பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வீட்டமைப்பும் சுகாதாரமும்

வீட்டமைப்பும் சுகாதாரமும் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கட்டிடம் அல்லது அமைப்பு

நாம் வசிப்பதற்கு, வேலை செய்வதற்கு, ஒய்வெடுப்பதற்கு மற்றும் விளையாடுவதற்கு உரிய சுற்றுசூழலை உருவாக்கிக் கொடுப்பது வீடாகும். அவைகள் பொதுக்கட்டிடம், வீடுகள், பள்ளிக் கூடங்கள், அரங்கம், மாளிகை, தொழிற்சாலைகள் ஆகும். இவைகள், உடல் நலத்துக்கும், மனநலத்துக்கும், சமுதாயத்துக்கும் ஏற்ற முறையில் கட்டப்படவேண்டும்.

நல்ல உடல் நலத்துக்கு வீட்டின் உள்ளேயும் வெளியேயும், போதுமான அளவு இடத்துடன் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் இருந்தால் நுரையீரல் தொற்று நோய்களை தடுக்கலாம். இது ஈரக்கசிவு இல்லாத நல்ல நிலத்தில் கட்டப்பட வேண்டும்.

நல்ல மனநலத்துக்கு வீடுகள் தடுப்புகளுடனும், திருடர்களுக்கு எதிராக பாதுகாப்புடனும் இருக்கவேண்டும். புகை, நாற்றம், மற்றும் மிகுந்த ஒலி ஆகிய வற்றிலிருந்து தொலைவில் இருக்கவேண்டும்.

நல்ல சமுதாய நலத்துக்கு வீடுகள் சரியான இடத்தில் அமைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் அமைப்புகள் பொருந்தியதாகவும் இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் சுகாதாரக்குழு பரிந்துரைக்கும் (WHO) வீட்டமைப்பின் காரணிகள் (Criteria for Health Ful Housing)

1. சுகாதாரமான வீடு இயற்கை பாதுகாப்புக்கும், வசிப்பதற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

2. சமைத்தல், உணவு உண்ணல், துணிகளை துவைத்தல் மற்றும் குளித்தல், மலம் கழித்தல் ஆகியவைகளுக்குகான அறைகள் போதுமானதாக இருக்க வேண்டும்.

3. நோய்தொற்று ஏற்படாதவாறு நல்ல முறையில் அமைக்கப்படவேண்டும்.

4. அதிகமான ஒலி மற்றும் மாசுளினால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

5. பாதுகாப்பற்ற இயற்கை சூழ்நிலையிலிருந்து பாதுகாக்க நல்ல பொருட்களைக் கொண்டு கட்டப்பட வேண்டும்.

6. சமுதாய வளர்ச்சி, உறவுகள் கொண்ட அமைப்பு மனநலத்துக்குப் போதுமானதாக அமையும்.

வீட்டமைப்பின் தரங்கள் (Housing standards)

இடம்

a. மழைக்காலத்தில் வெள்ளம் வீட்டினுள் உட்புகாதவாறு உயர்ந்த இடத்தில் கட்டப்படவேண்டும்.

b. போதிய அளவு காலியிடங்கள் மற்றும் அகலமான சாலைகள் ஆகியவற்றிற்கு இடம் ஒதுக்கப்படவேண்டும்.

C. ஈக்கள் மற்றும் கொசுக்கள் பெருகி வளரும் இடங்களில் இருந்து தூரத்தில் அமைக்கப்படவேண்டும்.

d. புகை, நாற்றம் மிகுந்த ஒலி மற்றும் போக்குவரத்து நிறைந்த இடங்களை தவிர்க்க வேண்டும்.

e. அமைதியான சுற்றுசூழல் இருக்க வேண்டும்.

f. மணல் பரப்பு ஈரம் இல்லாததாகவும், பாதுகாப்பானதாகவும், வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.

