இரு விழிகளும் பார்வைப் புறணிக்கு அளிக்கும் பிம்பத்தின் வடிவம் மற்றும்/அல்லது அளவு வெவ்வேறாக இருப்பதே சீரற்ற உருவத் தோற்றம் என வரையறுக்கப்படுகிறது. இரு பிம்பங்களை மூளையால் இணைக்க முடிவதில்லை. இதனால் ஒரு கூடுதல் ஆவிபிம்பம் அல்லது இரட்டைபார்வை ஏற்படுகிறது. அதிக அளவில் ஒத்தப் பார்வை இன்மை இருந்து அதைத் தொடுவில்லை இல்லாமல் கண்னாடியில் சீரமைக்கும் போது சீரற்ற உருவத் தோற்றம் பெரும்பாலும் உருவாகிறது. மருத்துவ வரலாறு அல்லது மருத்துவ சோதனை மூலம் சீரற்ற உருவத் தோற்றத்தைக் கண்டறிவது கடினம். விகிதம் அதிகமாக இருக்கும் போது சீரற்ற உருவத்தோற்ற நோய் பிம்பங்கள் இணைவதை முன்கூட்டியே தடுக்கிறது. இதற்கு மேல் ஒரு நோயாளி இரு கண்களுக்கும் இடையில் இருக்கும் பிம்பத்தின் அளவு மற்றும் வடிவ வேறுபாட்டைத் தானாகவே அளித்தல் அரிதாகும். பிம்ப வடிவத்தின் வேறுபாடு 4 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் சீரற்ற உருவத்தோற்றம் குறிப்பிடத் தக்கதாகும். ஆனால் 2 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் போது பல நோயாளிகளுக்கு வெளிசார் புலனுணர்வில் மாறுபாடு மற்றும்/அல்லது அசௌகரியமான இரட்டைபார்வை அனுபவம் உண்டாகலாம்.
இரு விழியிலும் பார்க்கப்படும் பிம்பத்தின் உருவ அளவு வேறுபாட்டைக் குறிக்க 1938-ல் லான்காஸ்ட்டர் சீரற்ற உருவத் தோற்றம் என்றச் சொல்லை அறிமுகப்படுத்தினார். அனிசெய்கோனியா (சீரற்ற உருவத்தோற்றம்) என்ற இந்தச் சொல் அனிசோ (சீரற்ற) மற்றும் எய்கோன் (உருவத்தோற்றம்) என்ற இரு கிரேக்கச் சொற்களால் உருவானது.
எட்டப்பார்வைத்தெளிவு என்ற நிலையில் விழியில் விலகல் பிழை இருக்காது. தொலைவுப் பார்வைக்கு சீரமைப்பும் தேவைப்படாது. வெண்படலத் திறன், வில்லைத் திறன் மற்றும் விழிகோளத்தின் அச்சுநீளம் ஆகிய மாறிகளால் பெரும்பாலும் கண்ணின் விலகல் திறன் தீர்மானிக்கப்படுகிறது. எட்டப்பார்வைத்தெளிவில் கண்ணின் இந்த மூன்று விலகல் திறன் கூறுகளும் இணைந்து கண்ணின் இயல்பான விலகலை உருவாக்குகின்றன. எட்டப்பார்வைத் தெளிவான கண்ணில், பார்வை அச்சுக்கு இணையான ஒளிக் கதிர்கள் விழித்திரையில் குவிகின்றன. எட்டப்பார்வைத் தெளிவின் தொலைதூரப் புள்ளி (அனுசரிப்பு அற்ற நிலையில் விழித்திரை இணைவுப் புள்ளி) ஒரு முடிவிலி ஆகும். அது 6 மீட்டர்கள். வெண்படலமும் விழிவில்லையும் ஒளிக்கதிர்களைப் போதுமான அளவில் குவிக்காத போது விலகல் பிழை ஏற்படுகிறது.
கண்ணின் ஒளியுணர் அடுக்கில் ஒளி மோசமாகக் குவிந்து மங்கலான பார்வை ஏற்படுவதை விலகல் பிழை என்ற சொல் விளக்குகிறது. இது ஒரு பொதுவான கண் பிரச்சினை. இதில் கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, சிதறல்பார்வை, முதுமைசார் பார்வைக்குறைவு ஆகியவை உள்ளடங்கும்.
