பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / புறவிழித் தோல்கட்டி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புறவிழித் தோல்கட்டி

புறவிழித் தோல்கட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் நோய் மேலாண்மை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தீங்கற்றப் புறவிழித் தோல்கட்டி பிறவியிலேயே காணப்படும். இது பிறவி மிகை வளர்ச்சித் திசுக்களால் ஆனது. பெரும்பாலும் வெண்படலமும் இணைப்படலமும் சந்திக்கும் இடத்தின் மேற்பகுதியின் கீழ் இது காணப்படும். முழு வெண்படலத்தின் உள்ளும் அல்லது இணைப்படலத்தில் மட்டும் அரிதாக இது இருக்கும். திசுக்கட்டியில் வெளித்தோல் இடைத்தோல் திசுக்கள் வேறுபட்ட விகிதத்தில் கலந்திருக்கும். வெளித்தோல் தொங்கு தசைகள், தோல், வியர்வைச் சுரப்பி, இணைப்புத் திசு, தசை, பல், கொழுப்பு, கண்ணீர் சுரப்பி, எலும்பு, குருத்தெலும்பு, இரத்தக் குழல் அல்லது நரம்புத் திசு ஆகியவற்றையும் இக்கட்டி கொண்டிருக்கலாம்.

இருக்கும் இடத்தைப் பொறுத்துத் தோல் கட்டிகளை மூன்று பெரும் வகையாகப் பகுக்கலாம்:

வெண்வெளிப்படல சந்திப்பு: கட்டி, சந்திப்பின் இருபுறமுமாக அமைந்துள்ளது. இதுவே பொதுவான வகையாகும். பெரும்பாலும் மேலோட்டமானதாக இருந்தாலும் சில வேளைகளில் உள் அமைப்புகளையும் பாதிக்கக் கூடும்.

வெண்படலம்: இவ்வகைக் கட்டி வெண்படலத்தை மேலோட்டமாகவே பாதிக்கும். இது வெண்வெளிப்படல சந்திப்பு, டெசமெட் படலம் மற்றும் உள்ளடுக்கு செல்லைப் பாதிப்பதில்லை.

விழிக்கோள முன்பகுதி: விழிக்கோளத்தின் முன் பகுதி முழுமையையும் கட்டி பாதிக்கும். வெண்படலத்தில் இக்கட்டி வெளிர்மஞ்சள் கட்டியாக மாறி கருவிழி, பிசிர்ப்பொருள் மற்றும் விழியாடியைப் பாதிக்கும்.

லிப்போடெர்மாய்டில் அடிப்போஸ் திசுக்களைச் சுற்றி அடித்தோல் போன்ற இணைப்புத் திசுக்கள் இருக்கும். லிப்போடெர்மாய்டுகள் மென்மையான, மஞ்சள் நிற நகரும் சார் வெண்படல திரட்சிகளாகும். இவை பொதுவாக வெண்வெளி படல சந்திப்பில் அல்லது புறக் கண்மூலையில் இருக்கும்.

நோயறிகுறிகள்

புறவிழித் தோல்கட்டி பிறப்பிலேயே இருக்கும். ஆனால் வளர்ச்சியின் முதல் அல்லது இரண்டாவது பத்தாண்டுகளிலேயே இனங்காண இயலும். ஒருவர் வளர்ந்து வரும்போது இவை பெரிதாகி வரும்.

இவை மெதுவாகப் பெரிதாகும், குறிப்பாகப் பருவம் அடையும் போது. அல்லது உறுத்தல் அல்லது காயத்தினாலும் பெரியதாகும். கட்டி பெரிதாகும் போது பார்வை வளர்ச்சியற்ற சோம்பல் கண் காணப்படும். ஒளிச்சிதறல் குறைபாடு ஏற்பட்டு விழித்திரையில் கூரிய குவிதல் உருவாகாது போகும். அல்லது பார்வை அச்சை அது தடுக்கும்.