பின்தங்கல் (Setback) : நல்ல வெளிச்சத்துக்கும் காற்றோட்டத்திற்கும் வீட்டை சுற்றிலும் காலி இடம் இருக்க வேண்டும். அதற்கு பின்தங்கல் (Setback) என்று பெயர். கிராமப்பகுதிகளில் கட்டிடம் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் இருக்கக்கூடாது. நகர்ப்புறத்தில் நிலத்தின் விலை அதிகம். மொத்தப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கில் கட்டிடம் கட்டலாம். வெளிச்சத்துக்கும், காற்றோட்டத்துக்கும் தடை ஏற்படாமல் பின் தங்கல் (Setback) அமைக்கப்பட வேண்டும்.

தரை : தரையில் கீழ்கண்டவை அடங்கும்.

a. தரை வழவழப்பற்றதாக, சுலபமாக கழுவி சுத்தமாக, உலரக்கூடியதாக இருக்க வேண்டும். சுவர்களில் வெடிப்புகள் இருக்கக்கூடாது. ஏனெனில் பூச்சிகள் பெருகிஅரித்து விடும்

b. தரை ஈரத்தன்மை அற்றதாக இருக்க வேண்டும். அடித்தளத்தின் உயரம் 2 - 3 அடி இருக்க வேண்டும்.

சுவர் (Walls)

a. வலிமையுள்ளதாகவும்

b. குறைந்த அளவு வெப்பத்தை கடத்தக்கூடியதாகவும்

C. வெப்பத்தாக்குதல் தடை உள்ளதாகவும்.

d. எலிகள் மற்றும் பேன், மூட்டைப்பூச்சி போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும்.

e. எளிதில் உடையாததாகவும் மற்றும்

f. சமதளபரப்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

கூரை (Roof) : 10 அடி உயரத்துக்குக் குறைந்து இருக்கக் கூடாது. இவை குளிர்கடத்திகள் இல்லாமலே குளிர்ச்சியை தரும் கூரைகள் குறைந்து வெப்பத்தைக் கடத்தக் கூடியதாக இருக்க வேண்டும்

அறைகள் (Rooms) : குறைந்தது 2 தங்கும் அறைகள் இருக்க வேண்டும். ஒரு அறையாவது பாதுகாப்பிற்காக மூடி வைக்கப்படவேண்டும். அறைகளின் எண்ணிக்கை மற்றும் பரப்பளவு குடும்பத்திற்கு ஏற்ற முறையில் அதிகப்படுத்தலாம்.

தரைப்பரப்பு (Floor Area) : ஒன்றுக்கும் மேற்பட்டவர் இருந்தால் தங்கும் அறைகுறைந்தது 120 ச.அடியாக இருக்க வேண்டும். குறைந்தது 100 ச.அடி இடமாவது ஒருவருக்கு இருக்க வேண்டும்.

சதுர அளவு (Cubic Space) : காற்றோட்ட அளவு - அறையின் உயரம் காற்றுக்கேற்ப 500 cu.ft. பொதுவாக 1,000 cu .ft

சன்னல்கள் (Windows) :

a. ஒவ்வொரு அறையிலும் குறைந்தது 2 சன்னல்களும் அவை ஒன்றுக்கொன்று எதிர்நோக்கியும் இருக்கவேண்டும்.

b. நிலப்பரப்பிலிருந்து 3 அடி உயரத்திற்கு மேல் சன்னல்கள் அமைக்கப்படவேண்டும்.

C. சன்னல்கள் தரைப்பரப்பளவில் 5ல் 1 பாகமாவது இருக்க வேண்டும். கதவுகள் மற்றும் பல கணிகளை மொத்த தரைப்பரப்பில் ஐந்தில் இரண்டு 5-2 பங்கு உடையனவாக இருக்க வேண்டும்.

10. வெளிச்சம் (Lighting) : அறைபகலில் வெளிச்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

11. சமையறை (Kitchen) : ஒவ்வொரு வசிக்கும் வீட்டிலும் சமையலறை தனியாக இருக்கவேண்டும். சமையலறை தூசி மற்றும் புகையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். உணவுகளை சேமிக்கும் அறை, எரிபொருள் மற்றும் தேவையான பொருட்கள், தண்ணீர் வசதி, பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு போதுமான இடம் வடிகால் வசதியுடன் அனைத்தும் போதுமான அளவு வெளிச்சத்தில் அமைக்கப்படவேண்டும்.

