பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அஞ்சைனா

அஞ்சைனா நோய் பற்றிய குறிப்புகள்

அஞ்சைனா என்றால் என்ன?

அஞ்சைனா என்னும் மருத்துவச் சொல் நெஞ்சின் நடுப்பகுதியில் ஏற்படும் ஒருவித அடைப்புப் போன்ற நோவு அல்லது அசௌகரியத்தை குறிப்பதாகும். இது பொதுவாக அப்பியாசத்துடன் தொடங்கி இளைப்பாறும் போது குறைந்து போகிறது. இவ்வலி 5-10 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். இதயத்திற்கு இரத்தம் குறைவாக செல்வதினாலேயே இந்த அறிகுறி காணப்படுகிறது.

அஞ்சைனா நோய் மக்களுக்கு எப்படி ஏற்படுகிறது?

இருதயமானது உடலுக்கு போதிய இரத்தத்தை நிமிடத்திற்கு நிமிடம் அனுப்பிக் கொண்டிருந்தாலும் இதய நார்கள் இயங்குவதற்கு இரத்தம் தேவைப்படுகிறது. (அதாவது அதன் பிரண வாயுவிற்கும் உணவிற்கும்) இந்த இரத்தமானது மூன்று முக்கிய கொறோனறி (இதயநாடிகள்) நாடிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த கொறோனறி நாடிகள் சுருங்கி அதனால் இரத்தோட்டம் குறைவடையும் போது மக்களுக்கு அஞ்சைனா நோய் ஏற்படுகிறது. கொறோனறி நாடிகள் முற்றாக அடைப்பு எற்படும் போது இதயத்தின் ஒரு புறத்திலுள்ள தசைகள் செயலிழந்து விடுகின்றன. இதுவே மாரடைப்பு அல்லது மையோகாடியல் இன்பாக்ஷன் (Myocardial Infarction) எனப்படும்.

இரத்தக் குழாய்களின் உட்புறத்தில் கொழுப்புப் படிவதே இந்த நாடிகள் சுருங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இன்னும் சிதைவடைந்த பகுதியில் இரத்தக்கட்டிகளை எற்படுத்தி மேலும் இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்யும்

அஞ்சைனாவின் அறிகுறிகள் என்ன?

  • பொதுவாக மேலே கூறப்பட்ட நெஞ்சு நோ ஏற்படும் என்று சொல்லுவர். சில வேளைகளில் நெஞ்சு நோ இல்லாமலே கழுத்திலும் தாடையிலும் ஒரு கையிலோ அல்லது இரண்டு கையிலுமோ நோ இருப்பதாகக் கூறுவர்.
  • அஞ்சைனா எப்படிப்பட்ட மக்களுக்கு உண்டாகிறது?
  • அதிக இரத்த அமுக்கம் உடையவர்கள், புகைப் பிடிப்போர், நீரிழிவு நோய் உள்ளோர், இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளோர் இந்நோய்க்கு ஆளாகலாம்.
  • உடல் நிறை கூடியவர்கள், மேலே கூறப்பட்ட இரத்த அமுக்கம், நீரிழிவு, புகைப் பிடித்தல், இரத்தத்தில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் அஞ்சைனா நோய்க்கு ஆளாகிறார்கள்.
  • பெண்களை விட ஆண்களுக்கே இந்நோய் அதிகமாக வர வாய்ப்புண்டு.

அஞ்சைனாவைப் பராமரிப்பது எப்படி?

  • நோயைக் குறைத்தல்
  • நோய் வராமல் தடுத்தலும்.
  • மீண்டும் வரக்கூடிய வாய்ப்பிருந்தால் அதைக் கட்டுப்படுத்தலும்.  இவை மூன்றுமே முக்கிய சிகிச்சைகள்.

அஞ்சைனா - இருதய நோய் இவற்றின் வேறுபாடு என்ன?

இரண்டும் இருதய நோய்தான். ஆனால் மயோகாடியல் நோயில் வலி அதிகமாக இருக்கும். 15—20 நிமிடங்கள் இருக்கும். இந் நோயாளியை உடனே வைத்தியசாலையில் சேர்க்கவேண்டும். எச்சரிக்கை அறிகுறிகள் உண்டு. அஞ்சைனா நோவில் குறைவு ஏற்படாவிட்டால் அல்லது அடிக்கடி வந்தால் அல்லது கூடுதலாக இருந்தால் உடனே வைத்திய சிகிச்சை செய்ய வேண்டும்.

ஆதாரம் : ஆரோக்கிய தகவல் தளம்

3.03225806452
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top