பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பரவும் தன்மையற்ற நோய்கள்

பரவும் தன்மையற்ற நோய்கள் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆந்தரக் கோஸிஸ் (Anthracosis)

வரையறை : நீண்ட நேரம் நிலக்கரி மாசிற்கு உள்ளாவதினால் கருப்பு நுரையீரல் நோய் அல்லது Coal Workers' pneumoniasis ஏற்படுகிறது. இது கார்பன் நுரையீரலில் தங்குவதால் உண்டாகிறது.

காரணங்கள் (Causes) : நிலக்கரிதூசியை சுவாசிப்பதினால்

நோய்க் காரணிகள் : (Risk factors) புகைபிடித்தல்

அறிகுறிகள் :

1. இருமல்

2. மார்புவலி

3) மூச்சுவிடுதலில் சிரமம்.

4) நுரையீரல் வீக்கம் (bronchitis)

5) தோல் நீலநிறமாதல் (Cyanosis)

6) தொடர்ச்சியான நுரையீரல் இறுக்கம்.

7) குறைவான மூச்சுவிடுதல்.

8) நுரையீரலின் செயல் தன்மை குறைதல்.

கண்டறியும் முறைகள்

1) நோயின் வரலாறு கண்டறிதல்.

2) உடல் பரிசோதனை

3) மார்பு ஊடுகதிர்படம்.

4. நுரையீரல் செயல்பாட்டினை அறிதல்.

5) HRCT - குறுக்குவெட்டு வரைவி

6) மார்பு சி.டி. ஸ்கேன்.

சிகிச்சை:

*. கருப்பு நுரையீரல் நோய்க்கு முழு நிவாரணம் இல்லை.

* சிகிட்சைகள் மூலம் அறிகுறிகளை மட்டும் குறைக்க முடியும்.

செவிலியர் பங்கு :

* தடுப்பு முறைகளைப் பற்றிய சுகாதார கல்வி,

* சீக்கிரமாக நோய் கண்டறிதல், தீவிரமான மற்றும் நீடிய நோய் நிலையில் உள்ளவர்களுக்கு செவிலியர் கண்காணிப்பு தேவை.

தடுப்பு முறைகள்: முகமூடி அணிவதால் தூசிகளைக் கட்டுப்படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தலாம். தூசியைக் குறைக்க எந்திரங்களை உபயோகிக்க வேண்டும். ஈரப்படுத்தலின் மூலம் காற்றிலுள்ள தூசியின் அடர்த்தியைக் குறைக்கலாம்.

இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பான நோய்கள்

ருமாட்டிக் இருதய நோய் (Rheumatic heart Diseases) : ருமாட்டிக் இருதய நோய் என்பது ஒரு இரண நோய் (Inflammatory disease) ஆகும். இது இதயத்தின் மூன்று உறைகளையும் பாதிக்கிறது.

காரணங்கள். இது பெரும்பாலும் பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிறது. இதில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா முதன்மையானது. ருமாட்டிக் காய்ச்சல், சுவாச குழாய் தொற்றினாலும் ஏற்படுகிறது. குடும்பத்தில் யாரேனும் இந்நோயால் முன்பு பாதிக்கப் பட்டிருந்தால் இந்நோய் உண்டாவதற்க்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நோய் காரணிகள்: 5 முதல் 15 வயதிற்க்கு உட்பட்ட குழந்தைகள், நெருக்கமான இடத்தில் வாழும் மக்கள்.

அறிகுறிகளும், அடையாளங்களும்

இந்நோயின் அறிகுறிகளும், அடையாளங்களும் ஜோன்ஸ் கிரைட்டீரியா என்று கூறப்படுகிறது. முக்கிய அறிகுறிகள்: கார்டைடிஸ் (Carditis) அதாவது இருதய இரணமாதல், மூட்டு வலி, கோரியா (Chorea) அடிப்போஸ் திசுவில் கட்டி ஏற்படுதல். மற்ற அறிகுறிகள் : காய்ச்சல் (103°F) மூட்டு வலி.

நோய் கண்டறிதல்: நோயின் வரலாறு மற்றும் மருத்துவ சோதனையை கொண்டு இந்நோயை கண்டறியலாம். ஆண்டி ஸ்ட்ரெப்டோலைசின் - ஓ (Anti-strepholysin-o) சோதனை கொண்டு இந்நோயை உறுதி செய்யலாம்.

இந்நோய் தொண்டை மாதிரி (Throat culture), சி - ரியாக்டிவ் புரோட்டீன் (C-reactive protein) இரத்த வெள்ளையணுக்கள் பற்றிய சோதனை, நெஞ்சக படம் (Chest X-ray ) எக்கோ (Echo cardiogram) மூலம் கண்டறியலாம்.

