பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள் / நோய்த்தொற்றும் தடுப்பு முறைகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நோய்த்தொற்றும் தடுப்பு முறைகளும்

பல்வேறு நோய்த்தொற்று பற்றியும் அதன் சிகிச்சை பற்றியும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தீவிர சுவாச நோய்த் தொற்று

சுவாசபாதையை பாதிக்கக்கூடிய முக்கியமாக மூக்கிலுள்ள ஒழுக்கு, காற்றறைகளையும் பாதிக்கும் நோயாகும்.

நோய் பரப்பு நுண்ணுயிரி: SARS கொரனோ வைரஸ்கள்.

பரவும் விதம்: தூசியினால் (அ) காற்றினால் பரவக் கூடும். இது ஒரு மனிதனிடமிருந்த மற்றொரு மனிதனுக்கு சங்கிலி தொடர் மூலம் பரவுகிறது.

நோய் முற்றும் காலம் : 18 - 17 மணிநேரங்கள்

அறிகுறிகள் : மூக்கில் நீர்க்கசிதல், இருமல், புண்ணுள்ள தொண்டை, கடினச்சுவாசம், காது கோளாறு, காய்ச்சல், தீவிர சவாசக் கோளாறு, குழந்தைகளுக்கு சளிப்பிடித்தல் (அ) இருமல் மிக குறைந்த அறை நோய் தொற்று இருக்கும் போது தென்படும்

சிகிச்சை :

நல்ல தரமான சிகிச்சை முறைகளை தீவிர நிலையில் இருந்தால் அளிக்க வேண்டும். கோட்ரைமாக்சோல் - நிமோனியா காய்ச்சலுக்கு கொடுக்கப்படவேண்டும்.

ஆம்பிசிலின் மற்றும் புரோகைன் பென்சிலின் 95% குணமளிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தட்டம்மை தடுப்பூசி தீவிர சுவாச சம்பந்தப்பட்ட கோளாறு உள்ள நோயாளிக்கு அளிக்கும் போது தடுக்கலாம்.

நிமோனியா - சிக்கல், அதோடு தட்டம்மை இருந்தால் இறப்பு நேரிடக்கூடும்.

குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி அளிக்கப்பட்டால் நிமோனியா நோயை தடுப்பது மட்டுமல்லாமல் இறப்பையும் குறைக்கலாம்.

மோசமான சுவாச சம்பந்தப்பட்ட சின்ட்ரோம் (SARS)

மோசமான சுவாச சம்பந்தப்பட்ட சின்ட்ரோம் என்பது மோசமான தொற்றுள்ள வைரஸ் நோய்கள் ஆகும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி : புதிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொரோனோ வைரஸ் மூலம் பரவுகிறது.

பரவும் விதம் : சுவாச சம்மந்தப்பட்ட நோய்த்தொற்று சிதறல் வகை காரணமாகவும், நோயாளியிடம் மிக நெருக்கமாக பழகும்போது கண்கள், மூக்கு, வாய் வழியாக தொற்றுக் கிருமிகள் பரவுகின்றன.

நோய் முற்றும் காலம் : 2-7 நாட்கள்

அறிகுறிகள் :

காய்ச்சல், நீர் ஒழுகல், தலைவலி, தசை வலி, தலைச்சுற்றல், வரண்ட இருமல், மூக்கு ஓழுகுதல், குறைந்த ஆக்ஸிஜன் அளவு, மிக நுண்ணிய சுவாச பாதிப்புகள்

சிகிச்சை

இதற்கென்று தனிப்பட்ட சிகிச்சை இல்லை. ஆன்டிபயாடிக் பயன்படுத்துவதால் எவ்வித முன்னேற்றமும் இருக்காது.

தடுப்பு முறை

மோசமான சுவாச சம்பந்தப்பட்ட சின்ட்ரோமினால் (SARS) பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு கொள்ளுதல், மற்றும் தொடர்பு மற்றும் செயல்பாடுகளை கவனித்தல். மருத்துவமனைகளில் நோயாளிகளை தனித்து வைக்க வேண்டும். தேவையான மருத்துவ பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும்.

