অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

குழந்தைப்பருவ புறமாறுகண்

குழந்தைப்பருவ புறமாறுகண்

அறிமுகம்

குழந்தைப்பருவ புறமாறுகண் (வெளிப்புற விலகல்) என்பது ஒரு கிடைமட்டப் புறவிலகலாகும். பார்வை அச்சு ஒரு விலகல் கோணத்தை உருவாக்குவதே இதன் இயல்பு. இரு விழிகளும் திறந்து இருக்கும் போது கண்கள் நேராக இருப்பதே புறவிழித்தசை இணக்கம் என்னும் நிலை. இருப்பினும், கண்கள் மூடி இருக்கும் போது மூடித் திறக்கும் சோதனை அல்லது விட்டுவிட்டு மூடும் சோதனையில் விழி விலகல் ஏற்படுகிறது. அது புற மாறுகண்ணாக மாறும். மறைந்திருப்பதாக (புறவிழித்தசை இணக்கம்) அல்லது வெளிப்படையானதாக (புறமாறுகண்) காணப்படும். இணக்கமும் இணக்கமின்மையும் புறமாறுகண்ணில் மாறிமாறி காணப்படும்.

குழந்தைப்பருவ புறமாறுகண்ணை வகைப்படுத்தல்

அது பரந்த அளவில் பின் வருமாறு பகுக்கப்படும்:

  • இடைவிட்ட புறமாறுகண்
  • நிலையான புறமாறுகண்

நிலையான புறமாறுகண் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்:

  • பிறவிப் புறமாறுகண்
  • திறனிழந்த இடைவிட்ட புறமாறுகண்
  • புலனிழந்த புறமாறுகண்
  • தொடர் புறமாறுகண்

தொலைவு-பக்கம் உறவைப் பொறுத்து புறவிலகல்கள் மேலும் பின்வருமாறு வகைப்படுத்தப் படும் (டுயூனே வகைப்படுத்தல்):-

குவிதல் குறை புறமாறுகண்: குவிதலில் குறைபாடு இருப்பதால் பக்கப் பார்வைக்கு புறமாறுகண் மோசமானது.

மிகைவிலகல்: விலகல் அதிகமாக இருப்பதால் தொலைவுப் பார்வைக்கு புறமாறுகண் மோசமானது.

அடிப்படை புறமாறுகண்: பக்க மற்றும் தொலைவுப் பார்வைக்கு புறமாறுகண் ஒரே மாதிரியானது.

இடைவிட்ட புறமாறுகண்

ஏறத்தாழ இரண்டு வயதில் இடைவிட்ட புறமாறுகண் பெரும்பாலும் தொடங்கும். பெரியவர்களுக்குக் காணப்படும் பெறப்பட்ட வெளித்தெரியும் புறமாறுகண் போல் அல்லாது ஒரு குழந்தைக்குக் கானப்படும் இடைவிட்ட புறமாறுகண் இருபக்கநெற்றி அழுத்தத்தால் இரட்டைப் பார்வையாக உருவாகாது. தொடர் அழுத்தத்தால் நிலையான புறமாறுகண் உருவாகலாம். விழித்திரை செயல் அழுத்தம் மிகவும் அரிதானது. களைப்பு, ஒளிக்கூச்சம், ஆரோக்கியமின்மை அல்லது பார்வைச் சிதறல் போன்ற காரணிகளால் வெளித்தெரியும் புறமாறுகண் உருவாக்கம் துரிதப்படுத்தப்படும்.

பிறவிப் புறமாறுகண்

பிறவிப் புறமாறுகண் அரிதானது; பிறப்பில் காணப்படுகிறது. பெருமூளை வாதம், நடுவுடல் குறைபாடுகள், தலையோடு முக நோய்த்தாக்கம் போன்ற நரம்பியல் குறைபாடுகளோடு தொடர்புடையது. சிசு புறமாறுகண், பிறந்து முதலாண்டில் வெளிப்படுகிறது.

திறனிழந்த இடைவிட்ட புறமாறுகண்

திறனிழந்த இடைவிட்ட புறமாறுகண், நாட்செல்லச் செல்ல அதிகரித்து நிலையான புறமாறுகண்ணாக மாறுகிறது.

