பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இருதயம்

இருதயம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நல்ல கொழுப்பு சத்து தரும் (கொலஸ்டிரால்) உணவுகள்

கொலஸ்டிரால்(கொழுப்பு) என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் உள்ளது. இது வைட்டமின் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே கூடுதலான கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருத்தல் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது மிகவும் சிரமமாகும்.ஏனெனில் பல வகையான உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளன.உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில செயல்பாடுகள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

எச்டிஎல் கொலஸ்டரால் என்பது நல்ல கொலஸ்டரால்.எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்பது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்புசத்தை விட எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்ட்ரால் அளவை பேண மிக முக்கிய தேவையாகும்.

 • உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை அறிநது கொள்ள வேண்டும்.
 • கொழுப்புசத்து உள்ள உணவை எடுத்துக்கொள்வது மற்றும் மது அருந்துவது,புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை அகற்றும்.
அதிகளவு எச் டி எல்(நல்ல கொழுப்புசத்து)

உடலானது கொழுப்பினை அனுமதிக்காத போதும், உடலுக்கு சிறிதளவு இது தேவைப்படுகிறது. நம்மில் பெரும்பாலானோர் தேவைக்கு அதிகமாகவே உண்ணுகிறோம். ஒரு நாளைக்கு தேவையான நான்கில் ஒருபங்கு அளவு அனைத்து கலோரிகளும் அவசியம் கொழுப்பிலிருந்து பெறப்படுகிறது .தேவையற்ற கொழுப்புகள் இவற்றை துரித உணவுகள் மற்றும் ப்ரைட் உணவுகளில் காணலாம். சாச்சுரேட்டெட் கொழுப்புகள் எல் டி எல் – ன் (கெட்ட கொழுப்புகள்) எண்ணிக்கையை அதிகரிக்கும்.

உடலானது ட்ரான்ஸ் பாட்டினை இல்லாமல் செய்ய விரும்புகிறது. உணவுக்கூட்டுப்பொருளில் ஹைட்ரோஜினெட்டெட் வெஜிடெபில் ஆயில் சேர்ந்திருந்தால், நீங்கள் ட்ரான்ஸ் கொழுப்பினை உட்கொள்ளப்போகிறீர்கள். இவை கெடுதியானவை ஏனெனில் இவை கெட்ட கொழுப்பின் அளவினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. உடல் பிற இரண்டு வகை கொழுப்புகளான மோனோஅன்சாச்சுரேட்டெட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டெட் கொழுப்பினை நாடுகிறது. நீங்கள் இவற்றை ஆலிவ் மற்றும் கனோலா எண்ணெய்களில் காணலாம். அவைகளெள்லாம் மோனோஅன்சாச்சுரேட்டெட் கொழுப்பினை கொண்ட நல்ல மூலப்பொருளாகும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகளவுள்ள உணவுகளை அதிகம் உண்பதால் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்த உதவுகிறது. இவ்வகை கொழுப்பு அமிலங்கள் டூனா மற்றும் சால்மோன் போன்ற பல்வேறுப்பட்ட மீன்களில் உள்ளது. ஒரு வாரத்தில் இரண்டு முறை இவ்வகை மீன்களை உணவில் பரிமாறுவது உங்கள் கொலஸ்டிரால் எண்ணிக்கையில் நேரிடையான நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

மீன் எண்ணெய், சோயாபீன் சார்ந்த பொருட்கள், கீரைகள் போன்றவை நல்ல கொலஸ்டிரால் உள்ள உணவுகளாகும். உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் வாரத்தில் 5 நாட்கள் என ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் ஏரோபிக் வகை (நடத்தல், ஓடுதல், படியேறுதல் மற்றும் பிற) உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்தால் நீங்கள் உங்கள் உடலில் எச் டி எல் அளவை 5 % இரண்டு மாதங்களுக்குள் உயர்த்தலாம்.

நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், புகைப்பிடிப்பதை விட்டிவிடுவதின் மூலம் நல்ல கொலஸ்டிராலின் அளவை உயர்த்தலாம். புகைக்கும் போது உங்கள் உடல் எடுத்துக்கொள்ளும் வேதிப்பொருள் நல்ல கொழுப்புசத்தின் அளவை குறைக்கிறது. நீங்கள் இதை விட்டுவிட்டால், உங்களின் எச் டி எல் அளவு சுமார் 10 % அதிகமாகும். உடல் எடையினை குறைப்பதும் நல்ல கொலஸ்டிராலினை உயர்த்த மற்றொரு நல்ல வழியாகும். ஒவ்வொரு முறையும் உங்கள் எடையில் 6 பவுண்டுகள் குறையும்போது நல்ல கொலஸ்டிராலின் அளவு 1 மி கி / 100 மி லி என்ற அளவில் உயர்கின்றது. நல்ல கொலஸ்டிரால் உணவை உட்கொள்வதும் மேற்கூறிய அளவு உடல் எடை குறைவதற்கு உதவும்.

