Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு

Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு
india_flag

Government of India



MeitY LogoVikaspedia
ta
ta

Loading content...


  • Ratings (3.17)

தொண்டை வீக்க நோய் (ஸ்றெப் துரோட்) - சிகிச்சை முறை

Open

Contributor  : Bagya lakshmi19/07/2020

Empower Your Reading with Vikas AI 

Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.

தொண்டை வீக்க நோய்

தொண்டை வீக்க நோய் என்பது, பக்டீரியா, அல்லது ஸ்றெப்டொகோக்கஸ் என்றழைக்கப்படும் கிருமிகளால் உண்டாகுகின்றது. இதனுடைய முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சல் ஆகும். தொண்டை வீக்க நோய், 4 முதல் 8 வயது பிள்ளைகளில் மிகவும் சாதாரணமாகவும், 2 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் அபூர்வமாகவும் ஏற்படும். பிரிவு A பீட்டா- ஹீமொலைட்டிக் ஸ்றெப்டோகோக்கஸ் (GABS) இனாலுண்டாகும் ஒரு வகை தொண்டை வீக்க நோய் உடலின் மற்றப் பாகங்களிலும் சிக்கலை உண்டாக்கலாம். மற்ற வகை தொண்டை வீக்க நோய்கள் இந்தச் சிக்கல்களை உண்டாக்காது.

அடையாளங்களும் அறிகுறிகளும்

  • தொண்டை எரிச்சல்
  • காய்ச்சல்
  • உங்கள் பிள்ளை, வலி காரணமாக உணவு உண்ணவோ அல்லது பானங்கள் குடிக்கவோ மறுக்கலாம்.
  • உங்கள் பிள்ளைக்கு விழுங்குவதில் கஷ்டம் இருக்கிறது
  • உள்நாக்கு பெரிதாகி சிவந்திருக்கிறது, சில வேளைகளில் வெள்ளை-மஞ்சள் நிற மேற்பூச்சால் மூடப்பட்டிருக்கிறது.
  • சில பிள்ளைகளுக்கு, தலைவலி, குமட்டல், வாந்தி, அடிவயிற்றில் வலி, மற்றும் தசை வலி போன்ற வேறு அறிகுறிகளும் இருக்கலாம்.
  • தொண்டை வீக்க நோயின்(ஸ்றெப்) அறிகுறிகள், வைரஸ் அல்லது வேறு நோய்களால் உண்டாகும் தொண்டை எரிச்சலின் அறிகுறிகளுக்கு ஒத்ததாயிருக்கிறது. இதனால் தான், ஒரு உடல் நல பராமரிப்பளிப்பவர், நோயின் சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக , உங்கள் பிள்ளையை பரிசோதனை செய்யவேண்டும்.

உங்கள் பிள்ளைக்கு மருத்துவர்கள் செய்யக்கூடியதென்ன?

தொண்டையொற்றி

உங்கள் பிள்ளையின் தொண்டை வலிக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க, மருத்துவர் தொண்டையொற்றிப் பரிசோதனை செய்வார். அதாவது, மருத்துவர் ஒரு நீண்ட மருந்திட்ட பஞ்சுறையை உபயோகித்து உங்கள் பிள்ளையின் தொண்டையின் பக்கங்களிலும் பின்புறத்திலும் கசியும் திரவத்தைத் துடைப்பார். பின்பு தொண்டையொற்றியானது பிரிவு A தொற்று நோய்க்கான (ஸ்ரெப் ஜேர்ம்ஸ்) பரிசோதனை செய்யப்படும்.

சில சிகிச்சை நிலையங்கள் தொண்டை வீக்க நோயைக் கண்டு பிடிப்பதற்காக விரைவான சோதனையை செய்வார்கள். நோயுள்ளவர்களுக்கு மாத்திரம் பயனுள்ளதாயிருக்கும். பரிசோதனையின் முடிவு எதிர்மறையானதாக இருந்தால், தொண்டை வீக்க நோயில்லையென அர்த்தப்படுத்தாது.

