பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய்

பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Autosomal dominant polycystic kidney disease (ADPKD) எனும் நோய் மிகவும் பொதுவாகக் காணப்படும் மரபுவழி வரும் சிறுநீரக நோய். இது சிறுநீரகத்தின் மீது நீர்க்கட்டிகள் தோன்றி விடுவதால் வரும் நோய். மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும். சிறுநீரக நோய்களிலேயே இது நான்காவது இடத்தை வகிக்கிறது.

இந்த நோய் எப்படி வருகிறது?

இந்த நோய் எல்லா மனித இனத்தையும் தாக்கக் கூடியது. ஆணுக்கோ பெண்ணுக்கோ வரக் கூடியது. உலக அளவில் ஆயிரத்தில் ஒருவர் என்ற விகிதத்தில் இது தாக்குக்கிறது. டையாலிஸிஸ் சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்பவர்களிலும் சரி, அல்லது மாற்றுச் சிறுநீரக சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்பவர்களிலும் சரி சுமார் 5 சதவீத நோயாளிகளை இந்த நோய்தாக்குகிறது.

இந்த நோயால் சிறுநீரகங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன?

இந்த நோயால் சிறுநீரகத்தைச் சுற்றிலும் மேற்புறத்தில் எண்ணற்ற நீர்க்கட்டிகள் உருவாகி இருப்பதைப் பார்க்கலாம். இரு சிறுநீரகங்களின் மீதும் இவற்றைக் காணலாம்.

அவற்றின் பருமன்களும் அளவுகளும் மாறலாம். (விட்டம் ஒரு சிறு ஊசியின்தலை அளவிலிருந்து மிகப் பெரிய அளவு அதாவது 10 செ.மி. வரை இருக்கலாம் அல்லது இன்னமும் பெரிதாக இருக்கலாம்.)

காலம் செல்லச் செல்ல அதன் அளவு பெருகிக் கொண்டே போகும். அதன் உருவப் பெருக்கம் சிறுநீரகத்தை அழுத்தி பெருந் தாக்கத்தைக் கொண்டு வரும்

இந்த தாக்கமே இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். சிறுநீரில் வெளிச்செல்லும் புரோட்டினின் அளவு அதிகமாகும். இதன்மூலம் சிறுநீரகங்கள் மிக மோசமான நிலை அடைந்து செயலிழக்கும்.

இந்த நோயின் அடையாளங்கள்

இந்த நோயை தாங்கிக் கொண்டே இருந்து பல நோயாளிகள் பல பத்தாண்டுகள்தாண்டி விடுகிறார்கள். அவர்களிடம் எந்த வித வெளிப்புற அடையாளங்கள் தென்படுவதில்லை. வெகு பலருக்கு 30 அல்லது 40 வயதிற்குப் பிறகே எந்தவித அடையாளங்களும் காணப்படுகின்றன. பொதுவாக கீழ்க்கண்ட அறிகுறிகளை அவர்களிடம் காணலாம்.

 • அதிக இரத்த அழுத்தம்
 • முதுகில் வலி, ஒரு புறத்தில் மட்டும் அல்லது இரு புறங்களில் சிறுநீரகத்தின் பக்கத்தில் வீக்கம் அல்லது பொதுவாகவே சிறுநீரகங்களில் வீக்கம் காணப்படுவது
 • சிறுநீரகத்தின் ஒரு பகுதியில் பெரும் கட்டி காணப்படுவது
 • சிறுநீரோடு இரத்தம் கலந்து போதல் அல்லது புரோட்டீன் கலந்து போதல்
 • அடிக்கடி சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்படுதல் மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் காணப்படுதல்
 • மிக மெல்ல மெல்ல சிறுநீரகங்கள் செயலிழப்பது; அதன் மூலம் மோசமான நிலைக்கு சிறுநீரகங்கள் தள்ளப்படும் நிலையின் அடையாளங்கள் காணப்படுதல்
 • உடலின் இதர பாகங்களின் மீதும் இந்த நீர்க்கட்டிகள் காணப்படுதல் - மூளை, கல்லீரல், சிறு குடல் போன்ற இடங்களில் இந்த நீர்க்கட்டிகள் காணப்படுதல், அவை காட்டும் அடையாளங்களும் இந்த நோயின் தாக்கத்தைக் காட்டுகின்றன.
 • இந்த நோயுடன் இருப்பவருக்குக் கீழ்க்கண்ட சிக்கல்களும் காணப்படும். brain aneurysm, abdominal wall hernias, infection of liver cysts , diverticulae pouches in the colon போன்ற நோய்களையும் காணலாம். இவ்வகை நோயாளிகளில் 10 சதவீதம் brain aneurysm என்ற நோய்க்கு ஆளாகிறார்கள். இந்த நோயால் இரத்தநாளங்கள் வலுவிழந்து விடுகின்றன. வீக்கம் காணப்படும். மேலும் இந்த நோய் தலைவலியைக் கொண்டு வரும். சிறு சிறு இரத்த நாளங்கள் வெடிக்கும். இது வாதத்தை ஏற்படுத்தும். ஏன் இறப்பும் சம்பவிக்கலாம்.

