பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக நோய் வரிசை

சிறுநீரக நோய் வரிசை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இது ஒரு பொதுப் பெயராக வழங்கப்படும் நோயாகும். இது சிறுநீரில் வெகுவாகக் கூடி விட்ட புரோட்டினால் ஏற்படுவது. அல்லது இரத்தத்தில் வெகுவாகக் குறைந்து விட்ட புரோட்டினினால் ஏற்படுவது. இது எந்த வயதிலும் ஏற்படலாம். பெரும்பாலும் வயதானவர்களைவிட குழந்தைகளுக்கே இவ்வகை நோய்கள் காணப்படுகின்றன. சிகிச்சைக்கு எதிராக ஏற்படும் ஒரு சுழற்சி விளைவாலேயே இவ்வகை நோய்களைக் கண்டறியலாம்.

சிறுநீரக நோய் வரிசை என்றால் என்ன?

சிறுநீரகங்கள் நம் உடலில் சிறு சிறு வடிகட்டிகளாக வேலை செய்கின்றன. அவை கழிவுப்பொருட்களையும் வேண்டாத திரவங்களையும் உடலிலிருந்து அகற்றுகின்றன. இந்த வடிகட்டிகளின் துளைகள் மிக மிக நுண்ணிய அளவில் சிறிதாக இருக்கும். ஆகவே அளவில் சற்று அதிகமாக இருக்கும் புரோட்டின் அவற்றுக்குள் நுழைய முடியாது. ஆனால் இந்த நோய் வரிசையால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகத்து துளைகள் பெரிதாகிவிடுகின்றன. சிறுநீரில் புரோட்டின் சிறுநீற்றுடன் கலந்து வெளியேறுகிறது. இது இரத்தத்திலுள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கிறது. இது வீக்கத்தைக் கொண்டு வருகிறது.

Nephrotic syndrome காட்டும் அறிகுறிகள்

 • இந்த நோய் எந்த ஒரு வயதிலும் வரலாம். ஆனால் 2 வயதிலிருந்து 8 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளிலேயே மிகவும் பொதுவாகக் காணப்படும். பெண் குழந்தைகளை விட, இது ஆண் குழந்தைகளையே அதிகம் தாக்கக்கூடியது.
 • கண்களைச் சுற்றி ஒரு வீக்கமும், முகத்தில் வீக்கம் காண்பதுமே இந்த நோய்க்கு முதல் அறிகுறியாகும். கண்களைச் சுற்றி வரும் வீக்கத்தினால், நோயாளி முதன் முதலில் ஒரு கண்டாக்டரையே கண்டு ஆலோசிப்பார்கள்.
 • மேற்சொல்லப்பட்ட வீக்கங்கள், காலை வேளைகளிலேயே பெரும்பாலும் காணப்படுவது. மாலையில் அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாது.
 • நாட்கள் செல்லச் செல்ல, வீக்கம் பாதங்கலிலும், கைகளிலும், அடி வயிற்றிலும் பிறகு உடல் எங்கிலும் பெருகிக் கொண்டே செல்கிறது. கூடவே உடல் எடையும் கூடுகிறது.
 • மூச்சுக் குழல் பாதையில் தொற்றுதலுக்குப் பிறகு வீக்கங்கள் வரலாம். காய்ச்சலும் பல நோயாளிகளுக்கு வரலாம்.
 • வீக்கம் ஒன்று காண்பதைத்தவிர, நோயாளிகள் பெரும்பாலும் சகஜ நிலையிலேயே சுகத்துடன் காணப்படுவார்கள். துடிப்புடனும் வேறு நோய் நொடியில்லாமல் வாழ்வார்கள்.
 • பொதுவாக சிறுநீர் குறைவாகக் கழிப்பார்கள். சாதாரண நிலைகளுக்கு இது குறைவாகவே இருக்கும்.
 • சிறுநீரில் நுரை பொங்கி வரும். வெண்மையான நிறமுள்ள பொருட்களின் மீது சிறுநீர் கழிந்தால், கறை காணப்படும். இது சிறுநீரில் ஆல்புமென் இருப்பதைக் காட்டும்.
 • சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளிப்படுவது, அதிக இரத்த அழுத்தம் காணப்படுவது போன்றவை இந்த நோய் இருக்கும்பொழுது அவ்வளவாக இருப்பதில்லை.

இந்த நோயினால் வரும் சிக்கல்கள் யாவை?

மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே போகும் தொற்றுதல்கள், இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைந்து கட்டிகளாகப் போய் விடுவது, சத்தில்லாத உணவினால் வரும் கேடுகள், இரத்த சோகை, இருதய நோய் (காலஸ்ட்ரால் அதிகத்தால் வருவது), சிறுநீரகம் செயலிழப்பது மற்றும் சிகிச்சையினால் எழும் சிக்கல்கள் ஆகும்.