பெரும்பாலான நோயாளிகளுக்கு 16 வயதுக்கு முன்னரே வெளிப்படும். அறிகுறிகளில் அடங்குவன:

- மோசமான பார்வை அல்லது பார்வைக் குறைவு

- கண்ணில் வெளிப்பொருள் உணர்வு

- விழி நிறை விரிவு

- உருவழிவு

காரணங்கள்

புறவிழி தோல்கட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காணப்படுகிறது. அறிந்த நச்சுகளோடோ, உறுத்தல் பொருட்களோடோ தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

புறவிழி தோல்கட்டி உருவாக்கம் பற்றிப் பல கொள்கைகள் கூறப்படுகின்றன:

- ஆரம்பக் கட்ட வளர்ச்சிப் பிழையால் கண் நரம்பின் விளிம்புக்கும் மேற்பரப்பு கருவெளிப்படலத்துக்கும் நடுவில் இருக்கும் கருநடுப்படலத்தில் நிகழ்ந்த திசுமாற்றமே காரணம் என ஒரு கொள்கை கூறுகிறது.

- கரு வளர்ச்சியில் விழி அமைப்பின் சுற்றுப்புறம் உருவாகி வரும்போது ஆதி கரு செல்களில் நிகழ்ந்த இயல்பற்ற ஒதுக்கமே காரணம் என்று இன்னொரு பொறிநுட்பம் கூறுகிறது.

ஒரு சில புறனடைகளைத் தவிரப் பொதுவாகப் புறவிழித் தோல்கட்டி கொடி வழியாகக் கொண்டுசெல்லப் படுவதில்லை.

கோல்டன்ஹர் நோய்த்தாக்கம் (விழி-காது-முள்ளெலும்புப் பிறழ்வு): இதில் மண்டலக் கோளாறுகளுடன் வெண் வெளிப்படல சந்திப்புத் தோல்கட்டிகள் பல்காரணி வடிவத்துடன் குடும்பத்தில் மரபுவழியாகத் தொடர்ந்து ஏற்படும்.

வளையவடிவ வெண் வெளிப்படல சந்திப்புத் தோல்கட்டிகள் மற்றும் வெண்படலத் தேய்வு வடிவம் ஆகிய இரு அரிய வகைத் தோல் கட்டிகள் பல குடும்ப உறுப்பினர்களிடம் காணப்படுகிறது.

நோய்கண்டறிதல்

மருத்துவ ரீதியான குணங்களைக் கொண்டே தோல்கட்டி கண்டறியப்படுகிறது.

தோல்கட்டி கூம்பு வடிவத்துடன், சதைப்பிடிப்புடன் இருக்கும். மேலும் மேலோட்டமான இரத்தக் குழாய்களும், கெராட்டினாக்கமும், மயிர்க்கால்களும், பிசிறும் காணப்படலாம்.

பொதுவாகத் தோல்கட்டி ஒற்றையானதும் ஒருபக்கமானதுமான  இளஞ்சிவப்பு-வெண்-சாம்பல் திரட்சியாகும். 1-5 மி.மீ. அளவுடையது. பெரும்பாலான புறவிழி தோல்கட்டிகள் வெண்வெளிப்படல சந்திப்பின் மேற்பகுதியின் கீழ் அமைந்திருக்கும். மருத்துவ ரீதியான காட்சி பெரிதும் வேறுபடுவதாகும். இவை திரளாகவும், இருபக்கமாவையாகவும், நுண் சிறு அல்லது வெண்படலத்தை மறைக்கும் அளவுக்குப் பெரிதாகவும் இருக்கலாம்.

அரிதாக, வெண்விழிப்படலம் அல்லது விழிக்கோள இணைபடலத்தில் மட்டுமே காணப்படலாம்.