எச் டி எல் மற்றும் எல் டி எல் கொலஸ்டிரால்:நல்லது மற்றும் கெட்டது எது ?

கொலஸ்டிரால் இரத்ததில் கரையாது. இவை செல்லிலிருந்து அங்குமிங்குமாக லிப்போபுரோடீன் எனப்படும் ஏந்திகளால் கடத்தப்படுகிறது. எல் டி எல்-லான, அடர்த்தி கம்மியான லிப்போபுரோடீன் கெட்ட கொலஸ்டிரால். எச் டி எல்-லான அடர்த்தி அதிகமான லிப்போபுரோடீன் நல்ல கொலஸ்டிரால். இந்த இரண்டு வகை கொலஸ்டிராலுடன் ட்ரைகிளிசரைட்ஸ் மற்றும் எல்பி(ஏ) கொலஸ்டிரால் சேர்ந்து உங்களின் மொத்த கொலஸ்டிரால் அளவை ஏற்படுத்துகிறது, இதனை இரத்தபரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

எல் டி எல் (கெட்ட) கொலஸ்டிரால்

மிக அதிகளவு எல் டி எல் (கெட்ட) கொலஸ்டிரால் இரத்தத்தில் சுழலும் போது, மெல்லமெல்ல இதயம் மற்றும் மூளைக்கு இரத்தத்தை செலுத்தும் சுத்த இரத்தநாளங்களின் உட்சுவரில் படிகிறது. இதனால் அவற்றின் உள் சுற்றளவு குறைகிறது. இவ்வகை இரத்தநாளங்களில் இரத்தகட்டு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடை செய்யப்படும் போது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.

எச் டி எல் (நல்ல) கொலஸ்டிரால்

சுமார் நான்கில் ஒருபங்குலிருந்து மூன்றில் ஒருபங்குவரையிலான இரத்தக்கொலஸ்டிராலானது அதிக அடர்த்தி லிப்போபுரோடீனால் (எச் டி எல்) ஏந்திச்செல்லப்படிகிறது. அதிகளவு எச் டி எல் கொலஸ்டிரால் மாரடைப்புக்கு எதிராக பாதுகாப்பதால் இது நல்ல கொலஸ்டிரால் . குறைந்தளவு எச் டி எல் (100 மி கி-ற்க்கு குறைவாக) இருந்தாலும் இதய நோய் ஏற்படும் ஆபத்தினை அதிகரிக்கிறது.

ட்ரைகிளிஸரைட்கள

ட்ரைகிளிஸரைட்கள் என்பவை உடலில் தோற்றுவிக்கப்படும் ஒரு வகையான கொழுப்பு ஆகும். ட்ரைகிளிஸரைட்கள் அதிகரிப்பதற்கு அதிக உடல் எடை / பருமன், உடல்செயலின்மை, புகைபிடித்தல், அதிகளவு மதுபானம் எடுத்துக்கொள்ளுதல் காரணமாகும். கார்போஹைட்ரேட் இருத்தல் (60 % மொத்த கலோரிகள் அல்லது அதற்கு மேற்பட்டு) போன்றவற்றாலும் ஏற்படுகிறது. அதிகளவு ட்ரைகிளிஸரைட்கள் உள்ளவர்களுக்கும் அதிகளவு கொலஸ்டிரால், அதிகளவு எல் டி எல் (கெட்ட) அளவு மற்றும் குறைந்த எச் டி எல் (நல்ல) அளவும் இருக்கும். இதய நோய்கள் மற்றும் / அல்லது சர்க்கரை நோய் உள்ள பல மக்களிடம் அதிகளவு ட்ரைகிளிஸரைட்கள் இருக்கும்.

எல்பி(ஏ) கொலஸ்டிரால்

எல்பி(ஏ) கொலஸ்டிரால் என்பது எல் டி எல் (கெட்ட) கொலஸ்டிராலின் மரபு வேறுபாட்டு பொருளாகும். அதிகளவு எல்பி(ஏ) என்பது விரைவாக இரத்தநாளங்களிள் கொழுப்பு படிவதை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.

