பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொதுவான தொற்று நோய்கள்

பொதுவான தொற்று நோய்கள் பற்றியும் அதில் தோன்றும் அறிகுறிகள் மற்றும் அவற்றின் சிகிச்சைகளும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வாந்தி பேதி

 

வாந்திபேதி ஒரு பக்டீரியா காரணமாக ஏற்படுவது ஒன்றாகும். இது நுண்ணுயிர் கொண்ட குடிநீர் மூலம் பரவுகிறது. துணிகளை நீரில் கழுவும்போது அங்கே காணப்படும் பhக்டீரியாக்களின் மூலமாக நோய் ஏற்படும். மக்களிடையே ஏற்படும் தொடர்புகள் மூலமாகவும் பரவலாம். இந்நோயைக் கொண்ட ஒருவர் கழிவரைக்கு சென்றபின் அவரின் கைகளை சுத்தமாக கழுவாவிட்டால் நோய் பரவும். ஈக்கள் கூட வாந்திபேதியை பரப்பும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 • மிக கடுமையான வாந்திபேதி
 • வாந்தியெடுத்தல்
 • காலரா உள்ள ஒருவர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் தன் உடலில் இருந்து அதிக நீரை இழக்க வேண்டி ஏற்படும். இது உடல் வறட்சி என்றழைக்கப்படும். இது சீக்கிரம் மக்களை கொன்றுவிடும்.

சிகிச்சை

உங்களுடைய பகுதியில் எவரேனும் காலரா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பின் சுகாதார திணைக்களத்திற்கு நீங்கள் அறிவிக்க வேண்டும். குறிப்பு: காலரா உள்ள ஒருவரை நீங்கள் பராமரிப்பதாக இருந்தால், எந்நேரமும் நீங்கள் கையுரைகளை அணிந்திருக்க வேண்டும்.

ஏனெனில் காலரா மிகவும் ஆபத்தானதாகும். காலரா உள்ள ஒருவர் அதிகமாக நீர் அருந்த வேண்டும். வாய்வழி நீரேற்ற கரிசலை கொடுக்க வேண்டும். (பக்கம் 239 பார்க்கவும்.) அடிக்கடி அவர்கள் முடியவரை சிறிய சிப்பாக அருந்த வேண்டும்.  நோயாளி அதிக வைற்றோட்டத்தை கொண்டிருந்தால், முடியுமானால் உடனே அருகிள் இருக்கின்ற வைத்தியரிடமோ அல்லது மருந்தகத்திற்கோ செல்லவேணடும். செல்லும் வழியில் அவருக்கு வாய்வழி நீரேற்ற கரிசலை கொடுக்கவும்.

பிறப்புறுப்புக்குறிய தோல் அழற்சி

தோல் அழற்சி ஒரு வைரஸ் ஆகும். அது இரண்டு வகையாகும். முதலாவது, உதடு, முகம் அல்லது வாயில் தொற்றை உருவாக்கும். இரண்டாவது பிற்ப்புறுப்பைச் சுற்றி தொற்றை ஏற்படுத்தும். இதவே பிறப்புறுப்புக்குறிய தோல் அழற்சி என அழைக்கப்படும். பிறப்புறுப்பு ஹெர்பெஸ் உடலுறவு அல்லது பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது அல்லது குழந்தைக்கு பிறப்புறுப்பு ஹெர்பெஸ் கொண்ட ஒரு தாயிடம் இருந்து வருகிறது. இந்த அழற்சியுள்ள கர்ப்பிணி பெண்கள் வைத்தியரிடம் அறிவிக்க வேண்டும். குழந்தை பிற்ப்பின்போது அது குழந்தையை அனுகாமல் இருக்கும் வகையில் சிசேரியன் ஒன்றை தயார் செய்ய வேண்டும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 • பிறப்புறுப்பு பகுதியில் வலி அல்லது அரிப்பு
 • இதனால் சிறுநீர் கழிக்கும் போது சில நேரங்களில் எரிச்சல் உணர்வு
 • 2-20 நாட்களுக்கு பிறகு ஒரு புண் அல்லது கொப்புளம் தோன்றும்
 • சில நேரங்களில் காய்ச்சல், தலைவலி, வீங்கிய சுரப்பிகள், தசை வலி மற்றும் சோர்வு
 • புண்கள் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அதே இடத்தில் வெளிவர வாய்ப்புள்ளது.

