பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தொற்றா நோய்கள் / பரவும் தன்மையற்ற தொழில் சம்மந்தமான நோய்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பரவும் தன்மையற்ற தொழில் சம்மந்தமான நோய்கள்

பரவும் தன்மையற்ற நோய்கள் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் பரவா தன்மையுடைய நோய்கள் பெரியவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் இருதய நோய்களும், புற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 70 - 75% ஆக உள்ளது. நீண்ட கால நோய்கள் சில காரணங்களால் தொடர்ந்து அதிகரித்து இருக்கின்றன. சில நாடுகளில் மக்கள் உயிர்வாழும் நாட்கள் அதிகமாக இருந்தாலும், நீண்டகால நோய்களுக்கான வாய்ப்பு முதியவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. மக்களின் வாழ்க்கை முறையும் நடத்தை முறையும் மாறுபடுவது நீண்ட கால நோய்களுக்கான காரணமாகும்.

காரிய நச்சு (Lead Poisoning)

தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விஷத்தன்மை உள்ள உலோகங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும், காரீயம் லெட் முதன்மையானது.

தொழிற்சாலையில் லெட் அதிகமாக பயன்படுத்துவதின் காரணம் அதன் சில குறிப்பிட்ட தன்மைகளாகும். அவை : குறைந்த கொதிக்கும் நிலை. இதனை மற்ற உலோகத்தோடு சேர்த்தால் எளிதில் உலோக கலவை கிடைக்கும். எளிதில் ஆக்ஸிஜன் ஏற்றமடையும். அரிப்பு தன்மை இல்லாமல் இருக்கும்.

விளக்கம். ஒரு மனிதன் லெட்டை சுவாசிக்கும் போதும், உட்கொள்ளும் போதும், உறிஞ்சப்படும் போதும் அது நச்சாக மாறுபடுகின்றது. எனிடானிக் லெட் ஏசனால், லெட் ஆக்சைட் மற்றும் லெட் கார்பனேட் என்னும் லெட் சேர்மம் மிகவும் ஆபத்தானது.

காரணங்கள்: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கியமான காரணம் லெட் கேசோலின் (Gasoline) ஒவ்வொரு ஆண்டும் 1000 டன் லெட் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

மனிதன் தண்ணீர் குழாயில் தண்ணீர் அடிக்கும்போது அந்த தண்ணீர் குழாயின் மூலம் லெட் வெளியிடப்படுகிறது. லெட் பெயிண்ட் தயாரிக்கும்போதும் தொழிற் சாலையில் மின்கலம் தேக்குதல், கண்ணாடி தயாரித்தல், கப்பல் கட்டுதல் ஆகிய பணிகளில் ஈடுபடும்போது லெட் நச்சு அதிகமாக வெளிப்படுகின்றன

உடலில் உறிஞ்சப்படும் வழிகள்

லெட் நச்சு மூன்று வழிகளில் நிகழ்கின்றன

சுவாசித்தல் (Inhalation): தொழிற்சாலையில் லெட் நச்சு நிகழ முக்கிய காரணம் புகையை சுவாசிப்பது தான்.

விழுங்குதல் (Ingestion) சுத்தமில்லாத கையின் மூலம் உண்ணும் உணவிலும், குடிக்கும் தண்ணீரிலும் லெட்டை உட்கொள்கிறோம். சிறிதளவு லெட், மேல் மூச்சு குழாயிலிருந்து உறிஞ்சப்படுகிறது.

தோல் (Skin) : டெட்ரா ஈத்தைல் (Tetra Ethyl) லெட் என்னும் லெட் தோலின் வழியாக எடுத்துக்கொள்கிறது.