புலனிழந்த புறமாறுகண்

ஒரு நோயால் அல்லது கண்புரையால் பெற்ற ஒளிபுகா ஊடகம் போன்ற நிலையால் இருவிழி அனிச்சைகள் தடைபட்டு புலனிழந்த புறமாறுகண் உண்டாகிறது. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உண்டாகிறது.

தொடர் புறமாறுகண்

அகமாறுகண்ணை (கண்களின் உட்பக்க விலகல்) அறுவை மூலம் மிகையாக சரிசெய்யும் போது தொடர்புறமாறுகண் உருவாகிறது. குறிப்பாக இது மங்குபார்வை உள்ள கண்களில் ஏற்படும். அரிதாக, அதிக மங்குபார்வையுள்ள குவி விழி விலகல் விழியாக மாற்றமடையலாம் (கண்ணின் ஓய்வுநிலையைப் பெறுகிறது).

முதனிலை புலன் குறைபாட்டின் விளைவாக இரண்டாம் நிலை புறமாறுகண் ஏற்படுகிறது அல்லது அகமறுகண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் விளைவாகவும் உண்டாகலாம்.

நோயறிகுறிகள்

குழந்தைப்பருவ புறமாறுகண்ணின் இயல்புகள்:

  • நீண்டநேரம் அருகில்வைத்து ஆற்றும் பணிக்குப் பின் கண்சோர்வு
  • விழிவிலகலால், படிக்கப்படும் சொற்கள் இணைந்து காணப்படும் அல்லது சொற்கள் காணப்படாமலும் போதல்.
  • சில நோயாளிகள் விலகலை உணர்ந்தும் அதை அவர்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
  • புறவிலகலைத் தாமாகவே கட்டுப்படுத்தும் போது இணக்கக் கூடுகை ஏற்பட்டு எழுத்துக்கள் சிறிதாகத் தோன்றும்.
  • சில நோயாளிகளுக்குப் பரந்த பார்வை இருக்கும்.
  • பிரகாசமான ஒளியில் குழந்தை ஒரு கண்ணை மூடும் (விலகும் விழி)

காரணங்கள்

புறமாறுகண்ணுக்கு மரபியலின் பங்கு இருப்பது போல் தோன்றுகிறது.

புறமாறுகண்ணுக்கு பல காரணிகள் இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இருப்பினும், ஒரு குடும்பத்தில் தொடர்ந்து வரும் பரம்பரைகள் சீக்கிரத்தில் புறமாற்கண்ணைப் பெறுகின்றன. பாதிப்பும் அதிகக் கடுமையாக உள்ளது.

நோய்கண்டறிதல்

  • குழந்தைப்பருவ புறமாறுகண்ணைக் கண்டறிதல்:-
  • விழியியக்கப் பதிவு உட்பட ஒரு முழு கண் பரிசோதனை நடத்தப்படுகிறது.
  • அண்மைப் பார்வை (33 செ.மீ), தொலைவுப் பார்வை (6 மீ), மிகு தொலைவுப் பார்வை (6 மீட்டருக்கு மேல்) ஆகியவற்றில் கண்பார்வை விலகல் பதிவு செய்யப்படுகிறது.
  • விலகல் கட்டுப்பாட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. இது இடைவிட்ட புறமாறுகண் அதிகரித்தலை கண்காணிக்க உதவும். விலகலைப் பெற்றோரே காணலாம் அல்லது கண்பரிசோதனையில் கண்டறியப் படும்.
  • நேர் பார்வையிலும் பக்கப் பார்வையிலும் விலகல் பாகை வேறுபடும். பக்கப் பார்வையில், அறுவைக்குப் பின்னான இரட்டைப்பார்வையைத் தவிர்க்க பதிவுகள் அறுவை சிகிச்சை கோணத்தில் இருந்து பதிவு செய்யப்பட வேண்டும்.