தோல்கட்டியோடு தொடர்புடைய பின் வரும் விழிக்கோளாறுகளும் காணப்படலாம்:

- இமை முழுத்தடிப்புக் குறைபாடு

- கருவிழி மற்றும் விழிநடுப்படல முழுத்தடிப்பு

- கருவிழி இல்லாமை

- சிறு விழிகோளம்

- தியோன் மாறுகண் நோய்த்தாக்கம் மற்றும் பிற விழி இயக்கக் கோளாறுகள்.

- கண்ணீர் நாளக் குறுக்கம்.

- வெண் வெளிப் படலத் துருத்தல்

தொடர்புடைய மண்டலம்சார் கோளாறுகள்:

- கோல்டன்ஹர் நோய்த்தாக்கம்: வெண்வெளிப் படல சந்திப்புத் தோல்கட்டிகள் முன்காது இணையுறுப்புகள் மற்றும் காது துளைப்புண்களோடு தொடர்புடையனவாக உள்ளன. பிற கோளாறுகளில் அடங்குவன வருமாறு: முகத்தின் ஒருபுறத்தில் கீழ் அரைப் பகுதி சரிவர உருவாகாமல் இருத்தல், வெளிக்காது உருவாக்கக் குறைபாடு, மற்றும் முள்ளெலும்புக் கோளாறுகள் (இணைந்த கழுத்து முள்ளெலும்பு, அரைக்கோள முள்ளெலும்பு, பிளந்த முள்ளெலும்பு, இடைதிருகல் கோளாறுகள், மற்றும் முதல் கழுத்து அட்லஸ் முள்ளெலும்பு இணைந்திருத்தல்). வெண் வெளிப்படல சந்திப்பின் கீழ்-மேல் கால்பகுதியில் புறவிழி தோல்கட்டி இருபுறமாக அமைத்திருக்கும். இது 25% நேர்வுகளில் இருபுறமானதே. 50% நேர்வுகளில் மேல்நெற்றிசார் கால்பகுதியில் ஒரு கண்சவ்வடி லிப்போதோல்கட்டி இருக்கக்கூடும். இந்த லிப்போதோல்கட்டி புறவிழி தோல்கட்டியுடன் கலக்கலாம்.

அசாதாரணமான அகல வாய், சிறிய தாடை, பல் அமைப்புக் கோளாறுகள் மற்றும் முக சமச்சீர் இன்மை ஆகியவை முக அமைப்புக் குறைபாடுகளில் அடங்கும்.

இதய இரத்தக் குழல், சிறுநீரக, பிறப்புச் சிறுநீரக மற்றும் இரைப்பைக்குடல் மண்டலங்களில் தொடர்புடைய மண்டலம்சார் கோளாறுகள் இருக்கலாம்.

- SCALP நோய்த்தாக்கம்: SCALP என்ற சுருக்கப்பெயரில் பின்வரும் அபூர்வமான மருத்துவக் கண்டுபிடிப்புகள் அடங்கியுள்ளன: தோல்மெழுகு மச்சக்கட்டிகள் (Naevus Sebaceous-பொதுவாகத் தலையோட்டிலும் முகத்திலும் உண்டாகும் தீங்கற்றத் திசுக்கட்டி), நடு நரம்பு மண்டலக் கோளாறுகள் (Central nervous system malformations), பிறவித் தோல் வளர்ச்சிக்குறைபாடு (Aplasia cutis congenital – பிறப்பின் போது ஒரு அல்லது பரவலான பகுதியில் தோலின் ஒரு பகுதி இல்லாமல் இருப்பது), வெண் வெளிப்படல சந்திப்புத் தோல்கட்டி (Limbal dermoid) மற்றும் நிறமி மச்சக்கட்டி (Pigmented naevus).

