பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம் / பிற முக்கிய சிறுநீரக பிரச்சனைகள் / சிறுவர்களுக்கு வரக் கூடிய சிறுநீரகப் பாதை தொற்று
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுவர்களுக்கு வரக் கூடிய சிறுநீரகப் பாதை தொற்று

சிறுவர்களுக்கு வரக் கூடிய சிறுநீரகப் பாதை தொற்று பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இது குழந்தைகளை குறுகிய காலத்திற்கோ அல்லது நெடு நாட்களுக்கோ தாக்கக்கூடிய பொதுவான பிரச்னை ஆகும்.

இவ்வகை தொற்றுக்கள் சிறுவர்களுக்கு ஏற்பட்டால் ஏன் உடனடியான குணப்படுத்த முயல வேண்டும்?

ஏனென்றால் –

 • மேற்கண்ட தொற்றினால் சிறுவர்களுக்கு உடனே காய்ச்சல் வரும். மூச்சுக் குழலில் வரும் தொற்றுக்கு அடுத்தாற்போல் வரக் கூடிய மிகப்பெரிய மூன்றாவது தொற்று இதுதான். போதுமான அளவோடு கவனிக்கப்படாவிட்டாலோ அல்லது காலம் தாழ்த்தி கவனம் செலுத்தினாலோ, சிறுநீரகத்தை நிரந்தரமாக செயலிழக்கச் செய்து விடும்.
 • மீண்டும் மீண்டும் வரும் தொற்றுதல் சிறுநீரகத்தில் கீறல்களை விழச் செய்து அவை நெடு நாட்கள் சென்றவுடன் அதிக இரத்த அழுத்தத்தையும், சிறுநீரகத்தின் வளர்ச்சியைக் குன்றச் செய்தும் ஏன் மிக மோசமான நிலைக்குத் தள்ளக்கூடிய சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும்.
 • இந்த நோய் காட்டும் அறிகுறிகள் சற்று வேறுபட்டே காண்பிப்பதால், முறையாக அறிகுறிகளைக் காணுதல் சற்று சிரமமே. ஆகவே அடையாளம் காணுதலில் மிக மிக கவனமும் கூர்மையான அணுகுமுறையும் வேண்டும்.
 • மீண்டும் தாக்கக்கூடிய அபாயத்தின் சாத்தியக் கூறு மிகுந்தது.

இந்த தொற்றுதல் இருக்கிறது என்பதை சிறுவர்களுக்குக் காட்டும் முன்அறிகுறிகள் யாவை?

கீழ்க்கண்ட அறிகுறிகள் அந்த தொற்றுதல் சிறுவர்களுக்கு வரப் போகிறது என்பதைக் காண்பிக்கும்.

 • சிறுமிகளுக்கு இது மிக பொதுவாகக் காணப்படும் நோய். ஏனென்றால் பெண்களுக்கே யுரீத்ரா சிறியதாக இருக்கும்.
 • மலம் கழித்த பிறகு பெண்கள் எப்பொழுதும் பின்புறத்தில் ஆரம்பித்து முன்புறத்துக்கு வந்து (மாறு வழியில் அல்லாது) கழுவிக் கொள்வார்கள்.
 • பிறப்பிலிருந்தே இந்த தொற்றுதல் இருக்கக் கூடிய வாய்ப்பும் உண்டு.
 • ஆண்குறியின் வெளிப்புறத்தோலை அறுவை மூலம் நறுக்கும் ஆபரேஷன் செய்யப் படாத ஆண் சிறுவர்களுக்கும் இந்த தொற்றுதல் வரக் கூடிய வாய்ப்பு உண்டு.
 • சிறுநீர் செல்லும் பாதை ஒரு அசாதாரணமான வகையில் அமைந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கக் கூடும். Posterior பrethral valve இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
 • சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருக்கலாம்.
 • இதர காரணங்கள்: மலச் சிக்கல், போதுமான அளவில் சுகாதாரம் இல்லாமல் கழிவுப்பகுதிகளை வைத்திருத்தல், குடும்பம் முழுக்கவே நீண்ட பல வருடங்களாக இந்த நோயின் சரித்திரத்தைத் தாங்கி இருத்தல்

இந்த தொற்றுதல் இருப்பதற்கு உரிய அடையாளங்கள்

சற்று வயதான குழந்தைகள், தங்களுக்கு இந்த தொற்று இருப்பதைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். வயதான சிறுவர்களுக்கும் மேற்சொன்ன அடையாளங்களையே இந்த நோய் காண்பிக்கும்.

வயது குறைவாக உள்ள சிறுவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு வந்துள்ள தொற்றுதலைப் பற்றி வெளியில் சொல்லுவதில்லை. சிறுநீர் கழிக்கும்பொழுது வாய்விட்டு அழுவார்கள். சிறுநீர் நாற்றமடிக்கும். எந்த காரணமும் விளக்க முடியாமல், அடிக்கடி தொற்றுதலுடன் சேர்ந்து காய்ச்சல் வரும்

வயது குறைவாக உள்ள சிறுவர்களுக்கு பசி குறைவாக இருக்கும். வாந்திபேதி இருக்கும். உடல் எடை குறைவாகக் கூடும். எப்பொழுதும் எரிச்சலுடன் காணப்படுவார்கள். அல்லது அறிகுறிகளே காணப்படாமல் போகலாம்.

இந்தத் தொற்றுதலை எப்படிக் கண்டறிவது?

இந்த தொற்றுதல் உடைய சிறுவர்களை சோதிப்பதற்கு கீழ்க்கண்ட சோதனைகள் நடத்தப்படும்.

அடிப்படை சோதனைகள்

Urine microscopy or dipstick tests - நிச்சயமாக முடிவுகளைக் காண்பிக்கும் சோதனைகள். சிறுநீர் கல்ச்சர் சோதனையை மேற்கொள்ளலாம். எந்த ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாவினால் தொற்று வந்தது என்று கண்டுபிடிக்கும் சோதனையை மேற்கொள்ளலாம். அதைக் கண்டுபிடித்தவுடன் தகுந்த ஆன்டிபயாடிக் மருந்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம்.

இரத்த பரிசோதனைகள் ஹீமோக்ளோபின், differential white cell count. இரத்தத்தில் யூரியா, சீரம் கிரியேட்டினைன், இரத்தத்தில் சர்க்கரை, Creactive protein முதலியன.

இந்த நோய் முற்றினால் வரும் அபாய சாத்தியக் கூறுகளை எப்படிக் கண்டுபிடிப்பது?

 • ஒலிக்கு அப்பால் இயங்கும் அலைகளை எழுப்பி சோதித்தலும், அடிவயிற்றை எக்ஸ் ரே மூலம் படம் பிடித்து சோதிப்பதும் இதற்கு உதவும். Voiding cystourethrogram-VCUG, CT scan or MRI of the abdomen andintravenousurography (IVU).
 • சிறுநீரகத்திற்குள் கீறல்கள் விழுந்திருக்கின்றனவா என்று சோதித்தலும் உண்டு. ஒரு சில சோதனைகளை இந்த தொற்றுதல் உருவாகி 3 முதல் 6 மாதங்களுக்குப் பிறகே செய்வார்கள்.
 • சிறுநீரகப் பை எப்படி வேலை செய்கிறது என்பதை யூரோடைனமிக் சோதனைகளைக் கொண்டு கண்டுபிடிப்பார்கள்.

Voiding cystourethrogram என்றால் என்ன? அதை எப்பொழுது மற்றும் எப்படி செய்வார்கள்?

 • இது ஒரு மிக முக்கியமான பரிசோதனை ஆகும். இதற்கு அந்தக் காலத்தில் Micturating cystourethrogram என்று சொல்லுவார்கள்.
 • சிறுவர்கள் அடி வயிற்றை எக்ஸ் ரே படம் பிடித்துக் காண்பதும் உண்டு.
 • மேலே சொல்லப்பட்ட பரிசோதனையே மிகவும் உறுதியான முடிவுகளைக் கொடுக்கக் கூடிய சோதனை. நோயின் பல வகை தோற்றங்களை அது காண்பித்து விடும். அசாதாரண நிலைமைகளையும் அது காண்பித்துக் கொடுத்துவிடும்.
 • இந்த நோய்க்கு சிகிச்சை அளித்த பின்பே, மேற்கண்ட VCUG பரிசோதனையை மேற்கொள்ளுதல் வேண்டும். அதாவது பரிசோதனை செய்யப்படும் முதல் வாரத்திற்குப் பிறகே செய்யப்படுதல் வேண்டும்.
 • இந்த சோதனையில் முதலில் சிறுநீர்ப்பை நிரப்பப் பட்டு விடுகிறது. அதன் முழு அளவுக்கு நிரப்பப்பட்டு விடும். அதை எக்ஸ்ரே மூலமாகப் பார்க்கலாம். அதை வேறுபடுத்திக்காட்ட சாய மருந்து ஒன்று உபயோகிக்கப்படும். விஷங்கள் ஊடுருவாமல் இருக்கக் கூடிய மருந்துகளுடன் ஆன்டிபாயாடிக் மருந்து பாதுகாப்புக்களுடனும் இந்த சோதனை மேற்கொள்ளப்படும்.
 • சோதனையின் பொழுது பலப் பல எக்ஸ்ரே படங்கள் எடுக்கப் படும். இடையிடையே அவை எடுக்கப்படும். இந்த சோதனை ஒன்றே நிலைமையை முழுமையாகக் காட்டும். சிறுநீர்ப் பை செயல்படும் விதத்தையும் யுரீத்ரா செயல்படும் விதத்தையும் காட்டும்.
 • இந்த சோதனை சிறுநீர்ப் பையிலிருந்து பின்புறமாக சிறுநீரகத்திற்குச் செல்லும் சிறுநீரைக்காட்டுகிறது.

இந்த தொற்றுதலைத் தடுப்பது எப்படி?

 1. நிரம்ப பருகும் நீரைப்பருகுதல் வேண்டும்.
 2. ஒவ்வொரு இரண்டு மணி நேர இடைவெளியிலும் அல்லது மூன்று மணிநேர இடைவெளியிலும் சிறுவர்கள் சிறுநீர்கழிக்க வேண்டும். இது சிறுநீர்ப் பையிலிருந்து பாக்டிரியாவை அகற்றும்.
 3. பிறப்பு உறுப்புக்கள் பகுதியை சுத்தமாக ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்குமாறு செய்தல் வேண்டும். குழந்தைகளுக்கு மலம் கழித்த பின் முன்புறத்திலிருந்து துடைத்துக் கொண்டு பின்புறம் செல்ல வேண்டும். எதிர்ப்புறமாகச் செய்யக்கூடாது. இந்தப் பழக்கம் அவர்களுக்கு மல வாயைச் சுற்றி பாக்டீரியாக்கள் சேராமல் தடுக்கிறது.
 4. குழந்தைகளுக்கு மாட்டி விடும் "ட்ரேப்பர்களை அடிக்கடி மாற்றவும். அப்படிச் செய்தாலே மலம் அவற்றில் நீண்டநேரம் ஒட்டிக் கொள்ளாது. பிறப்பு உறுப்புக்களின் மீதும் ஒட்டாது.
 5. பஞ்சினால் ஆன உள்ளாடையையே குழந்தை அணிய வேண்டும். அதனால் காற்று எளிதாகப் போய் வரும். உடலை ஒட்டினாற்போல இருக்கும் பேன்டுகளை அணியக் கூடாது. நைலான் அண்டர்வேர்களை அணியக்கூடாது.
 6. குழந்தைகளுக்கு "பப்பிள் பாத்' என்ற வகையில் குளிப்பாட்டுதல் கூடாது.
 7. ஆண்குறியின் மேல் தோலை அறுவையால் அகற்றாமல் இருக்கும் குழந்தைகளுக்கு அந்த பகுதியை அடிக்கடி கழுவ வேண்டும்.
 8. VUR நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்தால் சிறுநீர் பைக்குள்ளேயே தங்கிவிடுவதால் எழும் அபாயங்கள் எழாது.
 9. நெடு நாட்களுக்கு அன்றாடம் தடுப்புக்காக ஆன்டிபயாடிக் மருந்து ஒன்றை அடிக்கடி இந்த தொற்று தாக்கும் சிறுவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்த தொற்றுதலுக்கு உரிய சிகிச்சை.

பொதுவானவை

நோய்தாக்கப்பட்ட சிறுவர்கள், எல்லா தடுப்பு முறைகளையும் தவறாது அனுசரித்து வருதல் வேண்டும்.

 • நோய்தாக்கப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் நீரைப் பருக வேண்டும். ஆஸ்பத்திரியில் வேறு எதற்காவது அட்மிட் ஆகி இருக்கும் குழந்தைகளுக்கு ஊசி மூலம் திரவங்கள் ஏற்றப் படல் வேண்டும்.
 • காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து மாத்திரைகள் கொடுக்கப் படல் வேண்டும்.
 • சிகிச்சை முடிந்த பிறகு, சிறுநீர்ப் பரிசோதனை அவசியம் வேண்டும். அதன் மூலம் தொற்றுதல் போதுமான அளவு கட்டுப் படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்து கொள்ளலாம்.
 • தொற்றுதல் உள்ள குழந்தைகளுக்கு எக்ஸ்ரே பரிசோதனைகள் மற்றும் இதர பரிசோதனைகள் முழுவதும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

சில குறிப்பிட்ட பரிசோதனைகள்

குழந்தைகளுக்கு தொற்றுதல் நோயை குணப்படுத்த விரைவில் சிகிச்சைகள் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

சிகிச்சைக்கு முன் சிறுநீர் கல்ச்சர் சோதனைக்கு அனுப்பப்படல் வேண்டும். அதன் மூலம் நோயை உருவாக்கும் பாக்டீரியாவைக் கண்டு கொள்ளலாம்.

நோயாளி சிறுவர்களுக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ அல்லது ஒரு புறம் துடையில் வலி இருந்தாலோ அல்லது வாய் மூலம் மருந்து உட்கொள்ளப்பட முடியாவிட்டாலோ, உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல வேண்டும்.

மீண்டும் மீண்டும் வந்து தாக்கும் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் தொற்றுதல்

மீண்டும் மீண்டும் தாக்கப்படும் சிறுவர்களுக்கு ஸ்கான் பரிசோதனைகள் முழுவதும் செய்து அடிப்படைக் காரணங்களை ஆராய்தல் வேண்டும். ஒலி அலைக்கு அப்பால் வரும் அலைகளைக் கொண்டு சோதித்தல், WCUG, DMSA போன்ற சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படைக் காரணத்தைக் கொண்டே மேற்கொண்டு சிகிச்சைகள் திட்டமிடுப்படுதல் வேண்டும். ஒரு சில சிறுவர்களுக்கு நெஃப்ராலஜிஸ்டுகளும்", யூராலிஜஸ்டுகளும் சேர்ந்து திட்டமிடுதல் வேண்டும்.

POSTERIOR URETHRAL WALWES

சிறுவர்கள் ஒரு சிலருக்கு ஒரு அசாதாரண பிறவிக் கோளாறால், அவர்களுடைய யுரீட்டர் வால்வுகள் இதன் பின்புறத்தில் அமைக்கப்பட்டு விடுகின்றன. அத்தகைய சிறுவர்களுக்குப் பெரும்பாலும் சிறுநீர்தடைப்பட்டு தொற்றுதல் வருவது அந்தக் காரணத்தாலேயே நிகழும்.

அடிப்படைப் பிரச்னையும் அதன் முக்கியத்துவமும்:

யுரீத்ரா குழாயில் ஏற்படும் அடுக்கடுக்காக மடிக்கப்பட்ட தசைகளே சிறுநீர் சகஜ நிலையில் வெளியேறுவதைத் தடுக்கிறது. இது சிறுநீர்ப்பைக்கு பின்புறத்திலிருந்து அழுத்தத்தைக் கொண்டு வருகிறது.

மிகவும் பெரிதாகிவிட்ட சிறுநீர்ப்பை மிக அதிக அழுத்தத்தில் உழலும்பொழுது, யுரீட்டர் குழாய்களில் அதே அழுத்தத்தைக் கொண்டு வரும். சிறுநீரகத்தின் மீதும் தாக்கத்தைக் கொண்டு வரும். இது யுரீத்ராவையும் சிறுநீரகத்தையும் தொய்வடையச் செய்கிறது. இதை உரிய காலத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை செய்யாவிட்டால், நீண்டநாள் விளைவாக, மிக மோசமாக பாதிக்கப்படும் சிறுநீரக நோய் பரவும். மேற்கண்ட வகையில் வால்வுகளை உடைய சிறுவர்களில் 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை, முடிவான நிலைக்குத்தள்ளப்படும் சிறுநீரக நோயினால் அவதிப்படுவார்கள். அதை ஆங்கிலத்தில் End stage kidney disease (ESKD) என்பார்கள். ஆகவே சிறுநீரக நோய்க்கு சிறுவர்களிடையே பரவும் ஒரு முக்கிய காரணம், அசாதாரண நிலையில் அமைக்கப்பட்டு விட்ட இந்த வால்வு ஆகும்.

அறிகுறிகள் :

பொதுவாக மிகவும் நலிவுடன் வெளிவரும் சிறுநீரும், சிறுநீர் கழிப்பதில் குழந்தைக்கு ஏற்படும் சிரமமும், படுக்கையிலேயே சிறுநீர் கழிந்து விடுவதும், அடிவயிற்றின் கீழ் எப்பொழுதும் நிரம்பிய உணர்வும் தொற்றினால் வரும் விளைவுகள் ஆகும்.

கண்டறிதல் :

பிறப்பிற்கு முன்பே ஒலி அலைகளுக்கு மேல் உள்ள அலைகளை எழுப்பி கர்ப்பப்பையை சோதித்தல். அல்லது ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு சோதனையையும் மேற் கொள்ளலாம். அப்பொழுதே மேற்கண்ட வால்வின் அசாதாரண அமைப்பு தெரிய வரும். ஆனால் WCUG சோதனையே குழந்தை பிறந்தவுடன் செய்யப்பட்டு நோயை ஊர்ஜிதப்படுத்தும்,

சிகிச்சை :

யூராலஜிஸ்டுகள் மற்றும் நெஃப்ராலஜிஸ்டுகளும் சேர்ந்தே மேற்கண்ட அசாதாரண அமைப்பிற்கு நிவாரண வழிகளை மேற்கொள்ளுவார்கள்.

ஒரு நல்ல அபிவிருத்தியைக் கொண்டு வருவதற்கு ஒரு குழாயை எடுத்து, சிறுநீர்ப்பைக்குள் (யுரீத்ரா வழியாக அல்லது நேரிடையாக அடிவயிற்று வழியாக) செலுத்துவார்கள். அதைச் செய்து சிறுநீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள் உடனுக்குடன், தொற்றுதலுக்கு உரிய சிகிச்சைகளைச் செய்வது - இரத்த சோகையைக் கண்டிக்கும் சிகிச்சைகள் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழப்பதைக் கண்டித்து சிகிச்சை - சத்துணவு போதாத நிலையிருந்தால் அதை நிவர்த்திக்க சிகிச்சை, திரவங்கள் அல்லது மின்கடத்தி திரவங்களின் சமநிலை இல்லாமல் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்தல் போன்றவற்றைச் செய்வார்கள்.

மிகவும் சரியானதும் துல்லியமான குணத்தைக் கொடுப்பதும் அறுவை சிகிச்சையே. அது இதர பக்க பலத்தைக் கொடுக்கும் சிகிச்சைகளுடன் தொடர வேண்டும். "எண்டாஸ்கோப்" எனும் கருவி மூலம் யூராலஜிஸ்ட் யுரீத்ராவில் உள்ள வால்வை அகற்றுகிறார். எல்லா குழந்தைகளுக்கும் வாழ்நாள் முழுவதும் நெஃப்ராலஜிஸ்ட் மூலம் மருத்துவ கவனிப்பு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த நோயின் தாக்கத்தால் குழந்தை பெரியவனான பிறகும் தொடரும். வளர்ச்சி மின்கடத்தும் திரவங்களின் சமநிலை இல்லாமை, இரத்த சோகை, அதிக இரத்த அழுத்தம் மற்றும் மிக மோசமாக வந்து பாதிக்கும் சிறுநீரக நோய் போன்றவை தொடரக் கூடிய அபாய சாத்தியக்கூறுகள் தொடரும்.

Vesicoureteric Reflux (WUR)

மேலே சொல்லப்பட்ட நோயின் விளைவு என்னவென்றால், சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரானது யுரீட்டருக்குள் பின்புறமாக வந்து விடுவதாகும்.

மேற்கண்ட நோயைப் பற்றி ஏன் அறிந்து கொள்ளுதல் வேண்டும்?

குழந்தைகளில் 30 லிருந்து 40 சதவீதத்தினருக்கு மேற்கண்ட நோய் காணப்படுகிறது. அதுவும் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றும் சேர்ந்து காணப்படுகிறது. பெரும்பாலோரான சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளாகிறது. சிறுநீரகத்திற்குள் ஏற்படும் கீறல் நெடுநாட்களாக இருந்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இளம் கர்ப்பப் பெண்கலுக்கு டாக்சீமியா எனும் தாக்கத்தைக் கொண்டு வரும். அல்லது மோசமான நிலை வரை செல்லும் சிறுநீரக நோய் உண்டாகும். ஒரு சிலருக்கு முடிவு நிலையை நோக்கித் தள்ளும் சிறுநீரக நோய் உண்டாகும். ஒரு குடும்பத்தில் இருக்கும் நபருக்கு VUR வந்தால், பிறருக்கும் வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இது பெண்களையே அதிகமாக பெரும்பாலும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.

Vesicoureteric Reflux (VUR) என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?

இந்த நோய் என்பது ஒரு நிலையைக் காண்பிக்கிறது. இதனால் சிறுநீர் பின்னோக்கி வந்த திசையிலேயே திரும்புகிறது. யுரீட்டருக்கே திரும்புகிறது. ஒருவேளை சிறுநீரகங்களுக்குள்ளும் செல்லலாம். ஒரு புறமோ சில சமயங்களில் இரு புறங்களிலும் உட்செல்லலாம்.

சிறுநீரகங்களில் சேகரிக்கப்பட்ட சிறுநீரானது கீழ்ப் புறம் சிறுநீரக பைக்குள் செல்கிறது. சிறுநீர் வழக்கமாக ஒரே திசையில்தான் செல்லும், யுரீட்டர் வழியாக கீழ் நோக்கிச் சென்று சிறுநீர்ப்பைக்குள் சேகரிக்கப்படும்.

VUR என்பது குழந்தைகளிடம் பரவலாகக் காணப்படும் ஒரு நோய். அதனால் இரத்த அழுத்தமும் மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் சிறுநீரக நோயும் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு.

சிறுநீர் கழிக்கும்பொழுது, அல்லது சிறுநீர்ப் பையில் சிறுநீர் சேகரிக்கப் பட்டு நிறையும்பொழுது, பைக்கும் யுரீட்டருக்கும் நடுவில் இருக்கும் வால்வ் சிறுநீர் பின்னோக்கிப் பாய்ந்து விடாமல் தடுக்கிறது. இந்த வால்வு சரியாக இயங்கவில்லையானாலேயே மேற்சொன்ன நோய் வருகிறது.

இந்த நோய்க்குக் காரணம் என்ன?

இந்த நோயில் இரு வகைகள் உண்டு. முதலாவது வகையே மிகவும் அடிக்கடி காணப்படும் ஒன்று. இது பிறவியிலேயே வந்து தாக்கக் கூடியது. இரண்டாவது வகை எந்த வயதிலும் ஏற்படலாம். பொதுவாகவே சிறுநீர்ப் பையில் ஏற்படும் தடங்கலினால் வருவதாகும். அல்லது சிறுநீர்ப்பையில் தொற்றுதல் இருந்து தாக்கப்படலாம். அல்லது யுரீத்ராவில் தொற்றுதல் வரலாம்.

இந்த நோயின் அறிகுறிகள் யாவை?

இந்த நோய்க்கு குறிப்பிட்ட அறிகுறிகள் கிடையாது. ஆனால் அடிக்கடி சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றுதல் ஒன்றே அனேகமாக பொதுவாக ஏற்படும் இதன் தோற்றமாகும். வயதான குழந்தைகளுக்கு இந்த நோய் குணப்படுத்த முடியாமல் இருக்கும்பொழுது, அறிகுறிகளும் அடையாளங்களும் மிகவும் நிதர்சனமாகத் தெரியும். ஏனென்றால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரோட்டீன் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழப்பது போன்ற சிக்கல்கள் நிதர்சனமாக நோயைக் காட்டிக் கொடுத்து விடும்.

இந்த நோய் எப்படிக் கண்டறியப்படுகிறது?

இந்த நோய்கண்ட சிறுவர்களுக்கு செய்யப்படும் சோதனைகள் கீழ்க்கண்டவையாக இருக்கும்.

1. அடிப்படை சோதனை.

Voiding cystourethrogram - VCUG – இந்த நோயைக் கண்டறிவதற்கு ஒரு அரிய வழிமுறையாகும் . இந்த வழியில் நோயின் வீரியமும் கண்டறியப்படுகிறது.

2. இந்த நோய் உடலில் எழச் செய்யும் பிரதி விளைவுகளை வைத்துக் கொண்டு நோயின் தீவிரம் கணிக்கப்படுகிறது. அந்த விளைவின் அளவே சிறுநீர் எந்த அளவுக்கு யுரீட்டர்களிலும், சிறுநீரகங்களுக்குள்ளும் பின்னோக்கிப் பாய்கிறது என்பதை தெரிவிக்கிறது. இந்த கணிப்பு மிக அவசியம். அதன் மூலமே சிகிச்சைக்கு முன் இருக்கும் நோயின் வீரியத்தை அறிந்து கொள்ளலாம். அத்துடன் எவ்வகையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம்.

நோயின் மிதமான நிலையில், சிறுநீரானது யுரீட்டருக்குள்தான் திரும்பி வருகிறது. (கிரேட் 1 மற்றும் 2). மிக மோசமான நிலைமையில் வெகு அதிகமாக சிறுநீர் திரும்பி வர ஆரம்பிக்கிறது. அப்பொழுது வலி மிகக் கடுமையாக இருக்கும். யுரீட்டர் தொங்கிப் போயிருக்கும். சிறுநிரகம் மிகப் பெரிதாக வீங்கி இருக்கும்.

2. மேலும் சில பரிசோதனைகள்

சிறுநீர்ப் பரிசோதனையும் கல்ச்சர் சோதனையும் - சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது தெரியவரும்.

இரத்த பரிசோதனைகள் - அடிப்படை சோதனைகள் வழக்கமாகவே செய்யப்படும். ஹீமோகிளோபின், வெள்ளை அணுக்கள் மற்றும் சீரம் கிரியேட்டினைன் சோதனைகள்.

சிறுநீரகத்தையும் சிறுநீர்ப் பையையும் அல்ட்ரா சவுண்டு சோதனைகள் மூலம் பரிசோதித்தல். இதனால் சிறுநீரகத்தின் அளவும், அதில் கீறல்கள் இருப்பதும் நன்றாகத் தெரியவரும். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கின்றனவா என்பதும் தெரியவரும். தடைகள் அல்லது தீவிர அசாதாரண நிலைமைகள் இருக்கின்றனவா என்பதும் தெரிய வரும்.

சிறுநீரகத்தை ஸ்கான் செய்து DMSA வழியில் பார்த்து சிறுநீரகத்திற்குள் கீறல்கள் இருக்கின்றனவா என்பதைப் பார்த்தல்.

இந்த நோய்க்கு சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?

தொற்றுதல்களின் சாத்தியக் கூறே இல்லாமல் இருக்குமாறும் சிறுநீரகத்திற்கு எந்தவித அபாயமும் இல்லாமல், இந்த நோக்கு சிகிச்சை அளிக்கப்படுதல் வேண்டும். இந்த சிகிச்சை, சிறு நீர் திரும்பும் அளவு, குழந்தையின் வயது மற்றும் அறிகுறிகள் இவற்றைப் பொறுத்தது. இந்த சிகிச்சையை மூன்று வழிகளில் தொடரலாம். 1. ஆன்டிபயாடிக்ஸ், 2. அறுவை அல்லது 3. என்டாஸ்கோபிக் சிகிச்சை மிகவும் பொதுவான வழி மேற்சொன்ன வகை 1 ஆகும். ஆன்டிபயாடிக்ஸ் மூலம் இந்த நோய் கட்டுப்படுத்தப்படும். அதன் மூலம் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் தொற்றுக்கள் அகற்றப்படும். அறுவையும் என்டாஸ்கோப் சிகிச்சையும் மேலும் தீவிரமடைந்த நிலைகளிலேயே மேற் கொள்ளப்படும். இந்த வகை நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக்ஸ் பயனில்லாமல் போகும்பொழுதே அப்படி மேற்கொள்ளப்படும்.

மிதமான தாக்கத்தைக் கொண்டு வரும் நோய்

இந்த வகை தாக்கம், தானாகவே குணமடைந்து சிறுநீரகத்தை சகஜ நிலைக்குத் திரும்பச் செய்யும். இது குழந்தைக்கு 5 அல்லது 6 வயதாகும் பொழுது நடக்கும். ஆகவே மிதமான இவ்வகை தாக்கத்தைக் கொண்டு வரும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது. ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரு முறைகள் சிறிதளவே ஆன்டிபயாடிக்ஸ் கொடுக்கப்பட்டு குணப்படுத்தப்படும். இதை நீண்ட நாட்களுக்குச் செய்து வந்து தொற்றுதல் இல்லாமல் குணப்படுத்துவார்கள். இத்தகைய சிகிச்சை வழக்கமாக குழந்தைக்கு 5 வயது ஆகும் வரை கொடுக்கப்படும். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - ஆன்டிபயாடிக்ஸ் மட்டுமே தன்னந்தனியாக இந்த நோயைக் கட்டுப்படுத்த முடிந்ததாக எடுத்துக் கொள்ளப்படாது. Nitrofurantoin and corinoxazole போன்றவையே இதர சில மருந்துகள் - பெரும்பாலும் மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்படுபவை ஆகும்.

இந்த நோயுடைய எல்லாக் குழந்தைகளும், பொதுவான தடுப்பு முறைகளை (மேலேயே விவரிக்கப் பட்டவை), முறையாகவும் அடிக்கடியும் அனுசரித்து வரல் வேண்டும். முறையான இடைவெளிகளில் சிறுநீர்ப்பரிசோதனையைச் செய்து வரல் வேண்டும். அதன் மூலம்தான் சிறுநீர்ப்பாதையில் தொற்றுதல் இருக்கிறதா என்பது கண்டுபிடிக்கப்படும். VCUG and ultrasound சோதனைகள் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் சோதிக்கப் பட்டு சிறுநீர் திரும்பி வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

மிக மோசமான நிலையில் இருக்கும் VUR

இது தானாகவே குணமாகக் கூடிய நிலை இல்லை. ஆகவே இந்த நிலையில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும். அல்லது எண்டாஸ்கோப் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

கீழ் வயிற்றை திறந்தவாறு செய்யப்படும் அறுவை சிகிச்சை சிறுநீர் மீண்டு திரும்பும் போக்கை மாற்றி விடுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வெற்றி சுமார் 88 லிருந்து 99 சதவீதம் இருப்பதாலேயே இந்த வழி பின்பற்றப்படுகிறது.

நோயின் மிக மோசமான நிலையில், எண்டாஸ்கோபிக் சிகிச்சையும் இரண்டாம் இடத்தையே வகிக்கிறது. இதில் இருக்கும் மிக முக்கிய நன்மை என்ன்வென்றால், இதை ஒரு நோயாளியை ஆஸ்பத்திரிக்குள் அனுமதித்து உள்ளே படுக்கச் செய்யாமல், வெறும் வெளிப்புற நோயாளியாகவே அவரை எடுத்துக் கொண்டு சிகிச்சை செய்து முடித்து விடலாம். சிகிச்சைக்கு 15 நிமிடங்களே ஆகும். எந்தவித அபாய அல்லது விபத்து சாத்தியக் கூறுகளும் இல்லை. உடலைக்கீறவேண்டிய அவசியம் இல்லை. இந்த சிகிச்சை பொதுவான மயக்க மருந்தின் உதவியாலேயே செய்யப்படுகிறது. இதில் ஒரு குழாயை ஒளியோடு உள்ளே செலுத்திப் பார்க்கப் படுகிறது. இந்த முறையில் கிடைக்கும் வெற்றி 85 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரை இருக்கிறது. இது ஒரு செளகரியமான சிகிச்சை இது நோயின் ஆரம்ப நிலையில் மேற்கொள்ளப் படும் சிகிச்சை. இதனால் நெடு நாளைக்கு மேற்கொள்ளப் படவேண்டிய ஆன்டிபயாடிக் சிகிச்சை தேவையில்லை.

சிகிச்சையின் தொடர்ச்சி

இந்த நோயால் தாக்கமடைந்த எந்த சிறுவர்களும் நீண்ட நாட்கள் அல்லது வாழ்க்கை முழுவதும் கவனித்து வரப்பட வேண்டியவர்கள். அவர்களுடைய உயரம், உடல் எடை, இரத்த அழுத்தம், சிறுநீர்ப்பரிசோதனை முடிவுகள் யாவும் அந்த குழந்தையின் வாழ்க்கை முழுவதும் சோதிக்கப்பட வேண்டியவையாகும்.

சிறுநீர்ப் பாதையில் தொற்று உடைய ஒரு குழந்தை எப்பொழுது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறல் வேண்டும்?

 • நீண்டு நிற்காது அடிக்கும் காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல், வலி அல்லது சிறுநீர் கழிக்கும்பொழுது வரும் எரிச்சல், சிறுநீர் நாற்றமடிப்பது, அல்லது சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது,
 • வாந்தி எடுத்தால், அதன் மூலம் உணவு உட்கொள்ளப் பட முடியாது போதல்,
 • உடலில் நீர்ச்சத்து குறைந்து போதல். அதனால் குடிநீர் போன்ற பானங்களைக் குடிக்க முடியாது போதல்
 • அடிவயிற்றின் பின்பகுதியில் வலி
 • எப்பொழுதும் ஒரு எரிச்சல் உணர்வு, பசிக் குறைவு, படிப்பில் கவனக் குறைவு, தேர்வுகளில் சுணக்கம், அல்லது குழந்தை சுகவீனப் படுதல்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil/

3.1724137931
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top