காசநோய்

டியூபர்கிள் பாசில்லை என்ற கிருமிகளால் ஏற்படுத்தக்கூடிய நாட்பட்ட தொற்று நோயாகும். இந்த நோய் தொடக்கத்தில் நுரையீரலை பாதித்து, நுரையீரல் காசநோயை ஏற்படுத்துகிறது. பிற உறுப்புகள், குடல்கள், மூளை உறைகள், எலும்புகள் மூட்டுகள், நிணநீர்ச் சுரப்பிகள், தோல் மற்றும் உடலிலுள்ள திசுக்களையும் பாதிக்கின்றன. இது மட்டுமல்லாமல் இந்த நோய் விலங்குகளையும் பாதிக்கின்றது.

பொவைன் காசநோய் - கால்நடைகளுக்கு பரவுகின்ற காசநோயாகும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி : மைக்கோ பாக்டீரியம் டியூப்பர்கிள் - காசநோயை உருவாக்குகிறது.

பரவும் விதம் : சிதறல் வகை

காற்று நுரையீரல் காசநோய் - நோய்த்தொற்றை உண்டாக்கக் கூடிய சுவாச வழி, தூசிகளினால் பரவும்.

நோய் முற்றும் காலம் : மாதங்கள் அ) வாரங்கள் (அ) கடைசியாக ஒட்டுண்ணி காரணமாக (அ) தொற்றைசார்ந்து இருத்தல்.

அறிகுறிகள் : நாட்பட்ட இருமல், தொடர்ச்சியான காய்ச்சல், நெஞ்சுவலி, நுரையீரல் இரத்த ஒழுக்கு, எடை குறைவு

தடுப்பு :

  • ஆரம்ப நிலையில் இருக்கக்கூடிய நோயாளிகளை கண்டறிதல்.
  • ஹிமோகீமோதெரப்பி (காசநோய்க்கு எதிரான மருந்துகள்)
  • BCG தடுப்பூசி
  • உடல்நல போதனை (அ) சுகாதார போதனை
  • ஆரம்ப நிலையில் கண்டறிதல் : சமுதாயத்தில் இந்த நோாளிகளை தொடக்கக் காலத்திலே தெரிந்து கொள்வது தான் காசநோய் தடுப்பு நடவடிக்கையின் முதல் படியாகும்.
  • சளி பரிசோதனை செய்யும் போது டிபர்கிள் பேசில்லை பாசடிவ் ஆக இருந்தால் நுரையீரல் காசநோய் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்கிறது.

நோய் கண்டறியும் சாதனைங்கள் : ஆரம்பநிலையில் கண்டுபிடிக்கக் கூடிய நுண்ணோக்கி முறையின் மூலம் சளி பரிசோதனையைக் கண்டுப்பிடிக்கலாம்.

நுரையீரல் காசநோயை கீமோதிரப்பியின் (மாத்திரைகளின்) மூலம் சிகிச்சை அளிக்கலாம் மிக வேகமாக பாக்டீரியல் நோய்த் தொற்றினை சரிசெய்வது கீமோதிரப்பியின் நோக்கமாகும். தற்போது கீமோதிரப்பி பல மருந்துகளை சார்ந்துள்ளது மற்றும் கூடுதலாக ரிபாம்பிசின் மற்றும் பைரிசினமைடு மாற்று மருந்துகள் கிடைக்கின்றன.

நேரடியாக சிகிச்சை மூலம் கண்டறிதல்

DOTS நோக்கம் குறுகிய கால, பரிந்துரை (DOTS Directobseried Treatment) செய்யப்பட்ட உலகளாவிய காசநோய் தடுப்பு. DOTS சமுதாயம் சார்ந்த காசநோய் சிகிச்சை மற்றும் கவனிப்பு இவை சேர்ந்து சமுதாய நலனை சார்ந்துள்ளது. தோல் சம்பந்தப்பட்ட சுகாதார உதவியாளர்கள் (அ) பல் நோக்கு உதவியாளர்கள் அ) தன்னார்வ சுகாதார உதவியாளர்கள். அதாவது ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், முன்னாள் நோயாளிகள், சமூக பணியாளர்கள் இவர்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. இவர்களை DOTS முகவர்கள் என்று அழைக்கிறார்கள்.