கீழ்க்காணுபவற்றில் இருந்து புறவிழி தோல்கட்டியை வேறுபடுத்திக் காண வேண்டும்:

-  அயல் பொருள் குருணைக்கட்டி

-  ஸ்டேபிலோமா

-  இரத்தநாளக் கட்டி

-  வெளிவெண்படலம்

-  காயம் அல்லது தொற்றினால் வெண்படல வடு

- இயல்பற்ற விழிப்படலம் (விழிக்கோள இணைப்படலத்தில் சிறகு போன்ற முக்கோணப் படலம்)

பிம்ப ஆய்வுகள்:

- காந்த ஒத்திசைவு பிம்பம் (MRI): இணைப்படல வளைவு அல்லது பக்கக் கண்மூலைக்குள் பரவி விழிக்கோளக் கொழுப்புடனும் விழி மிகைத் தசைகளுடனும் பின்னிக் கிடக்கும் புண்களை வேறுபடுத்திக்காண எம்.ஆர்.ஐ. பயனுள்ளதாக இருக்கும்.

திசுவியல் கண்டுபிடிப்புகள்:

புறவிழி தோல்கட்டியில் இடமாறிய செல் திசுக்கள் இருக்கும். அவற்றில் புறத்தோல் தொங்குதசைகளும், கொழுப்புத் திசுக்களும், கண்ணீர்ச் சுரப்பித் திசுக்களும், மென்மையான வரித்தசைகளும், நரம்புத் திசுக்களும், பல், எலும்பு, குருதெலும்புகளும் இருக்கும். மேலும் நிணச் சுரப்பி மற்றும் இரத்தக்குழல் மூலகங்களும் இருக்கலாம். தோல்கட்டியின் பரப்பில் வெண் அல்லது இணைப்படல புறத்தோல் திசுக்கள் காணப்படும்.

நோய் மேலாண்மை

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.

மேலாண்மையில் அடங்குவன:

மருத்துவ சிகிச்சை:

- மசகுச் சொட்டுகளும் களிம்புகளும்: வெளிப்பொருள் உணர்வைக் குறைக்க இவை உதவுகின்றன.

- உறுத்தும் பிசிர்ப்பொருளை முறையாக அகற்றுதல்.

அறுவை சிகிச்சை:

அறுவை சிகிச்சையே முக்கியமானது. அதற்கான அறிகுறிகள்:

- பார்வைப் பாதிப்பு

- கடும் தோற்றப் பாதிப்பு

வடு ஏற்படுதல் போன்ற பிற சிக்கல்களை விடவும் பார்வை மற்றும் தோற்ற மேம்பாடுகளின் நன்மை அதிகமாக இருக்கும் போதே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

புறவிழி தோல்கட்டியை முற்றிலுமாக அகற்ற நினைப்பது தேவையற்றது. கட்டி கண் அமைப்பின் உள் ஊடுறுவி இருக்கக் கூடுமதால் முற்றிலும் அதை அகற்ற வேண்டுமானால் ஆழமாக அறுவை சிகிச்சை செய்யும் அபாயம் நேரிடலாம்.

புறவிழி தோல்கட்டியை அகற்றும் முறை:

மேலோட்டமான புறவிழி-கருவிழிப் படல அறுவை: விழிகோளத்தின் பரப்பில் இருக்கும் புறவிழி தோல்காட்டி அகற்றப்பட்டு திறந்த பகுதி பின்வருமாறு மூடப்படும்:

- வெண்படல மடல்: அடுத்திருக்கும் வெண்படலம் தளர்த்தப்பட்டு குறைப்பட்ட பகுதியுடன் இணைத்துத் தைக்கப்படும்.

-  மடிப்புக் கருவிழியமைப்பு: கருவிழியின் ஆழ் கீறலை மூட இது செய்யப்படுகிறது.

-  கருப்படல ஒட்டு: புறவிழிப்படலத்தில் உள்ள பெரிய திறப்புகளை அடைக்க தனி அல்லது பன் அடுக்கு கருப்படல ஒட்டு பயன்படுத்தப்படுகிறது. தையல் அல்லது ஃபைப்ரின் பசை இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.98412698413
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top