பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜீவன்ஜோதி நல மையம்

ஜீவன்ஜோதி நல மையம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம் பற்றி

ஜீவன் ஜோதி நல மையமானது காணிக்கை அன்னை என்ற கத்தோலிக்க துறவற சபையினரால் நடத்தப்பட்டு வருகிறது. இச்சபையானது கிட்டத்தட்ட 225 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் “நேனோ நோகில்” என்பவரால் தொடங்கப்பட்டது. சிறிய வித்தாக இருந்த இச்சபை இன்று ஆல்போல் தளைத்து உலகின் பல கண்டங்களில் தங்கள் பணியினை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. தேனி மண்ணில் இச்சபையானது 1933ல் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய பணிகளான கல்வி, மருத்துவம், சமூகம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தேனி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து வரும் எச்.ஐ.வி./ எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் மிகுந்த பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை, பரிந்துரை, ஆலோசனை, அரசின் சலுகைகளை பெற்றுத் தருதல் போன்ற மானுட சேவையை கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செய்து வருகிறது இம் மையம்.

எச்.ஐ.வி./ எய்ட்ஸ் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முழுமையான, விரிவான, தரமான மருத்துவச் சேவையைத் தருவதே “ஜீவன் ஜோதி நலமையத்தின்” முக்கிய நோக்கமாகும். “ஜீவன்- வாழ்வு என்றும், ஜோதி- வெளிச்சம் என்றும் பொருள்”. அறியாமை என்ற இருளில் மூழ்கி தனிமையிலும் புறக்கணிப்பாலும், கறைப்படுத்துவதாலும் வாழ்விழந்த மக்களுக்கு புதுவாழ்வு கொடுத்து எதிர்கால ஒளி ஏற்றுவதே இதன் பணி.

“குறிப்பாக HIV தொற்றுடைய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான, தரமான, அன்பும், அரவணைப்புடன் சேவை செய்வதே”

குறிக்கோள்

 1. எச்.ஐ.வி. தொற்றுடையவர்களை மனிதர்களாக மதித்து சந்தர்ப்பவாத நோய்களுக்கு தரமான சிகிச்சை அளித்தல்.
 2. கூட்டு மருந்து சிகிச்சை (ART) எடுக்க தகுதியானவர்களுக்கு சிகிச்சைக்காக பரிந்துரைத்தல்.
 3. வாழ்வின் இறுதி நிலையில் இருப்போர்க்கு பரிவுடன் கூடிய கவனிப்பு.
 4. சமுதாயம் சார்ந்த மனநல மற்றும் ஆன்மீக கவனிப்பு.
 5. பிற அரசு சார்ந்த / அரசு சாராத தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
 6. எச்.ஐ.வி. தொற்றுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எதிர்கால கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்தல்.

பிரிவுகள்

ஜீவன் ஜோதி நலமையத்தின் செயல்பாடுகளை உள் நோயாளிப்பிரிவு, வெளி நோயாளிப்பிரிவு, சமூக களப்பணிப்பிரிவு என மூவகைப்படுத்தலாம்.

உள்நோயாளிப்பிரிவு

 • படுக்கை வசதி- ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 21, குழந்தைகளுக்கு 8

சேவைகள்

 • அரவணைப்பு / ஆறுதல்
 • யோகாப் பயிற்சி
 • மருத்துவ / செவிலியர் பணி
 • பதிவுப் பணி
 • சிறப்பு மருத்துவர்களின் கவனிப்பு
 • ஆன்மீக பணி
 • ஊட்டச்சத்து / ஊட்டச்சத்து பற்றிய பயிற்சி
 • ஆற்றுப்படுத்தல்

வெளி நோயாளிப்பிரிவு

 • பதிவு செய்தல்
 • மருத்துவ கவனிப்பு
 • ஆற்றுப்படுத்துதல்
 • ஊட்டச்சத்து வழங்குதல்

களப்பணிகளில் - வீடு சார்ந்த பராமரிப்பு

 • வீடு சந்திப்பு
 • அரவணைப்பு / ஆறுதல்
 • HIV தொற்றுள்ளோர் கலந்தாய்வு கூட்டம்
 • பொருளதார முன்னேற்றத்திற்கு உதவுதல்
 • கவனிப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி
 • பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவுதல்
 • விழிப்புணர்வு
 • கூட்டு மருந்து சிகிச்சை கலந்தாய்வு கூட்டம்
 • கிருமி தொற்றுள்ள / பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனிப்போருக்கான கலந்தாய்வு கூட்டம்
 • கிருமி தொற்றுள்ள/ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்வுகள்
 • பரிந்துரை

ஆதாரம் : ஜீவன் ஜோதி நல மையம்

Filed under:
2.94736842105
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top