நோயைக் கண்டறிவது எப்படி?

அடிப்படை ஆய்வக சோதனைகள்

வீக்கம் உடைய நோயாளிகளுக்கு முதல் முதலாக எடுக்கப்படும் முயற்சி இந்த நோயைக் கண்டறிவதுதான். சோதனைச்சாலையில் காணப்படும் சோதனைகள் 1. சிறுநீரில் மிக அதிகம் புரோட்டீன் நஷ்டமாகிப் போவது காணப்படல் வேண்டும். 2. இரத்தத்தில் மிகக் குறைவாகவே புரோட்டீன் காணப்படுவது அல்லது மிக அதிகமாக கொலஸ்ட்ரால் இருப்பது ஆகும்.

1. சிறுநீர் பரிசோதனைகள்

 • இந்த சோதனையே முதன் முதலில் செய்யப்படல் வேண்டும். சாதாரணமாக, ஆல்புமின் இல்லாததாகக் காட்டும். தற்செயலாக எடுத்து சோதிக்கப்படும் சிறுநீரில் 3+ அல்லது 4+ புரோட்டீன் காணப்படும். அது இந்த நோய் இருப்பதைக் காட்டுகிறது.
 • சிறுநீரில் ஆல்புமின் இருப்பது மட்டுமே இந்த நோயை ஊர்ஜிதப்படுத்தாது. சிறுநீர் முலமாக புரோட்டின் இழக்கப்படுகிறது என்பதை மட்டும் காட்டும் அடையாளம் அது. மேற்கொண்டு சோதனை செய்தாலே, புரோட்டின் இழப்பிற்கு சரியான காரணம் தெரிய வரும்.
 • புரோட்டின் சிறுநீரில் காணப்படவில்லை என்றால், சிகிச்சைக்கு உரிய பதில் கிடைத்து விட்டது என்று அர்த்தம். தனக்குத் தானே செய்து கொள்ளும் சோதனையில் குச்சியை சிறுநீரில் மூழ்கி எடுத்து சோதிக்கலாம்.
 • மைக்ரோஸ்கோப்பின் மூலம் சிறுநீரை சோதித்து அறியும் பொழுது சிவப்பு இரத்த அணுக்களும், வெள்ளை அணுக்களும் பெரும்பாலும் காணப்படாது.
 • இந்த நோயினால் சிறுநீர் மூலமாக புரோட்டீன் இழப்பது, ஒரு நாளைக்கு 3 கிராம்களுக்கும் மேலாக இருக்கும். 24 மணி நேரங்களில் எவ்வளவு புரோட்டின் இழக்கப்படுகிறது என்பதை ஒரு சோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த சோதனைகள் துல்லியமாக அந்த இழப்பைக் காட்டும். அந்த இழப்பு மிகக் குறைவாக, மிதமானதாக இருக்கிறதா அல்லது அதிகமாக இருக்கிறதா என்பதைக் காட்டும். 24 மணி நேரத்தில் எவ்வளவு புரோட்டின் இழக்கப்படுகிறது என்பது தெரிந்தால், சிகிச்சைக்கு என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவரும்.

2. இரத்த பரிசோதனைகள்

 • இரத்தத்தில் குறைவாக ஆல்புமின் இருத்தல், (3 கிராமுக்கும் குறைவாக இருத்தல்) அதிகமான கொலஸ்ட்ரால் போன்றவை இரத்தத்தில் இருந்தால் நோயைக் காட்டிக் கொடுக்கிறது என்று அர்த்தம்.
 • இந்த நோய் சீரம் கிரியேட்டினைனின் அளவை சாதாரண நிலையிலேயே வைக்கிறது.
 • முழுமையான ப்ளட் கவுன்ட் என்பது வழக்கமாக எடுக்கப்படும் இரத்த பரிசோதனையின் முலம் தெரியவந்து விடும்.

மேற்கொண்டு செய்யப்படும் பரிசோதனைகள்

மேலே சொல்லப்பட்ட சோதனைகள் முடிந்த பிறகு வேறு சில மேற்கொள்ளப்படுகின்றன. அவை அவ்வப்போது செய்யப்படுகின்றன. இவை எல்லாமாகச் சேர்ந்து இந்த நோய் 'பிரைமரி வகையைச் சேர்ந்ததா அல்ல்து 'செகண்டரியானதா என்பதையும் அதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் காணல் வேண்டும்.