நோயின் அறிகுறிகள்: லெட் நச்சு தன்மையின் அறிகுறிகள் கனிம மற்றும் கரிம லெட்டின் தன்மையை பொறுத்து மாறுபடுகிறது. கரிம லெட் நச்சுத் தன்மையின் அறிகுறிகளாவன பசியின்மை, வயிற்றுவலி, ஈறுளில் நீலநிறம், இரத்த சோகை, மணிக்கட்டு தளர்வு, பாத தளர்வு மற்றும் மலச்சிக்கல்.

கனிம லெட் நச்சுத் தன்மையின் அறிகுறிகளாவன: இது பெரும்பாலும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது, தூக்கமின்மை, தலைவலி, மனக்குழப்பம், உளறல்.

நோய் கண்டறிதல்: நோய் கண்டறிதல் கீழ்கண்டவற்றை அடிப்படையாகக் கொண்டது. 1) நோயின் ஆரம்ப கால விளக்கவுரை (History) 2) லெட் நச்சு தன்மைக்கு உள்ளான விளக்க உரை.

அறிகுறிகளும், அடையாளங்களும்: பசியின்மை, வயிற்று வலி, தொடர்ந்து தலைவலி, மலச்சிக்கல், வயிற்று முறுக்கு, தசை மற்றும் மூட்டு வலி, இரத்த சோகை, ஈறுகளில் நீல நிறம்.

ஆய்வக பரிசோனை : சிறுநீர் காப்ரோபோர்ப்ஜியா சோதனை (Coproporphagia : இது பாதிப்புக்கு உள்ளாகாத மனிதனில் 150 மைக்ரோ கிராம் லிட்டருக்கு குறைவாக இருக்க வேண்டும். இரத்தம் மற்றும் சிறுநீரில் லெட்டின் அளவு: ஆய்வு பரிசோதனை மூலம் இரத்தம், சிறுநீரில் இருக்கும் லெட்டை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.

தடுப்பு முறைகள்:

பதிலீடு செய்தல் (Substitution : குறைந்த நச்சுத்தன்மைக் கொண்ட பொருட்களை லெட்டுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

தனிமைப்படுத்துதல் (Isolation) : கேடு விளைவிக்கும் லெட் புகை மற்றும் தூசியைத் தோற்றுவிக்கும் செயல்பாடுகளைத் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

செயற்கை காற்றோட்டம் : (Exhaust Ventilation லெட் புகை மற்றும் தூசியை நீக்குவதற்கு தேவையான அளவு செயற்கை காற்றோட்டம் அமைத்தல் வேண்டும்.

தற்பாதுகாப்பு: தொழிலாளாலர்கள் தேவையான அளவு காற்றோட்டம் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

வீட்டின் பாதுகாப்பு : லெட் தூசு இருக்கும் வீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலை : வேலை செய்யும் இடத்தில் லெட்டின் அளவு 2 mg/10 CC க்கு குறைவாக இருக்க வேண்டும். இதுவே, அனுமதிக்க கூடிய அல்லது எல்லைக் கோட்டு அளவாகும்.

குறித்த காலத்தில் தொழிலாளர்களின் சோதனை: எல்லா தொழிலாளர்களுக்கும், குறிப்பிட்ட காலங்களில் மருத்துவ பரிசோதனை, இரத்த மற்றும் சிறுநீரின் லெட்டின் அளவு, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை கண்டறிய வேண்டும்.

சுய சுத்தம்: உணவு உண்பதற்கு முன்பாக கைகளைக் கழுவுவது முக்கியமான தன் சுத்தமாகும். இதற்கான வசதி தொழிற்சாலையில் செய்யப்படவேண்டும்.

சுகாதார கல்வி: தொழிலாளர்கள் ஆபத்துகளைப் பற்றியும், தற்பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றியும் கற்று கொடுக்க வேண்டும்.

