பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல் / காமாலை (மென்சுருளி நோய்)
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

காமாலை (மென்சுருளி நோய்)

காமாலை (மென்சுருளி நோய்) பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

இது வெய்லின் நோய் (Weil's disease) என்றும், 7-நாள் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. லெப்டோஸ்பைரோசிஸ் என்ற வகையைச் சார்ந்த பாக்டீரியாக்களால் இந்தத் தொற்று நோய் உண்டாகிறது. இது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கிறது.

விலங்குகளால் மனிதர்களுக்குப் பரப்பப்படும் மிகவும் பரவலான நோயாகும். பொதுவாக இந்தத் தொற்று விலங்குகளின் சிறு நீரால் அசுத்தமான தண்ணீர் மூலமாகவே மனிதர்களுக்குப் பரவுகிறது. தோலில் உள்ள ஆறாத புண்கள், கண்கள், சளிசவ்வுகளில் அசுத்த நீர் படும்போது தொற்று உண்டாகிறது.

பெரும்பான்மையான நோயாளிகளுக்குத் தலைவலி, குளிர், தசை வலி போன்ற சளி காய்ச்சல் அறிகுறிகளே தோன்றும். ஆனால் சில சமயம் அறிகுறிகள் மிகவும் கடுமையாகி, உறுப்புகள் செயலிழப்பு, இரத்த உட்கசிவு போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தும். கடுமையான காமாலை வெய்லின் நோய் (Weil's disease) எனப்படும்

நோயறிகுறிகள்

இலேசான அறிகுறிகளாவன:

 • அதிக அளவுக் காய்ச்சல்: பொதுவாக  38 - 40°C (100.4-104°F)
 • திடீர் தலைவலியும் குளிரும்
 • குமட்டலும் வாந்தியும்
 • பசியின்மை
 • தசை வலி, குறிப்பாக, கெண்டைக்கால் மற்றும் கீழ்முதுகு
 • விழிவெண்படல அழற்சி (கண்களில் அரிப்பும் சிவப்பும்)
 • இருமல்
 • வந்து மறையும் சொறி

கடுமையான அறிகுறிகள்:

 • மூளைக்காய்ச்சல்
 • அதிகக் களைப்பு
 • காது கேளாமை
 • சுவாசக் கோளாறு
 • இரத்த யூரியா மிகைப்பு

சிறுநீரக இடைத்திசுக் குழாய் நசிவினால் சிறுநீரகச் செயல் இழப்பும், சில வேளைகளில் கல்லீரல் அழற்சியும் இந்நோயின் கடுமையான வகையாகும். இதனை வெய்லின் நோய் அல்லது வெய்ல் அறிகுறி என்றும் அழைப்பர்.

காரணங்கள்

 • விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் லெப்டோஸ்பைரோசிஸ் என்ற ஒரு வகை பாக்டீரியாக்களால் இது உண்டாகிறது.
 • நீர் விளையாட்டுகளின் போது பாக்டீரியாக்களால் நீர் அசுத்தமடைந்திருந்தாலும் இந்நோய் ஏற்படும். வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர்களாலும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

நோய்கண்டறிதல்

பாக்டீரியாவுக்கு எதிர்பொருள் உள்ளதா என்று கண்டறிய இரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

பிற சோதனைகள் வருமாறு:

 • இயக்குநீர் இணைக்கப்பட்ட எதிர்பொருள் உறிஞ்சும் மதிப்பீடு (எலிசா)
 • பாலிமரேஸ் தொடர் வினை (பி.சி.ஆர்)
 • மேட் (நுண்காட்டி ஒட்டு சோதனை); இது ஓர் ஊனீர் சோதனை. இதுவே காமாலை கண்டறிதலில் அடைப்படை அளவீடாகக் கருதப்படுகிறது.

தடுப்புமுறை

மனிதர்களுக்கு அளிக்கும் தடுப்பூசி எதுவும் இல்லை.

சிகிச்சை

காமாலைக்குக் கீழ்வரும் மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது:

 • ஆம்பிசிலின்
 • அஸித்ரோமைசின்
 • செஃப்ட்ரியாக்சோன்
 • டாக்சிசைக்ளின்
 • பென்சிலின்

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம் (NHP)

2.88059701493
மாரிமுத்து Oct 19, 2018 11:41 AM

இந்த நோய்க்கு எவ்வளவு நாள் மருந்து சாப்பிட வேன்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top