12. கழிப்பிடம் (Privacy) : சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்ட கழிப்பிடம் ஒவ்வொரு வீட்டிலும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உலகில் வளர்ந்த நாடுகளில் வசிக்கும் பகுதிகள் தண்ணீர் வசதியுடன் 'நீர் வழி எடுத்துச் செல்லும் அமைப்புடன்' உள்ளன (Water Carriage System)

13. குப்பைகளும் கழிவுகளும் : இவைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து தினமும் சுகாதாரமுறையில் அகற்றப்பட வேண்டும்.

14. குளித்தலும் துவைத்தலும் (Bathing and Washing) வீட்டில் குளிப்பதற்கும், துவைப்பதற்கும் சரியான தடுப்புகளுடன் வசதிகள் செய்யப்படவேண்டும்.

15. தண்ணீ வசதி (Water Supply) எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும்படி வசதி செய்யப்படவேண்டும்.

கிராமப்புறவீட்டமைப்பு (Ruralhousing)

கிராமப் பகுதிகளில் உள்ள வீட்டு அமைப்பால் எதிர்பார்க்கப்படும் தரம், நகரப்பகுதிகளில் உள்ள தரத்தை விடக் குறைவானதாக இருக்கலாம். கிராமப்பகுதி வீடுகளில் இருக்க வேண்டியவை.

a. குறைந்தது இரண்டு தங்கும் அறைகள்

b. சிறிய தாழ்வாரம் (Verandah) அமைக்கப்படலாம்.

C. மொத்தப்பரப்பில் கட்டிடம் மூன்றில் ஒரு (1/3) பங்குக்கு மேல் இருக்கக்கூடாது.

d. தனியான சமையறை மற்றும் பொருட்களை வைத்திருக்க வசதிகள் மற்றும் கழிவு தொட்டிகளுடன் (Sink) இருக்க வேண்டும்.

e. கழிவு நீக்கத்குரிய கழிவறை

f. கதவுகளும், பலகணிகளும் தரைப்பரப்பில் குறைந்தது 10 சதவீதமும்

g. கழிவுநீர் நீங்கும்படி அமைந்த கிணறு அல்லது குழாய்க்கிணறு 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்குள்h.

h. கால்நடைப்பட்டி - குறைந்தது - 25 அடி தூரத்தில்

i. குப்பை மற்றும் வீணாகும் நீர் அகற்ற முறையான ஏற்பாடுகள்

முடிவுரை

மனிதனின் சுற்று சுழலில் வீட்டமைப்பு என்பது உடல்நலத்திலும், சுகாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது, குறைபாடு உடைய வீட்டமைப்பின் காரணமாக வரும் நோய்களும், விபத்துக்களும்.

1. மூச்சுப்பாதை நோய் தொற்றுகள்: சாதாரண சளி, காச நோய், ப்ளு, தொண்டை அடைப்பான், மூச்சுப்பாதை அழற்சி, தட்டம்மை, கக்குவான் இருமல்,

2. தோல் தொற்று : சிரங்கு, படர்தாமரை, சொறி, தொழுநோய் 3. எலியினால் : பிளேக்

4. பூச்சிகளினால், ஈக்கள், கொசுக்கள், தெள்ளுப்பூச்சி, மூட்டை பூச்சிகள்

5. விபத்துக்கள்: வீடுகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு காரணம் வீடுகள் மற்றும் சுற்றுசூழலில் காணப்படும் இடர்பாடுகள்.

6. உடல் நலக்குறைவும் இறப்பும் மோசமான வீட்டமைப்புகளில் உடல்நலக் குறைவும் இறப்பு விகிதமும் அதிகம் காணப்படுகிறது.

7. சமூக மனநல விளைவுகள் (Psychosocial Effects) : இதை அதிகம் கவனிக்க வேண்டியதில்லை மேல் மாடியில் குடியிருப்பவர்கள் தனிமையை அதிகம் உணருவார்கள் மேலும் இப்போதும் அனைவருக்கும் தெரிந்த வண்ணமாக பல தீமைகளும் உண்டு. அதிக மக்கள் கூட்டத்தில் வாழும் மக்களும் இந்த உணர்வில் இருந்தால் நரம்பு தளர்ச்சி மற்றும் மனநிலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.93333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top