சிகிச்சை

பிறப்புறுப்புக்குறிய தோல் அழற்சிக்கு பரிகாரம் கிடையாது. பொதுவாக உடல் வைரஸ்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதினால், அது பரவுவது குறைவாகும். தொற்று உள்ளவர்களுக்கு அழற்சி அதிகமாக ஏற்படுவதுடன் உடலும் பலவீனமாகிவிடும். முறையான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் தொற்றுகளை தடுக்க முடியும்.

 • பிறப்புறுப்பு பகுதியை மிக சுத்தமாகவும் உலர் தன்மையுடனும் வைத்திருக்க வேண்டும்.
 • இருக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும்
 • உப்பு கலந்த வெண்ணீரில் குளித்தால் வேதனைகள் குறையும்.
 • பாக்டீரியா எதிர்ப்பு க்ரீம்களை உபயோகிக்க வேண்டாம்.
 • நல்ல தூக்கம் மற்றும் உணவானது புண்களை தடுக்க உதவும்

மேகவட்டை நோய்

மேகவட்டை நோய் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒன்றாகும். இது உடலுறவு மூலமாக பரவும். தாய் மேகவட்டை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அது ஏற்படலாம்.

மேகவட்டை நோய்க்குள்ள ஏனைய பெயர்கள்: தென்னாப்பிரிக்காவில் மேகவட்டை நோயை ஜட்ரொப் என்றழைப்பார்கள். கனடாவில் இதை பாபோஸா என்று அழைப்பதுண்டு.

மேகவட்டை நோய் ஏற்பட்ட அரைவாசி பேருக்கு அதன் அறிகுறிகள் வெளிபடுவதில்லை. ஆனபோதிலும் மற்றவர்களுக்கு அந்நோயை பரப்பும் வாய்ப்புகள் அதிகம்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 • சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல்
 • மாதவிடாய் காலங்களில் அதிக வேதனையுடன் கடினமான இரத்தப்போக்கு ஏற்படுதல்.
 • உடலுறவின்போது ஏற்படும் வேதனை
 • அடிவயிற்றில் ஏற்படும் வலி
 • ஆசனவாய், தொண்டை மற்றும் கண்களையும் இது பாதிக்கும்.

சிகிச்சை

மேகவேட்டை நோய் உள்ள ஒருவர் கட்டாயமாக வைத்தியரை அனுக வேண்டும். அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் சிகிச்சை முடியும் வரை உடலுறவை தவிர்க்க வேண்டும். இந்த நோய் உள்ள ஒருவரை நீங்கள் பராமரிப்பதாக இருந்தால், அவரும் நீங்களும் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.

ஈரல் அழற்சிபறை

வெவ்வேறு விதமான ஈரல் அழற்சிபறைகள் உண்டு. பொது வகையானவை வைரஸ்களின் மூலமாக ஏற்படுவதுண்டு. குடிப்பது மற்றும் சாப்பிடுவதின் மூலமாக சில வைரஸ்கள் பரவுவதுண்டு. சிலவகைகள் வைரஸ் உள்ள ஒருவருடன் ஏற்படும் உடலுறவுகளினாலும் அல்லது பாதிக்கப்பட்ட ஒருவரின் எச்சில் அல்லது காயங்களில் இருந்து வெளியாகும் திரவங்களினால் ஏற்படும்.;

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 • சோர்வு, குமட்டல், வாந்தி மற்றும் வைற்றுப்போக்கு
 • குறைந்த காய்ச்சல்
 • புண் மற்றும் மூட்டுகளில் வேதனை
 • மேல் வயிறு மற்றும் கல்லீரல் வேதனை
 • பசியின்மை
 • பொதுவான சோர்வு பிறகு தோல் மற்றும் மஞ்சல் காமாலையின் அறிகுறிகள்
 • கருமையான சிறுநீர் மற்றும் மாறுபட்ட நிறத்திலான மலம்.

ஒரு மருத்துவரோ அல்லது மருத்துவ சகோதரியோ நோயாளிக்கு ஈரல் அழற்சிபறை இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்வதற்காக இரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கவனிக்கவும்: நீங்கள் ஒரு அழற்சிபறை உள்ள ஒருவரை பராமரிப்பதாக இருந்தால், உடல் திரவங்கள் படுவதை தவிர்ப்பதற்கு நீங்கள் கையுறைகளை அணிய வேண்டும்.

