பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / குறைபாடுகள் / உயிர்ச்சத்து பி 12 குறைபாடு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிர்ச்சத்து பி 12 குறைபாடு

உயிர்ச்சத்து பி 12 குறைபாடு பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

உயிர்ச்சத்து பி 12-ன் குறைபாட்டால் இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதே உயிர்ச்சத்து பி 12 குறைபாட்டு இரத்தச்சோகை எனப்படும்.  உடலில் போதுமான அளவுக்கு சிவப்பணுக்கள் இல்லாது இருக்கும் நிலையே இரத்தச்சோகை.

உயிர்ச்சத்து பி 12-ம் ஃபோலேட்டும்

உயிர்ச்சத்து பி 12-ம் ஃபோலேட்டும் இணைந்து உடல் சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. அவற்றிற்கு மேலும் பல முக்கியப் பணிகள் உண்டு:

உயிர்ச்சத்து பி 12, நரம்புமண்டலத்தை (மூளை, நரம்புகள் மற்றும் தண்டுவடம்) ஆரோக்கியமாக வைக்கிறது. பொதுவாக உயிர்ச்சத்து பி காணப்படும் உணவுப் பொருட்கள்:

 • இறைச்சி
 • முட்டை
 • பால்பொருட்கள்

கருவில் உள்ள குழந்தைக்கு பிறப்புக் குறைபாடுகளைக் குறைக்கும் ஃபோலேட்டு கர்ப்பிணிகளுக்கு முக்கியமானதாகும். கீழ்வரும் பச்சைக் காய்கறிகளில் ஃபோலேட்டு அதிகமாகக் காணப்படும்:

 • பச்சைப்பூக்கோசு
 • கிளைக்கோசு
 • பட்டாணி

நோயறிகுறிகள்

அடிப்படையான காரணத்தைப் பொருத்து இரத்தச்சோகையின் அறிகுறிகள் மாறுபடும்:

உயிர்ச்சத்து பி 12 குறைபாடு/ தீய இரத்தச்சோகை

உயிர்ச்சத்து பி 12 குறைபாட்டால் இரத்தச்சோகை ஏற்பட்டால் கீழ்வரும் அறிகுறிகள் தோன்றலாம்:

 • தோல் மஞ்சள் நிறமாதல்
 • புண்ணுடன் கூடிய சிவந்த நாக்கு
 • வாய்க்குள் புண்கள்
 • தொடு உணர்வில் மாற்றம்
 • பார்வைக் கோளாறு
 • எரிச்சல் உணர்வு
 • மனவழுத்தம்
 • மனநோய்

முதுமை மறதி — நினைவாற்றல், புரிதல் மற்றும், முடிவெடுத்தல் ஆகிய மனத்திறன்கள் குறைதல்

ஃபோலேட்டு குறைபாடு:

பொதுவான இரத்தச் சோகை அறிகுறிகளுடன், கீழ்க்காணும் ஃபோலேட்டு குறைபாட்டு அறிகுறிகளும் காணப்படும்:

 • தொடு அல்லது வலி உணர்வு போன்ற உணர்வு இழப்பு
 • தசை பலவீனம்
 • மனவழுத்தம்

காரணங்கள்

சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்நோய் சில ஆபத்தான காரணிகளுடன் இணைந்துள்ளது. அவற்றில் அடங்குவன:

 • வயது - தீய இரத்தச்சோகை முதுமையில் பரவலாகக் காணப்படுகிறது
 • பால் – தீய இரத்தச்சோகை ஆண்களை விட சற்று கூடுதலாகப் பெண்களைப் பாதிக்கிறது.
 • குடும்ப வரலாறு – மூன்றில் ஒருபங்கு இரத்தச்சோகை நோயாளிகளின் குடும்பத்திலும் இந்நிலை உள்ளவர் காணப்படுவதுண்டு.
 • தன்தடுப்பாற்றல் நிலை – அடிசன் நோய் அல்லது தோல்வெள்ளை நோய் போன்றவை இரத்தச்சோகையுடனும் பிற தன்தடுப்பாற்றல் நிலைகளோடும் தொடர்புடையவை.
 • உணவு – உடல் பி 12 உயிர்ச்சத்தை இரண்டில் இருந்து நான்கு ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும் அளவுக்குச் சேமித்து வைக்கும். ஆயினும் சேமிப்பைத் ஆரோக்கியமான அளவுக்குத் தக்க வைக்க உணவில் போதுமான பி 12 உயிர்ச்சத்து தேவைப்படுகிறது.
 • வயிற்றைப் பாதிக்கும் நிலைகள் – வயிற்றின் சில நிலைகள் அல்லது செயல்பாடுகள் பி 12 உயிர்ச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடைசெய்கின்றன. உதாரணமாக, குடல் அறுவை சிகிச்சை உயிர்ச்சத்து பி 12 இரத்தச் சோகை நோய்க்கான ஓர் ஆபத்துக் காரணியாகும்.
 • குடலைப் பாதிக்கும் நோய்நிலைகள் – குடலைப் பாதிக்கும் சில நிலைகள் (செரிமான மண்டலத்தின் பகுதியை). உதாரணமாக, குரோகன் நோய் (செரிமான மண்டலத்தின் உட்பரப்புப் படல நீடித்த அழற்சி) சில சமயம் பி 12 உயிர்ச்சத்தை உடல் உறிஞ்ச முடியாமல் செய்கிறது.