பெரிகாரடியல் எப்யூஷன்

பெரிகார்டியல் எப்யூஷன் என்பது இதயத்தை சுற்றியுள்ள பெரிகார்டியம் எனப்படும் இரண்டு உறைகளுக்கு இடையேயுள்ள இடத்தில் அதிகளவு திரவம் சேரும் நிலையாகும். இந்நிலை இதய மற்றும் மண்டல கோளாறுகளினால் ஏற்படலாம் அல்லது ஏற்படுத்தும் காரணம் அறியமுடியாமலேயே (இடியூபதிக்) ஏற்படலாம். பெரிகார்டியல் எப்யூஷன் என்பது திடீரெனவோ அல்லது நீண்டநாட்கள் அடிப்படையிலோ ஏற்படலாம் மற்றும் இந்நோய் ஏற்பட எடுத்துக்கொள்ளும் காலம் இந்நோயின் அறிகுறிகள் மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரிகார்டியல் ஸ்பேஸ் அதாவது பெரிகார்டியல் உறைகளுக்கு இடையேயுள்ள இடம் சாதாரணமாக 15 லிருந்து 50 மி லி என்ற அளவு திரவத்தை கொண்டிருக்கும். இது விசரல் பெரிகார்டியல் உறை மற்றும் பெரைடல் பெரிகார்டியல் உறை என இந்த இரண்டு உறைக்கும் இடையில் உராய்வைத் தடுத்திட(லூப்ரிகண்ட்) பணியாற்றுகிறது. பெரிகார்டியம் மற்றும் பெரிகார்டியல் திரவம் இதயத்தின் செயலில் முக்கிய பங்குவகிக்கிறது. சாதாரண நல்ல பெரிகார்டியமானது அந்த பெரிகார்டியல் ஸ்பேஸில் உள்ள திரவம் ஏற்படுத்தும். அந்த பெரிகார்டியல் ப்ரஷர் (அழித்தம்) எந்த மாறுதலும் அடையாதவண்ணம், அந்த அழுத்தத்தினை இதயத்தின் அனைத்து பக்கத்திலும் சமமாக செலுத்தும் வண்ணம், இதய தசைகள் சமமாக சுருங்கி விரியும் வண்ணம் நன்கு மீட்சி அடைந்து அத்திரவம் அதிகரிப்பை தன்னுள் உள்வாங்கிக்கொள்கிறது, அதே வேளையில் இதயத்தை சுற்றிலும் மற்றும் குறுக்குவாட்டிலும் அழுத்தத்தினை பகிர்ந்தளிக்கிறது.

பெரிகார்டியல் எப்யூஷனின் மருத்துவ வெளிப்பாடு என்பது பெரிகார்டியல் உறை பையில் திரவமானது எந்தளவிற்கு சேர்ந்துள்ளது என்பதனை பொறுத்துள்ளது. 15 லிருந்து 50 மி லி வரையான இந்த பெரிகார்டியல் திரவத்தின் அளவு விரைவாக திடீரென 80 மி லி என அதிகரிக்கும்போது பெரிகார்டியல் ப்ரஷர் உயருகிறது. அதேபோல் இந்த திரவத்தின் அளவு 2 லிட்டராக உயரும்போது எந்தவித அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கும்.

பெரிகார்டியல் எப்யூஷன் ஏற்பட காரணங்கள்

அதிகளவு பெரிகார்டியல் திரவம் உற்பத்தியாவது கீழ்காணும் காரணங்களை பொறுத்தது

 1. காயத்திற்குப்பின் இரண்டாம்நிலையாக இது ஏற்படுகிறது (பெரிகார்டைடிஸ்)
 2. இந்த திரவம் வெளியேறும் வழியில் அடைப்பு ஏற்படுவதால்,
 3. பெரிகார்டியத்திற்குள்ளாகவே வீக்கம், நோய்தொற்று, கேடுவிளைவிக்கும் அல்லது தன் உயிர் எதிர் செயல்கள் (ஆடொ இம்யூன் ப்ராசஸ்) போன்றவற்றின் காரணமாக

  இரண்டாம்நிலையாக இது ஏற்படலாம்.