• முதலில் படுக்கையில் ஓய்வாக இருந்து பிறகு காரியங்களில் ஈடுபட வேண்டும்.

• மது மற்றும் பிற மருந்துகள் அத்துடன் வைட்டமின்களை தவிர்க்க வேண்டும்.

• கல்லீரல் நோயாளிகள் பிற மருந்துகளை எடுப்பதை நிறுத்த வேண்டும்.

• முடிந்தால் பாணம் பழச்சாறு அருந்த வேண்டும்.

• பால் பொருட்கள், இறைச்சி, ரொட்டி, பழங்கள் காய்கறிகள் உள்பட ஒரு சீரான உணவை சாப்பிட வேண்டும். வாந்தி உணர்வு ஏற்படும் போது அது அவர்களுக்கு துனையாக அமையும்.

மலேரியா

ஒருவகை கொசுக்களின் மூலமாக ஒட்டுண்ணியினால் மலேரியா ஏற்படுகின்றது. இக்கொசு வகைகள் தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. ஓட்டுண்ணியைத் தாங்கிவரும் கொசுக்கல் ஒருவரை கடித்துவிட்டால் அந்த ஒட்டுண்ணியானது அவரின் இரத்தத்துடன் கலந்து விடும். இது இரத்தத்தின் சிவப்பணுக்களை பாதித்து விடும். மலேரியா உள்ள பகுதிகளுக்கு ஒருவர் செல்வதானால், அவர்களை மலேரியா நோய் அனுகாமல் இருப்பதற்கான மருந்துகளை அவர்கள் எடுத்து செல்ல வேண்டும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

•தலைவலி

•சோர்வு

•தசை வலி

பிறகு ஏற்படும் அறிகுறிகளாவன:

•தலைவலி

•மார்பு வலி

•மூட்டுகளில் வேதனை

•வாந்திபேதி

•கடுமையான ஜுரம்

•குமட்டல் வாந்தி

தட்டம்மை

தட்டம்மை ஒருவகை வைரஸினால் ஏற்படும் ஒன்றாகும். முத்தம், இருமல் அல்லது உணவு பகிர்தல் போன்றவைகளினால் பரவக்கூடியதாகும்

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

•சோர்வு, குளிர் காய்ச்சல்,கண்கள் ஊதா நிறமடைதல்

•மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒரு சிகப்பு நிறம் கொண்ட சொறி முகத்தில் ஏற்படுதல்

•அந்த சொறியானது உடல் முழுவதிலும் கால்களிலும் பரவுதல்

•மூன்று நாட்களுக்குப் பிறகு சொறி மற்றும் காயச்சல் குறைவது

•ஒளியின் தாக்கம் கண்களை பாதித்தல்.

சிகிச்சை

எல்லா குழந்தைகளும் தட்டம்மை நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

• முக்கியமாக இருட்டறையில் வைத்து ஒரு ஈரமான துணியினால் கண்களை மெதுவாக கழுவ வேண்டும். ஈரமான காற்றை பெற்றுக்கொள்வதற்காக ஒரு பேசின் தண்ணிரை அறையில் வைக்க வேண்டும். இது இருமலுக்கு உதவும்.

• ஒரு நோயாளி, காய்ச்சல் இன்னும் இருக்குமானால் படுக்கையிலேயே இருக்க வேண்டும்.

• சீரான அதுவும் ஆரோக்கியமான உணவை எடுக்க வேண்டும். • நீரை அதிகமாக பருக வேண்டும்.

• சொறி நீங்கும் வரை மக்களுடன் தொடர்பு வைப்பதை தவிர்க்கவும்.

தண்டு மூளை சவ்வு காய்ச்சல்

தண்டு மூளை சவ்வு காய்ச்சலானது மூளையில் ஏற்படும் ஒரு தொற்றாகும். இது பாக்டீரியா அல்லது வைரஸினால் பரவக்கூடியதாகும். இது ஒருவரிடம் இருந்து மேலும் ஒருவருக்கு பரவக்கூடிய ஒன்றாகும். ஏற்கனவே வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தண்டு மூளை சவ்வு காய்ச்சல் ஏற்படலாம். மூளைக்காய்ச்சலுக்கு எதிராக இப்போது பிள்ளைகள் தடுப்பூசியை போட்டுக்கொள்கிறார்கள். இது இலவசமாக கிடைக்கும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

•சவ்வு காய்ச்சலின் அறிகுறியானது வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான ஏனைய நோய்களின் அறிகுறிகளுக்கு சமமாகும். ஆனால் கடுமையான கழுத்து வலி சவ்வு காய்ச்சலுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.