இந்த நோய் இருக்கும் அனைவருக்கும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறதா?

இல்லை. இவ்வகை நோயால் தாக்குண்டவர்கள் எல்லோருக்குமே சிறுநீரகங்கள் செயலிழப்பதில்லை. இந்த நோயால் தாக்குண்டவர்களில் 50 சதவீத நோயாளிகளுக்கு 60 வயதை அடைந்தவுடன் சிறுநீரகங்கள் செயலிழக்கும். 60 சதவீத நோயளிகளை 70 வயது அடைந்தவுடன் தாக்கும். மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் PKD எனும் நோய் தாக்கக் கூடிய சாத்தியக் கூறு CKD யின் தாக்குதல் இருந்தாலே இருக்கும். அதுவும் ஆண்களுக்கு அதிகம். இளம் வயதிலேயே தாக்கம் இருக்கும். உயர் இரத்த அழுத்தம் இருக்கும். புரோட்டினோ அல்லது இரத்தமோ சிறுநீரோடு கலந்து வெளியேறும், சிறுநீரகங்கள் பெரிதாகும்.

இந்த நோயை எப்படி கண்டுபிடிப்பது?

இந்த நோயை அடையாளம் கண்டு கொள்ள வழக்கமாகச் செய்யப்படும் சோதனைகள் பின்வருமாறு.

 • அல்ட்ராசானிக் சோதனைகள் : இந்த சோதனையே வழக்கமாகச் செய்யப்படும் பரிசோதனை ஆகும். இதுவே மிகவும் ஊர்ஜிதமாக எடுத்துச் சொல்லும் ஒரு சோதனை. எளிது, பாதுகாப்பானது வலியில்லாதது மற்றும் செலவுகுறைச்சலானது.
 • CT or MRI Scans : இந்த சோதனைகள் யாவும் மேலும் துல்லியமாக முடிவுகளைக் கொடுக்கும். ஆனால் செலவு மிக்கவை. இவை மிகச்சிறிய சிறுநீர்க்கட்டிகளைக் கூடத் தெரிய வைக்கும். அவற்றை இதற்கு முந்தைய சோதனையில் காண முடியாத அளவுக்கு சிறியவையாக இருக்கும்.
 • Family Screening : குடும்ப சரித்திரத்தையே எடுத்துப் பார்த்தல். இது வம்சாவழி நோயானதால், ஒவ்வொரு குழந்தைக்கும் வரக் கூடிய வாய்ப்பு 50:50 இருக்கிறது. ஆகவே குடும்ப அங்கத்தினர்கள் யாவரையும் சோதித்துப் பார்த்தலினால் நோயின் அடையாளங்களை விரைவில் கண்டு கொள்ளலாம்.
 • தற்செயலாக அடையாளத்தைக் கண்டுபிடித்தல்: வழக்கமான உடல் பரிசோதனையில் இது தெரிய வரலாம். அல்லது அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் தெரிய வரலாம். பின்னதான சோதனை வேறு எதற்கோ எடுக்கும்பொழுது இது தெரிய வரலாம்.
 • மரபணுவின் சம்பந்தத்தை அலசுதல் : இது மிகச் சிறப்பான சோதனையாகும். குடும்பத்தில் எவருக்கு இந்த நோய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே இந்த சோதனையின் நோக்கமாகும். இந்த சோதனையை முன்னே சொல்லப்பட்ட சோதனைகள் வெற்றியளிக்காத பொழுதே செய்தல் வேண்டும். இந்த சோதனை மிகவும் சொல்பமான நிலையங்களே மேற்கொள்வதாலும், மிகவும் செலவு மிக்கதாக இருப்பதாலும், இந்த சோதனையை அதிகளவு மேற்கொள்வதில்லை.