இரத்த பரிசோதனைகள்

 • இரத்தத்தில் சர்க்கரை, சீரம் மின்கடத்தி திரவங்கள், கால்ஷியம் மற்றும் ஃபாஸ்பரஸ்.
 • HIV க்காக சோதித்தல், மஞ்சள்காமாலை, மற்றும் WDRL சோதனைகள்.
 • C3, C4 மற்றும் Aso titer

ரேடியோலஜி சோதனைகள்

 • எக்ஸ் ரே கதிர்கள், ஒலி அலைகளுக்கு அப்பால் அலைகளை எழுப்பி சோதித்தல் போன்றவை அடிவயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஏதாவது கனமான பொருட்கள் தென்படுகின்றனவா, கற்கள் உள்ளனவா என்பதையும் உபரிசதைவளர்ச்சியையும் தடங்கல்கள் உள்ளனவா என்பதையும் காண்பிக்கும்.
 • மார்புப் பகுதியில் தொற்றுதல் இல்லையா என்பதை எக்ஸ்ரே சோதனைகள் காண்பிக்கும்.

சிறுநீரக பையாப்சி

இது ஒரு மிக முக்கியமான சோதனை. அடிப்படைக் காரணத்தை இது காட்டிக் கொடுக்கும். இதில் ஒரு சிறு துண்டுச் சதையை கிள்ளி எடுத்து சோதனைச் சாலைக்கு எடுத்துச் சென்று சோதிப்பார்கள்.

சிகிச்சை

முதல் இலக்கு அறிகுறிகளை அகற்றுவதாகும். சிறுநீரில் உள்ள புரோட்டினின் அளவைச்சரிசெய்தல், சிக்கல்கள் எழாமல்தடுத்தல், சிறுநீரகங்களைப் பாதுகாத்தல் முதலியவை ஆகும்.

உணவுப் பழக்க வழக்கங்கள்

சரியான சிகிச்சைகளுக்குப் பிறகு உணவுப் பழக்க வழக்கங்கள் சகஜ நிலைக்கே பரிந்துரைக்கப்படுகின்றன. அதாவது வீக்கங்கள் குறைந்த பிறகே இவ்வாறு செய்யப்படும்.

நோயாளிக்கு வீக்கங்கள் இருந்தால் உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவு குறைக்கப்படும். டேபிள் சால்ட் குறைத்தே ஆக வேண்டும். சோடியம் இருக்கும் உணவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். அதனால் திரவங்களின் சேர்ப்பு குறையும், இடிமாவும் தவிர்க்கப்படல் வேண்டும். பிரதானமாக திரவங்களை தவிர்ப்பது வழக்கமாக இருக்காது.

மிக அதிக அளவில் ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்ளும் நோயாளிகள், உப்புக் கலந்த பண்டங்களை தவிர்ப்பது நலம். வீக்கங்கள் இல்லாமல் கூட இதைச் செய்ய வேண்டும். இது இரத்த அழுத்தம் கூடாமல் பாதுகாக்கும்.

வீக்கங்கள் இருக்கும் நோயாளிகளுக்கு போதுமான அளவு புரோட்டீன்கள் கொடுக்கப் படல் வேண்டும். அதனால் சத்துக் குறைவான நிலை தவிர்க்கப்படும். மற்றும் கலோரிகள் கொடுக்கும் உணவையும் விட்டமின்களையும் கொடுக்க வேண்டும்.

உப்பை எடுத்துக் கொள்வதிலும் பானங்கள் பருகுவதிலும் எந்தவித தடையும் வேண்டாம். போதுமான அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ளவும். இருந்தாலும் புரோட்டீன் மிக அதிகமாக உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படிச்செய்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் பழுதானால் உடனே புரோட்டீன் எடுத்துக் கொள்வதைத்தவிர்க்கவும், நிரம்பப் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடவும். உணவில் கொழுப்புச் சத்தை வெகுவாகக் குறைத்து விடவும். அதன் மூலம் இரத்தத்தில் இருக்கும் காலஸ்ட்ராலின் அளவு குறையும்.

மருந்து சிகிச்சை

அ. குறிப்பிட்ட மருந்து மூலம் செய்யப்படும் சிகிச்சை

Prednisolone என்ற மருந்து ஒரு "ஸ்டீராய்ட்" மருந்து. இதுவே நெஃப்ராடிக் சின்ட்ரோமைக் குறைக்கும். அனேக குழந்தைகள் அந்த சிகிச்சையின் மூலம் குணமடைகிறார்கள். வீக்கமும் சிறுநீரில் இருக்கும் புரோட்டீனும் 1-4 வாரங்களுக்குள் மறைந்து விடுகிறது.

ஆ. மாறுதலான சிகிச்சை

ஒரு சில குழந்தைகளுக்கு மேலே சொல்லப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் போகலாம். தொடர்ந்து அவர்கள் சிறுநீரில் புரோட்டீனை இழந்து கொண்டிருப்பார்கள். அவர்களை மேற்கொண்டு சிறுநீரக பையாப்ஸி என்ற சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாறுதலாக இவ்வகை குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் மருந்துகளாவன - levamisole, cyclophosphamide போன்றவை ஆகும். முறையாகச் செய்யப்படும் ஸ்டீராய்டு மருந்துகளுடன் இவையும் சேர்த்துக் கொடுக்கப்படும். அப்படியே செய்து ஸ்டீராய்டு மருந்தின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படும்.