சிகிச்சை : இந்நோயின், நோயாளிக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்க வேண்டும். பென்ஸோ பெனிசிலின் (1200000 units IV, IM (M புரோகைன் பெனிசிலின் (6,00,000 Units, UM Qd ஆகியவை 10 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். ஆஸ்பிரின் வலியை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது. கார்டிகோஸ்டீராய்டுகளும் பயன்படுத்தப் படுகிறது.

செவிலியர் கண்காணிப்பு : செவிலியர், நோயாளிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பொதுவான ஓய்வு, குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவினை நோயாளிக்கு அளிக்க வேண்டும். நோய் தொற்றினை குறைக்க போதுமான அளவு தோல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மூட்டு வலியை குறைக்க தலையணை பஞ்சு உருளை பயன்படுத்தினால் சவுகரியமாக இருக்கும். நோயாளி, பரிசோதனைக்கு தவறாமல், செல்கிறாரா என்பதை கவனிக்க வேண்ம். செவிலியர், உடல் வெப்பநிலை, நாடி துடிப்பு மற்றும் மூச்சு விடுதலை கண்காணிக்க வேண்டும். சரியான நேரத்தில், சரியான மருந்தினை அளிக்க வேண்டும். நோயின் அறிகுறிகள், அடையாளங்கள் மற்றும் விளைவுகளை சரியாக கண்டறிந்து மருந்துவரின் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

இருதய இரத்த நாள நோய் (Coronary heart Disease)

இந்நோய் இரத்த ஓட்ட மண்டலத்தில் உண்டாகும் பொதுவான நோயாகும். இது அதிகப்படியான மக்களை பாதிக்கிறது. இது மொத்த மக்கள் தொகையில் 34% மக்களைத் தாக்குகிறது.

வரையறை: இந்நோய், இதய இரத்த குழாய் சுற்றில் அதிகப்படியான அளவு கொழுப்பு படிந்து, இதயத் தசைகளுக்கு செல்லும் இரத்தத்தின் அளவைக் குறைப்பதால் உண்டாகக்கூடிய ஒரு நோயாகும்.

நோய் காரணிகள் : இதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

1) மாற்றி அமைக்கக் கூடிய காரணிகள்: புகை பிடித்தல், இரத்த அழுத்தம் அதிகரித்தல், இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு இருத்தல். இரத்தத்தில் அதிக சர்க்கரை காணப்படுதல், உடல் பருமன், நோய் தொற்று,

2) மாற்றி அமைக்க முடியாத காரணிகள்: தமக்க முடியாத காராக குடும்பத்தில் யாருக்கேனும் இந்நோய் காணப்படுதல், ஆண்களுக்கு 45 வயதிற்கு மேலும், பெண்களுக்கு 55 வயதிற்கு மேலும் இருந்தால், இந்நோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நோய்க்கு பெண்கள் அதிகமாக உள்ளாகின்றனர்.

காரணங்கள்: இரத்த குழாயில் அதிகமாக கொழுப்பு படிதல், மார்பு வலி (Angina Pectoris) இதயத் தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைபடுதல்.

அறிகுறிகளும், அடையாளங்களும் : கழுத்து, அக்குல், இலது கைகளுக்கு வலி பரவும். மூச்சு திணறல். வயிற்று குமட்டல், மார்பு இறுக்கம். அசெளகரீகம் Discomfort

நோய் கண்டறிதல். நோயாளியிடம், நோயின் வரலாற்றை சேகரிக்க வேண்டும். உடல் பரிசோதனை. நெஞ்சக படம். எக்கோ (Echo) ஈ.சீ.ஜீ(E.C.G.) இருதய இரத்த நாளத்தை பரிசோதித்தல் (Cardiac catheterization, நியூக்ளியர் இமேஜிங் ஸ்டடி (Nuclear imaging study) மற்றும் இரத்த பரிசோதனை மூலம் இந்நோயை கண்டறியலாம்.

சிகிச்சை முறைகள். தலை மற்றும் உடலினை சிறிது உயர்ந்த நிலையில் பொருத்துதல் Fowler's Position கீழ்கண்ட மருந்துகள் இந்நோயை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. மார்பின் (Morphin) வலி நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் பெருக்கி diuretics) உடல் வீக்கத்தை சரி செய்யவும். டிஜிடாலிஸ் (Digitalis), நைட்ரோ கிளிசரின் ஆகியன பயன்படுகிறது. நோயாளியின் நிலை மிக மோசமாக இருந்தால் இயந்திர காற்றோட்டம் அளிக்க வேண்டும்.