  • இடியோபதிக்: பெரும்பாலான நிகழ்வுகளில் இது எதினால் ஏற்படுகிறது என்பது கண்டறியப்படவில்லை.
  • தொற்றக்கூடியவை
  • எச் ஐ வி நோய்தொற்று பல்வேறு முறையில் பெரிகார்டியல் எப்யூஷன் ஏற்பட வழிவகுக்கிறது. அவற்றில் கீழ்காண்பவையும் அடங்கும்
   • இரண்டாம்நிலை பாக்டீரியல் நோய்தொற்று
   • சந்தர்பவசமான நோய்தொற்று
   • மாலிக்னன்ஸி (கபோஸி சார்க்கோமா,லிம்போமா)
  • வைரல்: மிகப்பொதுவாக தொற்றக்கூடிய பெரிகார்டைடிஸ் மற்றும் மையோகார்டைடிஸ் போன்றவை வைரஸினால் ஏற்படுபவை. பொதுவான, நுண்ணுயிரிகளாகும்.
  • பையோஜெனிக் (நியூமோகாக்கை, ஸ்ட்ரெப்டொகாக்கை, ஸ்டெபைலோகாக்கை, நெய்ஸிரியா, ட்யூபர்குலோஸிஸ்)
  • பங்கல் (இஸ்டோப்ளாஸ்மோஸிஸ், கோகிடியோய்டோமைஸிஸ், கான்டிடா)
  • பிற நோய்தொற்றுக்கள் (சிபிலைடிக், புரோடொஸோல், பரஸைடிக்)
  • இதய மற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளில் போஸ்ட்ஆபரேடிவ் / போஸ்ட்ப்ரோஸிஜிரல் பெரிகார்டியல் எப்யூஷன் என்பது மாற்றப்பட்ட இதயத்தை திடீரென ஏற்றுக்கொள்ள மறுக்கச்செய்யும் நிலையுடன் தொடர்புடையதாக உள்ளது.
  • பிற குறைந்த பொதுவான காரணங்களாவன
   • யூரிமியா
   • மிக்ஸெடிமா
   • மோசமான பல்மோனரி ஹைபர்டென்ஷன்
   • கதிரியக்கச்சிகிச்சை
   • திடீரென இதய தசையில் ஏற்படும் சிதைவுகள், இதய உறை சிதைவையும் சேர்த்து.
   • ஐயோடாவில் செய்யப்படும் டிஸக்ஷன், இது இதய பெரிகார்டியல் பையினுள் இரத்தம் கசிய செய்து பெரிகார்டியல் எப்யூஷனை ஏற்படுத்தும்
   • ட்ரோமா
   • அதியுணர்வுத்திறன் அல்லது ஆடோஇம்யூன் சம்மந்தமானது
    • சிஸ்டமிக் லூப்பஸ் எரிதிமடோஸஸ்
    • ருமடாய்ட் ஆர்த்தரைடிஸ்
    • ஆன்கைலோசிங் ஸ்பாண்டைலைடிஸ்
    • ருமாடிக் பீவர் (காய்ச்சல்)
    • ஸ்கிளிரோடெர்மா
   • மருந்து தொடர்புடையவை (உ-ம் ப்ரோகைனமைட், ஹைட்ரலஸைன, ஐசோநியாஸிட், மினோக்ஸிடில், பின்னேடையன், ஆன்டிகோயாகுலண்ட, மிதசெர்ஜிட்)
அறிகுறிகள்:
 • இதயம் இரத்தநாளம் சம்மந்தமானவை
  • இதயவலி, அழுத்தம், அசௌகரியங்கள்: பெரிகார்டியல் வலியானது நேராக உட்காரும்போது மற்றும் உடலை முன்பக்கமாக நகர்தும்போது நீங்கிவிடும், மற்றும் மல்லார்ந்து படுக்கும்போது வலி அதிகமாகும்.
  • லேசான தலைவலி, மயக்கம்.
  • இதய படபடப்பு
 • சுவாசம் சம்மந்தமானவை
  • இருமல்
  • டிஸ்பீனியா / மூச்சுத்தினறல்
  • தொண்டைக்கம்முதல்
 • ஜீரண உறுப்பு சம்மந்தமானவை
  • விக்கல்
 • நரம்பியல் சம்மந்தமானவை
  • ஏக்கம்
  • குழப்பம்
பெரிகார்டியல் எப்யூஷன் - அறிகுறிகள்:
 • பெரிகார்டியல் உராய்வு உரசல்: ஹை – பிட்சிடு (ஆரோசை), ஸ்க்ராட்சிங் (கீரல் / சோரிதல்), க்ராடிங் (கீற்றணி) ஆகிய இம்மூன்றும் பெரிகார்டைடிஸில் ஒவ்வொரு இதய சுழற்சியிலும் திடீரென ஏற்படும் பகுதிகளாகும். சில வேளைகளில் இவைகளை ஸ்டெத்தஸ்கோப்பின் டையாபார்ம் எனப்படும் பகுதியை முன் நெஞ்செலும்பின் (ஸ்டெர்னம்) கீழ் இடப்பக்க ஓரமாக வைத்து லேசாக அழுத்தும் செலுத்துவதின் மூலம் ஏற்படுத்தலாம்.
 • இதய துடிப்பு அதிகரித்தல் (டாகிகார்டியா)
 • மூச்சு துடிப்பு அதிகரித்தல் (டாகிபீனியா)
 • மூச்சு சத்தம் குறைதல் (ப்ளூரல் எப்யூஷனுக்கு இரண்டாம் நிலையாக ஏற்படுகிறது)
 • ஹெபஸ்பிலினோமெகாலி (ஈரல் மற்றும் மண்ணீரல் வீக்கமடைதல்)
 • புற இரத்த நாள துடிப்பு பலவீனமடைதல்
 • நீர்கோவை (எடிமா)
 • சையனோஸிஸ்

கன்ஜெனிடல் ஹார்ட் டிபெக்ட்

பிறவி இருதய குறைபாடு

பிறவி இருதய குறைபாடு என்பது ஒரு குழந்தை பிறக்கும் போதே அதன் இருதய அமைப்பில் உள்ள பிரச்சினைகள் ஆகும். இதில் இயல்பான இரத்த ஓட்டம் மாற்றியமைகிறது.