BCG வாச்கினேஷன் (Bacillai Calmette Guerine) உயிருள்ள தடுப்பூசி எல்லா நாடுகளிலும் டிபர்க்குளின் பாசில்லை உயிருடன் இருக்கின்ற கால்நடையிலிருந்து ஸ்டைன் உருவாக்கப் படுகின்றன. ஒரு மாதத்திற்கு உட்பட்ட பச்சிளைங்குழந்தைக்கு 0.5ml தவணை கொடுக்க வேண்டும். டியூபர்க்குலின் ஊசியின் உதவியோடு மேல் தோலுக்கடியில் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடனே BCG தடுப்பூசி கொடுக்கப்படவேண்டும்.

சுகாதாரப் போதனை : நோயாளியை ஊக்குவிப்பதன் மூலமும், சிகிச்சை அளிப்பதன் மூலம், திரும்பவும் பரிசோதித்து வந்து சரிபார்த்தல், சளியை அப்புறப்படுத்துதல், மிகவும் முக்கியமான ஒன்று என்பதை தன்னார்வ தொண்டர்களின் மூலம் உணர்த்துதல்.

கீமோதிரப்பி: நோய்த்தொற்றுள்ள நோயாளிகளை கீமோதிரப்பியின் மூலம் அளவுக்கதிமாக சிகிச்சை அளிப்பதன் மூலம் சரிசெய்யலாம்.

சில குணமளிக்கக் கூடிய காரணங்களை வைத்து கீமோதிரப்பியை உறுதி செய்ய முடியாது. ஆனால் சளியின் மூலமாக பாசில்லை - ஐ வெளியேற்றும் சிகிச்சை எளிதாக கிடைக்கக்கூடிய கீமோதிரப்பி ஆகும்.

ஆன்டிடியூபர்குளோசிஸ் மருந்துகள்

மருந்துகளை 2 குழுக்களாகப் பிரிக்கலாம்.

பாக்டீரியாசைடல் மருந்துகள்

பாக்டீரியோஸ்டாட்டிக் மருந்துகள்

அவின் இன்புளுயன்சா

பறவைகளினால் ஆரம்ப நிலையில் பாதிக்கக்கூடிய அதிகக் குழுவிலுள்ள மாற்றப்பட்ட இன்புளுயன்சா வைரஸினால் பரவுகிறது.

பரவும் விதம் : ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு சிதறல் வகை (அ) சளித்துளி மூலம் பரவுகிறது.

நோய் முற்றும் காலம் : 18 - 72 மணிநேரங்கள்

அறிகுறிகள் : காய்ச்சல், தலைவலி, குளிரும் நடுக்கமும், தும்பல், மூக்கடைப்பு, உடல் முழுவதும் வலி, பலவீனம் மற்றும் இருமல்

தடுப்பு நடவடிக்கை :

நோயாளிகள் வந்தவுடன் சுகாதார பணியாளருக்கு அறிவிக்க வேண்டும். நோயாளிகளை சிகிச்சையளிக்க, தனிமைப் படுத்த வேண்டும். தேவையான அளவு வலி நீக்கிகள், ஓய்வு மற்றும் திரவங்கள் கொடுத்தல், ஆன்டிபயாடிக் அளித்தல்.

தடுப்பு முறை : முழுமையாக பாதுகாக்கக்கூடிய இன்புளுயன்சா நோய்க்கு எதிராக பாதுகாக்கக் கூடிய, சாகடிக்கக்கூடிய இன்புளுயன்சா தடுப்பு ஊசி பயன்படுத்த வேண்டும்.

பன்றி காய்ச்ல் (Swine Flue)

இதனை பன்றி காய்ச்சல் என்று கூறலாம். இது இன்புளுயன்சா வைரஸினால் பரவக்கூடியது.

