பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / இமைமுனைத்திசு வளர்ச்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இமைமுனைத்திசு வளர்ச்சி

இமைமுனைத்திசு வளர்ச்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இமைமுனைத்திசு வளர்ச்சி என்பது நார்க்குழல் திசுவின் சிறகு வடிவ முக்கோணத் தகடு ஆகும். இமைகளுக்கு இடையில் இருக்கும் திறப்பில் கருவிழி கண்சவ்வு சந்திப்புச் சுற்றுவட்டத்தில் இது தோன்றுகிறது. வெண்படலமும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. மேல் பகுதி சந்திப்போடு (லிம்பஸ்) ஒப்பிடும் போது பெரும்பாலும் வெண்படலமும் கண்சவ்வும் சந்திக்கும் மூக்குப் பகுதியில் புண் ஏற்படும். அரிதாக இது மேல் சந்திப்பை மட்டும் பாதிக்கும்.

முதியோரில் இமைமுனைத்திசு வளர்ச்சி இருபுறமானதாகவும் சீரற்றதாகவும் இருக்கும்.

அடங்கிய சிறு நலிவுப் புண்ணில் இருந்து பெரிய கடுமையான விரைவாக வளரும் புண் வரை இமைமுனைத்திசு வளர்ச்சி வேறுபட்டு வெண்படலப் பரப்பைச் சிதைக்கும். கடுமையான நேர்வுகளில் வெண்படல விழிமையத்தை மறைத்துப் பார்வையைப் பாதிக்கும்.

நோயறிகுறிகள்

இமைமுனைத்திசு வளர்ச்சி இருக்கும் நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லாமலும் இருக்கும் அல்லது கண்ணில் கீழ்வரும் அறிகுறிகள் காணப்படும்:

- சிவப்பு

- உறுத்தல்

- அரிப்பு

- வலி

- நீர்வடிதல்

- வீக்கம்

- கண்ணில் எழும்பிய புண்

- தூண்டப்பட்ட சிதறல் அல்லது பார்வை அச்சு மறைப்பால் பார்வை மங்கல்.

- அசைவுக் குறுக்கத்துடன் இரட்டைப் பார்வை.

காரணங்கள்

இமைமுனைத்திசு வளர்ச்சிக்கான காரணம் தெரியவில்லை.

சில குடும்பங்களில் பிறவியாகக் காணப்படுவது தெளிவாகத் தெரியும்.

இமைமுனைத்திசு வளர்ச்சிக்கான ஆபத்துக் காரணிகள்:

- நிலநடுக்கோட்டுக்கு அருகில் வெப்ப மண்டல தட்பவெப்பத்தில் வாழ்வது உட்பட அதிகமாகப் புற ஊதாக் கதிர் படுதல்.

- சுற்றுச்சூழல் நுண்காயம்.

- வெளிப்புற நடவடிக்கைகள் தேவைப்படும் வேலைகளில் ஈடுபடுதல்.

- உலர்ந்த வெப்பமான தட்பவெப்பநிலை.

- ஆண்களில் அதிகமாக இருப்பது அதிக புற ஊதாக்கதிர் படுதலின் விளைவாக இருக்கலாம்.

புற ஊதாக்கதிரைத் தவிர்த்த பின்னும் வளர்ச்சி தொடர்ந்தால்,

திரும்பத் திரும்ப வரும் இமைமுனைத்திசு வளர்ச்சி புற ஊதாக் கதிரால் என்பதை விட அறுவைப் புண் தொடர்பானதாக இருக்கலாம்.

நோய்கண்டறிதல்

இமைமுனைத்திசு வளர்ச்சியைக் குறிப்பிட்ட மருத்துவ ரீதியான தோற்றத்தைக் கொண்டே கண்டறிய முடியும்.

ஓர் இமைமுனைத்திசு வளர்ச்சி கண்சவ்வு மற்றும் வெண்படலப் பரப்பில் நார்க்குழல் மாற்றத்தை உருவாக்குகிறது. இமைமுனைத்திசு வளர்ச்சி பொதுவாக மூக்குப்புறக் கண்சதையில் தோன்றி பின் வெண்படலப் பரப்பில் விரிகிறது. எனினும் அது மேல்பக்கத்திலும் பிற இடங்களிலும் தோன்றலாம்.

மருத்துவ ரீதியாக இமைமுனைத்திசு வளர்ச்சி பல விதங்களில் தோன்றும்:

மெதுவாக வளரும் இமைமுனைத்திசு:

இமைமுனைத்திசு வளர்ச்சி தட்டையாக, மெதுவாக வளரும் புண்ணாக குறைந்த அளவு துளையுடன் நலிவடைந்துத் தோன்றும்.

அறுவைக்குப் பின் அரிதாகவே திரும்பித் தோன்றும்.