ஒளியியல் சீரற்ற உருவத்தோற்றம், சீர்செய்யப்படாத அச்சு ஒத்தப்பார்வையின்மை அல்லது சீர்செய்யப்பட்ட விலகல் ஒத்தப்பார்வையின்மையின் விளைவாக ஏற்படும் விழித்திரை பிம்பங்களின் அளக்கபட்ட அளவு வேறுபாட்டை இது குறிக்கிறது. சீர்செய்யப்படாத அச்சு ஒத்தப்பார்வையின்மை அல்லது சீர்செய்யப்பட்ட விலகல் ஒத்தப்பார்வையின்மையில் பிம்பங்களில் அளவு வேறுபாடு இருந்தால் அது மிகக் குறைவாகவே இருக்கும். இரு கண்களிலும் பிம்ப அளவு ஒரே அளவாக இருக்கும் நோயாளிகளுக்கு சீரற்ற உருவத்தோற்றம் ஏற்படும். இது ஒளியியல் காரணத்தால் இருப்பதில்லை. இது நரம்பியல் சீரற்ற உருவத் தோற்றம் எனப்படும்.
சீரற்ற உருவத்தோற்றம் குணப்படுத்தக்கூடிய கண் உபாதையால் உருவாகிறது. குறைவானவர்கள் ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் பாதிப்படைகின்றனர்.
பெரும்பாலும் கண் அறுவையைத் தொடர்ந்து இது ஏற்படுகிறது. விழிவில்லையின்மை (கண்புரை அறுவை செய்யப்பட்டது) அல்லது விலகல் பிழை அறுவை போன்றவற்றின் காரணமாக குறிப்பிடத்தக்க அளவு விலகல் பிழை உள்ள கண்ணில் அறுவைக்குப் பின் விலகல் பிழை குறைகிறது. ஆனால் மறுகண் தெளிவான பார்வை பெற ஒரு வலுவான சீர்செய்யும் வில்லை தேவைப்படுகிறது. இதுபோல, இருகண்ணிலும் கண்புரை அறுவை செய்யப்பட்டு பின் தவறான திறன் கொண்ட உட்கண்வில்லை (போலிவிழிவில்லை) ஒரு கண்னில் பயன்படுத்தப்பட்டலும் சீரற்ற உருவத்தோற்றம் ஏற்படும்.
தனிப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப இநோயின் சகிப்புத்தன்மை உள்ளது. பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சில நோயாளிகளால் சகித்துக் கொள்ள இயலும். ஆனால் சிறு பாதிப்பே சிலருக்கு பெரும் அறிகுறிகளை உருவாக்கும். நடுவச்சு பாதிப்பு, குறிப்பாக சாய்ந்திருந்தால், சகிப்புத்தன்மை குறைவுபடும்.
இரு கண்களுக்கும் இடையில் உருப்பெருக்க வேறுபாடு அல்லது நடுவச்சு பாதிப்பு அளவுக்கு அதிகமாக இருந்தால் அது அறிகுறிகளை உருவாக்கலாம்.
சீரற்ற உருவத்தோற்றம் இயற்கையாகவோ அல்லது விலகல் பிழை சீரமைபாலோ ஏற்படலாம். இரு கண்களுக்கும் இடையில் 7% இருக்கும் சீரற்ற உருவத் தோற்ற பாதிப்பில் அறிகுறிகள் இருப்பதில்லை. இது 3 டயோப்டர் (டி) ஒத்தப்பார்வையின்மைக்கு நிகரானது. விலகல் பிழையின் அளவீட்டு அலகு டயோப்டர் (டி) ஆகும். இது மீட்டர் அளவில் குவிய தூரத்தின் தலைகீழ் விகிதம் ஆகும்.
காரணங்களில் அடங்குவன:
I.ஒளியியல்
உள்ளார்ந்தது: இது கண்ணின் விலகல் மண்டலத்தின் குறைபாட்டால் ஏற்படுவது ஆகும். பொதுவாக இது ஒத்தப்பார்வையின்மையோடு தொடர்புடையது.
பெறப்பட்டது: இது சீர்செய்யும் வில்லைகளால் தீர்மானிக்கப்படுகிறது. அணியப்படும் வில்லை, அதன் திறன், நிலை, தடிமன் மற்றும் வடிவத்தைப் பொறுத்து இது அமையும்.