நோய் பரப்பும் நுண்ணுயிரி : இன்புளுயன்சா (Swine) வைரஸ் துணை பிரிவுகளான H, N, H,N, H,N, மற்றும் H,H, ஆகும்.

பரவும் விதம் : பன்றியிலிருந்து மனிதனுக்கு நேரடியாக பரவுகிறது.

நோய் முற்றும் காலம் : 7 days.

அறிகுறிகள் : காய்ச்சல், தொண்டைப் புண், இருமல், உடல் வலி, மயக்கம், குமட்டல், சில்லிட்டுப் போதல், தலைவலி, சுவாசத் தடை.

தடுப்பு பராமரிப்பு :

1. நல்ல உறக்கம் மற்றும் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு

2. விட்டமின் (துணை விட்டமின்களையும் பலவகையான விட்டமின்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்

3. சோப்பும், நீரும் கொண்டு கைகளை நன்கு அடிக்கடி கழுவுதல்

4. நெருக்கமான தொடர்புகளை நீக்குதல் மற்றும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தனித்து வைத்தல்

5. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மற்றும் நீர் உள்ளிட்ட பொருட்களை பயன் படுத்துவதை தவிர்த்தல்.

6. முகம் தொடுவதை நீக்குதல்

7. போதனையாளர்களைக் கொண்டு முகமூடிகளை அணிதல்

8. நோய் பரவியிருக்கக் கூடிய பகுதிகளில் பயணம் செய்வது மற்றும் தங்குவது நீக்கவேண்டும்.

சிகிச்சை :

நோய்த்தடுப்பு வாக்சினேஷன், முடிந்த வரையில் வாக்கினேஷன் போடுவது மிகமிக பாதுகாப்பானது கூட, மற்றும் தடுக்கக் கூடியதும் ஆகும்.

ஆன்டி வைரல் மருந்துகளை பயன்படுத்துவதினால் ப்ளு வைரஸ் நோயை தடுக்க முடியும்

டெங்கு இரத்தபோக்கு சம்பந்தப்பட்ட காய்ச்சல்

டெங்கு வைரஸ் காய்ச்சலின் எல்லா அறிகுறிகளும், அடையாளங்களும் அமையும். நோய்க்காலம் - ஆரம்பித்த 3- ஆம் நாளிலிருந்து, தலைவலி, குமட்டல், வாந்தி, காப்பி கலர் வாந்தி, வயிற்றில் வலி, தொண்டை சதை சுழற்சி, இருமல் மற்றும் அஜிரண நிலை காணப்படுதல்.

அறிகுறிகளும், அடையாளங்களும்:

- திடீரென்று மோசமான நிலையடைதல்

- கை, கால்கள் சில்லிட்டு போகக்கூடிய நிலை

- பலவீனமான நூலிழை போன்ற நாடித்துடிப்பு

- நீலம்பத்தல் இரத்தப் போக்கு நோய்க்கு தென்படும்

டெங்கு இரத்தப்போக்கு காய்ச்சல்

நோய் முற்றும் காலம் : 3- 4 நாட்கள் /4 to 7 நாட்கள்.

சிகிச்சை : தீவிர நோயின் போது படுக்கையில் முழு ஓய்வு அளிக்க வேண்டும். காய்ச்சல் நீக்கிகள் மற்றும் உடல் சுத்தம் தேவைப்படுகிறது. முக்கியமாக 98.6°F அதிகப்படியான வெப்பநிலையை குறைக்க வழி செய்தல் வேண்டும்.

டெங்கு இரத்தப்போக்கு காய்ச்சலுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுக்கக்கூடாது. மாத்திரைகளை கொடுத்தால் இரைப்பை அழற்சி, இரத்தப்போக்கு, அமிலத்தன்மை அதிகரித்தல் இவையெல்லாம் ஏற்படும்.

பேதி (அ) வாந்தி, அதிகப்படியான வியர்வை இவைகளுக்கெல்லாம் வாய் வழி திரவமோ மற்றும் எலக்ட்ரோலைட்ஸ் திரப்பியோ பரிந்துரை செய்யப்படுகிறது.