அன்டிபையோடிக்ஸுகள்

தொண்டை வீக்க நோய் மருந்துகள் எடுக்காமலேயே நிவாரணமடையுமென்றாலும், GABS உள்ள தொற்றுநோய்கள், சிகிச்சை செய்யப்படாவிட்டால் சிக்கலான நோய்களை உண்டாக்கலாம். தொண்டையொற்றி பரிசோதனை GABS நோய் உண்டென்று காண்பித்தால், உங்கள் பிள்ளைக்கு, மருத்துவர் வாய் மூலமாக உட்கொள்ளும் அன்டிபையோடிக்ஸ் மருந்துகளை எழுதிக்கொடுப்பார். தொண்டை வீக்க நோயின் மற்ற வகைகளுக்கு அன்டிபையோடிக்ஸ் மருந்துகள் தேவைப்படாது.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

  • காய்ச்சலைக் கண்காணியுங்கள் மற்றும் அன்டிபையோடிக்ஸ் மருந்து முழுவதையும் உபயோகியுங்கள்
  • அன்டிபையோடிக்ஸ் மருந்து கொடுக்க ஆரம்பித்த 3 நாட்களுக்குள் வழக்கமாக, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி குறைய ஆரம்பிக்கும். நோய் திரும்பவும் வராதிருக்கவும், அன்டிபையோடிக் எதிர்ப்புசக்தியை இழக்காமலிருக்கவும், நோயின் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும் அன்டிபையோடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிப்பது முக்கியம்.
  • காய்ச்சல் மற்றும் வலிக்காக உங்கள் பிள்ளைக்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா, அல்லது வேறு பிரான்டுகள்) அல்லது ஐபியூபுரோஃபென் (அட்வில், மோட்ரின், அல்லது வேறு பிரான்டுகள்) கொடுக்கப்படலாம். உங்கள் பிள்ளைக்கு ASA (அசெடில்சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின்) கொடுக்க வேண்டாம்
  • உங்கள் பிள்ளைக்கு மென்மையான உணவுகள் மற்றும் ஒரு நீராகார உணவு கொடுங்கள்
  • தொண்டை வீக்க நோயுள்ள உங்கள் பிள்ளைக்கு உணவு உண்பது மற்றும் பானங்கள் குடிப்பது வேதனையைக் கொடுக்கலாம். உங்கள் பிள்ளை மேலும் சௌகரியமாக உணர்வதற்காக, பின்வருவனவற்றை முயற்சி செய்து பார்க்கவும்:
  • உங்கள் பிள்ளை விழுங்குவதற்குக் கஷ்டப்பட்டால், விழுங்குவதற்கு இலகுவான சூப், ஐஸ் கிரீம், புடிங், அல்லது யோகர்ட் போன்ற மென்மையான உணவுகளைக் கொடுக்கவும்.
  • அதிகளவு நீராகாரங்கள் கொடுக்கவும். உறிஞ்சும் குழாயினால் உறிஞ்சிக் குடிப்பது அல்லது உறிஞ்சிக் குடிக்கும் கோப்பையில் குடிப்பது உதவி செய்யக்கூடும்.
  • உங்கள் பிள்ளை 1 வயதுக்கு மேற்பட்டவளாயிருந்தால், தொண்டையை இதமாக்குவதற்கும் மற்றும் இருமலை குறைப்பதற்கும் பாஸ்சுரைஸ்ட் செய்யப்பட்ட தேன், 1 முதல் 2 தேக்கரண்டி (5 முதல் 10 mL) கொடுத்து முயற்சி செய்து பார்க்கவும்.
  • வளர்ந்த பிள்ளைகள் சூடான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கலாம்.
  • ஐஸ் கட்டிகள் மற்றும் தொண்டைக்கு இதமளிக்கும் இனிப்பு வகைகள், வளர்ந்த பிள்ளைகளுக்கு அல்லது பதின்ம வயதுப் (டீன்ஸ்) பிள்ளைகளுக்கு கொஞ்சம் நிவாரணமளிக்கலாம். சிறு பிள்ளைகளுக்கு அவற்றைக் கொடுக்கவேண்டாம், ஏனென்றால் அவை அவர்களின் தொண்டையில் சிக்கக்கூடும் ஆபத்துள்ளது.
  • தொற்றுநோய் பரவுவதை குறையுங்கள்
  • தொண்டை வீக்க நோய், உங்கள் குடும்ப அங்கத்தினர் மற்றும் உங்கள் பிள்ளையின் சக மாணக்கர்களுக்கு விரைவாகப் பரவும். உங்கள் வீட்டில் வசிக்கும் பிள்ளை அல்லது பெரியவர்கள் எவராவது அடுத்த 5 நாட்களில் அதே அறிகுறிகளைக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் தொண்டையொற்றிப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். உங்கள் பிள்ளை அன்டிபையோடிக் மருந்து உட்கொண்டு 24 மணி நேரங்களின் பின் தொற்று நோயைப் பரப்பக்கூடிய நிலையிலிருக்கமாட்டாது. அதாவது, உங்கள் பிள்ளை தான் நிவாரணமடைந்திருப்பதாக உணர்ந்தால், 1 நாளைக்குப்பின், பாடசாலைக்குத் திரும்பப் போகலாம்.

தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான வேறு குறிப்புகள்

  • மிதமான சூடுள்ள சோப் நீரில் அல்லது அல்கஹோல் சேர்ந்த ஹான்ட் றப் கொண்டு கைகளைக் கழுவவும்.
  • உங்கள் குடிக்கும் கிளாஸ்கள் அல்லது உணவு உண்ணும் பாத்திரங்களை உங்கள் நண்பர்களுடன் அல்லது சகமாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
  • உங்கள் பிள்ளையின் உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் குடிக்கும் கிளாசுகளை சூடான சோப் நீரில் அல்லது டிஷ்வோஷரில் கழுவப்படுதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் முழங்கை மடிப்புக்குள் தும்முங்கள் அல்லது இருமும் போது உங்கள் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள்
  • முத்தமிடுதல் மற்றும் நெருக்கமான முகத்தொடர்பை தவிருங்கள்.

சிக்கல்கள்

தொண்டையில் சீழ்பிடித்த கட்டி

தொண்டை வீக்க நோயின் ஒரு சிக்கல், தொண்டையில் சீழ்பிடித்த கட்டி (தொண்டைத் திசுக்களின் உட்பகுதியில் சீழ் சேகரிக்கப்பட்டிருத்தல்) உருவாவதாகும். தொண்டையில் சீழ் பிடித்த கட்டிக்கான அறிகுறிகள் பெரும்பாலும், கடும் காய்ச்சல், அடைத்த குரல், வாயைத்திறப்பதில் சிரமம், உமிழ்நீர் அதிகமாகச் சுரத்தல், வாய்நீர் வடிதல், மற்றும் சிலவேளைகளில் கழுத்து வீக்கம் என்பனவாகும். இந்த அறிகுறிகள் தோன்றினால், மருத்துவ கவனிப்பை நாடவும்.