முறையான சிகிச்சைக்கு ஆதரவாக இன்னமும் சில மருந்துகள்

டையூரடிக்'மருந்துகள் சில உபயோகப்படுத்தி சிறுநீரின் அளவு கூட்டப்படுகிறது. வீக்கத்தையும் கட்டுப்படுத்த அது உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் அதாவது ACE inhibitors எனப்படும் மருந்துகள் கொடுக்கப்படும் அத்துடன் இவை சிறுநீரில் வெளியாகும் புரோட்டீனையும் தடுக்கும். தொற்றுதல்களைத் தடுக்க 'ஆன்டிபயாடிக் மருந்துகள் உபயோகிக்கப்படும். மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவை இருதயத்திற்கு இரத்தத்தை ஏற்றிச்செல்லும் குழாய்களில் ஏற்படும் சிக்கல்களை குறைக்கின்றன.

கால்ஷியம், விட்டமின் டி இவை போன்ற மருந்துகள் ஸ்டேராய்டுக்கு ஆதரவாக வேலை செய்யும்.

ஸ்டீராய்டு மருந்தால் சில சமயங்களில் வயிற்று வலி உருவாவதுண்டு. அதைத் தடுக்க Rabiprazole, pantoprazole, om leprazole or ranitidine போன்ற மருந்துகள் கொடுக்கப்படும். ஆல்புமினை ஊசிகள் மூலம் ஏற்றுவது கிடையாது. ஏனென்றால் அவற்றின் விளைவுகள் தாற்காலிகமானதே.

இரத்தத்தின் திண்மையைக் குறைக்கும் மருந்துகளாக, "வார்ஃபேரின் அல்லது "ஹெபாரின் போன்றவை தேவைப்படலாம். அவற்றின் மூலம் இரத்தம் உறைதலைத் தடுக்கலாம்

அடிப்படைக் காரணங்களுக்கு சிகிச்சை அளித்தல்

மிகவும் கவனம் மிகுந்த அணுகுமுறையால், அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து இரண்டாம் நிலை நெஃப்ராடிக் சின்ட்ரோம் எனப்படும் நீரிழிவு, லூபஸ் சிறுநீரக நோய், போன்றவற்றிற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுதல் வேண்டும்.

பொதுவான சில அறிவுரைகள்

மேலே சொல்லப்பட்ட நெஃப்ராடிக் சின்ட்ரோம் எனும் நோய் பல வருடங்களுக்கு நீடிக்கும். குடும்ப அங்கத்தினர் யாவருக்குமே இந்த நோயைப் பற்றிய விவரங்களை கல்வியாக போதிக்க வேண்டும். அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். அதன் விளைவுகளைப் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும். எவ்வகையான மருத்துவம் கையாளப்படுகிறது என்பதை நோயாளிக்குத் தெரியப்படுத்தல் வேண்டும். தொற்றுதல்களை விரைவாக கவனித்து குணப்படுத்தல் வேண்டும். வீக்கங்கள் மீண்டும் வராமல் இருக்கச் செய்ய வேண்டும் ஆனால் நோய் குறைந்து கொண்டு வரும்பொழுது குழந்தைகளை நோயற்ற குழந்தை போல பாவித்து நடத்த வேண்டும்.

தொற்றுதல்களை போதுமான அளவு கவனித்து குணப்படுத்தலாம். இதை ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்க ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டும்.

'நெஃப்ராடிக் சின்ட்ரோமினால் அவதியுறும் குழந்தைகளுக்கு மூச்சுப் பாதையில் சில தொற்றுதல்கள் உண்டாக வழி உண்டு. விரைவில் அவற்றைக் கண்டு பிடித்து குணப்படுத்துதல் வேண்டும். ஏனென்றால் தொற்றுதல் மீண்டும் வந்தால், அந்தச் சிறுவர்களையே மேலும் பாதிக்கும்.

தொற்றுதலைத் தடுக்க, குழந்தையும் குடும்பமும் ஒருங்கே பயிற்சி அளிக்கப்பட்டு, வெகு சுத்தமான குடிநீரைப் பருகுவதையும் கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவி வைத்துக் கொள்வதிலும், ஜன நெருக்கமுள்ள இடங்களைத் தவிர்க்கச் சொல்லியும் பழக்க வேண்டும். இவற்றால் தொற்றுதல் உள்ள நோயாளிகளின் அருகாமையை தவிர்க்கலாம்.

கவனமிக்க வகையில் நோயின் தொடர்ச்சியையும் சிகிச்சை விளைவுகளையும் பார்த்து தொடர்தல்.