•காய்ச்சல்

•சோர்வு

•வாந்தி

•தலைவலி

•எரிச்சல் உணர்வு

•தொண்டை புண்

•மிகவும் தீவிரமான நிலைகளில் நோயாளிகள் மயங்கி மற்றும் வலிப்புடன் காணப்படலாம். இளம் குழந்தைகளுக்கும் இது ஏற்படலாம்.

•தூக்கம்

•அழுகை

•உச்சுக்குழி (குழந்தையின் தலையில் மென்மையான வீக்கம்)

இளம் பிள்ளை வாதம்

இளம் பிள்ளை வாத நோய் ஒரு வைரஸினால் ஏற்படும் ஒன்றாகும். குடிக்கும் தண்ணீரின் மூலமாக பரவுக்கூடியதாகும். நல்ல சுகாதார வசதிகள் இல்லாதபோது இந்த நிலை ஏற்படும். அத்துடன் சிலர் கழிவரைக்கு சென்று வரும்போது அவர்கள் கைகளை நன்றாக கழுவாவிட்டால் இந்த வைரஸ்கள் தொற்றிவிடும். இளம்பிள்ளை வாதம் உள்ள அநேகமானோர் அவர்களுக்கு இளம் பிள்ளை வாதம் உண்டு என்பதை உணர்வதில்லை. அவர்களை அறியாமலேயே சமூகத்திடையில் இந்த நோய் பரவிவிடும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

•காய்ச்சல்

•தொண்டை சிவப்புநிற மடைதல்,

•குமட்டல் மற்றும் வாந்தி

•தலைவலி

•சிலநாட்களுக்கு நன்றாக இருந்து மீண்டும் நோயாளிக்கு தன் கால்களில் குத்தும் உணர்வு ஏற்படலாம்.தனக்கு பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது என்றும் உணரலாம்.

•கடுமையான நிலை ஏற்படும் போது சுவாசிக்கும் தசைகளும் பாதிப்படைந்து அத்துடன் பக்கவாதம் ஏற்பட்டு நோயாளி சுவாசிப்பதையும் நிறுத்திவிடுவார்.

சிகிச்சை

அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

போலியோ வைரஸ் மூலமாக ஏற்படும் என்பதால் உடம்பில் இருந்து கிருமி நீக்க எந்த மருந்தும் கிடையாது. தொற்றுக்கு எதிராக பணிபுரிவது உடலை சார்ந்ததாகும். நோயாளியை நன்றாக வைத்துக்கொள்வதற்கே சிகிச்சை பயன்படும்

• காய்ச்சலை ஒழிக்க மருந்து கொடுக்கவும்.

• வலி நிவாரணி மருந்து கொடுங்கள்

மேகப்புண்

மேகப்புண் பாக்டீரியா முலம் ஏற்படுவதாகும். உடலுறவு மூலமாக அல்லது பாக்டீரியா தொற்றியுள்ள ஒரு தாயின் மூலம் இது பரவும். கர்ப்பிணிப் பெண்கள் இரத்த பரிசோதனை மூலமாக மேகப்புண் நோய் உள்ளதா என அறிந்து பிள்ளை பெறுவதற்கு முன் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக இரத்த பரிசோதனை செய்துக்கொள்வதின் மூலம் இருக்கும் ஏனைய நோய்களையும் அறிந்துக் கொள்ளலாம்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

•பிறப்புறுப்புகளில் மலக்குடல், வாய் அல்லது விரல்களில வலியற்ற புண்கள்,

•வீங்கிய கட்டிகல்

•தோல் கட்டிகள்

•மறைமுகமான பகுதிகளில் ஏற்படும் வளர்ச்சி

•தலைவலி

•காய்ச்சல்

•சோர்வு

மேகபுண் தொற்றுகளை வருடக்கணக்கிள் வைத்திருந்தாலும் நோயவாய் படுவதில்லை. ஆனால் மேகபுண்னுக்கு சிகிச்சையளிக்காவிட்டால் அது காலப்போக்கில் உடலை பாதித்துவிடும். இந்நிலை ஏற்பட்டால் தென்படும் சில அறிகுறிகள்:

•தோல், எலும்புகள் அல்லது கல்லீரல் கட்டிகள்.