செவிலிய கண்காணிப்பு: உடல் எடையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆக்ஸிஜன், நோயாளிக்கு அளிக்கப்பட வேண்டும். அதிக கொழுப்பு சத்துள்ள உணவாக இறைச்சி, வெண்ணெய், நெய், பருப்புகள், முதலியனவும், உப்பு அதிகம் உள்ள அப்பளம், ஊறுகாய், கருவாடு முதலியவற்றை தவிர்க்குமாறு பரிந்துரைக்க வேண்டும்.

நோயாளிடமும் மிதமான வேலை (Sedantary Work) செய்தலை தவிர்க்குமாறு பரிந்துரைக்கவும். புகைபிடித்தல், மது அருந்துதல், வெற்றிலை பயன்படுத்தலை தவிர்க்குமாறு பரிந்துரைக்க வேண்டும். கடுமையான வேலை செய்வதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்க வேண்டும். எடுத்துக்காட்டு பழு தூக்குதல், உயரம் ஏறுதல். ஆனால், சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம் (நடை பயிற்சி). ஏதாவது உடலில் தொந்தரவு ஏதாவது தோன்றினால், மருத்துவரை அணுகுமாறு ஊக்குவிக்க வேண்டும். செவிலியர் உடல் வெப்பம், நாடி துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் மூச்சு விடுதலை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

சிறுநீர் வெளியேறும் அளவினை தொடர்ந்து குறிப்பிட வேண்டும். நோயாளிக்கு ஃபெள்ளர்ஸ் நிலையில் Fowler's position ஓய்வு எடுப்பது பற்றி போதிக்க வேண்டும். குடும்பத்தினர்கள் நோயாளிக்கு மனரீதியான ஆறுதல் மற்றும் நல்ல காற்றோட்டத்தை நோயாளிக்கு அளிக்க வேண்டும்.

இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள்

இரைப்பை புண்: இந்நோய் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் அளவு அதிகரித்து குடல் சுவர் அரிக்கப்படுவதால் உண்டாகும் நோயாகும்.

காரணங்கள்: இரைப்பை புண் பெரும்பாலும் ஹெலிக்கோஃபாக்டர் பைலோரை (Helicobacter pylori) என்ற பாக்டீரியாவால் உண்டாக்கப்படுகிறது.

நோய் காரணிகள்: நோயாளியின் குடும்பத்தில் யாருக்காவது இந்நோய் காணப்பட்டால் இவருக்கு உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. '0' வகை இரத்த பிரிவு உடையவர்கள். NSAIDS மருந்து பொருட்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துதல். மது அருந்துதல், புகை பிடித்தல், மன உழைச்சல் போன்றவை முக்கிய காரணமாகும்.

அறிகுறிகளும், அடையாளங்களும் : இந்த வலி மந்தமானவை, எரிச்சலானது மேல் வயிற்று பகுதியில் எரிச்சல் காணப்படும். முதுகில் வலி இருக்கும். உணவு உட்கொண்டால் இவ்வலி குணமாகும். மற்ற அறிகுறிகளாக, நெஞ்சு எரிச்சல் இருக்கலாம், வாந்தி, மலச்சிக்கல், வயிற்று போக்கு, இரத்த கசிவு, தார் போன்ற மலம் ஆகியவை இருக்கும்.

நோய் கண்டறிதல் : மேல் வயிற்றில் தொடும் பொழுது வலி ஏற்படும். வயிறு உப்பி இருத்தல் போன்றவற்றை உடல் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். எண்டோஸ்கோப்பி (Endoscopy) இதனை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மல பரிசோதனை மற்றும் சதை பரிசோதனை மூலம் ஹெலிக்கோ ஃபேக்டர் பைலோரை பாக்டீரியாவைக் கண்டறியலாம்.

சிகிச்சை முறை : உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலம் இந்நோயை குணப்படுத்தலாம். காரமான உணவினைத் தவிர்க்க வேண்டும். பட்டினியாக இருத்தலைத் தவிர்க்க வேண்டும். உணவினை சிறிது சிறிதாக குறுகிய இடைவெளியில் கொடுக்க வேண்டும். திரவ உணவினை அதிகமாக கொடுக்க வேண்டும். புகை மற்றும் மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும். யோகா ஆகியவற்றின் மூலம் மன உழைச்சலைக் குறைக்க வேண்டும்.

மருந்துகள்: ஆண்டிபயாடிக் உடன் புரோட்டான் பம்ப் இன்கிபிட்டார், H, ரிசப்டார் இன்கிபிட்டார் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. Eg: ரானிடிடின் ( Ranitidine) 150 mg சைக்லோ புரக்ட்டிவ் ஏஜென்ட் (Cycloprotective agent) ஆண்டி கோலனர்ஜிக் (Anti-cholinergic drugs) ஆகியனவாகும்.