சிகிச்சை: சிகிச்சை முறையின் முக்கிய நோக்கங்களாவன: 1) லெட் உறிஞ்சுதலைத் தவிர்த்தல். 2) திசுக்களிலிருந்து லெட்டை வெளியேற்றுதல். 3) திரும்பவும் லெட் நச்சுத்தன்மைக்கு உள்ளாவதைத் தடுத்தல். 4) லெட் நச்சுத்தன்மை உள்ளவர்களை கண்டறிவதன் மூலம் மீண்டும் லெட் நச்சுத் தன்மைக்கு ஆளாவதைத் தடுக்கலாம். 5) சலைன் பர்ஜ் (Saline Prge) குடலில் உள்ள உறிஞ்சப்படாத நச்சை வெளியேற்ற உதவுகிறது. பென்சிதமைன் (Pencithamine) CA-EDTA-யைப் போன்று வீரியத்தன்மை கொண்டது. இது ஒரு கிலேடிங் (Chelating) காரணி இது உடலில் இருந்து லெட்டை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது.

தொழிற் சம்பந்தமான புற்றுநோய்

இந்த வகையான புற்றுநோய் தொழிற் சாலையில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இது உடலில் உள்ள, தோல், நுரையீரல், சிறுநீர்ப்பை, இரத்த உறுப்புகளைப் பாதிக்கிறது.

தோல் புற்றுநோய்

பெருவால் பூட் (Peruval Poot என்பவரால் 1775ம் ஆண்டு புகைப்போக்கியை சுத்தம் செய்பவர்களிடம் விரைப்பை புற்றுநோயைக் கண்டறிந்தார். மேலும் தோல், விரைப்பை மற்றும் மற்ற உறுப்புகளில் வரும் புற்றுநோயானது தார், நிலக்கரி, எக்ஸ்ரே மற்றும் தூசு, சில வகையான எண்ணெய் போன்றவைகளால் உண்டாக்கப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய்

இது வாயு தொழிற்சாலை, ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை, நிக்கல் மற்றும் குரோமியம் தொழிற்சாலை, ஆர்சனிக் தொழிற்சாலை, கதிர்வீச்சுத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. நிக்கல் குரோமைட், ஆஸ்பெஸ்டாஸ், நிலக்கரி, தார், கதிர்வீச்சுப் பொருட்கள் மற்றும் புகையிலைப் போன்றவை இந்நோயை உண்டாக்குகின்றன. ஆர்சனிக் பெரிஸியம் என்ற ஐசோபுரைப்பைல் எண்ணெய் புற்றுநோய் தோற்றுவிக்கும் காரணியாக கருதப்படுகிறது.

சிறுநீர்ப்பை புற்றுநோய்

சிறுநீர் பை புற்றுநோயானது முதலில் 1995ம் ஆண்டு அவீலின் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களிடம் கண்டறியப்பட்டது. ஆனால் அதன் பிறகு ரப்பர் தொழிற்சாலைகளில் இருப்பதாக கண்டறியப்பட்டது. தற்போது சிறுநீர்ப்பை புற்றுநோயானது உடலின் சிதைக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறும் அரோமேடிக் அமைன்களால் உண்டாக்கப்படுகிறதெனக் கண்டறியப் பட்டுள்ளது. சாயம் மற்றும் சாயம் சார்ந்த தொழிற்சாலைகள், ரப்பர், வாயு மற்றும் மின் கேபிள் தொழிற்சாலைகள் சிறுநீர்பை புற்றுநோயுடன் தொடர்புடையவைகளாக கருதப்படுகிறது.

இரத்தப் புற்றுநோய்

பென்சால், எக்ஸ்ரே மற்றும் கதிர்வீச்சு நீண்ட நேரம் வெளிப்படுதல் இந்நோய்க்கு காரணங்களாகும். பென்சால் ஒரு கனரப்பாளாக நிறைய தொழிற்சாலைகளில் பயன் படுத்தப்படுகிறது. இரத்தப் புற்றுநோய் வெளிப்பாட்டிற்கு உட்பட்டு நிறுத்தப்பட்டு பிறகும் ஏற்படுத்தப்படுகிறது.

