பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஹெபடைடிஸ் பி வைரஸ்

ஹெபடைடிஸ் பி பாதிப்பு குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

 1. ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிக்காமல் இருக்க அனைத்து வயதினரும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம்
 2. கல்லீரல் பாதிப்புக்கு குடிப்பழக்கம், கல்லீரலில் கொழுப்புப் படிதல், ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி வைரஸ் உள்ளிட்டவை காரணமாகின்றன.
 3. இதில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பின்னரே கல்லீரல் பாதிக்கப்பட்டதன் அறிகுறிகள் தெரியவரும். ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி வைரஸ் ரத்தம், உடலுறவு ஆகியவற்றின் மூலமாகப் பரவுகிறது.
 4. மேலும் இந்த வைரஸ்கள் கருவுற்ற தாய்க்கு இருந்தால் அது பிறக்கப் போகும் குழந்தைக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே குழந்தைப் பிறந்த பின்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
 5. ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிக்காமல் இருக்க தடுப்பு மருந்து உள்ளது. தற்போது இந்த தடுப்பு மருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்துடன் சேர்த்து வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
 6. எனவே அவர்கள் ஹெபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் உள்ளதா எனப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
 7. இந்தப் பரிசோதனைக்கு கட்டணம் குறைவு, அதோடு இந்த வைரஸ் பாதிக்காமல் இருக்க எல்லா வயதினரும் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம்.
 8. மேலும் இந்த வைரஸ் ரத்தக் காயங்கள் மூலம் பரவும் என்பதால் ஒருவர் பயன்படுத்திய சீப்பு, பிளேடு, பல்துலக்கி உள்ளிட்டவற்றை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது.
 9. கல்லீரல் பாதிப்பைத் தவிர்க்க சர்க்கரை நோயாளிகள், அதிக கொழுப்பு உள்ளவர்கள், மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
 10. மேலும் பழங்கள், காய்கறிகள், சிறு தானியங்களை உள்ளிட்டவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம்: கல்லீரல் மருத்துவ நிபுணர், அரசு பொது மருத்துவனை சென்னை

2.89887640449
johnpaul Jul 27, 2019 04:40 PM

இதற்க்கு கீழாநெல்லி இலை எப்படி எவ்வாறு உதவும் ‌அதை எப்படி உபயோகிப்பது

Saravanan Nov 12, 2016 01:24 PM

Hebapatis பி அறிகுறிகள் என்ன சார் நாங்கள் trichyil வசிக்கிறோம் இதற்கான சிகிச்சை trichyil உண்டா சார்

malai May 31, 2016 09:11 AM

எனக்கு ஹெபடைடிஸ் பி வைரஸ் 13.8க்ரம் +positive உள்ளது ...என்ன ஆகும் .

TASNA Feb 17, 2016 04:40 PM

ஆம். மேலும் விவரங்களுக்கு கல்லீரல் மருத்துவ நிபுணரை அணுகவும். நன்றி

ஜான் Feb 17, 2016 02:39 PM

இந்தநோய் தாக்கம் உள்ளவர்களை குணபடுத்த முடியுமா? மேலும் நோய் முற்றிய பின் உடலில் என்ன மாற்றம் ஏற்படும் ?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top