பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இரத்தச் சோகை நோய்

இரத்தச் சோகை நோய் பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோகுளோபீனின் அளவோ எப்போதும் இருப்பதை விட குறைந்திருக்கும் நிலை இரத்தச் சோகை நோய் என்று அழைக்கப்படுகிறது. ஆளுக்குஆள் இந்த அளவு மாறினாலும் பொதுவான அளவு வருமாறு:

ஆண்: 13.8—17.2 gm/dl

பெண்: 12.1—15.1 gm/dl

(குறிப்பு: gm/dl = கிராம்/டெசி லிட்டர்

இரத்தச் சோகையின் மூன்று முக்கிய விளைவுகள்: இரத்த இழப்பு, இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைதல், அதிக அளவில் இரத்த சிவப்பணுக்கள் அழிதல்.

பின்வருவனவும் இரத்தச் சோகை ஏற்படுத்துபவைகளில் அடங்கும்:

அளவுக்கு மீறிய மாதவிடாய்

 • கர்ப்பம்
 • புண்கள்
 • பெருங்குடல் கட்டிகள் அல்லது பெருங்குடல் புற்றுநோய்
 • பரம்பரைக் கோளாறுகள்
 • இரும்பு, பாலிக் அமிலம், ஊட்டச்சத்து B 12 ஆகியவை இல்லாத உணவு
 • அரிவாள் அணுச்சோகை, தலசேமியா (இரத்த மரபணுக் கோளாறு) அல்லது புற்று நோய் போன்ற இரத்தக் கோளாறுகள்
 • பரம்பரையாக அல்லது பெறப்பட்ட அப்பிளாஸ்டிக் சோகை

இரத்தச் சோகை இருந்தால் நீங்கள் சோர்வாகவும், குளிர்வது போலும், தலைசுற்றுவது போலவும், எரிச்சலாகவும் உணரலாம். மூச்சடைப்பும், தலைவலியும் ஏற்படலாம்.


இரத்த சோகை

நோயறிகுறிகள்

இரத்தச் சோகையின் பொதுவான அறிகுறி சோர்வும் பலவீனமுமே.

பிற அறிகுறிகளும் அடையாளமும் பின்வருமாறு:

 • மூச்சடைப்பு
 • தலைசுற்றல்
 • தலைவலி
 • கை கால்கள் குளிர்தல்
 • தோல் வெளிறுதல்
 • நெஞ்சுவலி

காரணங்கள்

இரத்த இழப்பு

 • இரத்த இழப்பே இரத்தச் சோகைக்கு முக்கியக் காரணம். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்துக் குறைவே. சூழ்நிலைகளைப் பொறுத்து இரத்த இழப்பு குறுகிய காலத்திற்கோ நீண்ட காலத்திற்கோ இருக்கலாம். செரிமானக் குழாய்களில் அல்லது சிறுநீரகக் குழாய்களில் இரத்த இழப்பு ஏற்படலாம். அறுவை சிகிற்சை, காயங்கள் அல்லது புற்றுநோய் இரத்த இழப்பை ஏற்படுத்தலாம்.
 • மாதவிடாயின் போது அதிகமான இரத்தப்போக்கு.
 • அதிகமான இரத்த இழப்பு ஏற்படும்போது, உடல் இரத்தச் சிவப்பணுக்களை இழந்து, இரத்தச் சோகை நோய் உண்டாகலாம்.

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைதல்

 • இது "பரம்பரையாக" வந்ததாகவோ "பெறப்பட்டதாகவோ" இருக்கலாம்.
 • {பெறப்பட்டது என்பது ஒருவருக்கு பிறப்பிலேயே அவ்வாறு இல்லாமல் பின்னர் ஏற்பட்டதாக இருக்கலாம். பரம்பரை என்பது பெற்றோரிடம் இருந்து வந்தது}
 • பெறப்பட்ட இரத்தச் சோகைக்கு இட்டுச் செல்லும் சூழல்களும் காரணிகளும்:
 • சத்தற்ற உணவு
 • அளவுக்கு அதிகமான ஹார்மோன் அளவு
 • நாட்பட்ட நோய்கள்
 • கர்ப்பம்
 • அப்பிளாஸ்டிக் சோகையும் உடலில் இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தடுக்கும். இந்நிலை பரம்பரையானதாகவும் இருக்கலாம் அல்லது பெறப்பட்டதாகவும் இருக்கலாம்.

அதிக அளவில் இரத்தச் சிவப்பணுக்கள் அழிதல்

இரத்தச் சிவப்பணுக்கள் அழிவதற்கான காரணங்கள்.

 • வீங்கிய அல்லது நோய்வாய்ப்பட்ட மண்ணீரல் ஒரு காரணமாக இருக்கலாம். இது ஒரு பெறப்பட்ட நிலையே.
 • உடலே ஏராளமான இரத்தச் சிவப்பணுக்களை அழித்து விடுவது பரம்பரையாக வந்த ஒரு நிலை. அரிவாள் அணு இரத்தச் சோகை, தாலசேமியா (இரத்த மரபணுக் கோளாறு),, சில என்சைம் குறைபாடுகள் ஆகியவற்றால் இது ஏற்படும். இதனால் இரத்த சிவப்[பணுக்களில் குறைபாடுகள் உருவாகி ஆரோக்கியமான அணுக்களை விட விரைவில் அழிந்து போகின்றன.
 • ஹீமோலிட்டிக் இரத்தச் சோகை ஏற்படும்போது உடலே இரத்தச் சிவப்பணுக்களை அழித்துவிடுகிரது. பரம்பரை அல்லது பெறப்பட்ட அல்லது வேறு காரணிகளாலும்  ஹீமோலிட்டிக் இரத்தச் சோகை ஏற்படலாம். எடுத்துக்காட்டுகள்: நோய்த்தடுப்பு குறைபாடுகள், தொற்று நோய்கள், இரத்தம் செலுத்தும் போது ஏற்படும் எதிர்விளைவுகள்.