அறுவை சிகிச்சை : வே காட்டமி (Vagotomy) வேகஸ் நரம்பின் ஒரு கிளையைத் துண்டித்தல். வேகாட்டமியுடன், பைலோரோபிளாஸ்டி அறுவை சிகிச்சை (இரைப்பையின் வாயைப் பெரிதாக்குதல்) பில்ராத்.

செவிலிய கண்காணிப்பு: வலி நீக்கிகளைப் பயன்படுத்தி வலியைக் குறைக்க வேண்டும். நோயாளியின் ஊட்டநிலையை முன்னேற்றவேண்டும். பக்க விளைவுகளைக் கண்காணித்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தொடர்ந்து பரிசோதனை அளிக்க வேண்டும். மன உழைச்சலை தடுக்கும் முறை, உணவு பழக்கவழக்களில் மாறுபாடு பற்றி பரிந்துரைக்க வேண்டும்.

உடல் பருமனாதல் (Obesity)

காரணங்கள்: இந்நோய் உடலின் அடிப்போஸ் திசுவில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. உடல் உட்கொள்ளும் மையப்பகுதியில் அதிக தூண்டுதல் ஏற்படுவதாலும், குளுக்கோகார்டிகாய்டின் அளவு அதிகரிப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. மரபுக் காரணிகளும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய காரணம் ஆகும். அதிகமாக உணவு உண்ண வேண்டும் என்று தோன்றுதலும் ஒரு காரணமாகும்.

அறிகுறிகளும், அடையாளங்களும் : இந்நோயில் எதிர்பார்த்தலை விட அதிகமாகவே விளைவுகள் ஏற்படுகிறது. அவையாவன, மிகை இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், இரண்டாம் வகை சர்க்கரை நோய், மூட்டு வலி, கெளட் (Gout, இன்சுலின் அளவு இரத்தத்தில் அதிகமாக இருந்தாலும் இன்சுலினுக்கு எதிர்ப்பு ஏற்படுதல், சுவாச மண்டல குறைபாடுகள், இரத்த ஓட்ட மண்டல நோய்கள், பித்தப்பை நோய்கள், கல்லீரலில் கொழுப்பு படிதல் (மது அருந்தா நிலையிலும் பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய்கள்.

நோய் கண்டறிதல்:

நோயின் வரலாறு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் நோயைக் கண்டறியலாம். BMI கணக்கிடுவதின் மூலமும் உடல் பருமனை அறியலாம்.

சிகிச்சை முறைகள்: உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இந்நோயின் சிகிச்சை, நடத்தை மற்றும் வாழ்க்கை முறையில் மாறுபாட்டை ஏற்படுத்துவதின் மூலமும் இந்நோயின் தன்மையை குறைக்கலாம். பசியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் ஊட்டச் சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும் மருந்துகளைக் கொண்டும் உடல் பருமனைக் குறைக்கலாம்.

அறுவை சிகிச்சை : லைபெக்டமி (Lipectomy (a) Adipectomy) லைபோசக்சன். இரைப்பை மற்றும் குடல் சம்மந்தமான அறுவை சிகிச்சை .

செவிலிய கண்காணிப்பு : அன்றாட வேலைகளில் ஈடுபாடுமாறும், உடல் எடையை குறைக்கும் படியும் நோயாளியை, ஊக்குவிக்க வேண்டும். உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைக்குமாறும் பரிந்துரைக்க வேண்டும்.

நரம்பு மண்டல நோய்கள்

பக்கவாதம் (Cerebrovascular Accident)

வரையறை

பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதால் மூளையின் செயல்பாடு இழுத்தலாகும்.

காரணங்கள் : இரத்த இழப்பு (Hemorrhage) ஒரு முக்கியமான காரணம். மூளைக்கு இரத்த ஓட்டம் செல்லாததினால், இருதய சம்பந்தமான நோய்கள் கோகைன் உபயோகித்தல் (Cocaine), இரத்த உறைதல் நோய்கள், ஒற்றை தலைவலி (migraine)

நோய் காரணிகள்: இருதய நோய் உள்ளவர்கள், கட்டுபடுத்தப்படாத இரத்த அழுத்தம். தொடர்ச்சியாக இரத்த அழுத்தம் குறைதல், அதிகமாக மது அருந்துதல், காயம் (Injury)

அறிகுறிகளும் அடையாளங்களும் : முகம் பலவீனமடைதல். கை, கால்கள் மறத்துப்போதல் அல்லது பலவீனமடைதல் (numbness orweakness) குழப்பம், மனநிலை மாற்றமடைதல், பார்வை கோளாறுகள், தீடீரென தோன்றும் தலைவலி, நிலை தடுமாற்றம் (Loss ofbalance) இயக்கம் இழப்பின் (motor loss) காரணமாக உடலின் ஒரு பக்கம் செயலிழத்தல் (hemiplegia) உடலின் ஒரு பக்கம் வலிமையிழத்தல் (hemiparesis) முழுமையான செயலிழப்பு (Hauid paralysis) பேசுவதில் சிரமம் (Dysarthria) பேச்சு இழப்பு (Aphasia), முதலில் கற்று கொண்ட செயலை செய்ய முடியாமை (Appraxia)