மேற்கண்ட நோய் நெடுநாட்களுக்கு அல்லது வருடங்களுக்குத் தொடருமாகையால், மருத்துவரை அடிக்கடி கண்டு ஆலோசித்தல் மிக அவசியம். அவர் நோயாளிக்கு சிறுநீர் மூலம் புரோட்டீன் இழக்கப்படுகிறதா என்று பார்ப்பார். இரத்த அழுத்தத்தை சோதிப்பார். உயரம், பக்க விளைவுகள் இவற்றை சோதிப்பார். சிக்கல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனவா என்று பார்ப்பார்.

நோயாளிகள் தங்களுடைய உடல் எடையை அடிக்கடி சோதித்துப் பார்க்க வேண்டும். அதன் மூலம் உடலில் உள்ள திரவங்களின் எடை கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதைக் காணலாம்.

குடும்ப அங்கத்தினர்கள் யாவருக்கும் சிறு நீரை எப்படிப் பரிசோதிப்பது என்பதைச் சொல்லித்தரல் வேண்டும். முறையாக அடிக்கடி இந்த சோதனையைச் செய்து வருதல் வேண்டும். எல்லா மருத்துவத்தின் குறிப்புக்களும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இவை எல்லாம் நோய் மீண்டும் திரும்பி தாக்கினால் சிகிச்சை செய்வதற்கு உபயோகமாக இருக்கும்.

ஏன் மற்றும் எப்படி prednisolone ஸ்டீராய்ட் மருந்து கொடுக்கப் படல் வேண்டும்?

முதன் முதலில் நெஃப்ராடிக் சின்ட்ரோம் நோய்க்கு எதிராக கொடுக்கப் படும் ஸ்டீராய்ட் மருந்து prednisolone எனும் ஸ்டீராய்ட்தான். அதுவே திறன்மிக்க வகையில் நோயைக் குணப்படுத்தக் கூடியது. சிறுநீர் வழியாக புரோட்டின் இழப்பதை உடனுக்குடன் தடுக்கிறது.

மேற்கண்ட மருந்தை எப்பொழுது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவரே தீர்மானிப்பார். நோயாளி இந்த மருந்தை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொண்டாலே, வயிற்று வலி இல்லாமல் இருக்கும்.

முதல் தாக்கத்தில் மருந்து பெரும்பாலும் 4 மாதங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அதை மூன்று பாகங்களில் பிரித்துக் கொடுப்பார்கள். அன்றாடம் இந்த மருந்து ஆரம்பத்தில் 4 முதல் 6 வாரங்கள் கொடுக்கப்படும். அடுத்தடுத்த நாள் காலையில் ஒரே தடவையில் எடுத்துக் கொள்ளுமாறு நோயாளி சொல்லப்படுவார். கடைசியில், அதன் அளவு மெல்ல மெல்ல குறைக்கப்படும். பிறகு அதை அறவே நிறுத்தி விடுவார்கள். நோய் மீண்டும் திரும்பித் தாக்கினால் சிகிச்சை வேறாக இருக்கும். முதல் முதல் தாக்கத்தின்பொழுது அனுசரித்த சிகிச்சையை விட அது வேறுபட்டிருக்கும்.

1 லிருந்து 4 வாரத்திற்குள், நோயாளிக்கு அறிகுறிகள் முழுக்க அகன்று விடும். சிறுநீரோடு கலந்து வெளியேறும் புரோட்டீன் கசிவு நின்று விடும். ஆனால் இந்த சமயத்தில் சிகிச்சையை நிறுத்தும் தவறைச் செய்து விடக் கூடாது. பக்க விளைவுகளுக்கு பயந்து கொண்டு ஒரு சிலர் நிறுத்தி விடுவார்கள். இது இமாலயத் தவறு. எடுத்து ஆரம்பித்து செயல்படுத்திக் கொண்டிருந்த சிகிச்சையை அதன் உரிய காலம் முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தி விட்டு முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நோய் திரும்ப வந்து தாக்காது.

மேலே சொல்லப்பட்ட ஸ்டீராய்ட் மருந்தின் பக்க விளைவுகள் என்னென்ன?

மேலே சொல்லப்பட்ட ஸ்டீராய்ட் மருந்தே பெரும்பாலும் நெஃப்ராடிக் சின்ட்ரோம் நோய்க்கு எதிராக கொடுக்கப்படுவது. ஆனால் பற்பல பக்க விளைவுகளை இந்த மருந்து காண்பிப்பதால், இந்த மருந்தை அவசியம் மருத்துவரின் பரிந்துரைகள் பிரகாரமே எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

குறுகிய கால விளைவுகள்

மிகப்பொதுவான விளைவுகளாக இருப்பவை - பசிமிகுதியாகக் காணப்படும், உடல் எடை கூடும், முகத்தில் வீக்கம் காணப்படும், வயிற்றெரிச்சல் காணப்படும், நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும், இரத்த அழுத்தம் கூடும், எரிச்சல், முகத்தில் முடி மேலும் வளர்தல் போன்றவை அந்த விளைவுகளாக இருக்கும்.

நீண்டகால விளைவுகள்

மிகப் பொதுவாக, நீண்ட நாட்கள் தொடரும் பக்க விளைவுகள் ஆவன: உடல் எடை கூடுதல், குழந்தைகளுக்கு வளர்ச்சி குன்றுதல், தோல் மெலிதாகுதல், தொடைகளில் வரும் இழுத்தாற்போன்ற கோட்டு அறிகுறிகள், கைகள் மற்றும் அடிவயிற்றுப் பகுதிகள், கண்களில் புரை வளர்ச்சி, எலும்பில் பிரச்னைகள் மற்றும் தசை நலிவாதல் போன்ற பிரச்னைகள் ஆகும்.

இந்த நோயை குணப்படுத்துவதற்கு கார்டிகோ ஸ்டீராய்டுகள் ஏன் உபயோகப்படுத்தப்படுகின்றன? பல சிக்கல்கள் உருவாகக் கூடிய சூழல் ஏற்பட்டாலும் அந்த மருந்தை ஏன் உபயோகிக்கிறார்கள்?

சிக்கல்கள் உருவாவதைப் பற்றிய விவரங்கள் எவரும் அறிந்ததே. அதே சமயத்தில் நெஃப்ராடிக் சின்ட்ரோம் என்ற இந்த நோய்க்கு சிகிச்சை செய்யாமல் விட்டால், உள்ளார்ந்து அமிழ்ந்து பிறகு வெளிப்படும் அபாயங்கள் ஏராளம்.

இந்த நோய் தாக்கினால், மோசமான விளைவுடன் வீக்கங்கள் பெருகும் மற்றும் உடலுக்குள் இருக்கும் புரோட்டீனின் அளவு குறைந்துக் கொண்டே போகும். சிகிச்சையே அளிக்கப் படாத நோய் கணக்கற்ற சிக்கல்களைக் கொண்டு வரும். தொற்றுதல்களினால் வரும் அபாய சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

சிறுவர்களுக்கு வரும் இந்த நோயைக் குணப்படுத்த மேற்கொண்ட ஸ்டீராய்டு மருந்து சிகிச்சையால், இறப்பு விகிதங்கள் குறைவான அளவாக 3 சதவீதத்தைத் தொட்டிருக்கின்றன. மருத்துவர்களின் ஆலோசனையில் மட்டுமே தொடரக் கூடிய இந்த மருந்து மிக்க உபயோகமாகவும் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பையும் கொடுக்கக் கூடியது. பெருமாலும் அதன் விளைவுகள் அல்லது அபாய அறிகுறிகள், காலப்போக்கில் மருந்தை நிறுத்தியவுடன் நின்று விடுகின்றன.

இந்த சிகிச்சையிலிருந்து உண்மையான பயன்களைப் பெற வேண்டுமானால், இறப்பையே சமீபிக்கச் செய்யும் சிக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், ஒரு சில பக்க விளைவுகளைப் பொறுத்துக்கொள்வது தவிர்க்க முடியாமல் போகும்.

இந்த நோயினால் தாக்கப்பட்ட ஒரு சிறு குழந்தைக்கு ஆரம்ப கால அறிகுறிகளான வீக்கங்கள் சீக்கிரம் மறைந்து விடுகின்றன. சிறுநீரில் புரோட்டீன் இல்லாமல் போய் விடுகிறது. ஆனால் முக வீக்கம் மாத்திரம் மீண்டும் வருகிறது - அது ஸ்டீராய்டு மருத்துவத்தின் 3 வது அல்லது 4 வது வாரத்தில் காணப்படுகிறது. ஏன்?

ஸ்டீராய்டு மருந்தினால் வரும் இரு தனிப்பட்ட விளைவுகள் இவை - பசி மிகுதியாகும். அதனால் அவர்கள் மேலும் உணவு அருந்தி, உடல் எடை கூடுவதைக் காண்பார்கள். உடலில் சதை போடும். இதனால் முக வீக்கம் அதிகமாகும். மருத்துவம் தொடர்ந்து 3 வது அல்லது 4 வது வாரத்தில் சந்திரன் போன்ற வடிவத்தில் முகம் மாறும். அதுவே ஸ்டீராய்டு மருத்துவத்தின் அடையாளம்.

முக வீக்கங்களில் இருக்கும் வித்தியாசங்களை எப்படிக் கண்டு கொள்வது?

ஒன்று நோயினாலேயே வருவது. இன்னொன்று ஸ்டீராய்டு மருந்தினால் ஏற்படும் சந்திர வடிவத்தில் மாறும் முகம்.

இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை எப்படிக் கண்டு பிடிப்பது?

வீக்கங்கள் முதலில் கண்களைச் சுற்றியும் முகத்தைச் சுற்றியும் வரும். சில மாதங்களுக்குள், பாதங்களிலும், கைகளிலும் பிறகு உடலெங்கும் வீக்கங்கள் தொடரும். நோயினால் வரும் முக விக்கத்தை நிச்சயமாகக் காலை வேளைகளில் கண்டுகொள்ளலாம். படுக்கையை விட்டு எழுந்தவுடன் அப்படித் தெரியும். மாலையில் அவ்வளவாகத் தெரியாது.

பெரும்பாலும் இந்த மருத்துவத்தால் முகமும் அடிவயிறுமே பாதிக்கப்படுகின்றன. ஆனால் கைகளும் கால்களும் முன்பு போலவே சாதாரண நிலையில் இருக்கும். ஸ்டீராய்டு மருந்துகளால் வரும் வீக்கங்கள் நாள் முழுவதும் ஒரே நிலையில்தான் இருக்கும்.

ஒரு சில நோயாளிகளுக்கு இரத்த பரிசோதனைகள் தேவைப்படும். வீக்கம் உடைய நோயாளிகளுக்கு சீரம், புரோட்டீன், ஆல்புமின் மற்றும் அதிக அளவு கொலஸ்ட்ரால் போன்றவை நோய் மீண்டும் வருவதைக் காண்பிக்கும். இரு சோதனைகளிலும் சாதாரண அளவே இருந்தால் அது ஸ்டீராய்டு மருந்தினால் வந்ததே என்பது ஊரிஜிதமாகும்.

மேற்கண்ட வீக்கங்களில் உள்ள வித்தியாசங்களை ஏன் கண்டு கொள்ளுதல் அவசியம்?

சரியான சிகிச்சையை தேர்ந்தெடுக்க அந்த வித்தியாசங்களை அறவே கண்டு கொள்ளுதல் வேண்டும்.

ஸ்டீராய்டு மருந்தினால் எழும் வீக்கத்திற்கு எதிராக, அதிகமான ஸ்டீராய்டு அளவைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். அதை எடுத்துக் கொள்வதில் சில மாறுபாடுகளைச் செய்ய வேண்டும். அவற்றுடன் கூட சில சமயங்களில் வேறுசில மருந்துகளைச் சேர்க்க வேண்டி இருக்கும். தாற்காலிகமாக டையூரெடிக்ஸோடு சில சமயங்கள் சேர்த்துக் கொடுக்க வேண்டி இருக்கும்.

ஸ்டீராய்டினால் வரும் வீக்கம் நெடு நாட்களுக்கு மருத்துவம் தொடர்ந்திருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிடுகிறது. நோய் கையை விட்டுப் போய் விட்டது என்று எண்ணுவதற்கு இடமில்லை. அல்லது பயத்தினால் மருந்தின் அளவையும் குறைப்பதில் அர்த்தமே இல்லை. மருந்தின் விஷம் கூடி விடுமோ என்ற பயத்தினால் அப்படிச் செய்ய வேண்டியது இல்லை. மருத்துவரின் சிபாரிசின் பேரிலேயே எப்பொழுதும் மருத்துவத்தை தொடர வேண்டும். டையூரெடிக்ஸ் எனும் மருத்துவத்தை முக வீக்கத்திற்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது கொஞ்சம்கூடப் பிரயோஜனப்படாது. ஏன், கொஞ்சம் அபாயமும் கூட

நெஃப்ராடிக் சின்ட்ரோம் சிறுவர்களை மீண்டும் வந்து தாக்குவதற்கு உண்டான சாத்தியக் கூறுகள் எவை? எத்தனை முறைகள் அப்படி அடிக்கடி வரும்?

மீண்டும் மீண்டும் வந்து தாக்கக் கூடிய அபாயம் 50 லிருந்து 75 சதவீதம் இருக்கிறது. இது ஒவ்வொரு நோயாளிக்கும் சற்று வேறுபட்டு வரும்.

ஸ்டீராய்டு அப்படி பயனளிக்காமல் போய் விட்டால் வேறு என்ன மருந்துகளை உபயோகிக்க வேண்டும்?

levanisole, cyclophosphamide, cyclosporine, tacrolimus and mycophenolate mofetil (MMF) போன்றவை இதர மருந்துகளாகும்.

இந்த நெஃப்ராடிக் சின்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்கு kidney biopsy செய்ய வேண்டிய அவசியத்தைக் கொண்டு வரும் அடையாளங்கள் யாவை?