இடைவிட்ட புறமாறுகண்

நன்கு வளர்ச்சி அடைந்த அழுத்தல் பொறிநுட்பம் இருப்பதால் இடைவிட்ட புறமாறுகண் நோயாளிகளுக்கு அரிதாகவே சிக்கல்கள் காணப்படும். கண்சோர்வு, தலைவலி, பார்வை மங்கல், அல்லது தொடர்ந்து வாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் நோயாளிகளுக்கு இருக்கலாம். இருப்பினும் புலன் தழுவல் உருவாக்கத்தின் மூலம் இந்த அறிகுறிகள் வேகமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அனைத்து இடைவிட்ட புறமாறுகண்களும் வளர்ச்சி அடைவதில்லை. விலகல் பல ஆண்டுகளுக்கு ஒரே மாதிரியாக இருக்கும். புறமாறுகண் அப்படியே உள்ளதா வளருகிறதா என்பதை நோயாளி அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும்.

பிறவி புறமாறுகண்

அதன் தன்மைகளாவன:

  • குழந்தைக்கு இயல்பான விலகல் இருக்கும்
  • ஒடுக்கம் வரையறைக்கு உட்பட்டதில்லை
  • இமை அசைவோ அல்லது கண்பாவை குறைபாடுகளோ அதை கண் இயக்க நரம்பு (மூன்றாவது தலியோட்டு நரம்பு) வாதத்தில் இருந்து வேறுபடுத்துவதில்லை.

திறனிழந்த இடைவிட்ட புறமாறுகண்

சில நோயாளிகளுக்கு, அகமாறுகண் புறமாறுகண்ணாக மாற்றம் அடைவதுண்டு. இறுதியில் அது நிலையான புறமாறுகண்ணாக மாறும். விலகல் முதலில் தொலைவிற்கும் பின் அண்மைக்கும் ஏற்படும். இருப்பினும் புறனடைகள் உண்டு. இந்த விலகல்கள் நிலைத்திருக்கும் அல்லது அரிதாகக் குறையலாம்.

புலனிழந்த புறமாறுகண்

குறைந்த பார்வையுள்ள ஒரு கண் (ஒளிபுகா ஊடகத்தால்) அல்லது பார்வியிழந்த கண் வெளிப்புறமாக விலகி புறவிலகல் அடைகிறது. இது பொதுவாக 2-4 வயது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உண்டாகிறது.

தொடர் புறமாறுகண்

அகமாறுகண்ணைச் சரிசெய்த பின் தொடர் புறமாறுகண்ணாக மாற்றம் அடைய பல ஆண்டுகள் பிடிக்கும். அதிக அளவு அறுவை, மங்குப்பார்வை, மிகையான தூரப்பார்வை, அறுவைக்கு முன் நோயாளியைப்பற்றிய குறைமதிப்பீடு ஆகிய காரணிகளே அகமாறுகண் மிகைஅறுவை சரியமைப்பிற்குக் காரணம்.

புறமாறுகண்ணை, கண்ணியக்க நரம்பு வாதம் அல்லது போலிபுறமாறுகண் நோய்களில் இருந்து வேறுபடுத்திக் காண வேண்டும். போலி புறமாறுகண்ணில் இரு கண்களின் பார்வை அச்சும் நேராக இருக்கும்; ஆனால் கண்கள் விலகி இருப்பது போல் தோன்றும்.

நோய்மேலாண்மை

விலகலின் மீது நல்ல கட்டுப்பாடு உள்ள குழந்தைகளுக்கும் மிகை சரியமைப்பின் ஆபத்து தவிர்க்கப்பட வேண்டிய போதும் அறுவையற்ற சரியமைப்பு முறைகள் கையாளப்படுகின்றன.