நோய்கண்டறிதல்

மருத்துவ வரலாறு:

பலவீனம், உடல் சோர்வு, உடல் வலி போன்ற அறிகுறிகளும் அடையாளங்களும்.

இரத்தப் பரிசோதனைகள்:

 • ஹீமோகுளோபின் அளவைக் கணக்கிடல் (இது ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ஒரு வகை புரதப் பொருளாகும்)
 • இரத்தச் சிவப்பணுக்கள் ( ஹீமோகுளோபினைக் கொண்டுள்ள உயிரணுக்கள்) வழக்கத்தைவிடக் குறைவாக இருத்தல்.

உடல் பரிசோதனைகள்:

 • முறையற்ற அல்லது வேகமான இதயத் துடிப்பு
 • முறையற்று அல்லது வேகமாக மூச்சுவிடல்
 • கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம்

முழுமையான இரத்தக் கணக்கிடல் (CBC): இது இரத்தத்தில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடச் செய்யப்படுகிறது. இரத்தச் சோகையைக் கணக்கிட மருத்துவர்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் (ஹீமட்டோகிரிட்), ஹீமோகுளோபினையும்  கணக்கிடுவர். இயல்பான ஒருவரின் ஹீமட்டோகிரிட் மருத்துவ வழக்கங்களுக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் பொதுவாக ஆண்களில் 38.8-ல் இருந்து 50 % வரையிலும், பெண்களில் 34.9-ல் இருந்து 44.5% வரையிலும் இருக்கும்.

உங்கள் இரத்த சிவப்பணுக்களின் அளவையும் வடிவையும் வரையறுக்கும் ஒரு சோதனை:

வழக்கத்துக்கு மாறான அளவிலும், வடிவத்திலும், நிறத்திலும் உள்ள சில சிவப்பணுக்கள் பரிசோதிக்கப்படும். இது நோயறிவதற்கு உதவும். எடுத்துக்காட்டாக, இரும்புச்சத்து குறைவு சோகையில் சிவப்பணுக்கள் வழக்கத்துக்கு மாறாக சிறியதாகவும் வெளிறிய நிறத்திலும் இருக்கும். ஊட்டச்சத்துக் குறைவுச் சோகையில் இரத்தச் சிவப்பணுக்கள் பெரிதாகவும் எண்ணீக்கையில் குறைந்தும் காணப்படும்.

நோய் மேலாண்மை

இரும்புச் சத்துக்கள்: பொதுவாகத் தரப்படும் இரும்பு சத்து ஃபெரஸ் சல்பேட், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை (வாய்மூலமாக) எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவுச் சத்து: இரும்புச் சத்துள்ள உணவு வகைகளாவன:

கரும்பச்சைக் கீரை வகைகள், எடுத்துக்காட்டாக பசலைக் கீரை.

இரும்புச் சத்துள்ள தானிய வகைகள்

 • முழு தானிய வகைகளான பழுப்பு அரிசி
 • பீன்ஸ்
 • கொட்டைகள்
 • இறைச்சி

பாதாம்

இரும்புச் சத்துக் குறைபாட்டினால் வரும் சோகை ஆபத்தான, நீடித்த சிக்கல்களை  ஏற்படுத்துவதில்லை. எனினும் சில பிரச்சினைகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன:

சோர்வு

இரும்புச் சத்துக் குறைவு சோகை ஒருவரை சோர்வாகவும் சோம்பலாகவும் (ஊக்கமின்மை) மாற்றி விடும். இதன் விளைவாக வேலையில் சுறுசுறுப்பாக இல்லாமல் செயலாற்றல் குறைந்தவராக மாறிவிடுவார்.

நோய்த்தடுப்பு அமைப்பு

இரும்புச் சத்துக் குறைவு சோகை நோய்த்தடுப்பு மண்டலத்தைத் தாக்கலாம் (உடலின் இயற்கையான நோய்த்தடுப்பு அமைப்பு). இது ஒருவரை நோய்க்கும், தொற்றுநோய்க்கும் எளிதில் பலியாகுமாறு பலவீனமாக்கிவிடும்.

இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள்

கடுமையான சோகைக்கு ஆளான வயதுவந்த ஒருவருக்கு இதயத்தையும் நுரையீரலையும் பாதிக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம். உதாரணமாக,

இதய மிகைத்துடிப்பு (Tachycardia- அசாதரணமாக இதயம் மிகையாகத் துடித்தல்)

இதயம் செயலிழத்தல்-உடலுக்கு வேண்டிய இரத்தத்தைத் தகுந்தவாறு இதயத்தால் செலுத்தமுடியாமை.

கர்ப்பம்

இரத்தச் சோகையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்திற்கு முன்னும் பின்னும் சிக்கலான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பேறுகாலத்திற்குப் பின்னான மனவழுத்தம் ஏற்படவும் கூடும் (சில பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப் பின் ஏற்படும் ஒருவகையான மன அழுத்தம்)

ஆதாரம் - தேசிய சுகாதார இணையம்

2.9012345679
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top