பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

எலி ஜுரம்

எலி ஜுரத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

லெப்டோஸ்பைரோஸிஸ்

லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது ஸ்பைரோகீட்ஸ் என்ற சுருவடிவ பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சலாகும். பொதுவாக, மிருகங்களைத் தாக்கக்கூடிய இந்த நோய், மனிதர்களையும் தாக்கக்கூடும். சிலருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல்போல், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாமல் சரியாகிவிடும். ஒரு சிலருக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

மனிதர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்.

 • பாக்டீரியவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் நமது உடலில் குறிப்பாக தோலில் படும்போது, வெட்டுக்காயம், சிராய்ப்புகள் வழியாகவும், கண்கள் மூலமாகவும் உடலுக்குள் கிருமிகள் நுழைந்துவிடும்.
 • கிருமிகள் கலந்த தண்ணீரில் நீண்டநேரம் இருக்க நேரிட்டால், வெட்டுக் காயமோ, சிராய்ப்புகளோ இல்லாவிட்டாலும்கூட தோல் வழியே கிருமிகள் உள்ளே சென்றுவிடுட்ம.
 • பாக்டீரியா கிருமிகள் கலந்த தண்ணீரைக் குடித்தாலும், கிருமிகள் கலந்த காற்றைச் சுவாசிப்பதாலும் நோய் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதாலும் நோய் பரவும்.
 • கிராமப் பகுதிகளில் மாடுகள், பன்றிகள் போன்ற விலங்குகளிடம் இருந்தும், நகர்ப்புறங்களில் எலி மற்றும் நாய்களில் இருந்தும் மனிதர்களுக்கு இந்தக் கிருமிகள் பரவி நோயை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒரு மனிதரிடம்ம் இருந்து இன்னொரு மனிதருக்கு இந்த பாக்டீரியா கிருமிகள் பரவாது.
 • இந்தியா போன்ற வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில், இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறது. ஏனென்றால், அதிக வெப்பமான தட்பவெப்ப நிலை, கிருமிகள் நீண்ட நேரம் உயிருடன் இருக்க உதவுகிறது.

நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள்

 • கால்நடை மருத்துவர்கள்
 • சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளிகள்
 • கசாப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்
 • விவசாயிகள்
 • சுரங்கங்களில் வேலை செய்பவர்கள்
 • நீச்சல் வீரர்கள் மற்றும் ஏரி, குளம் போன்ற தேங்கிய நீர்நிலைகளில் மீன் பிடிப்பவர்கள்
 • தகுந்த சுகாதாரம் இல்லாமல் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள்.

நோயின் அறிகுறிகள்

பாக்டீரியா கிருமிகள் உடலுக்குள் நுழைந்த ஏழு முதல் பன்னிரெண்டு நாள்கள் கழித்த நோயின் அறிகுறிகள் தென்படும். இருவேறு பருவங்களாக நோய் வெளிப்படும். முதல் வாரத்தில், குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை ஏற்படும்.

பொதுவாக, பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு நோயின் தீவிரம் குறைவாக இருக்கும். அதன்பிறகு, சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை காய்ச்சல் இல்லாமல் இருக்கும். இரண்டாவது கட்டத்தில், கிருமிகள் பல்வேறு திசுக்களையும் உடல் உறுப்புகளையும் தாக்குவதால் பாதிப்பு ஏற்படும். சுமார் 4 முதல் 30 நாள்கள் வரை நோயின் அறிகுறிகள் நீடிக்கும். கல்லீரலும், சிறுநீரகமும் அதிகமாகப் பாதிக்கப்படும்.

மஞ்சள் காமாலை வருவது ஓர் அபாய அறிகுறியாகும். அத்தகைய நோய்க்கு வீல்ஸ் நோய்   என்று பெயர். இவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படலாம். மேலும் மூளைக் காய்ச்சல், கண்களில் பாதிப்பு போன்றவையும் ஏற்படலாம்.

பரிசோதனை

நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள், மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் ரத்தப் பரிசோதனைகளும், சிறுநீர்ப் பரிசோதனைகளும் செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள நீரை எடுத்தும் பரிசோதனை செய்யவேண்டும்.

சிகிச்சை

 • பெனிசிலின் போன்ற மருத்துகளை நோயின் ஆரம்ப நிலையிலேயே கொடுக்க வேண்டும்.
 • ரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
 • சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு ரத்தச் சுத்திகரிப்பு  (டயாலிஸிஸ்) செய்யவேண்டும்.

தடுக்கும் முறைகள்

 • எலி ஜுரத்தில் தப்பிக்கும் முதல் தடுப்பு நடவடிக்கையாக எலிகளை ஒழிக்கவேண்டும்.
 • விலங்குகளுடனோ அல்லது விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களில் வேலை செய்பவர்கள், உடல் முழுவதும் மூடக்கூடிய உடைகளை அணிய வேண்டும்.
 • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடவேண்டும்.
 • நோய் பரவும் இடங்களில் வசிப்பவர்களும், நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களும் முன்னெச்சரிகையாக மருந்துகளை முதலிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம்: தினகரன் நாளிதழ்

2.98412698413
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top