நோய் கண்டறிதல் : முழுமையான உடல் மற்றும் நரம்பு மண்டல பரிசோதனை சி.டி. ஸ்கேன் எம்.ஆர்.ஐ ஸ்கேன். கரோடிட் அல்ட்ரா சோனோகிராபி (Carotid Ultrasono graphy) ஈசிஜி (Electro Cardiography) எக்கோ கார்டியோகிராபி Echo cardiography)

சிகிச்சை : உட்புறக்கசிவு ஏற்படுவதை கவனித்தல். சிறுநீர் பெருக்கும் மருந்துகள் (Osmotic diuretics). இரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள். கட்டிலின் தலைப் பகுதியை உயர்த்துதல். மூச்சுக்குழாயின் தன்மையைப் பரிசோதித்தல்

செவிலியர் சிகிச்சை எதிர்பார்க்கும் விளைவுகளை கவனிப்பதும் நிர்வகிக்கவும் வேண்டும். நோயாளியின் இயங்கும் தன்மையை அதிகப் படுத்தவும், மேலும் பாதிப்பைக் குறைக்கவும் வேண்டும். உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை வகுத்து தர வேண்டும். சிறுநீர் மற்றும் மலம் கட்டுப்பாட்டை அடைய சீக்கிரமாக நடக்க வைக்க வேண்டும். குடும்பத்தினரின் உதவி மற்றும் தோல் பராமரிப்பு அவசியம். வீட்டிலும், சமூகத்திலும் உதவி நல்குதல் (Home and community basedcare)

சுவாச மண்டல நோய்கள்

ஆஸ்துமா வரையறை: ஆஸ்துமா என்பது மூச்சுக்குழாயில் ஏற்படும் நீண்ட கால ரண நோய் (inflammatory disease) ஆகும். இது அதிக உணர்ச்சித்தன்மை (hyper - respassiveners) மூச்சு குழாய் வீக்கம் மற்றும் அதிக சளி உருவாதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

காரணங்கள்: உட்புற மற்றும் வெளிப்புற ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகள் (Indoor & Outdoor Allergem) இடது வென்ட்ரிக்கிள் செயலிழப்பினால் நுரையீரல் வீக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

நோய் காரணிகள்: குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு ஆஸ்த்துமா சுழற்சி (Allergy) எரிச்சலூட்டும் காரணிகளால் பாதிப்பு (புல், மகரந்தத் தூள், தூசி, விலங்குகள்). குளிர், அதிக உஷ்ணம், புகை, வாசனையூட்டிகளுக்கு உட்படுதல். மன அழுத்தம் சைனுசைட்டிஸ் (Sinusitis) உணவு அருக்களிப்பு (Esophageal reflux)

அறிகுறிகளும் அடையாளங்களும்: சளியுடன் கூடிய / இல்லாத இருமல். மூச்சுவிடுதலில் சிரமம், மூச்சு வாங்குதல், மார்பு இறுக்கம், அதிகமாக வியர்த்தல், அதிகமான நாடித்துடிப்பு, விரிவடைந்த நாடி அழுத்தம் (Coiderned palse pressure) கடுமையான பாதிப்பு ஸ்டேட்டஸ் ஆஸ்துமாட்டிக்ஸ் (Status asthmatics) காணப்படும்.

நோய் கண்டறிதல் : சளி மற்றும் இரத்தப்பரிசோதனை. தமனி இரத்த வாயு பகுப்பாய்வு. நுரையீரல் செயல்பாட்டைக் கண்டறிதல். (Pulmonary Function test) பல்ஸ் ஆக்ஸிமெட்ரி (Pulse oximetry)

மருத்துவ பாதுகாப்பு: பீட்டா ஆட்ரினர்ஜிக் அகோனிஸ்டுகள் B - adrenergic agonists) மீத்தைல் ஸாந்தைன்ஸ் (methylxanthines) ஆன்டி கோலினெர்ஜிக் (Anti cholinergic) கார்ட்டிகோ ஸ்டீராய்டுகள் (Cortico steroids) மாஸ்ட்செல் தடுப்பான்கள் (mast cell inhibitors)

நீரிழிவு நோய்

வரையறை : நீரிழிவு நோய் என்பது இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினையினாலோ அல்லது அதன் செயல்பாட்டில் குறைபாட்டினாலோ இரத்தத்தின் சாக்கரையின் அளவு அதிகமாகுவதாகும்.