துரிதமாக வளரும் இமைமுனைத்திசு:

எழும்பிய நார்க்குழல் துரித வளர்ச்சிப் புண்ணாகக் காணப்படும். வெளிப்படையான குழல்களுடன் சதைப்பற்றுடன் வளரும். மருத்துவ ரீதியாகக் கடுமையானதும் அறுவைக்குப் பின் மீண்டும் பலமுறை தோன்றுவதாகவும் இருக்கும்.

பிறவகைகள்

- முதன்மை இரட்டை இமைமுனைத்திசு வளர்ச்சி: மூக்கு மற்றும் மேற்புற சந்திப்பையும் (லிம்பஸ்) பாதிக்கும்.

- தொடர் இமைமுனைத்திசு வளர்ச்சி: அதிக வடுவுடனும் சில சமயம் அதிக அகலமாகவும் காணப்படும்.

- தீய இமைமுனைத்திசு வளர்ச்சி: இது தொடர்ந்து வருவது. இமை விழிக்கோளத்துடன் ஒட்டிக் கொள்ளும். எதிர் திசை கண் நகர்ச்சியைக் குறுக்கும்.

தொடர் வளர்ச்சியில் சிலசமயம் சீழ்க்குருணைக் கட்டிகள் உருவாகலாம்.

முதன்மை இமைமுனைத்திசு வளர்ச்சி கட்டி மாற்றங்களுக்கு உட்படும். இதில் வெண்படலத் தடிப்பு இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும். ஓர் இமைமயிர்வரிசை இமைமுனைத்திசு வளர்ச்சிக்கு அடியில் இருக்கக் கூடும்.

மருத்துவ அம்சங்கள்:

இமைமுனைத்திசு வளர்ச்சி பற்றிய குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் அடங்குவன:

- இமைகளுக்கு இடைப்பட்டப் பகுதியில் சிறகு போன்ற முக்கோண நார்க்குழல் கண்சவ்வு வளர்ச்சியாகக் காணப்படும். உச்சி அல்லது தலை வெண்படலத்துக்குள் நீண்டு இருக்கும்.

- வெண்படலப் பரப்பில் இமைத்திசு வளர்ச்சித் தலைத் திசையில் குழல்கள் நீட்சி அடையும்.

- ஒரு மெல்லிய ஒளிபுகும் படலம் அல்லது குறிப்பிட்ட அளவுக்குத் தடித்த எழும்பிய ஜெல் திசுவாக இருக்கலாம்.

- ஒரு அல்லது இரு கண்களிலும் மூக்கு மற்றும்/அல்லது மேல் சந்திப்பில் (லிம்பஸ்) காணப்படலாம்.

- குழல் அடர்த்தியைப் பொறுத்து அது வெள்ளை அல்லது இளஞ்சிவப்புப் புண்ணாக இருக்கலாம்.

- வளர்ச்சியுற்ற நேர்வுகளில் பார்வை அச்சும் பாதிப்புகளைக் காட்டக் கூடும்.

- நீடித்த மற்றும் வளர்ச்சி அடையாத  இமைத்திசு வளர்ச்சியில் ஸ்டோக்கர் வரி எனப்படும் நிறமியுடைய புறசெல் இரும்பு வரி ஒன்று இருக்கலாம்.

- சந்திப்பின் (லிம்பஸ்) அருகில் மஞ்சள் முக்கோணப் படிவு ஒரேபக்கம் அல்லது மாறுபக்கத்தில் இருக்கலாம்.

- இரட்டைப் பார்வையுடன் கண்ணசைவுக் குறைவு (கண்சவ்வு இழப்பு மற்றும் கண்வடுவுடன் அடிக்கடி ஏற்படும் இமைமுனைத்திசு வளர்ச்சியில் காணப்படும்)

இமைத்திசு வளர்ச்சியின் உருவியல்:

இமைத்திசு வளர்ச்சியின் பல்வேறு பகுதிகள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளன:

- தலை: வெண்படலத்தில் பதிந்திருக்கும் பகுதி.

- கழுத்து: சந்திப்பில் (லிம்பஸ்) காணப்படும் குறுக்கப்பட்டப் பகுதி.

- உடல்: மீதி இருக்கும் பகுதி.

- தொப்பி: இமைத் திசு வளர்ச்சியின் தலைப்பகுதியில் காணப்படும் ஒளிபுகா புள்ளிகள் (ஃபுக்ஸ் புள்ளிகள்) கொண்ட பிறை வடிவ ஊடுறுவும் பகுதி. இது வளர்ச்சியைக் குறிக்கிறது.

பிம்ப ஆய்வுகள்:

- வெண்படல அமைவியல்: வளர்ந்து வரும் இமைமுனைத் திசுவால் ஏற்படும் சிதறல் பார்வை விகிதத்தை மதிப்பிட இது பயன்படும்.