தொழிற்சார்ந்த புற்றுநோயின் பண்புகள். இது நீண்டநாள் வெளிப்பாட்டிற்கு பின்பு ஏற்படும். நோய் உண்டாவதற்கும், கதிரியக்க வெளிப்பாட்டிற்கும் இடையேயான கால அளவு 10 - 25 ஆண்டுகள் வரை இருக்கலாம். வெளிப்பாடு (exposure) நிறுத்தப்பட்ட பின்பும் நோய் ஏற்படலாம். நடுத்தர வயதிற்கு முன்பே கூட புற்றுநோய் ஏற்படலாம். தன் சுத்தம், தொழிற் சார்ந்த புற்றுநோய்களை தடுக்கப் பயன்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொழிலில் குறிப்பிட்ட உடற்பகுதிகளை பாதிக்கப்படுகின்றன. (எ.கா. நுரையீரல் புற்றுநோய், நிலக்கரி ஆலையில் வேலை செய்பவர்கள்)

தொழிற்சாலை சார்ந்த புற்றுநோயினைக் கட்டுப்படுத்துதல்

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்வருமாறு:

* புற்றுநோய் காரணிகளை (Carcinogen கட்டுப்படுத்தல் அல்லது விடுதல்.

* நன்றாக சீரமைக்கப்பட்ட கட்டடங்கள் அல்லது இயந்திரங்கள், பாதுகாப்பு சுவர்கள் etc. மூலம் புற்றுநோய் காரணிகளிலிருந்து பாதுகாக்கலாம்.

*. மருத்துவ பரிசோதனை

*. தொழிற்சாலைக் கண்காணிப்பு

*. சீரமைத்தல்.

*. தொழிற்சாலைகள் நிறுவ உத்திரவாதம்

*. சுயசுத்த நடவடிக்கைகள் (கை கழுவுதல்).

*. தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தல்.

* ஆராய்ச்சி.

வேலை பார்க்கும் இடத்தில் வரும் தோல் நோய்கள்

பல தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு தோல் பாதிப்பு ஒரு முக்கியமான நோயாகும். காரணங்கள்: இயற்பியல் சார்ந்த காரணங்கள்: வெப்பம், குளிர்ச்சி, ஈரத்தன்மை , அழுத்தம், உராய்வு, ஊடுகதிர் மற்றும் சில கதிர் வீச்சுகள்.

ரசாயணம் சார்ந்த காரணங்கள்: அமிலம், காரம், சாயங்கள், கரைப்பான், பசை பிச்சுக்கட்டி, தார், குளோரினேற்றம் செய்யப்பட்ட பினாயில் உயிரியல் சார்ந்த காரணம்: உயிரினங்கள் : நுண்ணுயிர்கள், வைரஸ், பூஞ்சை, மற்ற ஒட்டுண்ணிகள். தாவர வகை : இலைகள், காய்கறிகள், பழங்கள், மலர்கள்.

தூசி : இதன் வகைகள் Types 1. முதன்மை காரணிகள் (Primary Irritant) 2. ஊக்குவிக்கும் காரணிகள் (Sensitizing substances); முதன்மை காரணிகள் (Primary Irntants) : நீண்ட நாட்கள் அடர்த்தியான அமிலத் (ConcentrateAcid) தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முதன்மை காரணியால் நோய்கள் அதிகமாக பரவுகின்றன.

ஊக்குவிக்கும் காரணிகள்: இக்காரணிகளால் தோல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

தடுப்புமுறை : சரியான கட்டுபாட்டு முறையை பின்பற்றினால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நோயை கட்டுப்படுத்தலாம். தேர்ந்தெடுப்பதற்கு முன் தொழிற்சாலையில் மருத்துவ பரிசோதனை செய்து தொழிலாளர்களை வேலையில் எடுத்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு முறை: இவ்விடத்தில் வேலை செய்பவர்க்கு தகுந்த போதிய பாதுகாப்பு பொருட்களை அளிக்க வேண்டும்.

