Accessibility options
Accessibility options
Government of India
Contributor : Mariyappan17/05/2022
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோகுளோபீனின் அளவோ எப்போதும் இருப்பதை விட குறைந்திருக்கும் நிலை இரத்தச் சோகை நோய் என்று அழைக்கப்படுகிறது. ஆளுக்குஆள் இந்த அளவு மாறினாலும் பொதுவான அளவு வருமாறு:
ஆண்: 13.8—17.2 gm/dl
பெண்: 12.1—15.1 gm/dl
(குறிப்பு: gm/dl = கிராம்/டெசி லிட்டர்
இரத்தச் சோகையின் மூன்று முக்கிய விளைவுகள்: இரத்த இழப்பு, இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைதல், அதிக அளவில் இரத்த சிவப்பணுக்கள் அழிதல்.
பின்வருவனவும் இரத்தச் சோகை ஏற்படுத்துபவைகளில் அடங்கும்:
அளவுக்கு மீறிய மாதவிடாய்
இரத்தச் சோகை இருந்தால் நீங்கள் சோர்வாகவும், குளிர்வது போலும், தலைசுற்றுவது போலவும், எரிச்சலாகவும் உணரலாம். மூச்சடைப்பும், தலைவலியும் ஏற்படலாம்.
இரத்தச் சோகையின் பொதுவான அறிகுறி சோர்வும் பலவீனமுமே.
பிற அறிகுறிகளும் அடையாளமும் பின்வருமாறு:
இரத்த இழப்பு
இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைதல்
அதிக அளவில் இரத்தச் சிவப்பணுக்கள் அழிதல்
இரத்தச் சிவப்பணுக்கள் அழிவதற்கான காரணங்கள்.
மருத்துவ வரலாறு
பலவீனம், உடல் சோர்வு, உடல் வலி போன்ற அறிகுறிகளும் அடையாளங்களும்.
இரத்தப் பரிசோதனைகள்
உடல் பரிசோதனைகள்
முழுமையான இரத்தக் கணக்கிடல் (CBC): இது இரத்தத்தில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடச் செய்யப்படுகிறது. இரத்தச் சோகையைக் கணக்கிட மருத்துவர்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் (ஹீமட்டோகிரிட்), ஹீமோகுளோபினையும் கணக்கிடுவர். இயல்பான ஒருவரின் ஹீமட்டோகிரிட் மருத்துவ வழக்கங்களுக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் பொதுவாக ஆண்களில் 38.8-ல் இருந்து 50 % வரையிலும், பெண்களில் 34.9-ல் இருந்து 44.5% வரையிலும் இருக்கும்.
உங்கள் இரத்த சிவப்பணுக்களின் அளவையும் வடிவையும் வரையறுக்கும் ஒரு சோதனை:
வழக்கத்துக்கு மாறான அளவிலும், வடிவத்திலும், நிறத்திலும் உள்ள சில சிவப்பணுக்கள் பரிசோதிக்கப்படும். இது நோயறிவதற்கு உதவும். எடுத்துக்காட்டாக, இரும்புச்சத்து குறைவு சோகையில் சிவப்பணுக்கள் வழக்கத்துக்கு மாறாக சிறியதாகவும் வெளிறிய நிறத்திலும் இருக்கும். ஊட்டச்சத்துக் குறைவுச் சோகையில் இரத்தச் சிவப்பணுக்கள் பெரிதாகவும் எண்ணீக்கையில் குறைந்தும் காணப்படும்.
இரும்புச் சத்துக்கள்: பொதுவாகத் தரப்படும் இரும்பு சத்து ஃபெரஸ் சல்பேட், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை (வாய்மூலமாக) எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவுச் சத்து: இரும்புச் சத்துள்ள உணவு வகைகளாவன:
கரும்பச்சைக் கீரை வகைகள், எடுத்துக்காட்டாக பசலைக் கீரை.
இரும்புச் சத்துள்ள தானிய வகைகள்
பாதாம்
இரும்புச் சத்துக் குறைபாட்டினால் வரும் சோகை ஆபத்தான, நீடித்த சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. எனினும் சில பிரச்சினைகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன:
சோர்வு
இரும்புச் சத்துக் குறைவு சோகை ஒருவரை சோர்வாகவும் சோம்பலாகவும் (ஊக்கமின்மை) மாற்றி விடும். இதன் விளைவாக வேலையில் சுறுசுறுப்பாக இல்லாமல் செயலாற்றல் குறைந்தவராக மாறிவிடுவார்.
நோய்த்தடுப்பு அமைப்பு
இரும்புச் சத்துக் குறைவு சோகை நோய்த்தடுப்பு மண்டலத்தைத் தாக்கலாம் (உடலின் இயற்கையான நோய்த்தடுப்பு அமைப்பு). இது ஒருவரை நோய்க்கும், தொற்றுநோய்க்கும் எளிதில் பலியாகுமாறு பலவீனமாக்கிவிடும்.
இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள்
கடுமையான சோகைக்கு ஆளான வயதுவந்த ஒருவருக்கு இதயத்தையும் நுரையீரலையும் பாதிக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம். உதாரணமாக,
இதய மிகைத்துடிப்பு (Tachycardia- அசாதரணமாக இதயம் மிகையாகத் துடித்தல்)
இதயம் செயலிழத்தல்-உடலுக்கு வேண்டிய இரத்தத்தைத் தகுந்தவாறு இதயத்தால் செலுத்தமுடியாமை.
கர்ப்பம்
இரத்தச் சோகையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்திற்கு முன்னும் பின்னும் சிக்கலான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பேறுகாலத்திற்குப் பின்னான மனவழுத்தம் ஏற்படவும் கூடும் (சில பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப் பின் ஏற்படும் ஒருவகையான மன அழுத்தம்)
ஆதாரம்: தேசிய சுகாதார இணையம்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இரும்புச்சத்துக் குறைவு இரத்தசோகை பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இரத்தம் எனும் உயிர்த் திரவத்தில் அடங்கியுள்ள துணிக்கைகளின் பணி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இரத்த தானம், இரத்த தானம் மீதுள்ள தவறான கருத்துகள், இரத்தம் பற்றிய உண்மைகள், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான இரத்த தான சேவை மையங்களின் பயனுள்ள இணைப்புகள் முதலியன இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
நெப்போலியன்
4/16/2023, 11:03:16 AM
தடுக்கும் வழிமுறைகள்
சந்தானம்
2/2/2021, 9:57:45 AM
உஷார் ஆக எண்ண செய்ய வேண்டும்
சௌந்தர்ராஜன்
1/20/2021, 6:27:43 AM
நன்றி ..
Contributor : Mariyappan17/05/2022
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
87
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இரும்புச்சத்துக் குறைவு இரத்தசோகை பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இரத்தம் எனும் உயிர்த் திரவத்தில் அடங்கியுள்ள துணிக்கைகளின் பணி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இரத்த தானம், இரத்த தானம் மீதுள்ள தவறான கருத்துகள், இரத்தம் பற்றிய உண்மைகள், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான இரத்த தான சேவை மையங்களின் பயனுள்ள இணைப்புகள் முதலியன இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.