குடும்ப அங்கத்தினர்களில் எவரெவர் இதற்காக சோதிக்கப் படல் வேண்டும்?

சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள் முதலில் இந்த நோய்க்காக சோதிக்கப் படுதல் வேண்டும். அவர்களுக்கும் மேல், அவர்களுடைய தாய் தந்தையரையும் சோதித்தல் வேண்டும். அவர்களிடமிருந்துதானே இந்த நோய் வம்சாவழியாக வந்திருக்க வேண்டும்.

நோயாளிகளின் குழந்தைகள் அனைவருமே இந்த நோயை வம்சாவழியாகப் பெற்றிருப்பார்களா?

இல்லை. இந்த நோய் வம்சாவழியாக வரும் நோய். இதில் தாய்க்கோ தந்தைக்கோ மிகவும் வலுவாகத்தாக்கக்கூடிய சாத்தியக் கூறு இருக்கிறது. குழந்தைகளுக்கு வாய்ப்பு 50 சதவீதம் இருக்கிறது.

இந்த நோயை எப்படி தடுப்பது?

இப்பொழுது இந்த நோய்க்கு முறையான சிகிச்சை எதுவும் இல்லை. இது உருவாவதையோ அல்லது நீர்க்கட்டியின் வளர்ச்சியைக் குன்றச் செய்வதற்கோ வழியில்லை.

குடும்ப அங்கத்தினர்களையே பரிசோதித்து விரைவிலேயே நோயின் அடையாளங்களைக் காண்பது மிக நல்ல பயன்களை நல்கும். இந்த நோயை மேலும் அதிக நன்மைகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பதற்கு அது உதவும். அதிக இரத்த அழுத்தத்தையும், நோயின் அடையாளங்களைக் கண்டு கொள்வதும் நோயின் வளர்ச்சியைத் தடுக்க உதவும். இந்த நோய் உள்ளவர்கள் உணவுப் பழக்க வழக்கங்களை நோய்க்குத்தக்கவாறு சீராக்கிக் கொள்ளுதல் அவசியம். அவை சிறுநீரகங்களையும் இருதயத்தையும் பாதுகாக்கும் அடையாளங்கள் காணப்படாத பொழுதே சம்பந்தப் பட்ட நபர் பதை பதைப்புக்கு உள்ளாவது ஒரு பிரதான துரதிர்ஷ்டம்.

இந்த நோய் பரவுவதை ஏன் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது?

இந்த நோயை வழக்கமாக ஒருவருக்கு 40 வயது ஆகும்பொழுதோ அல்லது அதற்கு அதிகமாக ஆகும் பொழுதுதான் கண்டறியமுடியும். இந்த வயதிற்கு முன் அனேகமாக அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து விட்டிருக்கும். ஆகவே அடுத்த சந்ததியாகப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பரவுவதைதடுக்கவே முடியாது.

இந்த நோய்க்கு எப்படி சிகிச்சை செய்ய வேண்டும்?

PKD எனும் இந்த நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் இதற்கு சிகிச்சை அளித்தே ஆகவேண்டும். ஏன்?

* சிறுநீரகங்கள் பாதுகாக்கப் படல் வேண்டும். மிக மோசமான நிலைக்கு நோயாளியைக் கொண்டு விடுவதை எப்படியாவது தடுக்க வேண்டும். அதாவது ஒரு முடிவை நோக்கி விரையும் நோயின் தன்மையை எப்படியாவது தடுக்க வேண்டும். அப்படிச் செய்தாலே நோயாளி நீடித்து உயிருடன் இருப்பார்.