காரணங்கள்: கணையத்தில் பீட்டா செல் உற்பத்தி செய்யும் இன்சுலின் குறைவாக சுரப்பதால் சுரக்கும் இன்சுலினின் செயல் தன்மை குறைதல்

நோய்க்காரணிகள்: பரம்பரை வியாதியாக வரலாம், உடற்பயிற்சியின்மை, குறைந்த அளவு நார்ச்சத்து உட்கொள்பவர்கள்.

அறிகுறிகளும் அடையாளங்களும் : 1) பாலியூரியா அதிக அளவு சிறுநீர் கழித்தல் குறிப்பாக இரவு நேரங்களில், பாலிடிப்சியா: அதிக தாகமெடுத்தல், வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் அருந்தல், பாலிபேஜியா அதிகப் பசி அதிகமாக உணவருந்தல்.

மற்ற அறிகுறிகள் : பொதுவான உடல் பலவீனம், திடீரென பார்வைக் கோளாறு, ஆறாதப் புண், குத்துதல் அல்லது மறத்துப்போன உணர்வு

நோய் கண்டறிதல்: உணவு அருந்தா நிலையில் சர்க்கரையின் அளவு இரத்தம், சாப்பிடுவதற்கு முன்பாக எடுக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரையின் அளவு (சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து இரத்தம் எடுக்க வேண்டும் ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் ஆய்வு (Oral glucose tolerence test) 100 கிராம் குளுக்கோஸ் கொடுக்கப்பட்டு 1, 11/2. 2 மணி நேர இடைவெளியில் இரத்த ஆய்வு செய்யப்பட வேண்டும். அதற்கு முன்பாகவே சாப்பிடா நிலையில் இரத்த ஆய்வு செய்யப்பட வேண்டும். HbA1C (Glycosylated Hemoglobin) சிறுநீர் சர்க்கரை மற்றும் கீட்டோன் பாடிகளின் அளவு.

சிகிச்சை : உணவு முறைகள் : அ) உணவு எல்லா வகையான சத்துப் பொருட்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். ஆ சரியான எடையினை வைத்துக் கொள்ள வேண்டும். இது ஆற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

உடற்பயிற்சி : தினமும் அரைமணி நேரமாவது சர்க்கரை நோயாளிகள் நடக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் நீந்துதலும் சிறந்த பயிற்சிகளாகும்.

மருத்துவம்: சர்க்கரை அளவை குறைக்கும் மாத்திரைகள், இன்சுலின் சிகிச்சை.

சுகாதார போதனை: கீழ்கண்டவற்றிப் பற்றி கற்பிக்க வேண்டும். நோயாளிகளாகவே சர்க்கரை அளவை சோதனை செய்வது. நீரிழிவு நோயாளியின் உணவு உடற்பயிற்சி

பாத பராமரிப்பு: பாதங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிட உலர வைக்க வேண்டும். பாதங்களில் தண்ணீர் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். பாதங்களில் வெடிப்பைத் தவிர்க்க ஜெல்லி Uellies) பயன் படுத்தலாம். நோயாளிகள் தங்கள் பாதத்தை தாமாகவே பார்க்க முடியாததால் கண்ணாடியை வைத்து பாதங்களை பார்க்கச் சொல்ல வேண்டும். பாதத்தில் ஏதாவது புண் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். MCR வகை செருப்புகளை அணியச் செய்ய வேண்டும். கால் நகங்களை குட்டையாகவும், நேராகவும் வெட்ட வேண்டும்.

மார்பக புற்று நோய்

புற்றுநோய் என்பது சுற்றுபுறத்திலுள்ள, வளர்ச்சியைக் கட்டுப் படுத்தும் காரணியைப் பொருட்படுத்தாமல் செல்கள் அசாதாரணமான முறையில் வளர்ச்சியடைவதால் உண்டாகக்கூடிய நோயாகும்.

காரணங்கள்: குறிப்பிட தகுந்த காரணங்கள் இல்லை. ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்கள் பெரும் பங்கினை வகிக்கிறது.

நோய் காரணிகள்: மார்பக புற்றுநோய் 50 வயதிற்க்கு மேல் பொதுவாக காணப்படுகிறது. பழக்க வழக்கங்கள் (Pronal history) (or) குடும்ப வரலாறு Family history) ஆகியவை இதில் பெரும் பங்கினை வகிக்கிறது. சிறு வயதிலேயே பூப்படைதல், குழந்தைகளே பெறாதே பெண்களுக்கு இந்நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. முதிர்ந்த வயதில் குழந்தை பெறல், தாமதமாக மாதவிடாய் நின்று போதல், கதிரியக்க கதிர்வீச்சுக்கு வெளிப்படுதல், உடல் பருமனாதலும் (Obesity) ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

நோயின் அறிகுறிகளும், அடையாளங்களும் : வலியற்ற கடினமான நிலையான கட்டி, மார்பக பகுதியிலுள்ள தோல் ஆரங்சு தோலின் தோற்றத்தைப் போல் காணப்படும், மார்காம்பு உள்ளிழுத்தம், மார் காம்பின் புண் மற்றும் பூஞ்சை நோய் தொற்று போன்றவை காணப்படும்.

