பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரகங்களும் தீவிரமான நோய்களும்

பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீரக நோய்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுநீரக நோய்கள் இருவகைப்படும்

1. மருத்துவத்தில் குணப்படுத்தப் படக் கூடியவை: சிறுநீரகம் செயலிழப்பு, சிறுநீரகப் பாதைத்தொற்று, மற்றும் பிற நெப்ரோடிக் நோய்க்குறிகள் போன்றவை சிறுநீரக மருத்துவர்களால் (nephrologists) குணப்படுத்தக்கூடியவை. நீண்ட நாட்களாக சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் டயாலிசிஸ் (செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றுதல்) மற்றும் மாற்றுசிறுநீரகங்கள் பொருத்துதல் போன்ற சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

2. அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலைகள்: சிறுநீரக கல், ப்ராஸ்டேட் பிரச்னை, சிறுநீரகப் பாதையில் புற்று நோய் போன்ற நோய்களை endoscopy மற்றும் lithotripsy போன்ற அறுவை சிகிச்சையால் (urologists) மருத்துவர்கள் குணப்படுத்துவர்.

முக்கிய சிறுநீரக கோளாறுகள்

மருத்துவம்

அறுவை சிகிச்சை

கடுமையான சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக கல்

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு

 

சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் பிரச்சினைகள்

சிறுநீர் பாதைத் தொற்று

பிறவியிலேயே ஏற்பட்ட சிறுநீர் முரண்பாடுகள்

நெப்ரோடிக் நோய்க்குறிகள்

புற்றுநோய்

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரகங்களின் திறன் படிப்படியாக குறைந்து, கழிவுப் பொருட்களை வடிகட்டி வெளியேற்ற முடியாமல் போகும் நிலை சிறுநீரக செயலிழப்பு எனப்படும்.

இரத்தத்தில் சீரம் கிரியேட்டினைன் மற்றும் யூரியாவின் அளவு அதிகமாவது சிறுநீரகம் செயலற்று வருவதன் அறிகுறியாகும்.

சீறுநீரக செயலிழப்பு இரண்டு வகைப்படும். அவை கடுமையான சிறுநீரக செயலிழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு

கடுமையான சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயல்பாடு திடீரென்று காரணம் தெரியாமல் குறைந்து போதலை கடுமையான சிறுநீரக செயலிழப்பு என்பர். இந்நோயாளிகளுக்கு சிறுநீரின் அளவு குறைந்துக்கொண்டே வரும். சரியான மருத்துவ சிகிச்சையாலும், டையாலிஸிஸ் மூலமும் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரகங்கள் சாதாரண நிலைமைக்குத் திரும்பி விடுகின்றன.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு

இந்த வகை சிறுநீரக செயலழிப்பு மாதக் கணக்கில், வருடக் கணக்கில் சிறுநீரகங்கள் படிப்படியே பல்வேறு நோய்களால் செயலிழப்பதால் வருகின்றது. இவற்றை CKD - chronic renal failure என்று சொல்வதுண்டு. நாள்பட்ட சிறுநீரக செயலழிப்பு படிப்படியே முன்னேறி கடைசியில் சிறுநீரகங்கள் முற்றிலும் செயலிழந்துவிடும்.

இதன் ஆரம்ப கால அறிகுறிகள், நலிவு, பசியின்மை, வாந்தி எடுத்தல், வீக்கங்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவையாகும். மேலும் இவற்றிற்கு இரு முக்கிய காரணங்கள் நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமுமாகும்.

சிறுநீரைப் பரிசோதிக்கும் பொழுது அதில் புரோட்டீன் இருத்தல்,   இரத்தப் பரிசோதனையில் அதிக திண்மையில் கிரியேட்டினைன் இருத்தல், அல்லது சோனோகிராஃபி (ultrasonography) சோதனையில் சுருங்கிய நிலையில் சிறுநீரகங்கள் இருத்தல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தீவிரமாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம். சீரம் கிரியேட்டினைனின் அளவு சிறுநீரகத்தின் நலிவடைந்த தன்மைக்கு ஒருபெரிய சாட்சி. நோய் முற்ற முற்ற இந்த அளவும் அதிகமாகிக் கொண்டே செல்லும்.

மேலே சொல்லப்பட்ட முற்றிய நோயின் ஆரம்ப காலங்களில், நோயாளிக்கு தகுந்த முறையான மருத்துவ சிகிச்சை அவசியம். உணவுப் பழக்க வழக்கங்களிலும் கடுமையான மாற்றங்கள் தேவை. இந்த சிகிச்சையின் நோக்கம் நோய் முற்றாமல் தடுத்து  நெடுநாட்களுக்கு நோயாளியை சுகமாக வைப்பதே ஆகும்.