ஸ்டீராய்டு மருத்துவத்தை ஆரம்பிக்கும் முன் மேற்கண்ட சோதனைக்கு அவசியம் இல்லை. ஆனால் கீழ்க்கண்ட நிலைகளில் அதை தொடர வேண்டிய அவசியம் ஏற்படும்.

 • ஸ்டீராய்டு மருத்துவம் பிரயோஜனமில்லாமல் போனால்
 • மீண்டும் மீண்டும் நோய் எதிர்ப்பட்டால்
 • குழந்தையின் முதல் வயதில் வருவது, இரத்த அழுத்தம் உயர்வது, சிறுநீரோடு மாறாது வெளிப்படும் இரத்தத்தின் சிவப்பு அணுக்கள், செயலிழந்த சிறுநீரகங்கள், மற்றும் குறைவான C-3 இரத்தத்தில் காணப்படுதல்.
 • வயது முதிர்ந்தவர்களுக்கு அல்லது வயதானவர்களுக்கு காரணம் தெரியாது இந்த நோய் தாக்கினால் பையாப்ஸி செய்ய வேண்டி வரும். அதுவும் ஸ்டீராய்டு மருத்துவம் துவங்கும் முன் செய்தல் வேண்டும்.

நோய் தொடர்ச்சி மற்றும் குணமடையும் நாட்கள்

இது நோயின் மூல காரணங்களைப் பொறுத்தது. பெரும்பாலான சிறுவர்கள் ஸ்டீராய்டு சிகிச்சைக்கு தகுந்த நிவாரணத்தைக் காட்டுகிறார்கள். இந்த நிலையில் மிக மோசமான சிறுநீரக செயலிழப்பு காணப்படுவதில்லை. அதற்குரிய சாத்தியக் கூறுகள் இல்லை.

ஒரு சில குழந்தைகள் அல்லது சிறுவர்கள் ஸ்டீராய்டு மருத்துவத்திற்கு நிவாரணத்தைக் காண்பிப்பதில்லை. அவர்களை மேற்கொண்டும் பரிசோதித்தல் வேண்டும். இரத்த பரிசோதனையும் பையாப்ஸி சோதனையும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஸ்டீராய்டு மருத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்களின் உடல்நிலைக்கு மாற்று மருந்துகள் கொடுக்கப் படல் வேண்டும். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் படு மோசமாக சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பார்கள்.

இந்த நோயினால் வரும் புரோட்டீன் இழப்பு முறையான சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டவுடன் குழந்தைகள் சகஜ நிலைக்குத்திரும்பி விடுகின்றனர். பெரும்பாலான குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் வருடக் கணக்கில் தாக்கி வரும். குழந்தையின் வயது கூடக் கூட, நோய் மீண்டும் வரும் அளவு குறையும். முழுமையாக நோய் குணமாவது 11 முதல் 14 வயதிற்குள் நடக்கும். இந்த குழந்தைகளுக்கு அறிகுறிகள் தெளிவாக இருக்கும். பெரியவர்களைப் போல சகஜ வாழ்க்கை வாழ ஆரம்பிப்பார்கள்.

இத்தகைய நோயாளிகள் மருத்துவரை எப்பொழுது கலந்து ஆலோசிக்க வேண்டும்?

 

 • அந்தக் குழந்தைக்கு அடிவயிற்றில் வலி வந்தாலோ அல்லது வாந்தி எடுக்க ஆரம்பித்தாலோ,
 • வீக்கங்கள், விளக்க முடியாத வகையில் எடை திடீரென்று கூடுதல், வெளியேறும் சிறுநீர் அளவு திடீரென்று குறைதல்,
 • குழந்தை சுகவீனமாகுதல், (குழந்தை விளையாடுவதை நிறுத்தி விட்டு மந்தமாக இருத்தல்),
 • இடைவிடாது இருமல் தொடர்தல், காய்ச்சலுடனோ அல்லது மோசமான தலைவலியுடனோ தொடர்தல்,
 • அம்மை நோய் கண்டவர்களுடன் நெருக்கமாக அணுகுதல்,

போன்ற நிலைகளில் மருத்துவரை நாடுதல் வேண்டும்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil/

Filed under:
2.93181818182
J.s muhammad Sep 28, 2019 06:29 AM

எனக்கு 22 வயது நானும் இந்ந நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன்.
இந்த நோய் உருவாகுவதற்க்கான காரணத்தை அறிய தாருங்கள்.
முற்றாக குணமடைய ஆயுர்வேதத்தில் மருந்துகள் இருக்கின்றதா?

சி. சுரேஷ் Jun 12, 2019 09:04 AM

குழந்தைகளுக்கு இந்த நோய் தாக்குவதற்கான அடிப்படை காரணம் என்ன?

ஆதம்ஷா Aug 24, 2018 09:16 AM

இந்த நோய்க்கு ஆயுர்வேத மருந்து இல்லையா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top