 • பிறவி இருதய குறைபாடுகள் பல உள்ளன. அதன் தன்மை சாதாரணவைகளாகவும் சிக்கலானவை என மாறுபடுகிறது.

அறிகுறிகள்

 • பிறவி இருதயக் குறைபாடுகளில் சில எந்தவித அடையாளங்களும் இன்றி காணப்படும்.
 • பிறந்த குழந்தைகளுக்கு மோசமான பாதிப்புடன் கூடிய அறிகுறிகளை ஏற்படுத்தும். அவையாவன, வேகமாக சுவாசித்தல், தோல், உதடு மற்றும் விரல் நகங்களில் நீல நிற புள்ளிகள், சோர்வுற்றிருத்தல் மற்றும் குறைந்த இரத்த ஓட்டம் போன்றவை ஆகும்.
 • வளர்ந்த வயதான குழந்தைகள் சீக்கிரம் சோர்வடைந்து விடுவர் அல்லது மற்ற வேலைகளை செய்யும் போது சுவாசக் குறைவு ஏற்படும்.
 • உடற்பயிற்சியின் போது சோர்வு, சுவாசக்குறைவு, நுரையீரலில் நீர் மற்றும் இரத்தம் சேர்தல், பாதம், கணுக்கால், கால்களில் நீர் சேர்தல் ஆகியவை இதய இயக்கக்குறைவின் அடையாளங்களாக தெரியும்.
 • மிக மோசமான இதயக் குறைபாடுகள் உள்ள குழந்தை கருவில் இருக்கும் போதோ அல்லது பிறந்தவுடன் மருத்துவ பரிசோதனைகளின் மூலம் குறைபாடுகள் கண்டறியப்படுகிறது. சில குறைபாடுகள் குழந்தை பெரியவர்களாகும் வரை அல்லது வாலிபப்பருவம் வரை கண்டறியமுடிவதில்லை.

கீழ்வாத இருதய நோய்ருமாட்டிக் இருதய நோய்

ருமாட்டிக் இருதய நோய் என்பது இதயத்தில் உள்ள வால்வுகள் ஸ்டெப்ட்ரோகோக்கல் பாக்டீரியா என்ற ஒரு வகை நுண்கிருமியால் தொண்டையில் ஏற்படும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுகின்றன. (வால்வு என்பது, இரத்த ஓட்டம் பின்னோக்கி செல்வதை தடுக்கும் விசிறி போன்ற ஒரு அமைப்பு ஆகும்). இந்த நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் கீழ்வாத காய்ச்சல் ஏற்படும். அடிக்கடி ஏற்படும் காய்ச்சலினால் இது கீழ்வாத இருதய நோயாக மாறிவிடும்.

ருமாட்டிக் காய்ச்சல் என்பது இணைப்புத் திசுக்களைக் குறிப்பாக, இருதயம், மூளை சார்ந்த அல்லது தோல் சார்ந்த திசுக்களைப் பாதிக்கிறது. ருமாடிக் காய்ச்சல் நிரந்தரமாக இருதயத்தை பாதிக்கும்போது, இது இருதய (ருமாடிக்) கீழ்வாத நோயாக உருவாகிறது. கடுமையான ருமாடிக் காய்ச்சல் எல்லா வயதினருக்கும் வரக்கூடியது. ஆனால் பொதுவாக ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு இது அதிகமாக வருகிறது.

ருமாட்டிக் காய்ச்சலின் அறிகுறிகள்
 • காய்ச்சல்
 • மூட்டுகள், கணுக்கால், முழங்கை அல்லது மணிக்கட்டு போன்ற இடங்களில் வீக்கம், மிருதுவாதல், சிவந்துபோதல் மற்றும் கடுமையான வலி.
 • இணைப்புகளில் சதைத்திரட்சி அல்லது வீக்கம்.
 • கை, கால், முகத்தில் உள்ள தசைகளின் கட்டுப்படுத்த முடியாத தன்னிச்சையான இயக்கங்கள்.
 • உடல் பலவீனம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் சுவாசிப்பது குறைதல்.
இருதய வால்வு பாதிக்கப்படும்போது என்ன நடக்கிறது?

