பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

டிராக்கோமா

டிராக்கோமா நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

டிராக்கோமா, (Trachoma), வேறு பெயர்கள்: நுண்மணி இமை படல அழற்சி (granular conjunctivitis), எகிபத்திய கண்ணழற்சி (Egyptian ophthalmia), மற்றும் பார்வையைப் போக்கும் டிராக்கோமா (blinding trachoma) என்பது கிளமிடியா டிரக்கமாட்டிஸ் எனும் நுண்ணுயிரியால் ஏற்படும் ஒரு தொற்று நோய் ஆகும். இந்த நோய்த்தொற்று இமைகளை சொர சொர  என மாற்றுகிறது, இமைகளின் உட்புறத்தை கரடு முரடாக்குகிறது. இப்படி கரடு முரடாவது கண்களில் வலியை ஏற்படுத்தும், கருவிழிப்படலத்தின் வெளிப்புறத்தில் உடைவு ஏற்படலாம் அல்லது குருட்டுத் தன்மை கூட ஏற்படலாம்.

 

காரணிகள்

 • இந்த நோயால் பாதிக்கபட்டவரின் கண்கள் அல்லது மூக்கு போன்ற உறுப்புகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு ஏற்பட்டால் இந்த நோய் தொற்றுக்கிருமி பரவ வாய்ப்புண்டு.
 • மறைமுக தொடர்பு என்பதில் பாதிக்கப்பட்ட நபர் அவரது கண்களையோ மூக்கையோ துடைக்கப் பயன்படுத்திய துணிகளும் ஈக்களும் அடங்கும்.
 • பல ஆண்டுகளாக இந்த தொற்று இருந்தால் மட்டுமே இமைகளில் வடு ஏற்படும். அப்பொழுது இமை மயிர்கள் கண்ணுடன் உரச தொடங்கும்.
 • இந்த நோய் தொற்று பெரியவர்களை விட அதிகமாக சிறுவர்களால் ஏற்படுகிறது.
 • சுற்றுப்புற தூய்மை குறைவு, நெரிசலான வாழ்விடங்கள், சுத்தமான நீருக்கான தட்டுப்பாடு, சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்றவை நோய்த்தொற்றை அதிகரிக்க செய்யும்.

தடுப்பு மற்றும் சிகிச்சை

 • இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் முக்கியமானவை சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வது மற்றும் நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு [நுண்ணியர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சையளிப்பதும் தான்.
 • இந்த நோய் பொதுவாகத் தாக்கும் மக்கள் அனைவருக்குமே ஒரே நேரத்தில் இந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
 • கழுவுதல் என்பது போதுமானது அல்ல, இருந்தாலும் இதர நடவடிக்கைகளுடன் சேர்த்து செய்தால் பலனளிக்கலாம்.
 • சிகிச்சை முறை தேர்வுகளில் வாய் வழியாக அசித்திரோமைசின் அல்லது வெளிப்புற பூச்சு மருந்தாக டெட்ராசைக்ளின் பயன்படுத்தப்படுகிறது.
 • அசித்திரோமைசின் மாத்திரைக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது ஏனெனில் அது ஒரு வேளை மட்டும் உட்கொண்டால் போதுமானது.
 • கண்ணிமைகளில் வடு ஏற்பட்டுவிட்டால் இமைமயிர்களின் ஒழுங்கில்லா நிலையை சரி செய்யவும் குருட்டுதன்மையை தவிர்க்கவும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

நோய்தொற்று இயல்

 • உலகளவில் இத்தொற்று 80 மில்லியன் மக்களிடம் உயிர்ப்புள்ளதாக இருக்கிறது.
 • சில இடங்களில் இந்த நோய்த்தொற்று 60-90 விழுக்காடு வரை குழந்தைகளையே பாதித்துள்ளது. அவர்களைத் தவிர்த்து ஆண்களை விட பெண்களுக்கே இந்த தொற்று அதிகமாக உள்ளது, காரணம் குழந்தைகளிடம் அவர்களுக்குள்ள நெருக்கம்.
 • சுமார் 2.2 மில்லியன் மக்களிடம் உள்ள பார்வைக் குறைவுக்கு காரணம் இந்த நோய்த்தொற்று தான், அதில் சுமார் 1.2 மில்லியன் மக்களுக்கு குருட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளது.
 • இந்த நோய் பொதுவாக ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள 53 நாடுகளை சேர்ந்த 230 மில்லியன் மக்களை தாக்கும் அபாயத்திலுள்ளது.
 • இது ஆண்டுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
 • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்று இந்த நோய்கள் வகைப்படுத்தப்ட்டுள்ளது.

ஆதாரம் : பார்வைியழப்பைத் தடுப்பதற்கான தேசியத்திட்டம்

2.96296296296
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top