அப்படிப் பட்ட சிகிச்சைக்கு பிரதான அம்சங்களாக இருப்பவை என்ன?

 • நோயின் ஆரம்ப காலங்களில், நோயாளிக்கு எந்தவித அடையாளங்களும் தென்படுவதில்லை. இவை எதுவும் எவ்வளவு ஆழமான சோதனைகளிலும் தெரிய வர வாய்ப்பு இல்லை. ஆனால் இவ்வகை நோயாளிகளை அடிக்கடி சோதித்து வருதல் மிக அவசியம்.
 • அடையாளங்களைக் கண்டறிந்து சிக்கல்கள் வராமல் பாதுகாத்தல் வேண்டும்.
 • இரத்த அழுத்தத்தை கண்டிப்பாக இருக்க வேண்டிய நிலையில் வைத்திருக்கும் பழக்கத்தை கைக்கொள்ளுதல் வேண்டும். அது ஒன்றே சிறுநீரக நோய்களை தீவிரமாகி வளர்ந்து கொண்டு போவதை தடுக்கும்.
 • வலிகளைக் குறைக்கும் மாத்திரைகள் மூலம் வலியைக் கட்டுப் படுத்தி வரலாம். அவை சிறுநீரகங்களுக்கு எந்தவித பாதிப்பையும் உண்டாக்காது. (aspirin and acetaminophen) போன்ற மாத்திரைகள் எந்தவித பாதிப்பையும் சிறுநீரகங்களுக்கு தராது. PKD நோயின் தீவிரம் அதிகமாக ஆக, வலியும் சாதாரண நிலையிலிருந்து தீவிரமாகிக் கொண்டே போவது அதிகமாகும்.
 • தகுந்த ஆன்டிபயாடிக் மருந்துகளின் உதவியால், சிறுநீர் செல்லும் பாதையில் உருவாகும் தொற்றுக்களை முறையானதும் சரியான காலங்களிலும் செய்தே ஆக வேண்டும்.
 • சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை அகற்ற விரைவாக சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.
 • நிரம்ப திரவங்கள் பருகுதல் வேண்டும். வீக்கங்கள் இல்லாத பொழுது அப்படிச் செய்தே ஆக வேண்டும். அந்தப் பழக்கம் சிறுநீரகப் பாதையில் தொற்று வராமல் பாதுகாக்கும்.
 • வெகு சிலருக்கு அறுவை சிகிச்சை மூலமோ கதிரியக்கம் கொண்ட சிகிச்சைகள் மூலமாகவோ முயற்சிக்கலாம். அத்தகைய சிகிச்சைகள், வலியைக் கொண்டு வர மாட்டா. இரத்தப் போக்கு அல்லது தொற்றுதல் அல்லது தடைகளை உருவாக்காது.

இந்த நோயினால் அவதிப்படுபவர் மருத்துவரை எப்பொழுது கண்டு ஆலோசனை பெறுதல் வேண்டும்?

இவ்வகை நோயாளிகள் உடனுக்குடன் மருத்துவரைக் கண்டு ஆலோசனைகள் பெறுதல் வேண்டும். அதுவும் அவருக்கு -

 • காய்ச்சலோ அல்லது தீடீரென்று அடிவயிற்றில் வலி ஏற்பட்டாலோ அல்லது சிறுநீர் இரத்தச் சிவப்பாக வெளியேறினாலோ
 • கடுமையானதும் அடிக்கடி மீண்டும் தாக்கும் தலைவலி உண்டானால்
 • ஒரு விபத்தில் சிறுநீரகங்கள் பாதிக்கப் பட்டால் அல்லது சிறுநீரகங்கள் பெரிதாகிய விபத்தால் சிறுநீரகங்களுக்கு காயம் ஏற்பட்டால்
 • மார்பில் வலி, பசியே சுத்தமாக இல்லாமல் போவது, மிக மோசமாக வாந்தி எடுத்தல், தசைகளில் நலிவுணர்ச்சி, குழப்பம், மயக்கம் மற்றும் நினைவிழந்த நிலை அல்லது உடலில் நடுக்கம் - இவை கண்டால்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil/chapter/618

3.10714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top