பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இதய நோய்

இதய நோய் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இதயத் தமனிகள் மெல்லியதாதல் அல்லது அவற்றில் தடை ஏற்படுவதே இதய நோய் எனப்படுகிறது. பொதுவாக இது தமனித் தடிப்பால் உண்டாகிறது. தமனியின் உட்சுவரில் கொழுப்பு படிவதால் இத்தடிப்பு ஏற்படுகிறது. இது தமனியில் அடைப்புண்டாக்கி இதய தசைகளுக்கு இரத்தம் செல்வதைத் தடுக்கிறது. இதனால் இதயத்துக்குச் செல்லும் இரத்த அளவு குறைகிறது. இதயம் தகுந்த முறையில் செயல்படத் தேவையான உயிர் வளியும் முக்கியமான உயிர்ச்சத்துக்களும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக நெஞ்சுவலி உண்டாகிறது. இதயத் தசையின் ஒரு பகுதிக்கு நிரந்தரமாக இரத்தம் கிடைக்கவில்லை என்றாலோ, இதயத்துக்குத் தேவைப்படும் எரிசக்தியின் அளவு அதற்குக் கிடைக்கும் இரத்தத்தின் அளவைவிட மிக அதிகமாக இருந்தாலோ மாரடைப்பு (இதய தசைகளுக்கு காயம் உண்டாகுதல்) ஏற்படுகிறது. இந்தியாவில் கிராமப் புறங்களை விட நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் அதிகமாக இதய நோயால் மரணமடைகிறார்கள்.

நோயறிகுறிகள்

இதய நோயின் முக்கியக் கூறு நெஞ்சுவலியும் மாரடைப்பும் ஆகும். இதயத்துக்குத் தேவையான இரத்தமும் உயிர்வளியும் கிடைக்காத போது வலி உண்டாகிறது. வலியின் அளவு ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.

 • கனமாக இருப்பது போலவும், யாரோ இதயத்தைப் பிழிவது போலவும் உணர்வு உண்டாகும். நெஞ்சு எலும்புக்கு அடியில் மட்டுமல்லாமல் கழுத்திலும், புயங்களிலும், வயிற்றிலும் அல்லது மேல்முதுகிலும் அசௌகரியமான உணர்வு ஏற்படும்.
 • பொதுவாக உடல் வேலை செய்யும் போதும் உணர்ச்சிவயப் படும்போதும் வலி தோன்றி ஓய்வு எடுக்கும்போதோ அல்லது நைட்ரோகிளிசரின் என்ற மருந்தை உட்கொள்ளும்போதோ மறைந்துவிடும்.
 • மூச்சடைப்பும், உடல்வேலையின் போது களைப்பும் பிற அறிகுறிகள். பெண்கள், வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள் நெஞ்சுவலி தவிர கீழ்க்காணும் அறிகுறிகளையும் உணர்வார்கள்:
 • களைப்பு
 • மூச்சடைப்பு
 • பொதுவான பலவீனம்

காரணங்கள்

இந்நோயுடன் தொடர்புடைய ஆபத்தான காரணிகள் வருமாறு:

 • உடல்பருமன்
 • புகைத்தல்
 • மனவழுத்தம்
 • இரத்த அழுத்தம்
 • உடல்வேலை அற்ற வாழ்க்கைமுறை
 • நீரிழிவு
 • இதய நோய் கொண்ட குடும்ப வரலாறு

நோய் கண்டறிதல்

சோதனைகள் வருமாறு:

 • இதய மின்னலை வரைவு (இ.சி.ஜி)
 • உடல்பயிற்சி அழுத்த சோதனை
 • வண்ண டாப்ளர் சோதனை
 • தமனி இதய அழுத்தப்பதிவு (Coronary angiography)- இதயத் தமனிகளை எக்ஸ் கதிர் மூலம் மதிப்பிடும் சோதனை.
 • மின்னொலி இதயவரைவு மனவழுத்த சோதனை (Echocardiogram stress test)
 • மின் – கற்றை கணினி வரைவி (Electron-beam computed tomography (EBCT) – தமனியின் உட்பரப்பில் கால்சியம் உள்ளதா என்பதைக் கண்டறிய- கால்சியம் அதிகம் இருந்தால் இதய நோய் வர அதிக வாய்ப்பு.
 • இதய கணினி ஊடுகதிர்ப்படம் (சி.டி.ஸ்கேன்)
 • அணுக்கரு அழுத்த சோதனை

தகுந்த நோய்கண்டறிதலுக்கும் சிகிச்சைக்கும் மருத்துவரையே அணுக வேண்டும்.

நோய் மேலாண்மை

ஸ்போரின் 75 அல்லது எக்கோஸ்போரின் போன்ற ஆஸ்பரின் மருந்துகள் கொடுக்கலாம்.

அறுவைமருத்துவம்

 • இதய தமனி மாற்றுப்பாதை
 • இதய மாற்றம்

வாழ்க்கைமுறை

 • எடை கட்டுப்பாடு
 • புகைபிடித்தலை நிறுத்துதல்
 • மாறுபக்க கொழுப்பை தவிர்த்தல் (ஐடிரஜனேற்றிய எண்ணெய்களாக)
 • நடை, ஓட்டம், நீச்சல் போன்ற உடல் பயிற்சிகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தத்தில் உள்ள கொழுப்பை நாளடைவில் குறைக்கவும் உதவும்
 • ஒமேகா-3 கொழுப்பு உள்ளெடுப்பை அதிகரிக்க மீன் எண்ணெய் அருந்தலாம்
 • உளவியல் அழுத்தத்தைக் குறைக்கவும்

இவை ஆரோக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்ள மட்டுமே. முறையான நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.

தடுப்புமுறை

 • ஆரோக்கியமான, சமநிலையான உணவை உண்ணவும்
 • பச்சைக் காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் ஏராளமாக அடங்கிய குறைந்த கொழுப்பும் நிறைந்த நார்ச்சத்தும் கொண்ட உணவே சிறந்தது.
 • உடல் செயல்பாடு அதிகம் தேவை. ஆரோக்கியமான உணவும் தொடர் உடல்பயிற்சியுமே எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க சிறந்த வழி.
 • உடல்நலத்துக்கு ஏற்ற எடை மிகை இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும்.
 • நிறைவுற்ற கொழுப்பு குறைந்த உணவும், தொடர் உடல் பயிற்சியும், தேவைப்பட்டால் உரிய மருந்துகளும் கொண்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.95918367347
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top