II. உடற்கூறு அல்லது விழித்திரை சார்ந்தவை:
விழித்திரையில் விழும் ஒளியைப் பாதித்து விழித்திரைக் கூறுகள் பார்க்கப்பட்ட பிம்பத்தைப் பெரிதாக அல்லது சிறிதாகத் தோன்றச் செய்யும். மாறுபடும் எண்ணிக்கையில் ஒளி ஏற்பிகள் தூண்டப்படுவதால் இது நிகழ்கிறது. விழித்திரைக் கண்ணீர், விடுபடல், தசை ஓட்டை, நரம்புணரடுக்குப் பிளவு, மேல்விழித்திரை படலம் அல்லது தசை வீக்கம் ஆகியவை விழித்திரை சீரற்ற உருவத் தோற்றத்திற்கான காரணங்களில் அடங்கும்.
III.மையம் அல்லது புறணி சார்ந்தது
பெருமூளைப் புறணியின் சமனற்ற ஒரேநேரப் புலனுணர்வு: விழித்திரையில் பிம்பங்கள் ஒரே அளவாக உருவான போதிலும் பெருமூளை அவற்றை சம்மற்றதாகவும் ஒரேநேரத்திலும் உணர்வதால் சீரற்ற உருவத் தோற்றம் ஏற்படுகிறது.
பார்வைக் கோளாறு கொண்ட நோயாளிகளுக்கு மருத்துவ அறிகுறிகளைக் கொண்டும் விழித்திரை சோதனை மேற்கொண்டும் நோய்கண்டறியப்படுகிறது.
மருத்துவ ரீதியான சீரற்ற உருவத்தோற்றம், அறிகுறிகளை நீக்கத் தேவையான சீரமைப்பு தேவைப்படும் சீரற்ற உருவத்தோற்றத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது. இரு கண்களுக்கும் இடையில் இருக்கும் பிம்ப அளவின் வேறுபாடு 0.75% -ஐ நெருங்கும்போது இது ஏற்படுகிறது. சாய்ந்த நடுவச்சு சீரற்ற உருவத்தோற்றம் இரு கண்களிலும் இணைந்தபிம்பங்களின் குத்துக்கோடுகளின் சுழல் விலகலை உருவாக்குகிறது. இது நடுவரை விலகல் என அழைக்கப்படும். இது 0.3˚ யை அணுகும்போது மருத்துவ முக்கியத்துவத்தை அடைகிறது.
சீரற்ற உருவத்தோற்றத்தின் மருத்துவ வகைகள்
சீரற்ற உருவத்தோற்றம் ஒன்றில் சமமானதாக அல்லது சமமற்றதாக இருக்கும்.
சம சீரற்ற உருவத்தோற்றம்
ஒன்றில் அனைத்துப் பரிமாணங்களிலும் அல்லது ஒரு நடுவரையில் பிம்பம் ஒன்றைவிட மற்றது பெரிதாக இருக்கும். நடுவரையில் காணப்படும் இந்த வேறுபாடு சரிந்ததாக இருக்கும்.
சமமற்ற சீரற்ற உருவத்தோற்றம்:
பிம்பம் ஒருசில விகிதம் திரிபடைந்து இருக்கும்.
சீரற்ற உருவத்தோற்றத்துக்கன சோதனைகள்:
சீரற்ற உருவத்தோற்றத்தைக் கண்டறிந்து அளக்க உருத்தோற்ற அளவுமானி பயன்படுத்தப்படுகிறது. இதில் இரு வகை உண்டு. நேர்மானி மற்றும் இடமானி.
மருத்துவ ரீதியாக சீரற்ற உருவத்தோற்றத்தை ஆராய எளிய அச்சிட்ட நேரடி ஒப்பீட்டு சோதனையும் கணனி சோதனையும் பயன்படுத்தப் படுகிறது.
மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.
மருத்துவ சிகிச்சை
சீரற்ற உருவத்தோற்றமும் பார்வைத் தெளிவின்மையுமே கண்சீரமைப்புக்கு வழிவகுக்கும் காரணிகள் ஆகும். இரு விழிகளிலும் விலகல் பிழை வேறுபாடே சீரற்ற உருவத்தோற்றத்திற்கான பொதுவான காரணம். சீர்செய்வதற்கான வழிகாட்டுதல்கள்:
மருத்துவ சிகிச்சையில் அடங்குவன
அறுவை சிகிச்சை
இது சிறந்த சிகிச்சை முறை.
இதில் அடங்குவன:
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்