மிகமிக வலி அதிகரித்த நிலையில் வலிநீக்கிகளும் (அ) மிதமான தூக்கத்தை வரவழைக்கக்கூடிய மருந்துகளும் தேவைப்படுகிறது.

நீரற்றநிலை தடுக்க வீட்டில் தயாரித்த திரவம் அதிக அளவு கொடுக்க வேண்டும்.

திரவ சமநிலையை குறைந்தபட்ச அளவிலும், மிக துல்லியமான முறையிலும் பயன்படுத்த வேண்டும். வீக்கம், நுரையீரல் அடைப்பு, சுவாச சம்பந்தப்பட்ட கோளாறு, இவற்றிற்கு அதிகப்படியான திரவம் கொடுக்கும் போது, எளிதாக பரவும்.

தடுப்பு நடவடிக்கை :

கொசுவினால் பரவும் விதத்தை தடுத்தல் :

1 எல்லா நீருள்ள பாத்திரங்களையும் மூடிய நிலையில் வைத்தல்.

2. பூஞ்ஜாடியில் உள்ள நீரை வாரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்.

3. வீட்டிலுள்ள பகுதியை தூய்மையாக வைத்தல்.

4. பூச்சி கொல்லி மருத்துகளை தெளித்தல்

கொசுக்களை சாகடிக்க :

II. தடுப்பூசி : நோயை தடுக்கக் கூடிய நோய்த் தடுப்பூசி இது வரை இல்லை .

III. மற்றகாரணிகள்: கொசுக்களை எதிர்க்கக் கூடிய முறைகளை கையாளுதல்.

- நோயாளியை தனிமைப்படுத்துதல் மற்றும் படுக்கையில் ஓய்வு அளித்தல்

- முழு கால் சட்டைகளும், மேல் சட்டைகளும் அணிய வேண்டும்.

- கொசுக் கடிக்காமல் தடுக்க மேல் தோலில் பசை, திரவம், கட்டிகள் மற்றும் கொசுவர்த்தி சுருள்களை பயன்படுத்தலாம்.

- கொசுவலைக்குள் உறங்குதல் (குழந்தைகளும், பச்சிளங்குழந்தையும் கொசுக்கள் கடிக்காமல் இருக்க வழிவகுக்கிறது).

மலேரியா

ஜீனஸ் ப்ளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியின் காரணமாக பரவக் கூடிய புரோட்டோசோவல் நோயாகும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி : தொற்றுள்ள மனிதன், பெண் அனாபிலஸ் கொசுக்களினால் பரவும்.

நோய் முற்றும் காலம் : ப்ளாஸ்மோடியம் வைவக்ஸ் - 14 நாட்கள், ப்ளாஸ்மோடியம் பால் சிபாரம் - 12 days, சில சயமங்களில் 6 - 9 months.

பரவும் விதம்: பெண் அனாபிலஸ் கொசுக்கள் கடிப்பதால், பரவுகிறது. இரத்தம் ஏற்றுவதின் மூலம் மலேரியா ஒட்டுண்ணிகள் பரவும்.

அறிகுறிகள்: சில்லிட்டுப் போதலுடன் கூடிய காய்ச்சல் 3 நிலைகளை கொண்டுள்ளது.

i)குளிர் நிலை தலைவலி, சில்லிட்டுப்போதல், நடுக்கம், காய்ச்சல் அதிகமாக (1/4 to 1/2hrs) உயரும், குளிர்ந்த தோல்.

II. வெப்பநிலை (1/2 to 5 hrs) : நல்ல சூடான உணர்ச்சி நிலை, நீங்காத தலைவலி மேல் தோல் உலர்ந்து காணப்படும் காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும்.

iii)வியர்க்கும் நிலை: ஏராளமான வியர்வை

நிணநீர்ச் சுரப்பினால் பாதிக்கக்கூடிய யானைக்கால் வியாதி

ஓட்டுண்ணியின் காரணமாக கொசுவினால் பரவக் கூடிய, நிணநீர்ச் சுரப்பியை பாதிக்கக் கூடிய நோய் யானைக்கால் நோய் ஆகும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி: வவுச்சரிரியா பிரான்காவடி, புருக்கியா மலாசி