  • விலகல் பிழைகளைச் சரிசெய்தல்: விலகல் பிழைகள் உள்ள அனைவருக்கும் கண்ணாடி மூலம் சரிசெய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாகக் கிட்டப்பார்வை கண்ணாடி மூலம் விலகலைக் கட்டுப்படுத்தும். மேலும் இடைவிட்ட புறமாறுகண்ணில் இருந்தும் நலம்பெறலாம்.
  • மிகைசரியமைப்பு குழியாடியை (மைனஸ்) பரிந்துரைத்தல்: மிகை சரியமைப்புக் குழியாடிகள் இணக்கக் கூடுகையைத் தூண்டும். இணைவுத் தரத்தையும் மேம்படுத்தலாம். அது புறமாறுகண்ணைக் குறைக்கும்.
  • பகுதி நேர மறைப்பு: விலகல் அடையாத இயல்பான கண்ணை பகுதி நேரம் மறைக்கும் போது, விலகும் விழியின் அழுத்தலுக்கும் மங்குபார்வைக்கும் சிகிச்சை தந்து புறமாறுகண்ணை சரியமைத்து புறவிழித்தசை இணக்கமாக மாற்றும். இருகண்களிலும் ஒரே நிலைமை இருந்தால் கண்களை மாற்றி மாற்றி மறைக்கலாம். பகுதி நேர மறைப்பு மிகவும் இளங் குழந்தைகளுக்குப் பயனளிக்கும்.
  • பட்டகப் பயன்பாடு: அடியகப்பட்டகம் ஓரிலக்குப்பார்வைத் தூண்டலுக்கு வழிகோலுகிறது. இதனால் கண்சோர்வு தீர்கிறது. இணைவுக் கட்டுப்பாட்டை மேம்படுத்தப் பட்டகத்தைப் பயன்படுத்தலாம்.
  • மாறுகண் மருத்துவம்: குவிதல் குறைபாட்டு வகை இடைவிட்ட புறமாறுகண் அறிகுறியுள்ள நோயாளிகளுக்கு இணைவுக் குவிதல் பயிற்சி அளிக்கலாம். ’அறிகுறி மறைப்பு’ (suppression) இருந்தால் ஊக்கமான எதிர்-மறைப்பு மற்றும் இரட்டைப்பார்வை விழிப்புணர்வு நுட்பங்களைப் பயன்படுத்தலாம். நோயாளி தாமாகவே புறமாறுகண்ணைக் கட்டுப்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது.
  • போட்டுலினம் நச்சு வேதிநரம்பொடுக்கம்: இரண்டாம்நிலை புறமாறுகண் நோயாளிகளுக்கு நீண்ட கால விழிஇசைவை உருவாக்குதல் கடினமாக இருக்கலாம். அறுவைக்குப் பின்னான மங்குப்பார்வை ஆபத்துடைய, பன்முறை அறுவைக்கு உட்படுத்தப் பட்ட நிலையான புறமாறுகண் கொண்ட நோயாளிகளுக்கு விழிப்புறத் தசைகளில் போட்டுலினம் நச்சு ஊசி பயன்படுத்தப்படலாம். அறுவைக்கு முன், போட்டுலினம் ஊசி இட்டுக் கொண்ட பின், ஒரு நோயாளிக்கு தீர்வுகாண முடியாத மங்குப்பார்வை ஏற்பட்டால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆலோசனை அளிக்கக் கூடாது.

புலன் இழப்பு புறமாறுகண் மேலாண்மை: கண்புரையை நீக்குதல் போன்ற சிகிச்சை அளிக்கக் கூடிய காரணங்களை அகற்றுதல் அல்லது திருப்புதலே இதற்குரிய மருத்துவம். பட்டகமும் போட்டுலினம் நச்சு வேதிநரம்பொடுக்கமும் பெரிய அளவில் பலனளிக்காது.

புறமாறுகண்ணுக்கு அறுவை சிகிச்சை

கீழ்வரும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கப்படலாம்:

  • இடைவிட்ட புறமாறுகண்ணை கட்டுப்படுத்துவதில் பலவீனம்: ஒரு நாளில் பாதி நேரம் வெளிப்படையான இடைவிட்ட புறமாறுகண் இருத்தல்.
  • கடுமையான கண் சோர்வு
  • இருவிழிப்பார்வையைத் திருப்பிப்பெறவும் தோற்றம் தொடர்புடைய காரணங்களுக்காகவும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். நிலையான புறமாறுகண்ணோடு ஒப்பிடும்போது இடைவிட்ட புற மாறுகண்ணுக்கு அறுவை மருத்துவம் சிறந்த பலனை அளிக்கின்றது.
  • அறுவை மருத்துவத்தில் செய்யக் கூடியவை: பக்க நேர்த்தசை தளர்த்தல், பக்க நேர்த்தசை தளர்த்தலும் ஒருபக்க நடுநேர்த்தசை அகற்றலும், இருபக்க நடுநேர்த்தசை அகற்றல்.
  • அறுவைக்கு முன் பாதுகாப்பு மாறுகண் அல்லது கண் சிகிச்சை அளிப்பது அதிக பலன் தருவதாகும்.

இந்நோய்க்கான சிகிச்சை மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நடைபெற வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார தகவல் மையம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate