பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய்

நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நாள்தோறும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. ஏன் உலகெங்கிலும் பெருகிக் கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய்களுடைய நோயாளிகளின் பெருக்கமும் ஏற்படுகிறது.

நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய் என்றால் என்ன?

தொடர்ந்து இடைவிடாது அதிக அளவில் இரத்தத்தில் நிற்கும் சர்க்கரையின் அளவு சிறுநீரகங்களின் மிக மெல்லிய சன்னமான இரத்தக்குழாய்களை பழுதடையச்செய்கின்றன. இது நீண்டநாள் தொடரும் நீரிழிவு நோயின் குணமாகும்.

இதனால் உயர்இரத்த அழுத்தம், வீக்கங்கள், மற்றும் சிறுநீரகத்தின்மீது தாக்கங்கள் போன்றவை ஏற்படுகின்றன. இறுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் தாக்கம் மிக மோசமாக சிறுநீரகங்களை பாதித்து விடுகிறது. நீரிழிவு நோயினால் வரும் இந்த சிறுநீரகப் பிரச்னைக்குத்தான் End stage kidney disease என்ற பெயர் சூட்டப்படுகிறது. மருத்துவ உலகில் இதற்கு diabetic Nephropathy என்று பெயர்.

மேற்கண்ட நோயைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத்துவம் என்ன?

 • நீரிழிவு நோய் உலகம் முழுவதுமே நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.
 • இந்த நோய் ஒன்றே மிக மோசமாக சிறுநீரகங்கள் பாதிப்பு அடையக்கூடிய நிலையை தோற்றுவிக்கிறது.
 • தீவிரமான சிறுநீரக பாதிப்பினால் அவதியுறும் 40 லிருந்து 45 சதவீத நோயாளிகள் எல்லோருமே நிரிழிவு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களே.
 • இப்படி நோய், முடிவு-நிலையை-நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு ஆகும் மருத்துவச்செலவு மிக அதிகம். வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவைப் போன்ற நாடுகளில் இந்த அதிகமான செலவைத்தாங்கி கொள்பவர்கள் மிகக்குறைவு.
 • விரைவிலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நீரிழிவுடன் கூடிய சிறுநீரக பாதிப்புக்களை தடுக்க முடியும். முறையான சிகிச்சையும் தொடர்ந்து இடைவிடாது மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளும், டையாலிஸிஸ் அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்தும் நாளை தள்ளிப் போடும்.
 • இந்நோயுடன் கூடிய இருதயக் கோளாறு உள்ளவர்கள் விரைவில் இறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறது.
 • ஆகவே விரைவிலேயே இந்த நோயைக் கண்டறிவது மிக முக்கியம்.

நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களில் எத்தனை பேருக்கு மேற்கண்ட நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய் வரும்?

நீரிழிவு நோய் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு அறியப்படுகிறது. நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இரண்டிலும் சற்று வேறுபட்டு இருக்கின்றன.

முதல் வகை (இன்சுலினால் மட்டுமே கட்டுப் படுத்தப் படக்கூடியவை) : இதற்கு டைப் 1 என்று சொல்லுவார்கள். இதைக் கட்டுப்படுத்துவதற்கு இன்சுலின் அவசியம் வேண்டும். சுமார் 30 லிருந்து 35 சதவீதம் வரை இருக்கும் நோயாளிகளுக்கு இந்த நோய் வருகிறது.

டைப் 2. வகை நீரிழிவு நோய் (இன்சுலின் இல்லாமல் கட்டுப்படுத்தப் படக் கூடியவை) : இந்த நோய் பொதுவாக வயது முதிர்ந்தவர்களை மட்டும் தாக்குகிறது. பெரும்பாலானாவர்களுக்கு இந்த நோயை இன்சுலின் இல்லாமலேயே கட்டுப்படுத்தி விடலாம். 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை இதே நோய் தான் நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோயை உருவாக்கி விடுகிறது. இந்த வகை நோய்தான் மிக மோசமாக உருவெடுக்கும் சிறுநீரக நோய் வருவதற்கு முதல் காரணம். புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் 3 க்கு 1 என்ற விகிதத்திலேயே இருக்கக் காணப்படுகிறார்கள்.

எவ்வகையான நீரிழிவு நோய்க்காரர் நீரிழிவு நோயோடு சம்பந்தப்பட்ட சிறுநீரக நோயால் தாக்கப்படுகிறார்கள்?

இதை முன்கூட்டியே அறிந்து சொல்வது சற்று கடினம். ஆனால் அதற்கு உண்டான அறிகுறிகளும் பெருவாரியான அடையாளங்களும் கீழ்க்கண்டவை ஆகும்.