பரவும் விதம் : க்யூலெக்ஸ் வகை கொசுவினால் பரவுகிறது

அறிகுறிகள்: காய்ச்சல், நிணநீர்ச் சுரப்பியில் நோய்த்தொற்று, யானைகால் கைகளிலும் கால்களிலும் காணப்படும்

நோய் முற்றும் காலம் : 5 - 10 மாதங்கள்

சிகிச்சை : பயனுள்ள, பாதுகாப்பான மருந்துகள் ஹெட்ரசான் ஆகும். ஹெட்ரசான் 6 மி.லி. காலின் எடை தினமும் 2 தவணைகள் 2 வாரங்களுக்கு கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை :

I. கீமோதெரப்பி : டைஈதைல் கார்பமசின் பயனுள்ள பாதுகாப்பான மருந்து I(DEC)

மாஸ் தெரப்பி: DEC மருந்தை யானைக்கால் நோய்க்கு சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டும். இதை சாப்பிடும் போது எவ்வித அறிகுறியும் வெளியில் தெரியாது.

ii) சிகிச்சை மூலம் சரிப்படுத்துதல் : யானைக்கால் வியாதி இருக்கிறது என்று தென்பட்டவுடன் DEC கொடுக்க வேண்டும். உடல் எடைக்கு 6ml/kgx22 வராங்கள் கொடுக்க வேண்டும்

iii) DEC மைடிக்கேட்டர் சால்ட்

DEC மருந்து கலந்த உப்பு 1 - 4 of DEC/kg - யானைக்கால் நோயை கட்டுப்படுத்தலாம்.

சிக்கன்குனியா காய்ச்சல்

குருப் வைரஸினால் பரவக்கூடிய டெங்கு நோயை ஒத்ததாகும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி: எடிஸ், க்யூலக்ஸ் மற்றும் மேன்சோனியா கொசுக்கள்

நோய் முற்றும் காலம் : 4 to 7 நாட்கள்.

பரவும் விதம் : கொசு கடியினால்

அறிகுறிகள்:

அதிக காய்ச்சலுடன் கூடிய சில்லிட்டுப்போதல்

தண்டுவடப்பகுதி மற்றும் கை, கால்களில் அதிக வலி காணப்படும்.

(மூட்டுவலி) ஆர்திராலாஜியா, பசியின்மை, கன்ஜென்டைவாவில் நோய்த் தொற்று, காப்பி கலர் வாந்தி, மூக்கிலிருந்து இரத்த ஒழுக்கு

ஆர்த்தோபதி: வலி, வீக்கம் மற்றும் நெருக்கம், முக்கியமாக மணிக்கட்டு பகுதிகளில் மற்றும் உள்ளங்கை பகுதி, கை முட்டி, தோள்பட்டை, கால் முட்டி, கணுக்கால் மற்றும் மெட்டாடார்சல் மூட்டுகள்.

சிகிச்சை (டைக்குளோஃபினாக் (Voveran)

டைக்குளோஃபினாக் சோடியம் போன்ற வலி நீக்கிகள் பெராசிடமால் - காய்ச்சல் நீக்கிகள்

திரவ சமநிலைப்படுத்துதல்

தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பு முறைகள்

சுத்தமான தண்ணீரில் ஏடிஸ் கொசுவானது உயிர் வாழக்கூடும், தேங்கிய நீர்ப்பரப்புகள் மற்றும் நீரை மூடி வைத்து பாதுகாக்க வேண்டும்.

டெங்கு இரத்த சம்பந்தப்பட்ட காய்ச்சலை நிறுத்துவதற்கான எல்லா வழிமுறைகளையும் பரவக் கூடிய முறைகளையும், தடுப்பதற்காக மேலத்தியான் (அ) சுமிதியான் 250 மிலி/ஹெக்டேர் என்ற பரப்பு விகிதத்தில் தெளிக்க வேண்டும். ஏரோசால் போன்ற மருந்துகளையும் தெளிக்கலாம்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.94444444444
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top