•இருதய பிரச்சினைகள்

•கண்பார்வை இழப்பு

•மன பிரச்சிகைள்

•மத்திய நரம்பு மண்டல பிரச்சினைகள்

•நடக்கும்போது ஏற்படும் பிரச்சினைகள்

தசைகளை கடினமாக இருக செய்யும் நோய்

சிலவேளைகளில் தசைகளை கடினமாக இருக செய்யும் நோய் 'லொக்ஜோ' என்றழைக்கப்படும். இது அசுத்தம் மற்றும் மலத்தில் வாழும் கிருமிகளினால் ஏற்படும் ஒன்றாகும். ஆதலால் அசுத்தமடையும் எந்த ஒரு காயமும் இந்த நோய்ககிருமிகளின் தாக்கத்திற்கு உள்ளாகும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

• விலங்கு மற்றும் நாய், பன்றி கடிகளினால் ஏற்படும் காயங்கள்.

• துப்பாக்கி சூடு மற்றும் கத்தியினால் ஏற்படும் காயங்கள்.

• அசுத்தமான ஊசிகளின் மூலமாக ஏற்படும் துளைகள்

• முட்கம்பியினால் ஏற்படும் சேதங்கள்

• முட்கள் மூலமாக ஏற்படும் ஒரு ஆழமான காயம். மண், தூசி, விலங்குகளின் மலம் போன்றவைகளினால் அசுத்தம் அடைந்தால் அது இந்த தசை இருக செய்யும் நோய்க்கு வாய்பாக அமையும். அத்துடன் ஒரு குழந்தையின் தொப்புள் கொடியை ஏதாவது ஒரு அசுத்தமான பொருளினால் வெட்டும்போது இந்த நோய் ஏற்பட இடமுண்டு

•பொதுவாக ஒரு பாதிக்கப்பட்ட காயம் இருக்கும்.

•பாதிக்கப்பட்டவர் விழுங்குவதற்கு சங்கடப்படலாம்.

•முதலில் தாடைப்பகுதி இருக்கமடையலாம். பிறகு கழுத்தும், தசைகளும் உடலின் ஏனைய பகுதிகளும் பாதிப்பிற்கு உள்ளாகலாம். சற்றென அவரின் தாடையில் இருக்கம் ஏறபட்டு புண்கள் ஏற்படலாம். நடுக்கம் இருந்தால் உடல் முழுதும் இருக்கம் ஏற்படும். பாதிக்கப்பட்டவரை தொடுவதினால் அல்லது திடீரென கேட்கும் ஒலி, கடுமையான ஓசை ஆகியவற்றினால் இந்நிலை ஏற்படலாம்.

சிகிச்சை

முடிந்தவரை காயத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். மக்கள் டெட்டனஸினால் இறந்து போக வாய்ப்புள்ளது. அதனால் டெட்டனஸ் தடுப்பூசி தேவை என்று சந்தேகம் கொண்ட ஒருவர் விரைவில் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும்.

காசநோய்

ஒரு பாக்டீரியா தாக்கத்தினால் ஏற்படுவதாகும். இது காற்றின் ஊடாக பரவும் ஒன்றாகும். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மினாலும் இருமினாலும் அவர் அருகிள் இருக்கும் உங்களுக்கு அந்நோய் தொற்றிவிடும்.  காசநோய் இரண்டுக் கட்டங்களைக் கொன்றதாகும். முதற்கட்டத்தில் நபர் தொற்றுக்கு ஆளாவார். இரண்டாவது கட்டமாக, அந்த தொற்றானது நோயாக உருவெடுத்து உடலின் உறுப்புகளை அழிக்க தொடங்கிவிடும். எல்லோரும் பலமான காசநோய்க்கு ஆளாவதில்லை.

எயிட்ஸ் அல்லது எச்.ஜ.வீ. தொற்றியுள்ள 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் காசநோயக்கு மிக வேகமாக ஆளாகிறார்கள். எயிட்ஸ் உள்ள பல நோயாளிகள் காசநோயால் இறப்பதுண்டு.  5 வயதுக்கு குறைவான ஒரு குழந்தை வாழும் வீட்டில் எவரேனும் காசநோய் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தால் அவர் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு காசநோய் இல்லாவிட்டாலும் அவர்கள் காசநோய் தடுப்பு சிகிச்சைகளுக்கு ஆளாக வேண்டும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 • பாரம் குறைதல்
 • சோர்வு
 • பலவீனம்

ஒருவருக்கு காசநோய் இருக்குமானால் பொதுவாக அவருக்கு மூன்று கிழமைக்குப் பிறகும் மறையாத

 • மோசமான இருமல்
 • சலியில் இரத்தம் காண்பது(இருமும் போது வெளிப்படும் திரவம்)
 • மார்பு வலி இருக்கும்

சிகிச்சை

காசநோய் கிட்னி, மூளை போன்ற உடலின் ஏனைய உறுப்புகளையும் வலுவிழக்க செய்யும்.