நோய் கண்டறிதல்: மார்பு சுய சோதனை தன்னுடைய மார்பினைத் தானாவே, ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் ஏதாவது நாளும் பரிசோதித்துக் கொள்வதாகும். ஊசியின் மூலம் திசு பரிசோதனை Fine needle biopsy) ஓப்பன் பையாப்ஸி (open biopsy) அறுவை சிகிச்சை மூலம் திசுவை எடுத்து பரிசோதனைச் செய்தல் (Incisional Biopsy) கோர் பையாப்ஸி Core Biopsy) திசுக்களின் அமைப்பினைப் பற்றி ஆராய்தல் (Histologic Examination)

அறுவை சிகிச்சை : மாஸெக்டமி (Mastectomy) பாதிக்கப்பட்ட மார்பினை அகற்றுதல். மாடிபையிட் ரேடிக்கல் மாஸெக்டமி (Modified Radical Mastectomy) பிரஸ்ட் கன்ஸர்வேஷன் அறுவை சிகிச்சை (Breast Conservation Surgery) லம்பக்டமி (Lumpectomy) மார்பின் பகுதியை நீக்குதல் (Partial Mastectomy) செக்மண்டல் மாஸெக்டமி (Segmental Mastectomy) குவாட்ரன்டக்டமி (Quadrantectomy) அக்குகளில் உள்ள நிணநீர் நாளத்தை நீக்குதல் (Auxillary lumph node dissection)

கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளித்தல் : (Radiotheraphy) இம்முறை பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்கு பின் அளிக்கப்படும் சிகிச்சை முறையாகும்.

ஹீமோ தெரப்பி: (Chemotheraphy) மருந்துகளைப் பயன்படுத்தி இம்முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹார்மோன் தெரப்பி (Hormonal Theraphy) எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow transphantation)

செவிலிய கண்காணிப்பு: குடும்பத்தினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பயிற்சி, மனதளவிலான ஆதரவு குடும்பத்தினருக்கும் நோயாளிக்கு அளிக்க வேண்டும். டிரஸ்சிங் Dressing அதாவது கட்டுப்போடுதல், வலியைக் குறைப்பதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தோலினைத் தூய்மையாக பாதுகாக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின் செய்யும் பயிற்சி (கை பயிற்சி, கழுத்து பயிற்சி பற்றி கூறவேண்டும். நோயாளியின் குடும்பத்திற்கு ஆலோசனை அளித்து, ஆதரவு தர வேண்டும். அவர்க்கு சிகிச்சை முறை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். நோயாளிக்கு ஆதரவு அளிக்குமாறு அவருடைய குடும்பத்திற்கு பரிந்துரை அளிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு பின் செய்யப்படும் பயிற்சிகள்:

அ) சுவற்றில் கை பயிற்சி : நோயாளியை சுவற்றின் அருகே நிற்க வைத்து, நோயாளியின் பாதிக்கப்பட்ட பகுதியின் கையை சுவற்றில் வைக்குமாறு கூறவேண்டும். அதன் பின், கையை மெதுவாக சுவற்றின் மீது ஏறும்படி கூறவேண்டும்.

ஆ கயிறு இழுக்கும் பயிற்சி (Roll pulling Exercise) : கம்பியின் மீது கயிற்றை போட்டு, அதன் இரு முனையையும், இரு கையால் பிடித்துக் கொண்டு அதனை மாற்றி மாற்றி இழுக்குமாறு கூறவேண்டும்.

இ) கயிறு திருப்புதல் (Rope turning Exercise) கயிற்றை ஒரு இடத்தில் கட்டி அவற்றை பாதிக்கப்பட்ட கையினால் பிடித்து கொண்டு அவற்றை திருப்ப வேண்டும்.

கட்டு Dressing பிரஸ்ட் பைண்டர் (Breast Binder) சப்போர்டிவ் பிரா (Supportive bra) காஸ்மேட்டிக் பிரேஸியர் (Cosmetic brassieres ஆகியவைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

சிசுத் தாரை புற்றுநோய் (Cervical Cancer)

கருப்பையின் கீழ்ப்பகுதியான சிசுத் தாரையில் உண்டாகும் புற்றுநோய் சிசுத் தாரை புற்றுநோய் எனப்படும்.