பாதிக்கப்பட்ட இருதய வால்வு ஒன்று முழுமையாக மூடுவதில்லை அல்லதுமுழுமையாகத்திறந்துகொள்வதில்லை.(சுருங்கிவிடுதல்) சரியாகத் திறந்துகொள்ளாத வால்வு ரத்தம் எந்த சேம்பரிலிருந்து பம்ப் செய்யப்படுகிறதோ அங்கேயே கசிவு ஏற்பட்டுத் திரும்பவும் அங்கேயே தங்கிவிடுதல். இதை ரத்த ஓட்டம் பின்நோக்கிப் பாய்தல் அல்லது கசிவு எனப்படுகிறது. அடுத்தமுறை இதயம் துடிக்கும்போது, இந்த ரத்தம் வால்வு மூலமாக பாய்ந்து சாதாரணமாகப் பாய்ந்துகொண்டிருக்கும் இரத்தத்துடன் கலக்கிறது. இருதயத்தின் வழியாக பாய்ந்து வரும் இந்த அதிகப்படியான ரத்தம் இருதய தசைகளுக்குக் கூடுதல் பளுவாக மாறிவிடுகிறது. இருதய வால்வு போதுமான அளவு திறந்துகொள்ளாதபோது, குறுகலான பாதையில் ரத்தத்தை பாய வைப்பதற்காக இருதயம் சாதாரணமான வேகத்தைவிட மிகவும் கூடுதலான வலுவுடன் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. பாதை மிகவும் குறுகலாக மாறும் வரை இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கான அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை.

இது எப்படிக் கண்டறியப்படுகிறது?

மார்பு எக்ஸ்-ரே மற்றும் எலெக்ட்ரோகார்டியோகிராம் என்ற இந்த இருவகை பரிசோதனைகள் இருதம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய பயன்படுகிறது.

இதற்கு என்ன சிகிச்சை?

முழுமையான ஆரோக்கியம், முந்தைய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நோயின் தாக்கம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு, டாக்டர்கள் குறிப்பிட்ட சிகிச்சை முறையை முடிவு செய்வர். ருமாட்டிக் காய்ச்சல் இருதய நோயின் அடிப்படைக் காரணமாக இருப்பதால் ருமாட்டிக் காய்ச்சல் வராமல் தடுப்பதுதான் மிகச் சிறந்த சிகிச்சை முறை.

இதை எப்படித் தடுக்க முடியும்?

ருமாட்டிக் காய்ச்சலைத் தடுப்பதுதான் ருமாடிக் இருதய நோய் வராமல் இருப்பதற்கான மிகச் சிறந்த வழி. தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கு உடனடியான, போதுமான சிகிச்சை அளிப்பதுதான் இதற்கான சிறந்த வழி. ருமாட்டிக் காய்ச்சல் அதிகரிக்கும்போது, தொடர்ச்சியான ஆன்டிபயாடிக் சிகிச்சை அதிகப்படியான தாக்கத்தைக் குறைப்பதற்கு தேவைப்படலாம்.எனவே சுய வைத்தியம் செய்வதனை தவிர்த்து,சிறப்பு மருத்துவர்களிடம் முறையான சிகிச்சை மேற்கொள்ளல் வேண்டும்.

கீழ்வாத இருதய நோய் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

மாரடைப்பு

மனித இதயம் – அது செயல்படும் விதம்:
 • மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் இதயம் அமைந்துள்ளது.
 • நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.
 • இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்தும் செயல்பாடாகும்.
 • கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தின் வழியாக இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது.
 • இதயம் வலப்புறம் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது. இதயத்தின் இருபகுதிகளிலும் இரண்டு இரண்டு அறைகள் உள்ளன. மொத்தத்தில் நான்கு அறைகள் உள்ளன.
 • இதயத்தின் வலப்பகுதி உடலிலிருந்து அசுத்த இரத்தத்தைப் பெற்று அதை நுரையீரலுக்கு செலுத்துகிறது.
 • இரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு பின்பு இதயத்தின் இடப்புறத்திற்கு வருகிறது. இங்கிருந்து உடலின் பல பகுதிகளுக்கு செலுத்தப்படுகிறது.
 • இதயத்தின் இடப்பகுதியில் இரு வால்வுகள் (மைத்ரல் மற்றும் அயொடிக்) மற்றும் வலப்பகுதியில் இருவால்வுகள் (பல்முனரி மற்றும் மூவிதழ்) உள்ளன. இந்த நான்கு வால்வுகளும் ஒருவழி கதவு போல செயல்பட்டு இதயத்திற்குள் ரத்த ஓட்டத்தை முறைப்படுத்துகின்றன.
மாரடைப்பு என்றால் என்ன?

கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தின் வழியாக இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது.

இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படும் இதய செயல்பாடு தடை ஏற்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கச் செய்யும்.பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில்செயலற்ற நிலையை ஏற்படுத்துகிறது.இந்த இதய செயலற்ற நிலையினையே மாரடைப்பு என்கிறோம் .

மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?
 1. உடல் வலிக்கும்
 2. மயக்கம்
 3. அக்குளில் வலி
 4. நடக்கையில் மூச்சுத்திணறல்
 5. இடதுபக்க மணிக்கட்டில் வலி

நாம் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது.இரத்த குழாய்களில் கொலஸ்ட்ரால் படிந்து ரத்தம் வரும் வழியை சுருக்குகிறது.இது கொஞ்சம் கொஞ்சமாக இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது.இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் ரத்த செயல் தடைபட்டு இதயம் செயல் இழக்கிறது.மரணம் சம்பவிக்கிறது.இதனையே மாரடைப்பு என்கிறொம்.

யாருக்கு மாரடைப்பு நிகழும்?

பெண்களைவிட ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.பெண்இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன.இந்த தாக்கம் பெண்களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம்வரை இருக்கும்.இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

என்ன காரணங்களால் மாரடைப்பு வரும்?
 • புகைப்பிடித்தல்
 • சர்க்கரை நோய்
 • உயர் இரத்த அழுத்தம்
 • அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்
 • அதிக கொலஸ்ட்ரால்
 • உடல் உழைப்பு இல்லாமை
 • குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு
 • மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு
 • மரபியல் காரணிகள்.
மாரடைப்பின் அறிகுறிகள் என்ன ?

மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை ஒத்திருக்கலாம்.

பொதுவான அறிகுறிகள்

 • நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.
 • வியர்த்தல்,குமட்டல் மற்றும் மயக்கம் வருவதுபோல் உணர்தல்.
 • மார்பின் முன்பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம்.இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்.
 • வாந்தி , இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.
 • தீவிர நிலையில், இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.
நோயைக் கண்டறிவது எப்படி ?
 • மருத்துவர் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தினை பதிவு செய்வதோடு முந்தைய சிகிச்சை விவரங்களை விரிவாக பெற்றுக் கொள்வார்.
 • இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி (ECG) எடுக்கப்படுகிறது..
 • இசிஜி இதயத்துடிப்பின் வேகம் பற்றிய தகவலைத் தருகிறது. வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும் மாரடைப்பால் இதயத்தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம். ஆரம்ப நிலையில் இசிஜி சீராக இருப்பதால் மாரடைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூற முடியாது என்பதை நினைவில் கொள்க.
 • இதயத்தசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய இரத்த பரிசோதனைகள்.
 • மார்புப்பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம்.
 • எக்கோ-கார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை
 • கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை கரோனரி இரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என உறுதியாக கணித்துக் கூறும். மேற்கண்ட பரிசோதனை மூலம் மாரடைப்பு உள்ளதா?என கண்டறியலாம்.

மாரடைப்பு பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.

 • நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்..
 • ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.
 • நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.
 • நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.
 • இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்.
என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும்?
 • மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.
 • மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும்,நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
 • இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க செய்ய வேண்டும்.
 • இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுதல் வேண்டும்.
 • நோயாளியின் வயது,மாரடைப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.
 • பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

http://www.youtube.com/watch?v=Vts09VkK6Q8

http://www.youtube.com/watch?v=4W9gcL71TJ4&feature=fvwrel

மாரடைப்பைத் தடுப்பது எப்படி?

மாரடைப்பு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும்.

வாழ்க்கைமுறையில் மாற்றம்

 1. அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும்,உப்பு & கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச் சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
 2. அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.
 3. உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் கட்டாயம்.
 4. புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.
 5. நடை பயிற்சி(வாக்கிங்)செய்தல் வேண்டும்.

நீரிழிவு நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச்சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு,உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

இதயம் செயலிழப்பு

‘இதயச் செயலிழப்பு’ என்பது வழக்கமாக இரத்தத்தை அழுத்தும் செயல்பாட்டில் குறைபாடு உள்ளதையேக் குறிக்கிறது. இதயம் செயல் இழப்பு என்பது இதயம் முற்றிலும் செயல்படாமல் நின்றுவிடுவதையோ அல்லது உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதையோ குறிப்பது அல்ல. (ஆனால் இதய செயலிழப்பு உடையவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்). இதயம் செயல் இழப்பைப் பொதுவாக கன்ஜெஸ்டிவ் (இறுக்கமான) இதய செயல் இழப்பு(CHF) என்று கூறுவார்கள். கன்ஜெஸ்டிவ் என்றால் இதயத்தால் ரத்தம் முறையாக அழுத்தப்படாததால் உடலில் ரத்தம் தேங்குவதை குறிக்கிறது.

இதயம் செயல் இழப்பிற்கான காரணிகள் யாவை?

