பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கண்சவ்வுத் திரள்கட்டி

கண்சவ்வுத் திரள்கட்டி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கண்சவ்வுத் திரள்கட்டி என்பது சிறிய, இரத்தக்குழல் சார், மஞ்சள் வெள்ளை குருணைப் படிவுகள் ஆகும். இவை கண்சவ்வுச் சிதைவால் உருவாகின்றன. இவை இமைசார் கண்சவ்விலும், இமைசார் கண்சவ்வு மற்றும் குமிழ் கண்சவ்வு சந்திப்பிலும் உள்ள மேல் தோலின் அடியில் காணப்படும். நீடித்த அழற்சி நிலை கொண்ட நோயாளிகளுக்கும் முதியவர்க்கும் இவை ஏற்படுவதுண்டு. 20 வயது இளைஞர்களிலும் இப்படிவுகள் காணப்படுவதுண்டு. பாதிப்பு ஏற்படும் வயது வரம்பு 30-80 ஆகும். இத் திரள் கட்டிகள் பல்நுண் இணைவுக்கட்டிகளாகத் தோன்றும். இறுகிய சளி மற்றும் கெராட்டினை உள்ளடக்கிய சிதைந்த மேல்தோல் செல் சிதைவுகள் ஆகியவற்றின் மஞ்சள்வெண்மை படிவுகள் இக்கட்டிகளுக்குள் காணப்படும். இவை பொதுவாகத் தனித்தனிக் கட்டிகளாக இருக்கும். ஆனால் இணைந்து திரண்டவைகளும் அரியவை அல்ல. மேல் மற்றும் கீழ் இமைகளிலோ, வலது அல்லது இடது கண்ணிலோ இவை காணப்படுவதில் எந்த வேறுபாடும் இல்லை என ஓர் ஆய்வு கூறுகிறது. மேலும் பெரும்பாலான திரள்கட்டிகள் மேலோட்டமானவையும், கடினமானவையும், தனித்தனியானவையும் என கண்டறியப்பட்டுள்ளன. சில நோயாளிகளில் இதன் தொடர்பாக மெய்போமியன் சுரப்பிகளும் பாதிக்கப்படுவதுண்டு.

கண்சவ்வுத் திரள்கட்டிகள் கொண்ட நோயாளிகளுக்கு உலர்கண் பாதிப்பும் இருப்பதை ஓர் அண்மை ஆய்வு வலியுறுத்துகிறது.

இவை பொதுவாக நோய்க்காரணம் அறியப்படாதவை. இருப்பினும் பின்வருபவற்றோடு தொடர்பும் இருப்பதுண்டு:

 • நீடித்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி
 • பின் கண்ணிமை அரிப்புச் சிதைவைத் தொடர்ந்து
 • சல்பாடையசின் கண் சொட்டு மருந்து அளித்தல்

கண்சவ்வுச் சிதைவு என்பது பொதுவாக ஏற்படக் கூடியதே. இதனால் கண் இயக்கத்திற்கோ அல்லது பார்வைக்கோ பெரும் பாதிப்புகள் உண்டாவதில்லை. முந்திய கால அழற்சி, படிவுகளை ஏற்படுத்தும் நீண்ட கால நச்சு பாதிப்புகள், அல்லது முதுமை ஆகியவற்றால் இது அதிகரிக்கும். நீடித்த அரிப்பு, உலர்தல் அல்லது முன்னர் ஏற்பட்ட காயம் ஆகியவற்றோடு  கண்சவ்வுச் சிதைவு தொடர்புடையதாக இருக்கலாம்.

இணைகுவிய நுண்காட்டியியல், நோயெதிர்ப்பு – திசுவேதியல் சாயமேற்றல் மற்றும் மரபியல் சோதனை ஆகியவற்றின் பயன்பாட்டால் வெண்படலம் மற்றும் கண்சவ்வு சிதைவுகள் மேம்பட்ட முறையில் இனங்காணப்படுகின்றன.

நோயறிகுறிகள்

திரள்கட்டிகள் பொதுவாக அறிகுறிகளைக் காட்டுவதில்லை. ஏனெனில் அவை இமைசார் கண்சவ்விற்குள் மறைந்திருக்கும். பெரிதாகி கண்ணிமை சவ்வுகளை ஊடறுத்து அவை வெளித்தள்ளும் வரை நோயாளி அதை கவனிப்பதில்லை.

மேல் உள்ள கண்சவ்வு மேல்தோலை அரித்து வெண்படலத்தோடு தொடர்பு கொள்ளும் போதுதான் அவை கண்ணை உறுத்தும்.

துருத்தும் திரள்கட்டி கீழ்க்காணும் அறிகுறிகளை ஏற்படுத்தும்:

 • வெளிப்பொருள் உணர்வு
 • நீரொழுகுதல்
 • உபாதை
 • உறுத்தல்
 • கண்சிவப்பு
 • வெண்படலத் தேய்வு (அரிதாக)

காரணங்கள்

ஹென்லே சுரப்பிகள் எனப்படும் பள்ளங்களில் மேல்தோல் செல்களும் இறுகிய சளியும் திரள்வதால் திரள்கட்டிகள் உருவாகின்றன.

கண்சவ்வு திரள் கட்டிகளின் காரணங்களும் ஆபத்துகளும் பலதிறப்பட்டன. ஆனால் அவை பெரும்பாலும் வயது முதிர்ச்சி மற்றும் நீடித்தக் கண்சவ்வழற்சியோடு தொடர்புடையன.