எப்படியெனில் நம்மை பாதுகாக்கும் ஆடைகள், பெரிய பதனிடப்பட்ட தோல் கையுறை, மேல் ஆடை, மிதியடி செருப்பு போன்றவை நம்மை பாதுகாக்க அணியலாம். பாதுகாப்பு உடைகள் அடிக்கடி துவைத்து சுத்தமாக வைப்பது நல்லது.

சுய சுத்தம் : அது போன்ற இடத்தில் வெதுவெதுப்பான நீர், சோப்பு, துண்டு போன்றவை தாராளமாக கிடைக்க வேண்டும். இந்த வசதிகளை உபயோகப்படுத்த தொழிலாளர்களுக்கு கல்வியும், ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும். எல்லா தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறையாவது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

விவசாயியின் நுரையீரல் (Farmer's Lung):

விவசாயிகளின் நுரையீரல் வைக்கோல், தானிய மணியில் புழுதி போன்றவைகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது உள்ளே செல்வதால் ஏற்படுகிறது. காரணங்கள்: ஈரப்பதமான வைக்கோல் மற்றும் தானிய புழுதியில் 30% பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளர்ந்து 40 - 50' வெப்பநிலையை அதிகரிக்கிறது. இந்த வெப்பநிலை தெர்மோ பிலிக் ஆக்டினோமைசீட்சின் (theronophilic actinomycetes) வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது தோற்றுவிக்கும் மைக்ரோ பாலிஸ்போரா ஃபெக்னி (Micro polyspora facni விவசாயின் நுரையீரல் (Farmer's lung) தோன்ற காரணமாக உள்ளது. கடுமையான தாக்குதல் பொதுவான மற்றும் நுரையீரல் அறிகுறி, உடல் நல குறைப்பாட்டையும் தோற்றுவிக்கிறது.

நோயின் அறிகுறிகளும், அடையாளங்களும் : நுரையீரல் இறுக்கமடைதல் (Pulmonary fibrosis) நுரையீரல் பாதிப்பு, கார் பல் மோனேல் (Corpulmonale)

உடல் ரீதியான அறிகுறிகள் : காய்ச்சல், உடல் வலி ; நுரையீரல் சம்மந்தமான அறிகுறிகள்: இருமல், மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்புகள்.

சிகிச்சை முறைகள்: நோய் அறிகுறிகளை குறைப்பதே சிகிச்சையின் நோக்கம். வைக்கோல் மற்றும் தானிய தூசியிலிருந்து விலகி இருக்க வேண்டும். சிகிச்சை எடுக்காவிட்டால் அன்றாட வேலையில் பாதிப்பு ஏற்பட்டால் மிக மோசமான நிலையில் இறப்பு கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. விளைவுகளைக் குறைப்பதற்கு. ஆடுமாடுகளை கவனிக்கவும், உணவிடவும் வேறு நபர்களை வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான திறந்த வெளிகளில் தானிய களஞ்சியங்களை அமைக்க வேண்டும்.

பைஸினோஸிஸ் (Byssinosis)

வரையறை: பைஸினோஸிஸ் என்பது பஞ்சு, தூசு (அ) மற்ற காய்கறி நார்கள், சணல் நார் போன்றவற்றை சுவாசிப்பதனால் பாதிக்கப்படுவதாகும். நிகழ்வுகள்: அமெரிக்கா ஐக்கிய நாட்டில் 35,000 ஆடைத் தொழிலாளர்கள் பிஸினோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். மற்றும் 1979க்கும் 1992 க்கும் இடைப்பட்ட காலத்தில் 183 பேர் இந்நோய்க்கு பலியாகினர்.

இந்தியாவில் 35% ஆடை தொழிற்சாலைகளில் 7% முதல் 8% தொழிலாளர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரணங்கள்: 1. பதப்படுத்தபடாத பஞ்சிலிருந்து வெளியேறம் தூசிகளை சுவாசிப்பதே இந்நோய் உருவாக முக்கிய காரணம். 2. ஆடை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு இந்நோய் ஏற்படலாம். 3. அதிகமாக புகைப் பிடிப்பவர்களுக்கு ஏற்படலாம்.