பல்வேறு காரணங்களால் இது ஏற்படுகிறது. சரியான காரணத்தை சில சமயங்களில் கண்டுபிடிக்கவும் முடியாது. இதயத்தைச் செயல் இழக்கச் செய்யும் பொதுவான முக்கிய காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 • கடந்த காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டோ அல்லது ஏற்படாமலோ வந்த கரோனரி இரத்த நாள (தமனிக்குழாய்கள்) நோய். (இதயத்திற்கு அனுப்பப்படும் இரத்தம் முழுமையாக அல்லது பகுதி அளவில் தடை செய்யப்படுதல் (அடைப்பு))
 • இதயத்தசைகளிலேயே உள்ள பிரச்சனைகள் (கார்டியோமயோபதி)
 • உயர் ரத்த அழுத்தம் (ஹைபர் டென்ஷன்)
 • இதய வால்வுகளில் ஏற்படும் குறைபாடுகள்
 • சீரில்லாத முரண்பட்ட இதயத்துடிப்புகள் (அரித்திமியாஸ்)
 • நச்சு பொருட்களைப் பயன்படுத்துதல் (மது அல்லது போதைப்பழக்கம்)
 • பாரம்பரியமாகத் தொடரும் இதய நோய் (பிறப்பிலேயே ஏற்படும் இதயம் சம்பந்தப்பட்ட குறைபாடு/பிரச்சனை)
 • நீரிழிவு நோய்
 • தைராய்டு சம்பந்தப்பட்ட குறைபாடுகள்

இதன் அறிகுறிகள் என்னென்ன?

இதய செயல் இழப்பு கொண்டவர்களுக்கு சில பிரச்சனைகளும் அறிகுறிகளும் இருக்கலாம்.அவைகள்....

 • மேல்மூச்சு வாங்குதல் [shortness of breath] (நடக்கும் பொழுது, படிக்கட்டுகளில் ஏறும்பொழுது அல்லது சுறுசுறுப்பாகவும் இயல்பாகவும் இருக்கும்பொழுதும்)
 • படுத்து இருக்கும் பொழுது ஏற்படும் மூச்சுத் திணறல்
 • பசியின்மை
 • இரவில் விழித்துக் கொண்டு இருத்தல், திடீரென்று மூச்சுத் திணறல்
 • அசதி அல்லது நகரக்கூட முடியாத அளவிற்கு சோர்வு & பலமின்மை
 • கால்கள், பாதம் அல்லது கணுக்கால் ஆகிய பகுதிகளில் வீக்கம்
 • அடிவயிற்றில் வீக்கம்
 • சீரில்லாத அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள்
 • சீரற்ற முறையில் கூடுதலான உடல் எடை (ஒரு நாளுக்கு 1 அல்லது 2 பவுண்டு வீதம் தொடர்ந்து 3 நாட்களுக்கு உடல் எடை கூடுதல்)
 • தொடர்ந்த இருமல் அல்லது வீசிங் ( இளைப்பு வாங்குதல்)
 • குமட்டல்-வாந்தி வருவது போன்ற உணர்வு

இதய செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்கும் வழிமுறைகள்:

உணவுக் கட்டுப்பாடு: சாப்பிடும் பொருளில் உள்ள உப்பின் அளவைக் குறைத்தல் & கொழுப்பு உள்ள உணவுகளை (கொலஸ்ட்ராலும்) குறைவாக உண்ணுதல்.

ஆல்கஹால் (மதுப்பழக்கம்): மதுப்பழக்கத்தைக் குறைத்தல்

உடற்பயிற்சி: இதயச்செயலிழப்பு கொண்டவர்களால் உடற்பயிற்சி செய்ய முடியும். இதற்கு மருத்துவர் உதவி செய்வார். எந்த அளவிற்கு செய்வது? எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளை செய்ய வேண்டுமென்பதை மருத்துவர் முடிவு செய்து வழிகாட்டுவார்.

உடல் எடை: உடல் எடையைக் குறைக்க வேண்டும்

குடும்பத்தினர் ஒத்துழைப்பு: மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும்,தவறான (மது) பழக்கமில்லாமல் இருக்கவும்.குடும்பத்தின் ஒத்துழைப்புத் தேவை.

இதர வகை உதவிகள் & ஒத்துழைப்பு: உங்களுடைய மருத்துவர் உங்களுக்குத் தேவையான தகவல்களையும் தந்து உதவி செய்யும் நபர்களையும் அடையாளம் காட்டுவார். இதய செயலிழப்புத் தன்மை உடையவர்கள் அதே அறிகுறிகளையும் ஒத்த பிரச்சனைகளையும் உடையவர்களோடு உரையாடுதல் மூலம் மனநிலை மாற்றம்,மேம்பட்ட மருத்துவ சிகிச்சையை கடைபிடிக்க தூண்டுகோளாகவும் இருக்கும்.


இதயம்
3.11764705882
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top