மிக மோசமான நிலைக்கு நோய் முற்றிவிட்டால், (முடிவுநிலை சிறுநீரகக் கோளாறு நோய்) சிறுநீரகத்தின் செயல்பாட்டில் 90 சதவீதத்திற்கு மேல் திறன் இழக்கப்பட்டிருக்கும். (சீரம் கிரியேட்டினைனின் அளவு 8 லிருந்து 10 மி.கி. / டெசி லிட்டர் அளவைத்தாண்டி இருக்கும்.) அப்பொழுது சாத்தியப்படக்கூடிய ஒரே சிகிச்சை டையாலிஸிஸ் ஆகும். hemodialysis and perioneal dialysis போன்ற சிகிச்சை அல்லது மாற்று சிறுநீரகத்தை பொறுத்துவதே சிறந்ததாகும்.

டையாலிஸிஸ் என்பது உபரியாக உடலில் இருக்கும் திரவம் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதாகும். சிறுநீரகங்கள் செயலிழக்கும் பொழுது, அந்த திரவத்தின் அளவு கூடி மிக மோசமான அளவுக்கு பாதித்திருக்கும் அதாவது ESKD என்று சொல்லப்படும் நிலைக்கு நோய் சென்று விடும்பொழுது, நோயாளிக்கு மாற்று சிறுநீரகங்கள் பொருத்தப்படா விட்டால் வாழ்நாள் முழுவதும் டையாலிஸிஸ் செய்ய வேண்டியநிலை ஏற்படும். அவற்றில் இருக்கும் இரு வகைகள், hemodialysis மற்றும் peritoneal dialysis ஆகும்.

டையாலிஸிஸ் முறையில் வெகுவாக உபயோகப்படுத்தப்படுவது ஹீமோடையாலிஸிஸ். இதற்கு ஒரு தனி முறையோடு செயல்படக் கூடிய இயந்திரங்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. மற்றொரு முறைக்கு continuous ambulatory peritoneal dialysis என்று பெயர். இதை வீடுகளிலேயே நோயாளியை இருக்கச் செய்து இயக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் வேலை செய்யும் இடத்திலும் வைத்து இயக்கிக் கொள்ளலாம். இதற்கு எந்த மெஷினும் தேவையில்லை. எல்லாவற்றையும் விட சிறுநீரகங்களை மாற்றி விடுவதே சாலச் சிறந்தது.

சிறுநீரகப் பாதைத்தொற்று

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடி வயிற்றில் வலி, காய்ச்சல் போன்றவை சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்ட்தற்கான அறிகுறிகளாகும்.

சிறுநீர் பரிசோதனையின் பொழுது, அதில் சீழ்த்துளிகள் காணப்பட்டாலும் மேற்கண்ட தொற்று உள்ளது என்பதை உறுதி செய்யலாம். இந்த சிகிச்சையை காலதாமதத்துடன் செய்தால் முக்கியமாகக் குழந்தைகளுக்குச் செய்தால், அவர்களுடைய வளர்ந்து வரும் சிறுநீரகங்கள் சாதாரண நிலைக்குத் திரும்ப முடியாமல் போய்விடும்.

இந்த தொற்று உடைய நோயாளிகளுக்கு சிறுநீர் தடைப்பட்டுப் போவதை உடனடியாகத் தடுக்க வேண்டும். அல்லது கற்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப் படல் வேண்டும். மேலும் சிறுநீர்ப்பாதையில் ஏதாவது அசாதாரண நிலை ஏற்பட்டால் உடனுக்குடன் அதை அகற்ற வேண்டும். Geniourinary tuberculosis என்ற நோய் கூட தாக்கி இருக்கலாம். இதை கவனித்து குணப்படுத்தல் வேண்டும்.

குழந்தைகளுக்கு வரும் இந்த தொற்றின் அடிப்படை காரணம் vesicourceric reflux என்பது அடிக்கடி அவர்களை பாதிப்பதே ஆகும். இது ஒரு பிறவிக் கோளாறு. இதனால் சிறுநீர் முறையான வழியில் இல்லாமல் பின்னோக்கிப்பாயும். அப்பொழுது சிறுநீர்ப் பையிலிருந்து பின்னோக்கி ஒன்றோ அல்லது இரண்டு யுரீட்டர்களுக்கும் பாய்ந்து சிறுநீரகத்தையே மீண்டும் சென்றடையும்.

நெப்ரோடிக் நோய்க்குறிகள்

பாதம் வீக்கமடைதல் (Edema), சிறுநீரில் அதிக அளவு புரோட்டின் இருத்தல் (3.5 கிராமுக்கும் அதிகமாக ஒருநாளில் சேர்ந்து விடுதல்), இரத்தத்தில் ஆல்புமன் குறைவாக இருத்தல் (hypoalbuminemia), கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருத்தல் போன்றவை நெப்ரோடிக் நோய்க்குறிகளாகும். இந்நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் சரியான நிலையில் இருப்பதோடு சிறுநீரகங்களும் முறையாக வேலை செய்யும்.