ஃபோலேட்டுக் குறைபாட்டுச் சோகை

ஃபோலேட்டு ஒரு நீரில் கரையும் உயிர்ச்சத்து ஆகும். இதனால் இதை நீண்ட காலம் சேமித்து வைக்க உடலால் முடியாது. உடல் சேமிக்கும் ஃபோலேட்டு நான்கு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும். இதனால் போதுமான அளவுக்கு ஃபோலேட்டு இருப்பைப் பேண ஒருவருக்கு தினமும் உணவில் அது அவசியமாகும்.

 • உணவு- தினசரி உணவில் போதுமான அளவுக்குப் ஃபோலேட்டு இன்மை.
 • உறிஞ்சல் குறைபாடு – சில வேளைகளில் உடலால் போதுமான அளவுக்கு ஃபோலேட்டை உறிஞ்ச முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும் உடற்குழி நோய் போன்றவை இருப்பதே.
 • மிகையாகச் சிறுநீர் கழித்தல் – அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் ஃபோலேட்டை இழக்கும். சிறுநீரகம் அல்லது கல்லீரல் போன்ற ஏதாவது ஓர் உறுப்பைப் பாதிக்கும் அடைப்படையான காரணத்தால் இது உண்டாகிறது.
 • கர்ப்பம் – கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பமாகத் திட்டம் இட்டாலோ தினமும் 0.4 மி.கி. ஃபோலிக் அமிலத்தைத் தொடர்ந்து 12 வாரங்களுக்கு எடுக்க வேண்டும்.

நோய்கண்டறிதல்

குடும்ப நோய் வரலாறு, உடல் பரிசோதனைகளுக்குப் பின் மருத்துவர் முழு இரத்தக் கணக்கிடல் அல்லது புற குருதிப் படர்வு சோதனைக்குப் பரிந்துரைக்கலாம்.

நோய்மேலாண்மை

இரத்தச் சோகைக்கு அடிப்படையாக இருப்பவற்றைப் பொருத்தே மருத்துவம் அமைகிறது.:

உணவோடு தொடர்புடையது

பி 12 உயிர்ச்சத்துக் குறைவு உணவில் அச்சத்து இன்மையால் ஏற்பட்டதாக இருந்தால் மருத்துவர் தினமும் உணவுகளுக்கு இடையில் உயிர்ச்சத்து பி 12 மாத்திரைகளை உண்ண பரிந்துரைப்பார். மாற்றாக வருடத்திற்கு இரு முறை நோயாளி ஹைடிராக்சோகோபாலமின் என்ற ஊசிமருந்தையும் எடுக்கலாம்.

பி 12 உயிர்ச்சத்து அடங்கியுள்ள சிறந்த உணவுகள்:

 • இறைச்சி
 • வஞ்சிர மீன்
 • பால்
 • முட்டை

ஒருவர் காய்கறி உணவு உண்பவராக இருந்தால், இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்குப் பதிலாக, உயிர்ச்சத்து பி 12 அடங்கிய மாற்று உணவுகள்:

 • சத்தூட்டப்பட்ட சில தானியவகை காலை உணவு
 • சில சோயா பொருட்கள்

உணவோடு தொடர்பற்றவை

உயிர்ச்சத்து பி 12 குறைபாடு உணவில் அச்சத்து இன்மையால் ஏற்படாமல் இருந்தால் நோயாளி வாழ்க்கை முழுவதும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஊசி மூலம் ஹைடிராக்சோகோபாலமின் எடுக்க வேண்டும்.

ஃபோலேட் குறைபாட்டுச் சோகை

நோயாளியின் ஃபோலேட் அளவைக் கூட்ட மருத்துவர் ஃபோலிக் அமில மத்திரைகளை பரிந்துரைப்பார்.

சிக்கல்கள்

 • உயிர்ச்சத்து பி 12 குறைபாட்டுச் சிக்கல்கள்
 • உயிர்ச்சத்து பி 12 குறைபாடு கீழ்க்காணும் சிக்கல்களை உருவாக்கக் கூடும்:

நரம்புமண்டலம்

உயிர்ச்சத்து பி 12 குறைபாடு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் (மூளை, நரம்புகள், தண்டுவடம்). உதாரணமாக, ஒருவருக்கு கிழ்வருபவை ஏற்படலாம்:

 • பார்வைக் கோளாறுகள்
 • நினைவாற்றல் இழப்பு

அசாதாரண உணர்வு – கை, கால், பாதங்களில் குத்தும் அல்லது கூச்ச உணர்வு

தசையிணக்கமின்மை – இது முழு உடலையும் பாதித்து பேசவும் நடக்கவும் சிரமம் ஏற்படுத்தும்

கருவுறுதல்

உயிர்ச்சத்து பி12 குறைபாட்டால் தற்காலிக மலட்டுத்தன்மை உண்டாகலாம் (கருவுறும் ஆற்றலிழப்பு).

ஃபோலேட்டு குறைபாட்டுச் சிக்கல்கள்

ஃபோலேட்டு குறைபாட்டால் உண்டாகும் சிக்கல்களில் சில:

கருவுறுதல்

உயிர்ச்சத்து பி 12 குறைபாட்டைப் போலவே, ஃபோலேட்டு குறைபாடும் கருவுறுதலை பாதிக்கும். ஆனால குறைபாடு தற்காலிகமானதே. உயிர்ச்சத்து உட்கொள்ளும்போது நிலைமை சீராகும்.

குறைப்பிரசவம்

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஃபோலேட்டு குறைபாட்டால் குறைப்பிரசவம் நிகழும் ஆபத்துண்டு (கருவுற்று 37 மாதங்களுக்கு முன்).

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.03225806452
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top