காரணங்களும், நோய் காரணிகளும் : பாலியல் தொடர்பு 1) ஒன்றிற்க்கு மேற்பட்டவர்களிடம் உடலுறவு கொள்ளுதல். 2. இளம் வயதிலேயே பாலியல் தொடர்பு கொள்ளுதல். 3. இளம் வயதிலேயே குழந்தைப் பெறுதல். 4. ஹியூமன் பாப்பிலோமா வைரசுக்கு வெளிப்படுதல். 5. எச்.ஐ.வி. தொற்று. 6. புகைபிடித்தல். 7. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள். 8. ஊட்டசத்து குறைபாடு. 9. நீண்டநாள் சிசுத்தாரை தொற்று.

அறிகுறிகளும், அடையாளங்களும் : சிசுத்தாரையில் திரவம் வெளிப்படுதல் இரத்தப் போக்கு. பாலியல் தொடர்புக்கு பின் இரத்த கசிவு ஏற்படுதல். பின்புறத்தில் வலி ஏற்படுதல்.

நோய் கண்டறியும் முறை: பாப் சிமியர் (Pap smear) சிசுத் தாரையிலுள்ள திசுச் சோதனை (Cerrical Biopsy) அடிவயிறு சோதனை (Pelvic examination அடிவயிறு எக்ஸ்ரே (Pelvic X-ray) கேஸிகேட்டரி சோதனை (Casecatory test) பன்ஸ் பையாப்ஸி (Punch biopsy) கால்போஸ்கோப்பி (colposCopy) டைலடேஸன் மற்றும் குயூரடேஸ் Dilatation and curettage) சி.டி. ஸ்கேன் (CT Scan இன்ட்ர வீனஸ் யூரோ கிராம் (Intra venous urogram) சிஸ்டோகிராம் (cystogram

மருத்துவ சிகிச்சை : பெர்கர்சர் (Percursor), அறுவை சிகிச்சை : கிஸ்டிரேக்டமி (Hystrectomy) ரேடிக்கல் ஹிஸ்டிரேக்டமி (Radical hystrectory) பெல்விக் எக்ஸ்டிரகன் (pelvic exenteration பிரேக்கி தெரப்பி (Brachy theraphy) ரேடியோ தெரபி (Radio theraphy) ஹீமோ தெரபி (chemotheraphy)

செவிலிய கண்காணிப்பு - குடும்பத்தினருக்கு ஆதரவு: நோயாளியின் குடும்பத்தினருக்கு ஆலோசனை அளிப்பதன் மூலம் ஆதரவு அளிக்க வேண்டும். சிகிச்சை முறைகளைப் பற்றி கூறவேண்டும். நோயாளியின் குடும்பத்தினர்கள் நோயாளிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

சுய சுத்தம் : நோய் தொற்றினைக் குறைக்க சுய சுத்தம் அவசியமானது. சிறுநீர் மற்றும் மலம் கழித்த பின் அந்த இடத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கைகளையும் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளாடை களை சுத்தமாக துவைத்து, சூரிய ஒளியில் நன்றாக காய வைத்து பயன்படுத்தப்பட வேண்டும். ஏதேனும், துரு நாற்றம் கொண்ட திரவம் வெளிப்பட்டால் மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்க வேண்டும். பக்க விளைவுகள் ஏதும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு பரிந்துரைக்க வேண்டும்.

சுருக்கம்: ருமாட்டிக் இருதய நோய் என்பது ஸ்டெப்டோகாக்கஸ் பாக்டிரியாவினால் ஏற்படும் இருதய வீக்க நோய் ஆகும். கொழுப்பு பொருட்கள் இருதய தமனியில் சேர்ந்து அடைப்பு ஏற்படுவதால் இருதய தமனி நோய் ஏற்படுகிறது. இருதய தமனி நோயின் நோய்க்காரணிகள் மாற்றத்தக்கவை மற்றும் மாற்றத்தகாதவை என்று இரு வகைப்படும். இன்சுலின் சுரப்பதிலும், செயலிலும் பாதிப்பு ஏற்படுவதினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி சர்க்கரை நோய் ஏற்படுகிறது. புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்றுநோய் எனப்பல வகைப்படும்.

தொழிற் சம்பந்தப்பட்ட நோய்களாவன: சிலிகோசிஸ், பைசினோஸிஸ், ஆஸ்பெஸ்டோஸிஸ், ஆந்தரோகோஸிஸ், பாகோலீஸ்; காரிய நச்சு, விவசாயின் நுரையீரல், வயிற்றுப்புண் பொதுவான இரைப்பை குடல் சார்ந்த நோயாகும். இப்பொழுது உடல் பருமனாதால் முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாகும். மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைவதினால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுவது பக்கவாதம் எனப்படும்.

.ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.89655172414
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top