சுற்றிய குச்சியால் சுத்தம் செய்து பின் கழிவுத்தட்டில் போடு. கைகளை கழுவிக்கொள்.

* கிண்ணத்தில் இருந்து ரைல்ஸ் குழாயை எடுத்து அதன் நுனிப்பகுதியில் பாரபின் உயவுப்பொருளைத் தடவு. குழாயை செலுத்துவதற்கு முன்னால், குழாய் செலுத்தப்பட வேண்டிய நீளத்தை அளவிடு. அதாவது மூக்கின் தண்டுப்பகுதியிலிருந்து காது மடல் வரை மற்றும் Xiphoid மார்பெலும்பிலிருந்து இரைப்பை வரை அளவிட வேண்டும்.

* மூக்குத்துளை வழியாக மெதுவான மூக்குத் தொண்டையின் மூலம் உணவுக்குழலுக்குள், மேல், கீழ் மற்றும் பின் அசைவின் மூலம் செலுத்தவேண்டும்.

* குழாயை இரைப்பைக்குள் செலுத்தும்போது, நோயாளியை வாய்வழியாக சுவாசிக்கச் செய்து விழுங்கச் செய்தல். 40-60 செ.மீ அல்லது 2வது குறிவரை குழாயை உட்செலுத்து. 20 மி.லி. ஊசிக்குழாயை இணைத்து காற்று வெளியேற்றப்பட்ட பிறகு குழாய் உட்செலுத்தப்படுகிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள். எல்லா இரைப்பை சாற்றில் வெளியே மெதுவாக எடுக்கப்பட்டு, பாட்டிலில் சேகரிக்கப்பட்டு, குறியிடப்பட வேண்டும். எதுவும் திரவம் வெளியே எடுக்கப்படாவிட்டா; 60 செ.மீ வரை உட்செலுத்து. குழாயை சுற்றி பஞ்சை வைத்து ஒட்டு பிளாஸ்திரி மூலம் பாதுகாப்பாக பொருத்து.

* துண்டுத்துணியை குழாயை சுற்றிலும் வைத்து, திருகு மூலம் இதை இறுக்கி பிடி. குழாய் மூலம் நோயாளிக்கு உணவு கொடு. நேரத்தை குறிப்பிடு. எத்தனை முறைமாதிரி எடுக்கப்பட்டது என்பதை பதிவேட்டில் எழுது. நோயாளியை வசதியாக படுக்கையில் இருக்க வை மற்றும் சில புத்தகங்களை படிக்க கொடு

* ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இரைப்பையில் உள்ளவற்றை உறிஞ்சி எடுத்து தகுந்த சோதனைக்குழாய் அல்லது பாட்டிலில் வை.

* இரைப்பையில் உள்ள எல்லாவற்றையும் உறிஞ்சி எடுக்கும் வரை செய்முறையை தொடர்ந்து செய்.

* தேவையான எண்ணிக்கையில் மாதிரிகளை சேகரித்து எடுத்த பிறகு, மீதியுள்ள அனைத்து இரைப்பை திரவங்களையும் மீதியுள்ளதை பாட்டிலில் வைக்கவும். பிறகு குழாயை கவனமாக எடுத்து கழிவுத்தட்டில் போடவும்.

* வாயை சுத்தம் செய்துவிட்டு, இரப்பர் விரிப்பையும், டவலையும் நீக்கிவிடு.

* நோயாளியை வசதியாக வை.

* உணவு உண்ண அனுமதி

* எல்லாப் பொருட்களையும் பயன்படுத்தும் அறைக்கு எடுத்துசெல்.

* மாதிரியைக் காண படிவத்தை பூர்த்தி செய்து உடனடியாக ஆய்வகத்துக்கு அனுப்பு.

* ரைல் குழாயை சுத்தம் செய்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வை. பிறகு உலர வைக்க தொங்கவிடு. ஊசிக்குழாயை சுத்தம் செய்து அதற்குரிய இடத்தில் வை.

தொகுப்பு (Summary)

* மூக்கு இரைப்பை வழியாக உறிஞ்சி எடுக்கப்படுவதை பகுதிமுறை சோதனை உணவூட்டல் (fractional testmeal) என்றும் அழைக்கலாம்.

* மூக்கு இரைப்பைக் குழாயை செலுத்துவதற்கு முன்னால் குழாயின் நீளத்தை, மூக்குத்தண்டிலிருந்து காதுமடல் மற்றும் மார்பெலும்பிலிருந்து இரைப்பை வரை அளவிட வேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top