சிகிச்சை மேற்கொள்ளும்போது இந்த நோய் குணமாகும் வெளிப்பாடுகளைக் காண்பிக்கும். பின்பு சிகிச்சையை நிறுத்தி விட்டாலும், நோயாளிகளிடம் எந்தவித நோய் அறிகுறியும் தென்படுவதில்லை. ஆனால் பெருவாரியான சமயங்களில், நோய்திரும்ப பாதிக்கிறது.

இது போன்ற, குணமாகும் தன்மையும், சிகிச்சை நிறுத்தப்பட்டப் பின் அடிக்கடி நோய் திரும்புவது,ம் வீக்கங்கள் ஏற்படுவதும் இந்த நோயின் முக்கிய குணங்களாகும். இந்த நிலை தொடர்ந்தால், குழந்தைக்கும் சரி, பெரியோர்களுக்கும் சரி இது மிகுந்த தொந்தரவுகளை கொடுக்கும்.

சிறுநீர்ப் பையில் கற்கள்

இது மிகப் பொதுவாகக் காணப்படும் பிரச்னை. பெரும்பாலும், சிறுநீரக யுரீட்டரும் சிறுநீர்ப்பையும் இந்த நோயைத் தாக்கும் இடங்களாகும். பொறுக்க முடியாத அளவு வலி, வாந்தி எடுத்தல், சிறுநீரில் இரத்தம் போன்றவை இதன் அடையாளங்கள் ஆகும். நெடு நாட்களுக்கு கற்கள் உருவாகி இருப்பவர்களிடம் எந்தவித அறிகுறிகளும் காணப்படுவதில்லை. சிறுநீரகங்களில் கற்கள் சேர்ந்து விடுவதை எக்ஸ்ரே படங்கள் மற்றும் ultrasonography மூலம் காணலாம்.

சிறுசிறுகற்கள் பெரும்பாலும் சிறுநீற்றுடன் கலந்து வெளியேறிவிடும். நிரம்ப நீர்பருகுவதால் இந்த நல்விளைவு ஏற்படும். அப்படி இல்லாமல், அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டாலோ, தொடர்ந்து தொற்றுதல் ஏற்பட்டாலோ, சிறுநீர்ப் பாதை தடை பட்டாலோ, அல்லது சிறுநீரகங்கள் பழுது பட்டாலோ, அவற்றை நீக்குவது அவசியமாகிறது. கற்களை அகற்றுவதற்காக கையாளப்படும் பொதுவான வழிகள் lithotripsy, endoscopy (PCNL, cystoscopy and ueteroscopy)  மற்றும் திறந்த அறுவை சிகிச்சையும் ஆகும்.

வலியற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர்ட்ரோஃபி (Benign prostatichypertrophy (BPH))

ப்ரோஸ்டாடிக் சுரப்பிகள் என்பன வயதானவர்களிடம்தான் காணப்படும். சிறுநீர்ப்பைக்கு கீழே இவை இருக்கின்றன. யுரீத்ராவின் ஆரம்ப நிலைக்கு அருகே சுற்றி இருக்கின்றன. இது ஒருவருடைய 50 வயதிற்கு அப்பால் பெரிதாக ஆரம்பிக்கிறது. பெரிதான ப்ரோஸ்டாடிக் யுரீத்ராவை அழுத்துகிறது. வயதானவர்களுக்கு இந்த காரணத்தாலேயே சிறுநீர் கழிப்பது பிரச்னையாக ஆகிறது.

இதன் முக்கியமான அறிகுறி, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் சிறுநீர் கழித்து முடித்தவுடன் சொட்டு சொட்டாக வெளிப்படுவதும் ஆகும். இதற்கு குதத்தில் விரலை விட்டு பரிசோதிப்பதும், ஒலிக்கு அப்பால் அலைகளை உருவாக்கி சோதிப்பதும் இரண்டு முக்கியமான சோதனைகளாகும்.

நோயாளிகளுக்கு, மிகச்சிறிய அல்லது நடுத்தரமான அளவில் குறிகள் தென்பட்டால், திறன்மிக்க சிகிச்சையில் குணப்படுத்தலாம். கடுமையான அறிகுறிகளுடன் நோயாளிகள் காணப்பட்டால், மற்றும் மிகப்பெரிய அளவில் ப்ராஸ்டேட் சுரப்பிகள் வளர்ந்து விட்டால், அதை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே வழியாகும்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil/

3.18181818182
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top