- வெளி ஒளிப்படம்: இமைமுனைத் திசு வளர்ச்சியைக் கண்காணிக்க வெளிப் பரப்பு ஒளிப்படம் எடுக்கலாம்.

திசுநோயியல் ஆய்வுகள்:

மேல் படியும் மேல்செல் மூடலுடன் தசைநார்ப்புரத மீள்திறன் சீரழிவும் நார்க்குழல் ஊடுறுவலும் இமைமுனைத் திசு வளர்ச்சியின் தன்மைகள் ஆகும். மீள்திறன் சீரழிவு என்றால் சிதைவுற்ற நார்களின் நெளியும் புழுபோன்ற தோற்றத்தைக் குறிக்கிறது. பொதுவாக மேல்செல் இயல்பாக இருக்கும். ஆனால், தோல்தடித்தும் கெரோட்டின் மிகைத்து அல்லது மீள்திறனற்று பெரும்பாலும் குடுவைசெல் மிகைப்புடன் காணப்படும். குறிப்பாக போமேன் அடுக்கு (Bowman’s layer) அழிந்து நார்க்குழல் உள் வளர்ச்சியால் மேலோட்டமான இலைத்துளை (stroma) உருவாகும்.

சிதைந்த சார் அடிசெல் திசுக்களின் திரட்சியை இமைமுனைத்திசு வளர்ச்சி காட்டுகிறது. ஹீமடாக்சிலின் மற்றும் ஈசின் (H&E) சாயமேற்றலின் போது இதன் அடிச்சாய செல்கள்  ஸ்லேட் சாம்பல் நிறத்தில் சாயம் ஏற்கும். இத்திசுக்கள் எலாஸ்டிக் திசு சாயத்தால் சாயமேற்கும். ஆனால் எலாஸ்டேசால் செரிக்கப்படவில்லை எனில் அது உண்மை எலாஸ்டிக் திசு அல்ல.

இமைமுனைத்திசு வளர்ச்சியைப் பின்வருவனவற்றில் இருந்து வேறுபடுத்திக் காண வேண்டும்:

- போலி இமைமுனைத்திசு: வேதியல் அல்லது வெப்பப் புண்கள், காயம், வெண்படல விளிம்பு நோய்கள், வெண்படலப் புண் அல்லது இழப்பிற்கு ஈடுகட்டும் செயல் முறையில் கண்சவ்வின் ஒரு மடிப்பு வெளிப்புற வெண்படலத்தோடு ஒட்டி வெண்படலத் துளை ஏற்படுதல் ஆகியவற்றால் வெண்படல அழற்சி ஏற்பட்டு போலி இமைமுனைத்திசு வளர்ச்சி உண்டாகும்.

போலி இமைமுனைத்திசு வளர்ச்சியை உண்மை இமைமுனைத்திசு வளர்ச்சியில் இருந்து பாதிக்கப்பட்ட கண்ணின் அழற்சி வரலாறு, இணைநேர் கோடல்லாத வளரும் பகுதி, சிறகமைப்பு இன்மை, பெரும்பாலும் ஒருபக்கமானது, வளர்ச்சி அடையாத்தன்மை, இமைமுனைத்திசுவின் கழுத்துப்பகுதியில் புரோப் சோதனையில் இருந்துத் தப்பும் திறன் ஆகியவற்றைக் கொண்டு வேறுபடுத்திக் காணலாம்.

- திசுக்குவிப்பு: செதிள் செல் புற்றுவில் இருந்து வேறுபடுத்திக் காண வேண்டும்.

- வெப்பத்தாக்கப்புண்: இது சந்திப்பை (லிம்பஸ்) சுற்றியுள்ள பகுதியிலேயே அடங்கும். வெண்படலத்துக்குள் செல்லாது. பரவலாக, சிறியதும் அறிகுறி அற்றதும், மஞ்சள் நிறமானதும், எழும்பிய முடிச்சாகவும் குமிழ் கண்சவ்வில் ஏற்படும். பொதுவாக மூக்குப்பகுதியில் காணப்பட்டாலும் லிம்பசின் மேற்புறமும் தோன்றலாம். எப்போதாவது இது அரிப்பு, எரிச்சல், இலேசான வலியுடன் அழற்சியுறலாம். தசைநார்ப்புரதம் மீள்திறன் சீரழிவுறுவதால் வெப்பத்தாக்கப் புண் இலேசானதில் இருந்து மிதமான கண்சவ்வு இலைத்துளை குவிமையத் தடிப்பைக் காட்டலாம்.