அறிகுறிகளும் அடையாளங்களும்: 1. மார்பில் இறுக்கம். 2. வலியுடன் சுவாசித்தல். 3. தொடர்ச்சியான இருமல். 4. அதிகமான மூச்சுவிடுதல் (Tachypnoea) 5. மூச்சு வாங்குதல். 6. வாரத்தின் ஆரம்ப நாட்களில், அறிகுறிகள் அதிகமாக காணப்படும் மற்றும் வேலை இடத்தை விட்டு வெளியே இருந்தாலும், வார இறுதி நாட்களிலும் அறிகுறிகள் குறைவாக இருக்கும்.

நோய் கண்டறிதல் : 1. நோய்த்தன்மையைப் பற்றிய விளக்கவுரை : (History Taking : நேயாளியிடம் அவரின் தொழிலைப் பற்றியும், எப்போது ஏற்படுகிறது என்ற காலத்தை பற்றியும் கேள்விகள் கேட்க வேண்டும். 2. உடல் பரிசோதனை 3. மார்பு ஊடு கதிர் படம் (Chest X-Ray) 4. நுரையீரல் செயல்பாட்டினை அறிதல் (Pulmonary Function test) இதன் மூலம் மூச்சுகுழாய் அடைப்பு, நுரையீரல் கொள்ளிடம் குறைதல் போன்றவை குறிப்பாக வாரத்தின் முதல் மற்றும் இறுதி வேலை நாட்களில் ஏற்படும் வேறுபாட்டினை குறையலாம்.

சிகிச்சை : நோய்க் காரணிகளை ஆரம்பத்திலேயே அகற்றுவது முக்கியமான தீர்வாகும். சுவாசக் குழாயை விரிவடையச் செய்யும் மருந்துகளை (Bronchodilators) பயன்படுத்த வேண்டும். கார்ட்டிகோ ஸ்டீராய்டுகள் (Corticostoroids) மிகவும் மோசனமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு கொடுக்கலாம். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டியது அவசியமாகும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நெபுலைசர் (Nebulizer) பாஸ்ட்சுரல் உரைனேஜ் (Postural Drainage) ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தால், சுவாசப் பயிற்சியை வீட்டிலேயே எடுத்து கொள்ள வேண்டும். நீண்ட கால நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு உடற் பயிற்சி, மூச்சுப்பயிற்சி மற்றும் சுகாதாரக் கல்வி போன்றவை உதவியாக இருக்கும்.

விளைவுகள்

நீண்ட கால நுரையீரல் நோய் (Chroni Lung Disease)

எம்பைசீமா (Emphysema)

தடுப்புமுறைகள் :

1. தூசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோயைத் தடுக்கலாம்.

2. முகமூடி அணிவதன் முலம் மூச்சு குழாயில் தூசி உட்புகுவதைத் தடுக்கலாம்.

3. தொழிற்சாலையின் காற்றோட்டத்தை மேம்படுத்தி தூசிகளின் அளவைக் குறைக்கலாம்.

4. தொழில்நுட்ப எந்திரங்களைப் பயன்படுத்தி தூசிகளை கட்டுப்படுத்தலாம்.

5. ஆடை தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.

6. ஈரமாக்குதல் மூலம் காற்றிலுள்ள தூசிகளின் அடர்த்தியைக் குறைக்க வேண்டும்.

செவிலியரின் பணி: தடுப்பு முறைகளைப் பற்றிய சுகாதாரக் கல்வி. தீவிர மற்றும் நீண்ட நாள் நோய்களுக்கு செவிலியர் கவனிப்பு தேவை.