 • டைப் 1 நோய் 20 வருடங்களுக்கு முன்பே கண்டிருக்கப்படல் வேண்டும்.
 • நீரிழிவு நோயானது அவ்வளவு முறையாகவும் முழுமையாகவும் கட்டுப்படுத்தாமல் போயிருக்கும்.
 • இரத்த அழுத்தம் முழுமையாகக் கட்டுப்படுத்தப் படாமல் போயிருக்கலாம்.
 • குடும்பத்திலேயே நீரிழிவு நோய் உள்ளவர்களும் தீவிரமாக தாக்கும் சிறுநீரக நோயுள்ளவர்களும் இருக்கலாம்.
 • கண் பார்வையில் கோளாறு (diabetic retinopathy) அல்லது நரம்புகள் தாக்கப்பட்டிருக்கும் நோய் (diabetic neuropathy) நீரிழிவினால் வந்திருக்கலாம்.
 • சிறுநீரில் புரோட்டின், உடல் பருமன், சிகரட் புகைத்தல், மற்றும் சீரம் போன்ற lipid திரவங்கள் அதிக நிலையில் இருக்கலாம்.

நீரிழிவு நோய்க்காரர்களுக்கு எப்பொழுது அந்த நோய் சார்ந்த சிறுநீரக நோய் உருவாகும்?

இந்த நோய் உருவாவதற்கு பல வருடங்கள் ஆகும். ஆகவே நீரிழிவு கண்டு முதல் 10 ஆண்டுகளில் உருவாவது வெகு சொல்பமே. இந்த நோயின் அடையாளங்கள் வெகுவாகத் தென்படுவதற்கு டைப் 1 நீரிழிவுநோய் கண்டு 15 முதல் 20 ஆண்டுகள் பிடிக்கும். அப்படி நீரிழிவு நோய் கண்டு முதல் 25 ஆண்டுகளுக்குள் இந்த நோய் காணப்படாவிட்டால், அதற்குப் பிறகு இந்த நோய் வரும் சாத்தியக் கூறு மிக சொல்பமே.

அப்படி சந்தேகப் படக் கூடிய நிலை எது?

கீழ்க்கண்ட நிலைகளில் இந்த நோய் இருப்பதின் சாத்தியக் கூற்றை ஓரளவு அனுமானிக்கலாம்.

 • சிறுநீர் கழிக்கும் பொழுது நுரைத்துப் போதல் ஆல்புமின், புரோட்டின் ஆரம்ப நிலைகளில் சிறுநீரில் கலந்திருப்பதைக் காணலாம்.
 • இரத்த அழுத்தம் அதிகமாகிப் போதல். அல்லது ஏற்கனவே இருக்கும் இரத்த அழுத்தம், மேலும் மோசமாகுதல்.
 • கணுக்காலில் வீக்கம், பாதங்களிலும் முகத்திலும் வீக்கம், சிறுநீரின் அளவு குறைவாகப் போக ஆரம்பித்தல், அல்லது உடல் எடை கூடுதல் (திரவங்களின் அதிகரிப்பினால் வரும் எடை கூடுதல்)
 • இன்சுலின் தேவை குறைவாதல் அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகளின் தேவை குறைதல்.
 • தாழ்நிலை சர்க்கரை நோய் (hypoglycemia) அடிக்கடி மேவி விடுதல், நோயின் வளர்ச்சி கட்டத்தில் சரியாக கட்டுப்படுத்தப் படாத நிலையில், அதிக ஆன்டிபயாடிக் மருந்து அளவுகளால் கட்டுப்படுத்தப்படுவது இருந்தால்
 • மருந்தே இல்லாமல் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப் படுவது. இப்படி மருந்தில்லாமல் கட்டுப்படுத்தப் படுகிறது என்று பல நோயாளிகள் பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு. ஆனால் அவர்கள் எல்லோருமே நோயை மேலும் தீவிரப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
 • தீவிரமான சிறுநீரக நோய்கள் உள்ளன என்பதற்கான அடையாளங்களாக, நலிவான உடல் நிலை, உடல் அசதி, பசியின்மை, வாந்தி எடுத்தல், அரிப்பு எடுத்தல் பயத்தினால் முகம் வெளிறிப் போதல், மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஆகும்.
 • இரத்த பரிசோதனையின்பொழுது கிரியேட்டினைன் அளவும் யூரியாவின் அளவும் அதிகமாகக் காணப்படுதல்.

மிக ஆரம்ப நிலையிலேயே இந்த நோயை எப்படிக் கண்டுகொள்வது?