வேறு சிக்கல்கள்

  • அரியதாக இருப்பினும், வேறு சிக்கல்களும் உண்டாகலாம். அப்படிப்பட்ட ஒரு சிக்கல் வாதக் காய்ச்சலாகும். இது, தோல், மூட்டுகள், இதயம், மற்றும் மூளை என்பனவற்றை உட்படுத்தும் வாதக்காய்ச்சலாகும்.
  • வேறு சிக்கல்கள், மூட்டு வீக்கம் (கீல் வாதம்) மற்றும் சிறுநீரக வீக்கம் என்பனவற்றை உள்ளடக்கும்.
  • உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்பளிப்பவரை எப்போது தொடர்பு கொள்ள வேண்டும்
  • பின்வரும் நிலைமைகளின்போது உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள்:
  • அன்டிபையோடிக்ஸ் சிகிச்சை ஆரம்பித்த 3 நாட்களின் பின் காய்ச்சல் குறையவில்ல.
  • உங்களுக்கு வேறு கவலைகள் அல்லது கேள்விகள் இருக்கின்றன.
  • உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல், சொறி, மூட்டு வீக்கம்இருக்கின்றது அல்லது அதிகமாக மூச்சு வாங்குகிறது.
  • பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லுங்கள், அல்லது தேவைப்பட்டால், 911 ஐ அழையுங்கள்: உங்கள் பிள்ளை
  • உண்ணவோ அல்லது குடிக்கவோ முடியவில்லை மற்றும் உடல் நீர் வறட்சி ஏற்படுகிறது.
  • சுவாசிப்பதில் கஷ்டமிருக்கிறது
  • கடும் நோயாளி போல தோற்றமளிக்கிறது.

முக்கிய குறிப்புக்கள்

  • தொண்டை வீக்க நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சலாகும்.
  • உங்கள் பிள்ளைக்கு தொண்டை வீக்க நோய் இருப்பதாக சந்தேகித்தால், உங்கள் உடல் நல பராமரிப்பளிப்பவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
  • நோய் திரும்ப வருவதையும் சிக்கல்களையும் தவிர்ப்பதற்கு அன்டிபையோடிக்ஸ் மருந்து முழுவதையும் உபயோகிப்பது மிகவும் முக்கியம்.
  • மென்மையான உணவுகளையும் குளிர்ந்த பானங்களையும் மற்றும் வலியைக் குறைப்பதற்கு வலி மருந்துகளையும் உபயோகியுங்கள்.
  • எனைய குடும்ப அங்கத்தவரும் நெருங்கிய தொடர்புள்ளவர்களும் அதேபோன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அவர்கள் உடல் நலபராமரிப்பு வழங்குபவரை சென்று பார்ப்பதை உறுதி செய்யுங்கள்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையம்

Related Articles
ஆரோக்கியம்
டெங்கு - சிகிச்சை முறை

டெங்கு காய்ச்சல் தடுக்கும் வழிகள் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
சிறுநீரக நோய்களை எப்படி தடுப்பது

சிறுநீரக நோய்கள் வராமல் தடுப்பதற்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
காற்றினால் பரவும் நோய்த்தொற்றுகள்

காற்றினால் பரவும் நோய்த்தொற்றுகள் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை

ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
அம்மை நோய் - உணவு முறை மற்றும் சிகிச்சை

அம்மை நோய் வராமல் தடுப்பதற்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
வெள்ளை அணு புற்று நோய்

இந்த தலைப்பு வெள்ளை அணு புற்று நோயின் அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதிக்கிறது.

தொண்டை வீக்க நோய் (ஸ்றெப் துரோட்) - சிகிச்சை முறை

Contributor : Bagya lakshmi19/07/2020


Empower Your Reading with Vikas AI 

Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.



Related Articles
ஆரோக்கியம்
டெங்கு - சிகிச்சை முறை

டெங்கு காய்ச்சல் தடுக்கும் வழிகள் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
சிறுநீரக நோய்களை எப்படி தடுப்பது

சிறுநீரக நோய்கள் வராமல் தடுப்பதற்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
காற்றினால் பரவும் நோய்த்தொற்றுகள்

காற்றினால் பரவும் நோய்த்தொற்றுகள் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை

ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
அம்மை நோய் - உணவு முறை மற்றும் சிகிச்சை

அம்மை நோய் வராமல் தடுப்பதற்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
வெள்ளை அணு புற்று நோய்

இந்த தலைப்பு வெள்ளை அணு புற்று நோயின் அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதிக்கிறது.

Lets Connect
Facebook
Instagram
LinkedIn
Twitter
WhatsApp
YouTube
MeitY
C-DAC
Digital India

Phone Icon

+91-7382053730

Email Icon

vikaspedia[at]cdac[dot]in

Copyright © C-DAC
vikasAi