காரணங்களும் ஆபத்துக்காரணிகளும்:

 • வயது முதிர்தல்
 • நீடித்தக் கண்சவ்வழற்சி
 • கண்ணீர் படலக் குறைபாடு
 • கடும் ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி
 • மெய்போமியன் சுரப்பி செயலிழப்பு (உ-ம். நீடித்த மெய்போமியன் சுரப்பி அழற்சி)
 • சில கண்சொட்டுகளின் மறு படிகமாக்கம் (உ-ம். சல்பாடயாசைன்)

நோய்கண்டறிதல்

பொதுவாக கண்சவ்வுத் திரள்கட்டி தற்செயலாகவே கண்டறியப்படுகிறது. அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. கண்பரிசோதனையில் கண்சவ்வுத் திரள் கட்டி தென்படுகிறது. வெளித்துருத்தும் திரள்கட்டி கொண்ட நோயாளிகள் உறுத்தல் மற்றும் அயல்பொருள் உணர்வு இருப்பதாக்க் கூறுவர். நோயாளிகளுக்கு நீடித்த கண்சவ்வழற்சி இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

மருத்துவப் பரிசோதனை:

 • கண்சவ்வுத் திரள்கட்டி 1-2 மி.மீ அளவுள்ள, சிறிய, மஞ்சள் வெள்ளைப் புண்கள். இவை இமைசார் கண்சவ்விலும் , விழிவளைமுகட்டிலும் பொதுவாகக் காணப்படும்.
 • திரள்கட்டி தனியாகவோ பல சேர்ந்தோ அல்லது அரிதாகத் தொடர்ந்தோ காணப்படும்.

திசுவியலும்  மின்நுண்காட்டியியலும்

கண்சவ்வுத் திரள்கட்டியின் முக்கிய கூறுகள், சிதையும் மேல்தோல் செல்களும்  கண்சவ்வு சுரப்பிகளில் இருந்து வெளியேறும் இறுகிய சுரப்புகளுமே. அழற்சியைத் தொடர்ந்து சிதைவுகள் கண்சவ்வுசார் பள்ளங்களில் (ஹென்லே சுரப்பிகள்) சிக்கிக் கொள்ளுகின்றன. மேலும் அவற்றோடு பெரும்பாலும் சுண்ணாம்புச் சத்து சேருகின்றது. கண்சவ்வுச் சுரப்பிகளில் இருந்து வரும் சளிசுரப்பைத் திசுவியல் ஆய்வு காட்டுகிறது. அபூர்வமாக, திரள்கட்டிகளின் முகட்டில் மேல்தோல் கட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கண்சவ்வுத் திரள்கட்டிகள் நுண் குருணை மற்றும் படலச் சிதைவுகளாகவும் இருக்கும். இவை சுண்ணாம்புக் கட்டிகளாக இருக்கும் என முதலில் எண்ணப்பட்டன. எனவேதான கண்சவ்வுக் கல்படிவுகள் எனும் தவறான பெயர் ஏற்பட்டது.

சாயக் குணங்கள்

 • கட்டிச் சாயம்: கால்சியச் சாயத்துக்கு மாறாக திரள் கட்டிகள் பாஸ்போலிப்பிட்டுகளுக்கும் எலாஸ்டின்களுக்கும் கட்டியாக சாயம் ஏற்கின்றன.
 • பலவீனமான சாயம்: நியூட்ரல் பாலிசாக்கரடுகள் மற்றும் லிப்பிடுகளுக்குப் பலவீனமாக சாயம் ஏற்கின்றன.
 • சாயமேறாமை: அமிலாய்ட், கோலஜென், கிளைகோஜென், இரும்பு, மியூக்கோ – பாலிசாக்ரைடுகள், கால்சியம், ஆர் என் ஏ, டி என்.ஏ க்களுக்கு சாயம் ஏற்பதில்லை.

மின் நுண்காட்டியியல்

திரள் கட்டிகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. ஆனால் அவை கடினமான சுண்ணாம்புக் கட்டிகள் அல்ல. மின் நுண் காட்டியில் அவைப் படிக வடிவத்தைக் காட்டுவதில்லை. எனவே கல்படிவு என்ற பெயர் பொருத்தமல்ல.

பின் வருவனவற்றில் இருந்து திரள்கட்டிகளை வேறுபடுத்திக் காண வேண்டும்.

 • மேல்தோல் இணைவுக் கட்டிகள்
 • நிணநீர்ப் புடைப்பு

நோய் மேலாண்மை

 • அறிகுறியற்ற கண்சவ்வுத் திரள்கட்டி: திரள் கட்டிகள் மேல்தோல் சார் இடைவெளிகளில் இருப்பதாலும், அவை அறிகுறிகள் எதையும் காட்டாததாலும் மேலாண்மை தேவையற்றதாகும்.
 • அறிகுறிகாட்டும் கன்சவ்வுத்திரள்கட்டி : மேல்தோல் வழியாக ஊடுறுவித் திரள் கட்டி அறிகுறிகளைக் காட்டினால் ஒரு கண்மருத்துவர் உயிர்-நுண்காட்டியின் உதவியால் சிறு வலை ஊசி கொண்டு மேற்புறப் பரப்பு வெளி மரப்பின் மூலம் அவற்றை அகற்றுவார்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.12121212121
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top