சிலிகோசிஸ் (Silicosis)

சிலிகோசிஸ் என்பது பாட்லர்ஸ் ராட் (Potler's roti) இது ஒரு தொழிற் சார்ந்த நுரையீரல் நோய், சிலிகன் படிகங்களை சுவாசிப்பதினால் ஏற்படுகிறது. இதனால் நுரையீரலின் மேலறையில் வீக்கமும் புண்ணும் ஏற்படுகிறது (Inflammation andmodules) இது ஒரு நியுமோகோனியாசிஸ் வகை நோயாகும். (Pneumo-lung conis - dust, தூசி)

காரணங்கள்: இயற்கையில் சிலிகான் படிகங்கள் அதிகமாக காணப்படுகிறது. (எ.கா) பாறை, பூமித்துகள்கள். அந்த பகுதியில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்நோய் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. அத்தொழில்களாவன: நிலக்கரி தொழிற்சாலை, துளை போடுதல், கல் உடைத்தல், கற்சுரங்கத் தொழிலாளர்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், மரம் அறுப்பவர்கள், அடிதள் வேலைகள், கண்ணாடி உருவாக்குதல், கட்டுமானங்கள்

அடையாளங்களும், அறிகுறிகளும் :

* மூச்சுத்திணறல் (வேலை செய்யும்போது அதிகமாகும்).

* இருமல், தொடர்ந்து இருமல் மற்றும் சில நேரங்களில் கடுமையாக உடல் சோர்வு, அதிகமாக மூச்சு விடுதல்

* பசியின்மை, எடை குறைவு, மார்பு வலி

• காய்ச்சல் - நகப்படுக்கையிலுள்ள புரோட்டின் சிதைவடைவதால் நாளடைவில் கீறல் விழுந்து தோன்றும்.

இறுதி நிலையில் : நீலநிறமாதல் (Cyanosis) கார்பல்மோனல் (Corpulmonale) மூச்சுவிடுதலின் குறைபாடு (respiratory insufficiency)

நோய் கண்டறிதல்.

1. நோயின் வரலாறு கண்டறிதல்.

2. உடல் பரிசோதனைகள்.

3. மார்பு எக்ஸ்ரே (chest X-ray)

4. நுரையீரல் செயல்பாட்டினை அறிதல் (Pulmonary Function Test) - இதன் மூலம் காற்றோட்டம் தடைபடுதல், நுரையீரல் குறைபாடுகளைக் கண்டறியலாம்.

சிகிச்சை முறைகள்: சிலிகோசிஸ் மீளமுடியாத நோய் ஆகும். நோய் அறிகுறிகளையும், விளைவுகளையும் மட்டும் தவிர்க்க முடியும். ஆனால் குணப்படுத்த முடியாது அவையாவன:

1) மேலும் சிலிகாவினால் பாதிக்கப்படுவதிலிருந்து தடுக்க வேண்டும்.

2) புகையிலை மற்றும் நுரையீரலை எரிச்சலூட்டும் மற்ற பொருட்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

3) இருமலை குறைக்கும் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

4) பாக்டீரியத் தொற்றுக்கு ஆண்டிபயாடிக் (Antibiotic) மருந்துகள்.

5) காசநோய் என்று கண்டறியப்பட்டால் அதற்கான சிகிட்சை தர வேண்டும்.

6) மார்பு பயிற்சி (Chest physiotherapy) மூலம் சளியை நீக்கலாம்.

7) ஹைப்பாக்ஸிமியா (Hypoxemia இருந்தால் ஆக்ஸிஜன் அளிக்கலாம்.

8) நன்றாக மூச்சுவிடுவதற்கு மூச்சுகுழலை விரிவடையச் செய்யும் மருந்துகள் உபயோக்கிக்கலாம்.

9) நுரையீரல் மாற்று சிகிட்சை

பாதுகாப்பு முறைகள்

1. முகமூடி அணிதல்.

2. வேலை செய்யும் இடத்தில் காற்றோட்டம் அதிகமாக வேண்டும்.

