பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கண் கோளாறுகள்

கண்ணில் ஏற்படும் கோளாறுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு நோயினால் ஏற்படும் ரெடினோபதி

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள விழித்திரை

லேஸர் சிகிச்சையால் குணப்படுத்தப்பட்ட விழித்திரை

நீரிழிவு நோய் பொதுவாக கண்ணின் விழித்திரையை பாதிக்கிறது. நீரிழிவு நோயினால் ரெடினோபதி ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

 • முதற்கட்டத்தில் வலி போன்ற அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை
 • போகப்போகபார்வை மங்குகிறது
 • ஃப்ளோட்டர்கள் (கரும்புள்ளிகள்) அல்லது கரும் கோடுகளைப் பார்க்க நேரிடுகிறது.

நீங்கள் நீரிழிவு நோயினால் அவதிப் படுபவராக இருந்தால் அடிக்கடி உங்கள் கண்களை ரெடினோபதிக்காக சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ரெடினோபதியால் ஏற்படும் பாதிப்பை சிகிச்சை / லேஸ்ர் சிகிச்சையால் தவிர்க்க முடியும். அரசு மருத்துவமனைகள், மண்டல கண்மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இந்த சிகிச்சையை இலவசமாக வழங்குகின்றன.

கண்புரை நோய்

அறுவை சிகிச்சைக்கு முன்

அறுவை சிகிச்சைக்கு பின்

இந்த பிரச்சினை பொதுவாக முதுமைப் பருவத்தில் தான் ஏற்படுகிறது கண்புரை நோயினால் பார்வை பறிபோவதை அறுவை சிகிச்சையால் தவிர்க்க முடியும். கண்புரை அறுவை சிகிச்சை மிகவும் எளிதானது, பாதுகாப்பானது.

அறிகுறிகள்

 • படிப்படியாக பார்வை மங்குதல்
 • கண்ணுக்குள் உள்ள கண்மணி க்ரே நிறமாகமாறுதல்
 • இந்த நோயினால் கண்ணில் வலி ஏற்படாது.
 • கண்புரை பழுக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம்
 • உடனடியாக கண் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்

அரசு மருத்துவமனைகளும் அரசு சாரா அமைப்புக்களும் கண்புரையை குணப்படுத்துவதற்காக லென்ஸ்களுடன் கூட இலவசசிகிச்சை வழங்குகிறது.

க்ளாகோமா

க்ளாகோமா சத்தமில்லாமல் பார்வையை பறிக்கும் திருடன் என்று அழைக்கப்படுகிறது இது பார்வையை பாதிக்கக் கூடிய மிகக் கொடிய நோயாகும். பெரும்பாலும் 40க்கு மேற்பட்ட வயதினரிடையேதான் குறிப்பாக குடும்பத்தில் எவருக்காவது க்ளாகோமா இருந்திருந்தால் இந்த நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

 • கண் மையப் பகுதியைக் சுற்றி வண்ண வளையங்களைப் பார்த்தால் வலி ஏற்பட்டால், முறையான பார்வை இல்லாதது போல் உணர்ந்தால், ஒளி மங்கினால் கிளாகோமாவாக இருக்கக் கூடும்.
 • அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டியிருத்தல்
 • அடிக்கடி தலைவலி மற்றும் கண்களில் வலி

முறையாகத் தொடர்ந்து கிளாகோமாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டால் பார்வை இழப்பை தவிர்க்க முடியும் .

ரிஃப்ராக்டிவ் கோளாறுகள்

விழியின் வழக்கத்துக்கு மாறான அளவு மற்றும் வளைவினால் ரிஃப்ராக்டிவ் கோளாறுகள் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் புத்தகம் படிப்பதாலும் வீடியோ பார்ப்பதாலும் இந்த கோளறு ஏற்படக் கூடும்

கீழ்க்கண்ட அறிகுறிகளினால் உங்கள் குழந்தைக்கு ரிஃப்ராக்டிவ் கோளாறு உள்ளதா என்று கண்டறிய முடியும்

 • கரும்பலகை போன்று அருகிலுள்ள அல்லது தொலைவிலுள்ள பொருளை முறையாகப் பார்க்க முடியவில்லை என்றால்
 • மங்கலானபார்வை
 • வேலை செய்வதால் தலைவலி ஏற்பட்டால்
 • குழந்தைக்கு படிப்பதில் ஆர்வம் குன்றினால்
 • முறையான கண்ணாடி அணிவதால் இதை நிச்சயமாகக் குணப்படுத்த முடியும்

அரசு மருத்துவமனைகள் இந்தகண்ணாடிகளை இலவசமாக வழங்குகின்றன

டிராக்கோமா

டிராக்கோமா ஒரு தொற்று நோயாகும் இமைகளின் உட்புறத்தை அது பாதிக்கிறது. பின்பு இமைகள் உட்புறமாகத் திரும்பினால் அவை விழிப்படலத்தோடு உராய்ந்து அதை சேதப்படுத்துகின்றன. இதன் காரணமாகபார்வை பாதிக்கப்படுகிறது

அறிகுறிகள்

 • கண்களில் மணல் உறுத்துவது போன்ற உணர்வு
 • கஞ்செக்டிவாவில் துகள்கள்
 • வழக்கமாக இரண்டு கண்களையும் பாதிக்கிறது
 • கண் இமை உட்புறமாகத் திரும்புதல் கண்களிலிருந்து நீர் வடிதல்

தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச் சூழல் டிராக்கோமாவைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளாகும். மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் உங்கள் கண் மருத்துவரை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

விழிப்படல பார்வையிழப்பைத் தவிர்க்கவழிகள்

விழிவெண்படல அழற்சி (கன்ஜங்ன்டிவைடிஸ்) - அடையாளங்கள்

 • கண்ணின் வெண்மையான பகுதி சிவத்தல்
 • கண்களில் உறுத்தல் ஏற்படுதல்
 • கண்களிலிருந்து நீர் வடிதல்.