- மரைபடலம் உருவாதல்

- டெரியன் விளிம்புச் சிதைவு

- ஸ்டீவன்ஸ்-ஜான்சன் நோய்த்தாக்கம்

- நியூரோடிராபிக் கெராட்டாடிஸ்

- இமைவீக்கம்

- லிம்பல் தோல்புண்

நோய் மேலாண்மை

மருத்துவக் கண்காணிப்பின் கீழ், நோய் மேலாண்மை செய்தல் வேண்டும்.

இதில் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உண்டு.

வெண்படலத்துக்குள் ஏற்படும் நீட்சி தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை அளக்கப்பட்டு பார்வை அச்சை நோக்கிய அதன் வளர்ச்சி தீர்மானிக்கப்பட வேண்டும். நோயாளிகளிடம் காணப்படும் குறிப்பிடத் தக்க அளவிலான கண் சிவப்பு, அசௌகரியம் அல்லது பார்வை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

மருத்துவ சிகிச்சை:

இதில் அடங்குவன:

- புற ஊதாக் கதிர்த் தடை கண்ணாடிகளைப் பயன்படுத்தல்: இமைமுனைத்திசு குடும்ப வரலாறு கொண்டவர்களும் அதிக நேரம் புற ஊதாக் கதிர்த் தாக்கத்துக்கு உட்படுபவர்களும் புற ஊதாக் கதிர் தடைக் கண்ணாடி அணிந்து நோய் ஆபத்தைத் தடுக்கலாம். நேரடி சூரிய ஒளியைத் தடுக்கக் கண்ணாடி அல்லது கண்ணை மறைக்கும் தொப்பி அணிய வேண்டும்.

- கண்ணீர் மாற்றுக்களைப் பயன்படுத்துதல்: சூழலால் உண்டாகும் நுண் காயம் ஏற்படும் ஆபத்து இருந்தால் இதைப் பயன்படுத்தலாம். இமைமுனைத் திசு அழற்சியைக் குறைக்க மசகுச் சொட்டுக்கள் அல்லது களிம்பைப் பயன்படுத்தலாம்.

- குழலிறுக்கி மருந்துகள்: இம்மருந்துகள் பயன்படுத்தி அழற்சியினால் உண்டாகும் உறுத்தல், அயல்பொருள் உணர்வு மற்றும் நீர்வடிதலில் இருந்து குணம் பெறலாம்.

அறுவை சிகிச்சை:

அழகியல், பார்வைக் கோளாறுகள் அல்லது கண் அசௌகரியங்கள் இருந்தால் இமைமுனைத்திசு வளர்ச்சியை அகற்றலாம்.

அறுவையை உணர்த்தும் குறிகள்:

- பாவைப் பகுதிக்குள் ஊடுறுவி பார்வை அச்சை மறைத்து பார்வையைக் குறைத்தல்.

- வெண்படலத்துக்குள் நீளும் இமைமுனைத் திசு வளர்ச்சி அதிக சிதறலால் பார்வையை மறித்தல்.

- அடிக்கடி அழற்சி.

- வளர்ச்சியை சான்றளிக்கும் வண்ணம் ஸ்டோக்கர் வரி இல்லாமல் இருப்பது.

- இரட்டைப் பார்வை மூலம் கண் அசைவு குறைதல்.

- அழகியல் அகற்றல்.

- அரிதாக, இமைமுனைத் திசுவில் சந்தேகப்படும் மெட்டாபிளாஸ்டிக் மாற்றங்கள்.

அறுவை முறைகள்:

- இமைமுனைத் திசுவை அகற்றிப் புண்ணை மூடுதல்.

- வெறும் வெளிப்படலம் அகற்றும் உத்தி.

- இமைமுனைத் திசுத் தலையை அதன் உடல் அல்லது குமிழ் மற்றும் இமைக் கண்சவ்வுச் சந்திப்போடு வைத்துத் தைத்து மாற்றறுவை.

- மைட்டோமைசின் C யுடன் அல்லது கண்சவ்வுத் தன்னொட்டு (CAG). இமைமுன் திசு வளர்ச்சித் திரும்பத்திரும்ப ஏற்படுவதை தடுக்கும் பீட்டா கதிர்வீச்சு மற்றும் தயோடீப்பா முறைகளால் வெளிப்படல சிக்கல்கள் உண்டாவதால் தற்போது பயன்படுத்தப்படுவதே இல்லை.

- கருப்படல மாற்று சிகிச்சை.

- வெண்படல அல்லது கருப்படல மாற்று சிகிச்சையுடன் பைப்ரின் பசை பயன்படுத்தல்.

- இமைமுனைத்திசு அறுவையுடன் இணைத்து லேமெல்லார் கெராட்டோபிளாஸ்ட்டி.

- ஆரம்பக்கட்டத்தில் திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்க்க லேசர் சிகிச்சை அளித்தால் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

Filed under:
2.96116504854
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top