எல்லா குழந்தைகளும் காசநோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஜந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகள் அல்லது பலவீனமான அல்லது எச்.ஜ.வீ., அல்லது காச நோய் உள்ள ஒருவருக்கு கடுமையான காச நோய் பரவாமல் இருப்பதற்கு மருந்துகளை கொடுக்க வேண்டும்.

காச நோய் கடுமையாக கொண்டவர்களுக்கு மருந்துகளை கொடுக்க வேண்டும்.  அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதம் வரை மருந்து பாவிக்க வேண்டும். அதுவே ஒரு குழந்தையாக இருந்தால் ஆறு மாதம் கொடுக்க வேண்டும். காச நோய்க்கு உள்ளாகும் பெரியவர்கள் ஆறு மாதம் மருந்து பாவிப்பதை போலவே இரண்டு மாதங்களுக்கு ஊசி போட்டுக்கொள்வதும் அவசியமாகும்.  இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து மருந்து பாவிக்கும் ஒருவர்  காச நோயை பரப்புவது இல்லை.

கடுமையான காச நோய் உள்ள மக்கள் முறையாகவே தமது சிகிச்சைகளை பூர்த்தி செய்திருந்து அவர்கள் மேலும் அசெளகரியங்களை எதிர்பார்பதாக இருந்தால், மீண்டும் அவர்களை காச நோய் பாதிக்க ஆரம்பித்து விடும். அப்படியாயின் அதை குணப்படுத்துவது சற்று கடினமாகும்.

எலி காய்ச்சல்

பாக்டீரியா நோயான இது விலங்குகளின் சிறுநீரினால் விலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கும் நோயாகும். விவசாய பகுதிகளில் அல்லது வெள்ளம் புகுந்த பகுதிகளில் உள்ள நீர் அசுத்தமடைந்து அதை உபயோகிக்கும் மனிதர்களை இந்நோய் பலமாக பாதிக்கும்

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 • உயர் காய்ச்சல்
 • தலைவலி
 • தசை வலி
 • குளிர்
 • கண்கள் சிகப்பு நிறமாகுதல்
 • அடிவயிற்று வலி
 • மஞ்சல் காமாலை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு

சிகிச்சை

விரைவில் சிகிச்சை பெற்றிடவேண்டும். உறுதியான சில சந்தர்ப்பங்களில் நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம். உறுதிப்படாத சந்தர்ப்பங்கள் மரணத்தை விளைவிக்கும்.

கேள்வி பதில்கள்

காற்றின் மூலம் என்னென்ன தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது?

ஃப்ளூ, தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, காசநோய், பன்றிக்காய்ச்சல், ரூபெல்லா, சார்ஸ் ஆகிய நோய்கள் காற்றின் மூலம் மிக வேகமாக பரவும். இந்த நோய் உள்ளவர்கள் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ அருகில் யாராவது இருந்தால் அவர்களை இந்த நோய் பற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

நீரின் மூலம் என்னென்ன தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது?

மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், பிளேக், வெறிநாய்க்கடி (ரேபிஸ்).

கொசுக்கள், ஈ, எலி, நாய் ஆகியவை மனிதர்கள் பயன்படுத்தும் தண்ணீரை பயன்படுத்தினால் மேற்கண்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.,

ரத்தத்தின் மூலம் என்னென்ன தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது?

ஹெபடைட்டிஸ் பி, டெட்டனஸ், எஸ்.டி.டி எனும் பால்வினை நோய்கள், எய்ட்ஸ் ஆகிய நோய்கள் தாம்பத்தியம் மற்றும் ரத்தம் மூலமாக பரவும் நோய்கள் ஆகும்.

மேற்கண்ட நோய் பாதிப்பு அடைந்தவர்களுக்கு செலுத்திய ஊசியை இன்னொருவருக்கு பயன்படுத்தினாலோ, பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொண்டாலோ இந்த நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது.
2.97457627119
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top