இரண்டு முக்கியமான சோதனைகளால் இதைக் கண்டறியலாம். ஒன்று சிறுநீரில் புரோட்டின் அளவைக் கண்டு பிடிக்கும் சோதனை, இரண்டாவது கிரியேட்டினைனின் அளவைக்காணும் சோதனை (eGFR). நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோயை அறிவதற்கு ஒரு லட்சியகரமான சோதனை என்னவென்றால் மைக்ரோ ஆல்புமெனோரியா சோதனை ஆகும். அடுத்து வருவது வழக்கமாக சிறுநீரில் தோய்த்து எடுத்துப் பார்க்கும் dipstick சோதனையாகும். அதுவே மேற்கண்ட முடிவுகளை சரியாகத்தரும் நோய். பெரும்பாலும் macroalbuminuria சற்று அதிகமானவுடனேயே தெரியவரும்.

மைக்ரோ ஆல்புமினூரியா மற்றும் மேக்ரோ ஆல்புமினூரியா என்பவை என்ன?

ஆல்புமினூரியா என்றால் சிறுநீரில் ஆல்புமின் (ஒரு வகை புரோட்டீன்) இருப்பதாக அறியலாம். microalbuminuria என்பது மிகக் குறைந்த அளவே சிறுநீரில் காணப்படும் புரோட்டினைக் குறிக்கும். இது தனிப்பட்ட சோதனைகள் மூலமே தெரியவரும். macroalbuminuria என்பது சிறுநீரின் மூலமாக வெகு அதிகமாக (300மி.கி./ஒருநாள் க்கு என்ற அளவில்) புரோட்டீன் வெளியேறி விடுவதாகும். இதை வழக்கமாக dipstick சோதனை மூலம் அறியலாம்.

மைக்ரோ ஆல்புமினியாவின் அளவைக் காண சிறுநீர் சோதனை ஏன் செய்ய வேண்டும்?

இந்த சோதனையே நீரிழிவு சம்பந்தப்பட்ட சிறுநீரக பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்து காண்பிக்கிறது. இந்த நிலையிலேயே நோயைக் கண்டு கொள்வதினால் (அதிக தீய விளைவுகளின் சாத்தியக் கூறுகளைக் கொண்ட நோய்) நோயைக் கட்டுப்படுத்தும் வழிகளை எளிதாகச் செய்ய முடியும்.

இந்த சோதனையை வைத்தே, நீரிழிவு நோய் கொண்டு வரும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்டறிய முடியும். இதன் மூலம் வழக்கமாக நோய் தீவிரமடைவதற்கு 5 வருடங்களுக்கு முன்பே கண்டறியலாம். அவை சீரம் கிரியேட்டினைன் அளவை அதிகமாகக் காண்பிக்கும். அத்துடன், இந்த சோதனை தனியாக இருதய கோளாறுகள் உருவெடுப்பதையும் காண்பிக்கும்.

எத்தனை முறை சிறுநீர்ப் பரிசோதனை மேற்கண்ட காரணத்திற்காக செய்யப் படல் வேண்டும்?

டைப் 1 நீரிழிவு நோயைப் பொருத்த வரை மேற்கண்ட சோதனை நீரிழிவு நோய் கண்டு 5 வருடங்களுக்குப் பிறகு செய்யப் படல் வேண்டும். அதை அடுத்து ஒவ்வொரு வருடமும் செய்தல் வேண்டும். டைப் 2 நீரிழிவு நோயைப் பொறுத்த வரையில், இந்த சோதனை நோயை முதலில் கண்டறியும்பொழுதும் அதற்குப்பிறகு ஒவ்வொரு வருடமும் செய்யப்படல் வேண்டும்.

மேற்கண்ட சோதனைக்கு சிறுநீர் எப்படி பரிசோதிக்கப் படுகிறது?

சிறுநீரில் உள்ள மிக நுண்ணிய அளவு புரோட்டீனை இது கண்டறிந்து விடும். இது வழக்கமான சிறுநீர்ப் பரிசோதனையில் தெரியவராது.

நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய்க்கான சிகிச்சை

 • முதலில் நீரிழிவு நோயை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றி யோசியுங்கள்.
 • இரத்த அழுத்தத்தை மிக நுணுக்கமாக கட்டுப்பாடு செய்து வாருங்கள். சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு இதுவே முதல் முதல் செய்யப்படும் ஆரம்பம். இரத்த அழுத்தத்தை முறையாக ஒழுங்கு தவறாமல் அளந்து வரவும். அப்படிச் செய்து 130/80 என்ற அளவுக்குக் கீழே இருக்கச்செய்யுங்கள். உயர்இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்து வந்தாலே சிறுநீரக நோய்கள் தீவிரமடைவதில்லை.
 • நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பான வகையில் நிவாரணம் கொடுத்து உயர் இரத்த அழுத்தத்தைப் பாதுகாக்கும் காவல் மருந்துகளாக, Angiotensin converting enzyme inhibitors and angiotensin receptor blockers உபயோகப்படுத்தப்பட்டு சிறப்பான வகையில் உதவி செய்கின்றன. இவற்றிற்கு உரிய செயல்பாட்டைத் தவிர இன்னொரு உபரியான நன்மை என்னவென்றால், இவை சிறுநீரக நோய்கள் தீவிரமாவதை நிதானப்படுத்துகின்றன. சிறுநீரகங்களின் அதிக பட்ச பாதுகாப்பிற்காக, இவ்வகை மருந்துகள் நோயின் மிக ஆரம்ப காலங்களிலேயே உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அப்பொழுதுதான் microalbuminuria சிறுநீரில் காணப்படாது.
 • வீக்கத்தைக் குறைப்பதற்காக, சிறுநீரின் அளவை அதிகப்படுத்தும் மருந்துகள் எல்லாம் கொடுக்கப்பதோடு, உட்கொள்ளப்படும் உப்பையும் திரவங்களையும் மட்டுப்படுத்த வேண்டும்.
 • நீரிழிவைச் சார்ந்த சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் உள்ளவர்கள், தாழ்நிலை-சர்க்கரை என்ற நிலைக்கு ஆளாவார்கள். ஆகவே அவர்களுக்கு எல்லாம் சிறப்பான மாற்றங்கள் நீரிழிவு மருத்துவத்தில் செய்ய வேண்டும். மிக விரைவாகவே செயல்படும் இன்சுலின் மருந்தை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உபயோகிக்க வேண்டும். தாழ்நிலை-சர்க்கரையைக் குறைப்பதற்கு வெகு நேரம் கழித்து செயல்படும் மருந்துகளை தவிர்க்கவும். சீரம் கிரியேட்டினைனின் அளவு 1.5 மி.கி./டெ.வி.க்கு அதிகமாக இருந்தால் மெட்ஃபார்மின் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.
 • கிரியேட்டினைனின் அளவு வழக்கமாக நீரிழிவைச் சார்ந்த சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
 • இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களின் அபாய சாத்தியக் கூறுகளை முறையாக ஆராய்ந்து மேலாண்மை செய்யவும். (புகை பிடிப்பது, அளவு அதிகமாக இருக்கும் லிபிட் திரவங்கள், உயர் அளவுக்ளூகோஸ், அதிக இரத்த அழுத்தம் போன்றவை) இவற்றைப் பற்றி சிந்திக்கவும்.
 • நீரிழிவைச் சார்ந்த சிறுநீரக நோயினால் மிகவும் முதிர்ந்த நிலையில் சிறுநீரகங்கள் செயலிழந்து விடும்பொழுது, டையாலிஸிஸ் அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தும் வழி ஒன்றுதான் நோய்க்குதீர்வு காணும்.

நோயின் எந்த நிலையில் நோயாளி மருத்துவரைக் கண்டு ஆலோசனை பெறல் வேண்டும்?

கீழ்க்கண்ட நிலைகளில் நோயாளி மருத்துவரைக் கண்டு ஆலோசனை பெறல் வேண்டும்.

 • மிக விரைவாகவும் எந்த வித காரணமும் இன்றி எடை கூடி விடுதல், வெளியேறும் சிறுநீரின் அளவு குறிப்பிடப்படும்படியாகக் குறைந்து விடுதல், வீக்கங்கள் மேலும் அதிகமாகி விடுதல் அல்லது மூச்சு விடுதலில் சிரமம்.
 • மார்பில் வலி ஏற்கனவே இருக்கும் உயர் இரத்த அழுத்தம் மேலும் அதிகமாகி Polycystic Kidney Disease விடுதல், அல்லது மிகவும் குறைந்த வேகத்திலோ அல்லது மிக அதிகமான வேகத்திலோ இருதயம் துடிப்பது.
 • மிக மோசமான நலிவு, முகம் வெளிறிப் போதல், மிக மோசமாக பசி இல்லாமல் போதல்
 • நிரந்தரமான காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல், வலி அல்லது சிறுநீர் வெளியேறும்பொழுது எரிச்சல், சிறுநீரில் சகிக்க முடியாத நாற்றம், அல்லது சிறுநீரோடு இரத்தம் கலந்து வெளிப்படுதல்,
 • அடிக்கடி தாழ்நிலை-சர்க்கரை-நிலைக்குச் சென்று விடுதல், அல்லது இன்சுலினின் தேவை குறைந்து விடுதல் அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகளின் தேவை குறைதல்.
 • மனம் குழம்பிப்போதல், மயக்கம் அல்லது உடல் பதை பதைப்பும் நடுக்கமும் ஏற்படுதல்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil

2.84615384615
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top