பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / கண்களை பாதுகாக்க வழிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கண்களை பாதுகாக்க வழிகள்

கண்களை பாதுகாக்க வழிகள் பற்றிய குறிப்புகள்

சிறு வயதிலிருந்தே கண்களை கண் மருத்துவர் மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். கண்களில் ஏதேனும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆரம்ப கட்ட சிகிச்சையை மேற்கொள்வது கண்களை பாதுகாக்கும் வழியாகும். வளர்ந்த குழந்தைகளையும் ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதிப்பது அவசியம்.

குழந்தை பருவத்தில் குழந்தைகளுக்கு சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது பிற்காலத்தில் பார்வை குறைபாட்டை தவிர்க்கும் வழியாகும்.

கண் மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான சிறுவர்கள் கில்லி, ஈர்க்குச்சி, போன்றவற்றைக்கொண்டு கண்னைக்குத்திக்கொண்டு வருபவர்கள் தான். சிறுபிள்ளைகளை கூர்மையான பொருட்களை வைத்து விளையாட அனுமதிக்ககூடாது. உபகரணங்கள் வைத்து விளையாடினாலும், ஒருவர் மீது ஒருவர் மோதிகொள்வதாலும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆதலால் உரிய பாதுகாப்பு ஆவணங்களை அணிந்து கொண்டு விளையாடலாம்.

புத்தகம் படிக்கும் போது எழுத்த வேளையில் ஈடுபடும் போது சரியான கோணம் போதிய அளவு வெளிச்சம் ஆகியன இருக்குமாறு பாத்துக்கொள்ள வேண்டும். ஓடிக்கொண்டு இருக்ககூடிய வாகனத்தில் படிப்பதும், படுத்துக்கொண்டு படிப்பதும் தவறு. இவ்வாறு படிப்பதால் விழித்திரை பாதித்து கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும். நிமிர்ந்து அமர்ந்து படிப்பது கண்களுக்கு சிரமம் ஏற்படாமல் படிப்பது கண்களை பாதுகாக்கும் வழியாகும்.

நீண்ட நேரம் தொலைகாட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுகள், கைபேசி விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடுவதால் கண்கள் சோர்வடைந்து கண்களின் விழித்திரையை பாதிக்கும். மாறுகண் ஏற்படுவதற்கான ஆபத்தும் இருக்கிறது. கணினி துறையில் வேலை செய்பவர்கள் நீண்ட நேரம் கணினியை பார்த்துக்கொண்டு இருப்பதால் கண்கள் வறட்சி அடையும். எனவே அளவுக்கு அதிகமாக கண்களுக்கு வேலை தராதீர்கள். சில நேர இடைவெளியில் கண்களுக்கு பயிற்சி அளியுங்கள். வெளியில் சென்று வெளிப்பொருட்களை பார்த்துவாருங்கள்.. பசுமையான பொருட்களை சில நேரம் பாருங்கள்

தையல் வேளையில் ஈடுபடுபவர்கள், பொற்கொல்லர்கள், உலோக பற்றவைப்பாளர்கள் போன்றவர்கள், உற்றுபார்த்துக்கொண்டு வேலை செய்வதால் இவர்களுக்கு கண்கள் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. எனவே கண்களுக்கு ஒய்வு அளிப்பதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரிடம் சென்று கண்களை பரிசோதிப்பது அவசியம்.

தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், வேகமாக சுழலக்கூடிய இயந்திரங்களை இயக்குபவர்கள், போன்றவர்களுக்குக் கண்களில் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். இவர்கள் வேலை செய்யும் போது தகுந்த கவசம் அணிவது அவசியம்.

புகைபிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் தெரிந்ததே. புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையானது தங்களது கண்களையும் அருகில் இருப்பவர்களின் கண்களையும் பாதிக்கும். உள்ளே செல்லும் நச்சுப்பொருட்கள் பார்வை நரம்புகளைப் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே புகைபிடிப்பதை நிறுத்தினால் கண்களை பாதுகாக்கலாம்.

சர்க்கரை வியாதி மற்றும் ரத்தஅழுத்தத்தினால் பிரச்சனை உள்ளவர்கள் முறையான சிகிச்சையுடன் உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி மேற்கொண்டால் பார்வை இழப்பை தவிர்க்கலாம்.

பார்வை குறைபாடு நெருங்கிய உறவினர்களிடையே நடைபெறும் திருமணங்கள் போன்றவற்றாலும் வருகின்றன. எனவே இப்படிபட்ட சந்தர்ப்பங்களை தவிர்ப்பது நல்லது. மேற்கூறிய விதங்களில் ஏற்படக்கூடிய கண் பாதிப்புகளை தவிர்த்து கண்களை பாதுகாத்துகொள்வோம்

ஆதாரம் : அரசினர் கண்மருத்துவமனை சென்னை

Filed under:
3.00793650794
விக்னேஷ் Dec 26, 2016 03:04 PM

சூரியனை கண்களால் பார்க்கசகூடாது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top