3. தூசி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளிக்க வேண்டும்.

4. காற்று வடிகட்டிகளைக் கொண்டு தூசியை கட்டுப்படுத்தலாம்.

செவிலியர்கள் பங்கு:

1) தீவிர மற்று காலம் தாழ்த்திய நிலையிலும் பராமரிப்பு தர வேண்டும்.

2) நோயைத் தடுப்பதற்கு சுகாதார போதனை தர வேண்டும்.

அஸ்பெஸ்டோசிஸ் (Asbestosis)

வரையறை : அஸ்பெஸ்டோசிஸ் இழைகளை சுவாசிப்பதினாலும், தங்க வைப்பதினாலும் நுரையீரலில் பாரன்கைமா திசுக்களில் வீக்கமும், இறுக்கமும் ஏற்படுவதே அஸ்பெஸ்டோசிஸ் எனப்படும்.

காரணங்கள்: அஸ்பெஸ்டாஸ் இழைகளினால் பாதிக்கப்படும் நிலக்கரியில் வேலை செய்வதாலோ, அஸ்பெஸ்டாஸ் உருவாக்குதல், கையாளுதல் மற்றும் நீக்குதல் ஈடுபடுவதினாலோ பாதிப்புக்குள்ளாகலாம்.

அறிகுறிகளும், அடையாளங்களும்: மூச்சுத் திணறல், மார்பு வலி, இருமல்.

மேலும் சில அறிகுறிகள்: நகங்களின் கோளாறு, நகத்தின் அமைப்பு மாறுதல் Clubbing

நோய் கண்டறிதல்

* நோயின் வரலாறு அறிதல்

* உடல் பரிசோதனைகள்.

* மார்பு ஊடுகதிர் படம் (நுரையீரல் மாறுபாடைக் காணலாம்)

* சி.டி. ஸ்கேன் (நுரையீரல் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காணலாம்)

* கேலியம் நுரையீரல் ஸ்கேன் (Gallium)

* நுரையீரல் செயல்பாட்டைக் கண்டறிதல் (PFT)

சிகிச்சை முறைகள்

* இந்நோய்க்கு சிகிச்சை இல்லை.

* மேலும் அஸ்பெஸ்டோசிஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

* நுரையீரலிலிருந்து திரவத்தை நுரையீரல் அதிர்வுகள், மார்பு தட்டுதல் (Perumion) பாஸ்ட்சுரல் டிரெயினேஜ் (Postural drainage) மூலம் அகற்ற வேண்டும்.

* திரவங்களை மென்மையாக்க நெபுலைசர் பயன்படுகிறது.

* முகமூடியைக்கொண்டும், சுவாச துளைகளில் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களின் மூலம் ஆக்ஸிஜன் அளிக்கப்பட வேண்டும்.

* நுரையீரல் மாற்றம்.

விளைவுகள் : மீசோ தாலியோமா புற்றுநோய் (Malignant Mesothalioma), நுரையீரலில் திரவம் சேர்தல் (Pleural effusion)

செவிலியர் பணி :

* தடுப்பு முறைகளைப் பற்றிய சுகாதாரக் கல்வி

* தீவிரமான மற்றும் காலம் தாழ்த்திய நிலைகளில் செவிலியர் பராமரிப்பு தர வேண்டும்.

தடுப்பு முறைகள்:

* அஸ்பெஸ்டாஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முன்கூட்டியே மார்பு ஊடுகதிர் படத்தின் மூலம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* வேலை செய்யும் இடத்தில் முகமூடி அணிவதின் மூலம், ஈரப்படுத்தல் மூலமும், காற்றோட்டத்தை மேம்படுத்துவதின் மூலம் தூசிகளைக் கட்டுப்படுத்தலாம்.

* அடிக்கடி ஓய்வு தர வேண்டும். வசதியான உபகரணங்களை உபயோகிக்க வேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

3.06896551724
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top