காரணங்கள்
எந்த ஒரு பொருளும் விழிவெண்படலத்தில் எரிச்சலை (உறுத்தல்) ஏற்படுத்தினாலோ அல்லது நோய் தொற்றினை ஏற்படுத்தினாலோ விழிவெண்படல அழற்சி ஏற்படும். உ-ம் வைரஸ் கிருமிகள் / பாக்டீரியாக்கள், ஒவ்வாமை பொருட்கள், கண்கள் வறண்டு காணப்படும்.

குழந்தைப் பருவத்தில் ஊட்டச்சத்து குறைவு, காயம் அல்லது தொற்றுநோய் போன்றவற்றால் விழிப்படலம் மறைக்கப்பட்டு பார்வை குறைகிறது அல்லது பறிபோகிறது.

 • காயம் படாமல் உங்கள் கண்களைக் காப்பற்றிக் கொள்ளுங்கள். கில்லி, அம்பு, கத்தரி, கத்தி, ஊசி, பட்டாக திராவகம் போன்ற பொருட்கள் குழந்தைகளின் கைக்கெட்டாமல் வைக்கப்பட வேண்டும்.
 • அறுவைசிகிச்சைக்குப் பின் கோளாறுகள் மற்றும் கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்
 • ஊட்டச் சத்துக் குறைபாடு : குழந்தைகளுக்கு சமச்சீரான உணவை (விட்டமின் "ஏ" செறிந்த உணவுகள் அதாவது பசலைக்கீரை, வெந்தயக் கீரை, கடுகுக் கீரை, முள்ளங்கி இலைகள் போன்றவை மற்றும் மஞ்சள் நிறத்திலான பழங்கள்) கொடுத்து வரவும்
 • அழுக்கான விரல்களைக் கொண்டு கண்களைத் தொடவோ தேய்க்கவோ கூடாது
 • கண் மருத்துவரின் ஆலோசனையைக் கடைப்பிடிக்கவும்

மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகவும்

கேள்வி பதில்கள்

ரத்த அழுத்தம் போன்று கண்களுக்கும் அழுத்தம் உண்டா?

கண்ணின் முன்பகுதியில், விழித்திரைக்கும், லென்சுக்கும் இடையில் 'அக்குவேஸ் ஹியூமர்' எனும் திரவம் சுரக்கிறது. இதில் இருக்கின்ற அழுத்தம் கண் நீர் அழுத்தம் எனப்படும். பொதுவாக, 15 முதல் 20 மி.மீ., வரை இதன் பாதரச அளவு இருக்கும். சில காரணங்களால், இது படிப்படியாக அதிகரிக்கும் போது, பார்வை நரம்பால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. இதுவே கண் நீர் அழுத்தம் எனப்படும்.

உடல் உஷ்ணமானால் கண்வலி வருமா?

அப்படியல்ல! பாக்டீரியா, வைரஸ், போன்ற கிருமிகள் விழி வெண்படலத்தை தாக்கும் போது, கண்வலி வரும். கண்வலி ஒரு தொற்று நோய் என்பதால், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்பது?

பொதுவாக நாம் நிமிடத்திற்கு 12 முறை கண்களைச் சிமிட்டுவோம். ஆனால், கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 5 முறைதான் கண் சிமிட்டுகின்றனர். இதனால், கண்கள் வறண்டு போய், கண் எரிச்சல், உறுத்தல், தலைவலி உள்ளிட்ட தொல்லைகள் வருகின்றன. இதற்கு பெயரே கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்.

ஊட்டச்சத்து குறைபாடு, கண் நோய்களுக்கு காரணமாகுமா?

இளம்வயதில் பார்வை இழப்பது, விழி வெண்படலம் வறட்சி அடைவது, அதில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றுவது, மாலைக்கண் நோய் ஏற்படுவது போன்றவற்றிற்கு 'வைட்டமின் ஏ' குறைபாடுதான் முக்கியக் காரணம். பச்சைக்காய்கறிகள், கீரைகள், பால், முட்டை, மீன், இறைச்சி, கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், முருங்கைக்காய், பப்பாளி, மாம்பழம் போன்றவற்றை சாப்பிட்டாலே, இந்நோய்கள் தீண்டாது.

ஆதாரம் : பார்வையிழப்பைத் தடுப்பதற்கான தேசியத் திட்டம், சுகாதார சேவைகள் தலைமை இயக்குனரகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இந்திய அரசு.

2.90243902439
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
பாஸ்கரன் Sep 06, 2018 08:18 AM

நன்று.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top